Tag: பரதன்

  • விஜயகாந்த் சார் ஒரு தங்கம்!. அந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்!. பிரபுதேவா ஃபீலிங்…

    மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து, அதன்பின் வாய்ப்புகளை பெற்று துவக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து, இடையிடையே வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னேறியவர்தான் விஜயகாந்த்.

    அவரிடத்தில் யாராக இருந்தாலும் சினிமாவை விட்டு போய் இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் முயற்சிகள் செய்து முக்கிய இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு போட்டி நடிகராக விஜயகாந்த் மாறினார். அவர்கள் இரண்டு பேரின் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை பெற்றது..

    விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர் என்றே அவர் அடையாளம் காணப்படுகிறார். திரைத்துறையில் இவரால் வளர்ந்தவர்கள் பலர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை விஜயகாந்த் செய்யாமல் இருந்ததில்லை. எனவேதான் அவரை மரணத்திற்கு பின்னரும் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.. ஒருபக்கம் தான் ஒரு பெரிய நடிகர் என்கிற எந்த பந்தாவும் இல்லமால் எளிமையாக வாழ்ந்தவர்தான் விஜயகாந்த்.

    1992ம் வருடம் வெளியான பரதன் படத்தில் புன்னகையில் மின்சாரம் என்ற பாடலுக்கு விஜயகாந்த் பானுப்பிரியாவுடன் இணைந்து அசத்தலாக நடனமாடியிருப்பார். அந்த பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் பிரபுதேவா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘விஜயகாந்த் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது.. அவருடைய பரதன் படத்துல ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலுக்கு நான் டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சேன்.

    எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவுல வந்த பாட்டிலேயே அதிக கட் இருக்கிறது அந்த பாட்டுதான். அந்த ஒரு பாட்டை 10 நாள் எடுத்தோம். அந்த பாட்டு எடுத்தப்ப அவர் பீக்ல இருந்தார்.. ஆனால் நான் என்ன பண்ண சொன்னேனே அது அப்படியே பண்ணினார். அதுதான் அவருக்கு முதல் சினிமா மாதிரி நடந்துகிட்டார்.. அவர் ஒரு தங்கம்.. அவர் மாதிரி வராது’ என புகழ்ந்து பேசியிருக்கிறார்.

  • நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்… சிவாஜியை சமாளித்த கமல்..!

    கமல், சிவாஜி இணைந்து நடித்த தேவர் மகன் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இந்தப் படத்தின்போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

    கமல் தயாரிப்பில் சிவாஜி நடித்த முக்கியமான படம் தேவர் மகன். அந்தப் படத்தின் இயக்குனர் பரதன். அவருக்கு சிவாஜி நடித்த ஒரு காட்சி திருப்தியா இல்லை. ஆனா அவருக்கிட்ட இன்னொரு முறை நடித்தா நல்லாருக்கும்னு சொல்லத் தயங்கினார்.

    அதனால அந்த விஷயத்தைக் கமலிடம் சொல்கிறார். அதற்கு கமல் என்னன்னு சொல்லி அவரை இன்னொரு முறை நடிக்க சொல்றதுன்னு கமல் கேட்கிறார். எனக்கு என்ன செய்வீங்களோ தெரியாது. ஆனா அவரு இன்னொரு முறை நடித்தா அந்தக் காட்சி நல்லாருக்கும்னு சொன்னாராம்.

    சிவாஜியிடம் அதை எப்படி சொல்வதுன்னு இவர்கள் இருவரும் தவிப்பதைப் பார்த்தார் சிவாஜி. ‘என்னப்பா நான் நடிச்சது நல்லாலையா… என்ன சொல்றாரு அவரு?’ன்னு கமலிடம் சிவாஜி கேட்கிறார். சிவாஜியே அப்படிக் கேட்டதும் கொஞ்ச நேரம் தவித்த கமல், ‘இன்னொரு டேக் எடுத்தா நல்லாருக்கும்னு பரதன் ஃபீல் பண்றாரு’ன்னு சொன்னார்.

    TM
    TM

    ‘ஏன் நான் நடிச்சது நல்லாலையா’ன்னு சிவாஜி கேட்க, ‘ஆமாம்’ என்கிற மாதிரி தலையை ஆட்டி இருக்கிறார் கமல். ‘என்னவாம்னு கேளு. நான் திரும்ப நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி. அவர் அப்படி சொன்னதும் சூழ்நிலையை மிக அழகாக சமாளித்தவர் தான் கமல். படத்தில் சிவாஜி பெரிய தேவராக நடித்துள்ளார். ஆனால் அந்தக் காட்சியில் சின்னத்தேவராக நடித்தது போல இருந்ததாம்.

    பரதன் இதைச் சொன்னதும் அந்தக் காட்சியில் மீண்டும் நடித்த சிவாஜி அவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை எல்லாம் ஒரு படி தாண்டி சிறப்பாக நடித்தாராம். அப்போது யூனிட்டில் உள்ள எல்லாரும் கைதட்டி ரசித்தார்களாம். இப்படி யார் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் நடிக்கும் பெருந்தன்மைக்கு உரியவர் சிவாஜி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.