Tag: வெங்கட் பிரபு

  • சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 400 கோடி வசூல் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்னமும் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் எடுக்கலாம் என அமெரிக்காவுக்கு எல்லாம் போய் வேலை பார்த்தார்.

    ஆனால், பெரிய பட்ஜெட் படம் இப்போதைக்கு வேண்டாம் நான் சேஃப்டி ஜோனில் சேயோன் படம் பண்ணுறேன் என சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் தாய் கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

    துப்பாக்கி கொடுத்த டைரக்டருக்கு டாட்டா காட்டியது தான் மிச்சம். இதற்கு மேல் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.

    சிவகார்த்திகேயன் போனால் என்ன அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனை பிரதீப் ரங்கநாதனை வைத்து பண்ணலாமே என லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் வெற்றிக்கு காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு விக்னேஷ் சிவன் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இருவருமே வேண்டாம். யூத் படத்தை இயக்கி 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய கென் கருணாஸை வைத்து தனது ஸ்டைலில் இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்து பார்ட்டி கொண்டாடலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். வெற்றிமாறன் படத்தை சீக்கிரமே முடித்து விட்டு கென் கருணாஸ் வெங்கட் பிரபு பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • விக்ரமை நம்பி சம்பளம் எல்லாம் தர முடியாது!.. அதிரடி நடவடிக்கை!.. வெங்கட் பிரபுவுக்கும் ஆப்பு?

    விக்ரமை நம்பி சம்பளம் எல்லாம் தர முடியாது!.. அதிரடி நடவடிக்கை!.. வெங்கட் பிரபுவுக்கும் ஆப்பு?

    தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் ஏவிஎம் உட்பட இருந்த இடமே தெரியாமல் காணாமல் போக காரணமே முன்னணி நடிகர்கள் ஓவர் பில்டப்பில் பெரிய சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஃப்ளாப் படங்களை கொடுத்தது தான் என ரொம்பவே லேட்டாக லைகா வந்து திவால் ஆன பிறகே புரிந்துக் கொண்டனர்.

    இதில், வேடிக்கை என்னவென்றால், கோலிவுட் நடிகர்களை நம்பி பணம் போட்ட பிற மாநில தயாரிப்பாளர்களும் சமீப காலமாக பட்டை நாமத்துடன் வலம் வருகின்ற்னர். இந்நிலையில், இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா என தயாரிப்பாளர்கள் சங்கத்தை கூட்டி இனிமேல் முன்னணி நடிகரா இரு பின்னணி பாடகியா இரு சம்பளம் எல்லாம் தர முடியாது லாபத்தில் பங்கு மட்டுமே என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.

    சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்க சியான் விக்ரம் நடிக்கும் படத்துக்கு இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் லாபத்தில் சியான் விக்ரமுக்கு 35 சதவீதம் ஷேர் என்கிற அடிப்படையில் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சியான் விக்ரம் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், வெற்றிப் பெற்றால் காசு, தோல்வி அடைந்தால் ஹீரோவுக்கும் லாஸ் என்கிற புதிய யுக்தியை தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.

    ஹீரோவுக்கு மட்டுமின்றி இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட டைரக்டர்களுக்கும் இனிமேல் இதுதான் நிலைமை என்கின்றனர். கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுகிறேன் என உப்புமா படங்களை கொடுத்தால் அத்துடன் சம்பளமும் கிடைக்காது என்கிற நிலை உருவாகி விடுமாம்.

  • கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு

    கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு

    விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் வரது படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் வெங்கட் பிரபு தற்போது வ்வெறொரு முயற்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    கோட் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு பிரம்மாண்ட சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் மும்முரமாக நடந்தன. ஆனால், படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பு தரப்பு ஏற்கவில்லை . அமரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாததால், இந்த பட்ஜெட்டை ஏற்க சத்யஜோதி பிலிம்ஸ் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, சிவகார்த்திகேயனும் கதையில் பல மாற்றங்களைச் செய்யச் சொல்லி வெங்கட் பிரபுவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், தயாரிப்பு தரப்புக்கு ஏற்றவாறு குறைந்த பட்ஜெட்டில் வேறு ஒரு புதிய கதையை பண்ணலாம் என எஸ்கே கூற, வெங்கட் பிரபு அப்செட் ஆகிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க, இதுவரை செய்யப்பட்ட முன் தயாரிப்புச் செலவுகளை திரும்பத் தருமாறு தயாரிப்புத் தரப்பும் வெங்கட் பிரபுவிடம் தயாரிப்பு தரப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிவகார்த்திகேயன் விவகாரத்தால் நொந்துபோன வெங்கட் பிரபு, அடுத்து ஹிட் நாயகனான சிம்புவிடம் சென்றுள்ளார். பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சிம்புவிடம் அவர் ஐடியா கேட்டுள்ளார். ஆனால், அந்தக் கதை முதல் பாகத்தோடு முழுமையாக முடிந்துவிட்டது. இனி எப்படி இரண்டாம் பாகம் எடுக்க முடியும்? என லாஜிக்காகக் கேள்வி எழுப்பிய சிம்பு, அந்த ஐடியாவையும் நாசூக்காக நிராகரித்துவிட்டாராம்.

    சிவா நம்ப வைத்து ஏமாற்ற, சிம்புவும் கையை விரிக்க, வேறு வழியில்லாமல் தனது கேரியரின் மிகப்பெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆம், தல அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்கும் முடிவில் இறங்கியுள்ளார். இதற்கான கதை விவாதப் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    ஆனால், இதில் உள்ள மிகப்பெரிய சிக்கலே அஜித்தின் சம்மதம்தான்.அஜித் தற்போது கார் ரேஸிங்கில் முழு வீச்சில் பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில், வெங்கட் பிரபுவின் ‘மங்காத்தா 2’ கதைக்கு அவர் செவி சாய்ப்பாரா? கால்ஷீட் கொடுப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

  • வெங்கட்பிரபுவை SK கழட்டிவிட இதுதான் காரணமா?!. இன்னும் இவர் திருந்தலயே!….

    அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டார். ஆனால் கோட் படம் கலவையான விமர்சனங்களை கொடுத்ததால் வெங்கட் பிரபுவை கழட்டிவிட முடிவு செய்தார் எஸ்.கே.
    எனவே பல மாதங்கள் சிவகார்த்திகேயனுக்காக காத்திருந்தார் வெங்கட்பிரபு. மேலும் சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க பல வகைகளிலும் முயற்சி செய்தார்…

    அந்த இடைவெளியில் மதராஸி, பராசக்தி போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டார் சிவகார்த்திகேயன்.. அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
    .. இதனால் வெங்கட்பிரபு படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பு நிறுவனம் குறைத்தது.. சில நாட்களுக்கு முன்பு இலங்கை சென்ற வெங்கட் பிரபு இந்த படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதி முடித்ததாக தெரிகிறது..

    ஆனால், சமீபத்தில் மலேசியாவுக்கு சென்ற வெங்கட் பிரபு அங்கிருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்டு என்னுடைய உதவி இயக்குனர்களில் நான்கு பேரை விமானம் ஏற்றி இங்கே அனுப்பி விடுங்கள்.. படத்தின் இரண்டாம் பாதியை ரெடி பண்ண வேண்டும் என சொல்ல தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துவிட்டதாம். ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நீங்கள் சென்னையில் வந்து கதை எழுதுங்கள்’ என சொல்லிவிட சொல்லிவிட்டதாம்..

    இதன் காரணமாகத்தான் தாய்க்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு குறுகிய கால தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்த திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி இப்படம் பற்றிய புரமோ வீடியோ வெளியாகும் என்கிறார்கள்.

    கதையை எழுதாமலேயே படப்பிடிப்புக்கு போகும் பழக்கம் வெங்கட் பிரபுக்கு உண்டு. கோட் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் அடுத்த படத்திற்கான முழு கதையையும் இன்னமும் அவர் தயார் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்..

  • வெங்கட் பிரபுவும் இல்ல.. பார்க்கிங் டைரக்டரும் இல்ல!.. அந்த டைரக்டரை டிக் அடித்த SK!..

    அமரன் திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பராசக்தி படத்தை முடித்துவிட்டு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

    ஆனால் சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்திற்கு போய்விட்டார். வெங்கட் பிரபு படம் பட்ஜெட் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. தயாரிப்பாளர் பட்ஜெட்டை குறைக்க சொல்வதால் அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியுள்ள தாய் கிழவி படத்தை இயக்கியுள்ள சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. மிகவும் குறுகிய கால படமாக இப்ப படம் உருவாக உள்ளதால் இந்த படத்தை முடித்த பின்னரே சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படத்திற்கு செல்வார் எனத் தெரிகிறது.

    ஒருபக்கம் பார்க்கிங் பட இயக்குனர் அருண்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையை சொல்லிவிட்டு காத்திருக்கிறார். எனவே யாருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

    தாய் கிழவி படத்தை முழுவதுமாக பார்த்த சிவகார்த்திகேயன் சிவகுமார் முருகேசனை அழைத்து மிகவும் பாராட்டு பேசியிருக்கிறார். அதோடு ‘எனக்கு ஏதேனும் ஒரு கதை இருக்கிறதா?’ என கேட்க சிவக்குமார் முருகேசன் சொன்ன கதை அவருக்கு பிடித்து போய் தற்போது அந்த படம் டேக் ஆப் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதமே துவங்கும் என்கிறார்கள்.

  • நீண்ட தலைமுடி.. தாடி!.. புது கெட்டப்பில் எஸ்.கே!.. அடுத்த படத்துக்கா?!…

    சின்னத்திரையில் ஆங்கர், சினிமாவில் சின்ன சின்ன வேடம்.. அதன்பின் ஹீரோ என படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. குறுகிய காலத்திலேயே இவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓவர்டேக் செய்து மேலே போனார். அதாவது, அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.

    ஒருகட்டத்தில் ரஜினி, விஜய், அஜித்துக்கு பிறகு அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறினார். அதேநேரம் ஒரு வெற்றிக்கு பின் ஒரு தோல்வி என அமைந்துவிடுவதால் சம்பளம் ஏறுவது, இறங்குவது என மாறி மாறி வருகிறது.. சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த பத்தாம் தேதி வெளியான பராசக்தி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் இந்நிலையில் நடிகர் சதீஷ் நடிக்கும் ஒரு புதிய படம் தொடர்பான விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.. அதில் நீண்ட தலைமுடி, தாடியுடன் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது வெங்கட் பிரபுவின் படத்திற்கான கெட்டப் என்று சொல்லி வருகிறார்கள்.

  • ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் மங்காத்தா!. முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?!…

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 201ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படம் அஜித்தின் 50-வது படமாக அமைந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோ நல்லவராக இருப்பார்.. கெட்டவன் என ஒரு வில்லனை காட்டுவார்கள்.. ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை அஜித் உட்பட எல்லா கதாபாத்திரங்களுமே கெட்டவர்கள்தான்.

    ஆனாலும் இந்த படத்தை ரசிகர்கள் ரசித்தார்கள். இந்த படத்திலிருந்துதான் ஹீரோவை கெட்டவனாக காட்டினாலும் ஹிட் என்கிற நிலை தமிழ் சினிமாவில் உருவானது. மங்காத்தா பல கோடி வசூலையும் பெற்றது. ஒருபக்கம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது

    இந்தப் படத்தில் திரிஷா, வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி. வைபவ், மகத் ராகவேந்திரன், அர்ஜுன், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில்தான், மங்கக்கா திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளிலும் இப்படம் வெளியானது.

    அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்லும், அவரின் அடுத்த படம் என்னவென்று தெரியாத நிலையிலும் மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்தான் மங்காத்தா திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் 5.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • சரக்கடிச்சிட்டு நைட்டு வருவானுங்க!.. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அலப்பறைகளை சொல்லும் கங்கை அமரன்..

    இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜா இசையில் சாதிக்க வேண்டும் என சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை கிளம்பிய போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் கங்கை அமரன். இளையராஜா இசையமைப்பாளரான பின் அவரின் இசையில் தொடர்ந்து பாடல்களை எழுதி வந்தார் கங்கை அமரன்.

    ஒருகட்டத்தில் கங்கை அமரன் தனியாக இசையமைக்க தொடங்கினார்.. அப்படி அவர் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு நிறுத்தி விடாமல் இயக்குனர் அவதாரம் எடுத்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கினார் கங்கை அமரன்.

    கங்கை அமரனுகு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரண்டு மகன்கள் உண்டு. அதில் வெங்கட் பிரபு இயக்குனராகிவிட பிரேம்ஜி நடிகராக மாறினார். வெங்கட் பிரபு பல படங்களை இயக்கியிருந்தாலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா, விஜயை வைத்து இயக்கிய கோட், சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

    வெங்கட் பிரபுவுக்கும், பிரேம்ஜிக்கும் அடிக்கடி பார்ட்டிக்கு போகும் பழக்கம் உண்டு. ஏனெனில், வெங்கட்பிரபுவின் நண்பர் கூட்டமும் பெரியது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘என்னோட நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது எனக்கு சரக்கு பாட்டில் வாங்கிட்டு வருவாங்க.. அதை நான் என்னுடைய ரூமில் வைத்து விடுவேன்.. பசங்க வீட்ல ஒண்ணா இருக்கும் போது பாட்ட்டிக்கு போவாங்க.. டேய் உங்களுக்கு எது வேணுமோ எடுத்துட்டு போங்கன்னு சொல்லுவேன்.. இதெல்லாம் வேணாம்பான்னு சொல்லிட்டு போயிடுவாங்க..

    குடிச்சிட்டு நைட்டு 11 மணிக்கு பீர் வாசனை வரக்கூடாதுன்னு என் ரூம் ஜன்னல் வழியா ‘டாடி தூங்கிட்டியா’ன்னு கேட்பானுங்க.. அதாவது வந்துட்டோம்னு அட்டனன்ஸ் போடுறாங்களாம்.. அப்படிப்பட்ட பிள்ளைங்க.. அப்படிப்பட்ட அப்பா’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.

  • மூனு படம் சீரியஸா போச்சி!. அடுத்த படம் பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.கே!….

    சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

    காதல் கலந்த காமெடி படங்கள்தான் சிவகார்த்திகேயனின் ரூட்டாக இருந்தது. அப்படி தொடர்ந்து நடித்தாலும் இடையிடையே ஹீரோ, வேலைக்காரன் போன்ற சீரீயஸான கதைகளிலும் நடித்துப் பார்த்தார். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பினார்.

    அமரன் திரைப்படத்தின் வெற்றி அவரை மீண்டும் ஒரு சீரியசான ஹீரோவாக மாற்றியது. அதேநேரம் அவர் அடுத்து நடித்து வெளியான மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் அவரின் அடுத்த படம் பற்றி பேசியிருக்கிறார்.

    இப்போது என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ஒரு முழு நீள காமெடி கதையை சொல்வதே இல்லை. எல்லாமே சீரியஸாக இருக்கிறது. ஏன் இப்போது காமெடி படங்களை செய்வதில்லை என எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.. சரியான கதை அமையவில்லை என்பதே நிஜம்..

    ஒரு படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், பணம் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது.. பராசக்தியும்ம் அமரனும் என்னை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டியது. அதேநேரம் காமெடியை நான் எப்போதும் விடமாட்டேன்.. கண்டிப்பாக எனது அடுத்த படம் ஒரு முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்’ என தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பராசக்தி பட ரிசல்ட்!.. வெங்கட்பிரபு நிலமை இப்படி ஆகிப்போச்சே!.. ஐயோ பாவம்…

    திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த படத்தில் நடித்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாருக்குமே ஜாக்பாட்தான். ஏனெனில் ஒரு படத்தின் ரிசல்ட் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படத்தில் எதிரொலிக்கும். அதாவது, ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே அந்த நடிகர் தனது சம்பளத்தில் பல கோடிகளை ஏற்றிவிடுவார்.

    அதை கொடுக்க தயாரிப்பாளரும் முன்வருவார். அதேதான் இயக்குநருக்கும்.. தயாரிப்பாளரை பொருத்தவரை ஹீரோவின் முந்தைய படம் ஹிட் என்பதால் அதிக விலைக்கு வியாபாரம் செய்வார். இதனால் அவருக்கு அதிக லாபம் கிடைக்கும். எனவே ஒரு நடிகரின் சம்பளம் மற்றும் படத்தின் வியாபாரம் அவரின் முந்தைய படத்தின் ரிசல்ட்டில் இருக்கிறது.

    சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்து வெளியான பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த படம் 100 கோடி வசூலை கூட தொடாது என்கிறார்கள். பல தியேட்டர்களும் காத்து வாங்குவதால் ஏறக்குறைய படம் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது.

    இந்த ரிசல்ட் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பாதித்திருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்தின் ரிசல்ட் பார்த்த தயாரிப்பாளர் வெங்கட்பிரபுவை அழைத்து ‘பராசக்தி சரியாக போகவில்லை. படத்தின் பட்ஜெட்டை குறையுங்கள்.. நீங்கள் சொல்லும் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது.. அப்படி எடுத்தால் வியாபாரம் செய்ய முடியாது’ என்று சொல்ல வெங்கட் பிரபு அப்செட் ஆகிவிட்டாராம்.

    ஏனெனில் ஏற்கனவே தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதற்காக பல கோடி பட்ஜெட்டை அவர் குறைத்தார். இனிமேல் இதில் பட்ஜெட்டை குறைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இது மூன்று மாநாடு. தைரியமாக செலவு செய்யுங்கள். படம் கண்டிப்பாக ஹிட்’ என தயாரிப்பாளரை சம்மதிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.