Tag: டூரிஸ்ட் ஃபேமிலி

  • With Love: வித் லவ் உண்மையான வசூல் இதுதான்!.. புரட்யூசரே சொல்லிட்டாரே!…

    இப்போதெல்லாம் குறைந்த பட்ஜெட்டில் புதுமுக நடிகர்கள் நடித்து நல்ல கதை அம்சத்தோடு வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் நல்ல லாபத்தை கொடுக்கிறது. ஒருபக்கம் பெரிய நடிகர்கள், அதிக பட்ஜெட் என வெளியாகும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்காத நிலையில் இது போன்ற சின்ன படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது..

    ஏற்கனவே அயோத்தி, டூரிஸ்ட் பேமிலி, குட் நைட், குடும்பஸ்தன், சிறை போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம்தான் வித் லவ்
    . இரண்டு பேரின் பள்ளிப்பருவ காலத்தில் நடக்கும் காதலை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் இயக்குனர் மதன் அமைத்துள்ள புதுவிதமான திரைக்கதை ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

    இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
    இந்த படம் மூன்று நாட்களில் ஆறரை கோடி மட்டுமே வசூல் செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இந்த படம் மூன்று நாட்களில் உலகமெங்கும் சேர்த்து 13 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது..

  • With Love: 2வது நாளிலேயே எகிறிய வசூல்!.. வித் லவ் வசூல் அப்டேட்!..

    தற்போதெல்லாம் புதுமுக நடிகர்கள் நடித்து சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை கொடுக்கிற.து பெரிய நடிகர்களை வைத்து பல கோடி பட்ஜெட்டில் எடுக்கும் படங்களை விட இந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது.
    அப்படித்தான் டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை போன்ற படங்கள் வெளியானது. அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் வித் லவ்..

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருதார். மேலும், அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். மதன் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. படம் பார்க்கும் பலருக்கும் தங்களின் பள்ளி கால நினைவுகள் நினைவுக்கு வரும்படி கதை திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்..

    படம் வெளியான வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் 1.6 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்த படம் 1.93 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது படம் வெளியாகி இரண்டு நாட்களில் இந்த படம் 3.53 கோடி வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது..

  • அழகி.. ஆட்டோகிராப்.. 96 வரிசையில் With Love. கொண்டாடும் விமர்சகர்கள்!…

    அழகி.. ஆட்டோகிராப்.. 96 வரிசையில் With Love. கொண்டாடும் விமர்சகர்கள்!…

    என்னதான் பெரிய நடிகர்கள் நடித்து ஆக்சன் படமாக வெளியாகி 1000 கோடி வசூலை அள்ளினாலும் அந்த படங்கள் மனசுக்கு நெருக்கமாக மாறாது.. ஆனால், மனதை வருடி சென்ற காதல் கதைகள் எப்போதும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் அரிதாகவே வரும். அப்படி வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் வித் லவ்.

    டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கி பாராட்டைப் பெற்ற அபிஷன் ஜீவிந்த் With Love படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.. அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்கியிருக்கிறார். மேலும் ரஜினியின் மகள் சௌந்தர்யா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.. இந்த திரைப்படம் வருகிற 6ம் தேதி ரிலீஸாகவுள்ளது.அதேநேரம் நேற்று இந்த படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.. அதை பார்த்த பலரும் சமூகவலைதளங்களில் படத்தை பற்றி பாசிட்டிவாக பதிவிட்டு வருகிறார்கள்.

    கதாநாயகியை பெண் பார்ப்பதற்காக அபிஷன் ஜீவிந்த் போகிறார்.. அதன்பின் இருவரும் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.. அப்படி பேசிக்கொள்ளும்போது அவர்களின் பழைய காதல் பற்றி பேச்சு போகிறது.. அதன்பின் அவர்கள் இருவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள்.. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.. அதை அவ்வளவு சுவாரசியமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார்..

    ஒரு சூப்பர் ஃபீல்குட் சினிமா.. அழகி, ஆட்டோகிராப், 96 பட வரிசையில் இந்த படமும் மனதை கவர்கிறது.. கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் என்றெல்லாம் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

    சினிமா அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலிலும் இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியிருக்கிறார்கள். அபிஷன் ஜீவிந்துக்கும், இயக்குனர் மதனுக்கும் இது முதல் படம் போலவே தெரியவில்லை. அனஸ்வரா ராஜன் அசத்தலாக நடித்திருக்கிறார்.. சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்துகிறார். இந்த படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களின் பழைய காதலை நினைத்துக் கொள்வார்கள்.. குறிப்பாக இந்த படம் பார்க்கும்போது அனைவரும் பள்ளி காலத்திற்கு சென்று விடுவார்கள்..

    அறிமுக இயக்குனர் மதன் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பு.. சமீப காலமாகவே மினிமம் பட்ஜெட்டில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை வரிசையில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படமாக வித் லவ் இருக்கும்’ என்றெல்லாம் அதில் பேசியிருக்கிறார்கள்..

  • ரெட்ரோவை ஓரங்கட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி!.. அட கஸ்தூரியும் இந்த பொள பொளக்குறாரே!..

    நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் அவர் வானரன் படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டபோது சூர்யாவின் ரெட்ரோ படத்தை பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகை கஸ்தூரி 1991ஆம் ஆண்டு ‘ஆத்தா உன் கோயிலிலே’ தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை, இந்தியன், அன்னமய்யா போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். பல ஆண்டுகளாக திரைத்துறையை விட்டு விலகியிருந்த கஸ்தூரி மலை மலை திரைப்படத்தில் துணை நடிகையாக மீண்டும் கம்பேக் கொடுத்து நடிக்கத் தொடங்கினார். மேலும், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் கஸ்தூரி சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்துக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

    இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, இட ஒதுக்கீடு மற்றும் திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக பேசியது போன்ற பல கருத்துகளை முன்வைத்து சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகி ஜாமினெல்லாம் பெற்றும் தனது கருத்துக்களை கூறிக்கொண்டு தான் இருகிறார்.

    இந்நிலையில், சமீபத்தில் வானரன் படத்தின் போஸ்டர் வெளியிட்டு விழாவில் பேசிய கஸ்தூரி, டூரிஸ்ட் ஃபேமிலி ரிலீஸ் ஆன அதே நாளில் தான் ஒரு பெரிய நடிகருடைய பெரிய பட்ஜெட் படம் ரிலீஸ் ஆகுது. ஆனால் அந்த பெரிய நடிகருடைய படம் பெருசா பேசப்படல டூரிஸ்ட் ஃபேமிலி எப்படியோ ஃப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திடுச்சு என பேசியுள்ளார். அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பற்றி மறைமுகமாக தாக்கி பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • சிம்ரன் மகனும் பட்டம் வாங்கிட்டாரே!.. இதென்ன பிரபலங்களின் வாரிசுகள் பட்டம் வாங்கும் வாரமா!..

    நடிகை சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது சூர்யாவின் மகள் தியா, தனுஷின் மகன் யாத்ரா என பல பிரபலங்களின் வாரிசுகளின் பட்டமளிப்பு விழாவின் வீடியோ வைரலாகி வரும் நிலையில் சிம்ரனின் மகனும் பட்டம் வாங்கிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் மற்றும் வி.ஐ.பி ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். துள்ளாத மனமும் துள்ளும் , வாலி , பிரியமானவளே , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் , பேட்ட உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம் மற்றும் சல்சா நடனத்தில் பயிற்சி பெற்று பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசும் திறமைக் கொண்டவர்.

    நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகாவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் இடைவெளி எடுத்து, 2014-ல் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அந்தகன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்நிலையில், இன்று சிம்ரனின் மகன் ஆதிப் பாகா பட்டம் பெற்ற விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சிம்ரனின் மகனுக்கும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நடிகை சிம்ரனின் மகன் பேராசிரியர் கரங்களால் பட்டம் பெற்ற நிலையில், அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை பார்த்த ரசிகர்கள் இதுவல்லவோ வளர்ப்பு என சிம்ரனை பாராட்டி வருகின்றனர்.

  • தனுஷ் கூப்பிட்டு இப்படி சொல்லுவாருனு நினைக்கல.. நெகிழ்ச்சியில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்

    சசிகுமார்- சிம்ரன் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், பகவதி உள்ளிடட பலரும் நடித்து இருந்தனர். மனித நேயத்தை பேசும் இந்த படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

    இந்த படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூர்யா ஆகியோர் பாராட்டு தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இந்த படத்தை பாராட்டி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நடிகர் தனுஷை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், நேற்று நடிகர் தனுஷை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்பட வெற்றிக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இந்த படத்தின் டீசரை பார்த்தபோதே இந்த படம் மிக பெரிய வெற்றி பெரும் என்று நினைத்ததாகவும் தன்னிடம் தெரிவித்தாக கூறியுள்ளார். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக ஆக்‌ஷன், வன்முறை சார்ந்த படங்களாகவே வெளிவர அதை பார்த்து ஃபேமிலி ஆடியன்ஸுக்கு போர் அடித்துவிட்டது. சூர்யவம்சம் மாதிரியான நாட்டாமை மாதிரியான குடும்ப கதைகளை எப்போ பார்ப்போம் என்ற அளவுக்கு வன்முறை படங்கள் இளைஞர்களை கெடுத்து வருவதாக ஃபேமிலி ஆடியன்ஸ் நினைத்தனர். அந்த வகையில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

    அதுமட்டுமில்லாமல் சசிகுமார் பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களுடனேயே டிராவல் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 11 இயக்குனர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அதில் இப்பொது அபிஷன் ஜீவிந்தும் இணைந்திருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்திற்கு ரஜினி அழைத்து அவரது பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஜோதிகா பெயர் கூட சிம்ரன் வாயில இருந்து வரலையே!.. ரெண்டு பேருக்கும் இடையே சண்டை உண்மை தான் போல!..

    ஜோடி படத்தில் நடிக்க ஆரம்பித்த சிம்ரன், த்ரிஷா இருவரும் 25 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருவதெல்லாம் எந்தவொரு நடிகைக்கும் கொடுத்து வைக்காத பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். வந்த வேகத்துல வாம்மா மின்னல் என பல நடிகைகள் காணாமல் போய்விடும் நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் மீண்டும் டாப் ஹீரோயினாக கலக்கி வருகிறார் சிம்ரன்.

    ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் தொடங்கி தொடர்ந்து இவரும் அஜித் உடன் குட் பேட் அக்லி, சமந்தாவின் வெப்சீரிஸ், சசி குமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி என அசத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் ஆன்ட்டி ரோலில் நடிக்கிறீங்க என சக நடிகை ஒருவர் கிண்டலாக பேசியது குறித்து வெளிப்படையாக பேசி மனதில் இருந்த பாரத்தை எல்லாம் சிம்ரன் இறக்கி வைக்க, அப்படி பேசியது யாராக இருக்கும் என சிம்ரன் உடன் நடித்த நடிகைகளின் பட்டியலை போட ஆரம்பித்த நெட்டிசன்கள், சிம்ரன் “டப்பா” வேடங்களில் நடிப்பதற்கு ஆன்ட்டியாக நடிப்பது எவ்வளவோ மேல் என பதிலடி கொடுத்தேன் என குறிப்பு கொடுத்த நிலையில், “டப்பா கார்ட்டெல்” வெப்சீரிஸில் நடித்த ஜோதிகாவை தான் சொல்கிறார் என கிளப்பி விட்டனர்.

    அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றில் சிம்ரனிடம் ‘டப்பா கார்டெல்’வெப்சீரிஸில் நடித்த நடிகையைத் தான் நீங்க சொன்னீங்களா என்று கேட்க, அதை புரிந்துக் கொண்ட சிம்ரன் கடைசி வரை ஜோதிகா பெயரையே எடுக்காமல், டப்பா கார்டெல் ஒரு நல்ல வெப்சீரிஸ் என கேள்விப்பட்டேன். இன்னமும் அதை பார்க்க டைம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட நடிகை எனக்கு சாரி கேட்டு மெசேஜ் பண்ணிவிட்டார் என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

    ஜோதிகாவின் பெயரை கூட சிம்ரன் இவ்வளவு களேபரத்துக்குப் பிறகும் சொல்லவில்லை என்பதால், அவரைத்தான் குறிப்பிட்டுள்ளார் என மீண்டும் ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.