Tag: சிலம்பரசன்

  • சிலம்பரசனை நேரில் சந்தித்த யூத் படக்குழு

    சிலம்பரசனை நேரில் சந்தித்த யூத் படக்குழு

    கென் கருணாஸ் இயக்கி நடித்து கடந்த மார்ச் 19 அன்று வெளியான படம் யூத். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ல் இந்த படம் மொத்த பட்ஜெட்டே ரூ 5.5 கோடி. ஆனால் படம் இதுவரை மொத்தம் ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.

    இன்னும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் இளைஞர்கள் காட்சிக்கு கட்சி கைதட்டி மகிழ்கிறார்கள். கிட்டதட்ட ஒரு புதுமுக நடிகருக்கு இவ்வளவு பெரிய வசூலா என்று திரையுலகினரே அச்சரியப்படுகின்றனர்.

    இந்த நிலையில் யூத் டீம் நடிகர் சிலம்பரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படத்தின் நடிகர் கென் கருணாஸ் உடன் நாயகிகள் மற்றும் உடன் நடித்தவர்கள் நேரில் சென்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • கமல் ரூட்டில் போகும் STR!.. இனிமே வேறலெவல்… வெயிட் பண்ணி பாருங்க!..

    தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சிம்பு. அதிக ரசிகர்களை கொண்டிருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அதாவது தொடர்ந்து படங்களை நடிக்காமல் இருப்பவர் சிம்பு. சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் தொடக்கம் முதல் எல்லாமே பிரச்சனைதான். ஒன்று அந்த பிரச்சனைக்கு சிம்பு காரணமாக இருப்பார்.. இல்லையென்றால் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்சனை வரும்.. அது சிம்புவின் ராசி..

    பத்துதலை படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்துதான் அவரின் தக் லைப் படம் வெளியானது. தக் லைப் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்துதான் வெற்றிமாறனின் அரசன் படத்தில் நடிக்க தொடங்கினார் சிம்பு. முதற்கட்டப்படிப்போடு அந்த படத்தின் வேலை அப்படியே நின்று விட்டது. அடுத்தக்கட்டபிடிப்பு எப்போது துவங்கும் என தெரியவில்லை.

    தற்போது சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். பெரும்பாலும் துபாய், லண்டன் என மாறிமாறி பயணிக்கிறாராம். ஒருபக்கம் கமல் வெளிநாடு சென்று AI கற்றுக் கொண்டது போல சிம்புவும் AI கற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. மேலும் அங்கிருந்துவாறே தன்னிடம் கதை சொல்ல விரும்புவர்களிடம் வீடியோ காலில் கதை கேட்கிறாராம்..

  • Thuglife: எஸ்கேவை முந்திய சிலம்பரசன்… தக் லைஃப் படத்தில் பெத்த கோடி சம்பளமாம்…

    Thuglife: தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வரும் சிலம்பரசனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

    ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

    படத்தின் டைட்டில் டீசரே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில் படத்தில் முதலில் ஒப்பந்தமான ரவி மோகன், துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னையால் விலகினர். இதை தொடர்ந்து சிலம்பரசன் உள்ளே வந்தார்.

    இந்த கூட்டணியும் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் கெத்து காட்டி வரும் சிலம்பரசன் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி வேற லைவ் பரபரப்பை பற்ற வைத்தது.

    ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஷூட்டிங் முடிக்கப்பட்டு படம் தற்போது ஜூன் 5ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவும் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு 40 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு கமல் தன்னுடைய ராஜ்கமல் மூலம் சம்பளமாக 30 கோடி வரை கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிம்பு தக் லைஃப் படத்தின் மூலம் தற்போது அவரை முந்தி இருக்கிறார். அவருடைய லைன் அப்பிலும் ஏகப்பட்ட படங்கள் இருப்பதால் சிம்புவின் ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் இன்னொரு ஹீரோ அசோக் செல்வனுக்கு சம்பளம் ஒரு கோடி வரை பேசப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • அட சிம்புவின் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் டைரக்டரா? இது என்ன புது சேதி!

    Silambarasan: பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்தின் திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் செம குஷியாகி இருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சூப்பர்ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய தனி திறமையால் தனக்கான இளைஞர் கூட்டத்தினை பிடித்து வைத்து இருந்தவர் சிலம்பரசன். ஒரு கட்டத்தில் இவர் காதல் பிரிவால் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.

    திடீரென கொரொனா லாக் டவுனில் அவரின் திடீர் அவதாரம் பலரை ஆச்சரியப்படுத்தியது. உடல் இளைத்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவரின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

    தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காசு, பத்து தல என விமர்சன ரீதியாக வெற்றி படங்களை கொடுத்தார். இதையடுத்து அவர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் சிம்புவின் கேரக்டர் மற்றும் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    இதனால் அவரின் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்துவுடன் ஒரு படம் என சிலம்பரசனின் அடுத்தடுத்த படங்களில் லிஸ்ட் வெளியாகி இருந்தது. இவர்கள் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போது சிலம்பரசனின் 49வது படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் புரோமோ திடீரென ஷூட் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதற்கான ஷூட்டிங் தளத்தில் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இருப்பதால் அவர் இந்த படத்தில் கேமியோ செய்கிறாரா இல்லை வேறு எதேனும் முக்கிய பொறுப்பில் இருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

    விடுதலை 2 முடிந்த கையோடு வெற்றிமாறன் வாடிவாசல் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படம் வெளிவந்தால் சிம்புவின் மார்க்கெட்டும் உயரும் என்ற பேச்சுக்களும் எழுந்து வருகிறது.

    வடசென்னை படத்தின் முக்கிய கதையாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் நடிகர் கவினும் முக்கிய கேமியோவில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Thuglife: தக் லைஃப் படத்தால் ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி… இதலாம் சரியே இல்லப்பா!

    Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் ஓடிடி ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் தக் லைஃப். கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக டீசரே பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான இடத்தில் சூட் செய்யப்பட்டு இருந்ததால் வரலாற்று படமாக இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்டது.

    அப்படத்தில் பிரபல நடிகர்களான ரவிமோகன் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இணைய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அச்சமயத்தில் துல்கர் பலமொழிகளில் பிஸியாக நடித்து வந்ததால் இப்படத்தில் இருந்து திடீரென விலக முடிவு எடுத்தார்.

    அவருடைய கேரக்டரில் நடிகர் சிலம்பரசனை படக்குழு முடிவு செய்ய ஏற்கனவே அவருடன் இருந்த முரண்பாடு காரணமாக ரவி மோகன் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் இப்படத்தில் இணைந்தனர்.

    படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்தது. முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைவதால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. திரிஷாவும் சிம்புவும் ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அபிராமி மற்றும் திரிஷா இருவரும் கமல்ஹாசனின் ஜோடியாகி இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் சிலம்பரசன் வில்லனாக நடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் இப்படம் ஜூன் 5-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சிலம்பரசன் ரசிகர்கள் தொடர்ச்சியாக இப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். பொதுவாக பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு ஆறு வாரங்கள் கழிந்த பின்னரே ஓடிடிக்கு வரும் என்பது விதி்யாக இருக்கிறது.

    ஆனால் அப்படங்களின் வசூல் பல இடங்களில் அடிப்படும் போது மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் ஓடிடிக்கு வந்து விடுகிறது. இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகி 8 வாரம் கழித்தே ஓடிடிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேச்சுவார்த்தையில் நடந்தது இல்லை. நாங்கள் பிளான் செய்தே நிறுவனத்துடன் பேசினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர். தமிழ் சினிமாவில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என்றும் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். ஜூன்5ல் படம் வெளியானால் ஓடிடிக்கு ஜூலை கடைசியில் தான் வரலாம்.

    ஆனால் இப்படத்தின் வசூல் விஷயங்களும் இதில் மாற்றம் இருக்கும் என்ற பேச்சுகளும் இருக்கிறது. இருந்தும் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன், சிம்பு கூட்டணி என்பதால் படம் பெரிய வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • தக் லைஃப் படத்தில் என்னுடைய ஜோடி சிம்பு? மேடையில் உண்மையை சொன்ன திரிஷா! குழப்புறாங்களே!

    Trisha: தக் லைஃப் படத்தில் திரிஷா கமல்ஹாசனின் இன்னொரு ஜோடியாக இருப்பார் என டிரெய்லரில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் திரிஷா தற்போது சொல்லி இருக்கும் தகவல் அடுத்த குழப்பத்தை கொடுத்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. கமல்ஹாசனுடன் ரவி, மோகன், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    துல்கர் கால்ஷூட் பிரச்னையால் படத்தில் இருந்து விலக அவரை தொடர்ந்து ரவி மோகனும் படத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் முதலில் அறிவிக்கப்பட்ட திரிஷா மட்டும் படத்தில் நீடித்தார். அதன் பின்னரே சிம்பு படத்திற்குள் வந்தார்.

    அவருக்காக கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்தது. கமல் மற்றும் சிம்புவின் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் இன்னொரு காம்போ ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

    விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த திரிஷா மற்றும் சிம்பு இருவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் பெரும்பாலும் ஜோடி என்று தான் பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒரு விழாவில் கூட திரிஷா விடிவிக்கு பின்னர் எங்கள் ஜோடி இணைந்து இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் இதை உடைத்தது தக் லைஃப் படத்தின் டிரெய்லர்.

    அதில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் திரிஷாவை கமல்ஹாசன் கட்டி அணைத்து நான் உன் ஆதாம் எனக் கூறுவார். இதனால் அபிராமி மனைவி, திரிஷா காதலியாக இருக்கலாம் எனக் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தக் லைப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

    அதில் பேசிய திரிஷா, எல்லாருமே விடிவிக்கு அப்புறம் எப்போ சிம்புவுடன் இணைந்து நடிப்பாய் எனக் கேட்டு கொண்டே இருந்தனர். ஜூன்5 படத்தினை போய் பாருங்க. இந்த டிரெய்லரை பார்த்த உங்களுக்கு பல குழப்பம் இருக்கும். அதற்கு விடை படத்தில் தான் இருக்கு.

    2 நிமிட டிரெய்லரில் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. படத்தில் எல்லாருக்குமே ஒரு பாசிட்டிவ் ஷேட்டும் இருக்கு. அது போல கெட்டவனும் இருப்பான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • பீப் சாங் சர்ச்சையில் என்னை காப்பாத்தியதே இவருதான்… தக் லைஃப் மேடையிலேயே பீல் பண்ண சிலம்பரசன்

    Silambarasan: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய எதிர்பார்ப்பே தக் லைஃப் படத்தின் ரிலீஸ் குறித்துதான். அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் சிம்பு பேசிய விஷயங்களும் வைரலாகி வருகிறது.

    டி.ராஜேந்தரின் மகனாக சினிமாவிற்கு வந்தாலும் தனக்கான இடத்தினை உருவாக்கி கொண்டவர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமல்லாமல் பாடுவது, டான்ஸ் என அவர் ரூட்டே தனியாக சென்றது. ஒரு கட்டத்தில் வல்லவன் படத்தினை இயக்கியும் ஆச்சரியம் கொடுத்தார்.

    ஆனால் அதுவே கடைசி அந்த படத்திலேயே நயன்தாராவுடன் காதல் கிசுகிசு கசிந்தது. இருவரும் ஓவர் ரொமான்ஸ் செய்து சுற்ற ஒருகட்டத்தில் பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்தனர். அந்த சமயம் வளர்ந்து வந்த சிம்பு திடீரென சினிமாவில் இருந்து பெரிய கேப் விட்டார்.

    மேலும் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர். இருந்த படங்களுக்குமே சரியாக ஷூட்டிங் செல்லாமல் முரண்டு பிடிக்க அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய கெட்டப்பெயரே உருவானது. ஒரு கட்டத்தில் அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

    பெரிய போராட்டத்துக்கு பின்னர் மாநாடு படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார். இதில் கிடைத்த பெரிய வாய்ப்பாக தக் லைஃப் படத்தில் கமல்ஹசனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார் சிம்பு.

    அப்போது அவர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் தனக்காக செய்தது குறித்து பேசி இருக்கிறார். எனக்கு ரெட் கார்ட் போடப்பட்ட சமயத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் எனக்கு மணி சார் வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வனிலும் என்னை அழைத்தார்.

    இப்போது மீண்டும் எனக்கு தக் லைஃபில் வாழ்க்கை கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பீப் சாங் என்ற பாடல் வெளியாகி பெரிய பிரச்னையில் நான் சிக்கி தவித்த போது ஏ.ஆர்.ரஹ்மான் சார் அவராக முன் வந்து இதை சரி செய்ய வேண்டும் என்றே தள்ளி போகாதே பாடலை உடனே வெளியிட சொல்லி இசையமைத்து கொடுத்தார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • நயன்தாரா வந்ததும் என்னை ஏமாற்றிவிட்டார் சிம்பு!.. புலம்பும் பிரபல நடிகை…

    Nayanthara: சினிமாவில் தற்போது சூப்பர் ஹிட் நடிகையாக இருக்கும் நயன்தாரா வந்த பின் தன்னை நடிகர் சிம்பு ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை ஒருவர் தெரிவித்திருப்பது வைரல் ஆகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. அதை தொடர்ந்து அவர் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தவர் முதல் முறையாக வல்லவன் திரைப்படத்தை இயக்கினார்.

    அப்படத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகை நயன்தாராவின் சினிமா கேரியரை மாற்றியதும் இந்த திரைப்படம் தான் என்று கூறவேண்டும். இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் தோழியாக சந்தியா, முன்னாள் காதலியாக ரீமாசென் மற்றும் காதலியாக நயன்தாரா நடித்திருந்தனர்.

    படத்தில் வில்லன்கள் இல்லாமல் வில்லியுடன் நடிகர் சிம்பு நடிக்க படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் காதல் வசப்பட்டனர். ஆனால் அவர்கள் காதல் சில காலம் நீடிக்காமல் பிரேக் கப்பில் முடிந்தது.

    தற்போது இருவரும் தங்களுடைய சினிமா கேரியரில் வளர்ந்து வருகின்றனர். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்து அவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். நடிகர் சிம்பு தன்னுடைய சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றி கரமாக அதை செய்து வருகிறார்.

    இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் நடித்த சந்தியா இப்படம் குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார். படத்தில் நடிகை சந்தியா முதலில் சிலம்பரசனின் முன்னாள் காதலியாக இருப்பாராம். அவர் மீது கொண்ட அதீத காதலால் அவரை கடத்துவது தான் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் நயன்தாரா படத்திற்குள் வந்ததும் சொல்லப்பட்ட கதையை மொத்தமாக மாற்றி வேறு விதத்தில் இயக்கி விட்டதாக காதல் சந்தியா கவலை தெரிவித்து இருக்கிறார்கள். அவர் பிரபலமாக இருந்தபோது வெளியான திரைப்படத்தில் அவருக்கு போதுமான காட்சிகள் இல்லை என்பது தான் உண்மை.

    வெற்றிகரமாக இருந்த நடிகை சந்தியா தற்போது சினிமாவை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

  • நாங்க மட்டும்தாங்க இருக்கோம்… ஆர்வத்த அடக்குங்க… சிம்பு இயக்குனரின் தடாலடி ட்வீட்

    Ashwath: நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படமான இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அடுத்தக்கட்ட அப்டேட் குறித்து பரபரப்பாக ட்வீட் போட்டு இருக்கிறார்.

    ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அசோக்செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் கேமியோ மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

    இதை தொடர்ந்து இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தார். தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.

    இருந்தும் அஷ்வத் தன்னுடைய அடுத்த ஹீரோ சிம்புதான் என்பதில் முடிவாக இருந்தனர். பெரிய போராட்டத்துக்கு பின்னர் தற்போது நடந்துள்ளது. இதற்கான முதல் அறிவிப்பிலேயே தம், மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயாவை கென் சியில் கலந்து செய்த நம்ம நெக்ஸ்ட் என ஆச்சரியம் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து விண்டேஜ் சிம்பு லுக்கில் அவருடைய அக்மார்க் கை சிக்னலில் வெளியிடப்பட்ட போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை அஷ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் படக்குழு குறித்து கிசுகிசுப்புகள் கசிந்த நிலையில் தற்போது அஷ்வத் மாரிமுத்து ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான், எஸ்டிஆர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்ஸை தவிர வேறு யாரும் இன்னும் முடிவாகவே இல்லை.

    அது நடக்கும் போது சொல்லும் முதல் ஆளாக நாங்க தான் இருப்போம் எனவும் தெரிவித்து இருக்கிறார். ரசிகர்களோ இப்படி போஸ்ட்டை போட்டு கடுப்பாக்காம படத்தை உடனே தொடங்குங்க எனவும் கலாய்த்து வருகின்றனர்.

  • விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய சிம்பு!.. இது வேறலெவல் காம்போ!…

    Simbu: சிம்புவுக்கு ஒரு பழக்கம் உண்டு. மற்ற நடிகர்களை போல தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டார். மிகவும் சின்சியராக வேலையை செய்யும் நபர் சிம்பு கிடையாது. எல்லாமே அவரின் மூடை பொறுத்து மாறும். படப்பிடிப்புக்கு போக விருப்பமில்லை எனில் போகமாட்டார். வீட்டில் தூங்கி கொண்டிருப்பார்.

    படப்பிடிப்பு தளத்தில் அவருக்காக பலரும் காத்துக்கொண்டிருப்பார்கள். அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். படப்பிடிப்புக்கு தாமதமாக போவார். கேட்டால் ‘நடித்து நடித்து போரடித்துவிட்டது’ என்பார். திடீரென ஒரு ஹிட் படம் கொடுப்பார். அதன்பின் காணாமல் போய்விடுவார். 2 வருடங்கள் கழித்து மீண்டும் வந்து ஒரு படத்தில் நடிப்பார்.

    உணவு கட்டுப்பாடு இல்லாமல் வெயிட் போடுவார். அதன்பின் வெளிநாட்டுக்கு போய் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து போட்டோ எடுத்து அதை டிவிட்டரில் போடுவார். அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவருக்கு பின்னால் சினிமாவில் நடிக்க வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாம் எங்கோ போய்விட சிம்பு இன்னமும் அப்படியே இருக்கிறார்.

    சினிமா உலகில் சிம்பு மாதிரி தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. இவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சிம்பு செய்த வேலையில் 10 கோடிக்கும் மேல் நஷ்டமாகி இப்போது வரை சிம்புவிடமிருந்து சில கோடிகளையாவது வாங்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடந்து வருகிறார்.

    மாநாடு ஹிட் கொடுத்த சிம்பு அதன்பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு வருடத்திற்கும் மேல் சினிமாவில் நடிக்கவில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் நின்று போனது.

    இப்போது ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இதன் அறிவிப்பு வெளியானது. இந்த படம் ஏற்கனவே தான் நடித்த தம், மன்மதன், வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் என சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க கோட் படத்தில் சின்ன விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாக்‌ஷி சேஷாத்ரியிடம் பேசி வருகிறார்களாம்.