விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசிப் படமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஜனநாயகன் இசை வெளியிட்டு விழாவிலும் இது என்னுடைய கடைசி படம் என விஜய் உறுதி செய்தார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் படம் உருவாகியிருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் செய்திருக்கிறாராம். இந்த படத்தின் சில போஸ்டர்களும் சில பாடல்களும் ஏற்கனவே வெளியானது.
படம் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். எனவே அதை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ஜனநாயகன் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களை அப்செட் ஆகியிருக்கிறது. இந்நிலையில்தான் ஜனநாயகன் டிரெய்லர் வெளிவராமல் போனதற்கு அனிருத்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மூன்று நாட்கள் மலேசியாவில் இருந்தார் அனிருத்.
எனவே ஜனநாயகன் டிரெய்லருக்கான பின்னணி இசையை அவர் செய்து கொடுக்கவில்லை. அதனால்தான் டிரெய்லர் வீடியோ திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்கிறார்கள். அனேகமாக வருகிற 3 அல்லது 5ம் தேதி ஜனநாயகன் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என தெரிகிறது.
நேற்று விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான நடந்து முடிந்தது. எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் மலேசியாவில் இருக்க அந்த ஸ்டேடியமே ரசிகர்களின் கொண்டாட்டத்தில் ஆர்ப்பறித்தது.இந்தப் படம் ரசிகர்கள் மனதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் ஒரு பக்கம் இந்தப் படத்தின் இயக்குனரான எச்.வினோத்.சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த எச்.வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.
அதிலிருந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து அஜித்தை வைத்து பவர்ஃபுல்லான படங்களை கொடுத்து மாஸ் இயக்குனராக மாறினார் எச்.வினோத். இதற்கிடையில் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு வர இப்போது ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. இதில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் விஜயை எப்படியாவது அழ வைக்க எவ்வளவோ முயற்சி நேற்றைய விழாவில் நடந்தது. ஆனால் விஜய் மேடையில் பேசும் போது என்னை அழ வைக்க என்ன ட்ரை பண்ணாலும் நான் அழ மாட்டேன் என்று கூறியிருந்தார். அதே போல் அனிருத் மேடையில் பாடும் போதும் உட்கார்ந்திருந்த விஜய் அருகில் இருப்பவரிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
யார் பெற்ற மகனோ பாடலை மூன்று வெர்ஷனாக பாடியிருக்கிறார்கள். அனிருத், விஜய் ஜேசுதாஸ் மற்றும் ரசிகர்கள் என மூன்று வெர்ஷனாக அந்த பாடல் பாடப்பட்டது. அப்போது அனிருத் பாடும் போது விஜய் , என்னை அழ வைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனால் நான் அழ மாட்டேன். நான் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கேன் என ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.
நேற்று விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான நடந்து முடிந்தது. எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் மலேசியாவில் இருக்க அந்த ஸ்டேடியமே ரசிகர்களின் கொண்டாட்டத்தில் ஆர்ப்பறித்தது.இந்தப் படம் ரசிகர்கள் மனதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் ஒரு பக்கம் இந்தப் படத்தின் இயக்குனரான எச்.வினோத்.சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த எச்.வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.
அதிலிருந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து அஜித்தை வைத்து பவர்ஃபுல்லான படங்களை கொடுத்து மாஸ் இயக்குனராக மாறினார் எச்.வினோத். இதற்கிடையில் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு வர இப்போது ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. இதில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் விஜயை எப்படியாவது அழ வைக்க எவ்வளவோ முயற்சி நேற்றைய விழாவில் நடந்தது. ஆனால் விஜய் மேடையில் பேசும் போது என்னை அழ வைக்க என்ன ட்ரை பண்ணாலும் நான் அழ மாட்டேன் என்று கூறியிருந்தார். அதே போல் அனிருத் மேடையில் பாடும் போதும் உட்கார்ந்திருந்த விஜய் அருகில் இருப்பவரிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
யார் பெற்ற மகனோ பாடலை மூன்று வெர்ஷனாக பாடியிருக்கிறார்கள். அனிருத், விஜய் ஜேசுதாஸ் மற்றும் ரசிகர்கள் என மூன்று வெர்ஷனாக அந்த பாடல் பாடப்பட்டது. அப்போது அனிருத் பாடும் போது விஜய் , என்னை அழ வைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனால் நான் அழ மாட்டேன். நான் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கேன் என ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் கூலி. படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினியுடன் இணைந்து அமீர் கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர், நீண்ட நாளுக்கு பிறகு ரஜினியும் சத்யராஜும் இந்த படத்தில் இணைந்திருப்பது ஒரு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சுருதிஹாசனுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. படத்திற்கு இசை அனிருத். வழக்கம் போல ரஜினியின் படம் என்றால் அவர் மியூசிக்கில் தூள் கிளப்பி விடுவார். அதுமட்டுமல்ல பிஜிஎம் ரஜினி படத்திற்கு என ஸ்பெஷல் ஆகவே இருக்கும்.
அப்படித்தான் இந்த படத்தில் அமைந்த சிக்கிடு பாடலும் ஒட்டுமொத்த ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் பெற்றிருக்கிறது. அந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. அதனால் படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது .
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறார்களாம் .ஆனால் 26 ஆம் தேதி தான் அனிருத்தின் இசை கச்சேரி சென்னையில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. உலகளாவிய இசை கச்சேரியை நடத்தி விட்டு அதன் நிறைவு பகுதியை சென்னையில் நடத்த அனிருத் திட்டமிட்டு இருக்கிறாராம்.
அதனால் அவர் இல்லாமல் எப்படி கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவார்கள் என்ற வகையிலும் ஒரு பக்கம் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என சொல்லப்படுகிறது. எப்படியும் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்துவது வழக்கம். அப்படித்தான் இந்த படத்திற்கும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கிங்டம். கௌதம் தின்னனுரி என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ நடித்துள்ளார். படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்றுதான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது விஜய்தேவரகொண்டா நடிகர் சூர்யாவுக்கு நன்றி கூறினார்.
ஏனெனில் இந்தப் படம் ஒரு பேன் இந்தியா படமாக தயாராகியிருப்பதால் அனைத்து மொழிகளிலும் இருக்கும் டாப் ஸ்டார்களின் வாய்ஸில்தான் கிங்டம் படத்தின் டீஸர் வெளியாஅ வேண்டும் என படத்தின் இயக்குனர் விருப்பப்பட்டாரம். அந்த வகையில் தமிழில் கிங்டம் படத்தின் டீஸரை சூர்யா வாய்ஸில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கூறியிருக்கிறார்.
ஆனால் இப்படி ஃபேவர் கேட்பது விஜய் தேவரகொண்டாவுக்கு பிடிக்காதாம். இருந்தாலும் சந்தேகத்தின் பேரில்தான் சூர்யாவுக்கு போன் செய்து ‘அண்ணா எனக்காக ஒன்று செய்ய வேண்டும். ஆனால் நோ சொல்ல கூடாது’ என கூறியிருக்கிறார். அதற்கு சூர்யாவும் சொல்லுங்க என கூற விஷயத்தை கூறியிருக்கிறார் விஜய்தேவரகொண்டா. எந்தவித மறுப்பும் இன்றி விஜய்தேவரகொண்டாவுக்காக வாய்ஸ் கொடுக்க சம்மதித்தாராம் சூர்யா.
அதே போல் அனிருத்தும் அந்த விழாவில் பல விஷயங்களை பகிர்ந்தார். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி கிட்டத்தட்ட 13 வருடங்களாக இந்த சினிமாவில் டிராவல் செய்து வருகிறேன்.அப்போதிலிருந்தே தெலுங்கு தேசத்திலிருந்து எனக்கான அன்பு பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. உங்களில் ஒருவராக என்னை மாற்றி விட்டீர்கள்.எப்பொழுதுமே நான் உங்கள் அனிருத் தான்.
aniruth
அதே போல் உங்கள் ‘பக்கோடு’தான் என கூறினார். இதில் பக்கோடு என்றால் ஒல்லிக் குச்சி. ஏனெனில் தெலுங்கு ரசிகர்கள் அனிருத்தை ஒல்லிக் குச்சி என்ற பெயர் வைத்துதான் கூப்பிடுகிறார்களாம். அதை அவர்கள் கிண்டலாக சொன்னாலும் அதையும் மேடையில் எந்தவொரு தயக்கமும் இன்றி அன்பாக வெளிப்படுத்தினார் அனிருத்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், சுருதிஹாசன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
பெரிய ஸ்டார் காஸ்ட் படமாக கூலி படம் உருவாகியிருக்கிறது. அதனால் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் இருக்கிறது. இன்னொரு பக்கம் பூஜா ஹெக்டே ஒரு சோலோ பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். மோனிகா என தொடங்கும் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது, ஜெயிலர் படத்தில் எப்படி காவாலா பாடல் உலகெங்கும் பிரபலமானதோ அதே போல் மோனிகா பாடலும் பிரபலமாகும் என எதிர்பார்த்தனர்.
அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. பூஜா ஹெக்டேவின் நடனம் கூடவே சௌபின் சாஹிரின் டாஸ்ன்ஸும் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ஓவர் சீஸில் பெரிய வியாபாரத்தை எதிர்கொண்டிருக்கிறது. துபாயில் ஒரு பெரிய நிறுவனம் தான் கூலி படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றியிருக்கிறது.
இந்த நிலையில் படத்தை பற்றி அனிருத் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். கூலி படத்திற்கு பெரிய அளவு ஹைப் கிரியேட் ஆகியிருக்கிறது. அது ஏனெனில் முதன் முறையாக லோகியும் தலைவரும் இணைந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நானும் லோகியும் என்ன படம் பண்ணாலும் அதுக்கு மியூஸிக்கிற்கு நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் வந்துவிடும்.
அதன் பிறகு தலைவரும் நானும் சேர்வது, இதெல்லாம் சேரும் போது வேற லெவலில் இருக்கும். அதோடு இந்த ஸ்டார் காஸ்ட் என்பது வேறு எந்த படத்துக்கும் அமையாது. இரண்டு நாளுக்கு முன்புதான் லோகியுடன் பேசினேன். அப்போது ஹைப் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்று பாடல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 5 பேரோட பேக் ஷாட் மட்டும்தான் வந்திருக்கிறது. ஆனால் டீஸரோ டிரெய்லரோ இன்னும் ரிலீஸாகவில்லை.
இதுக்கே இவ்ளோ ஹைப் வந்திருக்கிறது. ஆனால் என்ன எதிர்பார்க்கிறோம் என்றால் இது சூப்பரான ஒரு intelligent ஆன திரைப்படம். இந்த ஒரு வார்த்தைதான் தேவைப்படுகிறது. லோகியின் அழகான ஸ்கிரீன் ப்ளே அதுவும் பெரிய லெஜெண்ட் நடிகர்களுடன் எனும் போது வேறமாதிரி வர போகிறது கூலி என அனிருத் கூறியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, சுருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்டு 14ல் வெளியாகிறது. இதையொட்டி படத்துக்கான புரொமோஷன் பணிகள் இப்போது இருந்தே நடந்து வருகின்றன. சிக்கிடு பாடலுக்கான மியூசிக் வீடியோ வெளியானது. இதுகுறித்தும் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் குறித்தும் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பாருங்க.
அந்தக்காலத்தில் படத்துக்கு புரொமோஷன்னா இன்று பட பூஜை ஆரம்பம்னு பெரிசா விளம்பரம் பேப்பர்ல வரும். அதுதான் புரொமோஷன். அடுத்துப் பாட்டு கேசட் வரும். ரஜினி, கமல், ராமராஜன், மோகன் படங்களோட பாடல் கேசட்டுக்கு அடிச்சிக்கிட்டு நான் நீன்னு போட்டி போட்டு வாங்குவாங்க. புதுப்பாட்டை கேசட் வந்தவுடனே கல்யாண வீடுகள், டீக்கடைகள்ல போடுவாங்க. ‘பாட்டே பிரமாதமா இருக்குய்யா. படம் பிச்சிக்கிட்டு ஓடும்யா’ன்னு சொல்லி பாட்டுக்காகவே படம் பார்த்தாங்க.
இப்போ என்னன்னா பாட்டுக்கே ஒரு புரொமோஷன் கொடுக்குறாங்க. கூலியில் ரஜினிகாந்தை எதிர்பார்த்தேன். ஆனா அவரு வரல. காரை விட்டு இறங்கினதும் டப்புன்னு செயின் எடுத்துத் தோள்ல போடுறாரு. சம்பவம் பண்ணிடலாமான்னு கேட்குறாங்க.
‘தம்பி ஏற்கனவே நிறைய இசையில சம்பவம் பண்ணிருக்கீங்க. அடுத்து நடிப்புலயும் பண்ணப் போறீங்க போல’ன்னு நினைச்சேன். ரஜினிக்கு வயசாச்சுங்கறதனால அவருக்குப் பதில் அனிருத்தை நடிக்க வைச்சிருக்காரு போல. சம்பவம் உறுதி தான்னு நினைச்சேன். கைக்கடிகாரத்துல உள்ள செயினையே கோர்த்து கோர்த்து தோள்ல போட்டுருக்காரு.
ஆனா இவரு அந்தளவுக்கு ஒர்த் இல்ல. ஒரு சில ஓட்டல்ல தேடிப் போயி சாப்பிடுறான். ஆனா ஒரு சில டீக்கடையைப் பார்த்த உடனே, ஒரு பேரு வச்சிருப்பாங்க. சில ஓட்டலுக்கு ‘மரணவிலாஸ்’னு பேரு வச்சிருப்பான். அங்கே போனா பின்னால போயிடும்னு தெறிச்சி ஓடுவான்.
சில படங்கள் மரணவிலாஸ் மாதிரி தான். அனிருத்தே மரணவிலாஸ் மாதிரிதான் பாட்டு போட்டுக்கிட்டு இருக்காரு. சிக்கிட்டுங்கற இந்தப் பாட்டுக்கே செயினை கையில எடுத்துருக்கான்னா அடுத்து கடப்பாறையைக் கூட கையில எடுக்கலாம். துப்பாக்கியைக் கூட கையில எடுக்கலாம். ஊருல அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா ஆகலாமான்னு கேட்பாங்க. இதுதான் அனிருத்தோட நிலை.
திறமை இருந்து அந்தப் பாட்டை மக்கள்கிட்ட பிரபலப்படுத்துனா பரவாயில்லை. வரி இல்லை. ஒண்ணும் இல்லை. இதையும் தாண்டி ரஜினிகாந்த் அவரை ஏன் கூட வச்சிருக்காருன்னு தெரியல. ரஜினிகாந்தே நடிக்கலன்னா கூட அதுல இவரு இசை அமைப்பாருங்கற கண்டிஷன்ல தான் இருக்கு. பாவம் அந்த சிக்கிட்டு என்ன கண்டிஷன்ல வருதுன்னு பார்ப்போம் என்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
வேகமெடுக்கும் அஜித் அறிக்கை: நேற்றிலிருந்து அஜித் சோசியல் மீடியாக்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறார். அதற்கு காரணம் அவர் வெளியிட்ட அறிக்கை. நேற்று தான் துபாயில் இருந்து சென்னை திரும்பினார் அஜித். வந்ததும் முதல் வேளையாக ஒரு பக்க அறிக்கையை தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் எக்ஸ் வலை தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் அஜித். அந்த அறிக்கையில் சமீப காலமாக தன்னை கடவுளே அஜித்தே என கோஷமிட்டு வருவதை பார்த்து வருகிறேன்.
அது என்னை மிகவும் கவலை அடைய செய்திருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் என் பெயரோடு வேற எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்க வேண்டாம். எனக்கான பெயரை வைத்து அழைத்தால் போதும். விழாக்களிலும் பொது நிகழ்வுகளிலும் இந்த மாதிரி கோஷமிட்டு மற்றவர்களை துன்புறுத்தும் இந்த செயலை இனிமேல் செய்ய வேண்டாம். உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
புது டிரெண்ட்: உங்கள் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மாதிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித். அந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே மீண்டும் அஜித்தின் பெயரை வைத்து ரசிகர்கள் வேறு ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினர். அவர் பெயர் முன் வேறு எந்த பெயரையும் சேர்க்கக்கூடாது என்று தானே சொன்னார் என ஆங்காங்கே இருக்கும் சில ரசிகர்கள் கடவுளே என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு அஜித்தே அஜித்தே என டிரம் இசையுடன் சேர்த்து பாட ஆரம்பித்து விட்டனர்.
இப்போது அதுதான் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே ‘அஜித்தே கடவுளே’ இது தன்னை கவர்ந்தது என அனிருத் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே தான் விடாமுயற்சி படத்தின் டீசரிலும் கடைசி நிமிடத்தில் அஜீத்தே கடவுளே என வைத்திருப்பார் அனிருத். அதனால் ரசிகர்களை கண்ட்ரோல் செய்த அஜித் விடாமுயற்சி டீசரிலும் அதை எடுக்கும்படி வற்புறுத்த வேண்டும்.
அனிருத்துக்கு ஆப்பு: ஒரு வேளை அந்த டீசரில் அந்த கோஷம் இருந்தது என்றால் அது இன்னும் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும் என கோடம்பாக்கத்தில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி அனிருத்திடம் கேட்டதற்கு டீசரில் அஜித்தே கடவுளே என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். கடவுளே அஜித்தே என்று இல்லை என கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைக் கேட்கும் சில பேர் பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம் என கவுண்டமணி செந்தில் காமெடியை நினைவுபடுத்தி கிண்டல் அடித்து வருகின்றனர்.
ரஜினியின் பிறந்தநாள் கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது. தன்னுடைய 73 வது வயதை நிறைவு செய்து 74வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் ரஜினி. ரஜினி இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வருட பிறந்த நாளின் போது ரஜினியின் இரண்டு படங்கள் குறித்த அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்று கூலி திரைப்படத்தின் அப்டேட் மற்றொன்று ஜெயிலர் 2 படத்தின் அப்டேட். ஆனால் பெரிய அப்டேட் என்று எதுவும் இல்லாமல் கூலி படத்தின் ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோ மட்டும் வெளியாகி ஓரளவு ரசிகர்களை திருப்தி படுத்தியது. ஜெயிலர் 2 அப்டேட் என்ன ஆனது என அனைவரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் இதற்கு பின்னணியில் அனிருத் இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
ரஜினி – அனிருத் காம்போ வெற்றி:
ஜெயிலர்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது. அதற்கு இன்னொரு காரணம் அனிருத் இசையில் அமைந்த பின்னணி இசை மற்றும் பாடல்கள். ரஜினிக்கு மட்டும் இல்லாமல் சிவராஜ்குமார் மோகன்லால் என ஒவ்வொருவருக்கும் பின்னணியில் ஹை பிட்ச்சில் பிஜிஎம்- ஐ ஏற்றி படத்தின் தரத்தையே மாற்றினார் அனிருத். பொதுவாக ரஜினியின் படங்களுக்கு என்றால் அனிருத் கையில் இருந்து எப்படி தான் இசை வருமோ தெரியவில்லை.
அந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். அதேபோலத்தான் ஜெயிலர் திரைப்படத்திற்கும் வேட்டையன் திரைப்படத்திற்கும் என அடுத்தடுத்து பேக் டு பேக் ஹிட் கொடுத்தார் அனிருத். அதைப்போல இப்பொழுது கூலி திரைப்படத்திலும் அவருடைய இசை தான். அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் அவர்தான் இசை. ஆனால் ஜெயிலர் படத்தின் வெற்றியால் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு தனக்கு சம்பளமாக 17 கோடி வேண்டும் என அனிருத் கேட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கே ஷாக்கா?
இந்த சம்பளத்தை கேட்டதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் ஷாக்காகி விட்டார்களாம். 17 கோடி என்பது அதிகம் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அனிருத் அந்த சம்பளத்திலிருந்து மாறுவதாக இல்லையாம். அதனால் தான் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ சூட் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏனெனில் ப்ரோமோசூட் என ஆரம்பித்து விட்டால் முன்பாக அக்ரீமெண்ட் கையெழுத்துக்காக வேண்டும்.
அந்த அக்ரிமெண்டில் அனிருத் கேட்ட சம்பளத்திற்கு ஓகே சொல்ல வேண்டும். அதனால் இப்போது இந்த சம்பள விஷயத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். இதன் காரணமாகத்தான் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ ஷூட் எடுக்கப்படவில்லையாம். இதனால் தான் ரஜினியின் பிறந்த நாளின் போது ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகவில்லை என தகவல் கிடைத்துள்ளது.
விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். தனது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதலே பல பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.
லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த திரைப்படத்தில் ஆரம்பமே இயக்குனர் பிரச்சனையோடு ஆரம்பித்தது ஒரு வழியாக கடைசியில் மகிழ்திருமேனி படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டது. அஜர்பைஜானின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கால சூழ்நிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி வந்தது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கின்றார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஒருவழியாக இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் தான் முடிவடைந்தது. படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார்.
மேலும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் ஹாலிவுட் தரத்திற்கு சூப்பராக இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தார்கள். இதற்கு இடையில் படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் பேட்ச் வொர்க் இருப்பதால் பாங்காக்கில் படத்தின் மீத காட்சிகள் எடுத்திருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
மேலும் நடிகராக அஜித் மீண்டும் உடல் எடையை குறைத்து தனது பழைய லுக்கிற்கு திரும்பி இருக்கின்றார். இப்படி நடிகர் அஜித்தை பார்ப்பதற்கு மிகவும் சூப்பராக இருப்பதாக தொடர்ந்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அந்த திரைப்படமும் முழுவதும் முடிவடைந்து விட்டது.
இப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அனிருத் இசையில் ‘சாவடிக்க’ பாடல் வெளியாக இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் எப்போது வெளியாகும் என்பது இன்னும் தெரிய வரவில்லை.
காதலிக்க நேரமில்லை: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. முழுக்க முழுக்க இந்த காலத்து காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் கிருத்திகா.
இந்த திரைப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில் திடீரென்று பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் வந்திருக்கின்றனர் படக்குழுவினர். அந்த வகையில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருக்கின்றது.
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார். நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த திரைப்படம் மிகவும் முக்கியமான படமாகும். காரணம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அது மட்டும் இல்லாமல் அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் தற்போது ஒரு ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார் ஜெயம் ரவி.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களின் கேள்விக்கு படக்குழுவினர் மிகச் சிறப்பாக பதில் அளித்து இருந்தார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் அனிருத், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் பேசும் போது கூறியிருந்ததாவது ‘அனிருத் நன்றாக இசையமைத்து வருகின்றார்.
பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இன்றைய காலத்தில் பத்தாயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் வளர்ந்து வந்த காலத்தில் 10 இசையமைப்பாளர்கள் தான் இருந்தார்கள். ஆனால் தற்போது சினிமாவில் நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது.
எல்லாத்தையும் செய்து விட்டு தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் என்று சொல்லும் அந்த பணிவு ஆச்சரியப்பட வைக்கின்றது. மேலும் அனிருத்துக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் கிளாசிக்கல் இசையை படித்து விட்டு அதில் நிறைய பாடல்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மேலும் இளம் தலைமுறைக்கு நிச்சயம் போய் சேரும்’ என்று கூறியிருந்தார். மேடையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த வேண்டுகோளானது தற்போது வைரலாகி வருகிறது.