Tag: நடிகர் கமல்

  • முதலில் நடிக்க மறுத்து பின் ஆர்வம் காட்டிய ரஜினி.. கடைசியில் கமலிடம் சென்ற அந்த ப்ராஜக்ட்

    தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். கிட்டத்தட்ட இவர்களுக்கு இடையில் 40 ஆண்டுகால நட்பு. ஆரம்பத்தில் பல படங்களில் இருவரும் ஒன்றாகவே நடித்து வந்தனர். கிட்டத்தட்ட 16 படங்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். அவர்கள் இணைந்து நடித்த அத்தனை திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். மீண்டும் இவர்கள் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற ஒரு ஆர்வத்தை இப்போது வரை இவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் ஒரு கட்டத்தில் இருவருமே சேர்ந்து இனிமேல் நாம் இணைந்து படம் நடிக்க வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மார்க்கெட் வந்துவிட்டது. அதனால் இணைந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவெடுத்த பிறகு அதை இப்போது வரை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் பல இயக்குனர்கள் எப்படியாவது இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர்களிடமே கேட்டிருக்கின்றனர். இதுவரை எந்த பதிலும் ரஜினி கமல் இடம் இருந்து வரவில்லை. இதில் ரஜினிக்கு சீனியர் கமல். கிட்டத்தட்ட அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    ரஜினி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கமலை விட அதிக புகழையும் பெயரையும் கொண்டவராக ரஜினி விளங்குகிறார். இருவருக்குள்ளும் தொழில் முனையில் போட்டியிருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் .தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கிடையே நட்பு என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் ரஜினி கமலை பொறுத்தவரைக்கும் அன்றிலிருந்து இன்று வரை நட்புக்கு அடையாளமாக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். அதை பல மேடைகளில் அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கின்றனர்.

    இந்த நிலையில் பாபநாசம் படம் குறித்த தகவலை அந்த படத்தின் இயக்குனர் ஜித்து ஜோசப் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம். இது 2015 ஆம் ஆண்டு வெளியானது .முதலில் இந்தப் படத்தில் ரஜினியை நடிக்க வைக்க தான் இயக்குனர் ஆசைப்பட்டிருக்கிறார். இந்த கதையை ரஜினியிடமும் போய் சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு இந்த கதை மிகவும் பிடித்து போய் இருக்கிறது.

    papanasam

    papanasam

    ஆனால் அந்த படத்தில் வரும் போலீஸ், காவல் நிலையம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரஜினியின் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம் என நினைத்து முதலில் ரஜினி அதை மறுத்து விட்டாராம் .அதன் பிறகு தான் கமல் உடனடியாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கமல் ஒப்பந்தமாகிவிட்டார் என்று தெரியாமல் அந்த படத்தின் கதையால் ஈர்க்கப்பட்ட ரஜினி நான் இதில் நடிக்கிறேன் என கூறினாராம். அதன் பிறகு கமல் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்று சொன்னதும் ஓகே பரவாயில்லை ஆல் தி பெஸ்ட் என்று மிகவும் பணிவுடன் கூறினாராம் ரஜினி.

  • மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ணதில்ல.. ‘கூலி’ படத்தில் கமல் சிபாரிசு செய்த நடிகர்

    ரஜினி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், சுருதிஹாசன் என எண்ணற்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னாடி படத்தின் ப்ரிவியூ ஈவண்டை நடத்த படக்குழுவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    லோகேஷ் படம் என்றாலே கேங்ஸ்டர், வன்முறை என ஒரு பெரிய கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் ரனியை வைத்து பக்கா கமெர்ஷியல் பேக்கேஜாக இந்தப் படத்தை லோகேஷ் கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பெரிய ஸ்டார்க்ள் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் கூலி படம் 1000 கோடியை நெருங்குமா என்றும் ஆரவமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏனெனில் கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்கள் 1000 கோடியை அசால்ட்டாக தொட்டு விட்டன. ஆனால் பெரிய சூப்பர்ஸ்டார்கள் கோலிவுட்டில் இருந்தும் இன்னும் அந்த வசூலை தொடவில்லை. கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்தான் 600 கோடிக்கும் மேலாக வசூல் செய்து பெரிய சாதனையை பெற்றது.

    அதனால் 1000 கோடியை ரஜினியின் கூலி படம்தான் நெருங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கூலி படத்தில் எம்ஜிஆரின் வளர்ப்பு பேரன் ஜூனியர் எம்ஜிஆர் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அவரை சிபாரிசு செய்ததே கமல்தானாம்.

    விக்ரம் படத்தின் போதே லோகேஷிடம் ஜூனியர் எம்ஜிஆரை சிபாரிசு செய்திருக்கிறார் கமல். ஏதாவது கேரக்டர் வந்தால் சொல்கிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். அதன் பிறகு லியோ படமும் வந்து லோகேஷ் இவரை அழைக்கவே இல்லையாம். ஆனால் லோகேஷுடன் தான் ஜூனியர் எம்ஜிஆர் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவாராம். அப்போது வாய்ப்பு பற்றி கேட்டிருக்கிறார் ஜூனியர் எம்ஜிஆர்.

    junior mgr

    junior mgr

    மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ண மாட்டார். உன்னை பண்ணியிருக்கிறார். மறப்பேனா? கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் கூலி படத்தில் ஜூனியர் எம்ஜிஆருக்கு வாய்ப்பு கொடுத்தாராம் லோகேஷ்.

  • தன்னிடம் வேலை பார்ப்பவர்களை கமல் இப்படித்தான் நடத்துவார்! இத எதிர்பார்க்கலயே

    கமல் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை எப்படி நடத்துகிறார் என்பதைப் பற்றி ஒரு பிரபல இயக்குனர் பேட்டியில் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருடைய படங்கள் பெரும்பாலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆகவே இருந்து வருகின்றன. கமலுக்கு முன்பு எப்படி சிவாஜியை ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக பார்த்தோமோ அதைப்போல அடுத்த தலைமுறை நடிகர்கள் கமலை பார்த்து வருகின்றனர்.

    அவருடைய ஒவ்வொரு படங்களும் மற்றவர்களுக்கு பாடமாகும். அவருடைய பெரும்பாலான படங்கள் பல விருதுகளை வென்று இருக்கின்றன. ஒவ்வொரு படங்களுக்கும் அவர் போடும் உழைப்பு மற்றவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. விதவிதமான வேடங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை நடிப்பில் அவரை மிஞ்சிய நடிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

    சினிமாவில் அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. சினிமாவில் உள்ள அத்தனை துறைகளையும் கரைத்து குடித்தவர் கமல். ஒரு என்சைக்ளோபீடியா என்றே சொல்லலாம். அவரிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு உலக அறிவும் வாய்க்கப் பெற்றவர் கமல். தற்போது பாராளுமன்ற எம்பி ஆகி இருக்கிறார். அது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை எப்படி நடத்துகிறார் என்பதை பற்றி பிரபல இயக்குனர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .

    விஸ்வரூபம் படத்தின் போது பாரதி கண்ணனுக்கு கமல் தரப்பிலிருந்து 10 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது விஸ்வரூபம் படத்தில் ஆரம்பத்தில் ஒரு சண்டை காட்சி இருக்கும். அந்த சண்டைக் காட்சியை பாரதி கண்ணனுக்கு உறவினரான ஒருவரின் குடோனில் தான் படமாக்க்கியிருக்கிறார்கள். அப்போது அதை கவனித்துக் கொண்டிருந்தவர் பாரதி கண்ணன். அதனால் பத்து நாட்கள் அந்த குடோனில் அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

    bharathikannan

    bharathikannan

    நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் 10 லட்சம் வாடகையாக கொடுத்தார்களாம். அதில் பாரதி கண்ணன் ‘சரி 10 லட்சம் வாங்கி விட்டோம். அதில் ஒரு லட்சத்தை கமலின் மேனேஜருக்கு கொடுக்கலாம்’ என அந்த மேனேஜரை தனியாக அழைத்து ஒரு லட்சம் நீ வைத்துக் கொள் என கூறி அதை கொடுத்து இருக்கிறார். அதற்கு அந்த மேனேஜர் அதை வாங்க மறுத்தாராம். ஏனெனில் கமல்சார் எங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார். ஒன்றாம் தேதி ஆனால் போதும் சம்பளத்தை சரியாக கொடுத்து விடுவார் .அவர் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்று கமலை பற்றி புகழ்ந்து கூறினாராம் அந்த மேனேஜர்.

  • ‘பார்க்கிங்’ பட க்ளைமாக்ஸுக்கும் கமலுக்கும் இருக்கிற சம்பந்தம்! அவார்டு வாங்காம இருக்குமா?

    பார்க்கிங் படத்திற்கு சிறந்த படம் என்ற அடிப்படையில் தேசிய விருது கிடைத்துள்ளது அனைவருக்குமே மகிழ்ச்சி. அதே நேரம் அயோத்தி படத்திற்கு கொடுக்கவில்லையே என்பது அதைவிட பெரிய வருத்தம். தேசிய விருது கிடைத்ததில் இருந்தே அந்தப் படத்தின் இயக்குனரை பல சேனல்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் பார்க்கிங் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி உருவானது என்பதை பற்றி கூறியிருக்கிறார்.

    மேல் கீழ் என வாடகைக்கு இருக்கும் இருவருக்கு இடையில் கார் பார்க்கிங் செய்வதில் பிரச்சினை. அதில் மிகவும் கறார் பேர் வழியாக இருக்கும் எம்.எஸ். பாஸ்கர் கடைசியில் அந்த பிரச்சினையில் ஹரீஷ் கல்யாணை கொல்ல வேண்டும் என்ற முயற்சிக்கே சென்று விடுவார். ஆனால் கடைசியில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏன் நாம் இப்படி செய்தோம் என யோசிக்கும் அளவுக்கு எம்.எஸ் பாஸ்கரின் கேரக்டர் மாறிவிடும். இது கமல் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் எடுத்தேன் என கூறியிருக்கிறார் ராம்குமார். இதோ அவரிடம் எடுத்த பேட்டி:

    பார்க்கிங் படத்தின் கிளைமேக்ஸில் ஐந்து நிமிடம் முன்னாடி வரைக்கும் இரண்டு பேரில் யாராவது காலியாக போறாங்க என்ற ஒரு மன நிலையில் தான் அந்த கதை இருந்தது. ஐந்து நிமிடத்தில் இதற்கான ஒரு முடிவை கொடுத்தாக வேண்டும் .அந்த ஒரு முடிவை எப்படி எடுத்தீர்கள்? இந்த மாதிரி பண்ணினால் ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்ற ஒரு கேள்வியை ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் தொகுப்பாளர் கேட்டார்.

    அதற்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ: ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு அந்த காட்சியில் எம் எஸ் பாஸ்கரின் கேரக்டர் அமைந்திருக்கும். என்னதான் அவரை நாம் ஆசுவாசப்படுத்தினாலும் ஆடியன்ஸ் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு போன ஒருவரை எப்படி ஆசுவாசப்படுத்தி ஒரு அமைதியான நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற மனநிலையில்தான் ஆடியன்ஸும் யோசிப்பார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம். நமக்கு பிடிக்காத ஒருத்தன், அவனுடைய குழந்தையை காப்பாத்தணும்ங்கிறது ஒன்னு இருக்கு. அவருடைய மனைவியை காப்பாத்தணும். ஒரு உயிர் உருவாவதற்கு எம்.எஸ்.பாஸ்கர் காரணமாக இருந்தார் என்பது மொத்த ஆடியன்ஸையும் கன்வின்ஸ் பண்ணி விடும் என்ற நம்பிக்கை தான் எனக்கு இருந்தது.

    அவருடைய பர்பாமன்ஸாக இருக்கட்டும், இந்துஜாவின் பர்பாமன்ஸாக இருக்கட்டும். கிளைமாக்ஸில் இதெல்லாம் சேர்ந்து ஆடியன்ஸை கன்வின்ஸ் பண்ணிவிடும் என்று நான் நினைத்தேன். அதாவது, கமல் சார் அன்பே சிவம் படத்தில் கடைசி காட்சியில் ஒருத்தனை கொல்ல வேண்டும் என வந்து அவன் கிட்ட மன்னிப்பும் கேட்பது. அதுதான் கடவுள் என்று சொல்வார்.

    அதுதான் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதுதான் இந்த படத்திலேயே அமைந்தது. எம்.எஸ்.பாஸ்கர் கடைசியில் கொல்லணும் என்ற ஒரு நிலைக்கு போய்விட்டு கடைசியில் நாம் ஏன் இந்த ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு போய்விட்டோம் என யோசிக்கும் ஒரு விஷயம் இருக்கு இல்லையா. அது ஆடியன்ஸை கன்வின்ஸ் செய்து விடும் .அதிலிருந்து எம் எஸ் பாஸ்கரின் கேரக்டரின் இமேஜ் மொத்தமாக மாறிவிடும். அந்த நம்பிக்கையில் தான் அதை வைத்தேன் என ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறினார்.

  • தமிழ் மீதான பற்று கிடையாது.. கமல் பிடிவாதத்துக்கு உண்மையான காரணம் இதுதானா?

    கமல்ஹாசனுக்கு திடீர் பிடிவாதம் எப்படி? கன்னடமா? தமிழா? என்ற கேள்வி வரும் பொழுது எனக்கு அந்த 12 கோடி போனாலும் பரவாயில்லை. நான் தமிழுக்காக நிற்கிறேன் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னார். இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது இது தமிழுக்காக நிற்பதாக எடுத்துக்க முடியாது. கமலை கூர்ந்து கவனிக்கும் போது தெரியும்.

    தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினையை பற்றி பேசும்பொழுது ஒரு தமிழனாக தன்னை அடையாளப்படுத்திப்பார். இன்னொரு பக்கம் தன்னை ஒரு இந்தியனாகவும் காட்டிக் கொள்வார். அதனால் எப்பொழுதுமே தமிழ் தேசியம் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவர்கள் தன்னை ஒரு இந்தியனாக அடையாளப்படுத்திக்க மாட்டார்கள். கமலை பொருத்தவரைக்கும் அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்.

    உதாரணமாக கேரளாவில் ஏதாவது ஒரு விழாவுக்கு போனால் நான் ஒரு பாதி மலையாளி என்பார். கர்நாடகாவுக்கு போனால் நான் கண்டனாக இருக்க பெருமைப்படுகிறேன் என்று கூறுவார். அந்த மக்களோடு கனெக்ட் ஆவதற்கான உத்தி தான் அது. நானும் உங்களை மாதிரி தான் என்பதைப் போல அவருடைய நிலைப்பாடு இருக்கும். இவர் போகும் இடம் எல்லாம் பேசுவதை வைத்து நான் புரிந்து கொண்டது என்னவெனில் கமலுக்கு தமிழ் பற்று இருந்தாலும் சீமான் போன்றவர்களுக்கு இருப்பதைப் போல ஒரு பற்று கமலுக்கு கிடையாது.

    கமல் அவருடைய கருத்துக்களுக்கு பின்வாங்க மாட்டேன். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுவது தமிழ் மீதான பற்று கிடையாது. தன்னுடைய ஈகோவை அது பாதிக்கிறது என்பது மாதிரியாக அவர் நினைக்கிறார். இதைப்பற்றி கமல் தரப்பில் விசாரிக்கும் பொழுது இன்று இதற்காக மன்னிப்பு கேட்டோம் என்றால் எதிர்காலத்தில் எல்லாத்துக்கும் யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கேளுங்கள் என்பது மாதிரி ஒரு விஷயத்தை தூக்கி கொண்டு வருவார்கள்.

    அதனால் இந்த விஷயத்தில் அவர் பிடிவாதமாக இருக்கிறார் என கூறினார்கள். இன்னொரு காரணம் அவர் ராஜ்ய சபா எம்பியாக போகும் நிலையில் மன்னிப்பு கேட்பது என்பது பொலிட்டிக்கல் ரீதியாக அவருக்கு ஒரு பின்னடைவை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் இதுதான் காரணமாக இருக்கலாம் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

  • சிம்பு படத்தை கமல் வேணானு சொன்ன காரணம்.. இப்படியொரு தியாகமா?

    தக் லைப் திரைப்படத்திற்கான புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமலை பொருத்தவரைக்கும் மற்ற நடிகர்களை விட இவர் தன் படங்களுக்கான ப்ரோமோஷனில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து படத்தை மக்கள் மத்தியில் நல்ல முறையில் கொண்டு சேர்க்கக்கூடிய நடிகர். உள்ளூர் போதாது என வெளிநாடுகளிலும் தனது படத்தை புரமோட் செய்து வருகிறார் கமல்.

    கமல் மட்டுமல்ல ஒட்டு மொத்த படக் குழுவும் புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மணிரத்தினம் ,சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா ,கமல் என ஊர் ஊராக சென்று எந்த அளவு படத்தை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டுமோ அப்படி சேர்த்து வருகின்றனர். இந்த சினிமா தன்னோடு நிற்காமல் அடுத்த தலைமுறையினருக்கும் பயன்பட வேண்டும். அதை அடுத்த தலைமுறையினரும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கமல்.

    அதனால் என்னுடைய இடத்தில் ஒரு நான்கு நடிகர்களையாவது வைத்துவிட்டு தான் இந்த சினிமாவை விட்டு விலகுவேன் என ஒரு சமயம் கூறி இருக்கிறார். இப்படி எந்த ஒரு நடிகரும் கூற மாட்டார்கள். அந்த வகையில் சிம்புவை முதல் ஆளாக இணைத்திருக்கிறார் கமல் .அது தக் லைப் திரைப்படத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த படத்தில் அவர் சொல்லும் இனிமேல் இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என்று சொல்வதில் இருந்து கமலுக்கு அடுத்தபடியான இடத்தை சிம்பு பிடிக்க இருக்கிறார் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

    இந்த நிலையில் தக்லைப் திரைப்படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ராஜ்கமல் நிறுவனம் அவருடைய ஐம்பதாவது படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தயாரிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டது ராஜ்கமல் நிறுவனம். அதன் பிறகு தான் அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கிடையில் படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இருப்பதினால் தான் கமல் அந்த படத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கினார் என்ற ஒரு தகவல் வெளியானது.

    thug life

    thug life

    ஆனால் உண்மையான காரணம் என்னவெனில் தக் லைஃப் திரைப்படத்திற்கு சிம்பு தேவைப்பட்டதால்தான் அந்த படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டு இந்த படத்தில் அவரை இணைத்துக் கொண்டோம். நாங்கள் வேண்டாம் என்று சொன்னது மிகப்பெரிய தியாகம் என ஒரு மேடையில் கூறினார் கமல். மற்றபடி இதில் வேறு எந்த காரணமும் கிடையாது என்றும் தெளிவு படுத்தினார் கமல்.

  • ரோஜா முதல் தக் லைஃப் வரை.. மணிரத்னத்திடம் மாறாத ஒரு விஷயம்.. நோட் பண்ணீங்களா?

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படைப்புகளை பிரம்மாண்டமாக தரக்கூடியவர். அதே வகையில் மணிரத்னம் தன்னுடைய படைப்பை வித்தியாசமான முறையில் எக்காலத்துக்கும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் தந்து கொண்டிருப்பவர். கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம் அதன் பிறகு தமிழில் பகல் நிலவு என்ற படத்தை இயக்கினார். அதிலிருந்து தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

    இயக்குனர்களை பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான விஷயம் என ஒன்று இருக்கும். அந்த வகையில் மணிரத்னம் படங்களில் அப்போதிலிருந்து இப்போது வரை மாறாத ஒரு விஷயம் என்னவெனில் அது திருமணம் சம்பந்தப்பட்ட பாடல். அவருடைய எல்லா படங்களையும் எடுத்துக் கொண்டால் திருமணம் குறித்து ஒரு பாடல் அமைந்திருக்கும். அதுவும் மற்ற பாடல்களை விட அந்த திருமண பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும். அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் இப்போதும் ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறி இருப்பது ரோஜா திரைப்படம் .

    அதில் அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கக்கூடிய ருக்குமணி ருக்குமணி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டான ஒரு பாடலாகும் .அதன் பிறகு பாம்பே படத்தில் மனிஷா கொய்ராலா பாடுவது மாதிரி கண்ணாலனே பாடல் எல்லோருக்கும் ஒரு பிடித்தமான பாடலாக அமைந்தது. அடுத்து மோகன்லால் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான இருவர் திரைப்படத்திலும் திருமண சமயத்தின் போது ஒலிக்க கூடிய நறுமுகையே பாடலும் பெரிய அளவில் ஹிட்டான பாடலாக மாறியது.

    ஷாருக்கான் வைத்து அவர் இயக்கிய உயிரே திரைப்படத்தில் ப்ரீத்தி ஜிந்தா பாடும் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் எந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்குமே தெரியும். இதில் அலைபாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் வீட்டுக்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்யும் போது ஒலிக்க கூடிய மாங்கல்யம் தந்துநானே பாடல் இன்றுவரை அனைவரும் திருமண நாளிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கக்கூடிய பாடலாகவே மாறி இருக்கிறது.

    அதே படத்தில் அமைந்த யாரோ யாரோடி பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த லிஸ்டில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் மாதவன் சிம்ரன் திருமணம் செய்யும் போது ஒலிக்க கூடிய எந்த வாசல் வழி பாடலும் அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறியது .

    mani

    mani

    இப்படி ராவணன் திரைப்படத்தில் பிரியாமணி திருமணம் நடக்கும்போது ஒலிக்க கூடிய பாடல் ,ஓகே கண்மணி படத்தில் நித்யா மேனனும் துல்கர் சல்மானும் திருமணம் செய்யும்போது ஒலிக்க கூடிய மனமன பாடல் காற்று வெளியிடை திரைப்படத்தில் அமைந்த புதுப்பொண்ணே பாடல் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அமைந்த கீச் கீச் பாடல் என வரிசையாக திருமண பாடலுக்கு என முக்கியத்துவம் கொடுக்க வந்த மணிரத்தினம் இப்போது வெளியாக கூடிய தக் லைப் திரைப்படத்திலும் ஜிங்குச்சா பாடலையும் வைத்து அதையும் பெரிய அளவில் ஹிட்டாக்கி விட்டார்.

  • அறிவா பேசுறேனு அதுல கோட்ட விடுறாரு.. கமல் பற்றி அபிராமி இப்படி சொல்லிட்டாங்களே

    சினிமாவை பொறுத்தவரைக்கும் ஸ்கிரீனில் பார்க்கக்கூடிய ஜோடி ஒரு படத்தில் பிரபலமாகி விட்டால் அடுத்தடுத்து படங்களில் அவர்கள் ஜோடியாக நடிக்க ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்ததின் மூலம் அந்த படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

    ஏன் அந்த படத்திற்கு பிறகு கூட கமல் அபிராமியை சேர்த்து வைத்து பல வதந்திகளும் பரவியது. குறிப்பாக முத்தக்காட்சியில் நடித்ததன் மூலம் இருவரையும் சேர்த்து வைத்து பல செய்திகள் வெளியானது. இப்போது அந்த படத்திற்கு பிறகு மீண்டும் தக் லைஃப் திரைப்படத்தில் ஜோடியாக அபிராமி நடித்திருக்கிறார். ஆனால் இதற்கிடையில் கமலின் ஒரு சில படங்களில் மற்ற ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கவும் செய்தார் அபிராமி.

    குறிப்பாக விஸ்வரூபம் படத்தில் அபிராமி டப்பிங் கொடுத்திருக்கிறார். தொழில் ரீதியாக கமலுக்கும் அபிராமிக்கும் இடையே நல்ல ஒரு நட்பு இருந்து வருகிறது. குணா படத்திற்கு பிறகு தான் தன்னுடைய பெயரை அபிராமி என மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு கமலின் தீவிர ரசிகை அபிராமி. அதை ஒவ்வொரு மேடையிலும் நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்த நிலையில் கமலிடம் இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள் என கேட்டதற்கு அபிராமி கொடுத்த பதில் இதோ.

    அவரிடம் எதுவுமே மாற்ற தேவையில்லை. ஜென்டில்மேன் ஆக இருக்கிறார். ஆனால் அதீத புத்திசாலியாகவும் இருப்பதனால் அவர் கூறும் சில விஷயங்கள் மக்களிடம் சரியாக போய் கனெக்ட் ஆக முடியவில்லை. அதாவது மக்களுக்கு புரியவில்லை. அதனால் மக்களுக்கு அவர் சொல்கிற விஷயம் ஈசியாக போய் கனெக்ட் ஆகக்கூடிய வகையில் அவர் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் என்னுடைய ஆசை என கூறினார் அபிராமி.

    abirami

    abirami

    இது இவருடைய கருத்து மட்டும் அல்ல எல்லாருடைய கருத்தும் அதுதான். ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் என்ன சொல்ல வருகிறார் என்பதை கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் விளக்கமாக மிகத் தெளிவாக சில நிமிடங்கள் பேசுவார் .ஆனால் கடைசியில் என்ன சொல்ல வந்தார் என யாருக்கும் புரியாது. அதைத்தான் இப்போது அபிராமியும் சொல்லி இருக்கிறார்

  • தவறாக புரிந்து கொண்டதுக்கு எதற்கு மன்னிப்பு….? கெத்து காட்டிய கமல்! வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்

    கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது. கமலின் கன்னட மொழிப் பிரச்சனையால் இழுபறி நீடித்தது. இன்று அங்கு கமல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்?

    இதனால் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ளது. அமைதியின்மை நிலவுகிறது. தமிழ் மொழியில் இருந்து கன்னடம் வந்தது என சொல்வதற்கு அவர் என்ன வரலாற்று ஆய்வாளரா என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் உடனடியாக நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டது வேதனை அளிக்கிறது.

    கன்னடத்தை நான் சிறுமைப்படுத்தவே இல்லை என்று பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இதன் தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து கமல் தவறாக புரிந்து கொண்டதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    பிலிம் சேம்பர் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படும் வரை தக் லைஃப் வெளியீடு இல்லை என்றும் இந்த வழக்கு 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் திருப்பூர் சுப்பிரமணியம் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.

    கமலின் கருத்து 100 சதவீதம் நேர்மையானது. இந்த விழாவில் ராஜ்குமாரைப் பற்றி ரொம்ப மேன்மைப்படுத்தித்தான் பேசி இருந்தாரு. கன்னட மொழியையும், அங்குள்ள மக்களையும் சிறப்பாகவே பேசி இருந்தார். கமல் தமிழ்மொழியின் சிறப்பைத் தான் பேசி இருந்தாரே தவிர கன்னட மொழியை எந்த இடத்திலும் சிறுமைப்படுத்திப் பேசவே இல்லை.

    கர்நாடகாவைத் தவிர வேறு மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டுல எந்த மொழிப்படங்களையும் நாங்க ரிலீஸ் பண்ண மாட்டோம்னு சொன்னது கிடையாது. கர்நாடகாவில் மட்டும் தான் இதுபோன்ற பிரச்சனை வருகிறது. கர்நாடக பிலிம் சேம்பர் தெரிவித்த கருத்து வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

  • இப்படித்தான் சொன்னேன்.. 24 மணி நேரம் கெடு விதித்த நிலையில் வைரலாகும் கமலின் பதிவு

    கமல் பேசிய பேச்சுக்கு கன்னட அமைப்பு கவுன்சில் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. தக் லைப் திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி எனக் கூறி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார் கமல். இதற்கு ஒட்டுமொத்த கன்னட அமைப்பினரும் கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கினர். அதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தார்கள்.

    அப்படி மன்னிப்பு கேட்காவிடில் அவருடைய நடிப்பில் வரும் ஐந்தாம் தேதி வெளியாக கூடிய தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றும் கூறினார்கள். ஆனால் கமல் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்க முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டது .இதற்கிடையில் தான் இன்னும் 24 மணி நேரத்திற்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் படத்தை வெளியிட தடை விதிப்போம் எனக்கெடு விதித்திருக்கிறது.

    இந்த நிலையில் கமல் பேசிய ஒரு தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் அன்று நான் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தான் நான் அப்படி பேசினேன் .கன்னட மொழி ஒரு வளமான மொழி. தமிழ் மொழியை போல கன்னட மொழிக்கும் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திலும் மிகவும் வளமான மொழி கன்னட மொழி எனக் கூறி இருக்கிறார் கமல்.

    அதனால் ஐந்தாம் தேதி கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா வெளியாகதா என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம். முதன்முறையாக சிம்பு கமல் காம்போவில் இந்த படம் தயாராகி இருக்கிறது.

    kamal

    kamal

    இதுவே படத்திற்கு கூடுதல் ஹைப். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் கமல் இணையும் திரைப்படமாகவும் இது இருப்பதினால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்குள் அன்று அவர் பேசிய அந்த ஒரு பேச்சு இந்த படத்தின் ரிலீஸ்க்கே தடையாக மாறி இருக்கிறது.