Tag: actor vijay

  • தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். விஜய் ஒரு முக்கியமான, பிரபல நடிகராக இருந்ததால் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என விஜய் நம்புகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் ஆதரவும் தனது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர் அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நியமித்தார்.

    நடந்து முடிந்த தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
    விஜய் அரசியலுக்கு வந்தது முதலே ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

    இதனால் விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் கருத்து சொல்லவில்லை. ஏனெனில் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது.. அப்படி பகைத்துக் கொண்டால் கண்டிப்பாக தங்கள் படம் வெளியாவதற்கு பிரச்சினை செய்வார்கள் என்பது தெரிந்து பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்..

    இந்நிலையில்தான், இசையமைப்பாளர் இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல தனது youtube சேனலில் ‘இது எங்கள் நீதி’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘சின்னத்தம்பி உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை பகிர்ந்திருக்கிறார். அதுவும் விஜயின் போட்டோவோடு அந்த பாடலை பகிர்ந்திருக்கிறார். இந்த படம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கி 1988ல் வெளியானது. இந்த படத்தில் ராம்கி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.. அதோடு விஜயும் இந்த படத்தில் சிறுவனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

  • ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. ஒருமாத காலம் இந்த படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை..

    அந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆனது. எனவே தயாரிப்பாளர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து உமாசங்கர் என்பவரை கைது செய்தனர். முதலில், அவர் ஒரு பிரிலேன்ஸ் வீடியோ எடிட்டர் எனவு சொல்லப்பட்டது. அதன்பின் உமா சங்கர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. ஒரு ஃபிரிலேன்ஸ் எடிட்டர் படத்தை திருடி உமாசங்கரிடம் விற்றுள்ளார். உமா சங்கர் இணையதளத்தில் அப்லோடு செய்திருக்கிறார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது தொடர்பாக அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதிப் ராகவ் எடிட்டர் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து பிரதீப் ராகவ் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    படம் கசிந்தததற்கு பிரதீப் ராகவ் நேரடியாக காரணம் இல்லை என்றாலும் அவரது கவனக்குறைவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தின் விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர் அல்லாத ஒருவரை உதவியாளராக அவர் பயன்படுத்தியுள்ளார் என எடிட்டர் சங்கம் அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறது.

  • ஜனநாயகன் லீக்!. கை மாறிய பணம்!.. அப்லோட் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்..

    ஜனநாயகன் லீக்!. கை மாறிய பணம்!.. அப்லோட் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்..

    கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான ஜனநாயகன் திரைப்படம் தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை.. அதற்கு காரணம் தற்போது படம் மறு தணிக்கையில் இருக்கிறது.. தமிழக சட்டசபை தேர்தல் ரிசல்ட் வெளியான பின்னரே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

    இது தொடர்பாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் உமாசங்கர் என்கிற ஃபிரிலான்ஸ் வீடியோ எடிட்டர்தான் இந்த தவறை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    ஆனால் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தொடர்ந்து உமாசங்கர் கூறி வருகிறார்.. அதோடு அவர் ஜாமினுக்கும் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஜாமின் அளிக்க கேவிஎன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது . இந்நிலையில்தான், போலீசாரின் விசாரணையில் ஒரு புதிய தகவல் தெரிய வந்திருக்கிறது.

    ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்ததாக கூறப்படும் உமாசங்கர் வீடியோ எடிட்டர் அல்ல.. அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். வேறு திரைப்பட பணிகளுக்காக வந்த ஃபிரிலேன்ஸ் எடிட்டர் பிரசாத் என்பவர் ஜனநாயகன் பட காட்சிகளை காப்பி எடுத்து பெரும் தொகைக்காக உமா சங்கரிடம் விற்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது..

  • கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேவைக்காக தனுஷ் வங்கிகளில் கொள்ளையடிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது..

    அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ‘விக்னேஷ் ராஜா. நீங்கள் ஒரு ஜீனியஸ்’ என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக ஜனநாயகன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

    வருகிற 24-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் எனவும் அனேகமாக அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 29 அல்லது 30ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை, ஏப்ரல் 29 அல்லது 30-ல் ஜனநாயகன் வெளியாவது உறுதியானால் தனுஷின் கர திரைப்படம் அந்த படத்தோடு போட்டி போடுமா இல்லை ரிலீஸ் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அல்லது ஜனநாயகன் மே முதல் வாரத்தில் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறாது.

  • மகனுக்காக தமிழகத்தை பணயம் வைக்காதீர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகரை விமர்சித்த சேரன்!

    மகனுக்காக தமிழகத்தை பணயம் வைக்காதீர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகரை விமர்சித்த சேரன்!

    நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவர் மீதான சமீபத்திய விமர்சனங்களுக்கு ஆதரவாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் களமிறங்கியுள்ள நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்ன்ணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் கட்சி துவங்கிய நாள் முதலே பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இந்த நெருக்கடியான சூழலில், விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தையும், மூத்த இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று முன்னணியூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதுமட்டுமின்றி, தனது மகனுக்கு முழுமையான ஆதரவை வழங்கி, மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மகனுக்கு ஆதரவாக எஸ்.ஏ.சி பேசியிருந்த இந்த வீடியோ மற்றும் பேட்டியை சுட்டிக்காட்டி, பிரபல இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விஜய்க்கு போதிய அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும், வெறும் கூட்டத்தைக் காட்டி அரசியல் செய்ய நினைக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    சேரன் தனது பதிவில்,

    சமூக அக்கறையுள்ள இயக்குநர்: சட்டம் ஒரு இருட்டறை , நீதிக்கு தண்டனை , நான் சிகப்பு மனிதன் போன்ற சிறந்த அரசியல் விழிப்புணர்வுப் படங்களை மக்களுக்குத் தந்த ஐயா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், இப்போது தனது பிள்ளையைக் காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளிப்பது வருத்தமளிக்கிறது. பெரும் அரசியல் பார்வையுள்ள எஸ்.ஏ.சி-க்கு, தனது மகனின் அரசியலில் தெளிவும், உழைப்பும், தொலைநோக்குச் சிந்தனையும் இல்லை என்பது நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்தும் அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதற்குச் சமமாகும்.

    அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முறையான அரசியல் புரிதலை உள்வாங்கிக் கற்றுக் கொடுக்காமல், அவர்களை வெறும் கூட்டம் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா? என்பதை எஸ்.ஏ.சி போன்ற முதிர்ச்சியானவர்கள் யோசிக்காமல் செயல்படுகிறார்கள். முதலில் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் அரசியலைக் கற்றுக் கொடுங்கள்; அவர்களைத் தயார் செய்யுங்கள். அதன் பின்னர், எல்லோருக்கும் நாம் தேவையா என்பதை அவரே முடிவு செய்யட்டும்.

    இந்த சமூகத்துக்கு எந்தத் தீங்கும் விளைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இதைப் பதிவு செய்கிறேன். இவர்கள் அடுத்த தலைமுறையை மிகவும் ஆபத்தான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். எஸ்.ஏ.சி ஐயாவுக்கு அவர் பிள்ளை முக்கியம் என்றால், நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம். மக்களே சிந்தித்துப் பாருங்கள்.

    இவ்வாறு இயக்குநர் சேரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

  • Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    Jananayagan: ஜனநாயகனுக்கு சென்சார்!.. ரிலீஸ் தேதி இதுவா?.. முக்கிய அப்டேட்…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிரபார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் அப்போது வெளியாகவில்லை. ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்படவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி சென்று ஒரு மாதம் ஓடிப்போனதே தவிர படத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

    படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்கவேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் சொன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீடியோ எடிட்டர் படத்தை திருடியது தெரியவந்தது. அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

  • சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

    சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

    நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜய் நடிகை ஒருவருடன் கடந்த சில வருடங்களாகவே தொடர்பில் இருப்பதே விவாகரத்துக்கு காரணம் என சங்கீதா சொன்னது பேசுபொருளானது.

    மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் எனவும், அவர் மீது வழக்கு தொடர்வேன் எனவும் சங்கீதா கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் விஜய் நடிகை திரிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமண விழாவுக்கு சென்றதும் சர்ச்சையை கிளப்பியது. சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை திரிஷாதான் என பலரும் சமூகவலைத்தளங்களில் பலரும் பேசத் தொடங்கினார்கள்..

    vijay sangeetha

    இந்நிலையில், சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு ஏப்ரல் 20ம் தேதியான நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து அளிக்க விஜய் முன் வந்திருப்பதாக தெரிகிறது. மேலும் பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.. மும்பையில் இருந்து வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது..

    அப்போது வேட்பு மனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்துக்கு 250 கோடி செட்டில்மெண்ட் தர வேண்டும் எனவும், மகன், மகளுக்கு தனியாக செட்டில்மெண்ட் கொடுக்க வேண்டும் எனவும் சங்கீதா தரப்பில் கேட்டதாக தெரிகிறது. ஆனால் மனைவிக்கு மட்டும் ரூ. 35 கோடி செட்டில்மெண்ட் அளிப்பதாகவும், மகன், மகள் இருவரின் எதிர்காலத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் விஜய் தரப்பு சொன்னதாக தெரிகிறது.. அதற்கு சங்கீத தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

    தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால் நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பு ஒரு தொகையை சொல்லும்.. அதன்பின் அதை கொடுக்க முடியுமா? முடியாதா? என்பதை விஜய் சொல்வார்.. விசாரணைக்கு பின் நீதிபதி ஒரு தீர்ப்பளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது..

  • ஜனநாயகன் லீக்!.. குற்றவாளி பெயரை சொல்லாத காவல்துறை!.. மர்மம் என்ன?…

    ஜனநாயகன் லீக்!.. குற்றவாளி பெயரை சொல்லாத காவல்துறை!.. மர்மம் என்ன?…

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் இதுதான் தனது கடைசி படம் என அவரே அறிவித்திருக்கிறார்
    . கே.வி.என். புரடெக்‌ஷன் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படம் தற்போது மறு தணிக்கையில் இருக்கிறது. ஆனால் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. மே மாதம்தான் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்-ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது..

    சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் அந்த படத்தின் எடிட்டிங்கில் பணிபுரிந்துள்ள Freelance வீடியோ எடிட்ட ஒருவர்தான் படத்தின் காப்பியை திருடி வேறு ஒருவருக்கு கொடுத்து அதன் மூலம் இணையதளங்களில் பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த வீடியோ எடிட்டரை காவல்துறை கைது செய்து மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி அதன் பின் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

    ஆனால் இப்போது வரை அந்த நபர் யார்? அவரின் பெயர் என்ன? என்கிற எந்த விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை. இதன் பின்னால் இருக்கும் மர்மம் யாருக்கும் புரியவில்லை. குற்றவாளியின் பெயரை சொல்ல முடியாத அளவுக்கு இது ஒன்றும் சென்சிடிவான பிரச்சனை இல்லை.. இது வேறு சில பிரச்சனைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனெனில், குற்றவாளியின் பெயரை சொல்லாததால் படத்தின் டைட்டில் கார்டில் வரும் எடிட்டிங் உதவியாளர்களில் ஒருவரை விஜய் ரசிகர்கள் கற்பனையாக இவர்தான் குற்றவாளி என முடிவெடுத்து அவர்களுக்கு எதிராக கம்பு சுத்த தொடங்கினால் அது அவர்களின் கெரியரை பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளி பற்றிய முழு விபரங்களையும் காவல்துறை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

  • இத்தனை வருடங்களில் மக்களுக்காக வீதியில் இறங்கி நின்றது உண்டா? – விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

    இத்தனை வருடங்களில் மக்களுக்காக வீதியில் இறங்கி நின்றது உண்டா? – விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் இயங்கி வருகின்றன. தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். விஜய் வருகையால் தமிழக அரசியல் களம் 4 முனை போட்டியாக மாறியுள்ளது. தவெக தலைவர் விஜய் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூடும் கூட்டம் கட்டுகடங்காமல் வருகிறது. இந்த தேர்தலில் விஜய் ஒரு முக்கிய பங்கினை வகுப்பார் என்றே பலர் கூறுகின்றன்ர்.

    இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பொதுகூட்டத்தில் பேசினார். அதில், சினிமாவில் நாம் டாக்டராகலாம், இன்ஜினியர் ஆகலாம், ஏன்… ஒரே பாட்டில் முதல்வர் கூட ஆகலாம். ஆனால், அரசியலில் அப்படியே நேரடியாக முதல்வர் ஆகிவிட முடியுமா? இத்தனை வருடங்களில் தமிழக மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ, தமிழர்களின் தன்மானத்திற்கோ ஒரு பிரச்சனை வந்தபோது அவர் மக்களுக்காக வீதியில் இறங்கி நின்றது உண்டா? நான் பேசிய அளவிற்காவது அவர் இதுவரை அரசியல் பேசியது உண்டா?” என சரமாரியாக விமர்சித்தார்.

  • ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்!.. அப்செட்டில் ஜனநாயகன் புரட்யூசர்!..

    விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மீண்டும் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு மாத காலமாகியும் எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

    ஆனால் அதை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இப்போதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு முழுபடமும் இணையத்தில் வெளியானது. பலரும் அதை இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர்.. இது படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே படம் வெளியாகாமல் கால தாமதமானதால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிற நிலையில் தற்போது முழு படமும் லீக்காகி விட்டதால் தயாரிப்பாளருக்கு மேலும் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டது. எனவே இந்த நஷ்டத்தை போக்க அதே தயாரிப்பாளருக்கு விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் குறைவான சம்பளத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. பல ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது..

    ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.. விஜய் இப்போது வரை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்திற்கு அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை.. ஜனநாயகன் லீக் ஆனதும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ஆறுதலுக்காக கூட ‘ஒன்றும் வருத்தப்படாதீர்கள்.. நாம் ஏதாவது செய்வோம்’ என சம்பிரதாயத்திற்கு கூட விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சொல்கிறார்கள்.

    விஜயின் நடவடிக்கையை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு விஜய் இன்னொரு படம் நடித்து கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஒருபக்கம், படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார். அனேகமாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.