Tag: தமிழக வெற்றி கழகம்

  • தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் நின்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

    சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்ததாக ஆரம்ப நிலவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு பகுதிகளிலும் அவரது கட்சி வலுவான முன்னிலை பெற்று வெற்றிப்பெற்றது. மேலும், தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான ஆதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றி, நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. புதிய கட்சியாக இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வெற்றியைத் தொடர்ந்து, கட்சித் தலைமையகம் மற்றும் விஜயின் இல்லம் முன்பு ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மொத்தத்தில், பெரம்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த இந்த வெற்றிகள், தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றன. மேலும், பல திரை பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • அண்ணன் வறார் வழி விடு!.. விஜயின் பிரச்சார வேனின் விலை மட்டும் இவ்வளவு லட்சமா?!….

    Vijay Tvk: சினிமா கெரியரில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் நுழைந்துவிட்டார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, இப்போது ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என அவர் அறிவித்திருந்தார்.

    விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெறும் என்றே பலரும் நினைத்தனர்.

    மாநாட்டில் முழுக்க முழுக்க திமுகவை விமர்சித்து மட்டுமே பேசினார். உங்களின் ஊழல் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பயந்து திரும்பி செல்ல மாட்டேன் எனவும் கூறினார். அந்த மாநாட்டில் விஜய் பேசியது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

    இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடையும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால், மே மாதம் வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஏனெனில், சில காட்சிகள், 3 பாடல்கள் மற்றும் ஒரு சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

    இதையெல்லாம் முடித்து கொடுத்துவிட்டு ஜூன் மாதம் முதல் முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறார் விஜய். 2026 கோடை விடுமுறையில் தேர்தல் வரும் என்பதால் இந்த ஒரு வருடம் முழுக்க அரசியல் வேலைகளை விஜய் தீவிரப்படுத்தவிருக்கிறாராம். குறிப்பாக தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

    விஜய் பிரச்சாரம் செய்வதற்காக Urbania வேன் ஒன்றையும் புதிதாக வாங்க திட்மிட்டுள்ளனர். இந்த வேனின் விலை சுமார் 35 லட்சம் என சொல்லப்படுகிறது. எனவே, ஜூன் மாதத்திற்கு பிறகு முழுநேர அரசியல்வாதியாக விஜயை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

  • Vijay: லாரில அடிபட்டு செத்துருவேன்னு சொன்ன சீமான்!… ஆனா எங்க தளபதி செஞ்சதை பாருங்கப்பா?!…

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

    தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார். இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக வெற்றி கழகம் என்கின்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கி இருக்கின்றார் நடிகர் விஜய். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய் அதோடு நிறுத்தி விடாமல் கட்சியின் கொடி, பாடல், கொள்கை,முதல் மாநாடு என அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றார்.

    இதையும் படிங்க: SK: தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி!… அமரன் வெற்றி நிகழ்ச்சியில் புகழ்ந்த SK… இத நம்பலாமா?!…

    நடிகர் விஜயின் அரசியல் வருகை பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. கட்சி ஆரம்பித்த புதிதில் பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டிற்கு பிறகு பல விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது, ஏனென்றால் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் பல கட்சிகளை எதிர்த்து பேசியிருந்தார்.

    அதிலும் ஆளும் கட்சியான திமுக கட்சியை நேரடியாக தாக்கி பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் தமிழகத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இவர்களை எல்லாம் தாண்டி நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் நடிகர் விஜயை தாறுமாறாக பேசியிருந்தார்.

    முதல் மாநாட்டிற்கு முன் என் தம்பி விஜய் அவர் என்னையே எதிர்த்து பேசினாலும் எனக்கு அது பெரிதல்ல என்று வசனம் பேசிய சீமான் நடிகர் விஜயின் முதல் மாநாட்டிற்கு பிறகு அவரையும் அவரின் கொள்கையையும் தாறுமாறாக பேசியிருந்தார். ரோட்டிற்கு அந்த பக்கம் நில், இல்லை என்றால் ரோட்டிற்கு இந்த பக்கம் நில், நடுவில் நின்றால் லாரி எழுத்து செத்துப் போவாய், கூமுட்டை, தற்குறி என்றெல்லாம் பேசியது நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

    இதனால் சமூக வலைதள பக்கங்களில் சீமானை விஜய் ரசிகர்கள் கண்டபடி திட்டி வந்தார்கள். ஆனால் நடிகர் விஜய் சீமான் மற்றும் மற்ற தலைவர்களுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள்.

    இதையும் படிங்க: Amaran: அமரன் 8வது நாளில் இந்தியாவில் மட்டும் வசூல் இத்தனை கோடியா?

    காலை முதலே பல அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பகிர்ந்து இருக்கின்றார்.

    இந்த பதிவு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘தீயை நீ பகிர்ந்தாலும், ரெண்டாய் வாழும் இவனும், அந்த தீ போல தான்.. நீ சிங்கம் தான்!..’ என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

  • அஜித்தை அப்போதே அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா!.. அதற்கு இதுதான் காரணமாம்!..

    விஜய் தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்ததுமே சமூக வலைதளங்களும், ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வெளியிட்டு வந்தன. அவர் அரசியலில் குதிக்க என்ன காரணம்? வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத நபர் கலைஞர் கருணாநிதி. அவர் அரசியலுக்கு வந்த நாள் முதல் பத்திரிகையில் அவர் செய்தி வராத நாளே இல்லை. விஜய் சினிமாவில் நல்ல பேக்ரவுண்டை வைத்துள்ளார். அரசியலில் அவருக்கு அப்படி இருக்கா என்பது தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைப்பைப் பார்த்ததுமே அவரது கொள்கையை அதில் சொல்ல வேண்டும். விஜய் என்ன காரணத்திற்காக இந்தத் தலைப்பை வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.

    Vijay
    Vijay

    விஜயைப் பொருத்தவரை தலைவா படத்தோட பிரச்சனையில் இருந்து அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். அப்போது தான் அவருக்கு அழுத்தம் அதிகமானது. சினிமாவில் நிறைய பணம் சம்பாதித்து உயரத்தில் இருந்தாலும் ஒரு பவர் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் வாழ முடியும் என்ற இடத்திற்கு விஜய் தள்ளப்பட்டு விட்டார். இது நடந்தது ஜெயலலிதா ஆட்சி காலம்.

    அதனால் என்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார். இவர் வந்து இலை அரசியலைத் தாண்டி மக்கள் மத்தியில் நெருங்கிப் போனார் என்றால் இவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

    Vijay
    Vijay

    விஜய்க்கு சரியான வழிகாட்டுதல்கள் அரசியலில் இல்லை. விஜய் முழுநேர அரசியல்வாதி ஆனதும் தினம் தினம் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும். அஜீத்தின் திருமணத்தின் போது ஜெயலலிதா நீண்ட நேரமாக இருந்தாராம். அவரை ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

    ஒரு கட்டத்தில் அஜீத்தை கட்சியில் இணைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாராம். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். அஜீத் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியதுமே அவரை வாழ்த்தியிருப்பார். அஜீத்தும், விஜயும் குடும்ப நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது உள்ள ஆட்சியில் என்ன தவறுகள்? அதை எப்படி நிவர்த்தி செய்யப் போகிறார் என்பது தான் விஜயின் அரசியல் மக்கள் மத்தியில் பேசப்படும். கார்த்திக் சுப்புராஜின் படம் தான் விஜயின் கடைசி படமாக இருக்கும். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தெரிவித்துள்ளார்.

  • எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்ணா!.. ஃபீல் பண்ணி விஜய் வெளியிட்ட புதிய அறிக்கை..

    Actor vijay: தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த விஜய் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார். இப்போது மாஸ் நடிகராகவும் மாறியிருக்கிறார்.

    இவருக்கு அதிக ரசிகர் கூட்டமுண்டு. சமுதயாத்தில் நடிக்கும் சில விஷயங்களின் மீது கோபத்தில் இருந்த விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியல் நடவடிக்கைளில் தீவிரம் காட்டி வந்தார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.

    இதையும் படிங்க: நான் எப்படி நம்புறது? விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன்.. நடிகர்கள் அரசியலை பற்றி அப்பவே சொன்ன அரவிந்த்சாமி

    எனவே, விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் எனவும், 2016ம் தேர்தலில் அவரின் இயக்கத்தினர் போட்டி போட்டுவார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்தார்கள். தற்போது அது நடந்துவிட்டது. தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம்’ என விஜய் அறிவித்திருக்கிறார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் அவர் சொல்லி இருக்கிறார்.

    vijay
    vijay

    இதைத்தொடர்ந்து அவரின் அரசியல் வருகையை விமர்சித்து பலரும் பேசி வருகிறார்கள். ஒருபக்கம் ஆதரவும், ஒரு பக்கம் விமர்சனங்களும் அவருக்கு கிடைத்து வருகிறது. ஒருபக்கம், அவரின் கட்சியின் பெயர் சரியில்லை. தமிழ்நாடு என சொல்லாமல் தமிழகம் என குறிப்பிட்டிருக்கிறார். வெற்றி-க்கு அருகில் ‘க்’ வர வேண்டும் எனவும் பலரும் சொல்லி வருகிறார்கள்.

    இந்நிலையில், விஜய் அவரது கட்சியின் சார்பில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘தமிழ்நாட்டின் நலன் மற்றும் வெற்றியை மனதில் கொண்டு நான் தொடங்கியிருக்கும் என் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், சினிமா தொடர்பான நண்பர்கள், பாசமிகு தம்பி, தங்கைகள், தாய்மார்கள், ஊடக நண்பர்கள், எல்லாவற்றுக்கும் மேல என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் என எல்லோருக்கும் என் இதயத்தின் அடியிலிருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

    notice

    இதையும் படிங்க: அரசியலில் குதித்த விஜய்க்கு அஜீத்தின் ஆதரவு இருக்குமா? சவால்களில் சாதிப்பாரா?

  • கோட் பட சூட்டிங்கில் விஜய்!.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!.. தளபதி லுக் எப்படி இருக்குன்னு பாருங்க!..

    தமிழக வெற்றி கழகம் என தனது கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய் விரைவில் அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ள நிலையில், கமிட்டான படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

    ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் மார்ச் மாதத்திற்குள் சூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில் சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: அட்லீ கனவு அவ்ளோ தானா?.. விஜய், ஷாருக்கான் படத்துக்கு மூடு விழா போட்ட விஜய்.. எல்சியூவுக்கும் ஆப்பு?

    பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த மாதம் மீசை இல்லாத தோற்றத்தில் நடிகர் விஜய் அம்பத்தூர் பகுதியில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்த காட்சிகள் வெளியாகின. ஏராளமான ரசிகர்கள் நடிகர் விஜய் பார்க்க அந்த இடத்தில் திரண்ட நிலையில் அவர்களுக்காக கேரவன் இதெல்லாம் ஏறி கை அசைத்து, செல்பி எடுத்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.

    இந்நிலையில், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோருடன் நடிகர் விஜய் கையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு இருந்த கோட் போஸ்டர் வெளியான நிலையில், அதே லுக்கில் நடத்தப்பட்ட சூட்டிங்கில் இருந்து நடிகர் விஜய் காரில் ஏறி கிளம்பும் போது ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: புதுசா புதுசா காட்டுறியே பூஜா ஹெக்டே!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!..

    கோட் படம் தான் கடைசி படமா? அல்லது டிவிவி தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் கடைசியாக நடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிடுவாரா என ஏகப்பட்ட கேள்விகளும் எழுந்துள்ளன.

     

     

  • காலம் என்னை கொண்டு போகும்!… அரசியல் குறித்து விஜய் அப்போதே இப்படி பேசி இருக்காருப்பா!.. உண்மை தான் போல

    Vijay: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் சில பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு விஜய் சொல்லி இருக்கும் பதில் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெற்ரிகரமாக அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார். தான் ஒப்புக்கொண்ட படத்தினை முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வருவேன் என்றும், தன்னுடைய கட்சி பெயராக தமிழக வெற்றி கழகத்தினையும் அறிவித்து இருக்கிறார்.

    இதையும் படிங்க: விஜயுடன் நடிக்க மாட்டேன்!.. கண்டிஷன் போட்டு நடிக்க வந்த ஷகீலா.. அட அந்த படமா!..

    அதுகுறித்து, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னுடைய தாய், தந்தைக்கு பின்னர் எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாரும் கொடுத்த தமிழக மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில் எதுவும் செய்ய வேண்டும் என்பதே என் நீண்டகால எண்ணம் மற்றும் விருப்பமாக இருந்தது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்நிலையில், சில காலம் முன்னர்  விஜய் கலந்துக்கொண்ட ஒரு பேட்டியில் நீங்க அரசியலுக்கு வருவீர்களா? வந்தால் எந்த கட்சியில் இணைவீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய், என்னுடைய மொத்த கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது. நான் நடிகனாக ஆசைப்பட்டேன். மக்கள் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து வைப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை. அது நடந்தது.

    இதையும் படிங்க: 1972 முதல் 2024 வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்! எல்லாரையும் நம்பியாச்சு.. இவரையும் நம்புவோம்

    காலம் என்னை கொண்டு வந்து வைத்தது. அப்படி ஒரு காலம் வரும் போது அரசியல் எண்ட்ரியும் நடக்கும். ஆனால் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அரசியல் மீது விருப்பம் இருக்கிறது. அதில் உறுதியாக இருக்கேன். ஆனா அதுக்கான நேரம் இது கிடையாது. நேரம் வரும் போது நான் வருவேன்.

    அப்போ நான் வருவேன். இது அதுக்கான நேரம் இல்லை. பில்டப் செய்து எழுதுவதால் வர முடியாது. என்னுடைய பேஸை வலுப்படுத்தணும். ரசிகர் மன்றத்தினை மக்கள் இயக்கமாக மாற்றி வலுப்படுத்திக்கொண்டே இருக்கேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படி அவர் சொல்லியது போலவே இன்று அதற்கான அறிவிப்பு வந்துவிட்டது என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

     

    அந்த வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=6BMmBY3u14A

  • இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. இதத்தான் கமலும் சொன்னாரு.. என்ன செய்வார் விஜய்!?…

    அப்பா சந்திரசேகர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து அதன்பின் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி இப்போது ஒரு மாஸ் ஹீரோவாகவும் மாறியிருக்கிறார். அவரின் சம்பளம் ரூ.250 கோடிக்கும் மேல் அதிகரித்திருக்கிறது. அவர் 300 கோடி கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

    ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர் அரசியலுக்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறிவைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. அவரை காப்பாத்தணும் கர்த்தரு!.. கடைசியா கட்சியை அறிவித்த விஜய்!..

    அப்படி எதிர்பார்த்ததே இப்போது நடந்திருக்கிறது. தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என அறிவித்திருக்கிறார். இது அவரின் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகமெங்கும் உள்ள மன்ற நிர்வாகிகள் இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் விஜயின் அரசியல் வருகையை கொண்டாடி வருகின்றனர்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது எனவும், 2026ம் வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை நமது இலக்கு எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் விஜய் கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: இந்த முறையாவது சந்தானம் சிரிக்க வைத்தாரா?.. வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம் இதோ!..

    அதேநேரம், அந்த அறிவிப்பில் தற்போது நடித்து வரும் படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விஜயின் அரசியல் எண்ட்ரியை அவரின் ரசிகர்கள் விரும்பினாலும் திரையில் அவரை நடிகராக பார்க்கவே அவரின் ரசிகர்கள் விரும்புவார்கள்.

    அதேநேரம், அரசியல் கட்சி துவங்கும்போது கமலும் இப்படித்தான் சொன்னார். ஆனால், அவர் எதிர்பார்த்த ஓட்டு விழவில்லை என்றதும் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். இப்போது அவரின் கையில் 5 படங்கள் இருக்கிறது. விஜய்க்கு என்ன நடக்கும்?. அவருக்கு ஓட்டுக்கள் விழுமா? மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? என்பதையெல்லாம் மக்களே தீர்மானிப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இதையும் படிங்க: 33 வருஷம் கழிச்சு ரி எண்ட்ரி ஆகும் செண்பகம்! அப்ப விட்டத இப்ப பிடிப்பேன்! விஜய், அஜித் எல்லாம் ரெடியா இருங்க