Tag: கர

  • தனுஷுன் அடுத்த 4 படங்கள்!. இயக்குனர்கள் யார்?!. செம அப்டேட்!..

    தனுஷுன் அடுத்த 4 படங்கள்!. இயக்குனர்கள் யார்?!. செம அப்டேட்!..

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ச்சியாக காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. கமர்சியல் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் தனுஷ்..

    அதில் ஒரு படம்தான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவன் நடித்திருக்கும் கர. இந்த திரைப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே இது தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    கர திரைப்படம் தனுஷின் 54 வது திரைப்படமாகும். இந்நிலையில், தனுஷின் அடுத்த மூன்று படங்கள் என்ன, அந்த படங்களின் இயக்குனர் யார் என்கிற விவரத்தை பார்ப்போம்.. தனுஷின் 55வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்..

    தனுஷின் 56வது திரைப்படத்தை லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார். அதேபோல் தனுஷின் 57வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இது ஒரு சரித்திர கதையாகும். தனுஷ் இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இப்படம் உருவாகவுள்ளது. அடுத்த தனுஷின் 58 வது படமாக வெற்றிமாறன் வடசென்னை 2 இருக்கலாம் என கணிக்கப்படுகிறது..

  • போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கேன்.. ‘கர’ விழாவில் காலரை தூக்கிவிட்ட தனுஷ்!

    போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கேன்.. ‘கர’ விழாவில் காலரை தூக்கிவிட்ட தனுஷ்!

    நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ள கர திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தனுஷ் தனது வாழ்க்கை மற்றும் திரைப் பயணத்தை பற்றி வெளிப்படையாக பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான கர படத்தில் தனுஷுடன் மமிதா பைஜூ, கே. எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படம், ஒரு மனிதன் தனது கடந்த காலத்துடன் போராடி, குடும்பத்தையும் மக்களையும் காப்பாற்றும் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தனது போயஸ் கார்டன் வீட்டைப் பற்றி பேசிய தனுஷ், விமான நிலைய ஊழியர் ஒருவர் தன்னுடன் புகைப்படம் எடுக்க கேட்டதாக கூறினார். அந்த ஊழியர் யாரிடமும் பொதுவாக புகைப்படம் எடுக்க மாட்டார். ஆனால், தனுஷ் போயஸ் கார்டன் குறித்து பேசிய வார்த்தைகள் அவருடைய மகனுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக தெரிவித்தார். எனவே, அதை மோட்டிவேஷனாக எடுத்துக்கொள்வதா அல்லது வெறும் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்வதா என்பது அவரவர் விருப்பம் என்று தனுஷ் கூறினார்.

    அதைத் தொடர்ந்து, கர பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “தனுஷ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் போல இருந்தது. அவரது குழுவினர் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். படம் தொடங்குவதற்கு முன்பே திரையரங்கிற்கு வந்து அமர்ந்து, ஒரு காட்சியும் தவறாமல் பார்க்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமானால் சில விஷயங்களும், பத்து நிமிடம் தாமதமானால் பல விஷயங்களும் புரியாமல் போகலாம்” என்று கூறினார்.

    மேலும், படம் பார்த்த பிறகு தங்களது கருத்துக்களை பகிரலாம். ஆனால், படத்தின் கதை மற்றும் இடைவேளை காட்சிகளை வெளிப்படையாக வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

  • கர ஆடியோ லான்ச் & டிரெய்லர் அப்டேட்!.. தனுஷ் ஃபேன்ஸ் பி ரெடி!…

    கர ஆடியோ லான்ச் & டிரெய்லர் அப்டேட்!.. தனுஷ் ஃபேன்ஸ் பி ரெடி!…

    வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. போர்த்தொழில் திரைப்படம் திரைப்படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் மமீதா பைஜூ நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் புகைப்படங்களும், டைட்டில் டீசர் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு, டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னை நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

  • தனுஷுக்கு மமிதா பைஜு படத்தாலே தொல்லையா?.. ‘கர’ தேதியில் கர்ச்சிப் போடும் ஜன நாயகன்!..

    தனுஷுக்கு மமிதா பைஜு படத்தாலே தொல்லையா?.. ‘கர’ தேதியில் கர்ச்சிப் போடும் ஜன நாயகன்!..

    விஜய்யின் ஜன நாயகன் படத்தை எப்படியாவது இந்த மாதத்துக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே லீக் ஆன படத்தை பெரிய தொகை எல்லாம் கொடுத்து வாங்க முடியாது என்றும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவது பாதியாக குறைந்துவிடும் என விநியோகஸ்தர்கள் எல்லாம் கம்பி நீட்டி வருகின்றனர்.

    கேபிள் டிவியிலேயே படத்தை போட்ட நிலையில், டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமத்துக்கும் சிக்கல் வந்துள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தை இந்த வாரமே வெளியிட படக்குழு முயற்சித்தாலும், தேர்தல் முடியும் வரை வெளியிட விஜய்க்கு எதிரானவர்கள் விடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அது தனுஷின் ‘கர’ படத்துக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என்கின்றனர்.

    ஏற்கனவே இட்லி கடை படத்தை காந்தாரா 2 உடன் வெளியிட்டு தர்ம அடி வாங்கிவிட்டார் தனுஷ் என்கின்றனர். என்ன தான் ஜன நாயகன் வசூல் குறைந்தாலும் முதல் நாள் விஜய் படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நல்ல ஓபனிங் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

    ஜன நாயகன் மற்றும் கர என 2 படங்களிலும் மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் வெளியானால் சிக்கல் தான் என்று தெரிகிறது. ஏப்ரல் 30ம் தேதி ஜன நாயகன் வெளியானால் தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே 14ம் தேதி சூர்யாவின் கருப்பு படம் வெளியாக உள்ள நிலையில், 2 வார கேப் கட்டாயம் தேவைப்படும்.

  • தனுஷ் நடிக்கும் கர படத்தின் முதல் சிங்கிள் வெளியிடும் தேதி அறிவிப்பு

    தனுஷ் நடிக்கும் கர படத்தின் முதல் சிங்கிள் வெளியிடும் தேதி அறிவிப்பு

    தனுஷ் நடிக்கும் கர படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது.

    த்னுஷ் நடிக்கும் 54வது படம் கர. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை போர் தொழில் வெற்றி படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ட்யூட் பட வெற்றிக்கு பின் மமிதா பைஜு நாயகியாக நடிக்கும் இரண்டாவது படமிது. இவர்களுடன் ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், தேவதர்ஷினி மற்றும் பிரிதிவி பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை ஜி.வி. பிரகாஷ்.

    ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது.

  • D55: தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி படத்துக்கு மியூசிக் டைரக்டர் யாரு?!.. அப்டேட் இதோ!…

    நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கிறார்.. வெறும் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் தனுஷ்.
    இப்போதுள்ள இளம் நடிகர்களில் பல வேலைகளை செய்யும் திறமை கொண்ட ஆளுமையாக தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    இட்லி கடை படத்திற்கு பின் போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இந்த படம் தொடர்பான ஒரு வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    இந்த திரைப்படம் தனுஷின் 54ஆவது திரைப்படமாகும். அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள அவரின் 55வது திரைப்படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார்.. இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. மிகவும் அதிக பட்ஜெடில் இந்த படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்கிற அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.. தனுஷின் படங்களுக்கு தொடர்ந்து ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து வருகிறார். அதேபோல், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார்.. எனவே இந்த படத்திற்கும் அவரே இசையமைப்பாளராக இருப்பார் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.