300 கோடி FD.. மாசம் ஒன்றரை கோடி வட்டி! குடும்பத்துடன் செட்டிலாக விக்னேஷ் சிவன் போடும் மாஸ்டர் பிளான்!

vignesh sivan with nayanthara

Written by

in

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் கணவரான இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது எதிர்காலத் திட்டம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

போடா போடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த அன்னும் ரவுடிதான் படத்தினை இயக்கினார். அந்த படத்தில்தான் நயன் தாராவுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இதனால் படப்பிடிப்பை பிளான் செய்யாமல் பட்ஜெட்டை ஏர்றியதாக இவர் மீது குர்ற்ச்சாட்டு எழுந்தது. இந்த படம் ஹிட் ஆனாலும் தயாரிப்பாளரான தனுஷுக்கு நஷ்டமே ஏற்பட்டதாம்.

இதையடுத்து இவர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் தற்போது வெளியாகியுள்ள எல்ஐகே போன்ற படங்களை இயக்கினார். அதுமட்டுமின்றி பாடலாசிரியராகவும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் வலம் வருகிறார். நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் போதுதான் நயன்தாராவை சுமார் 7 ஆண்டுகள் தீவிரமாகக் காதலித்து வந்த விக்னேஷ் சிவன், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன், தனது எதிர்கால நிதித் திட்டம் குறித்து பேசினார். எனது வாழ்நாள் லட்சியம் என்பது ஒரு 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அந்தப் பணத்தை அப்படியே வங்கியில் 7 சதவீத வட்டியில் ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டுவிட வேண்டும். அப்படிச் செய்தால் வருடத்திற்கு 21 முதல் 24 கோடி ரூபாய் வரை வட்டியாகவே கிடைக்கும். மாதத்திற்கு ஒன்றரை கோடிக்கு மேல் வருமானம் வரும். நாளொருக்கு கணக்குபடி ரூ 30 லட்சம் வரை கிடைக்கும் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, எந்தக் கவலையும் இல்லாமல் எனது குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் முழுமையாக நேரத்தைச் செலவிட்டு, மிகவும் நிம்மதியாக வாழ வேண்டும். இதுதான் எனது பிளான் என்று நகைச்சுவையாகவும் அதேசமயம் மிகவும் பிராக்டிக்கலாகவும் கூறியுள்ளார்.