Tag: abirami

  • அபிராமி வெங்கடாச்சலத்தின் லவ்வர் இவர் தானாம்.. இனிமே சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வரமாட்டார் போல!

    அபிராமி வெங்கடாச்சலத்தின் லவ்வர் இவர் தானாம்.. இனிமே சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வரமாட்டார் போல!

    நடிகை அபிராமி வெங்கடாச்சலம், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் மக்களிடையே பிரபலமானவர். தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில், சப்ஸ்க்ரிப்ஷன் சர்ச்சையில் சிக்கிய அபிராமி, தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    ஆரம்ப காலத்தில் மாடலிங்கில் தனது வாழ்க்கையை தொடங்கிய அபிராமி, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். அதன் பிறகு Star Wars என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர், விஜய் தேவரகொண்டாவின் NOTA படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர், களவு மற்றும் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி, தனது தைரியமான மற்றும் வெளிப்படையான பேச்சுத் திறனால் மக்களிடையே அதிக கவனம் பெற்றார். இருப்பினும், அதே நிகழ்ச்சியில் முகேன் ராவ் உடன் ஏற்பட்ட காதல் தொடர்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

    அதனைத் தொடர்ந்து, இரு துருவம் என்ற தொடரில் நடித்த அவர், ஆரி அர்ஜுனன் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு ஸ்கெட்ச் ஓவியத்தை பகிர்ந்துள்ளார். அதில், காதலர்கள் ஒருவரை ஒருவர் நேசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    மேலும், அந்த பதிவில், “உன் கண்கள் என்னை பார்த்தாலே வார்த்தைகள் தேவையில்லை… ஆயிரம் காதல் கடிதங்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது போல உணர்கிறேன்” என்ற உணர்ச்சிப்பூர்வமான வரிகளையும் பகிர்ந்துள்ளார்.

    இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை மீண்டும் அபிராமி மீது திருப்பியுள்ளது. அபிராமியின் காதலர் யார், ஒருவழியாக வாழ்க்கைத் துணையை தேடிப் பிடித்து விட்டாரே என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

  • அறிவா பேசுறேனு அதுல கோட்ட விடுறாரு.. கமல் பற்றி அபிராமி இப்படி சொல்லிட்டாங்களே

    சினிமாவை பொறுத்தவரைக்கும் ஸ்கிரீனில் பார்க்கக்கூடிய ஜோடி ஒரு படத்தில் பிரபலமாகி விட்டால் அடுத்தடுத்து படங்களில் அவர்கள் ஜோடியாக நடிக்க ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்ததின் மூலம் அந்த படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

    ஏன் அந்த படத்திற்கு பிறகு கூட கமல் அபிராமியை சேர்த்து வைத்து பல வதந்திகளும் பரவியது. குறிப்பாக முத்தக்காட்சியில் நடித்ததன் மூலம் இருவரையும் சேர்த்து வைத்து பல செய்திகள் வெளியானது. இப்போது அந்த படத்திற்கு பிறகு மீண்டும் தக் லைஃப் திரைப்படத்தில் ஜோடியாக அபிராமி நடித்திருக்கிறார். ஆனால் இதற்கிடையில் கமலின் ஒரு சில படங்களில் மற்ற ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கவும் செய்தார் அபிராமி.

    குறிப்பாக விஸ்வரூபம் படத்தில் அபிராமி டப்பிங் கொடுத்திருக்கிறார். தொழில் ரீதியாக கமலுக்கும் அபிராமிக்கும் இடையே நல்ல ஒரு நட்பு இருந்து வருகிறது. குணா படத்திற்கு பிறகு தான் தன்னுடைய பெயரை அபிராமி என மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு கமலின் தீவிர ரசிகை அபிராமி. அதை ஒவ்வொரு மேடையிலும் நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்த நிலையில் கமலிடம் இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள் என கேட்டதற்கு அபிராமி கொடுத்த பதில் இதோ.

    அவரிடம் எதுவுமே மாற்ற தேவையில்லை. ஜென்டில்மேன் ஆக இருக்கிறார். ஆனால் அதீத புத்திசாலியாகவும் இருப்பதனால் அவர் கூறும் சில விஷயங்கள் மக்களிடம் சரியாக போய் கனெக்ட் ஆக முடியவில்லை. அதாவது மக்களுக்கு புரியவில்லை. அதனால் மக்களுக்கு அவர் சொல்கிற விஷயம் ஈசியாக போய் கனெக்ட் ஆகக்கூடிய வகையில் அவர் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் என்னுடைய ஆசை என கூறினார் அபிராமி.

    abirami

    abirami

    இது இவருடைய கருத்து மட்டும் அல்ல எல்லாருடைய கருத்தும் அதுதான். ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் என்ன சொல்ல வருகிறார் என்பதை கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் விளக்கமாக மிகத் தெளிவாக சில நிமிடங்கள் பேசுவார் .ஆனால் கடைசியில் என்ன சொல்ல வந்தார் என யாருக்கும் புரியாது. அதைத்தான் இப்போது அபிராமியும் சொல்லி இருக்கிறார்

  • இதுக்குத்தான் நயன்தாரா எஸ்கேப்பா!.. தாத்தா ஆகணும்னு சொல்லிட்டு பண்ற வேலையை பார்த்தீங்களா!..

    நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். படத்தின் டிரைலர் வெளியான நிலையில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு வாயில் ரத்தம் வரும் அளவுக்கு ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கிக் கொள்கின்றனர். விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்தின் உல்டா ரீமேக்கா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    இது ஒரு பக்கம் இருந்தாலும், படத்தில் ரசிகர்களை கவர்ந்த விஷயம் என்றால் விருமாண்டி படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அபிராமியுடன் கமல்ஹாசன் இணைந்துள்ள நிலையில், பச்செக்கென கொடுக்கும் அந்த லிப் லாக் முத்தமும் படத்தின் வியாபாரத்திற்காக அதனை டிரைலரில் வைத்த விதமும் தான்.

    மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை நயன்தாரா நடிக்கவே இல்லை. த்ரிஷா ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து விட்டார். ஜோதிகா கூட செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசன், மணிரத்னம் படத்தில் முதலில் நயன்தாரா கமிட் ஆவதாக இருந்தது. ஆனால், இப்படியொரு கதாபாத்திரம் என்பதை கேட்டுத்தான் அவர் நோ சொல்லியிருப்பார் என தற்போது நயன்தாரா ரசிகர்கள் த்ரிஷாவை கலாய்த்து வருகின்றனர்.

    ஸ்ருதிஹாசன் திருமணம் செய்யாமல் பாய் ஃபிரெண்டுகளை மாற்றி வரும் நிலையில், மேடையிலேயே மகள் மனசு வச்சிருந்தா இன்னேரம் தாத்தா ஆகியிருப்பேன் என்றார். இந்த வயதிலும் முத்தக் காட்சிகள் மற்றும் ஒன்றுக்கு 2 ஹீரோயின்கள் என விண்வெளி நாயகன் விளையாடி இருக்காரே. ஜூன் 5ம் தேதி வெளியாகும் தக் லைஃப் வெற்றி பெறுவது உறுதி என கமல்ஹாசன் ரசிகர்கள் டிரைலரை ஒரு பக்கம் வைரலாக்கினாலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் கமல்ஹாசனின் மன்மத லீலைகளை வைரலாக்கி கழுவி ஊற்றி வருகின்றனர்.

  • தக் லைஃப் நாயகிகள் அபிராமி, திரிஷா… யாரு மூத்தவருன்னு தெரியுமா?

    மணிரத்னம் இயக்கத்தில் முதன் முறையாக கமல், சிம்பு காம்போ இணைகிறது. அதிலும் நாயகன் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அதாவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் காம்போ இணைகிறது. இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. சமீபத்தில் வெளியான ஜிங்குச்சா பாடலும் அதில் கமலும், சிம்புவும் போட்ட ஆட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    தொடர்ந்து வெளியான டிரெய்லர் கூஸ்பம்ப்ஸைக் கிளப்பியுள்ளது. இதில் வில்லன் சிம்புதான் என்று தெரிந்து விட்டது. இருவரும் டான்ஸ் தான் ஆடுகிறார்கள் என்றால் ஃபைட்டிலும் தெறிக்கவிடுவார்கள் போல என இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் படத்தில் வரும் நாயகிகள் குறித்துப் பார்ப்போமா…

    தக் லைஃப்ல கமலுக்குத் தான் திரிஷா, அபிராமி ஜோடி. சிம்புவுக்கு ஜோடியே கிடையாது. சிம்புவுக்குத் தான் திரிஷான்னு நாம நினைச்சோம். ஏன்னா அபிராமி தான் பெரியவங்க. வயசுல மூத்தவங்க. திரிஷா இளையவங்க. வயசுல சின்னவங்கன்னு நினைச்சோம்.

    ஆனா திரிஷாவும், அபிராமியும் 1983லதான் பிறந்துருக்காங்க. இன்னும் சொல்லணும்னா திரிஷா தான் மூத்தவங்க. அவங்க 1983ல மே மாதம் பிறந்துருக்காங்க. அபிராமி அதே ஆண்டுல ஜூலைல தான் பிறந்துருக்காங்க.

    சினிமாவில் சீனியர்னு பார்த்தா அது அபிராமி தான். தன்னோட பேரு திவ்யா தான். ஆனா கமலின் தீவிர ரசிகர். அவரது குணா படத்தில் அபிராமி என்ற கேரக்டர் தனக்குப் பிடித்துவிட்டதால் அந்தப் பேரையே சினிமாவுக்காகத் தனக்கு வைத்துக் கொண்டாராம். கமலுடன் 2004ல் விருமான்டி என்ற படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

    அதே போல கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாகவே திரிஷா இருக்கிறார்.

    5.6.2025ல் வெளிவரும் தக் லைஃப் படத்தில் அபிராமி, திரிஷா இருவரது அசாத்திய நடிப்பையும் கண்டுரசிக்கலாம்.

  • விருமாண்டி பார்ட் 2ல கமல் நடிக்கிறாரா?.. லீக்கான போட்டோவால் கன்ஃபியூஸான ரசிகர்கள்!..

    மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் தக் லைஃப் எனும் படத்தில் நடித்து வருகிறார். செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதலில் மணிரத்னம் தேர்வு செய்தது நடிகர் சிம்புவைத்தான். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிம்பு அந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.

    ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மானை வைத்து தக் லைஃப் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். படத்தின் தொடக்கத்திலேயே கமல்ஹாசன், ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

    இதையும் படிங்க: சூரிய வெளிச்சத்தில் சுகமா இருக்கும் நிவேதா பெத்துராஜ்!.. கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துடாதீங்க!..

    ஆனால், சில பல பிரச்சினை காரணமாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன் காரணமாக தற்போது சிம்பு மற்றும் அசோக் செல்வன் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக கூறுகின்றனர்.

    டெல்லியில் உள்ள அனுமான் கோயிலில் தற்போது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக லீக்கான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் கமலுக்கு அருகே நடிகை அபிராமி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் இது தக் லைஃப் படமா அல்லது விருமாண்டி 2வா? என கேட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: சன் டே செம கூட்டம்!.. சுந்தர் சிக்கு அடித்த ஜாக்பாட்.. அரண்மனை 4 படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?..

    மேலும், சிம்பு காளை படத்தில் இருந்த கெட்டப்பில் இருக்கிறார். மேலும், நாசர், லியோ படத்தில் கடைசியாக நடித்து மிரட்டிய வையாபுரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கமல்ஹாசனின் லுக்கும் அப்படியே விருமாண்டி படத்திலிருந்து அதைப் போலவே யங்காக இருப்பதை பார்த்த ரசிகர்கள் கன்ஃப்யூஸ் ஆகியுள்ளனர்.

    இந்த படம் எப்படி வரப் போகிறது என்றும் நாயகன் படத்தைப் போல அடுத்த தரமான சம்பவத்தை செய்ய மணிரத்னம் காத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். தக் லைஃப் படத்தின் அறிமுக வீடியோவில் கமல்ஹாசன் வேறு ஒரு தோற்றத்தில் இருந்தாரே அந்த லுக்கில் இந்த படத்தில் அவர் நடிக்க வில்லையா என்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

    இதையும் படிங்க: தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…