Tag: நடிகர் அஜித்

  • சிவாஜி புரடெக்‌ஷனில் அஜித்தா? ஏற்கனவே பட்டது போதாதா? கண்டிசன் பேரில் நடிக்கும் தல

    நேற்று சமூக வலைதளங்களில் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் பற்றிய செய்தி தான் வைரலானது. அதாவது அந்த படத்திற்காக அஜித் 180 கோடி சம்பளம் கேட்பதாகவும் அதை கொடுப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே தான் அந்தப் படத்தை ஏற்கனவே தயாரிக்க இருந்த ஐசரி கணேஷும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கி விட்டதாகவும் சொல்லப்பட்டது.

    ஆனால் உண்மையில் அஜித்தின் சம்பளம் மட்டுமே அதற்கு காரணம் இல்லை என இன்று தகவல் கிடைத்துள்ளது. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் அஜித் படத்தை தயாரிக்க முன் வராததற்கு காரணம் அஜித் சில கண்டிஷன்கள் போட்டிருக்கிறாராம். அந்த கண்டிஷனாலதான் தயாரிப்பு நிறுவனங்கள் அவருடைய படத்தை தயாரிக்க முன்வர தயங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.

    அதில் முதல் கண்டிஷன் அஜித் தனக்கு முன்பணமாக பெரும் தொகையை எதிர்பார்க்கிறாராம். வழக்கமாக 50 சதவீதம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு மீதி 50 சதவீதம் தொகையை மாதம் 5 கோடி என்ற அளவில் அவர் சம்பளமாக பெற்றுக்கொள்வார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெரும் தொகையை முன்பணமாக கேட்கிறாராம். மீதி தொகையை போஸ்ட் டேட்டட் செக்காக அதை முன்னாடியே கொடுத்து விடும்படி கேட்கிறாராம்.

    குறிப்பிட்ட தேதியில் அந்த செக்கை ஹானர் பண்ண முடியவில்லை என்றால் அது கிரிமினல் வழக்காக முடிந்துவிடும். அந்த ஒரு பயத்தினால் கூட தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை தயாரிக்க முன் வருவதற்கு தயங்குவதாக சொல்கிறார்கள். அடுத்த கண்டிஷன் என்னவெனில் மொத்த பணத்தையும் ஷூட்டிங் முடிவதற்குள் கொடுத்து விட வேண்டுமாம் .சில பேர் ஷூட்டிங் சமயத்தில் பாதி பணத்தை வாங்கிக் கொண்டு டப்பிங் முடிந்த பிறகு தான் மீதி பணத்தையும் வாங்குவார்கள்.

    ஆனால் அஜித் மொத்த பணத்தையும் ஷூட்டிங் முடிந்ததும் கொடுத்து விட வேண்டும் என கேட்கிறாராம். இந்த கண்டிஷன்களால் தான் தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குவதாக தெரிகிறது. இதில் ஆதிக்கும் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை எந்த தயாரிப்பு நிறுவனங்களும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றால் அது அஜித் போன்ற பெரிய நடிகருக்கு தான் அவமானமாக இருக்கும்.

    இதை மனதில் வைத்துக் கொண்ட ஆதிக் தனது மாமனார் பிரபுவின் சிவாஜி ப்ரொடக்ஷன் மூலமாக இந்த படத்தை தயாரிக்கலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து சிவாஜி ஃபிலிம்ஸ் அசல் என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்தப் படம் அவர்களுக்கு எதிர்பார்த்த வசூலை பெற்று தரவில்லை .இருந்தாலும் ஆதிக் இதைப்பற்றி தனது மாமனார் வீட்டில் பேசி படத்தை தயாரிக்க அனுமதி வாங்குவார் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.

  • அஜித்திடம் இப்படி ஒரு மாற்றமா? வாய்ப்பே இல்லையே? உண்மையில் என்னதான் நடக்குது?

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேக் அக்லி. இந்தப் படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸிலும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக்குடன் தான் இணைவார் என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது. ஆனால் அவருடைய லிஸ்ட்டில் ஏகப்பட்ட இயக்குனர்கள் இருந்தாலும் ஆதிக்தான் அஜித்தின் சாய்ஸாகவும் இருந்தது.

    தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரமாக இருப்பதால் எல்லாம் முடிந்து செப்டம்பரில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். ஆரம்பத்தில் குட் பேட் அக்லி டீம் தான் மீண்டும் இணைகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் ஆதிக்கிற்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் ஆதிக் அஜித் இணையும் திரைப்படத்தை மைத்ரி மூவி தயாரிக்காது என்றும் தகவல்கள் வெளியானது.

    இன்னொரு பக்கம் யாருமே இந்தப் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றால் தன் மாமனரான பிரபுவையே இந்தப் படத்தை எடுக்க சொல்லலாம் என்றும் ஆதிக் நினைத்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் கடைசியில் இந்தப் படத்தை வினியோகஸ்தர் ராகுல்தான் தயாரிக்கிறாராம். அஜித் படம் என்றால் அவருடைய சம்பளம் சேர்த்து மொத்த பட்ஜெட் 300 கோடியை தொட்டு விடும்.

    ஒரு சாதாரண வினியோகஸ்தரால் எப்படி 300 கோடி பட்ஜெட் போட்டு படம் எடுக்க முடியும் என்ற வகையிலும் பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதில்தான் சின்ன டிவிஸ்டே இருக்கிறது. இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் உரிமையை மட்டும் ராகுல் எடுக்கிறாராம். மற்ற சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை அஜித் வாங்கலாம் என்று ராகுல் சொன்னதாக தெரிகிறது.

    இதற்கு அஜித்தும் சம்மதித்தாகவே தெரிகிறது. இதுதான் பெரிய ஆச்சரியம். ஆக டிஜிட்டல் , சாட்டிலைட் உரிமைகளை விற்று அவருடைய சம்பளத்தை அஜித் எடுப்பார் என்பதுதான் இதில் சொல்லப்படும் விஷயம். ஆனால் இதுவரை அஜித் இப்படி செய்ததே கிடையாதே? அப்படி இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதெல்லாம் சும்மாதான். 300 கோடி போட்டு ராகுல் படம் எடுக்கிறார் என்று தெரிந்தால் பல கேள்விகள் எழலாம். அதனால் இந்த பிரச்சினை எல்லாம் வரக்கூடாது என்பதற்காக கூட ராகுல் இந்த மாதிரி சொல்லியிருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.

  • அஜித்த தேடி பிடிச்சதே சுவாரஸ்யமான சம்பவம்! ஆசை படம் உருவான கதை

    தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித். அமராவதி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்து படிப்படியாக முன்னேறி இன்று மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். இது அவருடைய உழைப்புக்கு கிடைத்த பலன் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தானே கடினமாக உழைத்து விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இன்று ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிறார் அஜித்.

    மற்ற நடிகர்களை விட அஜித் மிகவும் வித்தியாசமானவர். அது அனைவருக்குமே தெரியும். தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய ஒரே பேஷன் இந்தியா சார்பில் கார் ரேசில் கலந்துகொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். அதற்கு வயது எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்பதை நிரூபித்து இருக்கிறார் அஜித்.

    சினிமாவில் எப்பொழுது அவர் அறிமுகமானாரோ அதற்கு முன்பிருந்தே ரேசில் அவருக்கு ஆர்வம் உண்டு .அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து தன்னுடைய பேஷனை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் இன்று அதை வெற்றியுடன் பயணித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வசந்த் ஆசை படத்தில் எப்படி அஜித்தை உள்ளே கொண்டு வந்தோம் என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

    அதுவரை வசந்துக்கு அமராவதி படத்தில் அஜித் நடித்திருக்கிறார் என்று தெரியாதாம். இந்த படத்திற்கு ஒரு அழகான முகமாக இருக்க வேண்டும் என தேடுதல் படலத்தை தொடங்கி இருக்கிறார்கள் .அந்த நேரத்தில் தூர்தர்ஷனில் வீணா வேஷ்டி என்ற விளம்பரத்தில் அஜித் படியிலிருந்து இறங்கி வருவார். அதைப் பார்த்த வசந்த் இந்த பையன் தான் வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் இவர் அமராவதி படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறினார்களாம் .அப்போது வரைக்கும் வசந்த் அமராவதி படத்தை பார்க்கவே இல்லையாம். அதன் பிறகு தான் அந்த படத்தையும் பார்த்துவிட்டு அஜித்தை ஆசைப்படத்திற்காக அணுகினோம் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

  • அந்த ஹீரோயின் வேணும்னு சொல்ல தெரியுது.. இது தெரியலயா? அஜித்தை கலாய்த்த கே.ராஜன்

    தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது அவர் தன்னுடைய ஒரே ஃபேஷனான கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அக்டோபர் மாதம் வரை தனது முழு கவனத்தையும் ரேஸில்தான் செலுத்த இருக்கிறார் அஜித். அதன் பிறகு தான் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார்.

    இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டர் வெற்றியும் அடைந்தது. இந்தப் படத்திற்கு முன்பு வரை அஜித் தன்னுடைய படங்களின் பெயர்களை தமிழிலேயே வைத்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியிலும் சரி திரை பிரபலங்கள் மத்தியிலும் சரி அஜித் மீது ஒரு பெரிய மரியாதையை கொடுத்தது.

    இந்த நிலையில் குயிலி என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் படத்திற்கு தமிழ் பெயர் கொடுப்பதற்கான முக்கியத்துவத்தை பற்றி பேசி இருந்தார். ஒரு காலத்தில் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்து வந்த நிலையில் கருணாநிதி இனிமேல் தமிழ் பெயர்களில் வெளியாகும் படங்களுக்கு மானியம் கிடைக்க ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

    அதிலிருந்து தமிழிலேயே படங்களின் பெயர்கள் வெளியாகின. அதில் அஜித்தும் தன்னுடைய படங்களின் பெயரை தமிழிலேயே கொண்டு வந்தார். ஆனால் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி. அது என்ன பெயர்? அந்த ஹீரோயின் வேணும் என்று மட்டும் சொல்ல தெரிகிறது. இது அவருக்கு சொல்ல தெரியலையா .இங்கிலீஷில் டைட்டில் வைக்காதீங்க என சொல்ல வேண்டியது தானே.

    இன்னொரு ஹீரோ இப்போது பொதுநலத்திற்கு வருகிறார். அவருடைய படங்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் தான் வந்தன. சர்க்கார் என்று சொன்னார். ஏன் அதற்கு தமிழ் பெயர் இல்லையா. இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வந்துவிட்டார். சரி அரசியல் இப்போது வேண்டாம். அதனால் இனிமேல் தமிழிலேயே பெயர்களை வைக்க முன்வர வேண்டும் என தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார் கே ராஜன்.

  • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அஜித்தா? ஆர்வத்தில் சந்தோஷ் நாராயணன் சொன்னத கேளுங்க

    அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முன் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எந்த அளவு அஜித் ரசிகர்களை ஏமாற்றியதோ அதற்கு இரு மடங்காக குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படமாகவே அது அமைந்தது தான் சிறப்பு.

    ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர் என்பதாலும் அஜித் மீது தீவிர அன்பு கொண்டவர் என்பதாலும் இந்த படத்தில் அஜித்தை அணு அணுவாக ரசித்து நடிக்க வைத்து படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறார் .கூடவே ஜீவி பிரகாஷ் இசை கூடுதல் பலமாக இருந்தது. இந்த படத்தை முடித்த கையோடு அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ள சென்று விட்டார். இப்போது உலகெங்கிலும் நடைபெறும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார் அஜித்.

    அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர் .இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றன.

    இதைப் பற்றி சந்தோஷ் நாராயணனிடம் அஜித் கார்த்திக் சுப்பாராஜ் இணைவதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அப்படி இருந்தால் நீங்களும் அதில் இருப்பீர்களா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு சந்தோஷ் நாராயணன் கண்டிப்பாக அப்படி நடந்தால் முதல் ஆளாக துண்ட போட்டு நான் போய் உட்கார்ந்து விடுவேன். ஒரு ஃபேன் பாயாக அந்த படத்தில் என்னுடைய பங்கும் இருக்கும். ஆனால் கதைக்கு ஏற்ப அவர்கள் யாரை அணுகுகிறார்களோ அப்படித்தானே அமையும் என சந்தோஷ நாராயணன் பதில் அளித்து இருக்கிறார்.

  • அஜித்தை பார்த்து நம்பியார் சொன்ன வார்த்தை.. இப்ப அது நடந்து போச்சே

    பொதுவாக ஒருவரை பார்த்ததும் ஏதாவது ஒரு வகையில் அவரை பற்றிய யூகத்தை நம் மனதில் ஏற்றி வைத்துவிடுவோம். ஒருவேளை அப்படிப்பட்டவராக இருப்பாரோ அல்லது இப்படிப்பட்டவராக இருப்பாரோ என பார்த்த உடனேயே யூகித்துவிடுவோம். அப்படித்தான் பழம்பெரும் நடிகரான எம்.என். நம்பியாரும் அஜித்தை பற்றி வருங்காலத்தில் இப்படித்தான் இந்த பையன் வருவான் என அப்பவே சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் நம்பியார். இவரை செல்லமாக நம்பியார் சாமி என்றுதான் அழைப்பார்கள். ஐயப்பன் கோவிலுக்கு பல வருடங்களாக மாலை போட்டு விரதம் இருந்து தரிசித்து வந்தார். குருசாமியாகவே இருந்தார் நம்பியார். இவரை பின்பற்றியே இன்று பெரும்பாலான நடிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஐயப்பனுக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர்.

    எம்ஜிஆரின் ஆஸ்த்தான் வில்லன் நம்பியார். எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் நம்பியார் இருப்பார். நம்பியார் இல்லையென்றால் அது எம்ஜிஆர் படமே இல்லை என்று சொல்லமளவுக்கு அவருடைய முக்கியத்துவம் அந்தப் படத்தில் இருக்கும். எம்ஜிஆரும் நம்பியாரும் வாளை எடுத்து சண்டை போட ஆரம்பித்துவிட்டால் திரையே கிழிந்து விடும். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை திரையில் காண்பிப்பார்கள்.

    ஆனால் நிஜத்தில் நெருக்கமான நண்பர்களாகத்தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை கண்டிருக்கிறார் நம்பியார். விஜயின் படங்களில் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார். பூவே உனக்காக படத்தில் அவருடைய காமெடி ரசிக்கும்படியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு தாத்தா நம் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல வைத்தார்.

    இந்த நிலையில் நம்பியாரின் பேரன் ஒரு பேட்டியில் நம்பியார் அஜித்தை பார்த்து ஒரு வார்த்தை சொன்னார் என்பதை பற்றி கூறியிருக்கிறார். அஜித்தின் ஒரு படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நம்பியார் நடித்தாராம். அப்போது அஜித்திடமும் பேசியிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும் இன்று ஒரு பையனை பார்த்தேன். அவர் கண் நன்றாக இருந்தது. வருங்காலத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு வருவான் என்று சொன்னாராம்.

    ajith

    ajith

    இதை கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் அஜித்தை பார்த்த போது நம்பியாரின் பேரன் அவர் சொன்னதை சொல்லியிருக்கிறார். உடனே அஜித் ‘அப்படியா. ரொம்ப சந்தோஷம்’ என நம்பியாரை பார்த்த அனுபவத்தை பற்றி அஜித்தும் பேசி சந்தோஷப்பட்டுக்கொண்டாராம்.

  • கடைசியில் இவர்கிட்ட மாட்டிக்கிட்டியே பங்கு!.. அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர்தான்..

    Ajith: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் மாபெரும் வெற்றி அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்பது பற்றிய பேச்சு தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் தெரியும் என சொல்லப்பட்டது.

    குட் பேட் அக்லி வெற்றி:

    ஆனால் அதற்குள்ளாகவே கோடம்பாக்கத்தில் இருக்கும் சிலர் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் யார் என்பதை ஆராய்ந்து ஓரளவு அறிந்து கொண்டனர். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என ஓரளவு உறுதிப்பட தெரிந்து விட்டது. ஆரம்பத்தில் குட் பேட் அக்லி படத்தின் மொத்த டீமும் அப்படியே அஜித்தின் அடுத்த படத்தில் இணைவார்கள் என சொல்லப்பட்டது.

    அதாவது படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என இவர்கள் அப்படியே அஜித்தின் அடுத்த படத்திலும் இருப்பார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் குட்பேட்அக்லி படத்தின் போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தில் இருந்தால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்காது அல்லது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பதாக இருந்தால் அந்த படத்தை ஆதிக் இயக்க மாட்டார் என சொல்லப்பட்டது.

    தயாரிப்பாளர் இவரா?:

    ஆனால் இப்போது அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் தான் இயக்கப் போகிறார் என ஓரளவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். அதனால் தயாரிப்பாளர் யார் என்பது போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. கடைசியில் இதற்கான ஒரு விடை இப்போது தெரிந்திருக்கிறது. அஜித்தின் அடுத்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. அதுவும் இந்த வருடம் நவம்பரில் இருந்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை அஜித் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

    அடுத்தப் பட ரிலீஸ்:

    மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் அவர் கார் ரேசில் கலந்து கொள்ளப் போகிறாராம். அதனால் அந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தின் போர்ஷன் எல்லாவற்றையும் முடித்து விட வேண்டும் என அஜித் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நாட்களில் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆதிக் எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது .ஆக மொத்தம் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் அந்த படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் பட குழு இருப்பதாக தெரிகிறது.

    isari

    isari

    இதற்கிடையில் ஐசரி கணேஷை பொருத்தவரைக்கும் ஒரு நடிகரை அவர் கமிட் செய்து விட்டால் தொடர்ந்து அவருடைய நிறுவனத்தில் மூன்று படங்களில் அவர் நடிக்க வேண்டும். ஏற்கனவே சிம்பு பிரதீப் ரங்கநாதன் இவர்கள் விஷயத்தில் இப்படித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அவர்கள் இருவராலும் தொடர்ந்து அவருக்கு கால் சீட் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட அது தயாரிப்பு கவுன்சில் வரைக்கும் புகாராக சென்றது. இப்போது அஜித் இவருடைய நிறுவனத்தில் நடிக்கப் போகிறார் என்றதும் அஜித்தும் தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிப்பாரா என்ன என்பது பற்றிய கேள்விதான் இப்போது எல்லோரும் மனதிலும் இருந்து வருகிறது.

  • அஜித் மாதிரியே சிம்புவுக்கும் கிடைச்சிருக்கு! god’s கிஃப்ட்தான்.. ஞானவேல்ராஜா சொன்ன விஷயம்

    ட்ரோலுக்கு ஆளான ஞானவேல்ராஜா:

    தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக மாறி இருக்கிறார் ஞானவேல் ராஜா. சூர்யாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவருக்கு மட்டுமல்ல சூர்யாவின் குடும்பத்திற்கே நெருக்கமான ஒரு நபர்தான் ஞானவேல் ராஜா. சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரின் படங்களை பெரும்பாலும் தயாரிப்பதும் இவர்தான். கங்குவா திரைப்படத்தை மிகப்பெரிய பொருள் செலவில் எடுத்து அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி பெரிய அளவில் பேசி பேசி ஒரு ஹைப்பை ஏற்றி கடைசியில் மிகப்பெரிய ட்ரோலுக்குஆளாகினார் ஞானவேல் ராஜா.

    கணக்கிட முடியாத லவ்:

    இந்த நிலையில் அஜித் மற்றும் சிம்பு ஆகிய இருவரை பற்றி அவர் பேசிய ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக அஜித் ரசிகர்களை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார் ஞானவேல் ராஜா .அஜித் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் லவ் எப்படிப்பட்டது என்று சொல்ல முடியாது .அதை நம்மால் கணக்கிட கூட முடியாது. அந்த அளவுக்கு ஒரு லவ் வைத்திருக்கிறார்கள் .

    கடவுளின் ஆசி:

    நான் ஒரு ஜிம்முக்கு போவேன். அங்கு இருக்கும் ஒரு ட்ரெய்னர் என்னிடம் வந்து தினமும் அடுத்த படம் கண்டிப்பாக ஹிட்டு தானே சார் என அஜித் படத்தை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு அஜித்தை தன் குடும்பத்தில் இருக்கும் ஒருவராக ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். அதே மாதிரி தான் சிம்புவின் ரசிகர்களும் சிம்பு மீது அதிக அளவு அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறார்கள். இது கடவுளின் ஆசிதான் என ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.

    அந்த பழக்கமே கிடையாது:

    இவர் சொல்வதைப் போல விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் ரசிகர் மன்றங்களை வைத்து அந்த ரசிகர் மன்றத்திற்கு விஜய் அவரால் முடிந்த ஏதாவது உதவிகளை செய்கிறார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார். புகைப்படங்கள் எடுக்கிறார். அந்த ஒரு அன்பினால் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருக்கலாம். ஆனால் அஜித்தை பொருத்தவரைக்கும் ரசிகர் மன்றத்தையே கலைத்து இதுவரை தனியாக ரசிகர்கள் சந்திப்பு கூட்டம் என்று அவர் நடத்தியதே கிடையாது.

    என் தல போல வருமா?:

    ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் பழக்கமும் அவருக்கு கிடையாது. அப்படி இருந்தும் என் தல போல வருமா என ஒவ்வொரு ரசிகரையும் சொல்ல வைக்கிறார் என்றால் இது எப்பேர்பட்ட லவ் என்று தெரியாது. உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் எங்கு போனாலும் அவரைப் பார்க்க ஒரு கூட்டம் கூடி விடுகிறது. அவருடன் சேர்ந்து புகைப்படத்தை எடுக்க ஆர்வமாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    ajith_simbu

    ajith_simbu

    அவர் நடித்த படம் ஹிட்டோ தோல்வியோ அதைப் பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை கிடையாது .அஜித்தை திரையில் பார்க்கிறோம். அவரைக் கொண்டாடுகிறோம். அவ்வளவுதான் என ஒவ்வொரு ரசிகரும் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். இப்படி உள்ள ரசிகர்கள் தான் சிம்புவுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர் என்பதை சொல்ல வருகிறார் ஞானவேல் ராஜா.

  • போனியே ஆகாத படத்துக்கு இவ்ளோ பில்டப்பா? கூலியை ஓரங்கட்டிய ஜனநாயகன்

    கடந்த இரண்டு தினங்களாக கூலி திரைப்படத்தை பற்றி பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதெல்லாம் உண்மை அல்ல என்று வலைப்பேச்சில் இன்று கூறி இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் கூலி. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கின்றது. அதற்கான புரமோஷன் வேலைகள் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

    இன்னொரு பக்கம் நாகர்ஜூனா குபேரா படத்தின் ப்ரோமோஷனில் கூலி படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அசால்டாக கூலி படத்தில் நான் என்ன கேரக்டரில் நடிக்கிறேன். எத்தனை காட்சிகளில் வருகிறேன் என்றெல்லாம் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .அது மட்டுமல்ல கூலி திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை நாகர்ஜூனா மற்றும் சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இரண்டு பேரும் சேர்ந்து தான் வாங்கி இருக்கிறார்களாம் .சுமார் 43 கோடி விலைக்கு கூலி திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை நாகர்ஜுனா கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கூலி திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமை பற்றிய செய்தி இரண்டு தினங்களாக வைரலாகி வருகின்றன. ஒரு சில பேர் 73 கோடிக்கும் இன்னும் சில பேர் 80 அல்லது 81 கோடிக்கும் விற்றிருப்பதாக செய்திகளில் பதிவிட்டு வந்தனர். ஆனால் உண்மையிலேயே கூலி திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றும் முயற்சியில் இரண்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஃபார்ஸ் நிறுவனமும் ஐங்கரன் நிறுவனமும் அதற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதில் ஃபார்ஸ் நிறுவனம் 71 கோடிக்கும் ஐங்கரன் நிறுவனம் 73 கோடிக்கும் விலை பேசி இருப்பதாக தெரிகிறது.

    கூலி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதால் அதே தேதியில் வார் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கின்றது. கிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் வார் 2. ஓவர்சீஸை பொறுத்தவரைக்கும் எப்பொழுதுமே ஹிந்தி தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும். அந்தப் படம் வருவதனால் கூலிக்கு பெரிய அளவு விலை கிடைக்கவில்லை என தற்போதைய தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இது எல்லாமே தெரியாமல் ரசிகர்கள் ஒரு ஆர்வக்கோளாறில் அவரவர் மனதிற்கு தோன்றிய தொகையை போட்டு பத்திரிகைகளில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

    இன்னொரு பக்கம் ஜனநாயகனை விட கூலி திரைப்படம் பெரிய பிசினஸ் ஆகிவிட்டன என்பதை காட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஜனநாயகன் படம் ஓவர்சீஸ் பிசினஸில் மிகப்பெரிய பெஞ்ச் மார்க்கை கிரியேட் செய்திருப்பதாக தெரிகிறது. 80 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் ஓவர்சீஸ் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது .

    இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து மலேசியா நிறுவனம் அதனுடைய மலேசியா தியேட்டரிக்கல் உரிமையை 12 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை மலேசியாவில் இவ்வளவு விலை கொடுத்து எந்த ஒரு தமிழ் படத்தையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக ஜனநாயகன் திரைப்படம் தான் மலேசியாவில் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது.

  • ஒரு போட்டோவுக்கே பத்திக்கிச்சு! ரெண்டு பேரும் ஒரே ஸ்கிரீன்ல வந்தா? ஏகே 64 மாஸ் அப்டேட்

    குட் பேட் அக்லியின் தாக்கம்:

    தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்தி தான் நாளுக்கு நாள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ,திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அந்த படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக மாறி மாபெரும் வெற்றியை பெற்றது. அஜித் கெரியரில் இந்த படம் தான் தி பெஸ்ட் படமாகவும் அமைந்தது. இன்னும் அந்த படத்தின் தாக்கத்திலிருந்து அஜித் ரசிகர்கள் விடுபடவில்லை.

    பில்லா படத்திற்கு பிறகு நடந்த மேஜிக்:

    பில்லா படத்தை எந்த அளவு கொண்டாடினார்களோ அதற்கு அடுத்தபடியாக ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளது. குட்பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. அஜித்தின் கெரியரில் 200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்றால் இதுதான் முதல் திரைப்படமாகும். அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் அஜித் இணையப் போகிறார் என சொல்லப்படுகிறது.

    அஜித்தின் சம்பளம்:

    அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. அதற்குள் அஜித் அவருடைய கார் ரேஸ் எல்லாம் முடித்துவிட்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அடுத்த படத்திற்கான வேலையில் கவனம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கப் போவதாகவும் தெரிகிறது. இதனுடைய பட்ஜெட் அஜித்துக்கு கொடுக்கப்படக்கூடிய சம்பளம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

    சூப்பர் ஸ்டார்:

    இந்த படத்திற்கு அஜித்துக்கு 180 கோடி சம்பளம் என பேசப்பட்டிருக்கிறதாம். இதற்கு முன்பு குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருடைய சம்பளம் 163 கோடி அதை விட கூடுதலாக இந்த படத்திற்கு வழங்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இந்த படத்தில் 12 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    mohan

    mohan

    இது தொடர்பாக அவரிடம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பொழுது மோகன்லாலை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என அப்போதே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவருடைய 64வது படத்தில் இது நடந்தால் இது வேறொரு படமாக மாறும். அதுவும் ஆதிக் இயக்கத்தில் எனும் போது இன்னும் இந்த படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.