Tag: வடிவேலு

  • மேடையில் மட்டும்தான் வசனம் … அப்போ கேப்டன்…இப்போ விஜய்? – மீண்டும் ட்ரோல் ஆகும் வடிவேலு பேச்சு

    மேடையில் மட்டும்தான் வசனம் … அப்போ கேப்டன்…இப்போ விஜய்? – மீண்டும் ட்ரோல் ஆகும் வடிவேலு பேச்சு

    தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் காமெடியில் கலக்கியவர் வடிவேலு.ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் அஜீத் என அனைத்த் நடிகர்களின் படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார். இன்றைய இளைஞர்களின் மீம்ஸ்களின் நாயகனாகவும் வடிவேலு இருந்து வருகிறார்.

    கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக திமுகவுடன் சேர்ந்து மிகவும் தரக்குறைவாக பேசினார் வடிவேலு. அந்த தேர்தலில் விஜய்காந்த் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவரானார். வடிவேலு சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டார். அதற்கு பின்பு அவரால பழைய வெற்றியை கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. சமீபத்தில் வந்த மாரீசன் படம் தோல்வி அடைந்தாலும் வடிவேலு நடிப்பு பேசப்பட்டது. தற்போது மீண்டும் அரசியல் கூட்டங்களில் பேச துவங்கியிருக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, எதற்கு எடுத்தாலும் திமுகவை அழிக்கனும்,. திமுகவை அழிக்கனும்னு சொல்லுறது. டேய் அந்த மாதிரி சொன்னவன எல்லாம் காணும்டா சண்டாளங்களா. நானும் பார்த்துட்டுதான் இருக்கேன். எவன் எவன் சொல்லுறானோ அம்புட்டு பெருமாள காணும். எங்க இருக்கங்கனே தெரியல. ரொம்ப விலாவரியா பேசுனா சிக்கல் அயுடும். எப்படிடா திமுகவை அழிக்க முடியும். அது தஞ்சாவூர் கோபுரம் மாதிரி நிக்கிது.என்ன செய்தாலும் திமுகவை அழிக்க முடியாது. வசனம் எல்லாம் மேடையில்தான் பேசமுடியும். ஆனால் செயலில் திமுக மட்டுமே செய்து காட்டும் என்று பேசினார்.

    வடிவேலுவின் பேச்சில் சில இடங்களில் நேரடியாக பேசாவிட்டாலும் மறைமுகமாக விஜயை மனதில் வைத்தே பேசினார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • மாரீசன்: இடைவேளை வரைக்கும் பார்த்தது வேஸ்டா? புளூசட்டைமாறன் இப்படி கலாய்க்கிறாரே!

    பகத்பாசில், வடிவேலு நடித்த மாரீசன் படம் நேற்று வெளியானது. படம் எப்படி இருக்கு என புளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

    படத்தோட ஆரம்பத்துல பகத்பாசில் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி ஒரு வீட்டுல திருடுறாரு. அங்கே வடிவேலுவை சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க. அல்சைமர் நோய் இருக்குறதால வெளியே போனா வீட்டுக்குத் திரும்பி வர மறந்துடுவாராம். அதனால அப்படி கட்டிப்போட்டுருக்காங்க.

    அவரு பகத்பாசில பார்த்த உடனே எப்படியாவது என்னைக் காப்பாத்து. உனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் ஏடிஎம்ல எடுத்துத் தாரேன்னு சொல்றாரு. அதை ஒத்துக்கிட்டு பகத்பாசில் காப்பாத்துறாரு. அங்கே போனதும் தான் வடிவேலுக்கிட்ட நிறைய பணம் இருக்குறது தெரியுது. அதை எப்படியாவது ஆட்டையைப் போடணும்னு நினைக்கிறாரு. அப்புறம் அவரு கூடவே டிராவல் பண்றாரு. பணத்தை ஆட்டையைப் போட்டாராங்கறது தான் கதை.

    படத்துல 20 நிமிஷத்துல கதையை சொல்ல ஆரம்பிச்சிடணும். ஆனா இந்தப் படத்துல இடைவேளை வரைக்குமே லீடு தான் கொடுத்துருக்காங்க. அதுக்கு அப்புறம் தான் படத்தையே ஆரம்பிக்கிறாங்க. அதுவரைக்கும் படம் பார்த்தது வேஸ்ட் தான். ஆனா இடைவேளை வரைக்குமே நல்லா தான் எடுத்துருந்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் ஒரு பிளாஷ்பேக் வருது. அதுக்கு அப்புறம் மையக் கேரக்டர் ஒரு நடவடிக்கையில இறங்குறாரு. அது கனெக்ட் ஆகல. அவரோட ஆத்திரம் நமக்கு ஒட்டல.

    படத்துல பகத்பாசில் பிரமாதமா நடிச்சிருக்காரு. வடிவேலுவும் நல்லா நடிச்சிருக்காரு. கேரக்டருக்கு பொருந்திருக்காரு. கோவை சரளா, விவேக் பிரசன்னா ராங்கான கேரக்டர். வடிவேலு, பகத்பாசில் கேரக்டரைத் தவிர வேற எந்தக் கேரக்டருமே சரியா வடிவமைக்கல. படத்தோட லென்த்தைக் குறைச்சி கொஞ்சம் பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்துருந்தாங்கன்னா ரொம்ப சூப்பரான படமா வந்துருக்கும். இது சுமாரான படமா வந்துருக்கு என்கிறார் புளூசட்டைமாறன்.

  • Mareesan: மாரீசன் படத்துல பிளஸ், மைனஸ் இதுதான்…! நடிப்புல பகத்பாசிலா, வடிவேலா யாரு கெத்து?

    சுதீஷ் சங்கர் இயக்கத்தில் மாரீசன் படம் இன்று வெளியானது. பகத்பாசில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா…

    படத்துல பகத்பாசில் திருடனா வர்றாரு. பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுறாரு. வெளியே வந்ததுமே தொழிலை ஆரம்பிச்சிடுவோம்னு ஒரு வீடு ஏறி குதிக்கிறாரு. அங்கே வடிவேலுவை விலங்கு போட்டு வச்சிருக்காங்க. 25 ஆயிரம் ரூபா தர்றேன். என்னை ரிலீஸ் பண்ணுப்பான்னு கேட்குறாரு. வடிவேலுவைக் காப்பாத்துறாரு.

    ஏடிஎம்ல போய் 25 ஆயிரம் ரூபாவை வடிவேலு எடுக்கப் போறாரு. அப்போ தான் அவருக்கிட்ட 25 லட்சம் பேங்க் பேலன்ஸ் இருக்குறது தெரியுது. எப்படியாவது இதை உஷார் பண்ணிடனும்னு பகத்பாசில் பிளான் போடுறாரு. வடிவேலுவுக்கு வேற ஞாபக மறதி நோய். அதைப் பயன்படுத்தி ஒரு பிரயாணம் போறாரு. அப்புறம் என்ன நடந்ததுங்கறதுதான் கதை.

    வடிவேலு காமெடியா நடிக்கிறதனால நமக்கு அவரோட குணச்சித்திர நடிப்பு தெரியாமல் போய்விட்டது. மாமன்னனுக்குப் பிறகு மாரீசனில் கெத்துக் காட்டி இருக்கிறார் வடிவேலு. அவர் பகத்பாசிலுக்கே டஃப் கொடுக்குற மாதிரி நடித்துள்ளார். அதனால வடிவேலு படத்துக்கு ஒரு பிளஸ். பகத்பாசிலைப் பொருத்தவரை அவரது கண்ணே பேசும்.

    படத்துல வர்ற ஒரு சூப்பர் சீன் இது. பகத்பாசில் சின்ன வயசுல நான் கோவிலுக்குப் போய் கடவுள்கிட்ட ஷூ வேணும்னு கேட்டேன். கிடைக்கவே இல்லை. அப்புறம்தான் தெரிஞ்சது நமக்கு எது தேவையோ அதை எடுத்துக்கிட்டு கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டா கொடுத்துடுவாருன்னு. அப்படி பகத்பாசில் சொன்னதும், அதைக் கேட்ட வடிவேலு ஓகோ அதான் கோவிலுக்கு கூட்டமா வருதான்னு அப்பாவியாய் கேட்பார். அந்த பர்ஃபார்மன்ஸ், டயலாக் டெலிவரி அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது.

    படம் ரொம்ப ஸ்லோவா போகுது. மெய்யழகன் ஸ்லோ தான். ஆனா என்கேஜிங்கா இருக்கும். இதுல அது மிஸ்ஸிங். இந்தப் படம் எங்கேயோ டிப்பாகி ஸ்லோவா போய்க்கிட்டே இருந்தது. இந்தப் படத்துல இன்டர்வல் கிட்ட ஒரு டுவிஸ்ட் வச்சிருக்காங்க. அதை கிளைமேக்ஸ்க்கு முன்னாடி காட்டிருக்கலாம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். மியூசிக் சூப்பர். பகத்பாசில், வடிவேலு நடிப்பைப் பார்த்து ரசிக்கணும்னா இந்தப் படத்துக்குப் போகலாம்.

  • ஊத்தி மூடிய ‘மாரீசன்’.. இரண்டாவது நாளில் படத்தின் வசூல் இவ்வளவுதானா?

    வடிவேலு ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாரீசன். மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் மாரீசன் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். திரையில் வடிவேலுவையும் ஃபகத் பாசிலையும் ஒன்றாக பார்க்கும் போது அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனத்தையே படம் சந்தித்தது.

    அதே சமயம் மாரீசன் வெளியான அதே நாளில்தான் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படமும் வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான அந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களில் நித்யா மேனனுடனான காம்போதான் சூப்பர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்தில் முதன் முறையாக படமுழுக்க வடிவேலு சிறந்த குணச்சித்திர கேரக்டரை வெளிப்படுத்தினார். காமெடி மட்டுமில்லாமல் என்னால் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்த முடியும் என வடிவேலு நிருபித்தார். அதனால் மாரீசன் திரைப்படத்திலும் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தனர்.

    ஏற்கெனவே ஃபகத் பாசில் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் இந்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு மாரீசன் படத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இன்னொரு பக்கம் தலைவன் தலைவி படம் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் மாரீசன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் வெளியாகியிருக்கிறது.

    mareesan

    mareesan

    இரண்டாவது நாளில் மாரீசன் படத்தின் வசூல் 4 கோடி அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலைவன் தலைவி படத்தின் வசூல் 11 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இனி வரும் நாள்களில் இன்னும் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Maaresan: இந்த ஜோடி தரமா இருக்கே… வடிவேலு – ஃபகத்தின் மாரீசன் டீசர் எப்படி இருக்கு?

    Maaresan: தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இருவர் நடிப்பிலும் உருவாகி வரும் மாரீசன் திரைப்படம் டீசர் வெளியாகி இருக்கிறது.

    ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு, அதிக வரவேற்பைப் பெற்ற ஜோடி ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் மாரீசன். இப்படத்தின் கதையில், மாரி மற்றும் ஈசன் என்ற இரண்டு நண்பர்களின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.

    ஒருநாள் பயணத்தில் பல திருப்பங்களையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் கொண்டுள்ளது இப்படம். சுதீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தினை ஆர்.பி.செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

    சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் போஸ்டரில், இருவரும் முகமுகமாக நிற்கும் வகையில் இருந்தது. மேலும் வடிவேலுவின் முகத்தில் காயம் வேறு இருப்பது போல அமைக்கப்பட்டதும் ரசிகர்களிடையே படம் குறித்த பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

    இந்த டீசர் முற்றிலும் வித்தியாசமாக மாயா பஜார் படத்தின் ஆஹா இன்ப நிலவே பாடலை பின்னணியில் கொண்டு வடிவேலு மற்றும் பஹத்தின் பைக் பயணத்தினை காட்சிப்படுத்தி இருக்கிறது. சண்டை, அழுகை, காமெடி, விளையாட்டு என எல்லாமே இந்த டீசரில் இருக்கிறது.

    ஃபகத் மட்டுமல்லாமல் வடிவேலு மற்றும் கோவை சரளா இருவருக்குமே இது வித்தியாசமான வேடமாக இருக்கும் போல. இந்த படத்தின் டீசரே கணிக்க முடியாமல் இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • அமேசான் ப்ரைம் அறிவிப்பால் கடுப்பா இருக்கீங்களா?.. இந்த வாரம் வடிவேலு படம் வருதே!..

    இயக்குநர் சுந்தர்.சி தயாரித்து, இயக்கி, நடித்தும் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலைவையான விமர்சனங்களை பெற்று சுமாராக ஓடியது. இந்நிலையில் தற்போது கேங்கர்ஸ் நாளை மே15ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, ஹரிஷ் பெரடி, அருள்தாஸ், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

    அரசன் கோட்டை என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி மாணவி மர்மமான முறையில் காணாமல் போகிறார். இதை ஆசிரியை சுஜாதா விசாரிக்க, காவல்துறை புறக்கணிக்கிறது. அதைத் தொடர்ந்து, உளவு போலீஸ் அதிகாரியாக சுந்தர். சி நியமிக்கப்படுகிறார். கதை நகைச்சுவை, ஆக்ஷன், மற்றும் சென்டிமென்ட் கலந்து முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

    பல ஆண்டுகள் கழித்து சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் வொர்க்கவுட் ஆகும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் சிலர் கதை பழசு, டபுள் மீனிங் அதிகம், லாஜிக் குறைவு, கவர்ச்சி காட்சிகள் நிறைந்துள்ளது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு மூன்று வாரத்தில் ரூ11 கோடி வரை மட்டுமே வசூலித்தது.

    வடிவேலுவின் கம்பேக்காக இருக்கும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும், தற்போது கேங்ஸ்டர் படம் அமேசான் ஒடிடி தளத்தில் நாளை மே 15ம் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமாரான படங்களே வெளியாகி வரும் நிலையில், சந்தாவை வேறு இஷ்டத்துக்கு ஏற்றப்போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • ஒருநாள் முழுக்க அழுது கொண்டே இருந்தார் அப்பா!. சண்முக பாண்டியன் பகிர்ந்த சம்பவம்!..

    விஜயகாந்த் எப்படிப்பட்ட மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர். தன்னால் முடிந்தவரை பலருக்கும் உதவியவர். பல தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் உருவாக்கினார். பல புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

    சக மனிதர்கள் மீது அன்பு செலுத்திய ஒரு மனிதராகவே கடைசி வரை இருந்தார். எல்லோரையும் சமமாக பார்த்தவர் விஜயகாந்த். அதனால்தான். தான் நடிக்கும் படங்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு போட்டார் விஜயகாந்த். இதை சினிமா உலகில் துவக்கி வைத்தவர் இவர்தான்.

    மனிதர்கள் மீது மட்டுமில்லை. விலங்குகள் மீதும் அதிக பாசம் கொண்டவர் விஜயகாந்த். குறிப்பாக நிறைய நாய்களை வளர்த்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்துக்கும் அவர் வளர்த்த நாய்களுக்கும் இடையே இருந்த பாசம் பற்றி பேசியிருக்கிறார்.

    அப்பா நிறைய நாய்களை வளர்த்தார். அவர் வளர்த்த எல்லா நாய்களுக்கும் இரண்டு பெயர்கள் மட்டுமே வைப்பார். ஒன்று ஜூலியர். மற்றொன்று சீசர். ஜூலி என்கிற நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்தார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜூலியை அப்பாதான் குளிக்க வைத்து, துவட்டிவிடுவார்.

    ஒருநாள் அவர் ஷூட்டிங்கிற்கு கிளம்பி கொண்டிருந்த நேரம் டிரைவர் ஓடிவந்து ‘அண்ணே. ஜூலி செத்துப்போச்சுண்ணே’ என சொன்னார். அப்படியே நின்ற அப்பா ‘இன்னைக்கு என்னால் ஷூட்டிங்கிற்கு வரமுடியாது என சொல்லிவிடு’ என சொல்லிவிட்டு அறையில் போய் கதவை சாத்திக்கொண்டார். காலை முதல் மாலை வரை அழுதுகொண்டே இருந்தார். ஒருநாளும் ஷூட்டிங்கிற்கு அவர் லீவு விட்டதே இல்லை. ஆனால், ஆசையாக வளர்த்த நாய்க்காக அன்று அழுதார்.

    அதேபோல், ஒருநாள் அவர் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஷூட்டிங் கிளம்பி சென்றபோது வீட்டில் இருந்த நாய் ஒன்று அவரின் காரின் பின்னாலேயே ஓடி ஏவிஎம் வாசல் வரை சென்றுவிட்டது. அதைப்பார்த்த அப்பா நாயை காரில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் விட்டு அதன்பின் மீண்டும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போய் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்’ என சொல்லியிருக்கிறார்.

  • என்னடா பொழப்பு இது!.. கவுத்துப்போட்ட கேங்கர்ஸ்!.. அடுத்த பொழப்பை பார்க்க ஆரம்பித்த வடிவேலு!..

    கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி, சத்யராஜ் மற்றும் பிக் பாஸ் முத்துகுமரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படம் உருவாகி வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள “என்னடா பொழப்பு இது” பாடலை வடிவேலு பாடிய நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

    நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் லைகா உதவியால் ஷங்கர் பிரச்னையை சமாளித்து மீண்டும் சினிமாவில் நுழைந்த வடிவேலுவுக்கு அந்த படம் ஓடவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் மட்டுமே வடிவேலுவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

    சந்திரமுகி 2 படத்தைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்கி நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் ஓவர் பில்டப் செய்யப்பட்டு வெளியானது. பல வித கெட்டப்புகளில் பிடி மாஸ்டர் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தானம் படத்திலேயே சிரிப்பு வரவில்லை என்கிற நிலை உருவான பின்னர், வடிவேலு எல்லாம் எப்படி ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்கிற நிலை உருவாகி விட்டது.

    அதே பழைய காமெடியை போட்டு ஓட்டலாம் என நினைத்த அவருக்கு சரியான அடி கொடுத்து ரசிகர்கள் அந்த படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர். இந்நிலையில், தற்போது காளி வெங்கட் ஹீரோவாக நடித்துள்ள மெட்ராஸ் மேட்னி படத்துக்கு ஒரு பாடலை வடிவேலு பாடி கொடுத்துள்ளார்.

    வடிவேலு குரலில் வெளியான “எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்”, “சந்தன மல்லிகையில்”, “ஊனம் ஊனம்” என பல பாடல்கள் செம ஹிட். அந்த வரிசையில் தற்போது ”என்னடா பொழப்பு இது” என்கிற பாடலை சினேகன் வரிகளில் பாடியுள்ளார். வரும் மே 19ம் தேதி மாலை 5 மணிக்கு முழுப்பாடலும் வெளியாகிறது.

  • விஜயகாந்துக்கு என்ன ஒரு பெருந்தன்மை…?! அப்பவே வடிவேலுவைப் பத்தி அப்படி சொன்னாராமே!

    வைகைப்புயல் வடிவேலு சினிமாவுக்குள் நுழைந்த காலகட்டத்தில் சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும்போது அழுக்கு வேட்டி, சட்டையோடு இருந்துள்ளார். அப்போ அதைக் கேட்டதும் விஜயகாந்த் தான் அவருக்கு 4 வேட்டி, 4 சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு வடிவேலு தனது தனித்திறமையால் சினிமாவில் பிக்கப் ஆனார். அவர் காமெடி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி சூடு பிடித்தது.

    அப்புறம் அவர் நடிக்காத படங்களே இல்லை எனலாம். அவ்ளோ பிசியான காமெடியனா மாறிட்டாரு. அவருக்குன்னு ஒரு குழுவை வைத்துக்கொண்டு காமெடி டிராக்குகளை எல்லாம் எழுதி நடித்தார். வளர வளர அவருக்கு ஆணவமும் சேர்ந்தே வளர ஆரம்பித்தது. விஜயகாந்திடமே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். அப்போது விஜயகாந்தும் அரசியலில் இறங்கி இருந்தார்.

    அவருக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தார். ஆனால் இதற்கு விஜயகாந்த் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. அவரது சொந்த விஷயத்தில் கூட கார் நிறுத்துவது சம்பந்தமாக ஒரு சாதாரண பிரச்சனையில் தலையிட்டு வம்பிழுத்தார் வடிவேலு. அப்போதும் எதுவும் பேசவில்லை. இதெல்லாம் சேர்ந்து ரசிகர்கள் மத்தியில் அவருடைய பெயருக்குக் களங்கத்தை உண்டாக்கியது.

    இதனால் அவருக்குப் படவாய்ப்புகளும் குறைந்தது. தொடர்ந்து பல வருடங்களாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார். மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க முயன்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து மண்ணை விட்டு மறைந்து போனார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நடிகர் இளவரசு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

    விருத்தாச்சலம் தொகுதிக்கு விஜயகாந்த் சார் எம்எல்ஏ ஆன பிறகு நான் அவர் கூட எங்கள் ஆசான் என்ற படத்தில் நடித்தேன். அவர்கிட்ட அரசியல் எப்படி இருக்கு அண்ணே என்று கேட்டேன். சில நேரங்களில் ‘கட்சிக்காரங்க கூட போராட முடியலப்பா… ரொம்ப முடியலன்னா வடிவேலு காமெடி பார்த்துட்டு தூங்கிடுவேன்’ என்று சொன்னார்.

    அப்போதான் வடிவேலு திமுக மேடையில் விஜயகாந்த் குறித்து பேசி சர்ச்சையான நேரம். என்ன அண்ணே அப்படின்னு கேட்டதுக்கு, ‘அவன் திட்டினா திட்டிட்டு போறான்யா. ராத்திரியில நான் வடிவேலு காமெடி பார்த்துட்டு தான் தூங்குறது’ என்று சொன்னார். இது அவர் இறந்துவிட்டார் என்பதற்காக சும்மா சொல்லவில்லை. நிஜமாகவே அவர் இதை சொன்னார் என்கிறார் நடிகர் இளவரசு.

  • காமெடியில் பிளாப்… ரூட்டை மாத்து..! வடிவேலுவுக்கு ஐடியா கொடுக்கும் தயாரிப்பாளர்!

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வடிவேலு சமீபத்தில் நடித்த கேங்கர்ஸ் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. சுந்தர்.சி.யுடன் இணைந்து வடிவேலு இதற்கு முன் நடித்த நகரம் படம் காமெடியில் அதகளப்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புடன் கேங்கர்ஸ் படத்துக்கு வந்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

    இதற்கு முன்பும் வடிவேலு படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. கடைசியாக அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்த மாமன்னன் படத்திற்கு வரவேற்பு இருந்தது. அதில் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து இருந்தார்.

    சமீபகாலமாகவே காமெடி நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகி வருகின்றனர். சந்தானம், சூரி, யோகிபாபு என சொல்லலாம். வடிவேலுவும் ஹீரோவாக சில படங்களில் நடித்தார். ஆனால் அதில் இம்சை அரசன் 23ம் புலிகேசி மட்டும்தான் எடுபட்டது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி, தெனாலிராமன் போன்ற படங்கள் ப்ளாப் ஆனது.

    விஜயகாந்த் உடன் பிரச்சனை வருவதற்கு முன்பு வரை வடிவேலு பீக்கில் இருந்தார். அவரே பாடவும் செய்வார். அவருக்கு ஒரு ஜோடி இருக்கும். அவ்வளவு மவுசா இருந்த அவருக்கு தொடர்ந்து சறுக்கல். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் தயாரிப்பாளர் ஷங்கர் உடன் லடாய்.

    அதன்பிறகு அவருக்கு வந்த சில படவாய்ப்புகளும் நின்று போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம்தான் மாமன்னன். அதற்குப் பிறகு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் படு பிளாப் ஆனது. அந்த வகையில் மீண்டம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நோக்கில் சுந்தர்.சி உடன் கேங்கர்ஸ் நடித்தார். அதுவும் எடுபடவில்லை.

    அந்தவகையில் வடிவேலுவின் காமெடி காலம் என்பது நகரம் படத்தோடு முடிந்தது. இனி காமெடி பண்ணினா மக்கள் ஏற்பார்களா என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பதிலைத் தெரிவித்துள்ளார். அது இதுதான்.

    வடிவேலு ஒரு சில கதாநாயகர்களோடு இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்தாலும் என்ன காரணத்தாலோ அவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. ஆனால் அதற்கு மாறாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும்போது மிகப்பெரிய வரவேற்பு அவருக்கு இருக்கு. அதனால குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு அவர் மாறுனா கூட நல்லாருக்கும் என்பது என்னுடைய யோசனை என்கிறார் சித்ரா லட்சுமணன்.