Tag: லியோ

  • நீ நடிக்காத.. விஜய் ரசிகன்னு தெரியும்.. ரஜினிக்கு வாழ்த்து சொன்ன இயக்குனரை பொளக்கும் ஃபேன்ஸ்!..

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு இன்று காலை முதலே அவருக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். நடிகர் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

    அதேபோல், ரஜினி இப்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்காக ஒரு பிரத்யோக வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்தது. அதேபோல், நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டது.

    இந்நிலையில்தான், மேயாத மான், ஆடை, குளு குளு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் ரஜினி பல வருடங்களுக்கு முன்பு ரமண மகரிஷி பற்றி பேசிய வீடியோவை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். ரத்னகுமார் அடிப்படையில் ஒரு விஜய் ரசிகர். லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் இவர்., லோகேஷ் விஜய்யை மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கிய போது அந்த படத்தில் ரத்னகுமாரும் வேலை செய்தார்.

    rathna
    rathna

    இன்னும் சொல்லப்போனால் லியோ படத்தின் 2ம் பாதியை இயக்கியதே ரத்னகுமார்தான் என சொல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஜெயிலர் பட விழாவில் ‘கழுகு மேல பறக்கும். காக்கா அதை பாத்து மேல பறக்க முயற்சி பண்ணும். ஆனால், அதால முடியாது’ என ரஜினி சொன்னபோது அது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. விஜயைத்தான் அவர் காக்கா என்ன சொல்கிறார் என அவர்கள் கோபப்பட்டார்கள். அதுதான் ரஜினி – விஜய் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியது.

    லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரத்னகுமார் ‘கழுகு எவ்வளவு உயர பிறந்தாலும் ஒரு நாள் கீழே வந்துதான் ஆகணும்’ என்று பேசினார். இது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியது. இந்நிலையில்தான் இன்று ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் ரத்னகுமார். இதையடுத்து ‘நீ நடிக்காத.. நீ விஜய் ரசிகன்னு எங்களுக்கு தெரியும்’ என்று ரஜினி ரசிகர்கள் அவரின் கமெண்ட் பாக்ஸில் போய் திட்டி வருகிறார்கள்.

  • மாஸ்டர் 2 படத்துல மேட்சான ஹீரோ யாரு? பிரபலத்தோட கணிப்பு சரிதானா?

    லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவரது படங்களுக்கு எல்லாமே தனி மவுசு தான். எல்லாமே சூப்பர்ஹிட். 10 படங்கள் தான் பண்ணுவேன் என்று இவர் சொன்னார். ஆனால் ரஜினிகாந்த் கடைசி படம் இதுதான்னு சொல்லிட்டு அடுத்தடுத்து படங்கள் நடித்தார். அதுமாதிரி தான் இவரும். முதலில் சொன்னதை திரும்ப வாபஸ் வாங்கி விட்டார்.

    மாஸ்டர், லியோ என இரு படங்களையும் விஜயை வைத்து இயக்கினார். அதிலும் லியோவை விட மாஸ்டர் தான் லோகேஷூக்கு ரொம்ப பிடிச்சதாம். லியோ 2 படத்துக்குத் தான் எல்லாரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது மாஸ்டர் 2 கதை தன்னிடம் இருப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். லியோவை விட பர்சனலா எனக்கு ஜேடி யோட கேரக்டர் தான் வைப்பா இருக்கும். மாஸ்டர் 2 படத்தோட கதை என் கிட்ட இருக்கு. அது விஜய் சாருக்கும் தெரியும். மாஸ்டர் படத்தோட கதை இன்னும் கம்ப்ளீட் ஆகாம இருக்கு என்றும் தெரிவித்துள்ளாராம் லோகேஷ்.

    ஏற்கனவே விஜய் கோட் படத்துல சிவகார்த்திகேயன் கையில துப்பாக்கியைக் கொடுத்தார். அது எஸ்கேவின் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அடுத்த விஜய் நாமதான் அப்படின்னு நினைச்சிட்டாரு. இந்த நேரத்துல லோகேஷ் வேற மாஸ்டர் 2 கதை எங்கிட்ட இருக்குன்னு சொல்லிட்டாரு. விஜய் கண்டிப்பா நடிக்க முடியாது. அப்படின்னா சிவகார்த்திகேயனாகத் தான் இருக்கு. விஜய் இடத்துல அவரை வச்சி பண்ணினா தான் லோகேஷ் இணையறதால மிகப்பெரிய வியாபாரம் நடக்கும்.

    முன்னாடியே லோகேஷூம் எஸ்.கே.வுக்கு ஒரு கதை இருக்கு என் சொல்லி இருக்கிறாராம். அப்படி பார்த்தால் லியோ 2 ல இரு பெரிய மகன்களுக்கு அப்பாவா நடிச்சிருப்பாரு விஜய். அது சிவகார்த்திகேயனுக்கு செட்டாகாது. அப்படின்னா கண்டிப்பா அது மாஸ்டர் 2ஆகத் தான் இருக்கும். விக்ரம்2 படத்தையும் சிவகார்த்திகேயன் பண்ண முடியாது.

    லியோ படத்தையும் பண்ண முடியாது. அவருக்குன்னு புதுசா ஒரு படமும் பண்ண முடியாது. அதனால கூடிய சீக்கிரம் ஜேடி கேரக்டர்ல சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருக்கு. கமர்ஷியலா அவரு நல்ல நடிகர். அதனால ஜேடி கதாபாத்திரத்துல அவரு நடிக்கிறது மேட்சாகத் தான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளலாம். சூர்யா, ஹரிஷ்கல்யாண், கமல்னு வேற யாரு நடிச்சாலும் ஏத்துக்க முடியாது. மேற்கண்ட தகவலை மூத்த பத்திரிகையாளர் அர்ஷத் தெரிவித்துள்ளார்.

  • அஜித்தை கலாய்த்த ரசிகர்கள்… விஷயமே புரியாமல் உள்ளே வந்து சிக்கிய பிரபல நடிகர்…

    Ajithkumar: அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்க ரசிகர்கள் தங்கள் ஸ்டைலில் கலாய்த்து கொண்டு இருந்தனர். விஷயமே புரியாமல் உள்ளே வந்து நடிகர் சிக்கி இருக்கிறார்.

    விடாமுயற்சி திரைப்படத்தின் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்திருக்கிறார். ஹாலிவுட்டில் ஹிட்டடித்த பிரேக் டவுன் படத்தின் ரீிமேக் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், திரிஷா மற்றும் அஜித் இருவரும் கணவன், மனைவியாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் அவர்களுக்கு வில்லனாக அர்ஜூன் நடிக்க அவர் மனைவியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்து இருக்கிறார்.

    பொங்கலுக்கு இப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென புத்தாண்டு விடுமுறையில் படம் சில விஷயங்களால் தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தற்போது எல்லா பிரச்னையும் முடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இடம்பெற்றுள்ளது. மேலும் அஜித் மூன்று கெட்டப்பில் நடித்து இருக்கிறார். அதிலும் பரமசிவன் படத்தில் இருப்பது போல நீண்ட முடியுடன் இருக்கும் காட்சிகளும் இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதில் நேற்று படக்குழு தரப்பில் இருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சில விஜய் ரசிகர்கள் வந்து பார்த்திபன் டிரஸ், பார்த்திபன் ஹேர்ஸ்டைல், பார்த்திபன் டிரஸ் என கமெண்ட் செய்திருந்தனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டது லியோ படத்தில் நடித்திருந்த விஜயின் கதாபாத்திரத்தைதான்.

    ஆனால் பிரபல நடிகர் பார்த்திபன் உள்ளே வந்து, என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி. தரணி போற்றும் தனிப்பெரும் ஸ்டைலுக்குரியவர் ஏகே. கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட, தற்போது சில இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’ இயக்குனர் சரண் அவர்களிடம் கூறினேன் பெருமையாக!!! என பதிவிட்டு இருக்கிறார்.

    இதை பார்த்த ரசிகர்கள் தெரிஞ்சு பேசுறாரா? நாங்கள் சொன்னது விஜயின் பார்த்திபன் கேரக்டரை சார். உங்களை இல்லை என அவருக்கு கலாய்ப்பதை மறந்து தற்போது விளக்கம் அளித்து கொண்டு இருக்கின்றனர். தெரியாமா செஞ்சாரா இல்லையானு அவருக்கே வெளிச்சம்.

  • வெளில போனாலும் தளபதிதான் கில்லி… ரிலீஸ் சமயத்தில் கூட விஜயிடம் தோற்ற அஜித்…

    Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் விஜயிடம் தோற்று போன ஒரு சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் வெளியாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். இவர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகர் விஜயின் வசூலை இதுவரை மற்ற நடிகர்களாக தொடக்கூட முடியாத நிலை இருக்கிறது.

    இதில் நடிகர் விஜய் நடித்த கடைசி இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

    இப்படம் ரிலீஸாக இரண்டு நாள் இருந்த நிலையில் லியோ திரைப்படம் 12 லட்சத்து 78 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டு முதல் இடத்தினை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 6 லட்சத்து 36 ஆயிரத்து டிக்கெட் விற்கப்பட்டு இருக்கிறது.

    இதை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் விஜயின் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இரண்டு நாள் இருக்கும் போது ஐந்து லட்சத்து 65 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தாலும் சில பல காரணங்களால் லியோ சாதனையை முறியடிக்க முடியவில்லை.

    ஆனால் பல மாதங்கள் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஃபெப்ரவரி 6ந் தேதி வெளியாக இருக்கிறது. பொங்கல் தினத்தில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது வெளியாக இருக்கும் இரண்டு நாட்களில் இதுவரை 3 லட்சத்து 25 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

    ஐந்தாவது இடத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இரண்டு நாட்கள் இருக்கும் போது 2 லட்சத்து 98 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டது. ஆறாவது இடத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் இருந்தாலும் அது இரண்டு நாள்கள் இருக்கும் போது 87 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்கபட்டது.

  • லியோ வசூலையே கோட் தொட முடியல… ஜெயிலர்கிட்டன்னா வாய்ப்பில்லை ராஜா

    கோட் படத்தோட வசூல் நிலவரத்தை லியோ, ஜெயிலர் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர். வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

    கோட் படத்துக்கு தமிழகத்தில் நல்ல வசூல்னு நான் நினைக்கிறேன். எல்லாப் படங்களைப் பொருத்தவரை காலை, மேட்னி வசூல் நல்லாருக்கும். ஈவ்னிங், நைட்ஷோ குறையும். ஆனா இந்தப் படத்துக்கு ஈவ்னிங், நைட்ஷோ நல்லாருக்கு. பெண்கள், குழந்தைகள் கூட்டம் அதிகம். மொத்தத்துல இந்தப் படத்துக்கு 69 லட்சம் பார்வையாளர்கள் வந்துருக்காங்க. ஆனா இந்தப் படம் லியோவோட கலெக்ஷனை விட கம்மி தான்.

    விடுமுறை நாள்கள் குறையாக இருந்ததால வசூல் அதிகமாகவில்லைன்னு நினைக்கிறேன். வியாழக்கிழமை இருந்த வசூலுக்கும், வெள்ளிக்கிழமை இருந்த வசூலுக்கும் சம்பந்தமில்லை. அதே நேரம் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி. மறுநாள் ஞாயிறு ஹாலிடே. இதனால அந்த நாள்களில் நல்ல வசூல்.

    முதல் நாள் உலகம் முழுவதும் 126 கோடி. அடுத்த நாலு நாள் சேர்த்து 280 கோடின்னு தயாரிப்பு தரப்புல வெளியிட்டாங்க. இந்தப் படத்தைப் பொருத்தவரை நல்ல படம். செகன்ட் ஆப்ல டைரக்டர் என்கேஜ்டா வச்சிருக்காரு. யுவன் சங்கர் ராஜா ஏமாற்றம் தான். படத்தோட லென்த் கூட. 2வது கதாநாயகியா வர்ற பொண்ணு அவ்வளவு பெரிய ஈர்ப்பு சக்தியா தெரியல.

    goat
    goat

    இந்தப் படத்தில் ‘தல’ன்னு ஒரு டயலாக்கை ஒரு பொண்ணு சொல்லுது. அந்தப் பொண்ணே திரும்ப பேட்டியில எனக்குத் தளபதியைத் தான் ரொம்ப பிடிக்கும். ‘தல’ன்னு நான் சொன்னது தோணியைத் தான். இது தேவையில்லாத குழப்பம். என்னைப் பொருத்தவரை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சின்னதா ஒரு லாபம் வரும்னு நினைக்கிறேன். இந்தப் படத்துக்கு 2வாரத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ல 75 பர்சன்ட் தொகை வாங்கியிருக்காங்க.

    இது பெரிய அளவில் அவருக்கு லாபம் வராது. முதல் வாரம் 75 சதவீதம் கொடுத்தா 2வது வாரம் 70 பர்சன்ட் தான் கொடுக்கணும். இது தான் நிபந்தனை. அரண்மனை 4, தனுஷ் படம், மகாராஜா, கருடன் இந்தப் படங்கள் தான் இந்த வருஷத்துல ஓடுச்சு. வேறு வழியே இல்லை. தியேட்டரை ஓட்டியே ஆகணும்னு தான் ஆகணும். கேன்டீன் வரணும்.

    Also read: கங்குவா ரிலீஸ் தேதி எப்போன்னு தெரியுமா? அடடா சூப்பரான நாளை குறி வச்சிட்டாங்களே..!

    அதனால தான் அதுக்குக் காம்ப்ரமைஸ் பண்ணி தியேட்டர்காரங்க அதுக்குப் போட்டுக்கிட்டாங்க. லைப் டைம் ரன் என்பதே அதிகபட்சம் 4 வாரம் தான். அப்போ தான் இதோட லாப நஷ் கணக்கு தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்துக்கு இந்தப் படத்தோட வசூலைக் கம்பேர் பண்ணும்போது அதோட வசூலை முறியடிக்குமான்னு கேட்டா சீமான் பாணியில சொல்லணும்னா ‘அதுக்கு வாய்ப்பில்லை ராஜா’ என்றும் பதில் அளித்துள்ளார்.

  • லோகி-க்கு முன்னாடி நான் முந்திக்கிட்டே… ‘GOAT’ படத்தில் திரிஷா… வெங்கட்பிரபு சொன்ன சுவாரஸ்யம்…!

    கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா கமிட்டான சுவாரஸ்யம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்து இருக்கின்றார்.

    தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாக பின்னர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. கோலிவுட் திரையுலகின் குயின் என்ற அந்தஸ்தில் இருக்கும் த்ரிஷா தமிழ் திரையுலகில் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

    தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஃபீல்ட் அவுட்டாகி இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல கம்பேக்காக அமைந்திருந்தது. நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார்.

    இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு திருப்பாச்சி, குருவி, ஆதி உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்து மிகச் சிறந்த ஆன் ஸ்கிரீன் ஜோடியாக வலம் வந்தார்கள். இதனையடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் லியோ திரைப்படத்தில் நடித்தது. விஜய் திரிஷா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.

    இதையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரத் தொடங்கி இருக்கின்றார் திரிஷா. தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், தக்லைப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் தற்போது கோட் என்கின்ற திரைப்படத்தில் மட்ட என்கின்ற பாடலுக்கு விஜயுடன் இணைந்து திரிஷா நடனமாடி இருந்தார். குறிப்பாக கில்லி பட பாடலை ரீமிக்ஸ் செய்தது போல இருந்தது.

    இது அனைவரது மத்தியிலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. மஞ்சள் நிற புடவையில் திரிஷா போட்ட குத்தாட்டம் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்த பாடல் உருவான விதம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறிய போது ‘கடைசி நிமிடத்தில் தான் த்ரிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட கம்மிட்டானார்.

    மேலும் லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் ‘அப்படி போடு’ என்ற பாடல் மீண்டும் வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அந்த பாடல் போன்று ஒரு பாடல் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு மட்ட பாடல் எடுத்ததாக தெரிவித்திருந்தார். லோகேஷுக்கு முன்னதாக நான் முந்தி கொண்டேன்’ என்று அந்த பேட்டியில் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

  • விஜயிற்காக களமிறங்கிய ரசிகர் கூட்டம்… கோட் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை…

    Vijay: விஜய் நடிப்பில் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாக இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படம் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை செய்திருக்கும் ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார்.

    இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!

    முதலில் டைம் ட்ராவல் படம் எனக் கூறப்பட்ட நிலையில், இது சாதாரண கதையாக தான் இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜயின் அரசியல் வாழ்க்கை எண்ட்ரிக்கு முன்னர் வெளியாகும் கடைசி சில படங்களில் கோட் திரைப்படம் ஒன்றாக அமைந்துள்ளது.

    இதனால் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானது. இருந்தும் இப்படத்தின் பாடல்கள் அதில் தொய்வை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் டிரைலர் மூலம் அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதனால் படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    எப்போது தொடங்கும் என ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் தொடங்கிய சில நொடிகளில் டிக்கெட் விற்பனையை முடித்து விடுகின்றனர். அதன்படி வரும் வியாழன்  செப்டம்பர் 5ல் வெளியாகும் இப்படத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனைகள் முடிந்து விட்டதாம்.

    இதையும் படிங்க: பொய் சொல்லலாம்.. ஆனா இப்படியா… குக் வித் கோமாளி பிரபலத்தினை கடுப்படித்த சிலம்பரசன்

    இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்கள் ரிலீஸாக இருக்கும் நிலையில் இதுவரை புக் மை ஷோ டிக்கெட் விற்பனை ஆப்பில் 5 லட்சம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன் லியோ படத்திற்கும் இந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது லோகேஷ் மற்றும் எல்சியூவின் மீதான் ஆர்வம் தான் எனக் கூறப்பட்டது.

    The Goat

    தற்போது அந்த விமர்சனங்களை ஒற்றை ஆளாக தகர்த்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் ஒப்பிடும்போது மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாத நிலையில் கோட் திரைப்படத்திற்கு பெரிய அளவிலான வரவேற்பு நிலவி வருவது முக்கிய விஷயமாக  பார்க்கப்படுகிறது.

  • லியோவுக்கு விட்டதை கோட்டில் நடந்திருச்சே… திருவிழா ஆரம்பம் ஆச்சு மக்கா!

    GoatMovie: பொதுவாகவே விஜய் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆசைப்படும் ஒரு விஷயத்தை மீண்டும் கோட் திரைப்படத்தில் நடத்த இருக்கிறது கல்பாத்தி எஸ் அகோரம். இந்த செய்தியால் ரசிகர்கள் படத்தை கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.

    அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்,  பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய இடம் ஏற்று நடத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?

    இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். முதலில் சயின்ஸ் பிக்சன் கதை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அது குறித்த எந்த ஒரு தகவல்களும் படக்குழுவில் இருந்து கசியவில்லை. ஆனால், கேப்டன் விஜயகாந்த், நடிகை திரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன், சிஎஸ்கே  வீரர்கள் உட்பட ஸ்பெஷல் கேமியோ இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Goat

    பொதுவாக விஜய் திரைப்படங்களின் முதல் நாள் ரசிகர்கள் ஷோவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.  ஆனால் சமீபத்திய நாட்களாக ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அதிகாலை ஷோக்களை தமிழ்நாட்டில்  வெளியிடாமல் இருந்து வருகின்றனர். விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி வேண்டும் என படக்குழு பெரிய போராட்டம் நடத்தியும் அது நடக்காமல் போனது.

    இதையும் படிங்க: அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..

    இதனால் அத்தகைய திரையரங்குகள் கோட் திரைப்படத்தை அதிகாலை காட்சியாக வெளியிடுமா? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வியை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கும் நிலையில் அது குறித்து பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஆடியோ லான்ச்சுக்கு நோ… சக்சஸ் மீட்னா ஓகே.. விஜய் போடும் ஸ்கெட்ச்!…

    கோட் படத்தோட டிரெய்லர் பற்றி இன்று மாலை அதிகாரப்பூர்வமான தகவல் வருமாம். டிரைலர் தேதியை பயங்கரமான புரோமோவுடன் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம். நாம எல்லாரும் நாளை சுதந்திரத்தினத்தன்று டிரைலர் வெளியாகும்னு எதிர்பார்த்தோம். ஆனால் ஆகஸ்டு 19ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆக உள்ளதாம். இதுக்கு என்ன காரணம்னா படக்குழுவுக்கு விஎப்எக்ஸ்ல கொஞ்சம் கூட திருப்தி இல்லையாம்.

    விஜயை டீஏஜிங் தொழில்நுட்பத்துல பார்க்கும்போது சோட்டாபீம் மாதிரி இருக்காராம். இதுக்கு முன்னாடி ரிலீஸான படத்தோட சாங்ஸ் புரொமோ வீடியோக்களில் அவரது உருவம் அனிமேஷன்ல பார்த்த மாதிரி இருந்ததாம். அதனால ரொம்ப பர்பக்டா டீஏஜிங் டிரைலர்ல இருக்கணும்னு சொல்லி இருக்காங்களாம். அதனால தான் கோட் படத்தோட டிரைலரை ஆகஸ்டு 19ல் ரிலீஸ் பண்றதாக முடிவு பண்ணியிருக்காங்க.

    Goat
    Goat

    ஏஜிஎஸ் நிறுவனம் கோட் படத்துக்கு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவை வைக்கலாம்னு இருந்தாங்களாம். ஆனால் திடீர்னு கோட் இசை வெளியீட்டு விழாவை கேன்சல் பண்ணிட்டாங்க. இதுக்குக் காரணம் விஜய் தான்.

    அதாவது ஆகஸ்டு 20ல் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்ததாம். விஜய் அது வேணாம். சக்சஸ் மீட்டை வச்சிக்கலாம்னு சொல்லி விட்டாராம். என்ன காரணம்னா செப்டம்பர் 22ல் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரம்மாண்ட மாநாடு நடத்தப் போகிறேன்.

    இதற்கிடையில் நான் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டா நல்லாருக்காது. அதனால் டைரக்டா நான் மாநாட்டுல கலந்துக்குறேன். அதுல தான் நான் முழு கவனத்தோட இருக்குறேன். கோட் படத்தோட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட கொண்டாடுங்க. நான் வரலன்னும் சொல்லி விட்டாராம். லியோ சக்சஸ் மீட் மாதிரி கோட் சக்சஸ் மீட் வச்சி எல்லாருக்கும் நன்றி சொல்லலாம்னும் அவர் சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 500 பேரை இறக்கி இருக்காங்களாம்… லியோ ரேஞ்சுக்கு கலக்கும் வேட்டையன்… அப்போ ஒரு சம்பவம் இருக்கு!

    ஜெயிலர் படம் ஹிட்டுக்கு பின் எப்போதும் இல்லாத வகையில் ரஜினி பிஸியாகிவிட்டார். பொதுவாக, ஒரு படம் முடிந்த பின் பல மாதங்கள் கழித்தே அடுத்த படத்தை முடிவு செய்யும் ரஜினி ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆனதால் லால் சலாம், வேட்டையன், கூலி தொடர்ந்து படங்களை புக் செய்தார்.

    இதில் லால் சலாம் படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க துவங்கினார். அடிப்படையில் ஞானவேல் ஒரு பத்திரிக்கையாளர்.

    அதோடு, ஜெய்பீம் படத்திற்கு அவர் எழுதியிருந்த திரைக்கதை பலராலும் பாராட்டை பெற்றது. ஆனால், ரஜினியோ ஒரு கமர்ஷியல் ஹீரோ. அவர் படத்தில் பன்ச் வசனங்கள், அடியாட்களை துவம்சம் செய்வது, மாஸ் காட்டுவது போன்ற காட்சிகள் நிறைய இருக்கும். ரஜினி ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள்.

    எனவே, ரஜினியை வைத்து ஞானவேல் எப்படிப்பட்ட படத்தை கொடுப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம், நாகர் கோவில், கன்னியாகுமாரி, ஹைதராபாத் என பல இடங்களிலும் நடந்தது. ரஜினி நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டாலும் மற்ற காட்சிகள் இன்னும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தானும் ஒரு கமர்ஷியல் பட இயக்குனர் என காட்ட ஆசைப்பட்ட ஞானவேல் 500 நடன கலைஞர்கள் நடனமாடுவது போல ஒரு பாடலை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். லியோ படத்தில் 2 ஆயிரம் பேர் ஆடியும் அது ஒன்றும் அந்த பாடலுக்கு பெரிதாக உதவவில்லை. அதோடு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என பிரச்சனைதான் வெடித்தது. ஆனாலும், ஞானவேலுக்கு அந்த ஆசை வந்திருக்கிறது.