பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.
ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.
இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.
பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.
நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.
கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எட்டாவது கொடைவள்ளலாக நாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் பார்க்கிறோம். ஆனால் புரட்சித்தலைவர் அப்படி கொடை வள்ளலாக இருந்த மாதிரி விஜயகாந்தும் தன் வாழ்வில் நடந்து கொண்டார். பசியால் வருவோரின் பசியைப் போக்கினார். எப்பவும் தன் அலுவலகத்தில் அன்னதானம் கொடுப்பார்.
அதனால் தான் அவரைக் கருப்பு எம்ஜிஆர் என்றும் சொல்கின்றனர். திரையுலகில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக பல நல்ல செயல்களைச் செய்தார். படப்பிடிப்பின்போது பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான ஒரே வகையான உணவுகளைப் பரிமாறச் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் உண்டாத வகையில் பல வெற்றிப்படங்களில் நடித்துக் கொடுத்தார்.
அந்தவகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கேப்டனைப் பற்றிய ஒரு புதிய தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
கேப்டன் விஜயகாந்தை 1978ல் நான் சந்திச்சேன். அப்பவே அவர் ஆபீஸ்ல தினமும் டிபன் சாப்பிட நிறைய பேரு கஷ்டப்பட்டு வருவாங்க. நான் எதுக்கு அண்ணே தினமும் சாப்பாடு போடுறீங்கன்னு கேட்டேன். அதுக்கு மிருகம் எல்லாம் எடுத்துதான் வாழும். மனுஷனுக்கு மட்டும் தான் கொடுத்து வாழ தெரியும்.
நாம மனுஷனா இருக்கோம்ல. கொடுத்து வாழ்வோம்னு சொன்னார். அதைக் கேட்டதம் நான் கண் கலங்கிட்டேன். புரட்சித்தலைவர் தான் இப்படி பண்ணினார்னு நான் சொன்னதும் அவரை மாதிரி வந்தா நானும் நல்லா பண்ணுவேன்னு சொன்னார் கேப்டன். அப்படி வந்து அதை செய்தும் காட்டினார் என்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.
புரட்சித்தலைவர் படங்களில் அனல் பறக்க தத்துவ கருத்துக்கள் புரட்சிகரமாக இருக்கும். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச்சென்று இருக்கும். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். ஆனால் அவரது படங்களில் கடவுள் சம்பந்தமான காட்சி அதிகம் இருக்காது. அவருக்கு கடவுள் பக்தி உண்டா, இல்லையா என்று பார்க்கலாம்.
எம்ஜிஆருடைய தாயாரான சத்யபாமா அம்மையார் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஒரு பக்கம் காளியை வணங்கினார். இன்னொரு பக்கம் திருமாலை வணங்கினார். எம்ஜிஆருக்கு இஷ்ட தெய்வம் எது? எந்தெந்த தெய்வங்களை எல்லாம் வணங்கினார் என்பது பற்றி பொம்மை பத்திரிகையில் எம்ஜிஆரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்த போது ஜெயலலிதா அவரைப் பார்த்துக் கேட்டார்.
கடவுள் பக்தி உண்டா என்று ஜெயலலிதா கேட்டபோது உண்டு என்று எம்ஜிஆர் பதில் அளித்தார். நீங்கள் கோவிலுக்குப் போவீர்களா என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்கு எம்ஜிஆர், திருப்பதிக்கு 2 முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்குச் செல்லும்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும். அப்போது நான் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டு இருந்தேன்.
2வது தடவை நான் சென்றது மர்மயோகி படம் வெளியானபோது. திருப்பதியைப் பொருத்தவரைக்கும் நான் 2வது முறை போனதுதான் கடைசி. அதற்குப் பிறகு திருப்பதிக்கு நான் போகவில்லை. வேறு கோவில்களுக்கு நான் சென்று இருக்கிறேன். கடவுள் மீது தீராத பக்தி எனக்கு உண்டு. அதனால்தான் கோவிலுக்குப் போகிறேனே தவிர அங்கு போய் சாமிக்கிட்ட எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்டு ஒரு நாளும் நான் பிரார்த்தனை செய்தது இல்லை என பதில் சொல்லி இருக்கிறார்.
MGR: மக்கள் மனதில் இன்றுவரை ஒரு நீங்கா இடம் பிடித்திருப்பவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அரசியல்வாதியாக நடிகராக ஒரு பக்கம் உயர்ந்து நின்றாலும் நல்ல மனிதர் என்பதில் என்றுமே அவர் சிறப்புற்று இருந்திருக்கிறார். அவர் மறைந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் தாண்டிய நிலையிலும் எம்ஜிஆரின் புகழை பாடாதவர்கள் இல்லை. அவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.
ஒருமுறை ஹிந்தி நடிகர் தர்மேந்திரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையின் ஒரு கடலோரப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் நடக்கும் சண்டை காட்சி என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஹெலிகாப்டரில் தர்மேந்திராயுடன் சண்டைக்காட்சியில் ஒரு ஸ்டண்ட் கலைஞர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய கைப்பிடி தளர்ந்து சுமார் 50 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு யூனியன் சார்பில் போதிய நிதி உதவி செய்யாததை ஷெட்டி என்னும் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அவரது உறவினரான தென்னிந்திய ஸ்டஸ்ட் மாஸ்டரான சியாம் சுந்தரிடம் கூறியிருக்கிறார்.
ஷியாம் சுந்தர் இதை எம்ஜிஆரிடம் தெரிவித்திருக்கிறார். இதை அறிந்த எம்ஜிஆர் மிகவும் வருத்தமுற்று உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாயை சியாம் சுந்தரிடம் கொடுத்து உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு உதவி செய்ய சொல்லியிருக்கிறார்.
இங்குதான் எம்ஜிஆர் உயர்ந்து நிற்கிறார். இந்தியாவில் எத்தனையோ திரைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் எம் ஜி ஆர் மட்டும் தான் ஸ்டண்ட் கலைஞர்களின் உற்ற தோழனாக இருந்துள்ளார் என்றால் எந்த அளவுக்கு உயர்ந்த வள்ளல் தன்மை கொண்ட பரந்த மனப்பான்மை கொண்டவராக எம்ஜிஆர் இருந்திருப்பார் என்று நம்மால் உணர முடிகிறது.
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றப்படுபவர் எம்ஜிஆர். இவர் சினிமாவில் எப்படியோ அதே போல அரசியலிலும் ஜெயித்துக் காட்டினார். தன்னோட பலம் என்ன என்பதை உணர்ந்த எம்ஜிஆர் தன்னை ரசித்த மக்களை வைத்தே முதல்வரானார்.
ஏழை எளிய மக்களிடம் தனது நல்ல பல செயல்திட்டங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். அரசியலில் அவர் ஜெயிக்க அடிநாதமாக இருந்தது அவரது கட்சியின் சின்னம் இரட்டை இலை தான். இன்று வரை அதிமுகவின் வெற்றிச்சின்னமாகவே உள்ளது. அந்தச் சின்னம் வந்தது எப்படின்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
ரஜினியை வைத்து பைரவி என்ற படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்கக் காரணமாக அமைந்தது. முதல் முறையாக ஹீரோவாக ரஜினி நடித்த படம் இது தான்.
இந்தப் படத்தை தயாரித்தவர் தாணு. படத்தோட இயக்குனர் எம்.பாஸ்கரின் மகன் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்த சுவாரசியமான சம்பவம் குறித்து சொல்கிறார்.
MGR2
எங்க பெரியப்பா சங்கரபாண்டியன் மதுரையில பிரபல வழக்கிறஞரா இருந்தாங்க. அவங்க எம்ஜிஆர் சாரோட ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. மதுரையில மாவட்ட செயலாளரா இருந்தாங்க. முக்கியமானது இரட்டை இலையை செலக்ட் பண்ணிக் கொடுத்ததே அவர் தான்.
முதல்ல டிரெய்ன் சின்னம், மம்பட்டி சின்னம், இரட்டை இலைன்னு மூணு சின்னத்தைக் காமிச்சிருக்காங்க. எங்க பெரியப்பா தான் இரட்டை இலை சின்னத்தை செலக்ட் பண்ணலாம்னு ஐடியா கொடுத்தாங்க. அதுக்கு ஒரு காரணமும் சொன்னாங்க.
அப்போ எல்லாம் விளம்பரத்துக்கு வினைல் போர்டு கிடையாது. வரையறது தான். டிரெய்ன், மம்பட்டி சின்னங்களை விட இரட்டை இலையை சுவரில வரையறது ரொம்ப ஈசி. ரொம்ப கவர்ச்சியாவும் இருக்கும். அது பார்க்க ஒரு நல்ல இயற்கைக் காட்சியாகவும் இருக்கும்னு சொன்னாரு. உடனே எம்ஜிஆர் அதை ஏத்துக்கிட்டாரு.
இதெல்லாம் இன்னைக்கு யாருக்குமே தெரியாது. எங்க பெரியப்பா தான் இரட்டை இலையை செலக்ட் பண்ணிக்கொடுத்தாருங்கறது தெரியாது. பல விஷயங்கள் இன்னைக்கு மறைக்கப்பட்டுருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அவர்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்களுக்கு என்றுமே அழிவில்லை. அது காலத்தால் அழியாத காவியங்கள். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்.
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரது சாதனையை சொல்லிக் கொண்டே இருக்கலாம். 1981ல் பெங்கள10ருவில் உள்ள ஒரு ரெக்கார்டிங் தியேட்டர். அங்கு ஒரு இமாலய சாதனையை செய்தார். அதாவது 12 மணி நேரத்துக்குள் 21 பாடல்களைப் பாடி அசத்தினார்.
Adimaipenn
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்காக காத்திருந்துள்ளார். அது ஒரு சுவாரசியமான சம்பவம். அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் எஸ்பிபி.க்கு பாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அந்தப் பாடலைப் பாடும் முன் அவருக்கு டைபாய்டு காய்ச்சல். அதனால் குறித்த நேரத்தில் அவரால் பாடமுடியவில்லை. இதனால் தனக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சுன்னு வருத்தப்பட்டாராம். ஆனாலும் அவருக்காக எம்ஜிஆர் காத்துக் கொண்டு இருந்தாராம்.
அப்படி அவர் பாடியதுதான் ஆயிரம் நிலவே வா பாடல். என்ன ஒரு அருமையான பாடல் என்பதைக் கேட்டுப்பாருங்க… தெரியும். இந்தப் பாடல் தான் முதலில் வெளியானது. ஆனால் அவர் பாடிய முதல் பாடல் சாந்தி நிலையம் படத்தில் தான் வருகிறது. அது இயற்கை என்னும் இளைய கன்னி பாடல். அதுதான் தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
1969ல் எம்ஜிஆர் சொந்தமாகத் தயாரித்த படம் அடிமைப் பெண். இந்தப் படத்தின் இயக்குனர் கே.சங்கர். படத்தின் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன். எம்ஜிஆர், ஜெயலலிதா, சோ, சந்திரபாபு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஆயிரம் நிலவே வா, அம்மா என்றால், காலத்தை வென்றவன், தாய் இல்லாமல், உன்னை பார்த்து, ஏமாற்றாதே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை பத்திரிகையாளர் இக்கட்டான கேள்விகளைக் கேட்டுவிட்டால் அவர்களது பதில் மழுப்பலாக இருக்கும். அல்லது அதற்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்று விடுவர். ஆனால் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் எம்ஜிஆரை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் எல்லாமே பளிச் பளிச் சென்று இருந்தது. அப்படி ஒரு கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அது இதுதான்.
இனி மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத் தான் வரவேற்பு இருக்கும்னு பேசுனீங்களே, அந்தப் பேச்சு சிவாஜியைத் தாக்கி அமைந்த பேச்சு தானே என்று அந்த கேள்வி கேட்கப்பட்டது.
‘இயற்கையான நடிப்புக்குத் தான் எதிர்காலத்திலே வரவேற்பு இருக்கும்னு நான் குறிப்பிட்டா உடனடியா சிவாஜியை நான் தாக்கிப் பேசியதா நீங்க ஏன் நினைக்கிறீங்க?
சிவாஜி மிகையாக நடிக்கிறதா நீங்க நினைக்கிறீங்களா? சிவாஜியோட நடிப்பை அப்படி ஏன் குறை சொல்றீங்க? சிவாஜி எந்தளவுக்கு உன்னதமான நடிகர்? இப்படி எல்லாம் பேசி சிவாஜிக்கு நீங்கள் களங்கம் விளைவிக்காதீர்கள்’ என்று அந்த நிருபரைப் பார்த்து எம்ஜிஆர் பதில் சொன்னாராம்.
இன்னொரு நிருபர் கேட்ட கேள்வி இதுதான். ஒரு நடிகையை நீங்கள் ஒப்பந்தம் செய்து விட்டு வேறு எந்த கதாநாயகனுடனும் நடிக்கக்கூடாது என நிபந்தனை விதித்ததாகவும், இப்போ அந்த நடிகை நிபந்தனையை மீறி விட்டதாகவும் சொல்கிறார்களே… என எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்டாராம்.
அதற்கு எம்ஜிஆர் ‘ஏன் சுற்றி வளைச்சிப் பேசறீங்க. மஞ்சுளா என்று நேரடியாகக் கேளுங்களேன். அவர் மற்ற நடிகரோடு நடிக்கலாம் என்று நான் தான் அவரை ஊக்குவித்தேன். என்னிடத்தில் பயிற்சி பெற்ற நடிகை மற்ற நடிகர்களுடன் நடித்தால் எனக்குத் தானே அது பெருமை’ என பதில் சொன்னாராம் புரட்சித்தலைவர்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமலுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் கோலோச்சியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடும். அவர்களது படங்களுக்குத் தான் போட்டியே தவிர நிஜ உலகில் இருவரும் நல்ல நண்பர்கள். அவ்வப்போது படங்கள் வரும்போது இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வர்.
அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிவாஜி நடித்த ஒரு படத்தை ஆங்கிலப்படம் போல இருக்கிறதே என வியந்து பாராட்டியுள்ளார். அது என்ன படம்? அப்போது நடந்தது என்னன்னு பார்ப்போமா…
அந்தக்காலத்தில் சிவாஜி படங்களின் வசனங்கள் மட்டும் ஒலித்தட்டில் ஒலிக்கச் செய்வார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் இதில் பிரபலம். இதனால் படத்தின் ஒவ்வொரு வசனமும் ரசிகனுக்கு அத்துப்படியாகி விடும். பெரும்பாலும் சிவாஜி படங்களுக்கு ஆரூர்தாஸ் தான் வசனம் எழுதுவார்.
Puthiya paravai
விதி படத்துக்கும் அவர் தான் வசனம் எழுதினார். அப்போது பட்டி தொட்டி எல்லாம் அந்தப் படத்தின் வசனங்களை விழாக்காலங்களில் ஒலிக்கச் செய்வர். அந்த வகையில் தொழிலாளி படம் சூட்டிங் நேரத்தில் ‘இன்று இரவு நானும், எம்ஜிஆரும் சிவாஜி நடித்த ‘புதிய பறவை’ படத்தைப் பார்க்கப் போறோம். நீ அங்க இருந்தா நல்லாருக்காது.
அதனால் கிளம்பிப் போயிடு’ன்னு சொல்கிறார் சின்னப்பா தேவர். ‘ஆமா படத்துக்கு வசனம் எழுதுன நான் அங்க இருந்தா நீங்க ப்ரீயா விமர்சனம் பண்ண முடியாது. நான் கிளம்புறது நல்லது தான்’னு சொல்லிட்டு ஆரூர்தாஸ் போயிடுறாரு.
மறுநாள் எம்ஜிஆர் ஆரூர்தாஸை மனதார பாராட்டுகிறார். நேத்து புதிய பறவை படம் பார்த்தேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருந்தது. வசனங்கள் எல்லாம் ரொம்ப அருமையா இருந்தது. சிவாஜி நடிப்பு சூப்பர். சரோஜாதேவி ரொம்ப அழகு. சௌகார் ஜானகியைப் பத்தி சொல்லவே தேவையில்லை. பாடல்கள்ல அவருக்கு பிரமாதமான நடிப்புன்னு சொன்னாராம். இப்படி நடந்த சம்பவத்தை ஆரூர்தாஸே சொன்னாராம்.
புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். இருவரது படங்களும் மோதினால் எப்படி இருக்கும். ஒருவர் ஸ்டைல் கிங் என்றால், இன்னொருவர் நடிப்பில் புலி. வாங்க வசூல்ல மன்னன் யாருன்னு… பார்க்கலாம்.
1954ல் எம்ஜிஆரின் கூண்டுக்கிளியும், சிவாஜியின் தூக்கு தூக்கியும் ஒரே நாளில் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1956ல் சிவாஜிக்கு நான் பெற்ற செல்வம், நல்ல வீடு படங்களும், எம்ஜிஆருக்கு அலிபாபாவும் 40 திருடர்களும் படம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
Pantha pasam
அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு தாய்க்குப் பின் தாரம், சிவாஜிக்கு வாழ்விலே ஒரு நாள் படம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1960ல் எம்ஜிஆருக்கு மன்னாதி மன்னன், சிவாஜிக்கு பாவை விளக்கு பெற்ற மனம் படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1961ல் எம்ஜிஆருக்கு தாய் சொல்லைத் தட்டாதே, சிவாஜிக்கு கப்பலோட்டிய தமிழன் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
1962ல் எம்ஜிஆருக்கு ராணி சம்யுக்தா, சிவாஜிக்கு பார்த்தால் பசி தீரும் படங்கள் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1962ல் எம்ஜிஆருக்கு தாயைக் காத்த தனயன், சிவாஜிக்கு படித்தால் மட்டும் போதுமா படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
1962ல் எம்ஜிஆருக்கு விக்கிரமாதித்தன், சிவாஜிக்கு பந்தபாசம் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1963ல் சிவாஜிக்கு சித்தூர் ராணிபத்மினி, எம்ஜிஆருக்கு கொடுத்து வைத்தவள் படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1963ல் எம்ஜிஆருக்கு பரிசு, சிவாஜியின் அன்னை இல்லம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1964ல் எம்ஜிஆருக்கு வேட்டைக்காரன், சிவாஜிக்கு கர்ணன் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
1965ல் சிவாஜிக்கு பழநி, எம்ஜிஆருக்கு எங்க வீட்டு பிள்ளை படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் படம் 200 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆர் தான் வின்னர். 1965ல் எம்ஜிஆருக்கு ஆசை முகம், சிவாஜிக்கு நீலவானம் படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1966ல் எம்ஜிஆருக்கு தாலி பாக்கியம், சிவாஜிக்கு தாயே உனக்காக ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
1966ல் எம்ஜிஆருக்கு பறக்கும் பாவை, சிவாஜிக்கு செல்வம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1967ல் எம்ஜிஆருக்கு தாய்க்கு தலைமகன், சிவாஜிக்கு கந்தன் கருணை ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு அரசகட்டளை, சிவாஜிக்கு தங்கை ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
Arasakattalai
அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு விவசாயி, சிவாஜிக்கு இருமலர்கள், ஊட்டி வரை உறவு ரிலீஸ். இதுல ஊட்டி வரை உறவு, விவசாயி இரண்டுமே வெற்றி. 1968ல் எம்ஜிஆருக்கு காதல் வாகனம், சிவாஜிக்கு எங்க ஊர் ராஜா ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
1969ல் எம்ஜிஆருக்கு அடிமைப் பெண், சிவாஜிக்கு அவர் கௌரவ வெடத்தில் நடித்த காவல் தெய்வம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு நம் நாடு, சிவாஜிக்கு சிவந்த மண் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிறுவயதில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்தவர். பின்னாளில் அதையே வைராக்கியமாகக் கொண்டு முன்னேறிக் காட்டினார் என்றால் அது மிகையில்லை.
எம்ஜிஆர் பிறப்பால் ஒரு மலையாளி. அவருக்கு தன் சொந்த ஊரான கேரளாவுக்குப் போக விருப்பமே இல்லை. ரொம்பவும் அரிதாகத் தான் அங்கே செல்வாராம். அதே போல அவர் மலையாளத்தில் பேசியதையும் நாம் பார்த்திருக்க முடியாது. தன்னோட வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு தமிழனாகவே நினைத்தாராம் எம்ஜிஆர்.
தன் சிறுவயதில் தாயார் சத்யபாமாவுக்கு நேர்ந்த அவமானம் மற்றும் தனது அண்ணன் சக்கரபாணிக்கும் நேர்ந்த அவமானத்தாலும் தனது சொந்த ஊரை வெறுத்தாராம். எம்ஜிஆரின் தாயாருக்கு கேரளாவின் பாலக்காடு அருகில் கொல்லங்கோடு பக்கத்தில் உள்ள வடவனூர் தான் சொந்த ஊர். அங்கு இருந்த மருதூர் என்ற பெரிய வீட்டில் தான் அவர்கள் பிறந்தாங்க. எம்ஜிஆர் நடிகரானதும் அண்ணனுடன் சேர்ந்து அந்தக் கிராமத்திற்குப் போனாராம்.
Marutha Nattu Ilavarasi
சிறுவர்கள் எல்லாரும் எம்ஜிஆர் வாராருன்னு கொண்டாடுனாங்களாம். ஆனால் அந்த ஊர் பெரியவங்க எல்லாம் இந்தக் கூத்தாடிகளுக்கு வேற வேலை இல்லைன்னு எம்ஜிஆர் காதுபடவே சொன்னாங்களாம்.
இது அவரது மனதில் பெரிய வடுவாக இருந்ததாம். ஆனால் அவர் வளர்ந்த நடிகரானதும் அதே ஊர்க்காரங்க எம்ஜிஆரை சந்திக்க சென்னை வந்தார்களாம். அவங்க எம்ஜிஆரிடம் நிதி உதவி வேண்டி வந்தாங்க. நம்ம ஊருல பெரியவங்களுக்கு எல்லாம் மகிழ சபான்னு ஒரு கட்டடம் கட்ட இருக்கிறோம். அதற்கு நீங்க நிதி உதவி செய்யணும்னு கோரிக்கை வச்சாங்க.
அதற்கு எம்ஜிஆர், தனிப்பட்ட ஒரு இனத்திற்காக நான் நிதி உதவி செய்ய முடியாது. எல்லாருக்கும் பொதுவா ஒரு கட்டடம் கட்டுங்க. அதுக்கு என் தாயார் பெயரை வைத்தால் பண உதவி செய்றேன்னாரு. ஆனால் வந்திருந்த ஊர்க்காரங்க அதை ஒத்துக்கொள்ளாமல் திரும்பி போய்விட்டார்களாம்.