Tag: actor murali

  • அந்த பிரபலத்தை பற்றி விஜயகாந்த் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண முரளி.. அப்பவே இந்த பிரச்சனை இருந்திருக்கா?..

    தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல காமெடி திரைப்படங்கள் இன்றளவும் ஃபேமஸாக இருந்து வருகின்றது. இந்த திரைப்படங்கள் அனைத்துமே டிவிகளில் போடும்போது மக்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் சுந்தரா டிராவல்ஸ். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை காமெடியில் புகுந்து விளையாடி இருப்பார்கள்.

    இந்த திரைப்படம் மலையாள திரைப்படமான ‘ஈ பறக்கும் தளிக்கா’ என்கின்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் முரளி, வடிவேலு, ராதா, இயக்குனர் வாசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

    இந்த திரைப்படத்தை இயக்குனர் அசோகன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்கு பரணி இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரித்திருந்தார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒரு பேருந்து மற்றும் அதை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து மிகச் சிறப்பாக கொண்டு சென்றிருப்பார்கள். படம் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

    இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தயாரிப்பாளர் தங்கராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இந்த படத்தை எடுத்து முடித்த பிறகு எனக்கும் முரளிக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டது/ அதாவது படத்தை எடுத்து முடித்தவுடன் அதன் ஃபர்ஸ்ட் காப்பியை தனக்கு போட்டு காட்டும்படி முரளி கூறியிருந்தார்.

    ஆனால் நான் உங்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சு அல்லவா அது எல்லாம் உங்களுக்கு எதற்கு என்று ஃபர்ஸ்ட் காப்பியை போட்டு காட்ட முடியாது என்று கூறிவிட்டேன். அதன் பிறகு முரளி நேராக சென்று விஜயகாந்த் அவர்களிடம் கம்ப்ளைன்ட் பண்ணி விட்டார். நான் எப்போதும் நடிகர் சங்கத்தில் தான் அதிகமாக இருப்பேன். அங்கு தான் விஜயகாந்த் சார் இருப்பார்.

    அவருடன் தான் பெரும்பாலான நேரங்களை செலவிடுவேன். ஒரு நாள் அவரை பார்க்க செல்லும் போது நடிகர் முரளி அங்கு இருந்தார். என்னை பார்த்ததும் உங்கள் மீது நான் மிகுந்த கோபத்தில் இருக்கின்றேன் என்றார், விஜயகாந்த் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை அவர் படத்தை போட்டு காட்ட தானே சொன்னார் காட்டி விட வேண்டியது தானே என்று கூறினார்.

    பிறகு விஜயகாந்த் சார் வார்த்தைக்காக படத்தை போட்டு காட்டினேன். நான், முரளி, விஜயகாந்த் சார் மூவரும் அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்த்தோம். படத்தை பார்த்து முடித்து விட்டு விஜயகாந்த் அவர்கள் மிகவும் பாராட்டினார்கள்’ என்று கூறியிருந்தார். தற்போது தான் படங்களை எடுத்து முடித்த பிறகு இயக்குனர் தயாரிப்பாளருக்கு படத்தை போட்டு காட்ட மறுக்கின்றார் என்றெல்லாம் பிரச்சனை வருகின்றது என்று பார்த்தால் அப்போது இந்த பிரச்சனை எல்லாம் இருந்திருக்கின்றது.

  • என் பொண்டாட்டிதான் இருக்கா வேணுமா?.. கோபப்பட்ட தயாரிப்பாளர்.. முரளி படத்தில் நடந்த கலாட்டா!..

    Murali: ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி ஹீரோ, ஹீரோயினும் முக்கியம். அதுவும் ஒரு ஹீரோவை விட ஹீரோயினை தேடும் படலம் இருக்கே? அது ஒரு பெரிய டாஸ்க். இப்போதெல்லாம் இன்ஸ்டா மூலம் பிரபலமாகி உடனே ஹீரோயின் ஆகி விடுகிறார்கள். ஆனால் ஆரம்ப கால கட்டங்களில் ஒவ்வொரு ஸ்டூடியோவாக தங்களுடைய புகைப்படங்களை கொடுத்து ஏறி இறங்க வேண்டியிருக்கும்.

    அதிலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து மேலும் லுக் டெஸ்ட் என்ற ஒன்றை வைத்து அவர்களுக்கு பிடித்தால்தான் வாய்ப்பு என்பது உறுதி. இந்த நிலையில் முரளி பட நடிகையை அந்தப் பட இயக்குனருக்கு பிடிக்காமல் தயாரிப்பாளருக்கு பிடித்துப் போயிருக்கிறது. அதன் பிறகு அந்த நடிகை எப்படி உள்ளே வந்தார் என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

    இதையும் படிங்க: Actor Vijay: எங்களுக்கு அவர்தான் ஹீரோ! ராணுவ அகாடமியில் விஜய்க்காக வீரர்கள் செய்த சம்பவம்

    முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தின் ஹீரோயின் ராதா. படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ். படத்திற்கு ஹீரோயினை பல இடங்களில் தேடியிருக்கின்றனர். பின் கஸ்தூரி ராஜாவை ஒரு நடிகை பார்த்துவிட்டு வெளியே வரும் போது அந்த நடிகை தயாரிப்பாளர் தங்கராஜுக்கு பிடித்துப் போயிருக்கிறது.

    உடனே அவருடைய புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொண்டாராம். பின் தங்கராஜுக்கு தெரிந்த நபர் ஒருவரின் மூலமாகத்தான் ராதா அறிமுகமாகியிருக்கிறார். அவரையும் தங்கராஜுக்கு பிடித்துவிட்டதாம். பின் படத்தின் இயக்குனருக்கு ராதாவின் புகைப்படத்தை தங்கராஜ் அனுப்பி வைத்திருக்கிறார். போட்டோவை பார்த்ததும் இயக்குனருக்கு பிடிக்கவில்லையாம்.

    radha
    radha

    இதையும் படிங்க: SK: தனுஷ விடுங்க நம்ம சிவகார்த்திகேயனை பாருங்க!… கைவசம் இத்தனை படங்களை வச்சிருக்காரா?!…

    வேறு யாரையாவது பார்க்கலாமே என இயக்குனர் கேட்டிருக்கிறார். அதற்கு தங்கராஜ் வேற ஆள பார்க்கனும்னா என் பொண்டாட்டித்தான் இருக்கா? வேணுமா என்று கேட்டாராம். ஏனெனில் பல நடிகைகளை இயக்குனருக்கு காட்டியும் ஒரு நடிகை கூட பிடிக்கவில்லையாம் அந்த இயக்குனருக்கு. அந்த கடுப்பில்தான் தயாரிப்பாளர் இப்படி ஒரு வார்த்தையை கேட்டிருக்கிறார்.

  • தயாரிப்பாளரின் மீசையை எடுக்க வைத்த முரளி! தெரிஞ்சு விஜயகாந்த் சும்மா இருப்பாரா?

    முரளி வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை அசோகன் என்பவர் இயக்க எஸ்.வி. தங்கராஜ் படத்தை தயாரித்தார். ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் போது ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான தங்கராஜ். முரளி மற்றும் வடிவேலுவால் தான் என்னென்ன பிரச்சினைக்கு உட்பட்டேன் என்றும் விஜயகாந்த் தான் எல்லா பிரச்சினையையும் சரி செய்தார் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் தங்கராஜ்.

    எப்படியாவது ஒரு தனி ஆளாக படத்தை தயாரித்து சினிமாவில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்திருக்கிறார் தங்கராஜ். அதனால் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான ஈ பறக்கும் தளிகா படத்தை தமிழில் எடுக்க முயற்சி செய்தார் தங்கராஜ். அந்தப் படம் தான் சுந்தரா டிராவல்ஸ்.

    எத்தனையோ நடிகர்களிடம் ஈ பறக்கும் தளிகா படத்தின் கேசட்டை கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார் தங்கராஜ். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டோம் என்று சொல்லி மறுத்துவிட்டார்களாம். கடைசியாக முரளியிடம் கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார். படத்தை பார்த்ததும் முரளிக்கு படம் பிடித்துவிட்டது. ஆனால் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்.

    ஏனெனில் மலையாளத்தில் திலீப் பிரம்மாதமாக நடித்திருந்தாராம். அவர் போல என்னால் நடிக்க முடியாது என சொல்ல தயாரிப்பாளரோ ‘அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். கூடவே வடிவேலுவையும் ஒப்பந்தம் செய்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

    படப்பிடிப்பின் நடுவே முரளி மது அருந்திவிட்டு பெரும் பிரச்சினை செய்தாராம். அவருடன் வடிவேலுவும் சேர்ந்து கொள்வாராம். இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் தங்கராஜை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியிருக்கிறார். உடனே தங்கராஜ் விஜயகாந்திடம் பிரச்சினையை சொல்ல நேராக படப்பிடிப்பிற்கே வந்துவிட்டாராம் விஜயகாந்த்.

    முரளி மற்றும் வடிவேலுவை பார்த்து சத்தம் போட்டாராம். இது என் படம். ஒழுங்கா இருந்து நடித்துக் கொடுக்கனும் என சொல்லி சத்தம் போட்டு சென்றாராம். அதன் பிறகு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு முரளியும் வடிவேலுவும் வந்தார்களாம். அதன் பின் ஒரு நாள் இரவு 12 மணி அளவில் மீண்டும் தங்கராஜுடன் பிரச்சினை செய்தாராம் முரளி. நான் நடிக்க மாட்டேன். அப்படி நடிக்கனும்னா உன் மீசையை எடுக்கனும் என முரளி தங்கராஜிடம் கேட்டிருக்கிறார்.

    இவருக்கு எப்படியாவது படம் முடியவேண்டும் என்ற எண்ணத்தில் அன்றிரவே மீசையையும் எடுத்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தை விஜயகாந்துக்கு போன் செய்து சொல்ல இரவு 12 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம் விஜயகாந்த். தங்கராஜை பார்த்ததும் விஜயகாந்த் முகமெல்லாம் சிவந்து போய்விட்டதாம். முரளியை பார்த்து மிகவும் ஆவேசமாக பேசி சத்தம் போட்டு போனாராம் விஜயகாந்த். இப்படித்தான் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் எடுத்தேன் என ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தங்கராஜ் கூறினார்.

  • Actor Murali: பெண்கள் சகவாசம்! சேர்க்கை சரியில்லை.. முரளிக்கு இருந்த பிரச்சினையே இதுதானாம்

    90கள் காலகட்டத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் முரளி. தமிழ் சினிமாவில் சகோதரர், ஹீரோ ,காதல் மன்னன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று தன்னுடைய நடிப்பின் மூலம் உச்சம் தொட்ட நடிகர் முரளி நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் மகன் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் .

    அதுதான் அவர் நடித்த கடைசி படம். அறுபதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முரளி பூவிலங்கு என்னும் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக இருப்பது, 1990 இல் வெளிவந்த புதுவசந்தம் ,1991இல் வெளிவந்த இதயம் ஆகிய படங்கள்.

    இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. கடல் பூக்கள் என்ற படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றார் முரளி. கடந்த 2010 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் காலமானார் முரளி. இந்த நிலையில் முரளியை பற்றி பாவா லட்சுமணன் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

    பழகுவதில் மிகவும் தங்கமானவர் முரளி. மிகவும் நல்ல மனிதரும் கூட. ஆனால் அவர் பீக்கில் இருக்கும்போது சில பல விமர்சனங்கள் அவரைப் பற்றி எழுந்தது உண்மைதான். அதற்கு ஏற்ப அவரும் அப்படித்தான் இருந்தார். அதாவது பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதுவும் உண்மைதான்.

    சில கெட்ட பழக்கங்களும் இருந்தன. இதுதான் அவருக்கு இருந்த பிரச்சனை. ஆனால் நாளடைவில் அதை திருத்தியும் கொண்டார் முரளி என பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

  • என்ன மனுஷன் தெரியுமா அவரு.. கதை கேட்ட உடனே அவர் சொன்ன பதில்… முரளியை புகழ்ந்த சிங்கம்புலி..!

    பிரபல நடிகரும் இயக்குனருமான சிங்கம் புலி நடிகர் முரளி குறித்து புகழ்ந்து பேசி இருக்கின்றார்.

    தமிழ் சினிமாவில் பலருக்கும் சிங்கம் புலி என்று கூறினால் அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்று கூறுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்பு ஒரு மிகச்சிறந்த இயக்குனர். நடிகர் அஜித்தை வைத்து ரெட் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து மாயாவி என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கின்றார்.

    இது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. இயக்குனராக இருந்த சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நகைச்சுவை நடிகராக மாறினார். அதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு நபராக நடித்து பலரையும் சிரிக்க வைத்திருப்பார். அவரின் காமெடிகள் அப்படத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்த சிங்கம் புலி மகாராஜா திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக வெளியானது மகாராஜா. இந்த திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப்,  சிங்கம் புலி, பாரதிராஜா, முனிஷ் காந்த், நட்டி நட்ராஜ் உள்ள பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அதிலும் ஒரு குழந்தையை கற்பழிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிங்கம் புலி.

    இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது இந்த படத்தை தொடர்ந்து சில இன்டர்வியூக்கலில் பேசி இருந்த அவர் தெரிவித்திருந்ததாவது இயக்குனர் கூறுவதை செய்வது ஒரு நல்ல நடிகனுக்கான வேலை என்று அவர் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பேசிய சிங்கம் புலி நடிகர் முரளி தொடர்பாக பகிர்ந்திருந்தார்.

    அதாவது சினிமாவிற்காக மெனக்கட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் முரளி. ஒரு படத்திற்காக நிறைய ஹீரோக்கள் இடம் கதை கூறினேன். கதையை கேட்டுவிட்டு மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னதும் பின்வாங்கி விட்டார்கள். மேலும் மொட்டை அடித்து விட்டு ரெண்டு வருஷம் உங்க பின்னாடி சுத்தணுமா என்று கேட்டார்கள்.

    இதைத் தொடர்ந்து கடைசியாக தான் முரளியிடம் இப்படத்தை கூறினேன். உடனே எப்போ மொட்டை அடிக்கணும் என்று கேட்டார் . இப்போ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உடனே அப்படத்தை பண்ணி விடலாம் என்று கூறினார். அந்த சந்திப்பு தற்போது வரை எனது மனதில் இருக்கின்றது. அவர் ஒரு உன்னதமான மனிதர் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார்.

  • முரளிக்குப் பிரச்சனையே சேர்க்கை சரியில்லாதது தான்… பிரபலம் சொல்லும் தகவல்

    நடிகர் முரளி என்றாலே நமக்கு அவரது அமைதியான முகம் தான் நினைவுக்கு வரும். இதயம் படத்து முரளி. கடைசி வரை கல்லூரி மாணவனுக்கே உரிய சாயலில் இருந்தார்.

    மனுஷனுக்கு வயசு ஆன மாதிரியே தெரியாது. இவரைப் பற்றி நடிகர் பாவா லெட்சுமணன் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

    இதையும் படிங்க… சட்டு புட்டுனு வேலைய ஆரம்பிங்க! சமாதான புறாவை பறக்கவிட்ட லைக்கா.. ரெடியான அஜித்

    முரளி தங்கமான மனுஷன். அவரைப் பார்க்கப் போனா சாப்பிட வச்சித்தான் அனுப்புவார். ‘ஆனந்தம்’ படத்துக்கு 6 மணின்னா 5.45க்கு எல்லாம் ரெடியாகி விடுவார். முதல்ல அவரு நேரத்துக்கு வரமாட்டார்னு பேச்சு வந்தது. அதுக்குக் காரணம் சேர்க்கை சரியில்ல. மேனேஜரும் சரியில்லை.

    பெண்களோடு தொடர்பு இருந்தது உண்மை தான். அப்புறம் படிப்படியா குறைச்சிக்கிட்டாரு. பிள்ளைகள் வளர வளர எல்லாப் பழக்கத்தையும் கட் பண்ணிட்டாரு என்கிறார் நடிகர் பாவா லட்சுமணன்.

    மதுரைல நான் ஒரு கண்ணாடி கடைல வேலை பார்த்தேன். அங்க பாய் ஒருத்தர் பேசுற ஸ்டைலே வித்தியாசமா இருக்கும். அவரை மாதிரி பேசிப் பார்ப்பேன். அதை ஒரு தடவை டைரக்டர் சசி சார் பார்த்துட்டு ‘சொல்லாமலே’ படத்துல கிளைமாக்ஸ் சீன்ல என்னைப் டப்பிங் பேச வைத்தார்.

    அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ‘மாயி’ படத்துல வடிவேலுவுடன் இணைந்த ‘வாம்மா மின்னல்’ டயலாக்கைப் பேசுனேன். அந்தக் காமெடி வடிவேலுவோடு. அவர் சின்ன பையனா இருந்தாரு.

    இதையும் படிங்க… இந்தியன் 2 டிரெய்லர் அப்டேட்..! கமலைப் பற்றி ரஜினி இப்படி சொல்லலாமா..?!

    அதனால சரத்குமார் மாதிரி மீசை வச்சி அவரே மாதிரி சட்டை எல்லாம் போட்டு ரெடியா இருந்தேன். வடிவேலு ‘ஓகே’ சொல்லிட்டாரு. அவரு அன்னைக்கு ஓகே சொன்னதால தான் இன்னைக்கு வரைக்கும் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கேன் என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பாவா லட்சுமணன்.

     

  • கார்த்திக் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்து பேர் வாங்கிய முரளி! நடிக்காததற்கு இதுவா காரணம்?

    Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற பட்டத்தோடு 80களில் இருந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடித்து குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்த நாயகனாக வலம் வந்தார்.

    அவர் நடித்த பல படங்கள் காதல் கதைகளை மையமாகக் கொண்டு அமைந்ததால் பெண் ரசிகைகள் அவருக்கு அதிகமாக இருந்தனர். ரசிகைகள் மட்டுமல்லாமல் அந்த கால நடிகைகளும் கார்த்திக்கு ரசிகர்களாகவே இருந்தனர். சில நடிகைகள் கார்த்திக் மீது காதலிலும் விழுந்தனர். ஆனால் சமீபகாலமாக கார்த்திக் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

    இதையும் படிங்க: நான் செகண்ட் ஹீரோவா?!.. விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்!..

    ஏன் பொது இடங்களில் கூட அவரைப் பார்க்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது யாருக்குமே இதுவரை தெரியவில்லை. ஆனால் சமீபத்தில்  நடந்த தேர்தலின் போது தான் அவரை வெளியில் பார்க்க முடிந்தது.அதுவும் நடக்க முடியாமல் திணறிய கார்த்திக்கை பார்த்து என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக் நடிக்க வேண்டிய ஒரு கேரக்டரில் முரளி நடித்து பெயர் வாங்கிய ஒரு படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே கார்த்திக், பிரபுதேவா இணைந்து ‘உள்ளம் கொள்ளை போகுதே’ என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். அதேபோல் 2001 ஆம் ஆண்டு வெளியான  ‘அள்ளித் தந்த வானம்’ திரைப்படத்தில் முதலில் கார்த்திக் தான் நடிக்க வேண்டி இருந்ததாம்.

    இதையும் படிங்க: சோனியா அகர்வால் என்ட்ரி!.. குக் வித் கோமாளியை ஒரே எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

    ஆனால் அந்த படத்தில் முரளி கேமியோ ரோலில் நடித்து அவருக்கு அந்தப் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியது கார்த்திக்தானாம். ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை. அவர் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதேபோன்று பல திரைப்படங்களை கார்த்திக் தவறவிட்டிருக்கிறார். அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும் என இந்த தகவலை பகிர்ந்த சித்ரா லட்சுமணன் கூறினார்

  • முரளி அந்த விஷயத்துல ரொம்பவே வீக்காம்… பிரபல இயக்குனர் என்னா சொல்றாருன்னு தெரியுமா?

    முரளி நல்ல நடிகர். ஆனா குறும்புத் தனம் ஜாஸ்தி. முரளி நடித்த நம்ம வீட்டு கல்யாணம் படத்தை வி.சேகர் இயக்கி இருந்தார். அவர் முரளியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    முரளி நல்ல நடிகன். ஆனா கொஞ்சம் ஜாலி. விளையாட்டுப்பிள்ளை. அந்தக் குறும்புத்தனம் எல்லாம் இருக்கும். நம்ம வீட்டுக் கல்யாணம். இந்தப் படத்துல மீனா, விந்தியான்னு நிறைய பேரு நடிச்சிருப்பாங்க.

    இதையும் படிங்க… ரத்னம் பட புரோமோஷனில் இல்லாமல் போன பிரியா பவானி ஷங்கர்… ஏன்? கசிந்த உண்மை..

    இந்தப் படத்தோட கிளைமாக்ஸ் ஊட்டில எடுத்துக்கிட்டு இருக்கேன். சூட்டிங் சமயத்துல இவருக்கு பொம்பள வீக்னஸ் இருந்துருக்கு. யாரையோ அப்ரோச் பண்ணியிருப்பார் போல. ஏதோ சிக்கல் வந்த உடனேயே சூட்டிங்ல கடைசி ரெண்டு நாள் எனக்கு உடம்பு சரியில்லன்னு வெளியூருக்குப் போயிட்டாரு. கடைசில ரெண்டு நாள் சூட்டிங் என்னால எடுக்க முடியல. ஒரு வாரம் கழிச்சி வாராரு. ஒரு வாரம் வரைக்கும் ஊட்டில இருக்க முடியுமா?

    அது எனக்கு லாஸ் ஆயிடுச்சு. அங்கிருந்து வந்துட்டேன். மறுபடியும் அவரு வந்ததும் ஊட்டியை மேட்ச் பண்ணி பரங்கிமலையில எடுத்தேன். ஒருத்தருக்கு வந்து தண்ணி அடிக்கிறதா இருக்கட்டும். வேற எதுவாகவும் இருக்கட்டும். தொழில்ல இருக்கும் போது அப்படி செய்யக்கூடாது. தண்ணி அடிக்கிறவன் வண்டி ஓட்டும்போது அடிக்கக்கூடாது.

    Namma veetu Kalyanam
    Namma veetu Kalyanam

    லீவு போட்டு வீட்டுல இருக்கும்போது அடிக்கலாம். இடம், பொருள்னு ஒண்ணு இருக்கு. எம்ஜிஆர், சிவாஜிகூட பலகீனம் இருந்து இருக்கலாம். ஆனால் அந்தத் தொழில் தொழிலா இருப்பாங்க. தொழிலத் தாண்டி என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவாங்க. இதையும் அதையும் கலந்து போட்டு சாப்பிடக்கூடாது.

    பாத்ரூம் வேற. பூஜை ரூம் வேற. இரண்டையும் ஒண்ணாக்கிக்கக் கூடாது. திறமை இருந்தும் ஒரு சில நடிகர்கள் இப்படி பாதிக்கப்படுறாங்க. கடைசில முரளி மன்னிப்பு கேட்டாரு. வேற என்ன செய்றது? அனுசரிக்கத் தான் செய்யணும். என்கிறார் பிரபல இயக்குனர் வி.சேகர்.

  • விஜயகாந்தும் முரளியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி!.. மனம் உருகும் பிரபல நடிகர்!…

    தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். முரளியோ அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் சினிமாவுக்கு வந்தவர். இருவருமே துவக்கத்தில் சில அவமானங்களை சந்தித்து இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் சினிமாவில் நுழைந்த காலத்தில் எந்த ஹீரோவும் கருப்பாக இருக்க மாட்டார்கள்.

    வெள்ளையாக, சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் ஹீரோவாக நடிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த விஷயத்தை விஜயகாந்தும், முரளியும் உடைத்தனர். விஜயகாந்த் ஒரு பக்கம் முன்னேறி வந்த போது முரளியும் நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: வடிவேலு காமெடியால் வந்த பிரச்சனை!.. கூட்டமாக வந்த போலீஸ்!.. பதறிப்போன வைகைப்புயல்!..

    அதுவும் ஒருதலைக்காதல் கதை என்றாலே கூப்பிடு முரளி என்கிற நிலை 90களில் இருந்தது. இதயம் படத்தில் ஒரு தலைக்காதலை மனதில் வைத்துக்கொண்டு அதை சொல்ல முடியாமல் அவர் தவிப்பது பலரையும் உருக்கியது. அதன்பின் அதுபோன்ற பல கதைகளில் முரளி நடித்திருக்கிறார்.

    விஜயகாந்தோ அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதில் என்ன சோகம் என்னவெனில் இருவருமே இப்போது நம்முடன் இல்லை. இவர்கள் இருவருடன் நெருங்கி பழகியவர் நடிகர் ராஜ்கிரண். இந்நிலையில், அவர்கள் இருவருடன் கொண்டிருந்த அழகான உறவு பற்றி ஒருமுறை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க: கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..

    வீரத்தாலாட்டு படத்தில் என் மகனாக நடித்தார் முரளி. பட்டத்து அரசன் படத்தில் என் பேரனாக நடித்தார் முரளியின் மகன் அதர்வா. முரளி என்னை ‘அண்ணா அண்ணா’ என பாசமாக அழைப்பார். அதேபோல்தான் கேப்டன் விஜயகாந்தும் என்னை பார்க்கும் போதெல்லாம் ‘அண்ணா அண்ணா’ மிகவும் சந்தோஷமாக பேசுவார். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது’ என ராஜ்கிரண் சொல்லி இருந்தார்.

    rajkiran

    முரளியின் மகன் அதர்வாவுக்கு சினிமாவில் ஒரு இடம் கிடைத்துவிட்டது. ஆனால், கேப்டனின் மகன் சண்முக பாண்டியனுக்கு இன்னும் அந்த இடம் கிடைக்கவில்லை. அதுவும் நடந்துவிட்டால் அந்த வெற்றிடம் நிரம்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • யார் இந்த டேனியல் பாலாஜி? முரளிக்கு நடந்த அதே சோகம்தான் இவருக்கும்.. அவரை பற்றிய சில நினைவுகள்

    Actor Daniel Balaji: தமிழ் சினிமாவில் ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் ரசிகர்களின் அன்பை பெற்றவர் நடிகர் டேனியல் பாலாஜி. தன்னுடைய மிரட்டலான நடிப்பால் சினிமாவில் ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற்றார். வெறும் பாலாஜி என்ற பெயரைக் கொண்ட இவர் எப்படி டேனியல் பாலாஜி ஆனார் என்பதை பற்றி மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

    நடிகர் முரளியின் சித்தி பையன்தான் இந்த டேனியல் பாலாஜி. அதனால் முரளியின் தாக்கம் டேனியல் பாலாஜிக்கும் வர எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தரமணியில் இருக்கும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்திருக்கிறார். அதுவும் முரளியின் ஆலோசனையின் பேரில்தான் சேர்ந்திருப்பார் என செய்யாறு பாலு கூறினார். அதுமட்டுமில்லாமல் முரளியும் 45 வயதில்தான் இறந்தார். அதை போல் டேனியல் பாலாஜியும் அதே 48 வயதில்தான் இறந்திருக்கிறார் என செய்யாறு பாலு கூறினார்.

    இதையும் படிங்க: யார் சொல்லியும் கழுத்து செயினை கழட்டாத கவுண்டமணி!.. அதில் இருக்கும் ரகசியம் என்ன?..

    டேனியல் பாலாஜியை பொறுத்தவரைக்கும் அவருக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் அந்த இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியே வந்த பிறகு மருதநாயகம் படத்தில் ஒரு யுனிட்டில் புரடெக்‌ஷன் மேனேஜராக பணிபுரிந்தாராம். இருந்தாலும் அவருக்கான வாய்ப்பு சரிவர அமையாததால் அவருடைய நண்பர்கள் சொன்னதின் பேரில் நடிகராக மாறியிருக்கிறார்.

    முதன் முதலில் ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகும் அவருக்கு வாய்ப்புகள் வந்ததா என்றால் வரவில்லை. அந்த சமயத்தில்தான் ராதிகாவின் சித்தி சீரியல் டேனியல் பாலாஜியை தேடி வந்திருக்கிறது. சித்தி தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதிலிருந்துதான் டேனியல் பாலாஜியாக மாறியிருக்கிறார்.அந்த தொடர்  டேனியல் பாலாஜியை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

    இதையும் படிங்க: 2கே கிட்ஸ்களை கவர்ந்த சூப்பர்ஹிட் ரீமேக் படங்கள்…. சொல்லி அடித்த கில்லி

    இந்த தொடரின் புகழ் அடுத்ததாக அலைகள் தொடரிலும் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறது. சினிமாவில் நடிக்க வந்த டேனியல் பாலாஜிக்கு தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்ததனால் அந்த இரு தொடர்களோடு சின்னத்திரையை முடித்துக் கொண்டார். அதன் பிறகே கௌதம் மேனன் , வெற்றிமாறன் கண்ணில் பட்டு பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் நடித்த படங்களில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜிக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருக தொடங்கியது.