Tag: சந்தீப் கிஷன்

  • விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் எப்போ வரும்னு தெரியல?.. அடுத்த படத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன்!..

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் எப்போ வரும்னு தெரியல?.. அடுத்த படத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன்!..

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சந்தீப் கிஷன் அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க சென்று விட்டார். சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

    கதைக்கு முக்கியத்துவம் தரும்… தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

    தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பவர் பேட்டா’ எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

    இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான… பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து ‘பவர் பேட்டா’ ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க … ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.

    கவர்ச்சிகரமான தலைப்பு – ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்… அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.

    இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

  • நடிகராக மாறிய விஜய் மகன்!.. அப்ப சிறப்பான சம்பவம் இருக்கு…

    தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட, ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிறு வயதில் விஜய் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் வந்து நடனமாடியிருப்பார். திடீரென இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு 2 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

    ஏனெனில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜயின் மகன் என்பதால் கண்டிப்பாக ஜேசன் சஞ்சய் ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் அவரோ எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை.. இயக்கத்தில்தான் ஆர்வம் என குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டார்.

    ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படத்திற்கு சிக்மா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வீடியோ போன வருடம் டிசம்பர் மாதம் வெளியானது.. இந்த வருட இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

    நடிப்பில் எனக்கு ஆர்வமில்லை என சொல்லி எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.. அது உண்மையா இல்லையா என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்..

  • கூலி படத்தில் ஸ்பெஷல் கேமியோ பண்ணும் அந்த ஹீரோ!.. இன்னும் எத்தன பேர் இருக்கீங்க?!…

    Coolie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் கூலி. ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட்டுக்கு பின் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினி. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் தோல்வி படம் இல்லை.

    ஜெயிலர் படத்திற்கு முன்பே கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன காரணமோ ரஜினி அதில் நடிக்கவில்லை. நண்பர் கமல் தயாரிப்பாளர் என்பதால் அவரிடம் நாம் விரும்பும் சம்பளத்தை கேட்க முடியாது என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.

    எனவே, நானே நடிக்கிறேன் என கமல் வந்தார். அப்படி உருவான விக்ரம் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. 500 கோடி வரை இப்படம் வசூல் செய்தது. இது ரஜினிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அப்படி உருவாகி வரும் படம்தான் கூலி.

    இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் படத்தில் வழக்கமாக வருவது போல இந்த படத்திலும் பல மொழியிலிருந்து நடிகர்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா, மலையாளத்திலிருந்து சௌபின் சஹீர் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    அதேபோல், பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் சத்தியராஜ் கை கோர்த்திருக்கிறார். எனவே, கூலி திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கூலி படத்தில் ஒரு ஸ்பெஷல் கேமியோ வேடத்தில் நடிக்க விருக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். எனவே, அப்போது முதலே அவருக்கு லோகேஷுடன் நல்ல நட்பு உண்டு. அதேநேரம், கூலி படத்தில் இவருக்கு முக்கிய கேமியோவா இல்லை லியோ படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் போல ஒரு காட்சியில் வந்து விட்டு காணாமல் போய்விடுவாரா என்பது தெரியவில்லை.

    ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

  • விஜய் மகன் சஞ்சயின் சம்பளம்!.. கொஞ்சமாவது அறிவு வேணாமா?.. பொங்கி எழுந்த அந்தணன்!..

    நடிகர் விஜய்:

    தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். தற்போது தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். மேலும் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தான் இவரின் கடைசி படம் என்று கூறப்படுகின்றது.

    இயக்குனர் சஞ்சய்:

    நடிகர் விஜய்யின் மூத்த மகன் சஞ்சய். இவர் வெளிநாடுகளில் படித்து முடித்துவிட்டு தனது தந்தையை போல் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் தாத்தாவைப் போல் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகின்றார். லைக்கா நிறுவனத்திடம் கதை கூறி ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

    தந்தை விலகல் மகன் என்ட்ரி:

    தந்தையான நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று முடிவெடுத்திருக்கும் நிலையில் மகன் இயக்குனராக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். தனது தந்தையின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனது சொந்த காலில் நின்று சாதித்து காட்ட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார் சஞ்சய்.

    படத்தின் அப்டேட்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய் இயக்கும் படம் குறித்த அப்டேட் வெளியானது. ஆனால் அதன் பிறகு இப்படம் தொடர்பான எந்த ஒரு அறிவும் வெளியாகாமல் இருந்த நிலையில் படம் டிராப் ஆக்கிவிட்டது என்று கூறி வந்தார்கள். அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து அப்டேட் வெளியானது. இப்படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார், தமன் இசையமைக்கின்றார். இது தொடர்பான மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது.

    அந்தணன் பேட்டி:

    இயக்குனராக அறிமுகமாக இருக்கும் சஞ்சய் தனது முதல் படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலுக்கு சினிமா விமர்சகர் அந்தணன் விளக்கம் அளித்து இருக்கின்றார். தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்த அந்தணன் கூறியிருந்ததாவது ‘தனது தந்தையின் ஆதரவு இல்லாமல் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்யும் சஞ்சய்க்கு லைக்கா நிறுவனம் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.

    அது தவிர அவருக்கு 10 கோடி சம்பளம் என்பதெல்லாம் யாரோ கிளப்பி விட்டது. இதை யார் கிளப்பி விட்டார்களோ, அவர்கள் கதை எழுத வந்தால் நல்ல திரைக்கதை அமைப்பார்கள். கொஞ்சம் கூட அறிவே இல்லை. முதல் படத்திற்கு யாராவது இத்தனை கோடி சம்பளம் கேட்பார்களா? தன்னை நிரூபித்த பிறகு சம்பளம் தொடர்பான விஷயத்தில் முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும். அதனால் சஞ்சய்க்கு பத்து கோடி சம்பளம் என்பதெல்லாம் சுத்த கட்டுக்கதை’ என்று சரமாரியாக விளாசி இருக்கின்றார் அந்தணன்.

  • பெருசாதான் குக் பண்ணிருக்காரு.. நிச்சயமா 1000 கோடி! கூலி படத்தின் முதல் விமர்சனம்

    ஜெயிலர், வேட்டையன் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு இன்னும் ஒரு பெரிய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதற்கு ஏற்ப லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் ரஜினி இணைந்து கூட்டணி அமைத்த படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

    படத்தில் எல்லா மொழிகளிலும் இருக்கும் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்கள் நடித்து வருகிறார்கள். நாகார்ஜுனா ,சத்தியராஜ் ,உபேந்திரா, அமீர்கான் என பல முன்னணி நடிகர்கள் நடித்து ஒரு பேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் தயாராகி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் எப்படி தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி படத்திற்கு ஹைப்பை ஏற்படுத்தினாரோ அதைப்போல கூலி திரைப்படத்திலும் அந்த மாதிரியான ஒரு பாடல் இடம் பெற போவதாக தகவல் கிடைத்துள்ளது.

    அந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாட போவதாகவும் சமீபத்திய ஒரு தகவல் கிடைத்துள்ளது. தங்கம் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்பு வரை போதைப்பொருள் ஆல்கஹால் போன்றவைகளை மையப்படுத்தியே படத்தை எடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் வித்தியாசமான ஒரு பாணியில் படத்தை எடுத்து வருகிறார்.

    தன்னுடைய படத்தில் இளைஞர்களை வன்முறைக்கு ஈடுபடுத்தும் விதமாக எந்த ஒரு சம்பவமும் இருக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துபவர் ரஜினி, அதனால் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமும் இருக்கக் கூடாது என ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார். அதனால் தான் தங்க கடத்தல் சம்பவத்தை கையில் எடுத்து இருக்கிறார் லோகேஷ்.

    இந்த நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் கூலி படத்தின் 45 வினாடிகள் கொண்ட காட்சியை சமீபத்தில் பார்த்தாராம். படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளப் போகிறது என்றும் ஆயிரம் கோடி வசூலை மிக எளிதாக கடந்து விடும் என்றும் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக பெரிய அளவில் குக் செய்து இருக்கிறார் என்றும் சந்தீப் கிஷன் கூறி இருக்கிறார்.

  • சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..

    Jason Sanjay: தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    தளபதி விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த இருக்கிறார். இந்த நேரத்தில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமா இயக்க கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார்.

    இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு!.. திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய எஸ்கே.. எதுக்கு தெரியுமா?..

    சில மாதங்கள் முன்னர் லைக்கா நிறுவனத்திடம் தன்னுடைய முதல் படத்தை கையெழுத்து விட்டார் ஜேசன் சஞ்சய். இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இவருடைய ஹீரோ யாராக இருக்கும் என பல யூகங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது. விஜய் சேதுபதி தொடங்கி துல்கர் சல்மான் வரை பலரின் பெயரும் அடிபட்டது.

    கவின், துருவ்விக்ரம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். இப்படத்தின் படக்குழு குறித்த தகவல்களும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பல நாட்கள் காத்திருப்பதற்குப் பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை லைக்கா நிறுவனம் என்று அறிவித்திருக்கிறது.

    இதையும் படிங்க: மருமகள் முதல் கயல் வரை… இன்றைய சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்

    லியோ பட செக் போல இருக்கும் மங்காத்தா போன்ற கொள்ளை கதையாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபட தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் பூஜை நடத்தப்பட்டு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோஷன் போஸ்டருக்கு: https://www.youtube.com/watch?v=e3gZEn9tvaU

  • வாரிசு பிரபலங்கள் லைக்காவை வச்சு செய்றத விடலை போலயே!.. ஜேசன் சஞ்சயின் படக்கதை இதானாம்…

    Jason Sanjay: தளபதி விஜயின் மகன் இயக்க இருக்கும் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த முக்கிய அப்டேட்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

    தளபதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு தளபதி தன்னுடைய சினிமா கேரியரில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!

    இதே நேரத்தில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக கோலிவுட் காலடி எடுத்து வைக்கிறார். இது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு லைக்கா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

    இயக்குனராக ஜேசன் சஞ்சயை லைக்கா அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் முதற்கட்ட அறிவிப்பு ஜேசன் கையெழுத்திட்ட புகைப்படத்துடன் வெளியானது. ஆனால் அவருடன் விஜயோ, சந்திரசேகர் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக அமைந்தது.

    இதைத்தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருக்கும் நடிகர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது. விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் என பல பிரபலங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

    அந்த வகையில் தற்போது இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்த சந்தீப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்.

    Jason_Sandeep

    இதை தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இத் திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையாக தான் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: நாங்க பேசிக்க மாட்டோமா? வெங்கட் பிரபுவை ஒரே மாதிரி கலாய்த்த அஜித் விஜய்

    ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படமும் கிரிக்கெட் கதையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் தோல்வியால் தற்போது வரை திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.

    தற்போது ஜேசனும் இதே கதையை உருவாக்க இருப்பது ரசிகர்களிடம் விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. வேட்டையின் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இப்படத்தின் அறிவிப்பு குறித்த தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • முதல் 3 நாட்களில் இந்தியளவில் ராயன் செய்த வசூல் சாதனை!.. சந்தீப் கிஷன் தான் எல்லாத்துக்கும் காரணம்!

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களை அந்த படம் திரையரங்குகளில் மகிழ்வித்து வருவதாகவே கூறுகின்றனர். ஒரு பக்கம் ராயன் படத்தின் வசூல் உருட்டு என்று கூறப்பட்டாலும், முதல் 3 நாட்கள் நல்ல ஓப்பனிங்கை அந்த படம் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

    திங்கட்கிழமை ஆன இன்று முதல் ராயன் படம் ஓடினால் தான் வெற்றிப் படமாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை நான் நேற்று சில திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகாமல் இருந்த நிலையிலும், ராயன் படத்துக்கு 14 கோடி ரூபாய் வசூல் இந்திய அளவில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த சந்தீப் கிஷனின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட வருகிறது. ஆரம்பத்தில் பீர் பாட்டிலை எதிராளியின் தலையில் அடித்து வம்பிழுக்கும் சந்தீப் கிஷன் தனது ஜோடியான அபர்ணா பாலமுரளியுடன் ஆடிப்பாடி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், மீண்டும் பாரில் துரையின் மகனை குடி போதையில் தெரியாமல் ஏழரை இழுக்கும் காட்சிகள் என கதற விட்டுள்ளார்.

    அதுபோல கிளைமாக்ஸுக்கு முன்பாக தனது அண்ணன் தனுஷை குத்தும் காட்சியிலும், கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷுடன் சண்டை போடும் காட்சி என படம் முழுக்க காளிதாஸ் ஜெயராமை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவத்தை தனுஷ் கொடுத்துள்ளார்.

    கேப்டன் மில்லர் படத்திலும் சந்தீப் கிஷனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதே போல ராயன் படத்திலும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் நல்ல நட்பு உள்ளது தெரிகிறது.

    ராயன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் 42 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. உலகளவில் 50 முதல் 55 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்கின்றனர்.