Category: nivin pauly

  • வைரலாகும் யுவன், ஆண்ட்ரியா பாடிய நமக்காய் ஒரு வானம் பாடல்!

    வைரலாகும் யுவன், ஆண்ட்ரியா பாடிய நமக்காய் ஒரு வானம் பாடல்!

    நிவின் பாலி, அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இதை ‘தங்க மீன்கள்’ இயக்குநர் ராம் தான் இயக்கியிருக்கிறார்.

    இதில் முக்கிய ரோலில் சூரி நடித்திருக்கிறார். இதை சுரேஷ் காமாட்சியின் ‘V ஹவுஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

    சமீபத்தில் தான் இதன் ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். இப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    தற்போது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘நமக்காய் ஒரு வானம்’ என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலை யுவனுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா.

  • நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர்!

    நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர்!

    ‘கற்றது தமிழ்’ இயக்குநர் ராம் படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் ‘பறந்து போ’ படத்துக்கு முன்பே எடுத்து முடித்த படம் தான் ‘ஏழு கடல் ஏழு மலை’.

    இதில் கதையின் முக்கிய ரோல்களில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.

    ஆல்ரெடி இதன் ட்ரெய்லர், ‘ஏழேழு மலை’ மற்றும் ‘மறுபடி நீ’ ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றிருந்தது. 

    தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இதனுடன் புதிய டீசரையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

  • லோகேஷ் கனகராஜின் LCU படமான ‘பென்ஸ்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் ராகவா லாரன்ஸ்!

    லோகேஷ் கனகராஜின் LCU படமான ‘பென்ஸ்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் ராகவா லாரன்ஸ்!

    இயக்குநர் லோகேஷ் கனகராஜின் LCU-வில் இருக்கும் படம் ‘பென்ஸ்’. இதில் கதையின் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

    ‘ரெமோ, சுல்தான்’ ஆகிய படங்களின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் தான் இதை இயக்கி வருகிறார். இதில் லாரன்ஸுடன் இணைந்து ரவி மோகன், நிவின் பாலி, சம்யுக்தா நடிக்கிறார்கள்.

    இந்த படத்தில் கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும், சாய் அபயங்கர் இசையமைப்பாளராகவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது, இதன் ஷூட்டிங் 50 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    Benz ravi mohan nivin pauly

    ரவி மோகன் மற்றும் நிவின் பாலி ஆகிய இருவரின் காட்சிகளையும் படமாக்கி விட்டார்களாம். அடுத்த வாரத்தில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். இந்த ஷெட்யூலில் லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷூட் செய்யவுள்ளனர்.