Tag: சண்முக பாண்டியன்

  • அப்பா ஒரு அடி அடிச்சாரு!.. 15 பேர் விழுந்தாங்க!.. கேப்டன் மகன் சொன்ன பிளாஷ்பேக்!…

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நடிகர் என்பதைவிட மனிதாபிமானமிக்க ஒரு நல்ல மனிதராக இருந்ததால்தான் மக்களுக்கு அவரை பிடித்துப் போனது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை அவர் மற்றவர்களுக்கு செய்துவந்தார். பணமாகவும், பணம் சம்பந்தப்படாத மற்ற உதவிகளையும் செய்தார்.

    குறிப்பக பசிக்கும் பல பேருக்கு உணவையும் அளித்தார். மக்கள் கொண்டாடும் ஒரு நடிகராக விஜயகாந்த் இருந்தார்.. விஜயகாந்த் இருந்தபோது அவரை ட்ரோல் செய்த ரசிகர்களும், ஊடகங்களும் கூட அவர் மறைந்த போது அவரைப் பற்றி பெருமையாக பேசின. இப்போதும் பேசி வருகின்றன.

    விஜயகாந்த் வாரிசாக சினிமாவில் களமிறங்கியிருப்பவர் அவரின் மகன் சண்முக பாண்டியன். சில நாட்களுக்கு முன்பு கூட அவரின் நடிப்பில் கொம்பு சீவி என்கிற திரைப்படம் வெளியானது. சினிமாவில் ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சண்முக பாண்டியன் ஒரு ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.

    நான் அப்பாவுடன் ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தேன். அப்போது கூட்டத்தில் என்னை நசுக்கி விட்டார்கள்.. அப்பா வந்து ஒரே அடிதான் அடித்தார். 15 பேர் ஓரம்போய் விழுந்தாங்க.. அதன்பின் என்னை அங்கிருந்து கூட்டி வந்தார்.. சுலபமாக அவரால் ஒரு கூட்டத்தில் பலரையும் தள்ள முடியும்.. அந்த அளவுக்கு அவருக்கு பலமும் இருந்தது. யாராவது அப்பாகிட்ட திமிரா பேசினா அப்பா சொல்ற விதத்திலே அமைதியாகி விடுவாங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

  • கொம்பு சீவி பிளாப்!.. அதிரடி முடிவெடுத்த சண்முக பாண்டியன்!.. 4 டைரக்டர்ஸ் ரெடி!…

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கியவர்தான் சண்முக பாண்டியன். 2015ம் வருடம் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் மதுர வீரன், படைத்தலைவன் போன்ற படங்களிலும் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் கொம்புசீவி என்கிற படத்திலும் நடித்தார்.

    இந்த படத்தை பொன்ராம் இயக்க சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஏனோ ரசிகர்களை இப்படம் கவரவில்லை. 15 கோடி செலவில் உருவான இப்படம் 2 கோடி மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. எனவே, படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஏற்பட்டது.

    kombuseevi

    விஜயகாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் நடிக்கும் படங்களின் கதையை அவரின் மனைவி பிரேமலதாவும், பிரேமலதாவின் சகோதரர் சுதீஷூம் கேட்பார்கள். அவர்கள் கேட்ட பிறகே அந்த கதையை விஜயகாந்த் கேட்பார். அதுபோலவே சண்முக பாண்டியன் விஷயத்திலும் பிரேமலதாவும், சதீஷுமே கதை கேட்டு வருகிறார்கள்.

    கொம்பு சீவி படத்தின் கதையை கூட தேர்ந்தெடுத்தது பிரேமலதாதான் என்கிறார்கள். இந்த படம் படம் சரியாக போகவில்லை என்பதால் ‘இனிமேல் நானே கதை கேட்டு முடிவெடுத்துக் கொள்கிறேன்’ என சொல்லிவிட்டாராம் சண்முக பாண்டியன்.

    மேலும் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் உட்பட மூன்று படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் மற்றும் சத்யராஜ், சிபிராஜ் ஆகிய இருவரையும் வைத்து கட்டப்பாவ காணோம் என்கிற படத்தை இயக்கிய மணி சீயோன் ஆகிய இருவரின் கதையை டிக் அடித்து வைத்திருக்கிறாராம். இதுபோக இன்னும் இரண்டு இயக்குனர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

    இதுவே சண்முக பாண்டியனின் லைன் அப்-ஆக இருக்கும் எனத் தெரிகிறது. அதோடு இனிமேல் அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தின் நடிக்க வேண்டாம். ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம்.

  • அம்மா பேச்சை கேட்டு நடிச்சி படம் ஃபிளாப்!.. சண்முக பாண்டியன் எடுத்த அந்த முடிவு!…

    ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அப்பாவைப் போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் 2015ம் வருடம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. அப்பாவுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படம் துவங்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டிராப்பானது.

    அதன்பின் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்கிற படம் உருவானது. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்கள் நடந்தது. அப்படி வெளியான அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
    தற்போது பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் வெளியானது.

    இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் கண்டிப்பாக சண்முக பாண்டியனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொம்பு சீவி திரைப்படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 1.69 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    kombuseevi

    அதாவது இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை கேட்டபோது சண்முகபாண்டியனுக்கு நடிக்க விருப்பம் இல்லையாம். ஆனால் அம்மா பிரேமலதாதான் ‘நாம் இதுவரை கேட்ட கதைகளில் இந்த கதைதான் நன்றாக இருக்கிறது’ என சொல்லி இருக்கிறார். மேலும் சண்முக பாண்டியனின் மாமா சதீஷும் வற்புறுத்தவே இந்த படத்தில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன்.

    ஒருபக்கம் படம் 7 கோடி பட்ஜெட் என சொல்லப்பட்டு உருவான படத்தில் போக போக பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. எனவே பல நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறார்கள். படம் முடியும் போது 20 கோடி வரை செலவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவ்வளவு செலவு செய்து இந்த படத்தை எடுக்க வேண்டுமா என்ற தயாரிப்பாளரும் யோசிக்க, பிரேமலதா, சதீஷ் ஆகியோர் பின்னணியில் இருந்து பண உதவிகள் செய்ய படம் முடிந்து வெளியானதாக கூறப்படுகிறது.

    ஆனால் அப்படி வெளியான படம் ஃபிளாப் ஆகிவிட்டதால் இனிமேல் அம்மா, மாமா தலையீடு இல்லாமல் தானே கவனமாக கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முடிவெடுத்திருக்கிறாராம் சண்முக பாண்டியன்.

  • அப்பாவால அததான் தாங்கிக்க முடியல!. உடைஞ்சி போயிட்டார்!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…

    நடிகராக மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த மனிதராகவும் மக்களை கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். மிகவும் எளிமையான குணம் கொண்டவர். யாரிடம் பழகினாலும் உண்மையாகவே பழகுவார். உண்மையாக பேசுவார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இரக்க குணம் கொண்டவர்.. பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.. மற்றவர் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஒருவர் என விஜயகாந்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

    அதனால்தான் அவர் மறைந்த பின்னரும் அவரின் புகழ் மக்களிடம் ஓங்கி நிற்கிறது. இப்போதும் அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயகாந்த் போல ஒருவரை இனிமேல் பார்க்க முடியாது என்பதுதான் திரையுலகில் உள்ளவர்களின் கருத்தாக மட்டுமில்லாமல் மக்களின் கருத்தாகவும் இருக்கிறது.

    அரசியலில் வேகமாக விஜயகாந்த் வளர்ந்து கொண்டிருந்தபோது அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன்பின் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாமலும், நடக்க முடியாமலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாதவராகவும் அவர் அவதிப்பட்டார்.

    இந்நிலையில்தான் கொம்புசீவி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்த் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார்.

    ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என எல்லோரும் அப்பாவை பற்றி அவதூறாக பேசிய போது கூட அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் துரோகம் செய்த போதும், நண்பர்களாக இருந்தவர்கள் கூட அவரை விட்டுப் போனப்போதும் அவரால் தாங்க முடியவில்லை.

    அதுதான் அவரின் மனதை அதிகமாக பாதித்தது. அதுவே கூட அவருக்கு நோயாக மாறியிருக்கலாம். அதை அவர் வெளியே சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் அந்த வலி அவரிடம் இருந்தது’ என்று சொல்லி இருக்கிறார்.

  • அவருக்காக முடிய வளர்த்தேன்.. ரெண்டு பட சான்ஸ் போயிடுச்சி!.. சண்முக பாண்டியன் ஓப்பன்!…

    சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் 10 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் களமிறங்கியவர் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
    . அதன்பின் சமுத்திரக்கனியுடன் இணைந்து மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் பேசப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு படைத்தலைவன் என்கிற படமும் வெளியானது. என்ன காரணமோ அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

    எனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் ஒன்றரை கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

    சண்முக பாண்டியனின் மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்த படத்திற்கு நல்ல வசூல் இருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சண்முக பாண்டியன் ஒரு முக்கிய தகவலை சொல்லி இருக்கிறார்.

    Sasikumar
    Sasikumar

    சசிக்குமார் சார் குற்றப்பரம்பரை நாவலை வெப்சீரியஸாக எடுக்க நினைத்து என்னை தாடி, தலைமுடி வளர்க்க சொன்னார். நானும் பல மாதங்கள் தாடி முடியை வளர்த்து காத்திருந்தேன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் மாறியதாலும், வேறு சில காரணங்களாலும் அதை எடுக்க முடியவில்லை. நான் அந்த படத்திற்காக தாடி முடி வளத்திருந்தபோது என்னை சில இயக்குனர்கள் அணுகினார்கள்.

    நீங்கள் தலைமுடியை வெட்டி தாடியை சேவ் செய்தால் உங்களை வைத்து படம் எடுக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனவே இரண்டு பட வாய்ப்புகள் என் கையை விட்டுப் போனது. இதற்காக சசிக்குமார் சார் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.. அவருக்கும் இதில் வருத்தம் இருக்கிறது. நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை’ என்று பேசியிருக்கிறார்.

    எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை சினிமாவாக எடுக்க இயக்குனர் பாலாதான் முதலில் முயற்சி செய்தார். அதன்பின் அதே கதையை பாரதிராஜா எடுக்க முயன்ற போது பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இப்போது வரை அந்த நாவலை யாரும் திரைப்படமாக எடுக்கவில்லை. எனவேதான் அதை வெப்சீரியஸாக எடுக்கும் முயற்சியில் சசிக்குமார் இறங்கினார். ஆனால், அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kombuseevi: வசூலில் பட்டைய கிளம்பும் கொம்பு சீவி!.. 4 நாள் வசூல் அப்டேட்!..

    10 வருடங்களுக்கு முன்பே சகாப்தம் என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முக பாண்டியன். புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் இவர். மூத்த மகன் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இளைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
    சகாப்தம் திரைப்படத்திற்கு பின் மதுர வீரன் படைத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பாத வெற்றியை பெறவில்லை.

    தற்போது சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சண்முக பாண்டியனோடு இணைந்து சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.
    நல்ல ஒரு அழகான கிராமத்து ஆக்சன், காமெடி கலந்த காதல் திரைப்படம்.. கண்டிப்பாக இந்த படம் சண்முக பாண்டியனுக்கு சூப்பர் ஹிட் என்று பலரும் சொன்னார்கள். மேலும் படத்தில் வரும் காமெடி காட்சிகளும் நன்றாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.

    எனவே கொம்பு சீவி திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகிய 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் 1.26 கோடி வசூல் செய்திருக்கிறது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் மொத்தமாக இப்படம் 1.5 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  • வசூலை குவிக்கும் கொம்பு சீவி!.. 3 நாள் வசூல் என்ன தெரியுமா?!…

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் மனிதாபிமானம் மிக்க நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். அவர்கள் குணத்திற்காகவே மக்களால் போற்றப்பட்டார் விஜயகாந்த். அவருக்கு பின் அவரின் குடும்பத்தில் இருந்து வந்த ஒரு நடிகர்தான் அவரின் மகன் சண்முக பாண்டியன். 10 வருடங்களுக்கு முன்பு சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீரன், படைத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இந்த படங்கள் பேசப்படவில்லை.

    எனவே, சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை போன்ற படங்களை இயக்கிய பொன்ராமுடன் கூட்டணி அமைத்தார் சண்முக பாண்டியன். இந்த படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில், முதல் நாள் இப்படம் 30 லட்சமும், இரண்டாம் நாளில் 30 லட்சம் என வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று இப்படம் 36 லட்சம் வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் கடந்த மூன்று நாட்களில் இப்படம் 96 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    சண்முகபாண்டியன் முந்தைய படங்களை ஒப்பிடும்போது கண்டிப்பாக கொம்பு சீவி திரைப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.

  • இப்ப மட்டும் விஜயகாந்த் பாசம் பொத்துக்கிட்டு வருதா!… விஜயை விளாசிய நடிகை!….

    திரையுலகில் விஜயகாந்தால் வளர்ந்தவர்கள் பலர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர். விஜயின்ன் படங்கள் சரியாக போகாத போது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதால் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜயின் அண்ணனாக நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்த படம்தான் விஜயை பி மற்றும் சி சென்டர்களில் கொண்டு சேர்த்தது.

    Senthoorapandi
    Senthoorapandi

    அதன்பின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்கள் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஒருகட்டத்தில் விஜயின் பெரிய நடிகராக மாறினார். ஆனால் விஜயின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவுக்கு நடிக்க வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் அவரை தன்னுடைய படத்தில் விஜய் நடிக்க வைக்கவில்லை.

    விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் இதை சமூக ஊடகங்களில் பலமுறை கூறியபோதும் விஜய் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அரசியல் மேடைகளில் பேசும்போது அவர் விஜயகாந்த் பற்றி பேசுகிறார். இந்நிலையில்தன் 80ளில் விஜயகாந்துடன் சில படங்களில் நடித்த நடிகை அம்பிகா விஜயை திட்டி பேட்டி கொடுத்திருக்கிறார்.

    shanmuga

    விஜயகாந்த் இறந்ததற்கு பின் அவரின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் விஜயகாந்த் விஜய்க்கு சினிமாவில் எவ்வளவோ உதவி பண்ணினார். வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்த் உங்களோடு அண்ணன் பேசுறீங்க.. அவர் பையன் சண்முக பாண்டியனிடம் ‘என் படத்துல நீ ஒரு கேரக்டர் பண்ணு.. இல்லன்னா உன்னோட படத்துல நான் ஒரு பைட்டு ஒரு பாட்டுல நடிக்கிறேன்.. அண்ணன் விஜயகாந்துக்காக இதை செய்கிறேன் என விஜய் சொல்லவில்லை..

    இப்ப மட்டும் என்ன திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வருது?.. அப்டினா விஜயும் மத்த அரசியல்வாதிங்க மாதிரி வேஷம்தான் போடுறாரு.. காரியம் ஆகணும்னா மட்டும் விஜயகாந்த் தேவைப்படுகிறார்.. அதுவும் இப்பதான் தேவைப்படுகிறார்’ என பொங்கியிருக்கிறார் அம்பிகா.

  • இந்த கதையில் நடிக்கணும்!.. சண்முக பாண்டியனின் நடிக்க ஆசைப்படும் கனவு படம்…

    சகாப்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக களமிறறங்கியவர் சண்முக பாண்டியன். நடிகர் விஜயகாந்தின் மகன்களில் ஒருவர். அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் இவர். சகாப்தம் படத்திற்கு பின் சில படங்களில் நடித்தார்.

    ஆனால் ஒன்றும் ஹிட் அடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட படைத்தலைவன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சண்முக பாண்டியன். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    இந்நிலையில்தான், பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதுவரை இப்படம் லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சண்முக பாண்டியன் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. கண்டிப்பாக கொம்பு சீவி திரைப்படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    vijayakanth
    vijayakanth

    இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த சண்முகம் பாண்டியன் ‘அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு.. ஆனால் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எளிதாக படமாக்க முடியாது. அதற்கு சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் அப்பாவின் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன்’ என்று சொல்லி இருக்கிறார் சண்முக பாண்டியன்.

  • உனக்காகலாம் நான் பாட முடியாது!.. கொம்பு சீவி இயக்குனரை கலாய்த்த இளையராஜா!…

    சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம் கொம்பு சீவி. மதுரை, தேனி வட்டாரங்களில் கதை நடப்பது போல இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாவைப் போலவே ஒரு பக்கா கிராமத்து கதையில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன்.

    இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்க தர்ணிகா என்கிற இளம் நடிகை கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 19ஆம் தேதியான நேற்று இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு அம்மா பாடல் வருகிறது. அந்த பாடலை இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    இந்நிலையில்தான் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பொன்ராம் அந்த பாடல் உருவானது பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். நான் யுவனை சந்தித்தபோது அம்மா பாடலை பாடுவது பற்றி நீங்களே அப்பாவிடம் கேளுங்கள் என சொல்லிவிட்டார். நானும் தயாரிப்பாளரும் சென்றோம்.

    ‘இந்த படத்தில் ஒரு அம்மா பாடல் வருகிறது.. நீங்கள் பாட வேண்டும்’ என்று கேட்டேன்.. ‘உனக்காகவெல்லாம் நான் அம்மா பாட்டு பாட முடியாது’ என்றார். ‘கதை தேனியில் நடக்கிறது’ என்றேன்.. அதற்கு ‘எல்லா கதையும் தேனியில்தான் நடக்குது.. எல்லாம் அங்கதான் எடுக்குறாங்க’ என்று சொன்னார். ‘உங்களை பாட வைக்கிறது என்னோட கனவு’ என்றேன். ‘உன் கனவ நான் எப்படி நிறைவேத்த முடியும்?’ எனக் கேட்டார். என்னடா எந்த பால் போட்டாலும் சிக்சரா அடிக்கிறாரேன்னு நினைச்சேன்.. அதன்பின் ‘நான் இப்படித்தான் பேசுவேன்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

    அப்போது அருகில் இருந்தவர்கள் ‘உன்னை இவ்வளவு கலாய்க்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் பாடி கொடுப்பார்’ என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே இரண்டு வாரத்தில் அவரே போன் செய்து அந்த பாடலை நான் பாடுகிறேன் என சொல்லி பாடி கொடுத்தார். அவருக்கு மிகப்பெரிய நன்றி’ என்று பேசியிருக்கிறார்.