Tag: நடிகர் சரத்குமார்

  • விஜயை போல் தான் நானும்.. அடுத்த சூப்பர் ஸ்டாருனு சொன்ன வாயா இது?

    Sarathkumar: தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ஒரே ஒரு வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த இணையத்தையும் திணற வைத்தவர் சரத்குமார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இது பற்றி பேசியதோடு அதற்கு முன்பும் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லியதை நியாபகப்படுத்தி ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

    இதனால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து விஜயை அதிலிருந்து வசைபாடினர். ரஜினி விஜய் போட்டி கிட்டத்தட்ட வாரிசு படத்திற்கு பிறகுதான் ஆரம்பமே ஆனது. இதில் ஒரு சில பேர் சரத்குமார் வீட்டிற்கும் சென்று அச்சுறுத்தியதாகவும் தகவல் இருக்கிறது. பொதுவாக விஜய் என்றாலே சரத்குமாருக்கு மிகவும் பிடிக்கும். ஏன் ராதிகாவுக்குமே ரொம்ப பிடிக்கும். தெறி படத்தில் விஜய்க்கு ஒரு க்யூட் மம்மியாக ராதிகா நடித்து அசத்தியிருப்பார்.

    இதையும் படிங்க: கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கலாய்த்த நடிகர்… அவரு சொல்றதுல என்ன தப்பு?

    இந்த நிலையில் விஜய் திடீரென கட்சி ஆரம்பித்து அடுத்தடுத்து அவருடைய கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்புதான் விஜய் அவருடைய கட்சி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். அப்போதுதான் அவருடைய கொள்கை என்ன கோட்பாடு என்ன என பட்டியலிட்டு காட்டினார். இந்த மாநாட்டிற்கு பிறகுதான் தம்பி தம்பி என பாசமழை பொழிந்த சீமான் விஜய் மீது வெறுப்பை கக்கினார்.

    இந்த நிலையில் விஜய் பற்றி சரத்குமாரும் ஒரு கருத்தை சமீபத்தில் கூறியிருக்கிறார். அதாவது விஜயைப் போல்தான் நானும் என கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். அதாவது விஜயை போல் நானும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்தேன். பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று தான் பஜகாவில் இணைந்தேன்.

    இதையும் படிங்க: ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து!… இரு தரப்புக்கும் ஐகோர்ட் கொடுத்த உத்தரவு?!… திடீர் ட்விஸ்ட்..!

    radhika
    radhika

    பொறுப்பு எதிர்பார்த்து இணையவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்க தக்கது. ஆனால் யாரும் சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும் என சரத்குமார் சமீபத்தில் கூறியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் ஆஹா ஓஹோனு பாராட்டி இப்போது தன் கட்சிக்கு எதிரானவர் விஜய் என்று தெரிந்ததும் அடுத்தடுத்து இந்த மாதிரி விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.

     

  • கேப்டன் மாதிரியே துப்பாக்கியை தூக்கிய சண்முக பாண்டியன்!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாறுமாறு!…

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பொன்ராம். தமிழில் ரஜினி முருகன், சீமா ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களை இயக்கியவர் தான் பொன்ராம். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் டிஎஸ்பி.

    ஆனால் அந்தப் படம் எதிர்பார்க்காத அளவுக்கும் படுதோல்வி அடைந்தது. படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருப்பார். இந்த நிலையில் இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. சரத்குமார் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

    அது சம்பந்தமான பூஜையும் போடப்பட்டது. இன்று அந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்மூலம் சண்முக பாண்டியன் சரத்குமாரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இந்த படம் அமைய இருக்கிறது.

    இந்த படம் தேனி மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் நடந்த உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்தில் கமர்ஷியல் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்தின் போஸ்டரை பார்க்கும் போதே ஏதோ ஒரு ஆழமான கருத்தை சொல்ல வருவதாகவே தெரிகிறது.

    விறுவிறுப்பும் கலகலப்பும் நகைச்சுவையும் நிறைந்து கூடவே சண்டை காட்சிகளும் இருக்கும் ஒரு கமர்ஷியல் படமாக இந்த படம் மிகப்பெரிய அளவில் உருவாக போகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக புதுமுக நடிகை தார்னிகா நடிக்க இருக்கிறார்.

    இவர்களுடன் இணைந்து முனீஸ்க்காந்த் காளி வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி போன்ற கிராமங்களை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி இந்த படம் பேசப்போகிறது.

    சமீபத்தில் இதனுடைய படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற் வருகிறது இயக்குனர் பொன்ராமுக்கு உரிய நகைச்சுவையும் சண்டைக் காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் என படக் குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு கொம்புசீவி என பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் கம்பீரமாக கையில் கத்தியுடன் சண்முகப்பாண்டியனும் சரத்குமாரும் நிற்பது பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

  • பெத்த அப்பா தட்டி கேட்டாரா? வரலட்சுமி குறித்த கேள்விக்கு குஷ்பூ காரசாரமான பதில்

    Kushboo: சினிமாத்துறையில் நடக்கும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை பற்றி பல நடிகைகள் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராதிகா ஒட்டுமொத்த யூடியூப்பர்ஸ்களை வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறார். அப்படி செய்கிறவர்களை செருப்பை கழட்டி அடிங்கனு விஷால் சொன்னதுக்கு யூடியூப்பர்ஸ்தான் அப்படி பேசுறாங்க. அவங்களை செருப்பால அடிக்க முடியுமா விஷால்? என கேட்டிருக்கிறார் விஷால்.

    ராதிகாவின் டார்கெட் இந்த பிரச்சினை இல்லை. விஷால்தான் என பல பத்திரிக்கையாளர்கள் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் இதை பற்றி குஷ்பூ அளித்த ஒரு பேட்டியும் வைரலாகி வருகின்றது. மலையாள சினிமாவில் வெடித்த இந்த பிரச்சினைக்கு முன்பாகவே தமிழிலும் சின்மயி இந்த பிரச்சினையை கொண்டு வந்தார்.

    இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!

    கவிஞர் வைரமுத்து மேல் பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். ஆனால் அதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு வேலைவாய்ப்புதான் பறி போனது. டப்பிங் பேசவிடவில்லை. பாட முடியவில்லை என குஷ்பூவிடம் கேட்டதற்கு அதற்கு குஷ்பூ ‘அப்போ யார் மேல் புகார் கொடுக்கிறாங்களோ அவஙகளால்தான் வேலைவாய்ப்பு போனது என சொல்லவர்றீங்களா?’ என திருப்பி கேட்டார்.

    ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார். பாடியிருக்கிறார். தமிழில் மட்டும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என கேட்டால் அதற்கு குஷ்பூ ‘இதை அந்தப் படத்தின் இசையமைப்பாளரிடம்தான் கேட்கவேண்டும்’ என பதில் அளித்திருக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த மாதிரி பிரச்சினையை எடுத்து வந்தால் அதற்கான விளைவை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்தான் சின்மயி.

    இதையும் படிங்க: ஷூட்டிங் நடக்காமல் தடுத்த கோலிவுட்!.. விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா?!..

    அதே போல் வரலட்சுமியும் ஒரு பேட்டியில் ‘என்னையும் ஒரு முறை அப்ரோச் பண்ணாங்க’ என சொல்லியிருந்தார். எப்பேற்பட்ட நடிகரின் மகள். அவருக்கு இந்த மாதிரி கொடுமை நடந்திருக்கு. இதை பற்றி யாரும் நீங்கள் கேட்கவில்லையே என குஷ்பூவிடம் கேட்ட போது அதற்கு குஷ்பூ ‘முதலில் அவருடைய அப்பா தட்டிக் கேட்டாரா?’ என பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்கிறார்.

    கடைசியில் குஷ்பூ சொல்லவந்தது என்னவெனில் எந்த பிரச்சினையானாலும் நடிகர் சங்கத்திடம் வந்து சொல்லுங்கள். அதுக்கு என கமிட்டி இருக்கிறது. அங்கு வந்து சொல்லுங்கள். சொன்னால்தானே தெரியும்? வரலட்சுமி வந்து சொன்னாங்களா? சொன்னால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

    இதையும் படிங்க: அவங்களாம் படிச்சு சிகரம் தொட்டாங்க! படுத்தவங்க? ராதிகாவை வெளுத்து வாங்கிய பிரபலம்

    ஆனால் மலையாளத்தில் ஒட்டுமொத்த சங்கமே தப்பு செய்திருக்கிறதே அப்படி இருந்தால் என்ன பண்ணுவது என குஷ்பூவிடம் கேட்ட போது ‘ஒட்டுமொத்த சங்கம் எப்படி தப்பு பண்ணும்? யாராவது ஒருவர் இருந்தால் கூட நடவடிக்கை எடுப்பார்கள்’என கூறியிருக்கிறார்.

  • ஒரு நடிகர்கிட்ட கேட்க கூடாத கேள்வி! பொங்கி எழுந்த சரத்குமார்.. அப்படி என்னத்த கேட்டாங்க

    Sarathkumar: சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகர் சரத்குமார் சூரியன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் பெருமளவு வரவேற்பை பெற்றது. சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங்கிலும் இருந்தார்.

    சிறந்த ஆணழகன் பட்டத்தையும் வென்றவர். பத்திரிக்கையிலும் சிறந்த அனுபவம் மிக்கவராக இருந்தவர் சரத்குமார். இவருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களாக புலன் விசாரணை திரைப்படம் அமைந்தது. அதை போல கேப்டன் பிரபாகரன் படமும் நல்ல ஒரு பேரை பெற்றுக் கொடுத்தது.

    இதையும் படிங்க: சஸ்பென்ஸ் இல்லாமலே சாவு… கோட் படத்தின் மீது ரஜினிக்கு இவ்வளவோ வன்மமா?

    அதற்கு காரணம் விஜயகாந்த். சின்ன கேரக்டரானாலும் சிறப்பாக நடித்திருந்தார் சரத்குமார். தொடர்ந்து குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றார் சரத்குமார். சூரியவம்சம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

    அதை போல் நாட்டாமை படம் என்றென்றும் காலத்தை வென்ற திரைப்படமாக மாறியது. இந்த இரு படங்கள் சரத்குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் சரத்குமார்.

    தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதை போல் போர்த்தொழில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோவை விட அவருக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்தது.

    இதையும் படிங்க:எஸ்.கே.வுக்காக கமல் எடுக்கும் பெரிய ரிஸ்க்!.. எங்க போய் முடியுமோ தெரியலயே!..

    இந்த நிலையில் சரத்குமாரை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறினார். சமீபத்தில் விக்ரமிடம் நிருபர் ஒருவர் ஏன் டாப் 3ல் உங்களால் வரமுடியவில்லை என்ற ஒரு கேள்வியை கேட்டு தர்மசங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டார் விக்ரம்.

    இதை பற்றி அந்தணன் ‘இந்த கேள்வியை தவிர்த்திருக்க வேண்டும். நடிகரிடம் இந்த மாதிரியான கேள்விகளை கேட்கவே கூடாது. இதை போல ஒரு கேள்வியைத்தான் சரத்குமாரிடமும் கேட்டு அவரை கோபப்படுத்தினார்கள். அதாவது சரத்குமாரை பார்த்து நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? கண்ணுக்கு கீழ் கருவளையம் இருக்கிறதே’ என்றெல்லாம் கேட்டார்களாம்.

    இதையும் படிங்க: எதிர்பார்த்து நான் எதுவும் பண்ணலை… சிவா மூக்கை உடைத்த தனுஷ்… முடிச்சிவிட்டாரே!

    ஒரு நடிகரிடம் இந்த மாதிரி கேட்கவே கூடாது. இதை கேட்டதும் சரத்குமார் மிகுந்த கோபத்திற்கு ஆளானாராம். கேள்வி கேட்ட அந்த நபரை ஒரு வழி பண்ணி விட்டார் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

  • பார்க்கத்தான் முரட்டு ஆள்… ஆனா பேச்சு தங்கம்… சரத்குமார் மருமகனால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்

    சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கு சமீபத்தில் தாய்லாந்தில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று வரலட்சுமி தன்னுடைய கணவர் மற்றும் தந்தை சரத்குமார் உடன் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்.

    அந்த சந்திப்பில், வரலட்சுமி கணவர் நிக்கோலாய் சச்தேவ் கூறுகையில், என் மனைவி வரலட்சுமி என்னிடம் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என கூறினார். ஆனால் அவர் பெயர் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று தான் இருக்க வேண்டும்.

    அவருக்காக நான் என்னுடைய பெயரை நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சத்தேவ் என மாற்ற இருக்கிறேன். சரத்குமார் என்பது லெகசி. அதை மாற்றக்கூடாது. வரலட்சுமி நாளிலிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். எதுவும் மாறவில்லை.

    நான் அவருடைய முதல் காதலும் இல்லை பிடித்த காதலும் இல்லை. ஏனெனில் வரலட்சுமிக்கு சினிமா தான் முதல் காதல். அதனால் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார். அதற்கு நானும், அவர் தந்தையும் எப்போதும் உறுதுணையாக இருப்போம். வந்தவர்கள் சாப்பாடு, தண்ணி குடித்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்.

    அவர் சாதாரண தண்ணியை சொன்னார் என பின்னால் வரலட்சுமி சிரித்துக் கொண்டே அதை சரி செய்த விதம் பார்ப்பவர்களை கலகலப்பில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து பேச எழுந்த வரலட்சுமி, நிக்கோலாய் தான் என் காதல். ஆனால் சினிமா தான் என் உயிர்.

    நான் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிப்பேனா என கேள்வி அடிக்கடி எழுந்தது. தற்போது அதற்கு அனைவருக்கும் பதில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பாக நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவேன் எனவும் குறிப்பிட்டார். வரலட்சுமி திருமண அறிவிப்பு வந்ததில் இருந்தே நிக்கோலாய் உருவம் குறித்து பல விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது அவர் பேச்சு பலரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

  • தப்பு தப்பா போட்டுட்டு இருக்கீங்க! மகள் திருமண விருந்தில் பத்திரிக்கையாளரை எச்சரித்த சரத்குமார்

    தமிழ் சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக இன்றுவரை மக்கள் மனதில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் சரத்குமார். 90களில் இருந்து தன்னுடைய ஆக்சன் சார்ந்த நடிப்புகளாலும் அசாத்திய நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்ற ஒரு ஹீரோவாக சூப்பர் ஹிட் ஸ்டாராக இருந்து வந்த சரத்குமார் சமீப காலமாக குணச்சித்திர நடிகர் ஆகவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சமீபத்தில் தான் இவருடைய மகள் வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் உறவினர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக இவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

    மும்பையைச் சேர்ந்த நிக்கோலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி சரத்குமார். தாய்லாந்தில் கிராப்பில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இவர்களுடைய திருமண விழா நடைபெற்றது. சமீபத்தில் தான் தனது மகள் திருமண விருந்தாக பத்திரிகையாளர்களுக்கு பிரியாணியுடன் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சரத்குமார்.

    ஏராளமான பத்திரிகையாளர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது விருந்து நடைபெறும் இடத்தில் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொண்ட சரத்குமார் நேராக ஒரு நிருபரிடம் வந்து எச்சரிக்கும் விதமாக அவருடைய கருத்தை தெரிவித்து சென்றார்.

    அதாவது அந்த நிரூபரை பார்த்து சரத்குமார் ‘பாஸ் நம் சந்தித்து பேச வேண்டும். தனியாக உங்களிடம் நிறைய பேச வேண்டும்.என்னை பற்றி நிறைய செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

    பாசிட்டிவாக இருங்கள். என்னை ஆரம்பத்திலிருந்து உங்களுக்கு நன்றாக தெரியும். என்னுடைய பயணம் என்ன என்பதும் என் கூடவே இருந்த நீங்கள் பார்த்து வருகிறீர்கள். அதனால் இனிமேல் இப்படி எழுதுவதை குறைத்துக் கொள்ளுங்கள்’ என அந்த நிரூபரை பார்த்து சொல்லிவிட்டு சென்றார்.அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

  • நேத்து வரைக்கும் கோயில்ல உருண்ட நாட்டாமை! இன்னிக்கு எங்க இருக்காரு பாருங்க.. இதுவும் முக்கியம்ல

    Actor Sarathkumar: தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றென்றும் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆகவே இருந்து வருபவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த சரத்குமார் சூரியன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதன் பின் வந்த எல்லா படங்களிலும் ஒரு சூப்பர் ஹீரோவாகவே வலம் வந்தார்.

    பொதுவாக குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான படங்களில் நடித்து ஒட்டுமொத்த குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நடிகராகவே மாறினார் சரத்குமார். அவர் நடித்த நாட்டாமை சூரிய வம்சம் போன்ற படங்கள் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது. ரஜினி கமல் இவர்களின் அப்போதைய படங்கள் ரி ரிலீஸ் செய்யும் பட்சத்தில் சரக்குமாரின் சூர்யவம்சம் நாட்டாமை போன்ற படங்களை ரி  ரிலீஸ் செய்தால் அதுதான் இன்றைக்கும் நம்பர் ஒன் திரைப்படமாக திரையரங்குகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

    இதையும் படிங்க: இது கமலோட ஃபேவரைட் நடிகையாச்சே! ‘கூலி’ படத்தில் நாயகியாகும் பிரபலமான பேருள்ள நடிகை

    அந்த அளவுக்கு அந்த இரு படங்களும் சரத்குமாரின் கெரியரிலேயே மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களாகும். அதே வகையில் அதிக அளவில் வசூலித்த படங்களாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தேர்தல் ரிசல்ட் என்பதால் ராதிகாவுக்காக விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்து வந்தார் சரத்குமார்.

    எப்படியாவது தன் மனைவியான ராதிகா இந்த தேர்தலில் ஜெயித்து எம்.பி ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் கோயில் முழுவதும் அங்க பிரதட்சணம் செய்து வேண்டினார். ஆனால் அவருடைய வேண்டுதல் பலனளிக்கவில்லை. இந்த தேர்தலில் ராதிகா தோல்வியுற்றார். இது ஒரு புறம் இருக்க இன்று வரலட்சுமி திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: OMG! ஏமிக்கு இவ்ளோ பெரிய பையனா? கூடவே காதலருடன் உல்லாசம் வேற.. மஜாதான்..வைரலாகும் புகைப்படம்

    அதாவது வரலட்சுமியின் திருமணம் கூடிய சீக்கிரம் நடைபெற இருப்பதால் அதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன . இதில் திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணிகளை குடும்பமாக சேர்ந்து ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் சரத்குமார் இன்னொரு பக்கம் ராதிகா இன்னொரு பக்கம் சரத்குமாரின் முன்னாள் மனைவி மற்றும் வரலட்சுமி அவரது தம்பி சகோதரிகள் என குடும்பமே உட்கார்ந்து அந்த திருமண அழைப்பிதழ்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

    இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/stories/varusarathkumar/3383653903680609838?utm_source=ig_story_item_share&igsh=MW9nenBuZm5pcmwzcA==

  • என்னதான் உருண்டாலும் புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்! நாட்டாமை உங்களுக்கா இந்த நிலைமை?

    Sarathkumar: தமிழ் சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடித்த ஆரம்ப காலங்களில் இவர்தான் ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார். குஷ்பூ, மீனா, ராதிகா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தார் சரத்குமார். நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று இருந்தார்.

    அதன் பிறகு அரசியலில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அரசியலிலும் குதித்தார். தனியாக சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து அதை நிர்வகித்தும் வந்தார். இப்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சரத்குமார் இன்னொரு பக்கம் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்த சரத்குமார் பாஜக வேட்பாளராக தனது மனைவியும் நடிகையுமான ராதிகாவை விருதுநகர் தொகுதியில் நிற்க வைத்திருக்கிறார்.

    இதையும் படிங்கள் கல்லா நிறைஞ்சிருச்சு! மூட்டை முடிச்ச கட்டிகிட்டு ஓடிடிக்கு தயாரான ‘அரண்மனை 4’! எப்போ ரிலீஸ் தெரியுமா?

    தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்ததில் இருந்தே கணவன் மனைவி சகிதமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் எல்லா ஊர்களுக்கும் எல்லா கிராமங்களுக்கும் சென்று தங்களது ஓட்டை சேகரித்து வந்தனர். விருதுநகர் தொகுதிக்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு இருக்கிறது. 1977-ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் அப்போது எம்.ஜி.ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார்.

    அதன் பிறகு சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் வெற்றி பெற்று முதல்வரானார். இப்படிப்பட்ட சிறப்பை பெற்றதுதான் விருதுநகர் மக்களவைத் தொகுதி. இப்போது அதே தொகுதியில் தனது மனைவி இராதிகாவும் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அவருக்கு எதிராக போட்டியிட்டவர் கேப்டன் விஜயகாந்த் மகனான பிரபாகரன்.

    இதையும் படிங்க: சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட பிரபாஸ்.. கல்கி 2898 ஏடி படத்துக்கு டோட்டலாக குறைந்த எதிர்பார்ப்பு?

    நாளை தேர்தல் ரிசல்ட் என்பதால் தனது மனைவிக்காக சரத்குமார் விருதுநகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலில் அங்க பிரதிஷ்டம் செய்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. கோயில் முழுவதும் கைகூப்பி படுத்துக்கொண்டே தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்க பிரதிஷ்டம் செய்திருக்கிறார் சரத்குமார்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவாறு கிண்டல் செய்து வருகின்றனர். வாய்ப்பில்லை ராஜா என்றும் நாட்டாம இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்றும் கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். நாளை இதற்கான பலன் என்ன என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

    இதையும் படிங்க: என்னது இந்த ராகத்தில் பாடினால் மழை வருமா? ராஜாவை கேலி செய்த யேசுதாஸ்.. நடந்தது என்ன தெரியுமா?

  • அப்பாவால மோசம் போன வரலட்சுமி! என்ன நாட்டாமை பொண்ணுக்கு ஒரு நல்ல தீர்ப்ப சொல்லலயே

    Actress Varalakshmi: தமிழ் சினிமாவில் வரலட்சுமி ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை விட தெலுங்கில் தான் அவருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தெலுங்கில் பல சூப்பர் ஸ்டார்களுடன் வரலட்சுமி வில்லியாக நடித்து பெரிய பெரிய நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    பொதுவாக சினிமாவை பொறுத்த வரைக்கும் வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. ஆனால் வரலட்சுமி பொறுத்தவரைக்கும் அவருடைய தந்தை சரத்குமாரை தாண்டியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருடைய திடீர் நிச்சயதார்த்த நிகழ்வு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..

    ஏனெனில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும்  நிக்கி என்பவர் ஒரு பெரிய பாடி பில்டர் போன்ற தோற்றத்தில் காணப்படுவதால் வரலட்சுமி அருகில் நிற்கும்போது ஒரு சிறு குழந்தையாக காணப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் அவருடைய வருங்கால கணவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதும் அவருடைய வருங்கால கணவர் குறித்து பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

    அதாவது அவருடைய வருங்கால கணவரான நிக்கி ஒரு கடத்தல்காரராக இருப்பாரோ என்றெல்லாம் இணையத்தில் வைரலாகி வந்தன. அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வரலட்சுமி அவருடைய பதிவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருடைய இன்னொரு பதிவும் வைரலாகி இருக்கிறது.

    இதையும் படிங்க: என்னது லியோ ஃபேக்கா? அஜித் வாழ்க்கை ஸ்டோரியே இங்க Fakeஆ இருக்கே… வைரல் வீடியோ!…

    அதாவது என்னுடைய அப்பாவும் இரண்டு திருமணங்களை செய்தவர் தான். ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். என் வருங்கால கணவரை குறித்து தவறாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அதைப் பற்றி எனக்கு ஒன்னும் கவலை இல்லை. அவர் எனக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அதனால் மற்றவர்கள் பேசுவதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று மிக தைரியமாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

  • சரத்குமார் – நக்மா காதலால் பாதிக்கப்பட்டவன் நான்! தயாரிப்பாளர் பட்ட வேதனை.. இப்படிலாம் நடந்துருக்கா

    Sarathkumar Nagma: சினிமாவை பொறுத்தவரைக்கும் காதல் என்பது முக்கிய அங்கமாகவே மாறிவிடுகிறது. இன்று பெரிய பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் பல பேர் அவர்கள் வாழ்க்கையில் காதல் அனுபவத்தை கடந்துதான் வந்திருக்கிறார்கள். ரஜினியே ஒரு பேட்டியில் அவருடைய முதல் காதல் அனுபவத்தை பற்றி கூறினார்.

    அதே போல் கமல் ஸ்ரீவித்யா காதல் அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தது. ஒரு பேட்டியில் கமலே ஸ்ரீவித்யாவை அவர் என் தோழி இல்லை. அழகான காதலி என வர்ணித்திருப்பார். இப்படி பல பேர் வாழ்க்கையில் காதல் சிறந்த அனுபவங்களை தந்திருக்கிறது. அந்த வரிசையில் சரத்குமாரும் இருக்கிறார். ஏற்கனவே ஆணழகனாக இருந்த சரத்குமார் பெண்களிடம் சகஜமாக பழகக் கூடியவர்.

    இதையும் படிங்க: கோபிக்கு வேலை கொடுக்க ரெடியான பாக்கியா… கடுப்பில் இருக்கும் ராதிகா… இது நல்லா இருக்கே?

    அதிலும் சினிமாவில் ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற்றவுடன் நடிகைகளிடம் அதிகமாகவே பழகியிருக்கிறார். மிகவும் எளிதாக ஜெல் ஆக கூடிய நடிகர் சரத்குமார். அதனால் நக்மாவுடன் சரத்குமார் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் சரத்குமார் நக்மா காதல் உண்மையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் சரத்குமார் நக்மா இடையிடையே காதல் இருந்தது உண்மைதான். அவர்கள் காதலால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். ஏனெனில் நக்மாவை வைத்து நான் பெரியதம்பி படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் காதலால் நக்மாவால் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வரமுடியவில்லை. அதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டேன் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

    இதையும் படிங்க: செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

    அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தின் போது நக்மாவை ஹீரோ டச் செய்யாமல் நடிக்க வேண்டும் என்ற ரூல்ஸ் எல்லாம் போட்டதாக பல பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்தது.

    ஆரம்பத்தில் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான சரத்குமார் முதல் படத்திலேயே பெரிய தோல்வியை தழுவினார். அதன் பிறகுதான் நடிக்கலாம் என முடிவெடுத்த பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து வில்லனாகவும் பல படங்களில் நடித்த சரத்குமார்,

    இதையும் படிங்க: செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

    நாட்டாமை, சூர்யவம்சம் , நட்புக்காக போன்ற படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ஒரு சுப்ரீம் ஸ்டாராக மாறினார். சரத்குமார் மற்றும் நக்மா இருவரும் சேர்ந்து மூவேந்தர் என்ற படத்தில் சேர்ந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.