Tag: Asin

  • Asin: அசின் திரையுலகை விட்டு போனதுக்கு காரணமே அவர்தானாம்.. இது தெரியாதே

    அசின்:

    தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அசின். நடித்தது குறைவான படங்கள்தான். ஆனால் இவரின் தாக்கம் தமிழ் சினிமாவில் மிகப்பெரியது. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் இவருக்கு நல்ல ஒரு மார்கெட் இருந்தது.

    அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்தார். தமிழில் கஜினி, போக்கிரி, சகலகலா வல்லவன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , காவலன் போன்ற திரைப்படங்களில் நடித்து தொடர் வெற்றியை கொடுத்தார். இவர் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். தமிழில் சூர்யாவுடன் கஜினி படத்தில் நடித்த அசின் ஹிந்தி கஜினியிலும் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்தார்.

    தமிழில் இவர் அறிமுமான திரைப்படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அசின் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருடைய இந்த அவசர திருமணம் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மார்கெட்டை உயர்த்திக் கொண்டே வந்தார் அசின்.

    ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார். இன்று வரை அசினை மிஸ் செய்பவர்கள் ஏராளம். அவர் நடித்த படங்களில் கிளாமர் காட்டாமல் நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி ரசிகர்களை உருவாக்கினார். இவர் மும்பையில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் சினிமாவை விட்டு போனதுக்கு காரணமே அவருடைய அப்பாதான் என நடிகர் மனோஜ் கிருஷ்ணன் கூறியிருக்கிறார்,

    அசினின் அப்பாவை பொறுத்தவரைக்கும் பெரிய கண்டிப்பானவராம். யாருடனும் சகஜமாக அசினை பழகவிடமாட்டாராம். இதுகூட அவர் சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று மனோஜ் கிருஷ்ணன் கூறினார்.

  • அஜித் ரெக்கமண்ட் செய்த நடிகை.. நடிக்க மறுத்து அட்வான்ஸையும் திரும்ப தந்த சம்பவம்

    அஜித் கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பில்லா. அந்த படத்திற்கு முன்பு வரை அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.அதனால் அஜித்தை பல வகைகளில் விமர்சனம் செய்து வந்தனர். அப்பொழுதுதான் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைக்க ஏன் நீங்கள் என்னுடைய பில்லா படத்தை ரீமேக் செய்து நடிக்க கூடாது என்ற ஒரு கேள்வியை ரஜினி கேட்டார்.

    அதன் பிறகு தான் பில்லா படத்தில் நடிக்க முடிவு செய்தார் அஜித். விஷ்ணுவர்தன் அந்த படத்தை மிக அற்புதமாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை எடுத்துக் கொடுத்தார். ஸ்டைலிஷ் மன்னன் என ரஜினிக்கு பிறகு அஜித்தை அழைக்க ஆரம்பித்தனர். இந்தப் படத்தால் நயன்தாராவுக்கும் பெரிய பேர் கிடைத்தது .முதன்முறையாக இந்த படத்தின் மூலமாகத்தான் பிகினி உடையில் நயன்தாரா நடித்தார்.

    யாருமே எதிர்பார்க்கவில்லை. நயன்தாரா இந்த அளவு கவர்ச்சியைக் காட்டி பிகினி உடையில் நடிப்பார் என்று. ஆனால் நயன்தாராவுக்கு முன்னாடி அந்த படத்தில் நடிக்க வேண்டியது அசின். இந்த படத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என அஜித்தான் சொல்லி இருக்கிறார். கதையை அசினிடம் சொல்லி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு விட்டது. போட்டோ சூட் எடுக்கலாம் என அசினை அழைத்து பிகினி உடையை கொடுத்து போட்டோ ஷூட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

    asin

    asin

    ஆனால் அசின் நான் இந்த மாதிரி ஆடை எல்லாம் போட்டு நடிக்க மாட்டேன் என சொன்னாராம். இருந்தாலும் விஷ்ணுவர்தன் வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஸ்டைலிஷான தமிழ் பெண் கதாபாத்திரம். அதனால் இப்படித்தான் இருக்கும்ல் நீங்கள் எதிர்பார்க்கிற கவர்ச்சி இருக்காது எனக் கூறுயிருக்கிறார். இருந்தாலும் தான் வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி கொடுத்து வந்து விட்டாராம் அசின். ஆனால் இந்த படத்திற்கு பிறகு தான் நயன்தாரா மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது.

  • சிம்ரன், அசின், நயன்தாரா எல்லாரையும் இப்படித்தான் துரத்திட்டாங்க!.. சுரேஷ் கோபி சூடானது ஏன்?..

    பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது சுரேஷ் கோபியுடன் ஜானகி vs ஸ்டேட் அஃப் கேரளா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அனுபமா மலையாள சினிமாவைப் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அனுபமா, பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து தமிழில் கொடி, தள்ளிப்போகாதே, டிராகன், தெலுங்கில் கார்த்திகேயா 2, டில்லு ஸ்கொயர் போன்ற பல மொழிகளிலும் புகழ் பெற்று விளங்கினார். மேலும், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் ஒரு புதிய தமிழ் படத்தில் அனுபமா நடித்து வருகிறார். லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் ’லாக்டவுன்’ என்ற படத்திலும் அவர் நடிக்கப்போவதாக தகவகள் வெளியாகியுள்ளது.

    பிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் எதிர்ப்பார்த்தபடி அமையாததால், தற்போது அவர் நடித்துள்ள ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் நிகழ்ச்சியில் அது குறித்து, மலையாள சினிமாவில் பலரும் என்னை தவிர்த்தார்கள். எனக்கு நடிக்கக்கூட தெரியவில்லை என்று ட்ரோல் செய்தனர். இருப்பினும் எனக்கு வாய்ப்பு கொடுத்த இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி எனக் கூறினார்.

    இது குறித்து பேசிய நடிகர் சுரேஷ் கோபி, அனுபமா தன் மனதிலிருந்ததை வெளிப்படையாக பேசிவிட்டார். இப்படி நடப்பது முதல் முறையில்லை. அவர் கூறியதில் இருக்கும் உண்மையை நான் அறிவேன். இதே போல நடிகை சிம்ரனுக்கும் நடந்திருக்கிறது. சிம்ரனும் முதலில் மலையாள சினிமாவில் நிராகரிக்கப்பட்டார். பின்னர் அவரை நடிக்க வைக்க அவரை தேடிச் சென்ற முன்னணி இயக்குனர்களைப் பற்றியும் எனக்கு தெரியும்.

    சிம்ரன் மட்டுமல்லாமல் கேரளாவை சேர்ந்த அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர்களும் மற்ற மொழிகளில் முன்னணி நடிகையாக புகழ் பெற்று விளங்கினர். அதே போல அனுபமாவுக்கும் நிச்சயம் நடக்கும். அதற்காக நான் பிராத்தனை செய்கிறேன் என பேசியுள்ளார்.

  • உள்ளம் கேட்குமே படத்தின் முதல் டைட்டில் இதுவா? ஏகப்பட்ட புதுமுகங்கள்… நீங்க மிஸ் பண்ணக்கூடாத தகவல்கள்…

    Ullam Ketkume: தமிழ் சினிமாவில் சில ஜானர் படங்களுக்கு எல்லா நேரமும் வரவேற்பு இருக்கும். கல்லூரி காலத்தை மையமாக வரும் படங்கள்தான் அது. அப்படி ஒரு படமாக வெளியாகி வரவேற்பு பெற்ற உள்ளம் கேட்குமே படத்தில் நீங்க மிஸ் பண்ணவே கூடாத தகவல்கள்.

    இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஷாம், அசின், ஆர்யா, பூஜா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்த திரைப்படம் உள்ளம் கேட்குமே. ஆனால் இப்படத்தில் நடிக்கும் போது ஷாம் மற்றும் லைலா இருவர்தான் தமிழ் சினிமாவில் அப்பொழுது தெரிந்த முகங்கள்.

    மற்ற மூவரையும் புது முகங்களாக தான் உள்ளே அழைத்து வந்திருக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக லைலா தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இரண்டாவது ஹீரோயின் ஆக தான் அசினை அழைத்து வந்திருக்கின்றனர். அசினுக்கும் இது இரண்டாவது திரைப்படமாக அமைந்தது.

    தமிழ் சினிமாவில் இப்பொழுது பிரபல முகமாக இருக்கும் ஆர்யாவின் உண்மையான பெயர் ஜம்ஷத். அவர் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை செய்து கொண்டிருந்தார். இயக்குனர் ஜீவாவின் வீடு பக்கத்தில் அடிக்கடி ஆர்யாவை பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

    படம் முடிந்த பின்னர் அவருக்கு ஆர்யா என்ற பெயரை கொடுத்ததும் இயக்குனர் ஜீவா தான். அதே நேரத்தில் இன்னொரு ஹீரோயினாக இருந்த பூஜாவையும் ஜீவா தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனால் இப்படத்தின் நிதி சிக்கல் காரணமாக படம் பலமுறை தள்ளிப் போனது.

    கிட்டத்தட்ட அறிவிப்பு வெளியாகி படம் ரிலீஸாக மூன்று வருடங்கள் எடுத்ததாம். அந்த நேரத்தில் ஆர்யாவுக்கு அறிந்தும், அறியாமலும் ஹிட் கிடைத்தது. அசின் எம்.குமரன், பூஜா ஜேஜே, அட்டகாசம் படங்களில் நடித்து பிரபலங்கள் ஆகிவிட்டனர். அதுபோல இப்படத்தின் முதல் பெயராக இருந்தது பெப்சி தானாம்.

    இந்த பெயர் ஏன் என்றால் படத்தின் நண்பர்கள் குழுவான பிரியா, இமான், பூஜா, ஷாம், ஐரின் இவர்களுடைய பெயரின் முதல் எழுத்து. இந்த டைட்டிலுக்காக சுசி கணேசன் வேறு போட்டியில் இருந்தார். ஆனால் ஜீவா முந்திக்கொள்ள அவர் தன்னுடைய கல்லூரி ஸ்டோரிக்கு ஃபைவ் ஸ்டார் என பெயர் மாற்றினார்.

    ஜீவா டைட்டிலை தட்டிச்சென்றார். இருந்து, இந்த படத்தோட டைட்டிலை மாற்றி, பெப்ஸி குளிர்சாதன கம்பெனியின் தமிழ்நாடு டேக்லைன் உள்ளம் கேட்குமே மோரில் இருந்து ‘உள்ளம் கேட்குமே’ என புதிய டைட்டிலை மாற்றினார் என்று கூறப்படுகிறது.

  • அசின் ஒரு பாவம்!.. விருது கிடைக்காத கோபத்தில் வன்மத்தை கக்கிய பாலிவுட் நடிகை…

    Asin: நடிகை அசினிடம் தோற்ற மிகப்பெரிய பாலிவுட் நடிகை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தினை பெற்றவர் நடிகை அசின். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் ஜோடி போட்டு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

    அதிலும் சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. கோலிவுட்டில் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வந்த நடிகை அசின் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.

    தமிழிலிருந்து சென்றாலும் ஹிந்தியில் அவருக்கு முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதற்காக அவர் புதுமுக நடிகைக்கான விருதுகளையும் குறித்தார். தொடர்ந்து ஹவுஸ்புல் மற்றும் கில்லாடி என வெற்றி படங்களை மட்டுமே அசின் நடித்து வந்தார்.

    இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து மொத்தமாக விலகினார். இந்நிலையில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா ஷர்மா அசினை பாவம் என கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரப் நே பானா டி ஜோடி ரப் திரைப்படத்தில் நடித்து அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் அறிமுகமான அதே வருடத்தில் தான் நடிகை அசினும் ஹிந்தி கஜினியின் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்தார். அதனால் அந்த ஆண்டு அனுஷ்கா சர்மாவுக்கு புதுமுக நடிகை விருது எதுவும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா ஷர்மாவிடம் ‘நீங்கள் ஒருநாள் ரன்வீர் கபூர் ஆக மாறினால் என்ன செய்வீர்கள்?’ என கேட்கப்பட்டது. நான் அவரிடம் இருந்த புதுமுக நடிகருக்கான விருதை எல்லாம் அனுஷ்கா ஷர்மாவிற்கு மாற்றி கொடுத்து விடுவேன். ஏனெனில் அவருக்கு எந்த விருதுதம் அந்த சமயத்தில் கொடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

    யாரிடம் விருதை இழந்தீர்கள் என்ற கேள்விக்கு ஏ சின்(பாவம்) எனக் குறிப்பிடுவார். தனது கிடைக்கப்பட வேண்டிய விருதை தமிழில் நடித்த பின்னரும் ஹிந்தியில் நடித்த அசின் தட்டி சென்றதை அனுஷ்கா சர்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • கிடைக்கிறதே குதிரைக்கொம்பு… அதுல வேற இப்படியா பண்ணுவீங்க…? முருகதாஸை டார்ச்சர் பண்ணிய அசின்..!

    2005ல் வெளியான சூப்பர்ஹிட் படம் கஜினி. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா உடலை வருத்திக் கொண்டு நடித்த படம். இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் சூர்யாவின் பிறந்தநாளன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் படத்தைப் பற்றிய சுவாரசியமான சில விஷயங்களை வலைப்பேச்சு அந்தனன் பகிர்ந்தள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

    எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடைப்பது என்பதே பெரிய விஷயம். கஜினி படத்திற்காக ரொம்ப பாடுபட்டு ஒரு முறை இரவு நேரத்தில் சூட்டிங்கிற்காக அனுமதி வாங்கினார்களாம். நைட் 9 மணில இருந்து 2 மணிக்குள்ள சூட்டிங் எடுக்கணும். அது எப்படின்னா, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை அசின் மீட்டு சென்னை எழும்பூர்ல வந்து இறங்குவது போன்ற காட்சி.

    Kajini
    Kajini

    அந்தப் படத்தில் ‘சஞ்சய் ராமசாமி’ கேரக்டரில் சூர்யா வருவார். அவர் வந்து போன் பேசும்போதே மொத்த விஷயத்தையும் முடித்து விடுவார் என்பது தான் கதைப்படி காட்சி. ஆனால் படப்பிடிப்பு நேரத்தில் நடந்த குழப்பத்தால் அதை எல்லாம் முருகதாஸ் எடுக்கவே இல்லையாம். அவ்வளவு டென்ஷன்.

    அன்று இரவு அசினோடு இருந்து டின்னர் சாப்பிட்டுள்ளார். அப்போது நயன்தாராவுக்கு இந்தப் படத்துல ஒரு சாங் இருக்குன்னு சொல்கிறார் முருகதாஸ். அசின் இன்னொரு சாங் எப்போ எடுக்கறீங்கன்னு கேட்டுள்ளார். அது உங்களுக்கு இல்ல மேடம். நயன்தாராவுக்குன்னு சொல்லிவிட்டார்.

    அவ்வளவு தான். அவங்க பயங்கரமான டென்ஷனா ஆயிட்டாரு. ஆனா அதை எல்லாம் வெளியே காட்டிக்காம, கேரவனுக்குள்ள போனவங்க 2 மணி நேரமா கதவைத் திறக்கவே இல்லையாம். அதன்பிறகு அசிஸ்டண்டை விட்டுக் கதவைத் தட்டுனா 2 மணி நேரம் கழிச்சி கதவைத் திறக்கிறாராம். எனக்கு வயிற்றுவலி. என்னால இப்ப நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.

    இதையும் படிங்க… இயக்குனர் மறுத்தும் விடாமல் கவர்ச்சி விருந்தைக் காட்டிய நயன்தாரா… என்ன ஒரு எளிமை…!

    முருகதாஸ்சுக்குப் பயங்கர கோபம். கதைப்படி நடந்ததை எல்லாம் டிரெய்ன்ல வரும்போது சொல்லணும். ஆனா அதை எல்லாம் எடுக்க எந்த நேரமும் இல்லை. எடுக்காம அசின் குழந்தைகளோட இறங்கி வர்ற மாதிரி மட்டும் எடுத்துட்டு மற்ற கதையை எல்லாம் போன்லயே சொல்ற மாதிரி காட்சியை மாற்றி விட்டாராம் இயக்குனர். அந்த சம்பவத்திற்குப் பின் முருகதாஸ்சுக்கு அசின் என்று சொன்னாலே அவரது முகம் மாறிவிடுமாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..

    கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, குத்து ரம்யா உள்ளிட்ட பலர் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சமீரா ரெட்டிக்கு முன்பாக பிரபல நடிகை ஒருவர் அந்த படத்தில் கமிட்டாகி நடித்த புகைப்படக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    2005ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்த ஆண்டே வாரணம் ஆயிரம் படத்தை சூர்யாவை வைத்து ஆரம்பித்து விட்டார் கெளதம் மேனன்.

     

    இதையும் படிங்க: ஒன்னா இருந்தோம்! அதுக்கப்புறம் கண்டுக்கவே இல்ல.. அஞ்சலி இப்படிப்பட்டவரா?

    ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக வாரணம் ஆயிரம் படம் டேக் ஆஃப் ஆகவில்லையாம். முதலில் அப்பா கதாபாத்திரமே இல்லாமல் தான் அந்த படத்தை சூர்யா மற்றும் அசினை வைத்து காதல் படமாக உருவாக்க நினைத்திருக்கிறார் கெளதம் மேனன்.

    ஆனால், கால தாமதம் ஏற்பட்ட நிலையில், கதையில் பல மாறுதல்களை புகுத்தி வாரணம் ஆயிரம் படத்தை 2008ம் ஆண்டு வெளியிட்டார். ஆனால், நடிகை அசின் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவாகி விட்டது.

    இதையும் படிங்க: விஜய் விடாம துரத்தியும் அஜித்த தாண்டலயே!.. லியோவை ஓரங்கட்டிய விஸ்வாசம்!..

    அவருக்கு பதிலாக சமீரா ரெட்டியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். சிம்ரன், குத்து ரம்யா என 3 நடிகைகளும் அந்த படத்துக்கு சரியான தேர்வாக இருந்தனர். அசின் நடித்திருந்தால், வேறு ஒரு ஆங்கிளில் படம் வந்திருக்கும்.