Tag: actor rajini kanth

  • திமுகவை விட ரஜினி தான் கடும் அப்செட்டில் இருக்காராம்!.. ஒருவேளை விஜய் சிஎம் ஆகிட்டா?

    திமுகவை விட ரஜினி தான் கடும் அப்செட்டில் இருக்காராம்!.. ஒருவேளை விஜய் சிஎம் ஆகிட்டா?

    வைகோ, திருமாவளவன், பிரேமலதா என தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸிட் போல் ரிசல்ட்டுக்குப் பிறகு தங்கள் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அறிவாலயத்திலும் ஆனந்த அலை இல்லை என்கின்றனர்.

    திமுகவுக்கு ஆதரவான நிர்வாகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளை தாண்டி ஆக்சிஸ் மை இந்தியா ஆப்பு வைத்த நிலையில், விஜய்யின் எழுச்சி நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்துக்கு அது கடும் அப்செட்டை கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கி விட்டனர்.

    ரஜினிகாந்த் தைரியமாக அரசியலுக்கு அறிவித்ததை போல வந்திருந்தால் கூட திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் விஜய்க்கு கொடுத்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் எல்லாம் விஜய் அளவுக்கு பொறுமையாகவும் வலிமையாகவும் கையாண்டு இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

    இது ஒரு பக்கம் இருக்க விஜய் ஒருவேளை சிஎம் ஆகிவிட்டால், அதை எல்லாம் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறோம் என ரஜினிகாந்த் இப்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர். எப்படி இருந்தாலும் மே 4ம் தேதி வரும் உண்மையான ரிசல்ட்டை பார்க்க பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

    விஜய்க்கு எதிராக செயல்பட்ட பலரும் ஒரு வித பயத்திலேயே தற்போது தங்களது பேச்சுக்களை மாற்றி பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். விஜய் தோற்றாலும், ஜெயித்தாலும் விஜய்யின் கட்ஸ் இந்தியளவில் பாராட்டப்பட்டு வருவதும் சூப்பர் ஸ்டாரை பாதித்திருக்கும் என்கின்றனர்.

  • 1000 கோடி வசூலில் மண்ணள்ளி போட்ட லோகேஷ் கனகராஜ்… கொந்தளித்த பிரபலம்

    தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தற்போது பான் இந்திய அளவில் உருவாகியுள்ளது. இசை அனிருத் அமைத்திருக்கிறார். ரஜினியுடன் இது இவருக்கு 5வது படம். இவர்களது கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து ஆல்பமும் மிகப்பெரிய வெற்றியடைந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

    அந்த வகையில் கூலி படத்திலும் வெளியான மூன்று பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக ”மோனிகா” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். தற்போது கடைசியாக வெளியாகி உள்ள ”பவர் ஹவுஸ்” பாடல் ரஜினிக்கு மாஸான பாடலாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பாடலாகவும் இருந்தது. படம் வருகிற 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் வீவ்ஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது.

    பொதுவாக ஒரு ட்ரெய்லரை பொறுத்தவரை அதனை பார்த்தாலே படத்தின் கதையை கணித்து விடலாம். ஆனால் கூலி ட்ரைலரை யாரும் டி-கோர்ட் செய்ய முடியாத அளவுக்கு கட் செய்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் கூட அனிருத் பேசிய நேர்காணல் ஒன்றில் கூலி ஒரு இன்டலிஜென்ட் படம் என்று சொல்லியிருந்தார். அதேபோல‌ ட்ரைலரும் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படங்களில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அவர்களுக்கான ஈக்குவல் ஸ்பேசை ரைட்டிங்கில் கொடுத்திருப்பார்.

    படத்தில் கொஞ்ச நேரம் வரும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதன் வீரியம் ஒரு படம் முழுதும் நடித்தது போல இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வடிவமைப்பது லோகேஷுக்கு கைவந்த கலை. கூலி படத்திலும் அது தொடர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. மேலும் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஆயிரம் கோடி வசூல் சாதனையை இந்த படம் பெரும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை இந்நிலையில் கூலி படத்தை குடும்பமாக பார்க்க முடியாமல் செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்று கொந்தளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகர்மான செய்யாறு பாலு . மேலும் அவர் கூறியதாவது

    “கூலி படத்திற்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் 18 வயது கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க பட மாட்டார்கள். அதனால் இந்த படத்திற்கு டிக்கெட் புக் செய்தவர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றால் தியேட்டர் நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இப்பொழுது இதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. காலா, கபாலி, ஜெய்லர் படம் எல்லாம் எவ்வளவு வன்முறையாக இருந்தது. அந்தப் படத்திற்கே ‘U’ , ‘U\A’ கிடைத்தாலும் இந்த படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

    இதனால் குடும்பமாக வரக்கூடிய ரசிகர்கள் குறையக்கூடும் அப்படி குறையும் பட்சத்தில் வசூல் குறையும் தமிழ் சினிமாவில் சமீபத்திய இந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வசூல் வேட்டை நடத்தியதில்லை. கூலி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, இப்போ அதில் மண் அள்ளி போட்டது போல் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் நினைத்திருந்தால் இந்த படத்திற்கு காம்பரமைஸ் செய்து அதிக வன்முறை காட்சிகளை நீக்கி இருக்கலாம். இதனால் ‘U’ அல்லது ‘U\A’ சான்றிதழ் கிடைத்திருக்கும். ஆனால் அவர் எந்தவித காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தயாராக இல்லை. என்று சொல்லிவிட்டார்.

    இதனால் சோசியல் மீடியா முழுவதும் லோகேஷ் மீது மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் விஜய் உடைய ஆளு ரஜினிக்கு எதிரா இப்படி பண்ணி இருக்காரு. ஆயிரம் கோடி வசூல் அடிக்க கூடாது என்று வேண்டுமென்றே செய்கிறார். என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளை அடிக்கி வருகின்றனர். குறிப்பாக ரஜினி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு தான் இதை செய்திருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • மகள்கள் விஷயத்தில் இனி அந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்! பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

    Actor Rajini: தமிழ் சினிமாவில் ரஜினி ஒரு மாபெரும் சக்தியாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடத்திற்கும் மேலாக தான் கட்டி வைத்த கோட்டையை இன்றுவரை பாதுகாத்து வருகிறார். ஆனால் அந்த கோட்டையை தன் மகள்களை வைத்தே ரஜினி உடைத்துவிடுவார் போல் தோன்றுகிறது. ரஜினியை போலவே அவருடைய இரு மகள்களும் சினிமா துறையில் தங்களை ஏதாவது ஒரு வகையில் முன்னுறுத்தி காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

    அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு இயக்குனராக இருக்கிறார். இளைய மகள் சௌந்தர்யா கார்ட்டூன் படித்துவிட்டு அவரும் இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய நஷ்டத்தை அவருடைய தந்தைக்கு பரிசாக கொடுத்தது தான் மிச்சம்.

    இதையும் படிங்க: ஷூட்டிங்கில் தன்னை யார் என்றே மறந்துபோன ஜனகராஜ்!. மனுஷனுக்கு இப்படி ஒரு நோயா!..

    அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி அதுவும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த இரண்டு படங்களின் மூலம் அவர் பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்ததால் தற்போது சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் அவருடைய கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். அதுவும் தனுஷுக்கு ஓரளவு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

    அதை பின்தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கி பெரும் தோல்வியை சந்தித்தார். ஐஸ்வர்யாவுக்கு இரண்டு படங்களின் தோல்வி அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கும் என்று நினைக்கும் நேரத்தில் மீண்டும் அதே தவறை தன் அப்பாவை வைத்தே செய்தார். லால் சலாம் என்ற படத்தை ரஜினியை கேமியோ ரோலில் நடிக்க வைத்து அந்தப் படத்தையும் பெரும் நஷ்டத்தில் கொண்டு சென்றார்.

    அதனால் இனிமேல் ரஜினி தன் மகள்கள் இயக்கும் படத்தில் நடிக்க மாட்டார் என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். ஏற்கனவே பட்டது போதும் என்று நினைத்து ரஜினி மீண்டும் அதே தவறை இனி செய்யவே மாட்டார் என அவர் கூறினார்.