Tag: நடிகர் விஜய்

  • தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். விஜய் ஒரு முக்கியமான, பிரபல நடிகராக இருந்ததால் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என விஜய் நம்புகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் ஆதரவும் தனது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர் அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நியமித்தார்.

    நடந்து முடிந்த தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
    விஜய் அரசியலுக்கு வந்தது முதலே ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

    இதனால் விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் கருத்து சொல்லவில்லை. ஏனெனில் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது.. அப்படி பகைத்துக் கொண்டால் கண்டிப்பாக தங்கள் படம் வெளியாவதற்கு பிரச்சினை செய்வார்கள் என்பது தெரிந்து பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்..

    இந்நிலையில்தான், இசையமைப்பாளர் இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல தனது youtube சேனலில் ‘இது எங்கள் நீதி’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘சின்னத்தம்பி உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை பகிர்ந்திருக்கிறார். அதுவும் விஜயின் போட்டோவோடு அந்த பாடலை பகிர்ந்திருக்கிறார். இந்த படம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கி 1988ல் வெளியானது. இந்த படத்தில் ராம்கி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.. அதோடு விஜயும் இந்த படத்தில் சிறுவனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

  • திருவிழா போல் முடிந்த தேர்தல்.. 4 ஆம் தேதி வருவார் கரிகாலன் – பாடகர் கிரிஷ் நெகிழ்ச்சி!

    திருவிழா போல் முடிந்த தேர்தல்.. 4 ஆம் தேதி வருவார் கரிகாலன் – பாடகர் கிரிஷ் நெகிழ்ச்சி!

    தமிழக தேர்தல் வாக்குப்பதிவு சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கான மக்கள் எழுச்சியும், விறுவிறுப்பான வாக்குப்பதிவும் இந்த தேர்தலை ஒரு ஜனநாயகத் திருவிழாவாகவே மாற்றிக் காட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் காட்டிய ஆர்வம் பல அரசியல் மாற்றங்களுக்கான ஆரம்பம் என பேசப்படுகிறது.

    இந்த முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய திருவிழா போலக் காட்சியளித்தது. குறிப்பாக, வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகவே பல ஆயிரங்களைச் செலவழித்து விமானம் மூலம் தமிழகம் வந்திருந்தனர். விமான நிலையங்களில் அலைமோதிய கூட்டமும், ஓட்டுப் போடுவதற்காகவே தாயகம் வந்த அவர்களின் ஆர்வமும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் என பலரும் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து மாபெரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதன்முறையாகத் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில், அவர் மீதான அன்பும் எதிர்பார்ப்பும் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்து வாக்களித்த பலரும், விஜய் அண்ணாவுக்காகவே வந்தோம் என வீடியோக்களாகப் பதிவிட்டு வருவது இணையத்தில் மிகப்பெரிய ட்ரெண்டாக மாறியுள்ளது.

    இந்நிலையில், மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு பிரபல பின்னணிப் பாடகர் கிரிஷ் மிகவும் நெகிழ்ச்சியுடன்

    என்ன மாதிரி ஒரு தேர்தல் இது.. இப்படி ஒரு தேர்தலை யாரும் இதுவரை பார்த்ததில்லை. எவ்வளவு பேர் வெளிநாட்டிலிருந்து வந்து ஓட்டுப் போட்டு இருக்கீங்க.. உங்க அனைவருக்கும் ஹாட்ஸ் ஆஃப் . விஜய் அண்ணா மேல நீங்க வச்சிருக்க அந்த அன்பைப் பார்க்கும்போது அவ்வளவு எமோஷனலாக இருக்கிறது. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும் கண்ணில் கண்ணீர் தழும்புகிறது. 4-ஆம் தேதி வருவார் கரிகாலன் என்று கிரிஷ் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

  • ஜனநாயகன் லீக்!. கை மாறிய பணம்!.. அப்லோட் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்..

    ஜனநாயகன் லீக்!. கை மாறிய பணம்!.. அப்லோட் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்..

    கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான ஜனநாயகன் திரைப்படம் தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை.. அதற்கு காரணம் தற்போது படம் மறு தணிக்கையில் இருக்கிறது.. தமிழக சட்டசபை தேர்தல் ரிசல்ட் வெளியான பின்னரே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

    இது தொடர்பாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் உமாசங்கர் என்கிற ஃபிரிலான்ஸ் வீடியோ எடிட்டர்தான் இந்த தவறை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    ஆனால் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தொடர்ந்து உமாசங்கர் கூறி வருகிறார்.. அதோடு அவர் ஜாமினுக்கும் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஜாமின் அளிக்க கேவிஎன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது . இந்நிலையில்தான், போலீசாரின் விசாரணையில் ஒரு புதிய தகவல் தெரிய வந்திருக்கிறது.

    ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்ததாக கூறப்படும் உமாசங்கர் வீடியோ எடிட்டர் அல்ல.. அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். வேறு திரைப்பட பணிகளுக்காக வந்த ஃபிரிலேன்ஸ் எடிட்டர் பிரசாத் என்பவர் ஜனநாயகன் பட காட்சிகளை காப்பி எடுத்து பெரும் தொகைக்காக உமா சங்கரிடம் விற்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது..

  • கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேவைக்காக தனுஷ் வங்கிகளில் கொள்ளையடிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது..

    அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ‘விக்னேஷ் ராஜா. நீங்கள் ஒரு ஜீனியஸ்’ என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக ஜனநாயகன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

    வருகிற 24-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் எனவும் அனேகமாக அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 29 அல்லது 30ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை, ஏப்ரல் 29 அல்லது 30-ல் ஜனநாயகன் வெளியாவது உறுதியானால் தனுஷின் கர திரைப்படம் அந்த படத்தோடு போட்டி போடுமா இல்லை ரிலீஸ் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அல்லது ஜனநாயகன் மே முதல் வாரத்தில் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறாது.

  • ஜனநாயகன் லீக்!.. குற்றவாளி பெயரை சொல்லாத காவல்துறை!.. மர்மம் என்ன?…

    ஜனநாயகன் லீக்!.. குற்றவாளி பெயரை சொல்லாத காவல்துறை!.. மர்மம் என்ன?…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் இதுதான் தனது கடைசி படம் என அவரே அறிவித்திருக்கிறார்
    . கே.வி.என். புரடெக்‌ஷன் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படம் தற்போது மறு தணிக்கையில் இருக்கிறது. ஆனால் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. மே மாதம்தான் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்-ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது..

    சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் அந்த படத்தின் எடிட்டிங்கில் பணிபுரிந்துள்ள Freelance வீடியோ எடிட்ட ஒருவர்தான் படத்தின் காப்பியை திருடி வேறு ஒருவருக்கு கொடுத்து அதன் மூலம் இணையதளங்களில் பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த வீடியோ எடிட்டரை காவல்துறை கைது செய்து மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி அதன் பின் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

    ஆனால் இப்போது வரை அந்த நபர் யார்? அவரின் பெயர் என்ன? என்கிற எந்த விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை. இதன் பின்னால் இருக்கும் மர்மம் யாருக்கும் புரியவில்லை. குற்றவாளியின் பெயரை சொல்ல முடியாத அளவுக்கு இது ஒன்றும் சென்சிடிவான பிரச்சனை இல்லை.. இது வேறு சில பிரச்சனைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனெனில், குற்றவாளியின் பெயரை சொல்லாததால் படத்தின் டைட்டில் கார்டில் வரும் எடிட்டிங் உதவியாளர்களில் ஒருவரை விஜய் ரசிகர்கள் கற்பனையாக இவர்தான் குற்றவாளி என முடிவெடுத்து அவர்களுக்கு எதிராக கம்பு சுத்த தொடங்கினால் அது அவர்களின் கெரியரை பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளி பற்றிய முழு விபரங்களையும் காவல்துறை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

  • ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு மாத காலமாகியும் எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

    ஆனால் அதை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இப்போதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு முழுபடமும் இணையத்தில் வெளியானது. பலரும் அதை இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர்.. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே படம் வெளியாகாமல் கால தாமதமானதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிற நிலையில் தற்போது முழு படமும் லீக்காகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. எனவே இந்த நஷ்டத்தை போக்க அதே தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. பல ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது..

    ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.. விஜய் இப்போது வரை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை.. ஜனநாயகன் லீக் ஆனதும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ஆறுதலுக்காக கூட ‘ஒன்றும் வருத்தப்படாதீர்கள்.. நாம் ஏதாவது செய்வோம்’ என சம்பிரதாயத்திற்கு கூட விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சொல்கிறார்கள்.

    விஜயின் நடவடிக்கையை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு விஜய் இன்னொரு படம் நடித்து கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஒருபக்கம், படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார். அனேகமாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இணையத்தில் லீக்கான ஜன நாயகன் சண்டை காட்சி

    இணையத்தில் லீக்கான ஜன நாயகன் சண்டை காட்சி

    விஜய் நடிப்பில் கடைசி படமாக வெளியாகவிருக்கிறது ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மலேசியாவில் கோலகலமாக நடைபெற்றது.

    சென்சார் பிரச்சனை இப்படம் வெளியாவதில் தொட்ர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. ஜூலை மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜன நாயகன் படத்திலிருந்து சுமார் 5.30 நிமிடங்கள் ஓடக்கூடிய முழுமையான ஆக்‌ஷன் பிளாக் காட்சி அப்படியே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்த சண்டைக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சி ஆன்லைனில் லீக் ஆனதை கண்ட விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

    கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

    இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை பாசமாக வளர்த்தார். சிறுவயதிலேயே அப்பாவின் சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு செல்வது விஜயின் வழக்கம்.. அப்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது..

    சென்னை லயோலா கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது படிப்பு நமக்கு செட் ஆகாது.. சினிமாவில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார் விஜய். ஆனால் இதை எஸ்.ஏ.சி ஏற்கவில்லை.. அவர் எவ்வளவோ அட்வைஸ் சொல்லியும் விஜய் கேட்கவில்லை.. எனவே சொந்த காசை போட்டு விஜயை நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படம் ஓடவில்லை.. அதன்பின் சில படங்களை இயக்கினார். பெரிதாக கிளிக் ஆகவில்லை.

    எனது மகன் விஜயை படம் எடுங்கள் என பல இயக்குனர்களிடம், தயாரிப்பாளர்களிடம் நேரில் போய் கோரிக்கை வைத்தார் எஸ்.ஏ.சி. ஆனால், யாரும் முன்வரவில்லை. எனது மகனை உங்களின் தம்பியாக நடிக்க வையுங்கள் என்று அப்போதைய ஹீரோக்களாக இருந்த பிரபு, சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன் என பலரிடமும் போய் கேட்டார்.. யாரும் செய்யவில்லை.. இறுதியாக அதை விஜயகாந்த் செய்தார். ஒருகட்டத்தில் விஜய் நிறைய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். விஜய் நடிக்கும் படங்களின் கதை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, விஜயின் சம்பளம் பேசுவது தொடர்பான விஷயங்களை எஸ்.ஏ.சி பார்த்துக்கொண்டார்.

    ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். விஜய் தனது அப்பாவை பார்ப்பதை கூட நிறுத்திவிட்டார்.. எனவே எஸ்.ஏ.சி தனது மனைவியுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். எஸ்.ஏ.சி புதிதாக வீடு கட்டிய போது கூட விஜய் அங்கு செல்லவில்லை.. தன் அப்பாவை சந்திப்பதை முழுமையாகவே தவிர்த்தார் விஜய்.. இப்போதும் அப்படித்தான்..

    விஜயின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி விஜயை அரசியலுக்கு கொண்டு வந்தது அவரின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர்தான். ஆனால் அதையும் விஜய் மறந்து விட்டார். தனது அரசியலுக்குள்ளும் அப்பா தலையிடாமல் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில்தான் விஜயிடம் பல வருடங்கள் மேனேஜராக பணிபுரிந்த பிடி செல்வகுமார் சமயத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்..

    விஜயும், எஸ்.ஏ.சி-யும் ஏன் பிரிந்தார்கள் என்பதுக்கான உண்மையான காரணம் எனக்கு தெரியாது ஆனால் அவர்களுக்கிடையே ஏதோ பிரச்சனை வந்தது.. ‘மகன்தானே.. எதற்காக பிரச்சனை?’ என்று நான் ஒருமுறை கேட்டபோது ‘கோபத்தில் நான் விஜயின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.. நான் அப்பன்தானே.. எனக்கு உரிமை இல்லையா?.. அதன்பின் அவனிடம் மன்னிப்பும் கேட்டேன்.. ஆனால் விஜயின் கோபம் போகவில்லை’ என்று சொன்னார்’ என சொல்லியிருக்கிறார்.

  • தகர டப்பா மூஞ்சி!.. விஜயை கலாய்த்த எழுத்தாளர்!. கோபத்தில் கையை வெட்டப்போன எஸ்.ஏ.சி..

    தகர டப்பா மூஞ்சி!.. விஜயை கலாய்த்த எழுத்தாளர்!. கோபத்தில் கையை வெட்டப்போன எஸ்.ஏ.சி..

    கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு படிப்பு வேண்டாம்.. சினிமாவில்தான் நடிப்பேன் அதுதான் என் கெரியர் என விஜய் அடம்பிடித்ததார். ‘உனக்கு சினிமா வேண்டாம். அது மிகவும் கஷ்டம்’ என விஜயின் மனதை மாற்ற அவரின் தந்தை எஸ்,ஏ,சந்திரசேகர் முயற்சி செய்தார். ஆனால், விஜய் அடம் பிடிக்கவே நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார் எஸ்.ஏ.சி.
    மகனை வைத்து யாரும் படம் எடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால் சொந்த காசை போட்டு படத்தை எடுத்தார். முதல் படமே பிளாப்..

    அதன்பின் விஜயை வைத்து சில படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால், எதுவும் பெரிசாக பேசப்படவில்லை. ஒருவழியாக விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜயை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் விஜயின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரஜினியை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் விஜய். இந்நிலையில்,
    விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த பி.டி செல்வகுமார் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

    நாளைய தீர்ப்பு படம் வெளியான போது எழுத்தாளர் சுஜாதா குமுதம் இதழில் அந்த படம் பற்றி விமர்சனம் எழுதியபோது ‘படத்தின் ஹீரோ விஜய்க்கு தகர டப்பா மூஞ்சி.. இவரை எல்லாம் யார் நடிக்க கூப்பிட்டார்?’ என்று ஏதோ எழுதிவிட்டார். அதைப் படித்து பார்த்து விஜய் கதவை சாத்திக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.. அதில் கோபமடைந்த எஸ்.ஏ.சி நேராக குமுதம் அலுவலகத்திற்கு சென்று ‘என் மகனைப் பற்றி அப்படி எழுதியது யாராக இருந்தாலும் அவரின் கையை வெட்டுவேன். ஜெயிலுக்கு போகவும் நான் தயார்’ என சண்டை போட்டார்..

    சுஜாதா ஆடிப் போய்விட்டார்.. பெரிய சண்டையாகிவிட்டது.. அதன்பின் அமர்ந்து பேசி உங்கள் மகனைப் பற்றி இனிமேல் நல்ல விதமாகவும் எழுத மாட்டோம்.. நெகடிவாகவும் எழுத மாட்டோம்’ என குமுதம் சொல்லிவிட்டது’ என கூறியிருக்கிறார்.

  • ப்ளீஸ் அதை செய்யாதீங்க!.. கலைஞரிடம் போய் கெஞ்சிய விஜய்!.. ஒரு பிளாஷ்பேக்!…

    ப்ளீஸ் அதை செய்யாதீங்க!.. கலைஞரிடம் போய் கெஞ்சிய விஜய்!.. ஒரு பிளாஷ்பேக்!…

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது சட்டமன்ற தேர்தலை அவரின் கட்சி சந்திக்கவிருக்கிறது. எனவே தேர்தல் தொடர்பான பணிகளில் விஜய் வேகம் காட்டி வருகிறார். சில நாட்கள் அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், விஜயிடம் பல வருடங்கள் மேனேஜராக பணிபுரிந்து பிடி செல்வகுமார் விஜயி பற்றி பல முக்கிய தகவல்களை ஊடகங்களிடம் சொல்லி வருகிறார்.

    சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பேட்டி செல்வகுமார் ‘விஜயின் போக்கிரி திரைப்படம் தியேட்டரில் வெளியான சமயத்தில் தியேட்டர்களின் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்கிற என பலரும் கோரிக்கை வைத்தார்கள். அப்போது கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தார். டிக்கெட் கட்டணத்தை குறைக்கவேண்டுமென அவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவரும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு செய்தார்..

    இது தெரிந்ததும் பதிறிப்போன விஜய் கலைஞரின் வீட்டுக்கே போய் அவர் காலையிலே விழுந்து விட்டார்.. ‘டிக்கெட் கட்டணத்தை குறைக்காதீங்க’ என கோரிக்கை வைத்தார்.. ‘ஏன்யா அப்டி சொல்ற?.. டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் நிறைய பேர் படம் பார்க்க வருவார்கள்’ என்று கலைஞர் சொன்னார். ஆனால் விஜயோ ‘நீங்க டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் என் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள்.. எனக்கு குறைவான சம்பளம்தான் கொடுப்பார்கள்’ என ஒப்பாரி வைத்தார்.

    இதுதான் விஜயின் குணம். விஜய் எப்போதுமே ஒரு சுயநலவாதி.. தன்னைப் பற்றி மட்டும்தான் யோசிப்பார்.. பொதுநலமாக எதையுமே யோசிக்க மாட்டார்.. இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு வந்து என்னத்தை கிழிக்க போகிறார்?’ என்று பேசியிருக்கிறார்..

    மேலும், விஜயின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போயிருக்காங்க. அவங்களுக்கு செட்டில்மெண்ட் கூட கொடுக்க விஜய் விரும்பமாட்டார். அவரின் பெற்றோர்களுக்கு எதுவும் செய்யமட்டார். 27 வருடங்கள் அவரிடம் வேலை செய்தேன். அந்த வேலையை விடும்போது ஒரு பைசா எனக்கு கொடுக்கவில்லை.. அதுதான் விஜயின் குணம். அவர் எப்போதும் யாருக்கும் எதுவும் செய்யமாட்டார்’ என செல்வகுமார் பேசியிருக்கிறார்.