நடிகையின் வாயை அடித்து உடைத்த பிரபலம்… வெளியான பரபரப்பு சாட்சிகள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Written by

in

Ashmitha: பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதா பல மாதங்களுக்கு பின்னர் தன் கணவர் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து இருந்தவர் அஸ்மிதா. அப்படங்கள் ஓடாமல் போக ஒரு கட்டத்தில் மேக்கப் படித்து அதனை தன்னுடைய தொழிலாக மாற்றிவிட்டு தற்போது சென்னையின் பிரபல டாப் மேக்கப் ஆர்டிஸ்டாக உயர்ந்து இருக்கிறார்.

இவரின் கணவர் ஸ்ரீவிஷ்ணு ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம். சமீபத்தில் கூட தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து பலர் குறித்தும் திமிராக பேசிய வீடியோக்கள் வைரலாகியது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உண்டு. விவாகரத்து வாங்கிய இந்த ஜோடி மீண்டும் சில ஆண்டு முன்னர் தான் இணைந்தது.

இருவரும் ஜோடியாக வீடியோ போட்டும் வந்தனர். இந்நிலையில் தொழில் ரீதியாக சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீவிஷ்ணு. அந்த சமயம் அவர் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வைரலாகியது. அப்போதும் கூட அஸ்மிதா தரப்பு எதுவும் வாய் திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் பெண்ணுடன் ஆபாசமாக பேசிய வழக்கில் சிக்கி சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்தே அஸ்மிதா தரப்பு தனக்கும் தன் கணவருக்கும் செட்டாகவில்லை என ஓபனாக அறிவித்தனர். இந்நிலையில் சில நாட்கள் முன்பிருந்து அஸ்மிதா குறித்தும் அவர் தவறான தொழில் செய்வதாகவும் அவதூறுக்களை ஸ்ரீவிஷ்ணு பரப்பி வந்தார். அவரது வீடியோக்கள் மிக விரைவாக பரவி வந்தது.

இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அஸ்மிதா வாய் திறந்து இருக்கிறார். கர்ப்பிணி என்றும் பாராமல் தன்னை விஷ்ணு அடித்து உதைத்ததாகவும் தன் வாயில் அடித்து பல்லை உடைத்தார் என்றும் பரபரப்பாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.

தன்னை மோசமாக பேசும் விஷ்ணு நடு ரோட்டில் போலீஸார் முன்பு கூட கெட்ட வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக வைத்த வீடியோவையும் காட்டி இருக்கிறார். இது அவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஸ்ரீவிஷ்ணு அவர் முன்னாள் மனைவியான அஸ்மிதாவின் குற்றச்சாட்டுகளால் தற்போது கைதாகி இருக்கிறார்.

இவர் தவெகவை சேர்ந்தவர் என்பதாலும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஹாப்பி கப்பிள்ஸாக வலம் வரும் இவர்களின் உண்மை முகம் அதிர்ச்சியையும் கொடுத்து இருக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *