Tag: பிக் பாஸ்

  • யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..

    யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..

    பிக் பாஸ் பிரபலமான மாயாவின் உடன்பிறந்த சகோதிரியான பாடகி ஸ்வாகதா தான் இசைதுறையை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்வாகதா தன் மூன்றாம் வயதிலிருந்து இசையை கற்றுக்கொண்டு சுமார் 15 ஆண்டுகளாக் முன்னணி பாடகியாக வலம் வந்தார். இவர் இஸ்பேட் ராஜா இதய ராணி, வஞ்சகர் உலகம், நோடா, காற்றின் மொழி உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மியூசிக் ப்ரொடியுசர் மற்றும் மியூசிக் இன்ஜினியர் ஆக சென்னையில் வேலைப் பார்த்திக்கொண்டிருந்த ஸ்வாகதா தற்போது அனைத்தையும் விட்டு விட்டு ரிஷிகேஷில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் சிவசங்கரி டால்க்ஸ் என்ற யூடியுப் சேனலில் ஸ்வாகதா பாடகியில் இருந்து தொழிலதிபராக மாறிய காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிஷிகேசில் இயற்கை வளங்களை கொண்டு காட்டன் துணிகளை கைகளாலே நெய்து விற்கும் தொழில் செய்யும் ஸ்வாகதா நான்கு பெண்களுடன் பிறந்தவர். ஒரு இசையமைப்பாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து தப்பிபதற்காக தான் நான் ரிஷிகேஷ் வந்தேன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் பெயரை சொல்ல முடியாது அதுக்கென்று ஒரு நாள் வரும் போது நான் கூறுகிறேன். அவர் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்று பெயர் பெற்றிருந்தாலும், பியானோவை கூட சரியாக வாசிக்கத் தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது எப்படி என எனக்கு புரியவில்லை. அந்த இசையமைப்பாளர் என்னிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட பிறகு, அவர் தொட்ட இடத்தில் இருந்த தோலை நீக்கி, புதிதாக தோல் உருவாகும் சிகிச்சையை கூட மேற்கொண்டேன். எனது மொபைலில் கூட அவரது பெயர் தோன்றாத வகையில் அமைப்புகளை மாற்றி வைத்திருந்தேன்.

    இப்போது அந்த பயமும், மன உளைச்சலும் அனைத்தையும் கடந்து வந்துவிட்டேன். இன்று நான் தைரியமாக நிற்கும் பெண்ணாக மாறியுள்ளேன். என்னுடன் மட்டுமல்லாமல், பல பெண்களிடமும் அவர் இதேபோன்று தவறாக நடந்துகொண்டுள்ளார். அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர சிலருக்கு நான் உதவியுள்ளேன். இந்த விஷயம் அவரது மனைவிக்கும் தெரியும்; அதனை அறிந்த பின்னரும் அவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் மோசமான நபர் அவர். சிறிய குழந்தைகள் பாட வரும்போது கூட, சிசிடிவி மூலம் அவர்களை கவனிக்கும் கொடூரமானவர்.

    மேலும், உறுதியான ஆதாரங்களுடன் அந்த இசையமைப்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். தற்போது அதற்கான தைரியம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த பேட்டிக்குப் பிறகு, அந்த இசையமைப்பாளர் யார் என்று பலரும் யூகித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

  • ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஒரு நாவலை படித்த அனுபவத்தை தரும்”.. ஜி.வி. பிரகாஷ் குமார் எமோஷனல்!

    ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஒரு நாவலை படித்த அனுபவத்தை தரும்”.. ஜி.வி. பிரகாஷ் குமார் எமோஷனல்!

    இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து கலக்கி வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக ஒருபக்கம் பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை சென்றடைந்த இசையை உருவாக்க வாய்ப்பு கொடுத்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி. இசையமைப்பாளராக ஒரு வலுவான அடித்தளத்தை எனக்கு அமைத்து கொடுத்த படங்களில் அது முக்கியமானது. மனித உறவுகளை அவர் படங்களில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமும், நுணுக்கமும், நேர்மையும் கலந்த அந்த அணுகுமுறையால் அவரது படங்களை ஒரு நாவலை திரையில் காண்பது போல உணர வைக்கும்.

    ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லாத ஒரு கதையை பல உணர்வுகளுடன் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். ‘பிரேக்ஃபாஸ்ட்’ அப்படியான ஒரு படம். இன்றைய காலத்தில் உறவுகளின் சிக்கல்களையும், மனிதர்களின் உணர்வுகளை பற்றியும் இந்தப் படம் திரையில் பேசும். இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது, கதை ஓட்டத்துடன் இயல்பாக கலந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது காட்சிகளை மீறி ஒலிக்காமல், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, அவர்களின் உணர்வுகளை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தப் படத்தின் பாடல்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படத்தை பெரிய திரையில் ரசிகர்களுடன் காண ஆவலாக உள்ளேன்” என்றார்.

  • பிரேக்ஃபாஸ்ட் என்ன மாதிரியான படம் தெரியுமா?.. இளம் நடிகை ரோஸ்மின் ஓபன் டாக்!..

    பிரேக்ஃபாஸ்ட் என்ன மாதிரியான படம் தெரியுமா?.. இளம் நடிகை ரோஸ்மின் ஓபன் டாக்!..

    மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, “‘செல்லமே’ படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், ‘ஆனந்ததாண்டவம்’ படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை”.

    மேலும், “‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

    இப்படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஏப்ரல் 24 அன்று ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

  • ஆமையுடன் கடலில் ரேஸ் விட்ட பிக் பாஸ் வர்ஷினி.. நீச்சல் உடையில் சும்மா இணையத்தையே சூடாக்குறாரே!..

    ஆமையுடன் கடலில் ரேஸ் விட்ட பிக் பாஸ் வர்ஷினி.. நீச்சல் உடையில் சும்மா இணையத்தையே சூடாக்குறாரே!..

    நடிகை வர்ஷினி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது நீச்சலுடையில் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் அவரது வீடியோ வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

    வர்ஷினி ஒரு நடிகை, மாடல் மற்றும் பாடகி ஆவார். இவர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், வெறும் 22 நாட்களில் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த காதல் ஜோடிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பங்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதால், சிலரால் விமர்சிக்கப்பட்டார். அதே சமயம், அவரது கவர்ச்சியான தோற்றத்திற்காக அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது.

    மேலும், கடந்த ஆண்டு சந்தானம் நடித்த DD Next Level படத்தில் சிறிய ஆனால் கவர்ச்சியான காட்சியில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சொட்ட சொட்ட நனையுது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு, தன்னிடம் வரும் பட வாய்ப்புகளை வர்ஷினி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

    சமீப காலமாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அவர், தற்போது பிகினி உடையில் கடலில் மீன்கள் மற்றும் ஆமைகளுடன் நீந்திக்கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு, மீண்டும் தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்த சம்மருக்கு ஏற்ற சரியான வீடியோ இதுதான் என்றும் அந்த ஆமை போலவே உங்க பிகினியும் இருக்கு, மீன், ஆமையெல்லாம் கடித்து விடாதா, பயமே இல்லை உங்களுக்கு என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

  • எங்கப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு!.. எங்க அம்மாவை ராஜகுமாரி மாதிரி பார்த்துப்பேன் – அன்ஷிதா!

    பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை அன்ஷிதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தாயுடன் கலந்துக்கொண்டு அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றை வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செல்லம்மா” தொடரின் மூலம் அன்ஷிதா அறிமுகமானார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து கபானி, கூடேவிடே போன்ற மலையாள சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல் பங்கேற்று 84 நாட்கள் வரை விளையாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

    பேட்டி ஒன்றில் அன்ஷிதா, தன் தாயிற்கு 13 வயதிலேயே திருமணமானது, 15 வயதில் அண்ணன், 17 வயதில் நான் பிறந்தேன், 20 வயதில் விவாகரத்தும் ஆனது. என்னால் அம்மா வந்து இங்க உட்காரல அவங்கலால தான் நான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். அம்மா 8ம் வகுப்பு வரை படித்ததால் இங்கே வேலை இல்லை அதனால் எங்களை என் பாட்டியிடம் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தார். ஒரு வருடத்திற்கு ஒரு முறை வந்து எங்களையும் பார்ப்பார்.

    சுமார் 9 வருடங்களாக் அவர் வெளிநாட்டில் வேலை பார்த்த பின் எனக்கு 18 வயதாகியதும் சினிமாவில் நடிக்க தொடங்கி குடும்பத்தின் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். எல்லாரையும் நம்பி ஏமாந்திட்டேன். என்னுடைய அப்பாவும் ரொம்ப நல்லவர் தான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடால் தான் பிரிந்துள்ளனர். ஆனால் அப்பாவுக்கு இன்னொரு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. இத்தனை வருடங்கள் எங்களை தனியாக வளர்த்தும் அப்பாவை எங்கேயும் விட்டுகொடுக்க மாட்டாங்க என் அம்மா.

    ஷூட்டிங் போயிட்டு வரும் போது ஒவ்வோரு டைம்ல, வேற வண்டில வரும் போது எல்லாரும் ஒருமாதிரி பேசுவாங்க. பல கெட்ட நண்பர்களை நம்பி அவங்க கூட ட்ராவல் பண்றதுனால தான் என்னுடன் நெகடிவிட்டியும் கூடவே வருது. இப்போ நான் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவங்க கூட தான் பழகுறேன் அவங்க தான் என் உலகம். இப்போ என் அம்மாவா நான் ராஜகுமாரி மாதிரி பார்த்துகுறேன் என்றார்.

  • ராஜு ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு?.. சுடச்சுட விமர்சனம் இதோ!

    விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு 4வது சீசனில் எப்படி மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஆரி அர்ஜுனன் டைட்டிலை வென்றாரோ அதே போல 5வது சீசனில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து மக்கள் வாக்குகளில் முன்னிலை வகித்து டைட்டில் வென்ற ராஜு ஜெயமோகன் படங்களை இயக்கப் போவதாக அறிவித்தார். வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் இவரை வாழ்த்திய நிலையில், அவர் தயாரிப்பில் படம் பண்ணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ஹீரோவாகவே பன் பட்டர் ஜாம் படத்தில் நடித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ரிலீஸையும் செய்துள்ளார். பிக் பாஸ் ராஜு தனது பேச்சால் அபிஷேக் ராஜாவையே ஆஃப் செய்ததை பிக் பாஸ் வீட்டில் பார்த்திருப்போம். அதே பேச்சுத் திறமையுடன் நன்றாக நடிக்கக் கூடிய நபர் நான் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

    ஆதியா, பாவ்யாத்ரிகா என 2 ஹீரோயின்களுடன் அவர் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க, ஆதியாவின் அம்மா தேவதர்ஷினியும் ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகின்றனர்.

    அரேஞ்ச் மேரேஜை அம்மாக்களே லவ் மேரேஜாக மாற்ற முயலும் போது, ராஜுவுக்கும் பாவ்யாவுக்கும் இடையே கல்லூரியில் காதல் மலர், கடைசியில் அம்மா பார்த்த பெண்ணை ராஜு திருமணம் செய்தாரா? அல்லது தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா? என்கிற ட்விஸ்ட்டுடன் படத்தை சுபம் போட்டு முடித்துள்ளனர்.

    விஜய் டிவி பப்புவின் காமெடி காட்சிகள், விக்ராந்தின் கேமியோ, சார்ளியின் நிதானமான நடிப்பு படத்துக்கு பக்க பலமாக இருந்துள்ளது. சில இடங்களில் வரும் அடல்ட் காட்சிகள் மற்றும் இளைஞர்களை கவர்வதற்காக செய்த சில லாஜிக் மீறல்கள் படத்தை சற்றே தொய்வடைய செய்கிறது.

    முதல் பாதி ரொம்பவே லெந்தாக நகர்வது படத்துக்கு பிரச்சனையாக மாறிவிடுகிறது. ஆனால், 2ம் பாதியில் படத்தை அங்கே சுற்றி, இங்கே சுற்றி ஒரு வழியாக வட்டத்துக்குள் கொண்டு வந்து முடித்து விட்டனர். இந்த ஆண்டு தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வரிசையில் பன் பட்டர் ஜாம் ஹிட் அடிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் வெளியான மற்ற படங்களை வசூல் ரீதியாக இந்த படம் வெல்லும் என்பது தெளிவாக தெரிகிறது.

    பன் பட்டர் ஜாம் ரேட்டிங்: 3.25/5

  • ஜோடியாக திருவண்ணாமலைக்குப் போன பிக் பாஸ் பிரபலங்கள்!.. பூர்ணிமா ரவி யாரு கூட போயிருக்காரு பாருங்க!

    சில நாட்களாக பிரபலங்கள் தொடர்ந்து திருப்பதி மற்றும் திருவண்ணாமலை கோவில்களை தரிசத்து வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலங்களான நிக்‌ஷன் மற்றும் பூர்ணிமா இருவரும் ஜோடியாக சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

    நிக்‌ஷன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இல் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் அந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். நிக்‌ஷன் அந்த சீசனில் பிரபலமான போட்டியாளராக இருந்தாலும் பிக் பாஸ் டைட்டிலை அர்ச்சனா ரவிச்சந்திரன் அள்ளிக் கொண்டு போனார்.

    நிக்ஷன் பொதுவாகவே ஒரு ராப் பாடகர், அவரது பாடல்கள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக அவரது பைத்தியக்காரன் , வேற மாதிரி போன்ற பல பாடல்கள் இளைய தலைமுறையினர்களிடையே பரவலாக கவரப்பட்டது. மேலும், நிக்‌ஷன் சில தமிழ் திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் பங்களித்துள்ளார்.

    நடிகை பூர்ணிமா ரவியும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றார். பூர்ணிமா அந்த சீசனில் மோதல்களை பொறுமையாக தீர்க்கும் திறனுக்காகவும், நிகழ்ச்சியில் தனித்துவமான ஆளுமைக்காகவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டார். மேலும், அவருடன் பங்கேற்ற மாயாவுடன் இருந்த பழக்கத்தால் நெகட்டிவான விமர்சனங்களையும் பெற்றார். இவர் அந்த நிகழ்ச்சியில் 16 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

    பூர்ணிமா தனது யூடியூப் சேனலான ”ஆரத்தி” மூலம் அறியப்பட்டார். மேலும், “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி தனது யூடியூப் சேனல் மூலம் பலரை ஈர்த்தவர். இவரது நகைச்சுவை உணர்வும், இயல்பான பேச்சும் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் இன்று நிக்‌ஷன் மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் ஜோடியாக சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் நண்பர்களாக மட்டும் பழகி வருகிறார்களா? அல்லது காதலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திடீர் கோயில் விசிட்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • ஓவர் குடி உடம்புக்கு ஆகாதும்மா!.. செம மப்புல மட்டையான இளம் நடிகை.. காரில் ஏற கூட முடியலையே!..

    இந்தி பிக் பாஸ் பிரபலமான உர்ஃபி ஜாவேத் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு சொந்தக்காரியாகவே சோஷியல் மீடியாவில் சுற்றி வருகிறார். ஆடையே அணியாமலும், வெறும் டேப்புகளை தனது உடல் பாகங்களில் ஒட்டிக் கொண்டும் உர்ஃபி ஜாவேத் வித விதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தன்னைத் தானே பிரபலம் ஆக்கிக் கொண்டார்.

    அதன் பலனாக சன்னி லியோன் தொகுத்து வழங்கி வரும் எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் காதலர்களை பிரிக்கும் சூழ்ச்சிக்காரியாகவே ஏகப்பட்ட வேலைகளை செய்து ரசிகர்களின் திட்டுக்களை குவித்து வருகிறார்.

    இந்தி டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் ஓடிடி ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை பெற்றுள்ள உர்ஃபி ஜாவேத் நேற்று இரவு நடைபெற்ற ஒரு பிரைவேட் பார்ட்டிக்கு சென்று ஃபுல்லாக குடித்து விட்டு தனது காருக்கு வரவே தட்டுத் தடுமாறி தோழிகளுடன் உதவியுடன் வரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஏற்கனவே பாலிவுட்டில் போதை கலாச்சாரம் தலை விரித்து ஆடி வரூம் நிலையில், பல பிரபல நடிகர்களும், நடிகைகளும் போதைப் பார்ட்டியில் ஃபுல் மப்பில் இருக்கும் வீடியோ ஒன்றும் வைரலாகி வந்த நிலையில், லேட்டஸ்ட்டாக உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

    நடிகைகள் பார்ட்டிக்கு சென்று விட்டும், பப்புக்கு போய் சரக்கடித்து விட்டும் இரவு வீடு திரும்பும் போது இப்படித்தான் மோசமாக இருப்பார்கள் என்றும் அதே போதையுடன் கார் ஓட்டிக் கொண்டு சென்றால் விபத்துகளும் ஏற்படும் என்றும் உர்ஃபி ஜாவேத்தின் வீடியோவை பார்த்து பல பாலிவுட் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

    கிறுக்குத்தனமாக வைரலாக இப்படியொரு வீடியோவை அவரே கூட வெளியிட்டு இருக்கலாம் என்றும் அவரது நண்பர்கள் தான் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு நடிகைக்கான பப்ளிசிட்டியை தேடுகின்றனர் என்றும்

  • என்ன நல்லா ஏமாத்திட்டாங்க!.. சினிமாவை விட்டே விலகுறேன்!.. பிக் பாஸ் பிரபலம் எடுத்த திடீர் முடிவு!..

    பிக் பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், திடீரென சினிமாவை விட்டே தான் விலகப் போவதாக அறிவித்துள்ளார். மாடலிங் துறையில் மாடலாக வலம் வந்தவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

    யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்றும் நண்பர் என்றும் கூறப்பட்ட பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவே யாஷிகா ஆனந்த் தான் காரணம் என்கிற தகவல்களும் அப்போது கசிந்தன.

    பிக் பாஸ் வீட்டுக்குள் பாலாஜி முருகதாஸுக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது. பிக் பாஸ் வீட்டுக்கு வெளியேவும் இருவர் மத்தியிலும் சண்டை வெடித்தன. ஜோ மைக்கேல் என்பவருக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் சோஷியல் மீடியாவில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

    கடந்த ஆண்டு ஹீரோவாக வா வரலாம் வா படத்தில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கு அந்த படம் ஓடவே இல்லாத நிலையில், அப்செட் ஆனார். ஆனால், அதன் பின்னர் அருண் விஜய்யுடன் இணைந்து ரெட்ட தல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அருண் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், ஜேஎஸ்கே கார்ப்பரேஷன் எனும் நிறுவனம் தனக்கு சம்பளமே தராமல் படத்தில் நடிக்க வேலை வாங்கி வருகிறது என்றும் ஒரு ரூபாய் கூட இதுவரை சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார் அந்த பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் என பாலாஜி முருகதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன். நான் இதை விட்டு விட்டு வேற வேலையை பார்க்கப் போகிறேன் என்றும் அந்த தயாரிப்பாளரையும் கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டுள்ளார்.

  • கையில கூட வச்சிக்கிட்டு மார்க்கெட் போன பொண்ணு!.. வசதி வந்தும் நிலைமை மாறலையே ஜூலி!..

    ஜல்லிக்கட்டுக்காக மெரினா புரட்சி செய்த வீரத் தமிழச்சி ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபிறகு 5 நிமிஷம் ஜூலியென அசிங்கப்பட்டார். கம்பேக் இந்தியன் என அழைத்த ரசிகர்கள் படம் சரியாக இல்லை என்றதும் கோ பேக் இந்தியன் என கழுவி ஊற்றியதை போலவே ஜூலியின் நிலைமையும் மாறியது.

    ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி பலருக்கு உதவி செய்து வருவது மற்றும் விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டேன் எனக் கூறியதும் அவருக்கு ரசிகர்கள் மீண்டும் ஆதரவை தெரிவித்தனர்.

    சோஷியல் மீடியா போரளிகள் டிரெண்டுக்கு ஏற்றது போல கண்மூடித்தனமாக ஓடக் கூடியவர்கள் என்பதை ஜூலியும் நிரூபித்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த ஜூலி, திடீரென ஆளே காணாமல் போன நிலையில், சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பதிவுகளை ஜூலி போட்டு வந்தாலும் இன்னமும் அவருக்கு 2 லட்சம் ரசிகர்கள் தான் உள்ளனர். பல நாள் கழித்து திடீரென போட்டோஷூட் நடத்திய ஜூலி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    ஸ்டைலிஷான உடையை அணிந்துக் கொண்டு ஹேண்ட்பேக்கை கையில் வைத்துக் கொண்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ள ஜூலியை பார்த்த நெட்டிசன்கள் சிலர், வசதி வந்த பின்பும் கையில் கூடையை தூக்கிக் கொண்டு மார்க்கெட் போய் மீன் வாங்கும் பழக்கத்தை ஜூலி விடலையே குட் கேர்ள் என கலாய்த்து வருகின்றனர்.

    கடந்த மாத இறுதியில் நடிகை ஜூலி தனது பிறந்தநாளையும் கொண்டாடியிருந்தார். அதன் வீடியோக்களை கடைசியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளார்.