Tag: அஸ்வத் மாரிமுத்து

  • சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர்.சி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே.பாலாஜி, சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி இறுதியாக சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்து அறிவிப்பும் வெளியானது..

    ரஜினி தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து விட்டதால் குடும்ப செண்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
    ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தியும் வெளியேறி விட்டதாகவும், அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி கதையில் பல மாற்றங்களை சொன்னதோடு, துரந்தர் போல கதையை மாற்ற சொன்னதால்தான் இந்த படத்திலிருந்து சிபி வெளியேறியதாக சொல்லப்பட்டது..

    ஒருபக்கம் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு புதிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக இருந்தது. அதன் சூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில்தான் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததது. இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திடமும், சிம்புவிடமும் சொல்லிவிட்டு ரஜினி படத்துக்கு தயாரானார் அஸ்வத்து மாரிமுத்து. ஆனால், ரஜினி சொன்ன மாற்றங்களை சிபி சக்ரவர்த்தி செய்து வருவதாகவும் அது ரஜினிக்கு பிடித்து விட்டால் சிபி சக்கரவர்த்தியே இயக்குனராக தொடர்வார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    இதையடுத்து அஸ்வத் மாரிமுத்துவைன் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் ஏஜிஎஸ் நிறுவனமும் சரி.. சிம்புவும் வரி.. அஸ்வத்துக்காக காத்திருக்க தயாராக இல்லை.. வேறு இயக்குனரை வைத்து ஒரு படத்தை துவங்கும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஒருவேளை சிபி சக்ரவர்த்தியை மீண்டும் ரஜினியை டிக் அடித்துவிட்டால் ரஜினியை நம்பி சிம்பு படத்தை அஸ்வத் இழக்க நேரிடும். எல்லாம் ரஜினியின் முடிவில்தான் இருக்கிறது..

  • பொடிப்பையன் ரன்வீர் சிங்குக்கெல்லாம் துரந்தர் போல கதை அமையுது.. ரஜினியால் டர்ரான டான் டைரக்டர்!..

    பொடிப்பையன் ரன்வீர் சிங்குக்கெல்லாம் துரந்தர் போல கதை அமையுது.. ரஜினியால் டர்ரான டான் டைரக்டர்!..

    தீபிகா படுகோனை விட ரன்வீர் சிங் பாலிவுட்டில் ரொம்பவே மட்டமான நிலையில் தான் இருந்தார். ஆனால், துரந்தர் மற்றும் துரந்தர் 2 என இரு படங்களில் ஒட்டுமொத்தமாக 3000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கான், அல்லு அர்ஜுன் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார்.

    சமீபத்தில், லெஜண்ட் சரவணாவின் லீடர் படமே துரந்தர் அளவுக்கு செம மாஸான ஸ்பை படமாக உருவாகி இருந்தது. ஆனால், ரஜினிக்காக டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்தி சுட்டுக் கொடுத்த ஹாலிவுட் ரீமேக் படத்தின் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் துரந்தர் அளவுக்கு மாற்றிக் கொண்டு வா என ரஜினிகாந்த் உத்தரவிட, அய்யோ ஆளவிடுங்க சாமி என ஓடிவிட்டார் என்கின்றனர்.

    தெலுங்கில் நானி படத்துக்கு டாட்டா காட்டிவிட்டு வந்த நிலையில், அங்கேயும் தயாரிப்பாளர்கள் 5 கோடிக்கு ஃபைன் போட்ட நிலையில், சிபி சக்கரவர்த்திக்கு மீண்டும் ஏழரை ஆரம்பித்துவிட்டதா? என கலாய்க்கின்றனர்.

    சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யாவை வைத்து டான் எனும் படத்தை எடுத்து உருட்டிய சிபி சக்கரவர்த்தி சுமார் 4 ஆண்டுகளாக புதிய படத்தை ஆரம்பிக்காமல் இருந்து வந்த நிலையில், தலைவர் 173 படம் கிடைத்து விட்டதே என ஹேப்பியாக இருந்த அவருக்கு தற்போது ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

    டிராகன் படத்தை எடுத்துவிட்டு சிம்புவுக்காக தவம் கிடைக்கும் அஸ்வத் மாரிமுத்து ஒரு வருடம் பார்ட்டி பண்ணிவிட்டு ஜாலியாக இருந்த நிலையில், அவருக்குத்தான் தலைவர் 173 படத்தை இயக்கும் ஜாக்பாட் கிடைக்கப் போகிறது என்கின்றனர். ரஜினிகாந்த் – கமல் படத்தின் ப்ரோமோவே வந்த நிலையில், இன்னமும் சிபி சக்கரவர்த்தி பட அறிவிப்பு வராத நிலையில், இனியும் வருமா? வராதா? என்று தெரியவில்லை.

  • தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

    தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

    ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடி வசூலை பெற்றது.. இதையடுத்து கவனிக்கத்தக்க இளம் இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

    ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனர்களில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் ஏனோ டேக் ஆப் ஆகவில்லை. அதேநேரம், இந்த கதையில் நான் அல்லது கமல் மட்டுமே நடிக்க முடியும் என சொல்லியிருந்தார். அதேபோல், விஜயும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவர் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அது நடக்கவில்லை. தற்போது சிம்புவின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார்..

    இந்நிலையில்தான், நடிகர் சிவகார்த்திகேயன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு நண்பர் மூலம் அவருக்கு தூது விட்டிருக்கிறார்.. ஆனால் முதல் பேச்சு வார்த்தையிலேயே முடியாது என மறுத்து விட்டாராம் அஸ்வத். ‘அரசன் படம் முடிந்தவுடன் சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறேன். எனவே சிவகார்த்திகேயன் படத்தை இயக்க முடியாது’ என்றெல்லாம் பூசி முழுகாமல் மிகவும் ஓப்பனாக பேசி அந்த வாய்ப்பை அஸ்வத் மறுத்ததாக சொல்லப்படுகிறது.

    ‘நிறைய இயக்குனர்களை சிவகார்த்திகேயன் கூப்பிட்டு படம் பண்ணுவதாக சொல்லி நம்பிக்கை கொடுத்து சில வருடங்கள் காக்கவைத்து வீணடித்திருக்கிறார்.. அவரை நம்பி நான் வருடக்கணக்கில் காத்து கொண்டிருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டாராம் அஸ்வத்
    .

    அஸ்வத் மாரிமுத்து சொல்வதும் உண்மைதான். ஏனெனில் சிபி சக்கரவர்த்தி, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், வெங்கட் பிரபு, அயலான் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களையும் வருடக் கணக்கில் காத்திருக்க வைத்து அவர்களின் படங்களில் நடிக்காமல் போனவர்தான் சிவகார்த்திகேயன்.. எனவே மிகவும் உஷாராக இந்த முடிவை அஸ்வத் மாரிமுத்து எடுத்திருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்..

  • மதிய உணவை கூட தவிர்த்து கதை கேட்ட ரஜினி…படம் கைநழுவியது ஏன்?- மனம் திறந்த அஸ்வத் மாரிமுத்து!

    மதிய உணவை கூட தவிர்த்து கதை கேட்ட ரஜினி…படம் கைநழுவியது ஏன்?- மனம் திறந்த அஸ்வத் மாரிமுத்து!

    கூளி படத்திற்கு பின் ரஜினி அடுத்து சிபி சக்ரவர்த்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மகல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. முன்னதக சுந்தர்.சி ய்கக்குவதாக அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியனது . ஆனல் அவர் விலகவே சிபி சக்ரவர்த்தி உள்ளே வந்தார்.

    தலைவர் 173 படத்திற்காக சுந்தர்.சி விலகியதும் பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டு வந்தார். அவர்களில் ஒருவர் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். விஜய்சேதுபதி நடித்த ஓ மை கடவுளே, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்து சூபப்ர் ஹிட் ஆன டிராகன் படங்களை இயக்கியவர் இவர். இவர்து கதை ரஜினிக்கு மிகவும் பிடித்தது எனக் கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ இவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து தலைவர் 173 தொடர்பாக சமீபத்தில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியபோது,

    ரஜினியிடம் சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் இந்தப் படத்தின் கதையை கூறினேன். அவரும் மிகவும் விருப்பமாக கதையை கேட்டார். கதையின் முதல் பாதியைக் கேட்டுக்கொண்டிருந்த ரஜினி, குறிப்பாக இடைவேளை காட்சியின் விறுவிறுப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். கதையின் மீதான அதீத ஆர்வத்தால், வழக்கமாகத் தான் சாப்பிடும் மதிய உணவைக் கூடத் தவிர்த்துவிட்டு, அடுத்த என்ன நடக்கும் என்ற ஆவலில் முழு கதையையும் ரஜினி அமர்ந்து கேட்டார் என்று அஸ்வத் கூறியுள்ளார்.

    மேலும் முழு கதையையும் கேட்டு முடித்த ரஜினிகாந்த், கதை மிகவும் அற்புதமாக இருப்பதாகவும், இது ஒரு Extraordinary கதை என்றும் அஸ்வத் மாரிமுத்துவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ரஜினி மற்றும் தயாரிப்பாளர் கமல் ஆகிய இருபெரும் ஜாம்பவான்களுக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்துப்போன போதிலும், சில தவிர்க்க முடியாத நடைமுறைச் சூழல்கள் மற்றும் கால்ஷீட் நெருக்கடிகள் காரணமாக இந்தப் படம் தற்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கதை சில சூழ்நிலைகளால் இப்போது தள்ளிப் போயிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தக் கதையை நிச்சயமாக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஆகிய இருவரில் ஒருவரை வைத்துப் படமாக்கியே தீருவேன் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

  • சிம்புவுக்கு ஷாக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து!.. STR மொத்தமா மாறிட்டாரே!…

    சிம்புவுக்கு ஷாக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து!.. STR மொத்தமா மாறிட்டாரே!…

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தும் தொடர்ந்து படங்களில் நடிக்காதவர் சிம்பு. அவர் நடிக்கும் படங்களுக்கு ஒன்று அவரால் பிரச்சனை வரும்.. இல்லையென்றால் வேறு வழியில் சிக்கல் வரும். மொத்தத்தில் சிம்பு படம் என்றாலே அது சிக்கல்தான். பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பூஜை எல்லாம் நடந்தது.

    அந்த படத்தில் சந்தானமும் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் டிராப்.. அதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க துவங்கினார் சிம்பு.. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது வரை துவங்கப்படவில்லை..

    அதேபோல் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அந்த படத்திற்கான முழு கதையும் அஸ்வத் மாரிமுத்து எழுதி முடிக்காமல் இருந்திருக்கிறார். ஒருபக்கம், வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடிக்கப்போனார். இதற்கிடையில் ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில், சிம்பு படத்தை விட்டுவிட்டு ரஜினியிடம் சொல்வதற்காக ஒரு கதையை உருவாக்கினார் அஸ்வத்.

    அதற்கு 2 மாதங்கள் எடுத்துக்கொண்டார். இதனால் சிம்பு கோபமடைந்தார். மேலும், அந்த வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்கு போய்விட்டது. அஸ்வத் மாரிமுத்துவை கூப்பிட்டு ‘ஏப்ரல் மாசம் நம்ம படம் ஷூட்டிங்.. ரெடியா இரு என’’ என சிம்பு சொல்லியிருக்கிறார். ஆனால், அரசன் படம் ஷூட்டிங் நடப்பதால் சிம்பு வரமாட்டார் என நினைத்து கதையை எழுதாமல் இருந்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

    சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்துவை அழைத்த சிம்பு ‘கதை ரெடியா?’ என கேட்க, ‘இரண்டு மாதத்தில் எழுதி விடுகிறேன்’ என அஸ்வத் சொல்ல சிம்பு கடுப்பாகி விட்டாராம்.. ‘எனக்கு தெரியாது.. ஏப்ரல் மாசம் ஷூட்டிங்’ என சொல்ல அலார்ட் ஆன அஸ்வத் மாரிமுத்து 2 நாட்களில் உட்கார்ந்து முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டாராம்..

    சிம்புவை தொடர்பு கொண்டு ‘ஃபுல் ஸ்கிரிப்ட் ரெடி சார்.. நீங்க எப்ப சொன்னாலும் ஷூட்டிங் போகலாம்’ என சொல்ல சிம்புவே ஆடி போய்விட்டாராம்.. அதன் பின்னரே இருவரும் சேர்ந்து ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தியை போய் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. இது தொடர்பான புகைப்படம்தான் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது..

  • விரைவில் டிராகன் 2!.. செம அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்…

    கோமாளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மூன்று வருடங்களுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து இயக்கிய லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாற்றியது.

    இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதன்பின் அசோக் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார் பிரதீப். அந்த படம் 100 கோடி வசூலைத் தொட்டது. அதேபோல் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்கிற படத்தில் பிரதிப் நடிக்க அந்த படமும் வெற்றி.. இப்படி இயக்குனரக ஒரு வெற்றி, நடிகராக மூன்று தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் பிரதீப்..

    இந்நிலையில்தான், தன்னுடைய புதிய பட அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டிருக்கிறார்.. ‘நண்பனாய் இருந்து டைரக்டரா மாறுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது.. இப்போது இரண்டும் என்னிடம் இருக்கிறது.. விரைவில்’ என பதிவிட்டு இரண்டு டிராகன் புகைப்படங்களை வைத்திருக்கிறார்.

    இதை பார்க்கும் போது டிராகன் 2 படத்தை அவர் இயக்கி நடிக்கப்போவது தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ரஜினி இல்லனா சூர்யா!.. ரூட்டை மாற்றிய டிராகன் பட இயக்குனர்!.. செம அப்டேட்!…

    இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமா எடுக்கும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பலரில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட சிலரை வைத்து இவர் இயக்கி ஓ மை கடவுளே திரைப்படம் 2020ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
    இந்த படத்துக்கு பின்னர் அசோக் செல்வன் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஒரு சிறந்த ஃபீல் குட் படமாகவும் இது உருவாகியிருந்தது..

    அதன்பின், அதே திரைப்படத்தை தெலுங்கில் இயக்கினார் அஸ்வத் மாரிமுத்து. அதேநேரம், பிரதீப் ரங்கநாதனை வைத்து இவர் இயக்கிய டிராகன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை பெற்றது. இந்த படத்தில் கயாடு லோகர், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். எனவே கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக அஸ்வத் மாரிமுத்து மாறினார்.

    டிராகன் படம் உருவாகும்போதே நடிகர் சிம்புவின் 51-வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினிக்கு கதை சொல்லப் போன சில இயக்குனர்களில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் அது டேக் ஆப் ஆகவில்லை. அதன் பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியானது..

    இந்நிலையில், ரஜினிக்கு சொன்ன அதே கதையை கொஞ்சம் மாற்றி சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் ஸ்டைலான ஒரு மாஸ் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள்.. சிம்பு படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் படத்தை அஸ்வத் இயக்குவார் எனத்தெரிகிறது.

  • எல்லா கோட்டையும் அழிங்க!.. ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவரா?!.. இது புதுசு!…

    ஜெயிலர் 2-வுக்கு பின் ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்விதான் இப்போது ரசிகர்கள் மனதில் இருக்கிறது.
    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதால் தற்போது வேறு இயக்குனரை தேடி வருகிறார்கள்.

    பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் அவரை டிக் அடித்திருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது என செய்திகள் கசிந்தது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது ராம்குமார் பாலகிருஷ்ணன்தானா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

    ashwath

    இந்நிலையில்தான் தற்போது ஒரு புது தகவல் வெளியே கசிந்திருக்கிறது. டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சொன்ன ஒரு காமெடி கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் அந்த கதை பிடித்துவிட்டால் ரஜினியின் அடுத்த படத்தை அசோக் மாரிமுத்துவே இயக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

    அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்கவிருக்கிறார் என எற்கனவே அறிவித்து விட்டார்கள். ஒருவேளை ரஜினி பட வாய்ப்பு வந்தால் அந்த படத்தை இயக்கி முடித்துவிட்டு அதன்பின் அவர் சிம்பு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

  • அஸ்வத் மாரிமுத்து படத்தில் சிம்புவுக்கு இதான் கேரக்டராம்!. அட செமயா இருக்கே!…

    முன்பு போல் இல்லாமல் சிம்பு வேகமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என முடிவெடுத்து கையில் 4 படங்களை வைத்திருக்கிறார். பத்து தல படத்திற்கு பின் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்த படத்திற்கு முன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், பட்ஜெட் காரணமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டது. அதன்பின்னர்தான் அவர் தக் லைப் படத்தில் நடித்தார். சிம்புவின் அடுத்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

    இந்த படத்தில்தான் சந்தானம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு பின் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இது அவரின் 50வது திரைப்படமாகும். இந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனமும் இந்த படத்தில் முதலீடு செய்யவிருக்கிறது.

    இது ஒரு சரித்திர கதையாகும். சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தை,அதாவது சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய 2 படங்களை இயக்கிவர் அஸ்வத். பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.

    எனவே, இப்போது எல்லோராலும் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத். சிம்பு படத்தை இவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டபோது ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அதில், God of love என்கிற கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. அதுதான் படத்தின் தலைப்பு என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அது தலைப்பு இல்லை என அஸ்வத் மறுத்திருக்கிறார்.

    இந்நிலையில், இந்த படத்தில் காதலின் கடவுளாக சிம்பு நடித்திருக்கிறாம். அதாவது, ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி போல காதலர்களை சேர்த்து வைக்கும் வேடம் என்கிறார்கள். காதலர்களுக்கு பிரச்சனை வரும் போது அறிவுரை சொல்வது, அவர்களை சேர்த்து வைப்பது போன்ற பல விஷயங்களை அவர் செய்வார் எனத்தெரிகிறது. பல காதல் படங்களில் அசத்தலாக நடித்தவர், சொந்த வாழ்வில் சில காதல் தோல்விகளை கடந்து வந்தவர் என்பதால் சிம்புவுக்கு இந்த வேடம் பொருத்தமாகவே இருக்கும் என நம்பலாம்.

  • நம்மளும் ஆஸ்காருக்கு அனுப்புவோமா? 3 நிமிச பாட்டுக்கு இப்படி ஒரு புரோமோவா? டிராகன் டீமின் அட்ராசிட்டி…

    Dragon: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹிட் இயக்குனர்களில் முக்கிய இடம் பிரதீப் ரங்கநாதனுக்கு உண்டு. அவர் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படமும், அவர் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படமும் ரசிகர்களிடம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

    தற்போது அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைப்பு செய்திருக்கிறார்.

    இப்படத்தின் முதல் சிங்களான தி ரைஸ் ஆஃப் டிராகன் சமீபத்தில் வெளியானது. அனிருத் பாடல் விக்னேஷ் சிவன் எழுதிய வரிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இப்பாடலில் பிரதீப் ரங்கநாதனுடன் கௌதம் மேனனின் டான்ஸும் ஹிட் அடித்துள்ளது.

    தற்போதைய படத்தின் வழித்துணையே சிங்கிள் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதற்கான புரோமோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. பாடல் எப்படி இருக்குமோ என்பது தெரியவில்லை ஆனால் மூணு நிமிட பாடலுக்கு இரண்டரை நிமிடத்திற்கான புரோமோ வீடியோ தான் தற்போது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேலும், இந்த புரோமோவில் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வத்திடம் ஆஸ்காருக்கு படத்தை அனுப்பலாமா எனக் கேட்க ஏன்டா? மனசாட்சியை தமிழ்நாட்டிலேயே பூட்டி வச்சிட்டு வந்துட்டியா எனக் கேட்கிறார். மேலும், நம்ம படம் என்ன அமைதியா பார்த்துட்டு கைதட்டி வரவா படம் எடுக்கிறோம்.

    கதற கதற என அவர் இழுக்க பிரதீப் ரங்கநாதன் கன்பார்ம். படம் ரிலீஸ் ஆனவுடன் நீங்க தான் மீம் டெம்பிளேட் என்கிறார். தொடர்ந்து நம்ம படம் நமக்கு உசத்திதான். டீரிமில் உன் ஆசையை வச்சிக்கோ என சொல்லி செல்லும் போது தான் படத்தின் பாடலுக்கான சிங்கிள் என்பதே தெரிகிறது.

    வழித்துணையே எனத் தொடங்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே பாடி இருக்கின்றனர்.