ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்னு நம் முன்னோர்கள் சொல்வாங்க. அது நிஜம் தான். நெல்லைக் கொட்டுனா அள்ளிடலாம். சொல்லைக் கொட்டுனா அள்ள முடியுமா? அதனால எந்த ஒரு வார்த்தையையும் பார்த்து தான் பேச வேண்டும். தேவையில்லாத வார்த்தைகள் பேசுவதால எத்தகைய பின்விளைவுகள் உண்டாகும்னு பார்க்கலாமா..!
நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவைப் பொருத்தவரைக்கும் ”நீ உருப்படவே மாட்டே. நாசமாப் போயிடுவ…” போன்ற வார்த்தைகளை எந்தக் காலத்திலும் அவர் பேசவே மாட்டார். படங்களில் அதுமாதிரி வசனங்கள் இருந்தாலும் கூட அதை எல்லாம் தவிர்க்கப் பார்ப்பார் தங்கவேலு. அதைப்பற்றி ஒருநாள் பேசிக்கொண்டு இருந்தபோது சோ அவரிடமே கேட்டார்.
”இதுமாதிரி பேசுறதால நெஜமாகவே அடுத்தவங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்னு நினைக்கிறீங்களா?”ன்னு கேட்டார். நினைக்கிறது மட்டும் இல்ல. என் வாழ்க்கையிலயே அதுமாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்குன்னு சோ விடம் சொன்னார் சோ.
ஒரு சமயம் என் கையில காசு இல்லாம இருந்தபோது என்எஸ்.கிருஷ்ணன்கிட்ட உதவி கேட்டுப் போனேன். ஒரு 200 ரூபாய் இருந்தா கொடுங்கன்னு அவரிடம் கேட்டேன். உடனடியாக பாக்கெட்டில் இருந்து 200 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்ததோடு நிற்கல.
”இந்தா 200 ரூபாய். என் மகாலெட்சுமியையே எடுத்து உன் கையில கொடுத்து விட்டேன்”னு சொல்லிக் கொடுத்தார். அப்படி அவர் கொடுத்ததுக்கு அப்புறம் அவர் வாழ்க்கையிலேயே பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பணத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். இதுக்கு என்ன சொல்றது?
இதனாலதான் அறம் தவிர்க்கும் வார்த்தைகளை நான் எப்பவுமே பேசுவதில்லை. நானும் பேச மாட்டேன்னு சோவுக்கு விளக்கம் கூறினாராம் கே.ஏ.தங்கவேலு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்திரையுலகில் எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் உள்ளனர் என்று வியக்க வைக்கிறது. ஒருவர் நடிப்பில் புலி என்றால் இன்னொருவர் பாட்டெழுதுவதில் புலி. இன்னொருவர் நகைச்சுவையில் சூரப்புலி. ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. அவரவர் துறையில் அவர்கள் புலி தான் என்று அவ்வப்போது நிரூபிக்கிறார்கள். அப்படித்தான் இந்த சம்பவமும். வாங்க பார்க்கலாம்.
‘சோ’ என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது நகைச்சுவைக் கலை தான். மனுஷன் அசால்டா சிக்ஸ் அடிப்பாரு ஜோக் சொல்றதுலன்னே சொல்லலாம்.நிறைகுடம் என்ற படத்திற்கு கதை எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். இயக்கியவர் முக்தா சீனிவாசன். வசனம் எழுதியவர் சோ. படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி கதாநாயகி வாணிஸ்ரீயிடம் கவிதை நடையில் வசனம் பேச வேண்டும். அப்போது இயக்குனர் முக்தா சீனிவாசன் சோவை அழைத்து இது முக்கியமான சீன். பிரமாதமா கவிதை எழுதுடான்னு சொல்றாரு. சிவாஜியும் கலக்கிருடா’ன்னு சொல்றாரு.
சோவும் ‘கவலையேப் படாதீங்க. கலக்கிடுறேன்’னு சொல்றாரு. மறுநாள் அந்தக் காட்சியை எடுக்க படக்குழு தயாராகிறது. சிவாஜியிடம் அந்த கவிதை பேப்பர் வருகிறது. சோவை அப்படியே ஏற இறங்கப் பார்த்தார் சிவாஜி. எழுதியது போலவே அதற்கேற்ப அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார் சிவாஜி. காட்சி முடிந்ததும் சோவை வரச்சொல்லுப்பான்னு சிவாஜி அழைக்க சோ வந்தார்.
உடன் இயக்குனரும் இருந்தார். இந்த வசனக்கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர் கண்ணதாசன்கிட்டதான் எழுதி வாங்கிட்டு வந்துருக்கான். சரியான்னு செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்டார். சோவும் சிறிதும் ஐயய்யோ கண்டுபிடிச்சிட்டாங்களேன்னு பயப்படவில்லை.
ஆமாம். அதுக்கென்ன…? ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையாக் கேட்டா என்ன அர்த்தம்? அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கி வந்துட்டேன்னு சோ சொல்கிறார். சோ அப்படி சொன்னதும் சிவாஜி உள்பட அங்கிருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தப் பாத்திரம் ஆனாலும் வெளுத்து வாங்கும் நடிகர் தான் அசோகன். எம்ஜிஆர் படங்களில் பிரதான வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். சினிமாவில் தான் அசோகன் பெரிய வில்லன். கொடுமைக்காரன் என்று தெரியும். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. அதற்கு நேர்மாறானவர். தன்மையாகப் பழகக்கூடியவர். உதவி என்று யாராவது கேட்டால் உடனே பண்ணி விடுவாராம். நல்ல மனசுக்காரர். அவரைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவலைப் பார்ப்போம்.
பேண்ட் பாக்கெட்டில்
‘உண்மையே உன் விலை என்ன’ என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருந்தார். படத்திற்கான சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. ஒரு காட்சியில் கோட் பாக்கெட்டில் வைக்க வேண்டிய துப்பாக்கியை மறந்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டார். சூட்டிங்கில் முத்துராமனைப் பார்த்து அவர் துப்பாக்கியால் சுட வேண்டும்.
அதனால் துப்பாக்கியை எடுக்க பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் பேண்டுக்குள் இருந்த துப்பாக்கி வெடித்து விட்டது. அவ்வளவு தான் ஒரே சத்தம். எல்லாரும் என்னாச்சு என பயந்து போயிட்டாங்க. நல்ல நேரம் போல அசோகனுக்கு. அவருக்கு சிறு காயம் தான். தொடையில். அது போலி தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி. அதனால் வெறும் சத்தம் தான் வந்ததே தவிர பெரிய அளவில் காயம் உண்டாகவில்லை.
அசோகனின் குசும்பு
அப்போதும் அசோகனின் குசும்பு குறையவில்லை. அவர் புலம்பும்போது கூட இப்படித்தான் புலம்பினாராம். என்ன சார்? நல்ல வேளை… துப்பாக்கி தள்ளி வெடிச்சிருச்சு. இல்லைன்னா சாகும்போது கூட அசோகன் அசிங்கமாச் செத்தான்னு செய்தி வந்திருக்குமே சார்…னு அங்கு இருந்தவர்களிடம் வலி இருந்தாலும் தமாஷாகப் புலம்பித் தள்ளினாராம்.
1976ல் சோ இயக்கத்தில் வெளியான படம் உண்மையே உன் விலை என்ன? இந்தப் படத்தில் முத்துராமன், பத்மப்பிரியா, அசோகன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். எத்தனை மாந்தருக்கு, காரணத்தை விளக்கவா, பாவம் செய்யுங்கள் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் பெங்களூருவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் ஏராளமான ரசிகர்களைத் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டனர். இருவரும் சினிமா உலகில் போட்டி போட்டுக் கொண்டு படங்களில் நடித்தனர்.
இவர்களில் எம்ஜிஆர் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சாதனை படைத்தார். சிவாஜி அரசியலுக்கு வந்தாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. சினிமாவில் தான் நடிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.
ஹீரோக்களைப் பொருத்தவரை பெண்களையும், ஏழைகளையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். அதனால் தான் எல்லோருக்கும் அவர்களைப் பிடிக்கிறது. இந்த இமேஜை உடைத்தவர்கள் ஒரு சிலர் தான். எம்.ஆர்.ராதா, சத்யராஜ் என ஒரு சிலரை மட்டும் சொல்லலாம்.
இவர்கள் தங்களது தனித்திறமையால் மட்டுமே ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தனர். கமல் நடித்த காக்கி சட்டை படம் செகண்ட் ரிலீஸ் ஆனது. அந்த சமயத்தில் திரையரங்கில் சத்யராஜின் பெயர் டைட்டிலில் போட்ட போது கமலுக்கு நிகராக கைதட்டல் அவருக்கும் விழுந்தது.
குணாதிசயங்களிலும்இ வீர தீர செயல்களிலும் ஹீரோக்கள் ஒரு படி மேலாகப் போய் உயர்ந்து நிற்பதால் வில்லன்களை விட நமக்கு அவர்களைத் தான் பிடிக்கிறது. இது இந்தக்காலத்திலும் இப்படித்தான் நடக்கிறது. நிழல் எது நிஜம் எது என்று ரசிகர்கள் உணரவில்லை.
சிவாஜி இமேஜ் பற்றி கவலைப்படவில்லை. அதே நேரத்தில் ஒரு ஹீரோவின் நிழல் சமுதாயத்திற்கு ஒத்துழைக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தை என் சரிதை என்ற நூலில் விவரிக்கிறார். அதில், நிஜ வாழ்க்கையில் நடிகர்களுக்க பல கெட்ட வழக்கங்கள் இருக்கின்றன.
இருந்தாலும், படங்களில் நல்லவன் போல் காட்டிக் கொண்டு, அரசியலில் நுழைந்து, மக்களுடைய மனதில் இடம்பிடிக்க வேண்டிய தத்துவம் எனக்கு அப்போது தெரியாது. என்னைப் பொறுத்தவரை வில்லனா, ஹீரோவா என்பது முக்கியமல்ல. நான் நடிகன் என்பது தான் முக்கியம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Parasakthi
சிவாஜி 1952ல் வெளியான பராசக்தியில் தான் அறிமுகமானார். அந்தப்படத்தில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால் அவர் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என அடம்பிடித்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படியல்ல. அடுத்த ஆண்டிலேயே திரும்பிப் பார் என்ற படத்தில் நெகடிவ் ரோலில் நடித்தார். இதே போல் 1954ல் அந்த நாள் படத்தில் தேசத்துரோகி போன்ற கேரக்டரில் நடித்தார். ஆனால் இதே ஆண்டில் தான் மனோகரா படத்திலும் நடித்தார்.
ஹீரோவாக நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி பெறுகின்றன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெறுகின்றன. அதனால் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்போம் என்றும் அவர் திட்டம் போடவில்லை. ஒரு படத்தின் தான் நடிக்கும் கேரக்டரின் முக்கியத்துவத்தை மட்டுமே பார்க்கிறார்.
MSP
இது ஆரம்பகாலத்தில் மட்டும் நடக்கவில்லை. எம்ஜிஆருக்கு இணையாக வளர்ந்த போதும் பெண் பித்தனாக, குடிகாரனாக, கோமாளியாக, வயதானவராக என்று நடித்தார். 1966ல் வெளியான மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் 13 பிள்ளைகளின் தகப்பனாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 38 தான். நீங்கள் ஓவர் ஆக்டிங் பண்ணுவதாக சொல்கிறார்களே என சிவாஜியிடம் கேட்டால் இப்படி சொல்கிறார். டிக்சனரியை எடுத்துப் பாருங்கள். நடிப்பே ஒரு தோரணை தான். ஆக்டர் இஸ் எ டிராமாட்டிக் பர்பார்மர் என போட்டிருக்கும். நேச்சுரலாக எப்படி நடிக்க முடியும்? முகத்தில் அரிதாரம் பூசினாலே அது அன்நேச்சுரல் தானே.
கட்டபொம்மனை எடுத்துக் கொள்ளுங்கள். கிஸ்தி, வரி, வட்டி என்று தோரணையாகப் பேசினால் தானே அது வசனம். நாடகம்… என்றாராம். நடிகர் சோ ஒருமுறை சோவும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரு படத்தில் சிவாஜி நடித்த பின் எல்லோரும் கைதட்டினார்கள். ஆனால் சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். இதைக் கவனித்த சிவாஜி, சோவை தனியறைக்கு அழைத்துச் சென்று நான் நடிச்சது பிடிக்கலையான்னு கேட்டாராம்.
அதற்கு அப்படி இல்லை. ரொம்ப ஓவரா இருந்ததுன்னு சொன்னாராம். சரி. அதே காட்சியை சாதாரணமா நடிக்கிறேன் என்று நடித்துக் காட்டினாராம் சிவாஜி. சோ மிரண்டு போனாராம். தூரத்தில் இருக்கும் ரசிகனுக்கு மிகைப்படுத்தி நடித்தால் தான் தன் நடிப்பு அவனுக்குப் புரியும் என்றாராம் சிவாஜி.