Tag: ஹாலிவுட்

  • லோகேஷ் – அல்லு அர்ஜூன் பட கதை இதுதானா?!.. ஹாலிவுட் ரேஞ்சில இருக்கே!…

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. அதேநேரம் விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ, ரஜினியை வைத்து இயக்கிய கூலி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவேதான் ரஜினி கமலுடன் தான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு கொடுக்கவில்லை என அப்போதே செய்திகள் வெளியானது.

    ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். எனவே அடுத்து அவர் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவனது. ரஜினி, கமல் இணையும் பட வாய்ப்பு கையை விட்டுப் போனதால் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் அவரோ தெலுங்கு சினிமா நடிகர் புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனை சந்தித்து ஒரு கதையை சொல்லி ஓகே செய்திருக்கிறார்.

    அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகும் படத்தின் கதை இதுதான் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இது லோகேஷ் கனகராஜ் எப்போதே எழுதிய இரும்புக்கை மாயாவி கதைதான் என்றாலும் தற்போது அதில் பல மாற்றங்களை அவர் செய்திருக்கிறார்.

    1962ம் வருடம் வெளியான The Steel Claw ன்கிற ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை லோகேஷ் உருவாக்கியிஇருக்கிறாராம். விபத்தில் கையை இழந்து செயற்கை கை பொருத்திருக்கும் ஹீரோ ஒரு மின்சார விபத்திற்கு பின் தனது உடலை மறைய வைக்கும் சக்தியை பெறுகிறான். அதை அவன் எப்படி பயன்படுத்தினான் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதால் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  • புருஷனை வேவு பார்க்க வேலைக்காரியை அனுப்பிய பாவம்!.. கடைசியில ட்விஸ்ட்டு.!. சைரன்ஸ் விமர்சனம்!..

    சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3 என வரிசையாக கல்ட் படங்களை வாங்கி வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஹாலிவுட்டில் இருந்து அதே போல ஒரு கல்ட் வெப்சீரிஸை இறக்கியுள்ளது. அதுவும் தமிழ் டப்பிங் உடன் வெளியான நிலையில், செம பயங்கரமாக இருக்கும் என ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே பயத்துடன் பார்த்தால், கடைசியில் செம காமெடி டிராமாவாக மாறிவிட்டது.

    மோலி ஸ்மித் மெட்சியர் இயக்கத்தில் மேகன் ஃபாகி, மில்லி ஆல்காக், ஜூலியானா மூர் மற்றும் ஹாலோமேன் பட ஹீரோ கெவின் பேக்கன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    ஹாலோ மேன் படத்தில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களை கவர்ந்த கெவின் பேக்கன் தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம். பீட்டர் கெல் எனும் கதாபாத்திரத்தில் சொந்தமாக ஒரே தீவையே வைத்திருக்கும் பெரிய பணக்காரராக உள்ளார்.

    ஆனால், அவரையும் அந்த தீவையும் மொத்தமாக கட்டி ஆண்டு வருவது அவருடைய 2வது மனைவியான மிச்செல்லா தான். பருந்து, ஆந்தை போன்ற காட்டு பறவைகளை தீவில் பாதுகாத்து வருவது, காலா எனும் பெயரில் பணக்காரர்களை அழைத்து விருந்து வைப்பது என மிச்செல்லா ரொம்பவே புரியாத புதிராக உள்ளார்.

    தனது தங்கையை தேடி வரும் மேகன் ஃபாகிக்கு மிச்செல்லாவின் பர்சனல் செக்ரட்டரியாக இந்த தீவில் அவர் வேலை செய்வது தெரிய வருகிறது. தீவை விட்டு அவரது அக்காவை வெளியேற்றி போலீஸ் ஸ்டேஷனில் குற்றவாளியாக உட்கார வைத்து, வார்ன் செய்து அனுப்புகிறார் மிச்செல்லா.

    காவல் நிலையத்தில், அந்த பணக்காரரின் முதல் மனைவியையே மிச்செல்லா தான் கொன்றுவிட்டார் என்றும் அவர் ஒரு மான்ஸ்டர் என்றும் பக்கத்து செல்லில் இருக்கும் சக பெண் கைதி கூறுகிறார். தனது தங்கையை எப்படியாவது அந்த மான்ஸ்டரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் செய்யும் கல்ட் விஷயங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் அத்துமீறி அந்த தீவுக்குள் செல்கிறார்.

    ஜப்பானுக்கு சென்று விட்டு திரும்பியதாக கூறும் மிச்செல்லாவின் கணவர் வாங்கி வந்த சாக்லெட் பாக்ஸ் டூப்ளிகேட் என்றும் லோக்கலில் வாங்கி ஏமாத்துகிறார் என்பதை கண்டறியும் மிச்செல்லா, தனது அசிஸ்டன்ட்டான நடிகை மில்லி ஆல்காக்கிடம் சொல்லி வேவு பார்க்க சொல்கிறார்.

    வேவு பார்க்கச் சென்ற இடத்தில் என்ன ஆனது? கடைசியில் யாரு ரியல் மான்ஸ்டர் என்கிற கேள்விகளுக்கு விடையாக இந்த வெப்சீரிஸ் கிளைமேக்ஸ் அமைந்துள்ளது. ஒரு சில அடல்ட் காட்சிகள் இருந்தாலும், தமிழ் டப்பிங்கில் ஓவரான ஆபாச காட்சிகள் இல்லாமல் கட் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தே த்ரில்லிங் அனுபவத்துடன் ஒரு ஹாரர் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் இந்த வெப்சீரிஸ் கடைசியில் ஒரு டார்க் காமெடி வெப்சீரிஸாக முடிவடைவது சற்றே ஏமாற்றத்தை அளிக்கிறது.

  • ஹாலிவுட்டுக்கு செல்லும் சரத்குமார் மகள்!.. வரலட்சுமிக்கு அடித்த குபேர யோகம்!.. கல்யாண அதிர்ஷ்டமா?..

    நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகை வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், தாரை தப்பட்டை, மாரி 2, ராயன் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, நெகடிவ் ரோல் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களிலும் வித்தியாசமாக நடித்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

    மேலும், சில வெப் தொடர்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு தொழிலதிபர் நிக்கோலாஸ் சச்தேவுடன் தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். நிக்கோலாஸ் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் ஒரு மகளின் தந்தை என்றும் தகவல்கள் பரவின.

    வரலட்சுமி சந்திரன் ருட்னம் இயக்கத்தில் ஜெர்மி ஐயன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரிசானா எ கேஜ்டு பேர்ட்’ (RIZANA – A Caged Bird) என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிட்டில் அறிமுகமாகவுள்ளார். இது ஒரு சட்டம் மற்றும் நீதி தொடர்பான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் இருந்து நடிகைகள் பாலிவுட்டில் நடிக்கக் கிளம்பியுள்ள நிலையில் வரலட்சுமிக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவரது முக்கியமான தருணமாக இருக்கும் என்கின்றனர். இது குறித்து வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராமில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து, ஜெரமி இரான்ஸுடன் பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அடி மேல் அடிவாங்கும் லைகா.. கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி.. எங்க போய் முடியப்போகுதோ..

    நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் தற்போது கதைதிருட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கின்றது.

    Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட 2 திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

    விடாமுயற்சி தாமதம்:

    துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்த இந்த திரைப்படம் பல பிரச்சினைகளில் சிக்கி கடைசியாக இயக்குனர் மகிழ்திருமேனி கையில் சேர்ந்தது. இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது.

    இதையும் படிங்க: நெகட்டிவிட்டிய இக்னோர் பண்ணி செம பிஸியான தனுஷ்… கேட்கவே சும்மா அதிருதே!..

    படத்திற்கு விடாமுயற்சி என்ற பெயர் தொடர்பான அப்டேட்டை தவிர வேறு எந்த அப்டேட்டும் வராததால் சற்று வருத்தத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்தது. அங்கு ஏற்பட்ட காலசூழ்நிலை காரணமாக இப்படத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள். படம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை.

    விடாமுயற்சி டீசர்:

    படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக புகழ்ந்து பேசி வந்தார்கள். மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

    vidamuyarchi
    vidamuyarchi

    கதை திருட்டு சர்ச்சை:

    விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், அடுத்த 10 நாட்களில் படத்தின் அனைத்து பேட்ச் ஒர்க்கும் முடிந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணி தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படம் கட்டாயம் பொங்கலுக்கு வெளியாகி விடும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: செலவுக்கு காசு இல்ல!. 2 படங்களை தட்டி தூக்கி கோடிகளை குவிக்கும் ஜெயம் ரவி!…

    இந்த திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் என்பது பலருக்கும் தெரியும். இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தான் படத்தை எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை ரீமேக் உரிமையை வாங்காமல் இருந்து வந்திருக்கின்றது லைக்கா நிறுவனம். படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது வரை படத்தில் ரீமேக் உரிமை வாங்கப்படாத நிலையில் படத்திற்கு 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு படக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • அவதார் 3 பட தலைப்பே தாறுமாறே இருக்கே!.. ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாரே ஜேம்ஸ் கேமரூன்!..

    ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஜேம்ஸ் கேமரூன். ஏலியன், தி டெர்மினேட்டர், டைட்டானிக்என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவரின் படங்கள் உலகம் முழுவதும் வசூலை குவிக்கும். இவரின் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் உலகத்திலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றது.

    அதன்பின் அந்த படத்தின் வசூலை ஜேம்ஸ் கேமரூன் அடுத்து இயக்கிய அவதார் திரைப்படம் முறியடித்தது. உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை பெற்றது. ஒரு புதிய உலகை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.

    இதையும் படிங்க: நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!

    2009ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய் அனுபவத்தை கொடுத்தது. படம் வெளியாகி சில வருடங்களில் இப்படம் 3டி-யிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. முதல் பாகம் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்படம் இன்னும் 5 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

    james

    அதோடு ரிலீஸ் தேதிகளையும் அறிவித்தார். அதன்படி, 13 வருடங்கள் கழித்து 2022ம் வருடம் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகம் நிலத்தோடு தொடர்புடையது எனில், இரண்டாம் பாகம் நீரோடு தொடர்புடையதாக இருந்தது. படத்தின் தலைப்பே Avatr – They way of water என வைக்கப்பட்டிருந்தது.

    தலைப்புக்கு ஏற்றது போல அப்படத்தின் பல காட்சிகளும் தண்ணீரிலேயே எடுக்கப்பட்டிருந்தது. இந்த படமும் பெரும் வெற்றியை பெற்று வசூலை அள்ளியது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 3ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில்தான், அவதார் படத்தின் 3ம் பாகம் தொடர்பான அறிவிப்பை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு AVATAR – FIRE AND ASH அதாவது அவதார் – நெருப்பும் சாம்பலும் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என் அவர் அறிவித்திருக்கிறார்.

    இதையும் படிங்க: ‘கோட்’ ரிலீஸ் ஆகும் வரை கம்முனு இருங்க! ரசிகர்களை கப் சிப்பாக்கிய் விஜய்.. ஒரு முடிவோடத்தான் இருக்காரு