Tag: Actress amala paul

  • Amala Paul: என்றும் இளமையுடன் அமலாபால்… லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

    Amala Paul: என்றும் இளமையுடன் அமலாபால்… லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

    சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் அமலா பால். முதல் படம் அவருக்கு பெரிய வெற்றியை தராதது மட்டுமல்லாமல் படத்தின் மீது மோசன்மான விமர்சனங்களை பெற்று தந்தது. தொடர்ந்து தோல்வி படங்களையே தந்த அவருக்கு மைனா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    அதன்பின் மளமளவென முன்னணி இடத்தை நோக்கி சென்றார். விஜயுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வ திருமகள், தனுஷுடன் விஐபி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையால சினிமாவிலும் பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.

    அமலா பால் கடந்த 2023-ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான ஜகத் தேசாய்என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இலாய் என்று பெயரிட்டுள்ளனர். தற்போது அமலா பால் தனது குழந்தையுடனும், கணவருடனும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் அமலாபால் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…

    Dhanush: நடிகர் தனுஷுக்கு எவ்வளவு பெரிய புகழ் இருக்கோ அதற்கேற்ற மாதிரி விவகாரமான வேலைகளில் சிக்கிய வரலாறும் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு காலத்தில் நடிகைகளின் விவகாரத்துக்கு அனைத்துமே தனுஷ் தான் காரணம் என்று பழி போட்ட சம்பவங்களும் நடந்தது.

    சுசி லீக் சுசித்ரா கூட தனுஷ் மீது நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். தற்போது தன் மீது எந்த கிசுகிசுக்களும் வராமல் பார்த்து கொண்டு பிஸியாக நடிப்பு, இயக்கம் என தனுஷ் இருந்து வருகிறார். இருந்தும் அவர் மீது அந்த பழைய சர்ச்சைகள் இன்னும் விட்டபாடு இல்லை. அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோ ஒன்றில் மீண்டும் தனுஷ் குறித்து ஒரு விஷயத்தை கசியவிட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: சந்திரமுகி இயக்குநர் ரூமுக்கு அழைத்தார்!.. ஷூட்டிங்கில் இப்படியா பண்ணுவாங்க! லட்சுமி மேனன் ஃபீலிங்.

    நடிகை அமலாபால் சினிமாவில் வந்து வளர்ந்து கொண்டு இருந்த சமயத்திலே இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் காதலில் சிக்கினார்.ஏ.எல்.விஜயின் தந்தை ரொம்பவே கட்டுகோப்பான ஆள். அவருக்கு மருமகள் அமலா மீது அதிருப்தியே இருந்து இருக்கிறது. தொடர்ந்து திருமணத்துக்கு பின்னர் ஹாலில் உட்கார்ந்து குடிப்பது, சிகரெட் பிடிப்பது என கூத்தடித்து இருக்கிறார்.

    அந்த சமயத்திலே அவருக்கும் தனுஷுக்கும் நெருங்கிய நட்பு வேறு இருந்ததாம். இதனால் குடும்பமே எதிர்த்தும் மீண்டும் நடிக்க தொடங்கினாராம். அதுமட்டுமல்லாமல் தனுஷ் அர்த்த ராத்திரி எனப் பார்க்காமல் 12 மணிக்கு கூட அமலாவை கால் செய்து வெளியில் அழைப்பாராம்.

    இதையும் படிங்க: வாடி போச்சுனா சொல்லு வந்து தண்ணி ஊத்துறேன்!… அர்ச்சனாவுக்கு ட்வீட் போட்ட மாயா! கழுவு ஊற்றும் ரசிகர்கள்…

    இதையெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் தான் விஜய் விவகாரத்து கேட்டு நீதிமன்ற படியேறியதாக தெரிவித்து இருக்கிறார். தற்போது ஏ.எல் விஜய் இரண்டாம் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்துவிட்ட நிலையில் சமீபத்தில் அமலாபாலும் இரண்டாம் திருமணம் முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தகது.