Tag: actress meena

  • கேக்குறதுக்கு யாரும் இல்லன்னு நினைச்சீங்களா?!.. பொங்கியெழுந்த நடிகை மீனா!…

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை மீனா. சிறுமியாக இருக்கும்போதே திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா சிறுமியாக நடித்திருந்தார். ஆனால் அதே ரஜினியுடன் முத்து படத்தில் ஜோடியாக நடித்தார்
    . அதன் பின் எஜமான், வீரா போன்ற படங்களிலும் ரஜினியுடன் நடித்திருக்கிறார். இதுபோக திரையுலகில் சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பேருடன் நடித்திருக்கிறார் மீனா..

    மீனாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதன்பின் மீனா மறுமணம் செய்து கொள்ளப் போகிறார் என தொடர்ந்து பலரும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ‘எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இது தவறான தகவல்’ என தொடர்ந்து மறுத்து வருகிறார் மீனா.

    இந்நிலையில்தான், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மீனா ‘எனக்கு இரண்டாவது திருமணம் என வரும் செய்திகள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது.. முன்பெல்லாம் என்னைப் பற்றிய செய்திகள் என்னிடம் வந்து சேர்வதற்கே தாமதமாகும்.. ஆனால் இப்போது சோசியல் மீடியா இருப்பதால் எனக்கு உடனே தெரிந்து விடுகிறது.

    நான் ஒரு பெண் செலிபிரிட்டி.. சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக உண்மை என்னவென்று தெரியாமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?.. கேட்பதற்கு ஆள் இல்லை என்று இப்படி பேசுகிறார்களா?.. இது எல்லாம் பார்க்கும்போது ரொம்ப கோபமா இருக்கு’ என பொங்கியிருக்கிறார்..

  • அஜித் கூட நடிப்பீங்க!. என் கூட நடிக்க மாட்டீங்களா?!.. நடிகையிடம் கேட்ட விஜய்!…

    நடிகர் விஜய் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்தவர். ரஜினிக்கு பின் அதிக ரசிகர்களை உருவாக்கியவர் விஜய். அதே நேரம் விஜய்க்கு சம போட்டியாளராக வந்தவர்தான் அஜித். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவருமே ஆக்சன் ரூட்டுக்குமாறு மாறினார்கள். ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தவர்கள் ஒருகட்டத்தில் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்கள். விஜய்க்கு அடுத்து அஜித்துக்குதான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    விஜயின் பல படங்களோடு அஜித்தின் படங்கள் போட்டி போட்டிருக்கிறது. விஜயின் வாரிசு படத்தோடு அஜித்தின் துணிவு படம் போட்டி போட்டு வெளியாகி நல்ல வசூலையும் பெற்றது.. விஜய் இப்போது சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றிருக்கிறார். அஜித்தோ கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார்.

    90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினியுடன் முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன், ஆனந்த பூங்காற்றே, வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், விஜயுடன் மீனா நடிக்கவே இல்லை.

    இந்நிலையில்தான், மீனா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் சார் என்னிடம் ஒருமுறை ‘என்னுடன் நீங்கள் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டீர்கள்.. ஆனால் அஜித்துடன் 3 படங்களுக்கு மேல நடிச்சிருக்கீங்க’ என்று நேரடியாக கேட்டார். அதற்கு கால்ஷீட்தான் சார் காரணம்.. ஒரு படம் வரும்போது வேறுபடத்தில் கமிட் ஆகியிருந்ததால் உங்களுடன் நடிக்க முடியவில்லை’ என்று சொன்னேன். நான் விஜயுடன் நடிக்கவில்லை என்றாலும் என் மகள் அவரின் தெறி படத்தில் நடித்து விட்டார்’ என சொல்லியிருக்கிறார் மீனா.

  • இங்க 7 பேரு.. மலையாளத்துல 2 பேரா? மீனா பற்றி பயில்வான் ரெங்கநாதன் சொன்ன தகவல்

    நடிகை மீனா: தென்னிந்திய சினிமாவில் 90களில் கலக்கியவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அப்பவே மிகவும் புகழ் பெற்றவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. கண்ணழகி மீனா என்றேதான் இவரை ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

    சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை: தமிழில் ரஜினியுடன் நடித்த வீரா, முத்து, எஜமான் என நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அவருக்கே ஜோடியாக நடித்தார். ரஜினி மீனா ஜோடிதான் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ஜோடி. ரஜினி ஸ்ரீதேவி இவர்கள்தான் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களால் கவரப்பட்ட ஜோடி என்றால் ரஜினி மீனாதான்.

    அதை போல் மற்ற மொழிகளில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் மோகன்லால், மம்மூட்டி, பாலையா என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மீனா கணவர் இறந்த பிறகு ரியாலிட்டி ஷோக்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்.

    பிரபுதேவா நடன நிகழ்ச்சி: சமீபத்தில் நடந்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேடையில் நடனமாடினார் மீனா. சினிமாவில் தோழிகளாக இருக்கும் சங்கவி, சங்கீதா, ஸ்ரீதேவி, இவர்களுடன் தான் அதிகமாக தன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் பயில்வான் ரெங்க நாதன் மீனாவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

    மலையாள சினிமாவின் போக்கு: தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா ஏன் முன்னேறி போகிறது என்பதற்கு சில காரணங்களை கூறியிருந்தார். மலையாள சினிமாவில் ரஜினி , கமலுக்கு இணையான புகழை கொண்டவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். ரஜினிக்கு இங்கு சம்பளம் இங்கு 200 கோடி வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் மலையாளத்தில் 10 கோடிக்கு மேல் தாண்டுகிறார்களா என்பதே சந்தேகம் தான்.

    ஏனெனில் மலையாளத்தில் கதைக்கு படத்திற்கான செலவுக்குத்தான் பணத்தை அதிகமாக செலவிடுகிறார்கள். அதனால்தான் சமீபகாலமாக நல்ல கதையுள்ள படங்கள் மலையாளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு படத்தில் நடிக்க பயில்வான் போகும் போது அந்த படத்தில் மீனாவும் இருந்தாராம். அவருக்கு உதவியாளராக இரண்டு பேர்கள் தான் இருந்தார்களாம்.

    ஆனால் அவ்வை சண்முகி படத்தில் நானும் நடித்தேன். அப்போது மீனாவுக்கு உதவியாளராக 7 பேர் இருந்தார்கள். இதுதான் மலையாள சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம் என பயில்வான் கூறினார்.

  • Serial Actress: போதைப்பொருள் கடத்தல்!… சென்னை மாலில் வசமாக மாட்டிக்கொண்ட ‘சுந்தரி’ சீரியல் நடிகை!…

    சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை மீனா சென்னை மாலில் வைத்து போதைப்பொருளுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

    தமிழகத்தில் இன்றைய சூழலில் இளைஞர்கள் அதிக அளவில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளால் சீரழியும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தனியார் கல்லூரிகளில் போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது.

    இதையும் படிங்க: Nayanthara: நயன்தாரானாலே பேரழகி தானே?!… படம் ரேஞ்சுக்கு பில்டப்!… வெளியான மேரேஜ் ட்ரைலர்!…

    இந்நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ராயப்பேட்டை வணிக வளாகத்திற்கு போதைப் பொருளுடன் வந்திருக்கின்றார்.

    அவரிடம் போதை பொருள் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார்கள். அங்கு அவரிடம் சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கின்ற அதிக வீரியம் கொண்ட போதை பொருளை வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போதை பொருளையும் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் இந்த போதை பொருளை அவர் எங்கு வாங்கினார்? எதற்காக இங்கு கொண்டு வந்தார்? யாருக்கும் விற்பனை செய்ய கொண்டு வந்தாரா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகர்களுக்கு அவர் போதை பொருள்களை சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    இதையும் படிங்க: Vijay: விஜயோட குணம் என்னன்னு தெரியுமா? போற போக்கப் பார்த்தா அவரு தான் அடுத்த ‘சிஎம்’ போல..!

    அடுத்த கட்டமாக அவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்திருக்கின்றார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வர வர கஞ்சா, ஹெராயின், கொக்கை உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில் நடிகை மீனாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் என்கின்ற போதை பொருள் அதிக வீரியம் கொண்டது என்று கூறப்படுகின்றது. மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை தயாரிப்பதற்கு சூடோபெட்ரின் உதவுவது குறிப்பிடத்தக்கது.

  • காதும் காதும் வச்ச மாதிரி நடந்த சந்திப்பு! பெரிய நடிகருடன் காதல் வயப்பட்ட மீனா?..

    Actress Meena: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமான மீனா அதனைத் தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பார். அந்த நேரத்தில் மீனா மிகவும் கொழுக்மொழுக் என மிகவும் உடல் எடை அதிகரித்து இருந்ததால் நடிகைகள் தூக்குவதற்கு மிகவும்  சிரமப்படுவார்களாம்.

    அந்த படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருப்பார். அதில் அவர் அழைக்கும் ‘ரஜினி அங்கிள்’ என்ற ஒரு வசனம் இன்று வரை அவருக்கு ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இப்படி குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா ஹீரோயின் ஆகவும் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தினார்.

    இதையும் படிங்க: பிளாப் கொடுத்தும் அதிக சம்பளம் கேட்ட ஜெயம் ரவி!.. வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி

    அதில் அவர் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் படமாக அமைந்தது என் ராசாவின் மனசிலே திரைப்படம். ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்த மீனா அந்த படத்தில் இருந்து மக்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

    அன்றிலிருந்து இன்று வரை பக்கபலமாக இருப்பது அவருடைய அம்மா தான். அவருடைய கால்ஷீட் எல்லாவற்றையும் மீனாவின் அம்மா தான் பார்த்துக் கொள்வார். அவருடைய கெரியரில் மிஸ் பண்ண மிக முக்கிய படங்களும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் படையப்பா, முதல்வன் போன்ற படங்களை சொல்லலாம் .

    இதையும் படிங்க: பலான சீன்! நடிகையிடம் சைஸ் கேட்ட கமல் பட நிறுவனம்.. அப்புறம் என்னாச்சு தெரியுமா?

    அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதுவும் அவருடைய கணவர் இறந்த பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அதாவது பிரபல அரசியல்வாதியுடன் அவருக்கு இருக்கும் உறவு ,தனுஷை மறுமணம் செய்ய இருக்கிறார் போன்ற சர்ச்சைகள் எல்லாம் கிளம்பி வருகின்றன.

    ஆனால் இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறுகையில் திருமணத்திற்கு முன்பே மீனாவுக்கு ஒரு பெரிய நடிகருடன் காதல் ஏற்பட்டது என்றும் சென்னையில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு என ஒரு தனியாக அறை ஒதுக்கி விடுவார்களாம். அந்த அறையில் இருவரும் ரகசிய சந்திப்பு நடத்துவார்களாம். ஆனால் அது காதும் காதும் வச்ச மாதிரி அப்படியே மறைந்து போனது என்று சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: ரஜினி மட்டுமல்ல… ஷங்கர் எவ்வளவோ சொல்லியும் கமல் மறுத்த படங்கள்…இப்படியா மிஸ் பண்ணுவாங்க…

  • நீங்க பிஸியான நடிகைனு தெரியும்.. அதுக்கு இதுக்கெல்லாம ஆள் வைப்பீங்க! மீனாவின் அட்ராசிட்டி

    Actress Meena: கோலிவுட்டில் 90கள் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்த மீனா ஹீரோயினாக நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி சினிமாக்களில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்தார் மீனா.

    குழந்தை நட்சத்திரமாக அவர் யார் யாருக்கெல்லாம் மகளாக நடித்திருந்தாரோ அதே ஹீரோக்களுக்கு பின்னர் ஹீரோயினாகவும் நடித்தார். ரஜினி, பிரபு, சத்யராஜ், கமல் ,பாலகிருஷ்ணா இவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் அவர்களுடன் ஹீரோயினாகவும் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர்களில் ரஜினி மீனா ஜோடி தான் ரசிகர்கள் அதிகளவு ரசிக்கப்பட்ட ஜோடியாக பார்க்கப்பட்டது.

    இதையும் படிங்க: ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

    ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்த அத்தனை படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட். சினிமாவிற்கு வந்து 40 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மீனா அதே பொலிவுடன் அதே ஒரு மார்க்கெட் லெவலுடனும் இருந்து வருகிறார். தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீனா.

    இந்த நிலையில் அவருடைய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் சொன்ன ஒரு தகவல் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது நான்கு மாநிலங்களில் இருந்தும் மீனாவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய கடிதங்கள் வருமாம். மூட்டை மூட்டையாய் வந்து இறங்குமாம். அப்போது அந்த கடிதங்கள் எல்லாவற்றையும் பார்த்து படித்து ரசிகர்களுக்கு அவருடைய போட்டோவை அனுப்பவும், அந்த கடிதத்தில் அட்ரஸ் எழுதுவதற்காகவும் தனியாக ஒரு ஆளை அப்பாயின்மென்ட் செய்து வைத்திருந்தாராம் மீனா.

    இதையும் படிங்க: ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்

    அதில் சீனி பிரியா என்ற ஒரு ரசிகையின் பெயரை மீனு பிரியா என அந்த ரசிகை மாற்றிக் கொண்டாராம். இப்போது வரைக்கும் இந்த ஒரு ரசிகை தான் மீனாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறாராம். மீனா 40 நிகழ்ச்சியில் கூட இந்த ரசிகை கலந்து கொண்டிருந்தாராம்.

  • கார்த்திக்கிடம் இருக்கிற ஒரே பிரச்சினை இதுதான்! குளிர்ல என்ன நடந்துச்சு தெரியுமா? மீனா சொன்ன சீக்ரெட்

    Karthik Meena: 80கள் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு காதல் மன்னனாக நவரச நாயகனாக அனைத்துப் பெண் ரசிகர்களையும் கவர்ந்த கள்வனாக இருந்தவர் நடிகர் கார்த்திக். அனைவரையும் கவர்ந்து சூப்பர் ஹீரோவாக ஹேண்ட்ஸமான ஹீரோவாக அந்த காலகட்டத்தில் வலம் வந்தார் கார்த்திக். அவரிடம் மயங்காத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம்.

    அவர் மீது காதல் வயப்பட்ட நடிகைகள் ஏராளம் என்று பல பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. அவர் ஒரு பிளேபாயாகத்தான் அந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறார் கார்த்திக். இந்த நிலையில் கார்த்திகை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை மீனா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கார்த்திக் இடம் இருக்கிற ஒரே பிரச்சனை அதிகாலை ஷூட்டிங் என்றால் அவர் வராமல் இருப்பார்.

    இதையும் படிங்க: நீ இதை செஞ்சிருந்தா நான் வந்திருப்பேன்!.. ராமராஜனிடம் கோபப்பட்ட இளையராஜா!. சாமானியன் பிளாஷ்பேக்!..

    முதல் நாள் ஷூட்டிங் முடிந்து போகும் போதே என்னிடம் சன் செட்டும் சன் ரைஸும் ஒன்றுதானே? ஒரே மாதிரி தானே இருக்கும் என கேட்டுவிட்டு தான் போவாராம். அப்போதே மீனாவுக்கு தெரிந்து விடுமாம். நாளைக்கு மனுஷன் ஷூட்டிங்கிறகு லேட்டா தான் வருவார் என்று. அந்த அளவுக்கு அதிகாலை சூட்டிங் என்றால் அவர் எழுந்திருக்கவே மாட்டார் என கூறினார்.

    அதுபோல அரிச்சந்திரா பட சூட்டிங்கின் போது சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். அங்கு மிகவும் குளிராக இருந்ததாம். இத்தனைக்கும் கார்த்திக்கு ஜெர்கின் எல்லாம் அணிந்து கொண்டு தான் இருந்தாராம். படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும்  குளிரை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் மீனாவின் அம்மா சுட சுட அனைவருக்கும்  ரசம் சோறு சமைத்துப் பரிமாறினாராம். அதிலிருந்து மீனாவின் அம்மா மீது கார்த்திக்குக்கு மிகவும் மரியாதையாம். இப்பொழுது பார்த்தால் கூட அந்த ரசத்தை ஞாபகப்படுத்தி தான் கார்த்திக் கேட்பார் என மீனா கூறினார்.

    இதையும் படிங்க: கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

  • ஐட்டம் டான்ஸுக்காக டாப் நடிகைகள் வாங்கிய சம்பளம்! அப்பவே 80 லட்சம் வாங்கி அசத்திய மீனா

    Item Song: தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் சில நடிகைகள் ஐட்டம் டான்ஸ் ஆடுவதன் மூலம் அவர்களின் மார்கெட் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதையும் மீறி ஐட்டம் பாடலுக்கு ஆடி உச்சம் பெற்ற நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படி பட்ட நடிகைகள் யார்? அவர்கள் அந்த ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

    நடிகை மீனா: 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் என்ற பாடலுக்கு நடிகை மீனா விஜயுடன் சேர்ந்து ஆடியிருப்பார். விஜயுடன் மட்டுமே நடிக்காமல் இருந்த மீனா இந்த பாடல் மூலம் அந்த குறையையும் தீர்த்துக் கொண்டார். அந்த நேரத்தில் இந்தப் பாடல் மிகவும் சென்ஷேசனல் பாடலாக அமைந்தது. மேலும் இந்தப் பாடலுக்காக மீனா வாங்கிய சம்பளம் 80 லட்சம் என சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: தனுஷுக்காகத்தான் முதல் வரிசையில் 2 சீட் கேட்டாரா ரஜினி?!.. வீடியோவுக்கு பின்னாடி இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

    நடிகை ரோஜா: பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரோஜாவும் விஜயுடன் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. அதனால் நெஞ்சினிலே படத்தில் தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா என்ற பாடலில் விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார் ரோஜா. அந்தப் பாடலில் விஜய் மற்றும் ரோஜாவின் நடனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. இந்த பாடலுக்காக ரோஜா வாங்கிய சம்பளமும் 80 லட்சம் என சொல்லப்படுகிறது.

    நடிகை சிம்ரன்: 90களில் எவர்கிரீன் ஜோடியாக திகழ்ந்தது விஜய் மற்றும் சிம்ரன். இவர்களுக்கிடையில் அமைந்த கெமிஸ்ட்ரி பல படங்களை வெற்றிப்படங்களாக மாற்றியது. அதையும் தாண்டி யூத் படத்தில் ஆல்தோட்டா பூபதி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜயுடன் ஆடியிருப்பார் சிம்ரன். அந்த பாடலில் இருவரின் நடனமும் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. இதற்காக சிம்ரன் வாங்கிய சம்பளம் 1 கோடியாம்.

    இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷ் நம்பிக்கை துரோகி!.. அவரை அறிமுகப்படுத்தியதே நான் தான்.. பிரபல இயக்குநர் குமுறல்!..

    நடிகை ரீமாசென்: 2000களில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் ரீமாசென். மிகவும் துணிச்சலான நடிகை. சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர். ஜே ஜே என்ற படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனானே என்ற ஐட்டம் பாடலுக்கு ரீமா சென் ஆடிய நடனம் இப்ப வரைக்கும் யாராலும் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்காக அவர் வாங்கிய சம்பளம் 50 லட்சம் என சொல்லப்படுகிறது. இப்படி அந்த நேரத்திலேயே ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய நடிகைகள் மத்தியில் இப்ப உள்ள நடிகைகளை சொல்லவா வேண்டும்.