Tag: நிவின் பாலி

  • சர்வம் மாயா செம ஹிட்.. நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு ரெடியாம்!

    சர்வம் மாயா செம ஹிட்.. நிவின் பாலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு ரெடியாம்!

    இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தாமதமாகி, நீண்ட நாட்களாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    இந்நிலையில், தற்போது இந்த படத்தை மிக விரைவில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    இப்படம் Rotterdam மற்றும் Moscow போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, வெளிநாட்டு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது. நிவின் பாலி நடித்த சர்வம் மாயா திரைப்படம் 150 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அவரது படங்களின் ரிலீஸில் இருந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

    கதைக்களத்தைப் பொருத்தவரை, ஒரு சாதாரண மனிதன் மற்றும் மர்மமான அம்சங்கள் கொண்ட சில கதாபாத்திரங்கள் இடையே நடைபெறும் விசித்திரமான சம்பவங்களை மையமாகக் கொண்டு, ரயில் பயணத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு தனித்துவமான கற்பனை கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

    மேலும், இயக்குநர் ராம் அவர்களின் ”கற்றது தமிழ்” போன்ற படங்களில் காணப்படும் ரியலிஸ்டிக் மற்றும் ஆழமான உணர்ச்சி அணுகுமுறை, இந்த படத்திலும் இடம்பெறும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், கோல்டன் ஸ்பாரோ நிறுவனம் இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், நீண்டநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்துக்கும் ஏதாவது வழி பிறந்தால் நல்லா இருக்கும்.

  • Baby girl review: நிவின் பாலிக்கு கை கொடுத்ததா?- பேபி கேர்ள் விமர்சனம்

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேபி கேர்ள்.அருண் வர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் நிவின் பாலியுடன் ஜெய் பீம் புகழ் லிஜோ மோல், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் இருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை காணாமல் போவதும் அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை புலனாய்வு திரில்லராக உருவாகியுள்ளது இப்படம்.

    சர்வம் மயா படத்தின் வெற்றிக்கு பிறகு நிவின் பாலி நடிக்கும் படம் என்பதால்,இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்பதே உண்மை. நிவின் தனக்கான வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இப்படம் சிறந்த கம்பேக் என்று கேரள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதேபோல், லிஜோ மோலின் நடிப்பும் அற்புதமாக உள்ளது. சாம் சி.எஸ்-ன் இசை த்ரில்லர் படத்திற்குத் தேவையான பதற்றத்தை அதிகரிக்கிறது.

    படத்தின் முதல் பாதியில் அதாவது இடைவேளை வரை அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பில் செல்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தொய்வாகவே உள்ளது. ஆனாலும் குறைகளை தவிர்த்து பார்த்தால் இப்படம் திரில்லர் பட ரசிகர்களுக்கு செம ரீட்டாகவே உள்ளது.

    கேரளாவை பொருத்தவரை இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று கேரள திரையுலகில் பேசப்படுகிறது.

  • சூரியை வெளுத்து வாங்கும் நிவின்பாலி.. ஏழு கடல் ஏழு மலை படம் டிரெய்லர் எப்படி இருக்கு?..

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எப்போதும் தனித்துவமாக இருக்கும். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

    தற்போது மலையாள நடிகரான நிவின்பாலியை வைத்து ஏழு கடல் ஏழுமலை என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கின்றார். வி ஹவுஸ் ப்ரோடக்‌ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து இருக்கின்றார்.

    கடந்த ஒரு வருடமாக இப்படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

    இந்த திரைப்படத்தின் க்ளிப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கின்றது. ஒரு வித்தியாசமான கதையை நிவின் பாலி மற்றும் சூரியை வைத்து இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ராம்.

    தற்போது வெளியான ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது ரயிலில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. ஒரு இரவில் இரண்டு நபர்கள் சந்திக்கிறார்கள். அதில் ஒருவர் மரணமற்ற நபராக இருக்கின்றார். அவர் தான் நிவின் பாலி. ரயில் பயணத்தின் நடுவே இரண்டு நபர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. மேலும் நிவின்பாலி நடிகர் சூரியை அடித்து பொளந்து கட்டுகின்றார். இந்த ட்ரெய்லரில் நடிகை அஞ்சலி மாய பெண்ணாக காட்டுப்பட்டிருக்கின்றார். மேலும் நிவின்பாலி ஒரு எலியை பத்திரமாக பார்த்துக் வருகின்றார்.

    பார்ப்பதற்கு ஹாரர் திரைப்படம் போல உணர்வை கொடுத்திருக்கின்றது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

  • சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருந்த முக்கிய பிரபலம்!.. மிஸ்ஸான கூட்டணி… இப்பவும் சான்ஸ் இருக்கு?!…

    சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்தில் நடிகர் பகத் பாஸில் நடிக்க இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்க முடியாமல் போனதாம்.

    சிவகார்த்திகேயனின் அமரன் படம்: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் வெளியான நாள் முதலே தற்போது வரை திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது.

    இதையும் படிங்க: Thuppakki: துப்பாக்கி படத்தில் விஜயே இல்லை!.. அமரன் பட இயக்குனர் சொல்றத கேளுங்க!..

    வசூல் சாதனை: படம் வெளியான முதல் நாளிலிருந்து மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கின்றது. நெகட்டிவ் விமர்சனங்களே இல்லாமல் இப்படம் தற்போது வரை திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. முதல் மூன்று நாளிலேயே 100 கோடி வசூல் செய்த அமரன் படம் தொடர்ந்து 12 நாட்களில் 250 கோடியை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. விரைவில் 300 கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகின்றது.

    சிவகார்த்திகேயனின் மார்க்கெட்: அமரன் திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் எங்கேயோ சென்று விட்டது. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களின் வசூலை அமரன் திரைப்படத்தின் மூலமாக முறியடித்து உச்சத்திற்கு சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மிக பிஸியான நடிகராக மாறி இருக்கின்றார்.

    கைவச படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைய இருக்கின்றது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும், அதற்கு அடுத்ததாக சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

    புறநானூறு: சூர்யா நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் அதர்வா நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பஹத் பாசில்: புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் பஹத் பாசிலை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது. பஹத் பாசிலுக்கு படத்தின் கதை பிடித்திருந்த காரணத்தால் முதலில் தான் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கின்றார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதன்பிறகு தான் தற்போது நிவின்பாலி அந்த கதாபாத்திரத்திற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகின்றது.

    இதையும் படிங்க: Kanguava: சொந்த ஊர்ல பிரச்சினை முடிஞ்சு பக்கத்து ஊர்ல பஞ்சாயத்தா? எவ்வளவுதான் தாங்குவாரு ‘கங்குவா’?

    மற்றொரு வாய்ப்பு:  இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் துவங்க இருப்பதால் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் பஹத் பாசில் நடித்திருப்பார். மீண்டும் புறநானூறு திரைப்படத்தில் இவர்கள் கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

  • கேரளாவில் அடுத்த விக்கெட்!.. நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!..

    Nivin pauly: பாலியல் புகாரில் மலையாள நடிகர்கள் சிக்கி வருவது கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமா உலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆராய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியும் அதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது.

    ஆனால், அதில் என்னென்ன சொல்லி இருந்தது என்கிற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில்தான், அதில் இருந்த தகவல்கள் சமீபத்தில் வெளியே கசிந்து கேரள திரையுலகை அசைத்து போட்டது. நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, பாபுராஜ், முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, எடவேல பாபு மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்கள் மீது திரையுலகை சேர்ந்த சில பெண்கள் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அம்மா என அழைக்கப்படும் கேரள நடிகர் சங்கத்தில் தலைவர் மோகன்லால் மற்றும் பலரும் தங்களின் பதிவியை ராஜினாமா செய்துவிட்டனர். நடிகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததற்கு நடிகை பார்வதி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நிவின்
    நிவின்

    ஆனால், விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் என்ன சொல்ல முடியும் என சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார் மோகன்லால். ஒருபக்கம், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி போல ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

    இந்நிலையில், பிரேமம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நிவின் பாலியும் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியிருக்கிறார். பட வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி வெளிநாட்டில் வைத்து தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

    இதன்பேரில் எர்ணா குளத்தில் உள்ள காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பாலியல் புகாரில் முக்கிய நடிகர்கள் சிக்கி வருவது கேரள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • நம்ம ஊர்ல எப்போ ரிலீஸ் பண்றீங்க!.. விருது விழாவில் தயாரிப்பாளரிடம் போட்டு வாங்கிய ராம்!..

    சர்வதேச திரைப்பட விருது விழாவான ரோட்டர்டாமில் ஏழு கடல் ஏழு மலை படம் பெரிய படங்களுக்கான போட்டியில் பங்கேற்று இன்று திரையிடப்பட்டது. அதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் ஹீரோ நிவின் பாலி, ஹீரோயின் அஞ்சலி மற்றும் நடிகர் சூரி படத்தின் இயக்குநர் ராம் உடன் நெதர்லாந்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கே படக்குழுவினர் முதல் முறையாக ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு வந்ததே பெரிய விஷயமாக இருக்கிறது என சூரி, அஞ்சலி மற்றும் நிவின் பாலி தெரிவித்தனர். அதற்காக இயக்குநர் ராம் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: அட்லீ குழந்தைக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆகிடுச்சா!.. பிறந்தநாளை எங்கே கொண்டாடுறாங்க பாருங்க!..

    பிரேமம், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட மலையாள படங்கள் மூலம் கவனம் ஈர்த்து வந்த நிவின் பாலி மம்மூட்டியே ராம் படத்தில் நடிக்கிறாரே நாம ஒரு படத்தில் நடிக்கக் கூடாதா? என இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

    வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி உள்ள இந்த படம் சர்வதேச விருது விழாக்களுக்கு சென்று வரும் நிலையில், இது ஒரு சீரியஸான படம் என நினைக்க வேண்டாம் இது ஒரு கமர்ஷியல் படம் தான் என அஞ்சலி மற்றும் சூரி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டில் படத்தை எப்போண்ணா ரிலீஸ் பண்றீங்க என சுரேஷ் காமாட்சியிடம் போட்டு வாங்கினார் ராம். கடைசியில் மார்ச் அல்லது ஏப்ரலில் கோடை விடுமுறை கொண்டாட்ட படமாக ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர்.

     

  • ஏழு கடல் ஏழு மலை படம் இந்த கொரியன் படத்தோட காப்பியா?.. அப்படியே அந்த விஷயம் மேட்ச் ஆகுதே!..

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியான நிலையில், தற்போது அந்த படம் கொரியன் பட ரீமேக்கா? அல்லது காப்பியா? என்கிற சர்ச்சை வெடித்துள்ளது.

    கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் தங்கமீன்கள் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும், சவரக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார்.

    இதையும் படிங்க: அது மட்டும் நடந்தா செம ஃபயரா இருக்குமே!.. The GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா செய்யப் போகும் சம்பவம்!..

    மம்மூட்டியை தொடர்ந்து மலையாள நடிகரான நிவின் பாலியை ஹீரோவாக வைத்து அவர் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் நாயகன் நிவின் பாலி தனது வயது 8822 என கூறும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

    அந்த புள்ளி தான் இந்த படம் கொரியன் படத்தின் காப்பியா என்கிற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 940 ஆண்டு வயது கொண்ட காப்லின் கடவுள் தனக்கான மனைவியை தேடி பல ஆண்டுகள் அலைந்து திரிந்து கடைசியில் பிரஸன்ட்டில் அவரை கண்டுபிடிப்பது தான் அந்த கொரியன் படத்தின் கதை என்கின்றனர்.

    இதையும் படிங்க: பிரியங்கா மோகனோட அந்த 20 நிமிஷ ஃபூட்டேஜை காணோம்!.. கதறி அழும் படக்குழு.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

    தனது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கும் கத்தியை எடுக்கும் சக்தி அந்த பெண்ணுக்குத்தான் இருக்கிறது என்றும் யுகம் யுகமாய் தேடி அலைவது போன்ற கதைதான் அந்த படமும் என்றும் அதே போலத்தான் ஏழு கடல் ஏழு மலை கிளிம்ப்ஸ் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

  • எதே 8822 வயசா!.. ஓஹோ.. பைத்தியமா இவன்.. பிரேமம் ஹீரோவை இப்படி பிணாத்த விட்டுட்டாரே ராம்!

    2007ம் ஆண்டு கற்றது தமிழ் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் டைரக்டராக அறிமுகமான ராம் இத்தனை ஆண்டுகளில் இதுவரை 4 படங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?.. நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நெசம். அதிலும் ஒவ்வொரு படமும் பொக்கிஷமாக பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய படம் என்பது மறுக்க முடியாத உண்மை.

    கற்றது தமிழ் படத்தில் ஜீவாவையும் அஞ்சலியையும் நடிக்க வைத்திருப்பார். இவர் படங்களில் மட்டுமே அஞ்சலி அவ்வளவு அழகாகவும் நடிக்கத் தெரிந்த நடிகையாகவும் எப்படி மாறுகிறார் என்பதே ஆச்சர்யத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கேப்டன் மறைவிற்கு வந்திருந்தா உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்குமா? வடிவேலு பற்றி முத்துக்காளையின் பதில்

    கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு மற்றும் விரைவில் வெளியாக உள்ள ஏழு கடல் ஏழு மலை என 5 படங்களில் 3 படங்களில் அஞ்சலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

    கடைசியாக பேரன்பு படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியை இயக்கி இருந்த ராம் தற்போது மீண்டும் மலையாள நடிகரான நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை படத்தை இயக்கியிருக்கிறார். கூடவே அஞ்சலி மற்றும் சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்த படத்தின் டீசர் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு சொன்ன கதையில் நடித்த அஜித்!.. அவர் மட்டும் நடிச்சிருந்தா கன்பார்ம் ஹிட்டு…

    ராம் இயக்கும் படங்கள் எல்லாம் விருது விழாக்களில் சக்கைப் போடு போட்டு ஏகப்பட்ட விருதுகளை குவித்து வருகிறது. இந்த படமும் பல விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரில் “ஒருத்தரை ஒருத்தர் பிரிய ஆயிரம் காரணங்கள் இருக்கும்.. ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து வர ஒரே ஒரு காரணம் தான் இருக்கும்.. லவ்” என சொல்லும் வசனம் புல்லரிக்க வைக்கிறது.

    மேலும், 4000 வருஷத்துக்கு முன்னாடி ராணியாக உன்னைப் பார்த்தேன் என நிவின் பாலி அஞ்சலியிடம் பேசுவது, மற்றும் சூரியிடம் வயது கேட்க அவர் 32 என சொல்ல, எனக்கு 8822 வயது என நிவின் பாலி சொல்வதை எல்லாம் பார்த்தாலே வித்தியாசமான படமாகவே தெரிகிறது. சீக்கிரம் தியேட்டருக்கு வந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த தங்கத்தை கொண்டாடி தீர்க்க வேண்டும்.