Tag: சிவகாத்திகேயன்

  • சிஎம் விஜய்க்கு வாழ்த்துகள்!.. சியான் விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை வரிசை கட்டிட்டாங்களேப்பா!..

    சிஎம் விஜய்க்கு வாழ்த்துகள்!.. சியான் விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை வரிசை கட்டிட்டாங்களேப்பா!..

    தமிழக அரசியல் களத்தில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, விக்ரம், சிவகார்த்திகேயன், கவின், விக்ராந்த், காஜல் அகர்வால், ஜீவா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். “இது ஒரு புதிய தொடக்கம்”, “உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்” போன்ற வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகர் விக்ராந்த் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் மிகவும் மிகவும் மகிழ்ச்சி தமிழ்நாடு மக்கள் உங்கள் மீதும் உங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உண்மையிலேயே இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி” இன்று, மக்கள் அதை முழு நம்பிக்கையுடன் எதிரொலித்துள்ளனர். இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தத் தருணம் உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்புக்கும் ஒரு உண்மையான சான்றாகும்.
    தமிழ்நாடு மக்கள் உரக்க, தெளிவாக, மிகுந்த பெருமையுடன் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். இது வெறும் வெற்றி மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுடன் ஏற்பட்ட ஆழமான, வலிமையான பிணைப்பின் கொண்டாட்டம்.

    உத்வேகம் தரும் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, ​​உங்களுக்கு மிகுந்த வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம். பலரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வருவீர்களாக. இந்த மகத்தான சாதனைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்! உங்கள் தலைமைத்துவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், மேலும் மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    மேலும் நடிகர் ஜீவா விசிலடித்து வாழ்த்து கூறியுள்ளது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் #VijayPoliticalEntry மற்றும் #TVKVictory போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

  • சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 400 கோடி வசூல் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்னமும் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் எடுக்கலாம் என அமெரிக்காவுக்கு எல்லாம் போய் வேலை பார்த்தார்.

    ஆனால், பெரிய பட்ஜெட் படம் இப்போதைக்கு வேண்டாம் நான் சேஃப்டி ஜோனில் சேயோன் படம் பண்ணுறேன் என சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் தாய் கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

    துப்பாக்கி கொடுத்த டைரக்டருக்கு டாட்டா காட்டியது தான் மிச்சம். இதற்கு மேல் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.

    சிவகார்த்திகேயன் போனால் என்ன அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனை பிரதீப் ரங்கநாதனை வைத்து பண்ணலாமே என லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் வெற்றிக்கு காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு விக்னேஷ் சிவன் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இருவருமே வேண்டாம். யூத் படத்தை இயக்கி 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய கென் கருணாஸை வைத்து தனது ஸ்டைலில் இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்து பார்ட்டி கொண்டாடலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். வெற்றிமாறன் படத்தை சீக்கிரமே முடித்து விட்டு கென் கருணாஸ் வெங்கட் பிரபு பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Jananaygan: உங்க இடத்தை பிடிக்கப்போகும் நடிகர் யார்?… விஜய் சொன்ன பதிலை பாருங்க!…

    1992ம் வருடம் நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் விஜய். ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை. பூவே உனக்காக திரைப்படம் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் விஜயின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை கடந்த 33 வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிகம் செலுத்தி வருகிறார் விஜய் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிரது. இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உண்டு.

    கோட் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அடுத்து நடிக்கவுள்ள படம் எனது கடைசி திரைப்படம். அதன்பின் தீவிர அரசியலுக்கு செல்லப் போகிறேன் என்று விஜய் அறிவித்தார். விஜய் சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என சொல்லியதால் அவரின் இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

    கோட் படத்தின் இறுதி காட்சியில் சிவகார்த்திகேயனிடம் தனது துப்பாக்கியை கொடுத்து ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்ற வசனம் பேசினார் விஜய். இதையடுத்து விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன்தான் பிடிப்பார்.. அதை விஜயே சொல்லிவிட்டார் என பலரும் பேசினார்கள்.

    ஆனால் சிவகார்த்திகேயன் அதை மறுத்தார் ‘30 வருடங்களுக்கு மேல் உழைத்து விஜய் சார் அந்த இடத்தை பிடித்திருக்கிறார். அதை யாராலும் பிடிக்க முடியாது’ என்று மேடைகளில் பேசினார். அதேநேரம் அடுத்த விஜயாகும் ஆசை அவரிடம் இருக்கிறது என சினிமா விமர்சனங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

    இந்நிலையில், நேற்று மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜயிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது ‘உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்/’ என்று கேட்டதற்கு ‘யாரை எங்கு வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்.. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று சுருக்கமாக பதில் சொன்னார் விஜய்.

  • சிவகார்த்திகேயனை நம்பி எல்லாம் போச்சே!.. புலம்பும் ஹிட் பட இயக்குனர்!..

    Sivakarthikeyan: அமரன் ஹிட் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்திருக்கிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்த முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

    இந்த படத்திற்கு பின் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்பட்டது. அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடிக்க துவங்கினார். இதில், பராசக்தி படம் 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் நிலையில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறது. இந்த இரண்டு படங்களும் முடிந்த பின் சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ஒருபக்கம் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை டேக் ஆப் ஆகவில்லை. சிவகார்த்திகேயனுக்காக 3 வருடங்கள் காத்திருந்த சிபி இந்த படமே வேண்டாம் என சொல்லிவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு சென்று நானி நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

    அதற்கு காரணம் சிபி எழுதிய கதையில் சிவகார்த்திகேயன் நிறைய மாற்றங்களை சொன்னதாக சொல்லப்படுகிறது., இதனால் கடுப்பான சிபி தெலுங்கு சினிமா பக்கம் போயிருக்கிறார். ஆனால், சோகம் என்னவெனில் அந்த படமும் டிராப் ஆகிவிட்டது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்து இப்போது அது நடக்காமல் போய்விட்டது.

    சிவகார்த்திகேயனை நம்பி 3 வருடங்கள் வீணாய் போனதோடு இப்போது நானி படமும் நடக்காமல் போய்விட்டதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சிபி சக்ரவர்த்தி. ஏற்கனவே ரஜினிக்கும் இவர் ஒரு கதை தயார் செய்து அது நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

  • ராகவா லாரன்ஸின் பென்ஸ்!.. புரமோஷன் பண்ற சீஃப் கெஸ்ட் யாருன்னு பாருங்க!.. இதுதான் வளர்ச்சி!

    நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பென்ஸ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வருகிறது பென்ஸ் திரைப்படம். சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள இப்படத்தில் நிவின் பாலி, மாதவன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    படத்தின் கதை லோகேஷ் கனகராஜால் எழுதப்பட்டது, இவர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உள்ளன. லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) தொடரில் இணைந்த இத்திரைப்படம் விக்ரம், கைதி, லியோவை தொடர்ந்து நான்காவது படமாக உருவாகிறது.

    நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும், எ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிற மதராஸி படத்திலும் நடித்து வருகிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நாட்டுப்பற்று படமாக நடித்து வருகிறார் சிவகார்த்திக்கேயன்.

    முனி, காஞ்சனா என பல பாகங்களில் தொடர்ந்து நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அதிகாரம், காஞ்சனா 4 மற்றும் கால பைரவா என்று பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் பென்ஸ் படத்தின் படப்பிடிபின் போது சிவகார்த்திக்கேயன் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுடன் எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் சிவகார்த்திக்கேயனின் ரெமோ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 2016ம் ஆண்டு ரெமோ வெளியானது. அவ்வை சண்முகி மற்றும் காதல் மன்னன் படங்களை உல்டா செய்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கியதாக ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பின்னர், 2021ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தையும் இயக்கினார். அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து பென்ஸ் படத்தை இயக்கி வருகிறார்.

  • மதராஸி படத்தின் விலை இவ்வளவு கோடியா?!.. அமரன் ஹிட்டுதான்.. அதுக்காக இப்படியா?!…

    Madharasi: திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகரின் பட வியாபாரம் என்பது அவரின் முந்தைய படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பொருத்தே நிர்ணயம் செய்வார்கள். அதாவது, முந்தைய படம் நல்ல வசூலை பெற்றால் அடுத்த படத்தை நல்ல விலைக்கு கேட்பார்கள். இல்லையெனில், மிகவும் குறைவான விலைக்கு கேட்பார்கள்.

    அதே நேரம், அது எப்படிப்பட்ட கதை, யார் இயக்குனர் என்பதை வைத்தும் கொஞ்சம் முடிவு செய்வார்கள். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரின் அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்துவிட்டது. பொதுவாக, ஒரு படத்தின் மொத்த வசூலை வைத்து தயாரிப்பாளருக்கு லாபம் என சொல்ல முடியாது. அப்படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் எவ்வளவு லாபம் வந்தது என்பதை பார்க்க வேண்டும்.

    சினிமா வட்டாரத்தில் அதை ஷேர் என சொல்வார்கள். அமரன் படத்தை பொறுத்தவரை ஷேர் மட்டுமே 75 கோடி வந்தது. இதைத்தான் இப்போது சம்பளமாக கேட்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அந்த படம் 70 சதவீதம் எடுக்கப்பட்ட நிலையில் அமரன் படத்தில் நடிக்கப்போனார்.

    ஏனெனில், பாலிவுட்டில் சல்மான்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் அங்கு போனார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படி வெளியான சிக்கந்தர் படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்கப்போனார். ஆனால், அந்த பாடமும் பாதி எடுத்த நிலையில் அப்படியே நிற்கிறது.

    இந்நிலையில், மதராஸி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை 65 கோடி என சொல்கிறாராம் தயாரிப்பாளர். ஆனால், அமரனில் நடந்த மேஜிக் மதராஸி படத்திலும் நடக்குமா என வினியோகஸ்தர்கள் யோசிக்கிறார்களாம். அமரனை பொறுத்தவரை அது இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த முகுந்த் வரதராஜன் என்பவரின் கதை. அதனால் செண்டிமெண்ட் காரணமாகவே அப்படம் ஓடியது.

    ஆனால், முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படத்தில் அது நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.