Tag: இளையராஜா

  • தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். விஜய் ஒரு முக்கியமான, பிரபல நடிகராக இருந்ததால் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என விஜய் நம்புகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் ஆதரவும் தனது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர் அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நியமித்தார்.

    நடந்து முடிந்த தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
    விஜய் அரசியலுக்கு வந்தது முதலே ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

    இதனால் விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் கருத்து சொல்லவில்லை. ஏனெனில் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது.. அப்படி பகைத்துக் கொண்டால் கண்டிப்பாக தங்கள் படம் வெளியாவதற்கு பிரச்சினை செய்வார்கள் என்பது தெரிந்து பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்..

    இந்நிலையில்தான், இசையமைப்பாளர் இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல தனது youtube சேனலில் ‘இது எங்கள் நீதி’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘சின்னத்தம்பி உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை பகிர்ந்திருக்கிறார். அதுவும் விஜயின் போட்டோவோடு அந்த பாடலை பகிர்ந்திருக்கிறார். இந்த படம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கி 1988ல் வெளியானது. இந்த படத்தில் ராம்கி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.. அதோடு விஜயும் இந்த படத்தில் சிறுவனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

  • இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் செட்டாகாத பாடல்… பிரபலம் தந்த சுவாரசிய தகவல்

    இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் செட்டாகாத பாடல்… பிரபலம் தந்த சுவாரசிய தகவல்

    பண்டை தமிழர் வாழ்வில் இருந்த மெல்ல மறைந்து போன கொலைச்சிந்து வடிவத்தை மீட்டெடுத்த பெருமை இசைஞானி இளையராஜாவையேச் சேரும். ஏற்கனவே இளையராஜாவினன் இசையில் மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும் காட்டுவழி போற பொண்ணே பாடல் இந்த வடிவத்தில் இருந்தது. இன்னொரு பாடல் உண்டு. இளையராஜாவைத் தவிர வேறு யாரும் இந்தப் பாட்டைப் பாடி இருந்தாலும் அந்தளவுக்கு யதார்த்தமான கிராமத்து நடை, ஒரு வெள்ளந்தியான மனிதனின் நிலை கிடைத்திடுமா என்பது சந்தேகம்.

    அப்படி ஒரு பாடல் தான் வைரமுத்து எழுதியது. கரிமேடு கருவாயன் படம் 1986ல் விஜயகாந்த், நளினி நடிப்பில் வெளியானது. இளையராஜா இசை அமைத்துள்ளார். மதுரை அருகில் உள்ள கருவாயன் என்ற வீரமனிதனின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது. 2வகையான கதையைச் சொல்றாங்க. ஒண்ணு அவர் சோழவந்தானில் வாழ்ந்தவர் என்பது. இன்னொன்னு பரவை முனியம்மாவின் கொலைச்சிந்து வடிவத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர் என்ற கதை. இன்னொன்றும் சொல்றாங்க.

    ஒரு கதை சுவாரசியமாக வர கொஞ்சம் கொஞ்சமாக இட்டுக்கட்டி பாடும்போது வரலாற்றில் சுவாரசியமான விஷயங்கள் சேர்க்கக் கொஞ்சம் மாற்றுவாங்க. ஆனால் கரிமேடு கருவாயன் வாழ்ந்தது உண்மை. அவர் தங்கச்சிக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ரொம்ப எளிமையான மனிதர். தங்கை வேலை பார்த்த இடத்தில் பண்ணையார் கற்பழிக்கிறார்.

    அவரைக் கொல்றாரு கருவாயன். போலீஸ் அவரைத் தேடி சுட்டுக் கொல்றாங்க. கருவாயன் கையில் அரிவாள், துப்பாக்கி கிடையாது. கவன் வில் தான் உண்டு. இவருக்கு தென்னை மரம் ஏறும் வழக்கம் உண்டு. அங்கு போய் ஒளிந்து கொள்வார். போலீஸே பிடிக்க முடியாது. இந்தப் படத்தில் வரும் கொலைச்சிந்து வடிவ பாடல் இதுதான். அப்படி இட்டுக்கட்டி பாடிய இளையராஜா பாடல்தான் இது. கதை கேளு கதை கேளு கரிமேடு கருவாயன் கதை கேளுன்னு பாடுறாரு.

    இந்தப் பாடலில் கட்டுக்கதை அல்ல. ஒட்டுக்கதை அல்ல. கண்டு கேட்டு வந்தேன் ஒருவாரு. வைகை நதிக்கரை ஓரத்துல அங்கு வாழ்ந்து ஜெயித்தவன் வரலாறுன்னு வரிகள் வருகிறது. அவனைப் போலீஸ் சுட்டுக் கொல்லுது. தங்கச்சியைப் போலீஸ் கற்பழிக்கிறான். அதென்ன வாழ்ந்த ஜெயித்தவன் வரலாறுன்னு கேட்கலாம். வாழ்ந்து தன் குடும்பத்தை அழிச்சவனை ஜெயிச்சவன் வரலாறுன்னு கவிஞர் அழகா சொல்லிருக்காரு. உண்மையிலே அவன் கள்ளன் இல்ல. மதுரை ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை என்ற இடத்தில் யா யா யான்னு இளையராஜா ராகம் போட்டு இழுத்துப் பாடுவார்.

    அது அவ்ளோ ரசனையாக இருக்கும். அதே போல அடுத்த வரிகளில் போலீஸ்காரனால எல்லாம் கருவாயனைப் பிடிக்க முடியாது. அவன் சாதாரண மனுஷன் இல்லேன்னு எள்ளி நகையாடுவது போல இருக்கும். பாடலில் கருவாயனின் தனித்திறமை, காதல் எல்லாவற்றையும் நயம்பட பாடியிருப்பார் இளையராஜா. பாடல் முழுக்க கொலைச்சிந்து வடிவில் அவ்வளவு அழகியலும், யதார்த்தமும் கலந்து இளையராஜாவும், வைரமுத்துவும் தந்து இருப்பார்கள். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • எனக்கு போட்ட பாட்ட ரஜினிக்கு கொடுத்துட்டாரு!… இளையராஜா மீது கோபப்பட்ட பாக்யராஜ்!..

    எனக்கு போட்ட பாட்ட ரஜினிக்கு கொடுத்துட்டாரு!… இளையராஜா மீது கோபப்பட்ட பாக்யராஜ்!..

    திரைத்துறையில் இளையராஜாவை பகைத்துக் கொண்ட சிலரில் பாக்யராஜ் முக்கியமானவர். அது என்னவோ!.. துவக்கத்திலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே செட் ஆகவில்லை.. பாரதிராஜாவிடம் பாக்யராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது பாடல் தொடர்பான பணிக்கு பாரதிராஜா பாக்யராஜை அனுப்பிய போது அதற்காக கோபப்பட்டவர் இளையராஜா. ஒருகட்டத்தில் பாக்யராஜ் இயக்குனராகி வெற்றிகளை கொடுக்க அவரின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார்..

    ஆனால், இளையராஜா நடந்துகொள்ளும் விதம் பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை.. எனவே ஒரு படத்தில் அவரின் தம்பி கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். இது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்த படத்திற்கு பாக்கியராஜ் இளையராஜாவை அணுகிய போது ‘அதான் கங்கை அமரன் இருக்கானே. அவனிடமே போங்க’ என்று சொல்லிவிட்டார் இளையராஜா. அதனால்தான் பாக்யராஜ் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை.. மாறாக சந்திரபோஸ் உள்ளிட்ட சிலர் இசையமைத்தனர்..

    ஒருகட்டத்தில் ‘இளையராஜா இல்லையென்றால் பாட்டு போட முடியாதா?.. நானே இசையமைக்கிறேன்’ என சொல்லி இசையைக் கற்றுக் கொண்டு தான் இயக்கிய 5 படங்களுக்கு பாக்யராஜே இசையமைத்தார். இந்நிலையில், இளையராஜா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ் ‘நான் என்ன கேட்கிறானோ அதற்கு 110 சதவீதம் எனக்கு பாடல்களை கொடுத்து விடுவார் இளையராஜா. அதேநேரம் எனக்காக போட்ட இரண்டு பாடல்களை அவர் ரஜினிக்கு கொடுத்து விட்டார்..

    ராசுக்குட்டி படத்திற்கு பாடல்கள் உருவாக்கியபோது மேலும், இரண்டு பாடல்களை கொடுத்தார் இளையராஜா. அதை படத்தில் வைக்க இடமில்லை என்பதால்.. இந்த 2 பாடல்களையும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்.. அடுத்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என அவரிடம் சொல்லியிருந்தேன்.
    ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அந்த பாடல் பாடிக்கொண்டிருந்தது.. அதுதான் எஜமான் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்’ என்கிற பாடல். அதேபோல் அந்த படத்தில் வந்த ‘நிலவே முகம் காட்டு’ என்கிற பாடலும் இளையராஜா எனக்காக் உருவாக்கியது. அனால், அதையும், எஜமான் படத்திற்கு கொடுத்துவிட்டார்..

    அந்த இரண்டு பாடல்களையும் பொள்ளாச்சியில் உள்ள எனது தோட்டத்தில் நானும் இளையராஜாவும் உருவாக்கினோம் எனவே எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.. எப்படி கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை என்றார் பாகியராஜ். அதற்கு அருகிலிருந்த இளையராஜா ‘இதில் என்ன ஆச்சரியப்பட வேண்டியிருக்கு.. அந்த இரண்டு பாடல்களையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்’ என்று சொல்லி சிரித்தார்.

  • 8 ராசி இல்ல.. 7 பாட்டு போதும்!.. எல்லா பாட்டும் ஹிட்!.. இளையராஜா செய்த சம்பவம்..

    8 ராசி இல்ல.. 7 பாட்டு போதும்!.. எல்லா பாட்டும் ஹிட்!.. இளையராஜா செய்த சம்பவம்..

    80, 90களில் இளையராஜாவை இசையமைத்து சூப்பர் ஹிட் அடித்த பல பாடல்கள் இப்போதும் 70,80களில் பிறந்த ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் அப்படி பல வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் சிலாகித்து ரசிக்கும் இளையராஜாவின் அந்த பாடல்கள் எல்லாம் மிகவும் குறைவான நேரங்களில் அவர் இசையமைத்தது என்பது பலருக்கும் தெரியாது.. பல திரைப்படங்களுக்கு அனைத்து பாடல்களையும் அரை மணி நேரத்தில் இளையராஜா போட்டு கொடுத்திருக்கிறார்..

    கமலின் குணா, பிரபுவின் சின்னத்தம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்குமான பாடல்கள் எல்லாமே இளையராஜா அரை மணி நேரத்தில் உருவாக்கினார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்… அதாவது ஒரு பாடலுக்கு மெட்டமைக்க் அதிகபட்சம் ஐந்து நிமிடம்தான்..

    இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர் ஈரமான ரோஜாவே திரைப்படத்தை நான் இயக்கியபோது அந்த படத்துக்கான பாடல்களை உருவாக்க இளையராஜாவிடம் சென்றபோது அரை மணி நேரத்தில் 8 பாடல்களை போட்டுக் கொடுத்தார்.. எனக்கு 8ம் நம்பர் ராசி இல்லை என்று சொல்லி 7 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. அந்த பாடலுக்கு ஏற்றது போல படமும் சரியாக அமைந்தது..

    அதேபோல் நான் தயாரித்த சின்னப்பூவே மெல்லப்பேசு படத்திலும் காட்சிகளுக்கு ஏற்றார் போல் பாடல்கள் போடவில்லை.. பாடல்களுக்காகவே கதையை உருவாக்கினோம்’ என சொல்லியிருக்கிறார்..

  • இளையராஜாவுக்கு அவ்ளோ திமிரு இருந்தா!.. விஜயகாந்த் படத்தில் நடந்த சம்பவம்!…

    இளையராஜாவுக்கு அவ்ளோ திமிரு இருந்தா!.. விஜயகாந்த் படத்தில் நடந்த சம்பவம்!…

    அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.. அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். இளையராஜாவின் மண்வாசனை மிக்க பாடல்கள் கிராமங்களிலும் ஒலித்தது. எந்த ஒரு கதை என்றாலும், கதாபாத்திரம் என்றாலும் அதற்கு உயிர் கொடுத்தார் இளையராஜா.. மனித உணர்வுகளை அவரின் பாடல்கள் அழகாக பிரதிபலித்தது. அதனால்தான் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் உருவானார்கள்..

    80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது.. பல திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை அவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்தது.. எனவே அவரிடம் பாடலில் வாங்குவதற்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர்களின் ஸ்டுடியோ முன் தவம் கிடந்தார்கள்.. அவர் ஒரு கடவுளை போல பார்க்கப்பட்டார்..

    பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு என்ன கதையோ அதை இயக்குனர் சொல்வார்.. அந்த கதைக்கு ஏற்ப 4 அல்லது 5 பாடல்களை இளையராஜா உருவாக்கி கொடுப்பார்.. ஆனால் சில சமயம் இளையராஜா சில பாடல்களை உருவாக்கி அந்த பாடல்களை இயக்குனர்களுக்கு கொடுத்து திரைப்படங்களில் பயன்படுத்த சொல்லியதும் நடந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள்..

    இளையராஜா 6 பாடல்களுக்கான டியூன்களை உருவாக்கினார்.. இந்த ஆறு பாடல்களையும் ஒரே படத்தில் ஒரு இயக்குனர் பயன்படுத்தினால் மட்டுமே இந்த பாடல்களை கொடுப்பேன் என சொல்லிவிட்டார்.. இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கூட அதில் சில பாடல்களை கேட்டும் இளையராஜா கொடுக்கவில்லை..

    இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் பாலுமகேந்திரா அதில் இரண்டு பாடல்களை மட்டும் கேட்டார்.. முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் அந்த சவாலை இருக்க ஆர்.சுந்தர்ராஜன் ஏற்றுக்கொண்டார். அந்த 6 பாடல்களுக்கும் பொருந்துவது போல ஒரு கதையை உருவாக்கினார். அப்படி உருவான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, விஜயகாந்துக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்போது வரை 70,80 கிட்ஸ்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

    vaithegi

    இந்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன் ‘இளையராஜாவுக்கு ஒரு தொழில் திமிர் இருந்ததது. திமிரு இருந்தால்தான் அவர் நல்ல கலைஞன். ஒரு இயக்குனராக என் திமிரை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அவர் சொன்னதற்கு ஒப்புக்கொண்டு வைதேகி காத்திருந்தாள் படத்தை இயக்கினேன்’ என சொல்லியிருக்கிறார்.,

  • அரை மணி நேரத்தில் 6 பாடல்கள்… இளையராஜா காட்டிய அதிரடி!

    அரை மணி நேரத்தில் 6 பாடல்கள்… இளையராஜா காட்டிய அதிரடி!

    இசைஞானி என்றால் இளையராஜா தான். அவருக்கு இந்தப் பட்டம் அவ்வளவு சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. அந்தளவுக்கு அவரது ஒர்க் இருந்தது. ஒரு காலத்தில் இளையராஜா இல்லாத தமிழ்சினிமா இல்லை என்ற நிலை இருந்து வந்தது.

    80 மற்றும் 90காலகட்டங்களில் உள்ள படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான தமிழ்ப்படங்களாகத் தான் இருக்கும். அந்த வகையில் அவரிடம் இருந்து தனது படத்துக்கு எப்படி பாடலைப் பெற்றேன் என்று இயக்குனர் ராஜ்கபூர் வீடியோ ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார்.

    தாலாட்டு கேட்குதம்மா படத்தை நான் இயக்கினேன். அந்தப் படத்துக்கான கதையை இளையராஜாவிடம் அங்கங்கே ஸ்கிப் பண்ணி சொன்னேன். அது அவருக்குப் புரிஞ்சு போச்சு. உடனே சிச்சுவேஷனை சொல்லுன்னாரு. சொன்னதும் ஆர்மோனியத்துல அவரது கைகள் விளையாடின. டக் டக்னு அரை மணி நேரத்துல 6 பாட்டைக் கொடுத்துட்டாரு. அதை அப்படியே வாங்கிட்டு வந்து பொள்ளாச்சி பக்கம் சூட்டிங்கிற்குப் போயிட்டேன் என்கிறார் ராஜ் கபூர்.

    அந்தக் காலகட்டத்தில் தான் இதயம் படமும் வெளியாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் பாண்டி பஜார் கடைகளில் எல்லாம் இதயமும், தாலாட்டு கேட்குதம்மா படப்பாடல்களும்தான் ஒலிக்குமாம். நேந்துகிட்ட நேர்த்திக்கடன், சுட்டி சுட்டி, சொன்ன பேச்சை, அண்ணனுக்கு, எம்மா எம்மா, அம்மா எனும் ஆகிய பாடல்கள் உள்ளன. 1991ல் இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிரபுவுக்கு ஜோடியாகக் கனகா நடித்துள்ளார்.

  • இளையராஜாவுக்கு தெரியாம முழு படத்தையே எடுத்த ராஜ்கிரண்!… என் ராசாவின் மனசிலே உருவான கதை!…

    இளையராஜாவுக்கு தெரியாம முழு படத்தையே எடுத்த ராஜ்கிரண்!… என் ராசாவின் மனசிலே உருவான கதை!…

    கோலிவுட்டில் விநியோகஸ்தராக வலம் வந்த ராஜ்கிரண் ராமராஜனை வைத்து இரண்டு திரைப்படங்களை தயாரித்தார்.. மூன்றாவதாக கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால், ராமராஜன் நடிக்காததால் அவரே ஹீரோவாக நடிக்கவும் முடிவெடுத்தார். இது தொடர்பாக ராஜ்கிரண் இளையராஜாவிடம் பேசியபோது ‘உனக்கு எதற்கு இந்த வேலை.. வேற யாராவது வச்சி எடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

    அதிர்ச்சியான ராஜ்கிரன் இளையராஜாவின் குரு ஜி.கே வெங்கடேசிடம் சென்று இதுபற்றி சொல்லியிருக்கிறார். அப்போது அவர் ‘நீ படத்தை எடுத்து முடி.. இளையராஜாகிட்ட கடைசியா சொல்லிக்கலாம்’ என சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் முழு படத்தையும் எடுத்து முடித்து விட்டார் ராஜ்கிரண்..

    நான்கு மாதங்களுக்குபின் ராஜ்கிரண் இளையராஜாவை சந்தித்த போது ‘என்னாச்சி?. படத்தை பத்தி பேசிட்டு போனியே’ என கேட்டிருக்கிறார். ‘படத்தை எடுத்து முடிச்சிட்டேன்’ என ராஜ்கிரண் சொல்ல ஷாக்கான இளையராஜா ‘படத்தை எடுத்துட்டியா?.. யாரு ஹீரோ?’ என்று கேட்டிருக்கிறார்.. ‘நான்தான்’ என ராஜ்கிரண் சொல்லிவிட்டு, படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்’ என சொல்ல படத்தை பார்த்திருக்கிறார் இளையராஜா.

    படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பாவலர் கிரியேசன்ஸ் (இளையராஜாவின் தயாரிப்பு நிறுவனம்) பேனரில் வெளியிடுவோம்.. இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை.. பாடல்கள் வைத்தால் அது படத்தை கெடுத்து விடும்’ என்று இளையராஜா கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்கிரண் ‘உங்கள் மியூசிக்தான் இந்த படத்துக்கு உயிர்னு நினைச்சிட்டுருக்கேன்’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் ராஜ்கிரண் அந்த படத்திற்கு பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறார்..

    அப்படி வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு கோலிவுட்டில் ராஜ்கிரண் ஒரு முக்கிய நடிகராகவும் மாறினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது.

  • இளையராஜாவுக்கு ஞானம் வந்ததுக்கு காரணமே என் சமையல்தான்!. கங்கை அமரன் ராக்ஸ்!…

    இளையராஜாவுக்கு ஞானம் வந்ததுக்கு காரணமே என் சமையல்தான்!. கங்கை அமரன் ராக்ஸ்!…

    அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. 80களில் இவரின் பாடல் ஒலிக்காத குக்கிராங்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. அப்போது வெளியான 90 சதவீத திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார்.

    இளையராஜா படத்திற்கு இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் வெற்றி என்கிற நிலைதான் அப்போது இருந்தது. எனவே ஹீரோவை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளையராஜாவிடம் பேசி இசையமைக்க சம்மதம் வாங்கிவிடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார்.

    இப்போதும் 70, 80களில் பிறந்தவர்ளுக்கு இளையராஜாவின் பாடல்கள்தான் ஃபேவரைட்., கார் பயணங்களில் இன்னமும் அவரின் பாடல்களைத்தான் கேட்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளராகும் ஆசையில் இளையராஜா சென்னை வந்தபோது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். இவரும் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்..

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘நாங்க அப்போ சினிமாவில் வாசிக்கவில்லை.. லைட் மியூசிக்கில் வாசிச்சிக்கிட்டு இருந்தோம். நான் ரூம்ல ரசம் வைப்போம். அதை குடிக்கிறதுக்காகவே எஸ்.பி.பி ரூமுக்கு வருவான். என் ரசத்தை குடிச்சிட்டு சூப்பரா இருக்குடான்னு சொல்லுவான். என்னோட ரசத்த குடிச்சதனாலதான் உன் வாய்ஸ் நல்லாருக்குன்னு சொல்லுவேன்.. அதே மாதிரி இளையராஜாவுக்கு எப்படி இவ்வளவு ஞானம் வந்தது? நான் வச்ச சாம்பார், ரசத்த சாப்பிடதாலதான்’ என பேசியிருக்கிறார்.

  • போடுறா மெட்டை… இளையராஜாவின் சிக்கலான இசைக்கு கண்ணதாசன் மேஜிக்!

    சிக்கலான மெட்டைப் போட்டு கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்க முயன்ற இளையராஜா… ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா. வரிகளில் ஜாலம் காட்டி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க…

    இளையராஜா இருந்த காலகட்டத்தில் இசையில் நிறைய மாற்றங்களை உண்டாக்கினார். 3 சரணத்தை 2 சரணமாக்கினார். இடையிசையை நிறைய வைத்தார். தேவை ஏற்படும்போது சரணத்தோட அளவைக் குறைத்து விட்டார். அதனால்தான் பலரும் இசைஞானியின் இசைக்கு வரிகள் தேவையில்லை.

    இசையே நிறைய உணர்வுகளைக் கொட்டிரும்னு சொல்வாங்க. அப்படி ஒரு வித்தியாசமான பாடல் தான் இது. பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இருந்து ஒரு பாடல். சிவாஜி, ஸ்ரீதேவி நடித்துள்ளனர். கண்ணதாசன் எழுதியது. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பாடல் தான் அது.

    மலைப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கையில் அப்படியே இந்தப் பாடல் பொருந்திப் போகும். சிவாஜி பயங்கர கோபக்காரர். அப்போ அவருக்கு ஒரு காதல் வரும். இதனால தனக்கு ஒரு வாழ்க்கை இருக்குன்னு எண்ணுகிறார். இந்தப் பாடல் சுகப்பிரியா ராகத்தைச் சேர்ந்தது. பல்லவியிலேயே மெட்டில் அவ்வளவு அழகை சேர்த்து இருப்பார் இளையராஜா. அதே போல மொத்த சரணத்தையும் ரத்தினச் சுருக்கமாக மெட்டில் கொண்டு வந்துள்ளார் இசைஞானி. பாடலை ரசித்துக் கேட்கும்போது இது தெரியும்.

    நீங்க மட்டும் தான் மெட்டுல வித்தியாசம் காட்டுவீங்களா? நானும் வரிகளில் காட்டுறேன்னு கண்ணதாசன் இப்படி சரணம் போட்டு இருப்பார்.

    ”உள்ளத்தின் தேவை. உள்ளே என் ஜீவன். நீ நீ நீ…”ன்னு எழுதியிருப்பார். அடுத்து எவ்வளவு குறுகலான மெட்டுக்குள்ளும் கதையைச் சொல்ல முடியுமான்னா கண்ணதாசன் சொல்லி இருப்பார். ”கல்லானவன் பூ ஆகிறேன் உன்னை எண்ணி இருக்க…” இதுதான் அந்த வரி. அடுத்து காதலி கேட்கிறாள். ”பூ ஆனதும் பொன் மஞ்சனம் என்றோ எங்கோ ராஜா?” எனக் கேட்கிறாள். ”கல்யாணம் எப்போ? ஆகுமா, ஆகாதா…”ன்னு கேட்கிறாள். ”எதற்காக வாழ்ந்தேன். உனக்காக வாழ்வேன். நான் நீ நாம்…” என்று முத்தாய்ப்பாக முடித்து இருப்பார் கண்ணதாசன்.

  • சோகப் பாடலில் கூட ஜாலி… இளையராஜா செய்த மேஜிக்! அட அந்தப் படமா?

    சோகப்பாடல் என்றால் சோகமாகத் தான் நாம் ரசித்து இருப்போம். ஆனால் அதற்குள் ஜாலி மூடையும் லாவகமாக சொருகி இருப்பார். அது இளையராஜா என்ற அந்த லெஜன்டால் மட்டும் தான் முடியும் என்றால் மிகையில்லை. அவ்வளவு அற்புதமான ரசனை மிக்க அந்தப் பாடல் எது? இடம்பெற்ற படம் எதுன்னு பார்க்கலாமா…

    ஜேசுதாஸ் தமிழில் குரல் மாற்றிப் பாடிய ஒரே பாடல் இதுதான். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்கியராஜ் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலில் பாக்கியராஜ் காதலுக்கு மாமனராக வரும் நம்பியார் ஆதரவு கொடுப்பார்.

    பாக்கியராஜின் காதலில் சோகம் வருகிறது. அது போக ஒரு பாடல் தேவைப்படும். அது தான் ஏரிக்கரைப் பூங்காற்றே படம். இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார். இந்தப் பாடல் சோக சூழலில் தான் வருகிறது. ஆனால் பாடலை இளையராஜா ஜாலியாக எடுத்து இசை அமைத்து இருப்பார். பாடலைப் படத்தில் பாக்கியராஜ் தான் படத்தில் பாடுவார்.

    அவர் பாடும்போது சோகமாக இருக்கும். ஆனால் பாடலின் இடையே நம்பியாருக்குப் பழைய காதலின் நினைவுகள் வரும். அதனால் இது ஒரு வித்தியாசமான ரசனையை ரசிகர்களுக்குத் தந்தது. இந்தப் படத்தின் சூப்பர்ஹிட்டுக்குக் காரணம் இளையராஜாவின் இசையும் தான் என்றால் மிகையில்லை.

    அவ்வளவு அற்புதமான பாடல்களைப் படத்தில் கொடுத்து இருந்தார். 1982ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் பாக்கியராஜ். சுலக்ஷனா ஜோடியாக நடித்துள்ளார். பூபாளம் இசைக்கும், தங்கச்சங்கிலி, என் சோகக் கதையை, தாலாட்ட நான் பொறந்தேன் ஆகிய பாடல்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.