Tag: ஜனநாயகன்

  • ”முதலமைச்சர்” டைட்டில் கார்டு வருமா?.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்?.. நம்பலாமா?

    ”முதலமைச்சர்” டைட்டில் கார்டு வருமா?.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்?.. நம்பலாமா?

    விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், படம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

    முதலில் ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதே நாளில் தனுஷின் “கர” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளதால், அந்த தேதியில் “ஜன நாயகன்” வெளியாவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், சூர்யா நடித்த “கருப்பு” திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் “ஜன நாயகன்” மற்றும் “கருப்பு” திரைப்படங்கள் மோதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், மே 4ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. விஜய் நல்ல முன்னிலை பெறுவார் என்ற பேச்சுகள் பரவி வரும் நிலையில, இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ததுள்ளார்.

    “ஜன நாயகன்” படம் முழுவதும் இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பு தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தணிக்கை சான்றிதழ் தாமதமாகிக் கொண்டிருப்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. விரைவில் சான்றிதழ் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.

    புதிய தகவல்களின் படி, மே 8ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக நிறைய வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், தேர்தல் முடிவிற்கு பிறகு படம் வெளியாவதில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது. தேர்தலில் கிடைத்த வரவேற்பை விட படத்தில் அதிகமான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தணிக்கை குழு சென்சார் சர்டிபிகேட் கொடுத்த உடன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஜன நாயகன் படக்குழு அறிவிக்கும் என்கின்றனர். ஒருவேளை மேலும் தாமதமானால் கருப்பு படத்துடன் மோத அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்கின்றனர்.

  • ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?

    ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?

    தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலை பற்றி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    1980–90களில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் சமூக பிரச்சினைகள், அரசியல், இளைஞர் கருத்துகள் போன்றவை அவரது படங்களில் அதிகம் இடம்பெறும். புதிய நடிகர்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர். கேப்டன் விஜயகாந்தை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல படங்களையும் இயக்கினார்.

    சமீப ஆண்டுகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும், சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கியபோது, விஜய் அதிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக் கொண்டதாகவும் இருவரும் தனித்தனியாக அரசியல் மற்றும் தொழிலில் செயல்பட ஆரம்பித்ததாக கூறப்பட்டது.

    விஜயின் சினிமா பயணத்தின் அடித்தளத்தை அமைத்தவர் அவர் தந்தை அதன் மேல் தனது முயற்சியால் வளர்ந்தவர் விஜய். இயக்குநர் , தந்தை , வழிகாட்டி என்ற மூன்று நிலைகளிலும் முக்கியமான பங்களித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வரலாறு காணாத வாக்கு எண்ணிகைக்கு காரணமாகவும் விஜய் அமைந்துள்ளார் என தவெகவினர் கூறுகின்றனர்.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த தேர்தலில் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருந்தார்களோ அதே போல் நீங்களும் இருக்க வேண்டும். முதலில் பொதுக்கூட்டத்தில் எல்லாரும் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களின் அறிக்கைகளும், திட்டங்களும் வார்த்தை வடிவில் மட்டுமல்லாமல் செயல் வடிவிலும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    ஜன நாயகன் படம் இணையத்தில் திருட்டுத் தனமாக லீக் ஆன விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்பது குறித்த கேள்விக்கு படத்தின் எடிட்டர் ராகவ் பிரதாப்பை இடைக்கால நீக்கம் செய்துள்ளதாக சங்க நிர்வாகிகள் பதில் அளித்தனர்.

    ஓடிடி நிறுவனங்களின் தலையீடு, நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது போன்ற பல விசயங்கள் இந்த சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. லாபத்தில் வரும் ஷேர் அடிப்படையிலேயே முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தீர்மானமும் மற்ற மாநில தயாரிப்பாளர்களுக்கு பதில், தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.

  • ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. ஒருமாத காலம் இந்த படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை..

    அந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆனது. எனவே தயாரிப்பாளர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து உமாசங்கர் என்பவரை கைது செய்தனர். முதலில், அவர் ஒரு பிரிலேன்ஸ் வீடியோ எடிட்டர் எனவு சொல்லப்பட்டது. அதன்பின் உமா சங்கர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. ஒரு ஃபிரிலேன்ஸ் எடிட்டர் படத்தை திருடி உமாசங்கரிடம் விற்றுள்ளார். உமா சங்கர் இணையதளத்தில் அப்லோடு செய்திருக்கிறார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது தொடர்பாக அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதிப் ராகவ் எடிட்டர் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து பிரதீப் ராகவ் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    படம் கசிந்தததற்கு பிரதீப் ராகவ் நேரடியாக காரணம் இல்லை என்றாலும் அவரது கவனக்குறைவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தின் விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர் அல்லாத ஒருவரை உதவியாளராக அவர் பயன்படுத்தியுள்ளார் என எடிட்டர் சங்கம் அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறது.

  • கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேவைக்காக தனுஷ் வங்கிகளில் கொள்ளையடிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது..

    அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ‘விக்னேஷ் ராஜா. நீங்கள் ஒரு ஜீனியஸ்’ என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக ஜனநாயகன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

    வருகிற 24-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் எனவும் அனேகமாக அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 29 அல்லது 30ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை, ஏப்ரல் 29 அல்லது 30-ல் ஜனநாயகன் வெளியாவது உறுதியானால் தனுஷின் கர திரைப்படம் அந்த படத்தோடு போட்டி போடுமா இல்லை ரிலீஸ் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அல்லது ஜனநாயகன் மே முதல் வாரத்தில் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறாது.

  • Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிரபார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் அப்போது வெளியாகவில்லை. ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்படவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி சென்று ஒரு மாதம் ஓடிப்போனதே தவிர படத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்கவேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் சொன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீடியோ எடிட்டர் படத்தை திருடியது தெரியவந்தது. அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

  • ஜனநாயகன் படத்தை திருடி லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் கைது.. யாரு பார்த்த வேலைன்னு பாருங்க!..

    ஜனநாயகன் படத்தை திருடி லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் கைது.. யாரு பார்த்த வேலைன்னு பாருங்க!..

    தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இந்த ஆண்டு பொங்கலுக்கே ரிலீஸாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது தற்போது அப்படம் ஆன்லைனில் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முக்கிய குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் அரசியல் மற்றும் அக்‌ஷன் படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளது.

    கே.வி.என் தயாரிப்பில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான ஜனநாயகன் தற்போது ஆன்லைனில் லீக்கானதால் தயாரிப்பாளர்களுக்கு ₹300–400 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த லீக் குறித்து போலிஸ் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டிஜிட்டல் தடயங்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் வேறு ஒரு படத்தின் வீடியோ எடிட்டர் ஒருவர், ஃப்ரீலான்சர் எடிட்டர் உள்ளிட்ட மூவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் எடிட்டிங் டிபார்ட்மெண்டில் வேலை பார்ப்பவர்கள் கண்டிப்பாக திருடி லீக் செய்திருக்கமாட்டர்கள் என எடிட்டர் சங்கம் சமீபத்தில் எடிட்டர்களுக்கு ஆதரவாக பேசிய நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரில் எடிட்டர்கள் இந்த வேலையை பார்த்துள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    ஏற்கனவே இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு மாத காலமாகியும் எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

    ஆனால் அதை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இப்போதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு முழுபடமும் இணையத்தில் வெளியானது. பலரும் அதை இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர்.. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே படம் வெளியாகாமல் கால தாமதமானதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிற நிலையில் தற்போது முழு படமும் லீக்காகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. எனவே இந்த நஷ்டத்தை போக்க அதே தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. பல ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது..

    ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.. விஜய் இப்போது வரை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை.. ஜனநாயகன் லீக் ஆனதும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ஆறுதலுக்காக கூட ‘ஒன்றும் வருத்தப்படாதீர்கள்.. நாம் ஏதாவது செய்வோம்’ என சம்பிரதாயத்திற்கு கூட விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சொல்கிறார்கள்.

    விஜயின் நடவடிக்கையை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு விஜய் இன்னொரு படம் நடித்து கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஒருபக்கம், படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார். அனேகமாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தனுஷுக்கு மமிதா பைஜு படத்தாலே தொல்லையா?.. ‘கர’ தேதியில் கர்ச்சிப் போடும் ஜன நாயகன்!..

    தனுஷுக்கு மமிதா பைஜு படத்தாலே தொல்லையா?.. ‘கர’ தேதியில் கர்ச்சிப் போடும் ஜன நாயகன்!..

    விஜய்யின் ஜன நாயகன் படத்தை எப்படியாவது இந்த மாதத்துக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே லீக் ஆன படத்தை பெரிய தொகை எல்லாம் கொடுத்து வாங்க முடியாது என்றும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவது பாதியாக குறைந்துவிடும் என விநியோகஸ்தர்கள் எல்லாம் கம்பி நீட்டி வருகின்றனர்.

    கேபிள் டிவியிலேயே படத்தை போட்ட நிலையில், டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமத்துக்கும் சிக்கல் வந்துள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தை இந்த வாரமே வெளியிட படக்குழு முயற்சித்தாலும், தேர்தல் முடியும் வரை வெளியிட விஜய்க்கு எதிரானவர்கள் விடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அது தனுஷின் ‘கர’ படத்துக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என்கின்றனர்.

    ஏற்கனவே இட்லி கடை படத்தை காந்தாரா 2 உடன் வெளியிட்டு தர்ம அடி வாங்கிவிட்டார் தனுஷ் என்கின்றனர். என்ன தான் ஜன நாயகன் வசூல் குறைந்தாலும் முதல் நாள் விஜய் படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நல்ல ஓபனிங் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

    ஜன நாயகன் மற்றும் கர என 2 படங்களிலும் மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் வெளியானால் சிக்கல் தான் என்று தெரிகிறது. ஏப்ரல் 30ம் தேதி ஜன நாயகன் வெளியானால் தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே 14ம் தேதி சூர்யாவின் கருப்பு படம் வெளியாக உள்ள நிலையில், 2 வார கேப் கட்டாயம் தேவைப்படும்.

  • ஜனநாயகன் படத்தை பாத்தீங்களா? உங்களுக்கு எப்படி கிடைச்சது.? செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய பி.டி.செல்வகுமார்

    ஜனநாயகன் படத்தை பாத்தீங்களா? உங்களுக்கு எப்படி கிடைச்சது.? செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய பி.டி.செல்வகுமார்

    விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ஜன நாயகன். ஹெ.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜ ஹெக்டே என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம் கடந்தபொங்கலுக்கு வெளிவ்யாவ்தக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியிடும் காலம் தாமதமாகி வந்தது. தற்போது வரை கூட படத்திற்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடண்டஹ் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஜன நாயகன் முழு படமும் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்து ரஜினி , கமல் உள்ளிட்ட பல்ரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த திருட்டு விவகாரம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஜன நாயகன் படத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். அந்தப் பிரின்ட்டில், தெளிவாக எடிட்டர் வெர்ஷன் என்று எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் எடிட்டர் வெர்ஷன் மூலமாகப் படக்குழுவிடம் இருந்து தான் வெளிநபர்களுக்குக் கசிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனடியாக குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், ஜன நாயகன் திருட்டுப் பிரின்ட்டைப் பார்க்கக் கூடாது என்றும், மீறிப் பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதே… அப்படியிருக்க நீங்கள் எப்படி அந்தப் படத்தைப் பார்த்தீர்கள்? என்று கேள்விகளை எழுப்பினர்.

    இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பி.டி.செல்வகுமார் உடனடியாகத் தடுமாறினார். ஆனாலும் தனது பேச்சை அப்படியே மாற்றி, இல்லை… இல்லை… நான் முழுப் படத்தையும் பார்க்கவில்லை. என்னிடம் சிலர் சில காட்சிகளை மட்டுமே கொண்டு வந்து காட்டினார்கள். அதைத்தான் நான் பார்த்தேன். தவிர, உலகம் முழுவதும் இன்று ஜன நாயகன் படத்தை எல்லாருமே பார்த்துவிட்டார்கள் என்று கூறி மழுப்பிச் சமாளிக்க முயன்றார்.

  • தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..

    தமிழ் புத்தாண்டுக்கே ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகுதா?.. அந்த பிரபலம் சொன்ன சூப்பர் மேட்டர்!..

    விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பாகவே இன்று உலகம் முழுவதும் பலரது வீட்டு டிவிக்களில் முழு ஹெச்டி வடிவத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், படக்குழுவை தாண்டி தியேட்டர் ஓனர்கள், ஓடிடி நிறுவனம், படத்தை வாங்கியுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி என பலருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

    இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்றும் அதை ஹேக் செய்து லீக் செய்தவர்களை கண்டுபிடிக்க பிரதமர் மோடி வரை கேவிஎன் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் தரப்பு தான் படத்தை லீக் செய்ததாக திமுகவினர், அதிமுகவினர், நாதகவினர் பொய் பிரச்சாரம் சொல்லி, படத்தின் லிங்குகளை அதிகம் ஷேர் செய்து வருவதாக தவெகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

    மேலும், விஜய்க்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு அந்த நோய், இந்த நோய் என வேண்டுமென்றே சில மீடியாக்கள் பொய் செய்திகளை பரப்பி விஜய்யை முடக்க முயற்சி செய்தாலும், அவர் இன்று கன்னியாகுமரியில் மீண்டும் மக்கள் அலையை திரட்டி மாஸ் காட்டியுள்ளார்.

    இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையை நாளை சரி செய்ய ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. திருப்பூர் சுப்ரமணியம் அதுதொடர்பாக பேசியுள்ளார். ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கை சான்று கிடைத்தாலே அடுத்த நாளே படம் தியேட்டரில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

    தமிழ்புத்தாண்டு செவ்வாய்க்கிழமை என்பதால், திங்கட்கிழமையான நாளை சென்சார் சான்றிதழ் கிடைத்தால் படம் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவுகளை போட்டு வருகின்றனர். ஆனால், அதிகபட்சம் தேர்தல் முடிந்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.