Tag: நயன்தாரா

  • இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்

    இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்

    தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் இந்திய அளவில் ட்ரெண்டானது. தற்போது உயிர், உலக் என இரண்டு அழகிய ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோராய் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சினிமா, தயாரிப்பு, பிசினஸ் என இருவரும் பிஸியாகச் சுழன்று கொண்டிருந்தாலும், தங்களுக்கான பிரத்யேக நேரத்தை ஒதுக்க இவர்கள் தவறுவதில்லை.

    இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் கூறுகையில், நாங்கள் இருவரும் இரவில் ஏதாவது படம் பார்த்துக் கொண்டிருப்போம், அப்போது நள்ளிரவில் திடீரென ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என்று தோன்றும். இல்லை என்றால் எதையாவது சாப்பிடலாமா என்று தோன்றும். இரவு இரண்டு அல்லது இரண்டரை மணிக்கு, வா எங்கேயாவது போயிட்டு சாப்பிட்டு வரலாம் என்று நான் கூப்பிட்டால், நயன் வேறு எதுவும் சொல்லாமல் சரி வா என்று சொல்லி அமைதியாக என்னுடன் கிளம்பி வந்து விடுவார். அவரது மைண்ட்செட் நள்ளிரவில் அப்படித்தான் மிகவும் இயல்பாக இருக்கும் என்று கூறினார்.

    எங்களுக்கு பிலால் ஹோட்டலில் கிடைக்கும் பன் மிகவும் பிடிக்கும். நள்ளிரவில் அங்கு போனால் அங்கே எங்களுக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு ஒரு மெசேஜ் போட்டால் போதும், நாங்கள் வெளியே கூட வர வேண்டாம், அவரே எங்கள் காருக்கே வந்து பன்னை கொடுத்து விட்டுச் செல்வான் என கூறினார்.

  • உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    உயிர், உலக் நல்லா வளர்ந்துட்டாங்களே.. LIK ஃப்ளாப் ஆனாலும் ஹேப்பியா இருக்கும் விக்கி, நயன்!..

    நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட இவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலான “நார்மல் பீப்பிள்” குறித்த கருத்து தொடர்பாக அவர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த கருத்து பொதுமக்களை குறிவைத்து கூறப்பட்டதல்ல; அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிவு குறித்து விக்னேஷ் சிவன் மனமுடைந்த நிலையில் பேசியது ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. “என் வாழ்க்கையில் அது ஒரு பெரிய இழப்பு” என்று அவர் உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்; அவர்களுக்கு “உயிர்” மற்றும் “உலக்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையையும் தொழிலையும் சமநிலைப்படுத்தி சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

    நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான “மன சங்கர வர பிரசாந்த் காரு” தெலுங்கு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், யஷ் உடன் நடித்த டாக்ஸிக், மம்மூட்டி, மோகன்லால் உடன் நடித்த பேட்ரியாட் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாகவும் கமிட் ஆகியுள்ளார். இப்படியாக பிஸியான தொழில் வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

  • நயன்தாராவை எப்படி மோசமா திட்டுவாங்க தெரியுமா? தோனியையே விடல… ட்ரோல்கள் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து!

    நயன்தாராவை எப்படி மோசமா திட்டுவாங்க தெரியுமா? தோனியையே விடல… ட்ரோல்கள் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து!

    சமுகவலைதளங்களின் வளர்ச்சி எந்த அளவிற்கு நன்மையோ அதே அளவில் தீமைகளும் நிறைந்தே உள்ளன. அதிலும் தவறான கருத்துக்களை சந்திக்காத பிரபலங்களே இருக்க முடியாது.

    இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் கமெண்டுகள் குறித்து விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், நம்மைப் பற்றி தவறான மற்றும் மோசமான கருத்துக்களைப் பரப்புபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஏன் எம்.எஸ். தோனியையே திட்டி வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். அதனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நமது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான் என்று கூறினார்.

    தொடர்ந்து தனது மனைவி நயன்தாரா சந்திக்கும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “நான் கூட பரவாயில்லை. நயன்தாராவை எல்லாம் எப்படி திட்டுவார்கள் தெரியுமா? நானும் நயனும் இதைபற்றி பலமுறை பேசிகொள்வோம் என்றார்.

  • தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

    தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

    தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் விக்னேஷ் சிவன் நடித்தும் இருந்தார். அதன்பின் விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து போடா போடி என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தனது சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் தனுஷ்..

    ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டு சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு செய்ததால் கடுப்பான தனுஷ் இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார். எனவே, தனது காதலனுக்காக நயன்தாரா தனது சொந்த காசை போட்டு படத்தை முடிக்க உதவி செய்தார்.. அப்படி உருவானதுதான் ரவுடி பிக்சர்ஸ்.

    அந்த படம் வெற்றி என்றாலும் தனுஷ் விக்னேஷ் சிவனையோ, நயன்தாராவையோ சந்திக்கவே இல்லை. அவர்களுடனான நட்பையும் அவர் முறித்துக்கொண்டார். அதோடு நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸுக்கு விற்றபோது அதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் சேர்க்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை திட்டி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார். ஆனால், தனுஷ் அமைதியாக இருந்தார்.

    அப்போது தனுசுக்கு எதிராக சில கருத்துக்களை விக்னேஷ் சிவனும் பேசினார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் ‘எனக்கு தனுஷ் சாரை மிகவும் பிடிக்கும்.. வேலையில்லா பட்டதாரி படம் உருவானபோது இரண்டரை வருடங்கள் நான் அவருடன்தான் இருந்தேன்..

    அவர் சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன்.. அப்படி ஒரு அன்பு எங்களுக்குள் இருந்தது.. தனுஷ் சாரின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதிதான் என் அப்பா இறந்தார். எனவே, தனுஷை என் அப்பாவை போல நான் கருதுகிறேன். ஆனால் சில விஷயங்கள் நம் கையை மீறி நடக்கிறது. சூழ்நிலை அப்படி இருந்தது.. சில தவறுகள் நடந்தது.. அவரின் நட்பை இழந்ததை பெரிய இழப்பாக நினைக்கிறேன்’ என பீல் பண்ணி பேசியிருருக்கிறார்.

  • நீதான் எல்லாமே!.. ஐ லவ் யூ பாட்னர்!. நயன்தாரா போட்ட காதலர் தின பதிவு!..

    நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போதே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    மேலும் வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் இருவரும் பெற்றோராக மாறினார்கள். அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்கள். மேலும் பிறந்தநாள்,காதலர் தினம் போன்ற நாட்கள் வரும்போது உருகி உருகி காதலைப் பற்றிய பதிவிடுகிறார்கள்..

    இந்நிலையில், இன்று காதலர் தினம் என்பதால் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து சொல்லி உருகியிருக்கிறார்.

    சில ஆத்மாக்கள் நமது விதியில் எழுதப்பட்டிருக்கும்.. நாம் எப்போதோ சந்தித்தோம்.. நீதான் என்னுடைய ஆன்மா மற்றும் உயிர்..

    நீ எனக்கு கிடைத்த சிறந்த வாழ்த்து.. என் அம்மா செய்த பிரார்த்தனையின் பலன் நீ.. .

    உன்னோடு பத்து வருடம்.. இப்போதும் நீ அருகில் இல்லை என்றால் உன்னை மிஸ் பண்ணுகிறேன்..
    நீதான் என்னுடைய வலிமை.. என்னை புரிந்தவன் நீ. என் வீடும் நீதான்..

    கடவுள் ஒரு உள்நோக்கத்துடன்தான் உன்னை என் வாழ்கைக்குள் அனுப்பியிருக்கிறார். காதல் நிலையானது.. தைரியமானது.. மென்மையானது என்பதை கற்றுக் கொண்டேன்.. என்னை எப்போதும் நேசிப்பதற்கு நன்றி.. நான் மனம் உடையும்போது என் கைகளைப் பற்றிக் கொள்கிறாய்.. உலகம் கனமானதாக தோன்றும்போது நீ என் அருகில் இருக்கிறாய்..

    உன்னை நான் சாதாரணமாக நேசிக்கவில்லை.. நான் உனக்கு நன்றி கடனாக இருக்கிறேன்.. உனக்காக பிரார்த்திக்கிறேன்.. ஒவ்வொரு நாளும் உன்னை தேர்ந்தெடுக்கிறேன்.. ஐ லவ் யூ பார்ட்னர்.. ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என்ன பதிவிட்டு உருகியிருக்கிறார்..

  • இது இருந்தால் எதுவும் தேவையில்லை… விக்னேஷ் சிவன் சொன்ன காதலர் தின வாழ்த்து..

    பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காதலர்கள் சந்தித்து அன்பை பறிமாறிக்கொள்வது, காதலர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது, மலர் கொடுப்பது என காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உலகம் முழுக்க காதலர்கள் இருந்தாலும் காதல் என்பதன் உணர்வு ஒன்றுதான். அம்ஜிக்கரை என்றாலும் அமெரிக்கா என்றாலும் காதல் ஒன்றுதான்..

    எனவே, சமூகவளத்தளங்களில் பலரும் பலருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காதலர் தின வாழ்த்து பலரையும் கவர்ந்திருக்கிறது.

    உங்களின் கைகளை திறந்து பாருங்கள்.. அதில் ஒன்றும் இல்லை.. உங்கள் இதயத்தின் உள்ளே பாருங்கள்.. ஒரு உண்மையான காதல் இருக்கிறது.. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் உங்களை புதிதாக உணர வைக்கும் ஒருவர் உங்கள் மனதில் இருக்கிறார்..

    அப்படியெனில் சந்தோஷமாக இருங்கள்.. நீங்கள் அரசர்களை விட பணக்காரர்கள்.. தேவதைகளால் ஆசீர்வதி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.. உலகம் உங்களை முத்தமிடும்.. காதலை நம்பும் எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்’ என பதிவிட்டு இருக்கிறார்.. அதோடு, மனைவி நயன்தாரா மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களையும் அதில் பகிர்ந்துள்ளார்.

  • கப்பலில் ஜாலி பண்ணும் நயன்தாரா – திரிஷா!.. போட்டோஸ் சும்மா அள்ளுது..

    சினிமாவில் நயன்தாராவை விட திரிஷா சீனியர். துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்து அதன்பின் சினிமாவில் நுழைந்தவர் திரிஷா. துவக்கத்தில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துவிட்டு லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் இவர்.

    நயன்தாராவோ ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக மாறியவர். ஒரு கட்டத்தில் நயன் – திரிஷா இருவருமே வளர்ந்து இருவரும் சம போட்டியாளராக மாறினார்கள். ஆனால் நயன்தாரா சற்று முன்னேறி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    அவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்தார்கள். திரிஷா ஒரு கோடி, இரண்டு கோடி சம்பளம் வாங்கிய போது நயன்தாராவின் சம்பளம் 10 கோடியாக இருந்தது. முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படங்கள் வாய்ப்பு எல்லாம் நயன்தாராவிற்கே போனது.

    அதேநேரம் நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சம் இறங்கிய போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் திரிஷா. அதற்கு முன் விஜய் அஜித் படங்களை நடிக்க தொடங்கினார். விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்தார் திரிஷா.

    கடந்த சில வருடங்களாகவே நயன்தாராவுக்கு பெரிய மார்க்கெட் இல்லை. அவரின் படங்களும் வெளியாவதில்லை. இந்நிலையில்தான் கடலில் ஒரு கப்பலில் திரிஷாவும் நயன்தாராவும் இணைந்து ஜாலி பண்ணும் புகைப்படங்களை இருவருமே தங்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

  • வீக் எண்ட்ல செம ட்ரீட்!.. லெக் பீஸ் காட்டி வெறியேத்தும் நயன்தாரா.. வைரல் பிக்!..

    ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதல் தமிழ் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் இவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் இவரை பட்டி தொட்டியின் பிரபலமடைய செய்து. பில்லா படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியால் இளம் ரசிகர்களை சொக்கி இழுத்தார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

    பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரபுதேவா உடன் ஏற்பட்ட காதல், அதனால் ஏற்பட்ட பிரிவு ஏமாற்றம் இதனால் நயன்தாராவுக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது விக்னேஷ் உனக்கு நயன்தாராவும் காதல் ஏற்பட்டு படம் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

    திருமணத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சமயத்தில் விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவர் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அவருக்கு வெற்றியை பதிவு செய்வது.

    தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. நடிப்பு மட்டுமில்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் வாடகத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். நயன்தாரா அவ்வப்போது அந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்நிலையில் நயன்தாராவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது தோழியுடன் தொடையை காட்டி படு கிளாமர் லுக்கில் ஹேப்பினஸ் எனக் குறிக்கப்பட்டிருக்கும் வார்த்தையை கைகாட்டி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 40 வயதை தாண்டினாலும் இன்னும் கொஞ்சம் கூட குறையாத கிளாமரில் லெக் பீஸ் காட்டி இளசுகளை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.

  • பிரபுதேவாவின் பேச்சு குறித்து முன்னாள் மனைவி சொன்ன தகவல்… எவ்ளோ ஸ்ட்ராங்கான ஆளா இருக்காங்க?!

    யூடியூப் சேனல் ஒன்றில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலாத் லதா தன் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து சில தகவல்களைச் சொல்லி இருக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    விஜய் டிவியில் உங்களில் அடுத்த பிரபுதேவா யார் என்ற நிகழ்ச்சியில் பிரபுதேவா பேசும்போது என்னோட முதல் பையன்தான் அடுத்த பிரபுதேவான்னு சொல்லி நெகிழ்ந்தார். ரொம்ப எமோஷனலா பேசினாரு. அதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ஆங்கர் ரமலாத் லதாவிடம் கேட்டபோது இப்படி பதில் சொன்னார்.

    ஒரு அப்பாவா எல்லாருக்குமே அந்த ஃபீல் இருக்கும். அடுத்த பிரபுதேவாவா இவரு வந்துட்டாருல்ல. யாருக்கா இருந்தாலும் அந்த ஃபீல் இருக்கும். பர்ஸ்ட் குழந்தை எல்லாருக்கும் கிடைச்சிடாது. அது கடவுளின் வரம்னே சொல்லலாம் என்கிறார் ரமலாத்.

    நெகடிவா பேசறது, புலம்புறதுன்னு எதுவுமே கிடையாதாம். பசங்களுக்கு என்ன பாடம் பிடிக்குமோ அதையேத் தான் படிக்க வைப்பாராம். பசங்க எங்கே போனாலும் எங்கிட்ட சொல்வாங்க. சொல்லாம எங்கேயும் போக மாட்டாங்க. அப்பாவிடம் போய் இருக்கும்போதும் ஜாலியா இருப்பாங்க. பசங்களுக்கு ஏதாவது தேவைன்னா உடனே செய்து கொடுப்பார்.

    எனக்கு 5 குழந்தை பெத்துக்கணும்னுதான் ஆசை. ஆனா சிசேரியன் என்றதால் அது முடியலை. என் பசங்களைத் திட்டுனதோ, அடிச்சதோ கிடையாது. பசங்களை அடிச்சி வளர்த்தா அதே பழக்கமான நாம என்ன பண்ணினாலும் அடிக்கிறாங்க. அதனால நாம என்னவேணாலும் பண்ணிட்டுப் போகலாம்னு நினைக்கத் தோணும். அதே மாதிரி ஃப்ரண்ட்லியா வளர்த்தா அவங்களா நம்மகிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவாங்க என்கிறார் ரமலாத்.

    குழந்தைகளைத் தைரியமா வளர்க்கணும். தன்னம்பிக்கையை நம்மதான் உருவாக்கிக்கணும். நம்மளால முடியும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தாலே நாம குழந்தைகளை ரொம்ப அழகா வளர்த்துடலாம் என்கிறார் ரமலாத்.

    ரமலாத்துக்கு முதல் குழந்தை உடல்நலம் இல்லாமல் தவறிவிட்டாராம். அந்த நேரம் ரொம்ப போராட்டம். முதல் பையனையே நினைச்சிக்கிட்டு இருந்தா இவங்க ரெண்டு பேரையும் வளர்க்க முடியாது. இவங்களும் சோகமாகவே இருப்பாங்க. சிரிக்க மாட்டாங்க. அதனால நான் என்னை மாத்திக்கிட்டேன். மாதந்தோறும் திருவண்ணாமலைக்குப் போயிடுவேன். எனக்குப் பிடிச்சது கடவுள் சிவா தான். மனசுக்கு கஷ்டமா இருக்கும்போது இவரைத்தான் நான் நினைப்பேன்.

    டைவர்ஸ்சுக்கு அப்புறம் பெண்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். அப்படி இல்லன்னா எதையுமே ஃபேஸ் பண்ண முடியாது. அப்படின்னா கண்டிப்பா நமக்கு தைரியம் வரணும். யாருக்கிட்டேயும் டைவர்ஸ் ஆகிட்டான்னு கேட்கக்கூடாது. நமக்கு லவ் மேரேஜா இருந்தாலும் 2 வருஷம் கழிச்சி குழந்தைங்க மேலதான் லவ்வைக் காட்டுவோம். கணவர் மேல இருக்குற கோபத்தைக் குழந்தைங்கக் கிட்ட காட்டக்கூடாது என்கிறார் ரமலாத்.

    பிரபுதேவா, நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார் என்றும் தன்னோட பிரிவுக்குக் காரணம் நயன்தாராதான்னு ரமலாத் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நயன்தாரா கிரேட் எஸ்கேப்!.. கமல்ஹாசனுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுத்த த்ரிஷா!.. ‘டல் லைஃப்’

    கமல்ஹாசன் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நயன்தாரா. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கிடைத்தால் நடிப்பேன் என நயன்தாரா விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

    கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணியாற்றும் தக் லைஃப் படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயின் என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால், இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான், ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் கம்பியை நீட்ட, சிம்பு உள்ளே வருகிறார் என்றதுமே நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

    ஆனால், உண்மையாகவே படத்தின் கதையை கேட்ட பின்னர், தான் நயன்தாரா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்து நம்ம பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்திருப்பார் என சமூக வலைதளத்தில் தற்போது நயன்தாரா ரசிகர்கள் த்ரிஷாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    நடிகை த்ரிஷாவுக்கும் கமல்ஹாசனுக்கும் செட்டே ஆகாது என்று தான் தெரிகிறது. இதுவரை அவருடன் இணைந்து நடித்த 3 படங்களும் படுதோல்வியையே சந்தித்துள்ளன. கமல்ஹாசன் உடன் முதன் முதலில் 2010ம் ஆண்டு த்ரிஷா இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஃபிளாப் படம் தான்.

    அதன் பின்னர், 2015ல் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த தூங்காவனம் படமும் தோல்விப் படமாகவே மாறியது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வந்த த்ரிஷா மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்த நிலையில், அதை மட்டுமே நோட் செய்த ரசிகர்கள் த்ரிஷாவுக்கும் கமலுக்கும் செட்டே ஆகாது என்றும் கமலுக்கு ஹாட்ரிக் தோல்வியை தற்போது தக் லைஃப் படத்தின் மூலம் த்ரிஷா கொடுத்து அதை நிரூபித்து விட்டார் என்கின்றனர்.