Category: jailer 2

  • ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

    ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

    ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் காம்பினேஷனில் உருவாகும் ரெண்டாவது படம் ‘ஜெயிலர் 2’. இதன் முதல் பாகம் பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ‘ஜெயிலர் 2’-வுக்கு ரஜினி படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தான் இசை. 

    பார்ட் 1-ஐ போல் இதிலும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி. ஆல்ரெடி இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

    போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ரெஸ்ட் இல்லாமல் இரவும் பகலுமாக நடந்து வருகிறது. படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று இதன் முதல் சிங்கிள் ட்ராக்கை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

  • இந்த காரணத்தால் ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

    இந்த காரணத்தால் ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

    ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய அனைத்து தரப்பு ரசிகர்களையும் குஷி படுத்த 75 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

    இவர் நடிப்பில் ‘ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்’ என 3 படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதில் ‘ஜெயிலர் 2’-வின் ஷூட்டிங் ஆல்ரெடி ஓவர்.

    நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக கடந்த ஜூலை மாதமே அறிவித்திருந்தது இதன் தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’. 

    தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைய இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் என்பதால், ரிலீஸை நவம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

  • ‘ஜன நாயகன்’ இடைவேளையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்?

    ‘ஜன நாயகன்’ இடைவேளையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்?

    எப்போதும் ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் ‘தளபதி’ விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் பல தடைகளை தாண்டி இன்று ஒரு வழியாக ரிலீஸ் ஆகி விட்டது.

    ‘KVN புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இந்த படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ இயக்குநர் ஹெச்.வினோத் தான். இயக்கியுள்ளார். இப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று சென்ற ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியிருக்கிறார்கள்.

    பல தியேட்டர்களில் இந்த படத்தின் இடைவேளையின் போது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டிருக்கிறது. எப்போதும் ரஜினி மீது கடுப்பில் இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் இதற்கு விசில் அடித்து கொண்டாடியுள்ளனர். 

    ஒரு நிமிடம் இது விஜய்யின் ரசிகர்கள் தானா? என்று ஷாக் ஆகும் அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருந்ததாம். ‘பீஸ்ட்’ இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

  • அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸாகும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’… மாஸான ப்ரோமோவை வெளியிட்ட ‘சன் பிக்சர்ஸ்’!

    அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸாகும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’… மாஸான ப்ரோமோவை வெளியிட்ட ‘சன் பிக்சர்ஸ்’!

    ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.

    ஃபர்ஸ்ட் பார்ட் வேற லெவல் ஹிட் என்பதால், இதன் முதல் அறிவிப்பு வீடியோ வந்தபோதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடி விட்டது. முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இதையும் இயக்குகிறார்.

    இதில் மலையாள நடிகர் மோகன்லால், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் ரஜினிக்கு உதவி செய்வது போல் வலம் வரப்போகிறார்கள்.

    ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளனர்.

  • ரஜினி சார் படம்ன்னு ‘ஜெயிலர் 2’-ல நடிச்சது தப்பா போச்சே… ஹ்ரித்திக் ரோஷனால் ஃபீல் பண்ணும் விஜய் சேதுபதி!

    ரஜினி சார் படம்ன்னு ‘ஜெயிலர் 2’-ல நடிச்சது தப்பா போச்சே… ஹ்ரித்திக் ரோஷனால் ஃபீல் பண்ணும் விஜய் சேதுபதி!

    ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஒரு 10 படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    அப்படி இருக்கையில் நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்காக, அவரின் புதிய படமான ‘ஜெயிலர் 2’-வில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். இதன் முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இதையும் இயக்கி வருகிறார்.

    இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ மட்டுமல்ல, மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் ஆகியோரும் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார்கள்.

    சமீபத்தில், தான் ஹ்ரித்திக் ரோஷனின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அது ப்ளான் பண்ணதை விட அதிக நிமிடங்கள் வந்து விட்டதாம்.

    இதை பார்த்த நெல்சன், ஹ்ரித்திக் ரோஷனின் காட்சிகளை குறைக்க மனமில்லாமல், ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் காட்சிகளில் சிலவற்றை குறைத்திருக்கிறார். இதை படக்குழுவினர் மூலம் தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி இப்போது ரொம்ப ஃபீல் பண்ணுகிறாராம்.