Tag: சந்தானம்

  • சுந்தர்.சி, சந்தானம் படங்கள் தோல்வி!.. ஓவர் கான்பிடஸ் உடம்புக்கு ஆகாது!…

    ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் படம் எடுக்கும்போதே அது வெற்றியா தோல்வியா என்பதை கணிக்க முடியாது. சில படங்கள் எடுக்கும்போது ‘இந்த படம் கண்டிப்பாக ஹிட்’ என்றே நினைப்பார்கள். ஆனால், படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது. சில படங்கள் எடுக்கப்படும்போது ‘இந்த படம் ஓடாது’ என இயக்குனரே நினைப்பார்.

    ஆனால், படம் சூப்பர் ஹிட் அடித்துவிடும். சினிமாவில் அதை கணிக்கவே முடியாது. வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கிய எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. காதல் கலந்த காமெடி படங்களை எடுப்பதுதான் இவரின் ஸ்டைல்.

    சுந்தர்.சி படமென்றால் குடும்பத்தோடு சென்று சிரித்துவிட்டு வரலாம் என்கிற இமேஜை உருவாக்கியதுதான் சுந்தர்.சியின் வெற்றி. இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இவர் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய மதகஜராஜா படம் கடந்த பொங்கலில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்தார். இந்த வெற்றியை சுந்தர்.சி-யே எதிர்பார்க்கவில்லை.

    அதேபோல், காமெடி நடிகராக பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிக்க துவங்கி மன்மதன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். ஆனால், திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என சொல்லி நடிக்க துவங்கிவிட்டார். ஆனால், அதில் பல படங்கள் ஓடவில்லை. அந்த நிலையில்தான் அவர் நடித்த மதகஜராஜா படம் வெளியாகி வெற்றி பெற்றது.

    இந்நிலையில்தான் சுந்தர்.சி வடிவேலுவை நம்பி இயக்கி நடித்த கேங்கர்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 11 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேபோல், சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் தோல்வி அடைந்திருக்கிறது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 18 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

    ஒரு படம் ஹிட் அடித்துவிட்டதால் சுந்தர்.சியும், சந்தானமும் ஓவர் கான்பிடன்ஸில் நடித்து தோல்வி கொடுத்திருக்கிறார்கள். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் நடிக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

  • ஆர்யா காசுல ஜோரா புது வீடே கட்டிட்டாரே சந்தானம்!.. சிறப்பாக நடைபெற்ற புதுமனை புகுவிழா!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில் சந்தானம் தனது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் சச்சின், பொல்லாதவன், பில்லா, அழகிய தமிழ் மகன், சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

    முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தயாரிப்பாளராகவும், கிக் என்ற படத்தில் பாடகராகவும் அவதாரமெடுத்தார்.

    சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ லாஞ்சில் சந்தானம் நான் புதுசா வாங்குன வீடு நல்லாவே இல்லைன்னு சொல்லி, ஆர்யா அந்த வீட்ட இடிச்சிடுன்னு சொல்லி இடிச்சிட்டான், எங்க அம்மாவும் மணைவியும் வெள்ளிக்கிழமையான விளக்கு ஏத்த அந்த வீட்டுக்கு போவாங்க , அப்படி அவங்க போயிட்டு வீட காணும்னு தேடிட்டு இருந்தாங்க என பேசியிருந்தார்.

    இந்நிலையில் இடிச்ச இடத்தில் ஒரு புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையே நடத்தியுள்ளார் சந்தானம். அவர் கோமாதா பூஜை செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தை வைத்து ஆர்யா டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்தது மட்டுமின்றி சந்தானத்தின் கடன் சுமைகளையும் போக்கியிருந்தார்.

  • சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் சென்ற மே மாதம் 16ம் தேதி வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் வசூலை அள்ளியது. இந்iநிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒடிடி ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக நீக்கப்பட்டது.

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராகவும் இப்படத்தில் ஒரு முகம் தெரியாத இயக்குனர் அழைத்ததற்காக மர்மமான திரையரங்கிற்கு செல்கிறார். பின்னர் திரைப்படம் தொடங்கியதும் சந்தானமும் அவர் குடும்பமும் படத்திற்குள் மாட்டிக்கொள்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்ற, மர்மமான புதிர்களை தீர்த்து, ஆவியின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்று கதை செல்கிறது. இப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் திரைப்பட விமர்சகர்களை கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், ஓடிடி ரசிகர்களுக்கு நல்லாவே இந்த படம் வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆபாச காட்சிகள் பெரிதாக ஏதுமில்லை.

  • இப்படி டீல்ல விட்டாரே!.. சிம்புவை நம்பி எல்லாம் போச்சே!.. புலம்பும் சந்தானம்..

    Actor Santhanam: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் மன்மதன் படத்தில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார் சந்தானம்.

    சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் சந்தானத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. எனவே, சிம்பு, ஆர்யா, ஜீவா, கார்த்தி, சூர்யா, விஷால் போன்ற இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சந்தானம்தான் காமெடி என்கிற நிலை உருவானது. இதுபோக விஜய், அஜித் படங்களிலும் நடித்தார்.

    காமெடியனாக நன்றாக போய்க்கொண்டிருந்தபோது இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவு செய்தார். ஆனால், அப்படி 10 படங்களுக்கு மேல் நடித்தும் சந்தானத்தால் ஒரு முன்னணி ஹீரோவாக மாறமுடியவில்லை. ஏனெனில், சந்தானத்தை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்கவில்லை. தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள் மட்டும் ஓடியது.

    ஆனாலும், நடித்தால் ஹீரோ என்கிற முடிவிலேயே இருந்தார். இந்நிலையில்தான் சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் நடிக்க ஒப்புகொண்டார். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புகொக்ண்டார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே அவர் நடிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களின் சம்மதிக்க வைத்ததாகவும் சொன்னார் சந்தானம்.

    குட் நைட் பட இயக்குனர் ராம்குமார் இப்படத்தை இயக்கவதாக இருந்தது. ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போய்விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். சிம்புவை நம்பி மற்ற படங்களின் தேதியை இதற்கு கொடுத்தால் இப்போது இப்படி ஆகிவிட்டதே என சந்தானம் அப்செட்டில் இருக்கிறாராம்.

  • சந்தானம் பெரிய கடனாளியானதுக்கு அந்த பிரபலம் தான் காரணமா? தயாரிப்பாளர் சொன்ன தகவல்

    சந்தானம் பெரிய கடனாளியானதுக்கு ஒரு பிரபலமான ஹீரோ தான் காரணம்னு பேசப்படுகிறது. இதுகுறித்து சினிமா விமர்சகரும் தயாரிப்பாளருமான ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

    சினிமா தயாரிச்சாங்கன்னா பீதியிலேயே இருக்க வேண்டியதுதான். இன்னைக்கு அப்படித்தான் தயாரிப்பாளர்களோட நிலைமை இருக்கு. சந்தானம், ஆர்யா இரண்டு பேருமே படங்கள் தயாரிக்கிறாங்க. நிறைய நஷ்டப்படுறாங்க. சந்தானம் பெரிய அளவில் கடனாளியானதுக்குக் காரணம் சிவகார்த்திகேயன் தான்.

    சந்தானம் ஆரம்பத்துல லொள்ளு சபாவுல இருந்தாரு. அவரோட டைமிங் காமெடி சூப்பரா இருக்கும். லொள்ளு சபாவுல பெரிய அளவில் பேரு எடுக்குறாரு. சிம்பு இதைப் பார்த்து ரசிக்கிறாரு. சந்தானத்தைத் தன்னோட மன்மதன் படத்துல நடிக்க வைக்கிறாரு. காமெடி கொஞ்சமா தான் இருக்கும். ஆனா நல்ல பேரு வாங்கிடுறாரு.

    இந்த காலகட்டத்தில் அது இது எதுன்னு காமெடி ஷோ பண்றாரு. அவரோட காமெடியும் பிரமாதமா போய்ச் சேருது. அந்த வகையில தனுஷ் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்துறாரு. நெல்சன் விஜய் டிவியில ஷோ டைரக்டரா இருக்குறாரு. அப்போ சிவகார்த்திகேயனுக்கும், நெல்சனுக்கும் நட்பு உண்டாகுது.

    அந்த சமயத்துல சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்குறாரு. அது வரல. அந்தப் படம் டிராப் ஆச்சு. அந்தப் படத்துல ஒர்க் பண்ணும்போது சிவகார்த்திகேயனை என்னோட படத்துல அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணச் சொல்றாரு நெல்சன். படம் டிராப் ஆனது. இருவரும் திரும்பவும் பழையபடி அவங்கவங்க வேலைக்குப் போயிடுறாங்க.

    இந்தக் காலத்தில் சிவகார்த்திகேயனைத் தனுஷ் பார்த்துக் கூப்பிடுறாரு. 3 படத்துல நடிக்க வைக்கிறாரு. அதுல அவரது நடிப்பு ரசிக்கிற மாதிரி இருந்தது. நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த நேரத்துல சந்தானம் ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன்னு பெரிய லெவல்ல காமெடியனா வளர்ந்துடறாரு சந்தானம். காமெடி கிங்னு சொல்றாங்க.

    அதே நேரத்துல தனுஷ் நட்பின் அடிப்படையில் சிவகார்த்திகேயனை ஹீரோவா அறிமுகப்படுத்துறேன்னு சொல்றாரு. அதுதான் எதிர்நீச்சல். சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் ஹீரோவா நடிக்கிறாரு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி எல்லாமே ஹிட் ஆகுது. அந்த நேரத்துல காமெடி நடிகராகவே சந்தானம் நடிக்க அவருக்கும் ஹிட் ஆகுது. அப்போ நம்ம ஏன் காமெடி நடிகரா நடிக்கணும்? நம்மோட கூட ஒர்க் பண்ணுன சிவகார்த்திகேயன் ஹீரோவா நடிச்சி பெரிய ஆளா ஆகிட்டாரு. அதனால சந்தானம் காமெடியனில் இருந்து ஹீரோவா மாறினாரு.

    அவருக்கும் சில படங்கள் பிக்கப் ஆனது. ஆனால் தொடர்ந்து பெரிய ஹிட்டாகவில்லை. சிவகார்த்திகேயனுக்கு பெரிய பெரிய ஹீரோயின், தயாரிப்பாளர்கள்னு கிடைச்சாங்க. பிக்கப் ஆனாரு. ஆனால் சந்தானம் தில்லுக்குத் துட்டுன்னு ஒரு சில படங்கள் ஹிட் ஆனது. சொந்தப்படம் எடுத்து டோட்டலாவே கடனாளியானாரு. சிவகார்த்திகேயனும் சொந்தப் படம் எடுத்து கடனாளியாகிடுறாரு.

    கடனை அடைக்க படங்கள் நடிச்சாரு. அமரன் படம் வந்ததுக்கு அப்புறம் கடன் இல்லாம இருக்காரு. இப்போ அவரு பராசக்தி படம் ரிலீஸ் ஆகப்போகுது. அவரு வேற ஒரு உச்சத்தைத் தொட்டுட்டாரு. ஆனா சந்தானத்துக்கு தொடர்ந்து தோல்விப்படங்களாகவே அமையுது. அதனால திரும்ப காமெடியனா நடிக்க வாய்ப்பு கிடைச்சும் மறுக்குறாரு. அவரு ஹீரோவா ஆகிட்டோம். இனி நாம திரும்ப காமெடியனா நடிக்கணுமான்னு பிடிவாதம் பிடிக்கிறாரு.

    இந்த நிலையில 12 வருஷம் கழிச்சி மதகஜராஜா படம் வருது. அது நல்ல ஹிட்டாகுது. அப்போ எல்லாரும் காமெடியனா நடிங்க. அதுதான் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்றாங்க. இந்த நேரத்துல சிம்பு 49 படத்துல சந்தானத்தை நடிக்கக் கூப்பிடுறாரு. சந்தானத்தை ஏற்கனவே மன்மதன்ல அறிமுகப்படுத்தியவரு அவர்தான். அதனால சந்தானம் சிம்புவை காட் ஃபாதரா நினைக்கிறாரு. அதனால ஓகே சொல்லிடுறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • 10 கோடி கொடுத்தாலும் நோ சொன்ன சந்தானம்… சிம்புவுக்கு மட்டும் ஓகேன்னா சும்மாவா?

    சந்தானம், ஆர்யா, சிம்பு இருக்குற மேடையில நெகிழ்ச்சிகரமான பல சம்பவங்கள் பேசப்பட்டன. சமீபத்தில் நடந்த பட விழாவில் சந்தானம் பேசியது நெஞ்சைக் குளிரச் செய்தது. அது இதுதான். நான் வந்து லொள்ளு சபால நடிச்சிக்கிட்டு இருக்கேன். அது மிகப்பெரிய ஹிட். அதுக்கு ஒரு ஆடியன்ஸே இருக்காங்க. அப்போ சிம்பு படத்துல நடிக்கும்போது லொள்ளு சபா போடுற நேரம் சூட்டிங்கை பிரேக் பண்ணிட்டு டிவி முன்னாடி உட்கார்ந்துடுவாராம்.

    கொஞ்ச நேரம் சிரிச்சிப் பார்த்துட்டு திரும்ப சூட்டிங்குக்கு வந்துடுவாராம். வந்ததும் மன்மதன் படத்துல யாரை காமெடியனா போடலாம்னு டிஸ்கஷன் நடந்துக்கிட்டு இருந்தது. அப்போ வடிவேலு பீக்ல இருக்காரு. அப்போ சிம்புவுக்கு லொள்ளுசபா சந்தானம் மைன்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. அவரு பேரை சொன்ன போது என்னங்க உங்க முடிவு?

    வடிவேலுவை போட்டா வியாபாரம் நல்லா போகும். புதுமுக நடிகரைப் போட்டா யாரு பார்ப்பா? ரிஸ்க் எடுக்காதீங்கன்னு நிறைய பேரு சிம்புகிட்ட சொல்றாங்க. இல்லங்க. இந்த நபர் பக்காவா பண்ணுவாருன்னு சிம்பு சொல்றாரு. அவ்வளவு எதிர்ப்புக்கு இடையிலேயும் மன்மதன் படத்துல நடிக்க வச்சாரு சிம்பு.

    சந்தானம் முதன் முறையா பெரிய ஸ்க்ரீன்ல வரப்போறாரு. அதுவும் சிம்புவோட மன்மதன் படம். அவரை சாதாரணமா காட்டக்கூடாது. அவரு வரும்போதே கிளாப்ஸ் வாங்கணும். அப்படிங்கறதுக்காக பாபி பாபி பாபின்னு ஒரு டயலாக் வச்சி அவருக்கு இன்ட்ரோ கொடுத்தாராம் சிம்பு.

    அந்த நன்றிக்கடன் தான் இன்னைக்கு சிம்பு என்ன சொன்னாலும் கேட்பேன்னு சந்தானம் சொல்றாரு. சிம்பு கூப்பிட்டதால அவரோட 49வது படத்துல சந்தானம் நடிக்க சம்மதிச்சிருக்காரு.

    சந்தானம் தொடர்ந்து காமெடியன்ல இருந்து ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல அவரு படங்கள் சரியா ஓடல. அந்த நேரத்துல ஒரு தயாரிப்பாளர் வந்து 10 கோடி தாரேன். ஒரு பெரிய நடிகர் படத்துல காமெடி ரோல் பண்ணுங்கன்னு சொல்றாரு. ஏற்கனவே இவர் ஹீரோ படங்களில் கமிட்டாகி இருந்ததால அவர் அதுக்கு மறுத்துட்டாரு.

    அவர் நினைச்சிருந்தா அதை ஒத்துக்கிட்டு பல கடன்களை அடைச்சிட்டு நிம்மதியா தொடர்ந்து காமெடியனா நடிச்சிருக்க முடியும். ஆனாலும் அவர் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களைக் கைவிடல. இன்னைக்கு வரைக்கும் சந்தானம் பற்றி அவரு கூட இருந்த எல்லாரும் அவரு பேரைச் சொல்லக் காரணம் அவர் செஞ்ச உதவிதான்.

    என்னன்னா அப்போ அவரு நடிக்கிறதுக்கு தினமும் 15 லட்சம் கொடுப்பாங்களாம். அதுல பெரும் தொகையை அவரு கூட இருந்தவங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துடுவாராம். அதனாலதான் இன்னைக்கும் அவரைப் போற்றிப் புகழ்றாங்க. சிம்புவுக்கு இப்போ ஒரு வெற்றி அவசியம். அது எஸ்டிஆர் 49 ஆ கூட இருக்கலாம்.

    இன்னைக்கு ஒரு வெற்றி அவசியம் தேவை. தமிழ்சினிமாவுல காமெடிக்கு பெரிய வறட்சி. அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர் ஆர்யா. அந்தவகையில சந்தானம் என்றென்றும் நன்றி மறக்காதவர். இதற்கிடையில் அஜித் விடாமுயற்சி படத்துக்காக சந்தானத்தை நடிக்கக் கேட்டாராம். அதுக்கு சந்தானமும் ஓகே சொல்லிருக்காரு. அப்போ அது விக்னேஷ் சிவன் கையில இருந்ததாம். அதுக்கு அப்புறம் கதை எல்லாம் மாற்றி மகிழ்திருமேனி கைக்குப் போய் வேற மாதிரி ஆனது.

  • காமெடியன் டூ ஹீரோ.. ஒரே நாளில் ரிலீஸாகும் சூரி, யோகிபாபு, சந்தானத்தின் படங்கள்

    தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோக்களாக பல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானம் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சிக்கு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதன் பிறகு மன்மதன் படத்தின் மூலமாகத்தான் காமெடியனாக அறிமுகமானார். சிம்பு தான் இவரை முதன் முதலில் வெள்ளி திரையில் அறிமுகம் செய்து வைத்தது.

    dd

    dd

    அதிலிருந்து தொடர்ந்து சிம்புவின் படங்களில் காமெடியனாக நடித்து அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து இவருடைய காமெடியும் வொர்க் அவுட் ஆக தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் சந்தானம். ஹீரோ கால்சீட் கிடைக்கிறதோ இல்லையோ சந்தானத்தின் கால்ஷீட் கிடைப்பதே மிகவும் அரிதாக இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தானும் ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில் ஹீரோவாக களமிறங்கினார் சந்தானம்.

    yogibabu

    yogibabu

    ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுக்க சமீப கால படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை .இந்த நிலையில் அவர் மீண்டும் காமெடியனாக சிம்புவின் 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதைப்போல சூரியும் ஆரம்பத்தில் காமெடியனாக இருந்து விஜய் அஜித் என அனைத்து ஹீரோக்களுடனும் நகைச்சுவை செய்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறக்கினார் .அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய சூரியும் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதேபோல யோகி பாபுவும் காமெடியில் கலக்கி வந்தாலும் கதையின் நாயகனாக ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார் யோகி பாபு .

    maaman

    maaman

    இந்த நிலையில் மே 16ஆம் தேதி இந்த மூன்று ஹீரோக்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. சூரி நடிக்கும் மாமன் திரைப்படமும் சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் யோகி பாபு நடிக்கும் ஜோரா கைய தட்டுங்க திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக ஜொலித்து வரும் இந்த மூன்று நடிகர்களும் ஒரே தேதியில் போட்டி போடுவது இதுதான் முதல் முறை. இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • விரைவில் சூரி, சந்தானம் படம் மோதல்… ஜெயிக்கப் போவது யாரு?

    நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவான வரிசையில் சூரி, சந்தானம் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் முதலாவதாக ஹீரோவானவர் சந்தானம். ஆனால் அவர் வழி ஹீரோவானாலும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் சூரியோ ஆக்ஷன் ஹீரோவாகி விட்டார். விடுதலை படத்தில் வித்தியாசமான சூரியைப் பார்க்க முடிந்தது. அந்த வகையில் இருவருடைய படங்களும் வரும் 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயிக்கப் போவது யாருன்னு பார்க்கலாம்.

    மே 16ல் சூரி நடித்த மாமன் படம் வருகிறது. சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வருகிறது. சந்தானம் படம் அதிரிபுதிரி காமெடியா இருக்கும்னு சொல்றாங்க. அந்த டீமே அவ்ளோ ஹேப்பியா இருக்கு. புரொமோஷன் நிகழ்ச்சியில நாங்க டென்ஷனாவே இருந்தது இல்லை. ஒர்க்கையே ஜாலியா தான் செய்வோம்னு சந்தானம் சொன்னாரு.

    அந்தப் படத்துக்கு சிம்பு புரொமோஷனுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினதும், சந்தானம் சிம்புவுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து வர்றாரு என்பதையும் மேடையில் பார்க்க முடிந்தது. ஒரு காமெடி படம்னா ஒரே படத்தை 3 தடவை பார்க்கற மாதிரி இருக்கும். ஏற்கனவே சந்தானத்தின் டிடி படம் ஹிட். இதுவும் ஹிட் அடிக்கும்னு தெரியுது.

    சந்தானம், ஆர்யா நட்பு தொழில் முறையையும் தாண்டியது. டிடி நெக்ஸ் லெவல் படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம், சூரி இருவருமே திறமையான நடிகர்கள் என்பதை அவ்வப்போது அவர்களின் படங்களின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

    மாமன் படத்தின் கதை ஆசிரியராகவும் சூரி அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இரு படங்களுக்குமே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த வகையில் படங்கள் திரைக்கு வரட்டும். எது வெற்றி என்பது தெரிந்து விடும்.

    இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எப்பவுமே காமெடி ஜானருக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உண்டு. சமீபத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதகஜராஜா படம் சந்தானத்துக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளதால் இந்தப் படத்துக்கும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  • விஜய்யோட அந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணமே நான் தான்!.. ஓபனாக ஒத்துக்கொண்ட சந்தானம்!..

    நடிகர் விஜய்யை முதன்முறையாக அரசியலில் இழுத்து விட்டதே நான் தான் என நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஆர்யா தயாரிப்பில் ஹீரோவாக டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்துள்ள சந்தானம் திரும்பும் பக்கம் எல்லாம் சர்ச்சைகள் வெடிப்பது போல வெடிக்க ஆரம்பித்துள்ளது.

    எல்லாமே படத்தின் புரமோஷனுக்காக பயன்படும் என செய்கிறாரா இல்லை அவரை சுற்றி நடக்கிறதா என்றே தெரியவில்லை. கிஸ்ஸா பாடலில் “கோவிந்தா கோவிந்தா” என சுப்ரபாதம் ட்யூன் இடம்பெற்றுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையானை சந்தானம் சதாய்க்கிறார் என எடப்பாடி பழனிசாமியிடம் பவன் கல்யாண் கட்சியான ஜன சேனா கட்சி நிர்வாகிகள் புகார் அளிக்கும் அளவுக்கு பிரச்னை பெரிதாகி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் பிரச்சாரம் செய்ய போவேன் என சந்தானம் சொன்னதால் அதிமுகவினர் சந்தானத்தின் மீது கொலை வெறியில் உள்ளனர். இந்நிலையில், கோவிந்தா சர்ச்சையும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு சிக்கலை உண்டாக்கும் என தெரிகிறது.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள், மீடியாக்கள் என தன்னை நம்பி நண்பன் ஆர்யா பணம் போட்ட நிலையில், புரமோஷனில் பிசியாகி வருகிறார் சந்தானம். அப்படி ஒரு பேட்டியில் சந்தானத்திடம் விஜய்யின் தலைவா படத்தில் அவர் பேசிய வசனம் பற்றி கேட்கும் போது, தலைவா படம் ரிலீஸ் தள்ளிப்போகவே காரணம் நான் பேசிய வசனம் தான்னு விஜய் சொன்னார் எனக் கூறியுள்ளார்.

    தலைவா படம் ஏன் தளபதி சொன்ன டேட்ல ரிலீஸ் ஆகலன்னு தெரியாம கேட்டுட்டேன், நீ பாட்டுக்கு போற போக்கில், “அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உன்கிட்ட இருக்குன்னு டயலாக் பேசிட்ட” அது சிலருக்கு பிடிக்காமல் தான் பஞ்சாயத்து என்றார். விஜய்யை முதல் முதலாக அரசியலில் இழுத்து விட்டது நான் தான்னு நினைக்கிறேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

  • என்னோட பையன்தான் எனக்கு இன்புட்… விலாவரியா சொல்லிட்டாரே சந்தானம்…!

    தமிழ்த்திரை தற்போது ஏற்பட்டுள்ள காமெடி பஞ்சத்திற்கு சரியான தீனியைப் போடுபவர் நடிகர் சந்தானம்தான் என்றால் மிகையில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் அவர் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா வெளியாகி சக்கை போடு போட்டது. சுந்தர்.சி.யின் இயக்கத்தில் சில பொருளாதார சிக்கல்களால் 12 நாள்களாக பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த படம் மீண்டும் எழுந்து வந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

    அந்தப் படத்தின் வெற்றி சந்தானத்தை மீண்டும் ஹீரோவில் இருந்து காமெடிக்குக் கொண்டு வர வைத்துவிட்டது. சிம்புவின் 49வது படத்தில் அவருடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை மறுநாள் (16ம் தேதி) வெளியாகிறது.

    இதனால் பல மீடியாக்களுக்கு புரொமோஷன் கொடுக்கும் வகையில் பேட்டி அளித்து வருகிறார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா பாடல் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கும் ஒரு பதில் கெத்தா சொல்லிருக்காரு சந்தானம். என்னன்னு பாருங்க. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்வாங்க.

    பாக்குறவங்க அவங்க அவங்க கருத்துகளைச் சொல்வாங்க. அது எல்லாத்தையும் நாம எடுத்துக்கிட்டு வாழ முடியாது. போறவங்க வர்றவங்க சொல்றதை எல்லாம் கேட்க முடியாது. கோர்ட், சென்சார் சொல்றதை மட்டும் கேட்டா போதும். அதைத்தான் சினிமாவில் பண்ண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் தனது மகன் குறித்தும் ஒரு சில கருத்துகளை முன்வைத்துப் பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    பசங்க எல்லாமே இப்போ வளர்ந்துட்டாங்க. அதுவும் நல்ல விஷயம்தான். ஏனென்றால் அவங்க கிட்ட இருந்து நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கிறது. என்னுடைய பையன் இப்ப பிளஸ் டூ படிச்சிக்கிட்டு இருக்காரு. அடுத்தது காலேஜ் முடிச்சு டைரக்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. இவங்க எல்லாம் வீட்டிலேயே கிரிஞ்ச்சா இருக்கு, பூமர் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. அதுவே நமக்கு இப்ப ஒரு அப்டேட் தான் என்கிறார் நடிகர் சந்தானம்.