Tag: Arya

  • LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    LIK vs Mr X: தமிழ் சினிமாவை காப்பாத்தப்போவது யாரு?.. சார் இங்கே ஒரே பைத்தியமா இருக்காங்க சார்!..

    ஒரு படம் வெளியானால் இயக்குநர்களை தான் பலரும் பாராட்டுவார்கள். அந்த படத்தில் மற்ற இடங்களில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா தொடர்ந்து டல் அடித்து வரக் காரணமே இயக்குநர்கள் தான் என்கின்றனர்.

    கடந்த வாரம் விக்னேஷ் சிவன் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை இந்தியாவில் வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சனிக்கிழமையான நேற்றும் படத்துக்கு பெரிதாக கூட்டம் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படமும் மண்ணைக் கவ்வி விட்டதாக கூறுகின்றனர்.

    பிரதீப் ரங்கநாதனுக்காக இந்த வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிக வசூல் ஈட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி வசூல் ஈட்டியதாக போஸ்டர் அடித்து வெளியிட்டனர். இந்த படம் 50 கோடியை கடக்கவே படாதபாடு பட்டுவிட்டது. நல்லவேளை 210 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்டதை போலவே இதே மொக்கை கதையை விக்னேஷ் சிவன் படமாக்கியிருந்தார் என்றால் இன்னமும் ஒரு 100 கோடி இழப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர்.

    மிஸ்டர் எக்ஸ் வசூல்: ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நல்லா ஹேண்ட்ஸம் ஆகவும் சிக்ஸ் பேக் வைத்து வாட்ட சாட்டமாகவும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். எஃப்ஐஆர் படமே அதிகபட்சமாக 24 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் அவர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2 நாட்களில் அதிகபட்சமாக 1.36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா இந்த ஏப்ரல் மாதத்தில் ரொம்பவே டல் அடித்து வருகிறது. தனுஷின் கர திரைப்படமாவது கை கொடுக்குமா? அல்லது இட்லி கடை போல கவிழ்த்து விடுமா என தியேட்டர் ஓனர்கள் முதல் திரையுலகமே அச்சத்தில் உள்ளது.

  • மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை தேடி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனை வைத்து எஃப்ஐஆர் திரைப்படத்தை எடுத்த மனு ஆனந்த் அந்த படத்தை விட சூப்பர் படத்தைக் கொடுக்கிறேன் என தனது பேட்டியில் துரந்தர் எல்லாம் கொண்டு வந்து ரிலீஸுக்கு முன்பாக பேசினார்.

    ஆனால், படத்தை பார்த்தவுடன் இதுக்காக இவ்ளோ பில்டப் என்றும் இதுக்கு லெஜண்ட் சரவணா நடித்த லீடர் படமே ஸ்பை த்ரில்லர் படத்தை எப்படி எடுக்கணும்னு பாடம் நடத்தும் போல இருக்கே என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்தத் தொடங்கி விட்டனர்.

    இடியாப்ப சிக்கல் கதை: நாட்டையே காப்பாற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆனால், அது ஆர்யாவும் இல்லை, கெளதம் கார்த்திக்கும் இல்லை என்கிற இடத்திலேயே இருவருக்கும் விபூதி அடித்துவிட்டு இயக்குநர் புதுசாக செட்டாகாத டோப்பாவை மாட்டி சரத்குமாரை ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிவிட்டார். அப்புறம் அதே சரத்குமார் தான் ஆர்யாவின் அப்பா, இந்தியாவையும் உங்க அப்பாவையும் காப்பத்துறது தான் உன்னோட மிஷன் இம்பாசிபிள் என மஞ்சு வாரியர் மிஷனை தூக்கி தாலி கட்டி குடும்ப வாழ்க்கை நடத்த திட்டமிட்ட ஆர்யாவிடம் கொடுக்க, அவருக்கு வில்லனாக கெளதம் கார்த்திக் ரைசா வில்சன் உடன் ஜோடி போட்டு குதிக்க, கடைசியில் டைரக்டர் மெயின் வில்லனே நான் தான் என வச்ச ட்விஸ்ட்டை பார்த்து விட்டு ஆளவிடுங்கடா சாமி என தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

    ஆர்யா, கெளதம் கார்த்திக்கு மீண்டும் பல்பு தான்: இப்படித்தான் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பிரடேட்டர்களை எல்லாம் கொண்டு வந்து உப்புமா படத்தைக் கொடுத்து காண்டாக்கினர். அதே வகையில் தான் இந்த படமும் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை, உருவாக்கப்பட்ட விதம் எல்லாம் படு மோசம்.

    பிரதமர் மோடிக்கிட்ட பேசிட்டு இருந்துட்டே அடுத்த 10 நிமிஷத்துல கல்பாக்கம் அனல் மின் நிலையத்துக்கு வந்து கிளைமேக்ஸில் மஞ்சு வாரியர் சண்டை போடுறது எல்லாம் காமெடியின் உச்சம். இந்தியாவின் உளவுத்துறையை பெருமைப்படுத்துறோம்னு படம் எடுப்பாங்க பார்த்தால், ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்க. சரத்குமாருக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

    ரேட்டிங்: 2.5/5.

  • துரந்தர் மாதிரி இல்லை… ஆனால் ட்ரை செய்திருக்காங்க…Mr X பப்ளிக் விமர்சனம்

    துரந்தர் மாதிரி இல்லை… ஆனால் ட்ரை செய்திருக்காங்க…Mr X பப்ளிக் விமர்சனம்

    ஆர்யா, கௌதம் கார்த்திக்,மஜ்சு வாரியர் மர்றும் சரத்குமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ். FIR வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் மனு ஆனந்தின் இரண்டாவது படமிது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து மக்கள் கூறுகையில், இனி ஆர்யவை ஆர்யா அலி அம்சா மசாரி என்றுதான் கூப்பிட வேண்டும். ஆர்யா ரா ஏஜெண்டாக இப்படத்தில் நடித்துள்ளார். படம் நன்றாக உள்ளது. நியூக்ளியர் வெப்பனை வெடிக்கவிடாமல் தடுப்பதுதான் படத்தின் கதையே. துரந்தர் மாதிரி இருக்குமா என்று கேட்டல் அப்படி இல்லை . ஆனால் ட்ரை செய்துள்ளார்கள்.படம் நன்றாக உள்ளது. குறிப்பாக மஞ்சு வாரியர், சைரா வில்சன் வேடங்கள் நன்றாக உள்ளது. ஆர்யா, கௌதம் கார்த்திக் மிரட்டுயுள்ளார்கள். ஒரு மாஸ் ஹீரோ நடித்திருந்தால் நிச்சயம் 500 கோடி வசூல் வந்திருக்கும் என்றார்.

    மற்றொரு ரசிகர் கூறுகையில், தமிழில் ஒரு நல்ல முயற்சி, கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். மொத்தட்ய்ஹ்தில் இந்த படத்தின் விமர்சனங்கள் பாசிடிவாக வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • மொட்டை மாடி பார்ட்டியில் போன் போட்டு சந்தானத்தை கலாய்த்த விஜே சித்து.. ஆர்யாவோட அட்டகாசம்!..

    மொட்டை மாடி பார்ட்டியில் போன் போட்டு சந்தானத்தை கலாய்த்த விஜே சித்து.. ஆர்யாவோட அட்டகாசம்!..

    நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில், வரும் 17ம் தேதி வெளியாக உள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் மறைந்த அணு ஆயுதம் மற்றும் அதைத் தேடும் ரகசிய ஏஜென்ட்களை மையமாகக் கொண்டு, அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் OTT உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வி.ஜே. சித்து நடத்தும் “மொட்டமாடி பார்ட்டி” நிகழ்ச்சியில் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆர்யாவிடம் சந்தானம் அவர்களுக்கு கால் செய்து ப்ராங்க் செய்யச் சொல்லப்படுகின்றது.

    அப்போது, “சார்பட்டா பரம்பரை – பார்ட் 2” படத்தில் ரஞ்சித், சந்தானத்தையும் நடிக்க அழைக்கிறார் என்று கூறி, ஜான் சீனா மற்றும் ஜாக்கி சான் போன்றவர்களுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சித்து நகைச்சுவையாக பேசுகிறார். இந்த உரையாடல் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர், சித்து, “நீங்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில் தொந்தரவு செய்துவிட்டோம்” என்று கூறியபோது, சந்தானம் “ஆர்யாவுக்காக நான் எதுவாக இருந்தாலும் செய்வேன்” என்று கூறினார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தொடங்கிய ஆர்யா – சந்தானம் நட்பு இன்று வரை தொடர்வதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    மொத்தத்தில், “மிஸ்டர் எக்ஸ்” திரைப்படம் வேகமான, சஸ்பென்ஸ் நிறைந்த ஸ்பை ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    எப்போ பணம் வேணாலும் தயங்காம கேளுங்க…வெண்ணிற ஆடை மூர்த்தியை நெகிழ வைத்த அர்ஜூன்

  • ஆர்யா காசுல ஜோரா புது வீடே கட்டிட்டாரே சந்தானம்!.. சிறப்பாக நடைபெற்ற புதுமனை புகுவிழா!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில் சந்தானம் தனது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் சச்சின், பொல்லாதவன், பில்லா, அழகிய தமிழ் மகன், சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

    முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தயாரிப்பாளராகவும், கிக் என்ற படத்தில் பாடகராகவும் அவதாரமெடுத்தார்.

    சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ லாஞ்சில் சந்தானம் நான் புதுசா வாங்குன வீடு நல்லாவே இல்லைன்னு சொல்லி, ஆர்யா அந்த வீட்ட இடிச்சிடுன்னு சொல்லி இடிச்சிட்டான், எங்க அம்மாவும் மணைவியும் வெள்ளிக்கிழமையான விளக்கு ஏத்த அந்த வீட்டுக்கு போவாங்க , அப்படி அவங்க போயிட்டு வீட காணும்னு தேடிட்டு இருந்தாங்க என பேசியிருந்தார்.

    இந்நிலையில் இடிச்ச இடத்தில் ஒரு புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையே நடத்தியுள்ளார் சந்தானம். அவர் கோமாதா பூஜை செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தை வைத்து ஆர்யா டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்தது மட்டுமின்றி சந்தானத்தின் கடன் சுமைகளையும் போக்கியிருந்தார்.

  • சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் சென்ற மே மாதம் 16ம் தேதி வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் வசூலை அள்ளியது. இந்iநிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒடிடி ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக நீக்கப்பட்டது.

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராகவும் இப்படத்தில் ஒரு முகம் தெரியாத இயக்குனர் அழைத்ததற்காக மர்மமான திரையரங்கிற்கு செல்கிறார். பின்னர் திரைப்படம் தொடங்கியதும் சந்தானமும் அவர் குடும்பமும் படத்திற்குள் மாட்டிக்கொள்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்ற, மர்மமான புதிர்களை தீர்த்து, ஆவியின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்று கதை செல்கிறது. இப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் திரைப்பட விமர்சகர்களை கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், ஓடிடி ரசிகர்களுக்கு நல்லாவே இந்த படம் வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆபாச காட்சிகள் பெரிதாக ஏதுமில்லை.

  • சூரியின் மாமனை ஓவர்டேக் செய்த சந்தானம்!.. செகண்ட் ஹாஃப் செம காமெடி.. டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்!

    தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண் கலங்க வைத்து செல்ல சூரி இந்த வாரம் மாமன் படத்தைக் கொடுத்துள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் கிஸ்ஸாவாக கொடுத்துள்ளார்.

    தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 பாணியில் ஹாரர் படங்களை ஸ்பூஃப் செய்யும் படமாகவே இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியிருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஏகப்பட்ட பேய் காட்சிகளை வைத்து அடுத்த அடுத்த ரவுண்டுக்கு செல்ல வைத்து சிரிப்பு மூட்டிய பிரேம் ஆனந்த் இந்த முறை விமர்சகர் மற்றும் அவரது குடும்பத்தையே ஹிட்ச்காக் இருதயராஜாக வரும் நம்ம செல்வராகவன் தூக்கிக் கொண்டு போய் ஒரு படத்துக்குள் போட அங்கே இருந்து ஹீரோ எப்படி எஸ்கேப் ஆகிறார் என்பதையும் தனது குடும்பத்தையும் காதலையும் காப்பாற்றினாரா என்பதையும் கதையாக வடிவமைத்துள்ளார்.

    படத்திற்குள் ஹீரோவாக வரும் கெளதம் மேனன், ஹீரோயினாக வரும் யாஷிகா ஆனந்த் ரொமான்ஸ் எல்லாமே செம காமெடி. கஸ்தூரி வழக்கம் போல அதிகமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். நிழல்கள் ரவி எல்லாம் எப்பேர்பட்ட வில்லன் தெரியுமா? அவரையும் சந்தானம் தேவயானி புருஷன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்.

    சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷன் தில்லுக்கு துட்டு படத்தில் இருந்து டிடி நெக்ஸ்ட் லெவல் வரை பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. லொள்ளு சபா மாறனை டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியளவுக்கு இதில் பெரிதாக பயன்படுத்தவில்லை. ரெடின் கிங்ஸ்லி ஃபேனில் சுற்றுவது, தலைகீழாக நடப்பது என கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

    முதல் பாதியில் இந்த படமும் கதையை நோக்கி நகர்வதால் இடைவேளைக்கு முன்பு தான் மஞ்சுமெல் பாய்ஸ் காமெடியை வைத்து ஓட்டிய இயக்குநர், இரண்டாம் பாதியில் மீண்டும் டிடி ரிட்டர்ன்ஸ் ரூட்டை கையிலெடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். அதிலும், அந்த ஸ்லோமோஷன் சீனெல்லாம் செம மேட்டர்.

    நடிகர் ஆர்யா நண்பன் சந்தானத்தை நம்பி போட்ட காசு கோவிந்தா சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து விடும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் சம்மருக்கு ஏற்ற சிரிப்பு சரவெடி.

    ரேட்டிங்: 3.25/5

  • ஆல் அவுட் ஆன ஆர்யா!.. வேற வழி தெரியாமாத்தான் அந்த ஹீரோ தயவை நாடியிருக்கிறாரா?..

    அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா. ஒரு படம் ஹிட் கொடுப்பதும், ஒரு படம் தோல்வியை சந்திப்பதும் என நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்து கொண்டே வந்தது. ஆனால் சமீப காலமாக தொடர்ந்து ஆர்யா நடித்த பல படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன.

    ஆர்யாவுக்கு பின்னாடி சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கவின் எல்லாம் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்டு வருகின்றனர். ஆனால், நல்ல நடிப்புத் திறமை கொண்டுள்ள ஆர்யா நான் கடவுள், அவன் இவன், மகாமுனி, சார்பட்டா பரம்பரை என ஒரு பக்கம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.

    இதையும் படிங்க: இதுக்கு மேல அசிங்கம் தேவையா?.. லியோவையும் லோகேஷ் கனகராஜையும் இந்த கிழி கிழிச்சிட்டாரே எஸ்.ஏ.சி!..

    பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற படங்களில் கமர்சியல் ஹீரோவாகவும் கலக்கினார். ஆனால், அதன் பின்னர் அவரது வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

    அதன் பின்னர் ஆர்யா நடித்த அரண்மனை 3, கேப்டன், வசந்த முல்லை, காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம், சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி வில்லேஜ் வெப் சீரிஸ் என அனைத்தும் ஃபிளாப் ஆகின. இந்நிலையில், எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்த ஆர்யா மீண்டும் சந்தானத்தின் உதவியை தற்போது நாடி இருக்கிறார்.

    இதையும் படிங்க: ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

    பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு காமெடி படத்தை வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் சேர்ந்து விரைவில் நடிக்கப் போவதாக நேற்று நடந்த இசை வெளியிட்டு விழாவில் சந்தானம் தெரிவித்துள்ளார்.  அதே போல சந்தானத்தை வைத்து டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தையும் ஆர்யா தயாரித்து லாபம் ஈட்டும் நோக்கில் களமிறங்கி உள்ளார்.