Tag: ஷாருக்கான்

  • Jailer2: ஜெயிலர் 2-வில் அந்த நடிகர்.. கேமியோ இல்ல… வேறலெவல் அப்டேட்!..

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் முதல் பாகம் வசூலை அள்ளிய நிலையில் இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெயிலர் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்து வருகிறது..

    ஒருபக்கம் ஜெயிலரில் நடித்ததை விட ஜெயிலர் 2-வி ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க அவரின் அப்பாவாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, சந்தானம், விஜய் சேதுபதி, மோகன் லால், சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், இந்த படத்தில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.. அவரிடம் ஏழு நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். மார்ச் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. அவர் காட்சிகளை எடுத்து விட்டால் அதோடு படம் முடிந்துவிடும் என்கிறார்கள்..

    ஒரு காட்சியில் வரும் கேமியா வேடம் என்றால் ஒரே நாளில் எடுத்து விடலாம்.. ஆனால் ஷாருக்கானிடம் 7 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள் என்றால் அவருடன் நிறைய காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது. ரஜினியுடன் ஷாருக்கான் நடிக்கும் காட்சிகளை பார்க்க ரசிகர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது…

    இந்த படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அந்த படத்தை முடிந்தபின் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இன்று காலையில் கூட இந்த படம் தொடர்பான ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். மேலும் இந்த படம் தொடர்பான புரரமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகவுள்ளது.

  • பாலிவுட்டுக்குப் போகும் லப்பர் பந்து… அதுவும் ஷாருக்கானுக்கு அந்த நடிகையே தான் வேணுமாம்..!

    சின்ன பட்ஜெட் படங்களும் அழுத்தமான கதை இருக்கும்பட்சத்தில் ஜெயிக்கும் என்பதற்கு உதாரணமாக வந்த படம் லப்பர் பந்து. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை எனலாம். ரஜினிகாந்த், கமல், சேரன் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர். இந்தப் படத்தை இப்போது பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். என்ன விவரம்னு பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலுசில தகவல்களைச் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

    லப்பர் பந்து படத்துக்கு பத்திரிகையாளர் ஷோக்குப் போனேன். அட்டக்கத்தி தினேஷ் லுங்கி கட்டிக்கிட்டு கிரிக்கெட் விளையாடுறாரு. இந்த மாதிரி நிறைய வந்துருச்சு. அப்படி பத்தோடு ஒண்ணா தான் வந்துருக்கும்னு நினைச்சேன். ஆனா அந்தப் படம் போகப் போக போக ஆடியன்ஸைக் கொண்டுவந்து வேற விதமா நிறுத்துச்சு. மறைந்த விஜயகாந்துக்கு நாங்க ஏஐ ல பண்ணப் போறோம். புகழாரம் சூட்டப்போறோம்.

    மகன் சண்முகப்பாண்டியனை நான் தான் அறிமுகப்படுத்தப் போறேன். லாரன்ஸ்லாம் பேசினாரு. விஜயகாந்துக்கு ஒட்டுமொத்தமா தமிழ்சினிமாவுல இருந்து பண்ணப் போறோம்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அப்போ நீ பொட்டு வச்ச தங்கக்குடம்னு ஒரு சாங். லப்பர் பந்துல போட்டு விஜயகாந்துக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துட்டாங்க. முதல்ல பிரேமலதா கூட வேண்டாங்க. இதெல்லாம் சேர்க்காதீங்க. ஏதோ புதுமுகங்களா படம் முழுக்க இருக்கீங்கன்னு சொன்னாங்க. அவங்க காட்சியை எல்லாம் கொண்டு வந்ததும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. ஒட்டுமொத்த படத்தைப் பார்த்த பிறகு என் கணவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த படம்னு இன்னைக்கு வரை பேசுறாங்க.

    அந்த டைரக்டர்கிட்ட தனுஷ், சிம்பு எல்லாம் கதை கேட்டுருக்காங்களாம். அஜித் அவரோட சேர்ந்து படம் பண்ணப் போறதாவும் சொன்னாங்க. இந்தப் படத்தை ஷாருக்கான் பார்த்துருக்காரு. ரீமேக் பண்ணனும். அதுவும் ஸ்வாசிகா நடிச்ச கேரக்டருக்கு அதே நடிகை தான் இங்கேயும் வரணும்னு சொல்லிட்டாராம். கோரிப்பாளையம் படத்தில் நடித்தவர் தான் அவர்.

    சமீபத்தில் மாமன் படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு செகண்ட் இன்னிங்ஸ். ஷாருக்கானே என்னை அழைத்தாருன்னா எனக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம்னு மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டாராம் ஸ்வாசிகா. அந்தப் படம் எல்லா மொழிகளுக்கும் கிளிக் ஆகும். ஷாருக்கானின் தேர்வு சூப்பரா இருக்கும். எந்த டைரக்டரை வச்சிப் பண்ணப் போறாருன்னு தெரியலயாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ஷாருக்கானையே ஓவர் டேக் செய்த புஷ்பா ராஜ்!.. புஷ்பா 2 ஹிந்தி வசூல் இவ்வளவு கோடியா?!..

    Pushpa 2: புஷ்பாவின் வோல்ட் ஃபயர் உலகமெங்கும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் மிகவும் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படமாக இப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. ஆந்திர சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் புஷ்பா 2 படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

    சில வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு காரணம் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை பற்றி புதுமையான கதையாக எழுதியிருந்தார் சுகுமார். ஸ்ரீதேவி பிரசாத் இசையில் பாடல் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா கெமிஸ்ட்ரியும் திரையில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருந்தது.

    இந்த படம் நல்ல வசூலை பெறவே இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் உருவானது. முதல் பாகத்தில் ‘புஷ்ப்பான்னா ஃபிளவர்னு நினைச்சியா.. ஃபயரு’ என்கிற பன்ச் வசனத்தை இரண்டாம் பாகத்திற்காக ‘ஃவோல்ட் ஃபயரு’ என மாற்றினார்கள். டிசம்பர் 5ம் தேதி இப்படம் வெளியானது.

    இதுவரை இந்த இந்திய சினிமாவுக்கும் இல்லாத வகையில் அட்வான்ஸ் புக்கிங்கே 100 கோடியை தொட்டது. படம் வெளியான முதல் நாளே இப்படம் வெளியான 2 நாட்களில் 449 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அப்படி பார்க்கும்போது இந்த படம் 1000 கோடி வசூலை தொட்டுவிடும் என்றே கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், புஷ்பா 2 பாலிவுட்டிலும் சாதனை படைத்து வருகிறது. 2 நாட்களில் இப்படம் ஹிந்தியில் 131 கோடி வசூலை அள்ளியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் பதான் படம் முதல நாள் வசூலாக 123 கோடியை வசூல் செய்ததே இதுவரை ரெக்கார்டாக இருந்தது.

    அந்த சாதனையை புஷ்பா 2 முறியடித்திருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானை ஓவர் டேக் செய்திருக்கிறார் அல்லு அர்ஜூன். ஒரு தெலுங்கு சினிமா ஹீரோ ஹிந்தியில் முதலிடத்தை பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • வேகமாக 1000 கோடி வசூல் செய்த 6 திரைப்படங்கள்!.. பட்டைய கிளப்பும் புஷ்பா 2!…

    பேன் இண்டியா படங்கள்:

    Pushpa 2: கடந்த சில வருடங்களாகவே பேன் இண்டியா என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. அதாவது, ஒரு மொழியில் உருவாகும் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவர்கள். இந்தியா முழுவதும் பல ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் போது வசூலை அள்ளும் என்பதுதான் வியாபார கணக்கு.

    ராஜமவுலி:

    இதை துவங்கி வைத்தது ராஜமவுலிதான். அவர் இயக்கிய பாகுபலி படம் இப்படித்தான் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. அதைத்தொடர்ந்து வெளியான பாகுபலி 2 படமும் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதன்பின் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படமாக துவங்கியது.

    பாகுபலி 2, கேஜிஎப் 2:

    விஜயின் லியோ, தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், ரஜினியின் ஜெயிலர், யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப், கேஜிஎப் 2, மற்றும் ஆர்.ஆர்.ஆர், கல்கி, சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்தது. இதில், சில படங்களை தவிர மற்ற எல்லாமே வசூலை அள்ளியது.

    ஒருபக்கம், ஷாருக்கானின் படங்களும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக துவங்கிவிட்டது. அதேபோல், அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் பேன் இண்டியா படமாக வெளியாகி ஹிட் அடிக்க சமீபத்தில் புஷ்பா 2 படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

    புஷ்பா 2:

    ஹிந்தியில் மட்டும் இப்படம் 5 நாட்களில் 300 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. ஒரு தெலுங்கு படம் ஹிந்தியில் 5 நாட்களில் இவ்வளவு வசூலை பெற்றது சாதனையாக பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் 5வது நாளில் 930 கோடிக்கு வந்தது. இப்போது 6 நாட்கள் ஆகிவிட்டதால் கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மிகவும் வேகமாக ஆயிரம் கோடியை தொட்ட இந்திய திரைப்படங்கள் பற்றி பார்ப்போம். இதில் முதலிடத்தில் இருப்பது புஷ்பாதான். 6 நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலை தொட்டிருக்கிறது. அடுத்து பாகுபலி 2 படம் 10 நாட்களில் 1000 கோடியை தொட்டது. ஆர்.ஆர்.ஆர் படம் 16 நாட்களில் 1000 கோடியை தொட்டது.

    கேஜிஎப் 2 படம் 16 நாட்களில் 1000 கோடியை தொட்டது. அட்லி இயக்கத்ஹில் ஷாருக்கான் நடித்த ஜாவன் படம் 18 நாட்களில் 1000 கோடி வசூலை தொட்டது. அதேபோல், ஷாருக்கானின் நடிப்பில் வெளியான மற்றொரு படமான பதான் படம் 27 நாட்களில் 1000 கோடி வசூலை தொட்டது.

  • உங்களுக்கு வந்தா இரத்தம்… எங்களுக்கு தக்காளி சட்னியா? குளிர்பான விளம்பரத்துக்கு எதிர்ப்பு… காட்டமான ஷாருக்கான்

    Sharukkhan: சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையை வெகு சுலபமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கையாண்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    ஆன்லைன் சூதாட்டம், குளிர்பானம் மற்றும் புகையிலை உள்ளிட்ட சுகாதாரக் கேடான விஷயங்களின் விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் காசுக்காக ரசிகர்களை தப்பான வழியில் நடத்துவதாக கண்டனங்களும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

    தமிழில் கூட ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்த பிரபல நடிகர்களை தற்போது வரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு சூழலில் கரண் தாப்பர் நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்ட போது அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சற்று காட்டமாகவே ஷாருக்கான் பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறுகையில், குளிர்பானம் குழந்தைகளுக்கு கேடாக இருக்கிறது என்றால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தி விடுங்கள். சிகரெட் உள்ளிட்ட புகையிலை தவறான விஷயம் என்றால் அதை விற்பனை செய்யாதீர்கள்.

    நீங்கள் உற்பத்தி செய்யும் போதோ, வியாபாரம் செய்யும் போதோ உங்களுக்கு லாபம் கிடைக்கிறது. உங்களுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதால் அதை நிறுத்த மாட்டீர்கள். சமூகத்தை கெடுக்கும் விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு பணம் கிடைக்கிறது என்றால் அதை நிறுத்துவதில்லை.

    ஆனால் நடிகரான எங்களை மட்டும் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். எங்களை தடுக்காதீர்கள். சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து எந்த ரசிகர்களும் கெட்டு விடுவதில்லை. அவர்களுக்கு சரி இது தவறு இது என்பது தெரியும்.

    தவறான விஷயம் உலா வருகிறது என்றால் அதை அடியோடு அழிப்பது அரசாங்கத்தின் வேலை. நான் நடிகன். விளம்பரங்களில் நடிப்பது என்னுடைய வேலை நான் அதை தான் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    பாலிவுட் பிரபல நடிகரே இப்படி பேசி இருப்பது தற்போது மற்ற நடிகர்களுக்கெல்லாம் தைரியத்தை கொடுத்திருக்கும். இனி வரும் காலங்களில் தமிழ் நடிகர்களும் இதே பதிலை கூறவும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களிடம் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றது.

  • அலைபாயுதே படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபலங்களா?.. சீக்ரெட் சொன்ன மணிரத்னம்..!

    தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை தனக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக இயக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்தினம். இவரின் திரைப்படங்கள் அதிலும் காதல் திரைப்படங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும். காதல் காட்சிகளில் புகுந்து விளையாட கூடிய இயக்குனர் மணிரத்னம். இன்றைய தமிழ் சினிமாவில் பல காதல் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு நெருக்கமாக அமைந்திருக்கலாம்.

    ஆனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் 90’ஸ் கிட்ஸ் தொடங்கி 2k கிட்ஸ் வரை அனைவருக்கும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரைப்படம் என்றால் அது அலைபாயுதே திரைப்படம் தான். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2000 ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் அலைபாயுதே. இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    தற்போது வரை அனைவராலும் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு திரைப்படமாக அமைந்திருக்கின்றது. இந்த திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, விவேக் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார். மேலும் ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்றால் ஏ ஆர் ரகுமானை கூறலாம்.

    படத்திலிருந்து பாடல்கள், பின்னணி இசை அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்தது. கிராமத்தில் நடக்கும் ஒரு திருமணத்திற்கு நடிகை ஷாலினி சென்றபோது அங்கு நடிகர் மாதவனை சந்திக்கின்றார். அதன்பிறகு ரயிலில் பயணிக்கும் போது தான் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகின்றது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    அக்கா திருமணம் முடியும் முன்பு தங்கை திருமணம் செய்து கொண்டது தெரிந்தால் அக்காவுக்கு திருமணம் ஆகாது என்பதற்காக தனது திருமணத்தை மறைத்து தனித்தனியாக அவரது வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் தொடர்பான விஷயம் வீட்டில் தெரிய வர இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார்கள்.

    அப்போது இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் போது ஷாலினிக்கு விபத்து ஏற்பட இருவரும் மீண்டும் சேர்ந்து விடுகிறார்கள். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளான நிலையில் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் மணிரத்தினம் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கின்றார்.

    அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘அலைபாயுதே திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஷாருக்கான் மற்றும் கஜோல் தான். இவர்கள் இருவரையும் வைத்து தான் கதையை திட்டமிட்டு இருந்தோம். கதை ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் படத்தின் கிளைமேக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தயார் செய்யவில்லை.

    அதனை தொடர்ந்து அலைபாயுதே திரைப்படத்தை எடுக்காமல் கஜோல் மற்றும் ஷாருக்கான் வைத்து தில் சே என்ற திரைப்படத்தை இயக்கினேன். மீண்டும் இவர்கள் இருவரையும் வைத்து அலைபாயுதே படத்தை எடுக்க வேண்டாம் என்பதற்காக ஷாலினி மாதவனை வைத்து படத்தை இயக்கினேன். இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிப் படம்’ என்று அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருந்தார்.

  • நாய் மாறி வேலை செய்யணும்!.. அப்போதான் அப்படி வாழலாம்!.. சூர்யாவின் தத்துவத்தை பாருங்க!..

    நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொன்ன வார்த்தையை தான் இன்னமும் பின்பற்றி வருவதாக பேசி இருப்பது ரசிகர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கோலிவுட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

    நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய சரிவை கொடுத்தது.

    ஆனாலும் நடிகர் சூர்யா துண்டு விழாமல் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கண்ணாடிப் பூ பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த சிங்கிளை சீக்கிரமே வெளியிட போவதாகவும் ரசிகர்களுக்கு அந்த பாடலும் நிச்சயம் பிடிக்கும் என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் பாடல் வேலையில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கர் பிஸியாக இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நாயைப் போல உழைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ராஜா போல வாழ முடியும் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒருமுறை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை இன்னமும் தான் கடைப்பிடித்து வருவதாக சூர்யா கூறியுள்ளார்,

  • அட்லி கொடுத்த மெகா வெற்றி!. அந்த இயக்குனருடன் கூட்டணி போடும் ஷாருக்கான்!…

    பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 90களில் இவரின் படங்களில் டப் செய்யப்படாமல் அப்படியே தமிழகத்தில் வெளியாகி நல்ல வசூலை பெறும். பெரும்பாலும் காதல் படங்களில்தான் அதிகம் நடிப்பார். ஷாருக்கான் படம் என்றாலே ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உண்டு.

    அதேபோல், ஷாருக்கான் படத்தில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கும் என்பதற்காகவே ரசிகர்கள் படம் பார்ப்பார்கள். அவர் படம் தொடர்பான பாடல் கேசட்டுகள் தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகும். கமலுடன் ஹே ராம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் சம்பளம் வாங்காமலே நடித்தார் ஷாருக்கான்.

    தமிழ் சினிமா இயக்குனர்களை எப்போதும் கவனித்து வரும் நடிகர் இவர். மணிரத்னம் இயக்கத்தில் உயிரே படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எவர்கிரீன் ஹிட். விஜயை வைத்து 3 படங்களை இயக்கிய அட்லியை அழைத்து ஜவான் படத்தை தயாரித்து நடித்தார். இந்த படம் 1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

    எனவே, தென்னிந்திய இயக்குனர்களின் மீது ஷாருக்கானின் பார்வை திரும்பியிருக்கிறது. அல்லு அர்ஜூனை வைத்து புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களை இயக்கிய சுகுமாரின் இயக்கத்தில் நடிக்கும் ஆசை ஷாருக்கானுக்கு வந்திருக்கிறது. ஏனெனில் புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 1700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

    புஷ்பா 2-வுக்கு பின்னர் ராம் சரணை வைத்து ஒரு படமெடுக்கும் வேலையில் சுகுமார் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் ஷாருக்கான் உள்ளே புகுந்திருக்கிறார். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுகுமார் யாரை வைத்து படமெடுக்க போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.

    அல்லது, ராம் சரண் படத்தை முடித்துவிட்டு கூட அவர் ஷாருக்கான் படத்தை இயக்கவும் வாய்ப்புண்டு. இந்த படத்திற்கு பின் புஷ்பா 3 எடுக்கவும் திட்டமும் சுகுமாருக்கு இருக்கிறது. எனவே, தொடர் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

  • 10 ஆயிரம் தியேட்டரில் வெளியான ஜவான் வசூலையே முறியடித்ததா கோட்? உருட்டலாம் அதுக்குனு?

    Jawan: கோட் திரைப்படத்தின் வசூல் வேட்டை குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தாலும் ரசிகர்கள் சில சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சிநேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார். செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தொடர்ச்சியாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது.

    இதையும் படிங்க: இதுல கிரிக்கெட்! அங்க ஃபுட் பாலா? ‘கோட்’ க்ளைமாக்ஸ இந்த படத்துல இருந்துதான் சுட்டுருக்காரா?

    இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 77 கோடி மட்டும் தான் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தயாரிப்பு குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலாக கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 126 கோடி எனக் கூறப்பட்டது.

    பண்டிகை நாள் என்பதால் நான்கு நாட்களும் தொடர் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கோட் திரைப்படம் ஓடி வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு 4000 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல் அதிகாரப்பூர்வமாக 126.32 கோடி எனக் கூறப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: இமானை மிரட்டினார் சிவகார்த்திகேயன்!. அதனால்தான் சொன்னோம்!.. வலைப்பேச்சு பகீர்!…

    இந்நிலையில் கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் பத்தாயிரம் திரையரங்குகளில் ஓடியது. ஆனால் அப்படத்தின் முதல்நாள் வசூல் 129.6கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாதி திரையரங்குகள் கணக்கில் கூட ஓடாத கோட் திரைப்படம் எப்படி இவ்வளவு வசூல் செய்திருக்கும் என கேள்விகள் எழுந்திருக்கிறது.

    இந்த வசூல் கணக்கு தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விரைவில் படம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  • ஆனந்த் அம்பானிக்கு ஷாருக்கான் கொடுத்த திருமண பரிசு!.. இவ்வளவு கோடி மதிப்பா?!..

    இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் இவர். இவரின் ரிலையன்ஸ் நிறுவனம், செல்போன், சூப்பர் மார்க்கெட், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் ரிலையன்ஸின் ஜியோ நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக அம்பானி குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு போகும். அதிலும், பல கேட்டகிரிகள் இருக்கிறது. வருடத்திற்கு இத்தனை கோடிகளுக்கும் மேல் சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு போகும். நடிகர், நடிகைகளும் கௌரவத்திற்காக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வார்கள்.

    அப்படித்தான் சமீபத்தில் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடந்தது. இந்த திருமண விழாவில் பாலிவுட்டின் சீனியர் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரன்வீர் சிங், சாஹித் கபூர், ஜான்வி கபூர், வித்யா பாலன், ரன்பீர் கபூர், ஆலியா பட உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

    அதேபோல், கோலிவுட்டிலிருந்து நடிகர் ரஜினி காந்த் அவரின் மனைவி லதா, சூர்யா, அவரின் மனைவி ஜோதிகா, இயக்குனர் அட்லி மற்றும் அவரின் மனைவி பிரியா உள்ளிட்ட பலரும் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமண விழாவில் பல இசைக்கச்சேரிகளும் நடந்தது.

    ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். மேலும் வெளிநாட்டில் பிரபலமான சில இசைக்கலைஞர்களும் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடனமாடிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு பல கோடிகள் கொடுக்கப்பட்டதாகவும், சிலருக்கு 2 கோடி மதிப்புள்ள வாட்ச் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

    இந்நிலையில், ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 40 கோடி மதிப்புள்ள ஒரு அபார்ட்மெண்டை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகையும் வாயடைக்க வைத்திருக்கிறது.