Tag: இதயம்

  • வெறும் 6 ரூபாய் டிக்கெட்.. 10 லட்சம் வசூல்! முரளியின் இதயம் படம் குறித்து வைரல் தகவல்!

    வெறும் 6 ரூபாய் டிக்கெட்.. 10 லட்சம் வசூல்! முரளியின் இதயம் படம் குறித்து வைரல் தகவல்!

    1991-ம் ஆண்டு அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில், முரளி மற்றும் ஹீரா நடிப்பில் வெளியான திரைப்படம் இதயம் . ஒருதலைக் காதலை மிகவும் ஆழமாகவும், எதார்த்தமாகவும் சொன்ன இப்படம், அந்த காலகட்டத்து இளைஞர்களை பைத்தியமாக்கியது. இப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது இசைஞானி இளையராஜாவின் இசை தான். படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மாபெரும் வெற்றியடைந்தன. குறிப்பாக பின்னணி இசை நம்மை எங்கோ கொண்டு செல்லும். கல்லூரி மாணவர் வேடம் என்றால் முரளிக்கு அல்வா சப்பிடுவது மாதிரி. இந்த படத்தில் அவரது அமைதியான நடிப்பில் அசத்தியிருப்பார். முரளியின் திரைப்பயணத்தில் இதயம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சென்னையில் பிரபலமான ரோகிணி திரையரங்கு உரிமையாளர் இதய படம் குறித்து கூறிய தகவல் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்படுகிறது.

    அவர் கூறுகையில், “இதயம் படத்தை எங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக வாங்கச் சென்றோம். அப்போது, சென்னைக்கு வெளியே உள்ள திரையரங்குகளுக்குத்தான் தர முடியும் என்று கூறி 90,000 ரூபாய் விலை கேட்டார்கள். நான் அவர்களிடம் பேரம் பேசி இறுதியாக 80,000 ரூபாய்க்கு படத்தை வாங்க ஒப்பந்தம் செய்தேன் என்று தெரிவித்தார்.

    மேலும் அவர்கூறியபோது, நான் அந்தப் படத்தை 80 ஆயிரம் கொடுத்து வாங்கியபோது, என்னைச் சுற்றி இருந்த பலரும், ‘முரளி படத்திற்கு இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்காதீர்கள், அந்தப் படம் அந்த அளவுக்கு ஒர்த் கிடையாது, கலெக்‌ஷன் வராது என்று என்னை எச்சரித்தனர் என்றார். ஆனால், படம் வெளியாகி அனைவரின் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கியது. எங்கள் திரையரங்கில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மாபெரும் வசூலைக் குவித்தது. அந்த காலகட்டத்தில் ஒரு டிக்கெட்டின் விலையே வெறும் 6 ரூபாய் தான். அப்படி இருந்தும் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு படம் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது எங்கள் தியேட்டர் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று அவர் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

    ரோகினி திரையரங்கு திறந்தபோது வெளியிட்ட முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

    90களில் இதயத்தில் ரசிகர்களைத் தொலைத்த ஹீரோயினாக வலம் வந்தவர் ஹீரா. பேண்ட்மாஸ்டர், திருடா திருடா போன்ற படங்களின் மூலம் தனக்கான தனியிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

    சதீலீலாவதி படத்தில் இருந்து தான் அவருக்கு மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததாம். படத்தில் ரமேஷ் அரவிந்த்துக்கு இவர் தான் ஜோடி. கமலிடம் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் இருந்து தெரியாத யாரையாவது தனது ஜோடியாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.

    இந்த ரோலில் நடிக்க கௌதமி, சங்கீதா, சுஹாசினி உள்பட பலரும் மறுத்து விட்டார்களாம். கடைசியாக ஹீரா இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம். 90களின் மத்தியில் வந்த மீனா, தேவயாணி, சுவலட்சுமி ஆகியோர் புடவைகளில் வந்து ரசிகர்களை சுண்டி இழுத்தனர். இந்த இழுப்பால் ஹீராவின் மார்க்கெட் முடிந்து போனது.

    KK
    KK

    அதன் பிறகு அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் திருடா திருடா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மாஸாக இருந்தது. காதல் கோட்டையில் அஜீத்துடன் அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது. அவ்வை சண்முகியில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அஜீத்துடன் ஹீராவுக்கு பயங்கரமான காதல் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்தாராம். அதைத் தொடர்ந்து பெங்களூருவுக்கு சென்று விட்டார். அங்கு கன்னடம், தெலுங்கு படங்களில் 2வது கதாநாயகியாக நடித்தார்.

    கே.எஸ்.ரவிகுமார் அவரை அழைத்து சுயம்வரத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து கார்த்திக் நடித்த பூவேலி பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்புகிறார் என கூறப்பட்டது. ஆனால் கல்யாணம் முடிந்தவர் என்ற காரணத்திற்காக அதிலிருந்து மீண்டு வந்தாராம் ஹீரா. சூர்யவம்சம், நட்புக்காக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அந்தக் காரணத்திற்காகவே மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் வரவில்லை. சதிலீலாவதியில் கள்ளக்காதலி வேடத்தில் நடித்ததால் ஹீராவின் மார்க்கெட் சரிந்து போனதாம்.