Tag: அனிருத்

  • அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..

    அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..

    தமிழ் திரைப்பட இசையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தான் நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன். இளம் வயதிலேயே தனது இசைத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இன்று வரை தனது தனித்துவமான இசை ஸ்டைலின் மூலம் அவர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

    ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த அனிருத் சமீப காலமாக அவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாமல் பல்பு வாங்கி வருகின்றன. இந்தியன் 2, தேவரா சமீபத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரை ஏகப்பட்ட படங்கள் சொதப்பினாலும், அந்த படங்களில் கூட அனிருத்தின் இசை தனித்தே நிற்கிறது. சினிமா பட்ங்களை விட இசை கச்சேரிகள் மூலம் ஏகபோகமாக சம்பாதித்து வருகிறார்.

    இந்நிலையில், அவர் சமீபத்தில் நடத்திய கச்சேரியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது இசைப் பயணம் 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்ஹ்ட 3 திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகளவில் வைரலாகி, அனிருத்தை ஒரே இரவில் பிரபலமாக்கியது. இந்த பாடல் தமிழ் இசையை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்திய முக்கியமான படைப்பாகவும் கருதப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாஸ்டர், ஜெயிலர், விக்ரம் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துள்ளார். இளம் தலைமுறையினரின் மனதில் ஆழமாக பதிந்துள்ள அவரது இசை, புதுமையான ஸ்டைலும் மனதை கவரும் பீட்ஸ்களும் கொண்டதாக அமைகிறது.
    மேலும், ரஜினிகாந்த், தனுஷ், விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தது அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. அனிருத் பல விருதுகளையும் பெற்றதுடன், அவரது கச்சேரிகள் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்த ரசிகர் வட்டாரம் அவரை இந்திய இசை உலகின் முக்கியமான முகங்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

    இந்நிலையில், அனிருத் சமீபத்தில் பாரிஸ் நகரில் நடத்திய கச்சேரியில் அந்தரத்தில் பறந்துக்கொண்டே பாடிய சாகசத்தை புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இசையில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் அனிருத் தமிழ் சினிமாவின் எதிர்கால இசையை வடிவமைக்கும் திறமையான கலைஞராக தொடர்ந்து திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அனிருத்துக்குப் போட்டியாக தற்போது சாய் அபயங்கர் வந்துள்ள நிலையில், டியூட், கருப்பு, அல்லு அர்ஜுனின் ராக்கா படம் வரை சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இருவருக்கும் இடையே தான் இப்போதைக்கு போட்டியே என்கின்றனர்.

  • இவரையா வேணாம்னு சொன்னேன்!.. வெற்றிமாறனை அசரவைத்த அனிருத்!…

    இவரையா வேணாம்னு சொன்னேன்!.. வெற்றிமாறனை அசரவைத்த அனிருத்!…

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். தற்போது சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நீட்சியாக இந்த படம் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.. அதில் ஒன்று வயதான கெட்டப் என சொல்லப்படுகிறது கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.. விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்..

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வெற்றிமாறனை பொறுத்தவரை அவரின் முதல் படத்திலிருந்தே அவரின் படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து வந்தார். விடுதலை, விடுதலை 2 இரண்டு படங்களுக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்தார். எனவே ஜிவி பிரகாஷையே இசையமைக்க வைக்கலாம் என வெற்றிமாறன் விரும்பியிருக்கிறார்.. ஆனால் கலைப்புலி தாணுவும், சிம்புவும் அனிருத் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டாராம்..

    ஆனால் இந்த படத்தின் புரமோ வீடியோவுக்கு அவர் கொடுத்த பின்னணி இசை வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதாம். இவரையா வேண்டாம் என நினைத்தோம் என வெற்றிமாறன் நினைத்தாராம்.

  • ஜனநாயகன் டிரெய்லருக்கு ஆப்பு வச்ச அனிருத்!.. சோகத்தில் தளபதி ஃபேன்ஸ்!…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசிப் படமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஜனநாயகன் இசை வெளியிட்டு விழாவிலும் இது என்னுடைய கடைசி படம் என விஜய் உறுதி செய்தார்.

    தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் படம் உருவாகியிருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் செய்திருக்கிறாராம். இந்த படத்தின் சில போஸ்டர்களும் சில பாடல்களும் ஏற்கனவே வெளியானது.

    படம் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். எனவே அதை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    ஆனால் ஜனநாயகன் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களை அப்செட் ஆகியிருக்கிறது. இந்நிலையில்தான் ஜனநாயகன் டிரெய்லர் வெளிவராமல் போனதற்கு அனிருத்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மூன்று நாட்கள் மலேசியாவில் இருந்தார் அனிருத்.

    எனவே ஜனநாயகன் டிரெய்லருக்கான பின்னணி இசையை அவர் செய்து கொடுக்கவில்லை. அதனால்தான் டிரெய்லர் வீடியோ திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்கிறார்கள். அனேகமாக வருகிற 3 அல்லது 5ம் தேதி ஜனநாயகன் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என தெரிகிறது.

  • ரஜினி பொழைக்கமாட்டார்னு ஆயிடுச்சி!.. அனிருத் அப்பா சொன்ன பகீர் தகவல்!…

    இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அபூர்வ ராகங்கள் துவங்கி ஜெயிலர் 2 வரை பல படங்களிலும் நடித்து விட்டார். ரஜினி சினிமாவில் 50 வருட அனுபவத்தை தாண்டியிருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த நடிகராக ரஜினி இப்போதும் இருக்கிறார். 74 வயதிலும் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ரஜினிக்கு மது,சிகரெட் ஆகிய இரண்டு கெட்டப் பழக்கங்களும் இருந்தது. இதை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

    2011ம் வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா என்கிற படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி மயங்கி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து அவரை சிங்கப்பூருக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என வெளியே சொல்லப்படவில்லை என்றாலும் அவரது இரண்டு சிறுநீரகங்கலும் புழுதடைந்துவிட்டதாகவும், அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது.

    அதன்பின் ரஜினி உடல் நிலை சீராகி தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும், அந்த சம்பவத்திற்கு பின் அசைவ உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற துவங்கினார். மது, சிகரெட் இரண்டு கெட்டப் பழக்கங்களையும் கைவிட்டார்.

    இந்நிலையில் ரஜினியின் மனைவி லதாவின் சகோதரரும், இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவுமான நடிகர் ரவி ராகவேந்திரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ரஜினிக்கு உடல்நிலை பிரச்சனையாகி அவர் பிழைப்பாரா மாட்டாரா என்கிற நிலை வந்தது. ஆனாலும் அவருக்குள் இருந்த உத்வேகம், கடவுள் அருள், ரசிகர்களின் பிரார்த்தனை எல்லாம் சேர்ந்து அவரை பிழைக்க வைத்தது’ என சொல்லியிருக்கிறார்.

  • nick name-ஆ வைக்கிறீங்க? ‘கிங்டம்’ விழாவில் அக்கட தேசத்தை அலற விட்ட அனிருத்

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கிங்டம். கௌதம் தின்னனுரி என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ நடித்துள்ளார். படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்றுதான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது விஜய்தேவரகொண்டா நடிகர் சூர்யாவுக்கு நன்றி கூறினார்.

    ஏனெனில் இந்தப் படம் ஒரு பேன் இந்தியா படமாக தயாராகியிருப்பதால் அனைத்து மொழிகளிலும் இருக்கும் டாப் ஸ்டார்களின் வாய்ஸில்தான் கிங்டம் படத்தின் டீஸர் வெளியாஅ வேண்டும் என படத்தின் இயக்குனர் விருப்பப்பட்டாரம். அந்த வகையில் தமிழில் கிங்டம் படத்தின் டீஸரை சூர்யா வாய்ஸில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கூறியிருக்கிறார்.

    ஆனால் இப்படி ஃபேவர் கேட்பது விஜய் தேவரகொண்டாவுக்கு பிடிக்காதாம். இருந்தாலும் சந்தேகத்தின் பேரில்தான் சூர்யாவுக்கு போன் செய்து ‘அண்ணா எனக்காக ஒன்று செய்ய வேண்டும். ஆனால் நோ சொல்ல கூடாது’ என கூறியிருக்கிறார். அதற்கு சூர்யாவும் சொல்லுங்க என கூற விஷயத்தை கூறியிருக்கிறார் விஜய்தேவரகொண்டா. எந்தவித மறுப்பும் இன்றி விஜய்தேவரகொண்டாவுக்காக வாய்ஸ் கொடுக்க சம்மதித்தாராம் சூர்யா.

    அதே போல் அனிருத்தும் அந்த விழாவில் பல விஷயங்களை பகிர்ந்தார். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி கிட்டத்தட்ட 13 வருடங்களாக இந்த சினிமாவில் டிராவல் செய்து வருகிறேன்.அப்போதிலிருந்தே தெலுங்கு தேசத்திலிருந்து எனக்கான அன்பு பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. உங்களில் ஒருவராக என்னை மாற்றி விட்டீர்கள்.எப்பொழுதுமே நான் உங்கள் அனிருத் தான்.

    aniruth

    aniruth

    அதே போல் உங்கள் ‘பக்கோடு’தான் என கூறினார். இதில் பக்கோடு என்றால் ஒல்லிக் குச்சி. ஏனெனில் தெலுங்கு ரசிகர்கள் அனிருத்தை ஒல்லிக் குச்சி என்ற பெயர் வைத்துதான் கூப்பிடுகிறார்களாம். அதை அவர்கள் கிண்டலாக சொன்னாலும் அதையும் மேடையில் எந்தவொரு தயக்கமும் இன்றி அன்பாக வெளிப்படுத்தினார் அனிருத்.

  • Coolie: கூலிக்கு இருக்கும் ஹைப்! அதையும் தாண்டி படத்துல ஒன்னு இருக்கு.. அல்லு விடும் அனிருத்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், சுருதிஹாசன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    பெரிய ஸ்டார் காஸ்ட் படமாக கூலி படம் உருவாகியிருக்கிறது. அதனால் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் இருக்கிறது. இன்னொரு பக்கம் பூஜா ஹெக்டே ஒரு சோலோ பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். மோனிகா என தொடங்கும் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது, ஜெயிலர் படத்தில் எப்படி காவாலா பாடல் உலகெங்கும் பிரபலமானதோ அதே போல் மோனிகா பாடலும் பிரபலமாகும் என எதிர்பார்த்தனர்.

    அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. பூஜா ஹெக்டேவின் நடனம் கூடவே சௌபின் சாஹிரின் டாஸ்ன்ஸும் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ஓவர் சீஸில் பெரிய வியாபாரத்தை எதிர்கொண்டிருக்கிறது. துபாயில் ஒரு பெரிய நிறுவனம் தான் கூலி படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றியிருக்கிறது.

    இந்த நிலையில் படத்தை பற்றி அனிருத் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். கூலி படத்திற்கு பெரிய அளவு ஹைப் கிரியேட் ஆகியிருக்கிறது. அது ஏனெனில் முதன் முறையாக லோகியும் தலைவரும் இணைந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நானும் லோகியும் என்ன படம் பண்ணாலும் அதுக்கு மியூஸிக்கிற்கு நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் வந்துவிடும்.

    அதன் பிறகு தலைவரும் நானும் சேர்வது, இதெல்லாம் சேரும் போது வேற லெவலில் இருக்கும். அதோடு இந்த ஸ்டார் காஸ்ட் என்பது வேறு எந்த படத்துக்கும் அமையாது. இரண்டு நாளுக்கு முன்புதான் லோகியுடன் பேசினேன். அப்போது ஹைப் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்று பாடல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 5 பேரோட பேக் ஷாட் மட்டும்தான் வந்திருக்கிறது. ஆனால் டீஸரோ டிரெய்லரோ இன்னும் ரிலீஸாகவில்லை.

    இதுக்கே இவ்ளோ ஹைப் வந்திருக்கிறது. ஆனால் என்ன எதிர்பார்க்கிறோம் என்றால் இது சூப்பரான ஒரு intelligent ஆன திரைப்படம். இந்த ஒரு வார்த்தைதான் தேவைப்படுகிறது. லோகியின் அழகான ஸ்கிரீன் ப்ளே அதுவும் பெரிய லெஜெண்ட் நடிகர்களுடன் எனும் போது வேறமாதிரி வர போகிறது கூலி என அனிருத் கூறியிருக்கிறார்.

  • அனிருத்தை கடத்திட்டு போய்டுவேன்!.. விஜய் தேவரகொண்டாவுக்கு இவ்வளவு வெறியா?…

    சிறு வயது முதலே இசையில் ஆர்வமாக இருந்தவர் அனிருத். பள்ளியில் படிக்கும்போதே இசையை கற்றுக்கொள்ள துவங்கினார். ஒரு இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதே இவரின் எண்ணமாக இருந்தது. தனுஷ் இவரின் உறவினர் என்பதால் இருவரும் ஜாலியாக மெட்டுக்களை உருவாக்கி ஆல்பமாக போட முடிவெடுத்தனர். அப்படி அவர்கள் உருவாக்கிய ஒரு பாடல்தான் ஒய் திஸ் கொலவெறி பாடல்.

    இந்த பாடல் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர். எனவே, அனிருத் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்த 3 படத்தில் இந்த பாடல் வைக்கப்பட்டு தனுஷ் நடனமாடினார். அதன்பின் அனிருத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தார்.

    இதில், வேலை இல்லா பட்டதாரி, மாரி போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களிலும் அனிருத் அட்டகாசமான இசையை கொடுத்திருந்தார். ரஜினிக்கு பேட்ட, ஜெயிலர் போன்ற படங்களிலும், கமலுக்கு விக்ரம், விஜய்க்கு மாஸ்டர், லியோ போன்ற படங்களிலும் அனிருத் போட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படங்கள் அனிருத்தை நம்பர் ஒன் இசையமைப்பாளராக மாற்றிவிட்டது. இப்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் இவர்தான். தமிழ் மட்டுமில்லாமல் அட்லி பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்திலும் அனிருத் இசையமைத்தார். அந்த படம் 1300 கோடி வசூல் செய்தது.

    இப்போது பல தெலுங்கு பட நடிகர்களும் தங்களின் படங்களில் அனிருத் இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இப்போது விஜய தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய தேவரகொண்டா அனிருத் பற்றி பேசினார்.

    வேலை இல்லா பட்டதாரி, 3 போன்ற படங்களின் பாடல்களை கேட்டு யார் இந்த ஜீனியஸ்? இவர் சாதாரண மனிதனாக இருக்க முடியாது என நினைத்தேன். நான் சினிமாவில் நடிக்கும்போது என் படத்தில் அனிருத்தின் பாடல்கள் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அது நடக்கவில்லை. அனிருத்தை எப்படி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்பதும் தெரியவில்லை. மேலும், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோரின் விருப்பம் வேறாக இருக்கும். படத்தின் பட்ஜெட்டும் முக்கிய காரணமாக இருக்கும்.

    அப்போதெல்லாம் ஆதங்கப்படுவேன். நான் மட்டும் ராஜாவாக இருந்தால் அனிருத்தை கடத்தி வந்து என் இடத்தில் வைத்துக்கொண்டு என்னுடைய எல்லா படங்களுக்கும் அவர்தான் இசையமைக்க வேண்டும் என கட்டளை போட வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். இப்போது கிங்டம் படத்தில் அனிருத் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என பகிர்ந்துகொண்டார்.

  • கூலி படத்தை முழுசா பார்த்த அனிருத்… டாப் கியர்ல ஹைப்பை ஏத்திட்டாரே!

    விக்ரம் படத்தில் லோகேஷ்கனகராஜின் இயக்கத்தைப் பார்த்து ரஜினி தனக்காக ஒரு படம் பண்ணுங்கன்னு சொன்னாராம். அப்படி உருவான படம் தான் கூலி. ஹார்பர் பேக்ரவுண்டுல தான் இந்தப் படத்தோட கதை நடக்குது. கூலி படத்தோட டீசர்ல மலையாள நடிகர் ஷோபின்ஷா, நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ரஜினின்னு எல்லாரையுமே பேக்ஷாட்டா காட்டுறாங்க. டீசர் முடியும்போது ரஜினி விசில் அடிக்கிறாரு. ஆரம்பகாலத்தில் ரஜினி ‘தீ’ என்ற ஒரு படத்தில் ஹார்பர் பேக்ரவுண்டுல நடிச்சிருப்பாரு. ரொம்ப சூப்பரா இருக்கும்.

    கூலி படத்துக்காக ஹார்பர்ல நிறைய சண்டைக்காட்சிகள் எடுத்துருக்காங்க. அதெல்லாம் வேற லெவல்ல வந்துருக்குதாம். ரஜினிக்கு அங்குள்ள உப்புக்காற்று ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சல் மாதிரி வந்துவிட்டதாம். அதனால் லோகேஷ் வேற இடத்துல அதே மாதிரி செட் போட்டு மீதிக் காட்சிகளை எடுத்து முடித்தாராம்.

    இதுவரை ஆடியன்ஸ் பார்க்காத ரஜினியை லோகேஷ் காட்டணும்னு நினைக்கிறாராம். அவருக்கு ரஜினி படத்தில் ரொம்ப பிடித்தது தளபதி படமாம். லோகேஷ் கனகராஜ் பல படத்துல உள்ள கனெக்ஷனைக் கொண்டு வருவாரு. இந்தப் படத்துல கூட ரஜினியோட கேரக்டர் பேரு தேவா. ரஜினி அனிருத்துக்காக ஸ்பெஷலா மியூசிக் போடுறாரு.

    ரஜினிக்காக அவரு போடும் பாட்டு எல்லாமே ஹிட். கூலி படத்தின் கதைக்களம் ரொம்ப அழுத்தமானது. கூலி படத்துல 2 கேங்ஸ்டருக்கான போட்டி தான் கதை. இந்தப்படத்துலயும் ரஜினிக்கு டஃப் கொடுக்குற மாதிரி வில்லன் இருக்காராம்.

    இந்தப் படத்தை முழுசா அனிருத் பார்த்துட்டாரு. அவரே இந்தப் படம் வேற மாதிரி மாஸ் என்டர்டெய்ன்மென்டா வந்துருக்கு. ரஜினி படத்துலயே இது ஸ்பெஷல். லோகேஷ், ரஜினி காம்போ சூப்பரா இருக்கு என்றும் சொல்லி இருக்கிறார். சன்பிக்சர்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    100 நாள் தான் படம் ரிலீஸ்சுக்கு இருக்கு. அந்த வகையில் கூலி கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி பர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், தேர்டு சிங்கிள், ஆடியோ ரிலீஸ்னு பல புரொமோஷன்கள் தயாரா இருக்கு. சுருதிஹாசனும், ரஜினியும் ஸ்க்ரீன்ல இருக்கும்போது வேற மாதிரியான வைப்பா இருக்கும். ஹாலிவுட் லெவல்ல கலரிங் உள்பட எல்லா வேலைகளும் பண்றாங்களாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

  • அஜித் அறிக்கையால் அனிருத்துக்கும் செக்.. என்ன செய்யப் போறாருனு தெரியலயே

    வேகமெடுக்கும் அஜித் அறிக்கை: நேற்றிலிருந்து அஜித் சோசியல் மீடியாக்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறார். அதற்கு காரணம் அவர் வெளியிட்ட அறிக்கை. நேற்று தான் துபாயில் இருந்து சென்னை திரும்பினார் அஜித். வந்ததும் முதல் வேளையாக ஒரு பக்க அறிக்கையை தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் எக்ஸ் வலை தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் அஜித். அந்த அறிக்கையில் சமீப காலமாக தன்னை கடவுளே அஜித்தே என கோஷமிட்டு வருவதை பார்த்து வருகிறேன்.

    அது என்னை மிகவும் கவலை அடைய செய்திருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் என் பெயரோடு வேற எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்க வேண்டாம். எனக்கான பெயரை வைத்து அழைத்தால் போதும். விழாக்களிலும் பொது நிகழ்வுகளிலும் இந்த மாதிரி கோஷமிட்டு மற்றவர்களை துன்புறுத்தும் இந்த செயலை இனிமேல் செய்ய வேண்டாம். உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    புது டிரெண்ட்: உங்கள் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மாதிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித். அந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே மீண்டும் அஜித்தின் பெயரை வைத்து ரசிகர்கள் வேறு ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினர். அவர் பெயர் முன் வேறு எந்த பெயரையும் சேர்க்கக்கூடாது என்று தானே சொன்னார் என ஆங்காங்கே இருக்கும் சில ரசிகர்கள் கடவுளே என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு அஜித்தே அஜித்தே என டிரம் இசையுடன் சேர்த்து பாட ஆரம்பித்து விட்டனர்.

    இப்போது அதுதான் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே ‘அஜித்தே கடவுளே’ இது தன்னை கவர்ந்தது என அனிருத் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே தான் விடாமுயற்சி படத்தின் டீசரிலும் கடைசி நிமிடத்தில் அஜீத்தே கடவுளே என வைத்திருப்பார் அனிருத். அதனால் ரசிகர்களை கண்ட்ரோல் செய்த அஜித் விடாமுயற்சி டீசரிலும் அதை எடுக்கும்படி வற்புறுத்த வேண்டும்.

    அனிருத்துக்கு ஆப்பு: ஒரு வேளை அந்த டீசரில் அந்த கோஷம் இருந்தது என்றால் அது இன்னும் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும் என கோடம்பாக்கத்தில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி அனிருத்திடம் கேட்டதற்கு டீசரில் அஜித்தே கடவுளே என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். கடவுளே அஜித்தே என்று இல்லை என கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைக் கேட்கும் சில பேர் பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம் என கவுண்டமணி செந்தில் காமெடியை நினைவுபடுத்தி கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • ஜெயிலர் 2-வில் பெரிய வேலைய பார்த்த ரஜினியின் செல்லப்பிள்ளை.. நெல்சனுக்கு வந்த சோதனையா?..

    நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். 74 வயதை தாண்டிய போதிலும் தற்போது வரை இளம் நடிகர்களுக்கு இணையாக படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன்.

    ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு சுமாரான படமாகவே வேட்டையன் திரைப்படம் அமைந்தது.

    இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார்.

    நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் சுமார் 650 கோடி வசூல் சாதனை செய்ததால் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கூலி திரைப்படத்தை முடித்த கையோடு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தையும் சன் பிச்சர் நிறுவனமே தயாரிக்க இருக்கின்றது.

    ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கின்றார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏனென்றால் நெல்சன் திரைப்படம் என்றாலே அதற்கு அனிருத் இசையமைப்பாளர் ரஜினிகாந்தின் தற்போதைய பல படங்களுக்கு அவர்தான் இசையமைத்து வருகின்றார்.

    மேலும் ரஜினிகாந்தின் செல்லப்பிள்ளையும் அனிருத். தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகின்றார். அடுத்தடுத்த படங்களில் தனது பாடல்கள் மூலமாக பல ஹிட்டுகளை கொடுத்து வருகின்றார். இதனால் தமிழ் சினிமாவில் இவரின் மார்க்கெட் தற்போது டாப் லெவலுக்கு சென்று இருக்கின்றது .

    இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு அனிருத் 17 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகின்றது. இதை கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். ஏனென்றால் அனிருத் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இவ்வளவு ஏன் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் 16 கோடி சம்பளம் கேட்டுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு இவ்வளவு கேட்க மாட்டாரா? என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

    மேலும் அனிருத் இசையமைப்பதற்கு அதிலும் ரஜினி படங்களில் அவரின் இசை டாப் லெவலில் இருக்கும் நிலையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும் தப்பில்லை என்று கூறப்படுகின்றது. தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாரா? அல்லது வேறு இசையமைப்பாளரை படக்குழுவினர் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.