Tag: coolie

  • அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    அப்ப சுந்தர்.சி.. இப்போ சிபி சக்ரவர்த்தி!.. கூலி படத்துக்கு பின் குழப்பத்தில் ரஜினி..

    கடந்த பல வருடங்களாகவே இந்திய சினிமா அளவில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வந்தவர் நடிகர் ரஜினி. சில படங்களை தவிர அவரின் எந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான பாபா அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

    அதன்பின் 4 வருடங்கள் கழித்து அவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் வெளிவந்த லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. கதை, திரைக்கதை, இயக்குனர், காட்சிகள் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சரியாக கணக்குப் போட்டு நடித்து வந்த ரஜினியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

    அதனால்தான் பல வருடங்களாகவே சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடித்துவந்த ரஜினி கடந்த பல வருடங்களாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி வெளிவந்த பேட்டை, ஜெயிலர் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது
    . ஒருபக்கம் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார்.. அதோடு விஜயின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் குவித்தது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆதங்கத்தில்தான் ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா -கழுகு கதையை சொன்னதாக சொல்லப்பட்டது..

    அதேநேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது ரஜினியை யோசிக்க வைத்திருக்கிறது.. ஒருபக்கம் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர் 2 படமும் பக்கா ஆக்சன் படம்தான்.

    இதையடுத்து இனிமேல் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்கள் வேண்டாம்.. ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஒரு ஜாலியான, கலகலப்பான காமெடி படத்தில் நடிக்கலாம் என ரஜினி ஒரு நல்ல முடிவை எடுத்தார். அதனால்தான், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போனது.

    ஆனால் ரஜினி என்ன மாறுதல் சொன்னாரே சுந்தர்.சி அந்த படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. கடந்த சில மாதங்களாக படத்திற்கான முழு கதையையும் சிபி சக்கரவர்த்தி உருவாக்கினார்.

    cibi

    இந்த படத்தில் டெய்லராக ரஜினி நடிப்பது போஸ்டரிலேயே சொல்லப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது இந்த படத்திலிருந்து சிபிச் சக்கரவர்த்தியும் விலகியிருக்கிறார். இந்த படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..

    சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி இந்த படத்தில் நான் ஒரு Spy – உளவாளி. எனவே துரந்த 2 படம் போல ஒரு பக்கா ஆக்சன் படமாக கதையை மாற்ற முடியுமா?’ என கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியான சிபி சக்கரவர்த்தி ‘முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் நீங்கள் சொல்வது போல கதையை மாற்றுவது சிரமம்’ என சொல்ல அவரை தூக்கிவிட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டு வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

    கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின் ரஜினியின் நடவடிக்கைகளில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவரால் ஒரு கதையை முழுமையாக நம்ப முடியவில்லை.. நிறைய தலையிடுகிறார். இயக்குனரிடம் அதை மாற்று.. இதை மாற்று என ரஜினி குழப்பத்தில் இருக்கிறார்’ என கோலிவுட்டில் பேச துவங்கியிருக்கிறார்கள்.

  • 2025-ல் ஹைப் ஏத்தி ரசிகர்களை சோதித்த 6 திரைப்படங்கள்!.. ஒரு பார்வை…

    2025ம் வருடம் முடிவடையவுள்ள நிலையில் இந்த வருடம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆனால் அவர்களை கவர தவறிய 6 திரைப்படங்கள் பற்றி இங்கு பார்ப்போம்:

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம்தான் தக் லைப். நாயகன் வெளியாகி 36 வருடங்களுக்கு பின் மணிரத்னமும் கமலும் இணைந்ததால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டமும் ஏற்பட்டது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்து பேன் இண்டியா திரைப்படமாக வெளியானது கூலி. லோகேஷுடன் ரஜினி கூட்டணி அமைத்ததால் இந்த படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. ஆனால் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படத்தை ட்ரோல் செய்தார்கள்.

    vidaamuyarchi
    #image_title

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜுனும் நடித்திருந்தனர். Break Down என்கிற ஆங்கில படத்தின் ரீமேக்காக வெளிவந்த இந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

    அருண் இயக்கத்தில் சியான் விக்ரம், துஷரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்த படம் விக்ரமுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் தோல்வி அடைந்தது.

    madharaasi

    தனுஷ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தில் சத்யராஜ், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் சிறப்பு வேடத்தில் ராஜ்கிரணும், தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனனும் நடித்திருந்தனர். இந்த படத்தை கிரின்ச் என ரசிகர்கள் ட்ரோல் செய்ததால் படம் ஹிட் அடிக்கவில்லை.

    நான்கு வருடங்கள் கழித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம்தான் மதராஸி. சிவகார்த்திகேயனுக்கு ஒரு பக்கா ஆக்சன் படமாக இப்படம் வெளியானாலும் ஏனோ இந்த படம் ரசிகர்களை கவரவில்லை.

  • அவர்தான் ஹீரோ.. அவர் இல்லாம எப்படி? கூலி இசை வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு சிக்கலா?

    லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் கூலி. படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினியுடன் இணைந்து அமீர் கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர், நீண்ட நாளுக்கு பிறகு ரஜினியும் சத்யராஜும் இந்த படத்தில் இணைந்திருப்பது ஒரு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சுருதிஹாசனுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. படத்திற்கு இசை அனிருத். வழக்கம் போல ரஜினியின் படம் என்றால் அவர் மியூசிக்கில் தூள் கிளப்பி விடுவார். அதுமட்டுமல்ல பிஜிஎம் ரஜினி படத்திற்கு என ஸ்பெஷல் ஆகவே இருக்கும்.

    அப்படித்தான் இந்த படத்தில் அமைந்த சிக்கிடு பாடலும் ஒட்டுமொத்த ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் பெற்றிருக்கிறது. அந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. அதனால் படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது .

    கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறார்களாம் .ஆனால் 26 ஆம் தேதி தான் அனிருத்தின் இசை கச்சேரி சென்னையில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. உலகளாவிய இசை கச்சேரியை நடத்தி விட்டு அதன் நிறைவு பகுதியை சென்னையில் நடத்த அனிருத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

    அதனால் அவர் இல்லாமல் எப்படி கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவார்கள் என்ற வகையிலும் ஒரு பக்கம் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என சொல்லப்படுகிறது. எப்படியும் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்துவது வழக்கம். அப்படித்தான் இந்த படத்திற்கும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

  • விஜயை விட அதிக சம்பளம் தந்தா தான் நடிப்பேன்… அடம்பிடித்தாரா ரஜினி?

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் 30 வயது இளைஞன் மாதிரி சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் சம்பள விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.

    ஜெயிலர் 2 படத்துக்கு 250 கோடி சம்பளம் வேணும்னு ரஜினி கோரிக்கை வைத்தாராம். அதுவும் விஜயைத் தாண்டி எனக்கு சம்பளம் வேணும்னு சொன்னாராம். ரஜினி தன்னைச்சுற்றி என்ன நடக்குது? யார் என்ன பண்றா? டப்பிங் எப்படி நடக்குதுன்னு பம்பரமா 360 டிகிரியில் சுற்றிக்கிட்டு இருக்கிறார்.

    விஜய் இப்போது தனது கடைசி படமாக ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2026 பொங்கலுக்கு வருகிறது. அதே போல ரஜினி தற்போது நடித்து முடித்துள்ள படம் கூலி. இது வரும் ஆகஸ்டு 14ல் திரைக்கு வருகிறது.

    கூலியில் 130 கோடி தான் ரஜினிக்கு சம்பளமா பேசிருக்காங்களாம். ஆனால் ஜெயிலர்ல எப்படி ரஜினி 250 கோடி கேட்டாருன்னு விசாரித்தால் அது எல்லாம் பொய் தானாம். விஜய் ஒரு பக்கம் அரசியல பார்த்துக்கிட்டு இருக்காரு. இவரு ஒரு பக்கம் நடிச்சிக்கிட்டு இருக்காரு. சோஷியல் மீடியாவுல உட்கார்ந்து கொண்டு ஏதாவது ஒண்ணைப் பேசிக்கிட்டு இருக்காங்க.

    வேற ஒண்ணும் இதுல இல்லை. ஒருமுறை சம்பள விஷயத்தில் ரஜினி எப்போதுமே கறார் காட்டியது இல்லை. அவர் கவிதாலயா கிட்டயே ரஜினி சம்பளத்தில் ஒன்றரை லட்சத்தை திருப்பிக் கொடுத்தவர். ஏன்னா ஏவிஎம்.சரவணன் ஒரு முறை இன்னைக்கு உங்க மார்க்கெட்டுக்கு ஏற்ப 12.5லட்சம் சம்பளம் போட்டுருக்கோம்னு சொன்னாராம்.

    அப்படி பார்க்கும்போது கவிதாலயா 14 லட்சம் சம்பளம் பேசினாங்களாம். அதனால ரஜினிக்கு நமக்கு ஏன் ஒன்றரை லட்சம் அதிகமா தாராங்க? தேவையில்லை அந்தப் பணம்னு அப்படியே திருப்பிக் கொடுத்தாராம். அப்படி இருக்க இப்போ மட்டும் எப்படி விஜயை விட எனக்கு அதிக சம்பளம் தந்தால்தான் நடிப்பேன்னு சொல்வார் என்று கேட்கிறார் செய்யாறு பாலு.

  • நண்பருக்காக விட்டுக் கொடுத்த பகத்பாசில்… கூலி படத்துல நடிக்காம போக அதான் காரணமா?

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் கூலி. இந்தப் படம் வரும் ஆகஸ்டு 14ல் வெளிவர உள்ளது. நாகர்ஜூனா, சௌபின் சாகிர், சத்யராஜ், உபேந்திரா, அமிர்கான், சுருதிஹாசன் என பல பெரிய பிரபலங்கள் நடிப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்தப் படத்தின் சிக்கிடு சிக்கிடு பாடலும், மோனிகா பாடலும் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மோனிகா பாடலில் சௌபின் சாகிரின் டான்ஸ் பிரபலமாகி உள்ளது. இவர் நடிக்க பகத்பாசில் தான் விட்டுக்கொடுத்தாரா என்று பார்க்கலாம்.

    கூலி படத்து மோனிகா பாட்டைப் பார்த்து பகத்பாசில் தான் டிஸ்டர்ப் ஆகியிருக்காருன்னு சொல்றாங்க. சௌபின் சாகிர் அந்தப் பாட்டுல ஆடி அது கேரளாவுல பட்டையைக் கிளப்பி வருகிறது. அதுல ரஜினி வருவாருன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்குத் தான் ஏமாற்றம். ஆனா சௌபின் சாகருக்குக் கிடைத்த பெருமைகள் பகத்பாசிலுக்கு வரவேண்டியது. அவருதான் அந்தக் கேரக்டர்ல நடிக்கிறதா இருந்துச்சாம்.

    அவரு அந்த நேரத்துல தான் மாரீசன் கதையையும் கேட்டாராம். அப்போ கூலி படத்தோட அந்தப் படத்துக் கதையை ஒப்பிட்டுப் பார்த்துருக்காரு. கூலியை விட மாரீசன்ல தான் நமக்கு நடிக்கறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்குன்னு அந்தப் படத்துக்குப் போயிட்டாராம். இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ரஜினி படம்னு நம்பி வேட்டையன் கதையாகி விடக்கூடாது.

    இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. பகத்பாசிலும், சௌபின் சாகிரும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் சேர்ந்து படங்கள் எல்லாம் தயாரித்துள்ளார்களாம். இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. அதனால பகத்பாசில் தான் எனக்குக் கிடைச்ச வாய்ப்புல நீ நடின்னு விட்டுக் கொடுத்துருப்பாருன்னும் சொல்லப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் அந்தனன், பிஸ்மி மற்றும் சக்திவேல் ஆகியோர் கலந்துரையாடலின்போது பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ணதில்ல.. ‘கூலி’ படத்தில் கமல் சிபாரிசு செய்த நடிகர்

    ரஜினி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், சுருதிஹாசன் என எண்ணற்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னாடி படத்தின் ப்ரிவியூ ஈவண்டை நடத்த படக்குழுவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    லோகேஷ் படம் என்றாலே கேங்ஸ்டர், வன்முறை என ஒரு பெரிய கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் ரனியை வைத்து பக்கா கமெர்ஷியல் பேக்கேஜாக இந்தப் படத்தை லோகேஷ் கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பெரிய ஸ்டார்க்ள் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் கூலி படம் 1000 கோடியை நெருங்குமா என்றும் ஆரவமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏனெனில் கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்கள் 1000 கோடியை அசால்ட்டாக தொட்டு விட்டன. ஆனால் பெரிய சூப்பர்ஸ்டார்கள் கோலிவுட்டில் இருந்தும் இன்னும் அந்த வசூலை தொடவில்லை. கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்தான் 600 கோடிக்கும் மேலாக வசூல் செய்து பெரிய சாதனையை பெற்றது.

    அதனால் 1000 கோடியை ரஜினியின் கூலி படம்தான் நெருங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கூலி படத்தில் எம்ஜிஆரின் வளர்ப்பு பேரன் ஜூனியர் எம்ஜிஆர் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அவரை சிபாரிசு செய்ததே கமல்தானாம்.

    விக்ரம் படத்தின் போதே லோகேஷிடம் ஜூனியர் எம்ஜிஆரை சிபாரிசு செய்திருக்கிறார் கமல். ஏதாவது கேரக்டர் வந்தால் சொல்கிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். அதன் பிறகு லியோ படமும் வந்து லோகேஷ் இவரை அழைக்கவே இல்லையாம். ஆனால் லோகேஷுடன் தான் ஜூனியர் எம்ஜிஆர் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவாராம். அப்போது வாய்ப்பு பற்றி கேட்டிருக்கிறார் ஜூனியர் எம்ஜிஆர்.

    junior mgr

    junior mgr

    மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ண மாட்டார். உன்னை பண்ணியிருக்கிறார். மறப்பேனா? கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் கூலி படத்தில் ஜூனியர் எம்ஜிஆருக்கு வாய்ப்பு கொடுத்தாராம் லோகேஷ்.

  • 1000 கோடி வசூலில் மண்ணள்ளி போட்ட லோகேஷ் கனகராஜ்… கொந்தளித்த பிரபலம்

    தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தற்போது பான் இந்திய அளவில் உருவாகியுள்ளது. இசை அனிருத் அமைத்திருக்கிறார். ரஜினியுடன் இது இவருக்கு 5வது படம். இவர்களது கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து ஆல்பமும் மிகப்பெரிய வெற்றியடைந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

    அந்த வகையில் கூலி படத்திலும் வெளியான மூன்று பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக ”மோனிகா” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். தற்போது கடைசியாக வெளியாகி உள்ள ”பவர் ஹவுஸ்” பாடல் ரஜினிக்கு மாஸான பாடலாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பாடலாகவும் இருந்தது. படம் வருகிற 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் வீவ்ஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது.

    பொதுவாக ஒரு ட்ரெய்லரை பொறுத்தவரை அதனை பார்த்தாலே படத்தின் கதையை கணித்து விடலாம். ஆனால் கூலி ட்ரைலரை யாரும் டி-கோர்ட் செய்ய முடியாத அளவுக்கு கட் செய்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் கூட அனிருத் பேசிய நேர்காணல் ஒன்றில் கூலி ஒரு இன்டலிஜென்ட் படம் என்று சொல்லியிருந்தார். அதேபோல‌ ட்ரைலரும் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படங்களில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அவர்களுக்கான ஈக்குவல் ஸ்பேசை ரைட்டிங்கில் கொடுத்திருப்பார்.

    படத்தில் கொஞ்ச நேரம் வரும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதன் வீரியம் ஒரு படம் முழுதும் நடித்தது போல இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வடிவமைப்பது லோகேஷுக்கு கைவந்த கலை. கூலி படத்திலும் அது தொடர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. மேலும் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஆயிரம் கோடி வசூல் சாதனையை இந்த படம் பெரும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை இந்நிலையில் கூலி படத்தை குடும்பமாக பார்க்க முடியாமல் செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்று கொந்தளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகர்மான செய்யாறு பாலு . மேலும் அவர் கூறியதாவது

    “கூலி படத்திற்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் 18 வயது கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க பட மாட்டார்கள். அதனால் இந்த படத்திற்கு டிக்கெட் புக் செய்தவர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றால் தியேட்டர் நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இப்பொழுது இதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. காலா, கபாலி, ஜெய்லர் படம் எல்லாம் எவ்வளவு வன்முறையாக இருந்தது. அந்தப் படத்திற்கே ‘U’ , ‘U\A’ கிடைத்தாலும் இந்த படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

    இதனால் குடும்பமாக வரக்கூடிய ரசிகர்கள் குறையக்கூடும் அப்படி குறையும் பட்சத்தில் வசூல் குறையும் தமிழ் சினிமாவில் சமீபத்திய இந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வசூல் வேட்டை நடத்தியதில்லை. கூலி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, இப்போ அதில் மண் அள்ளி போட்டது போல் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் நினைத்திருந்தால் இந்த படத்திற்கு காம்பரமைஸ் செய்து அதிக வன்முறை காட்சிகளை நீக்கி இருக்கலாம். இதனால் ‘U’ அல்லது ‘U\A’ சான்றிதழ் கிடைத்திருக்கும். ஆனால் அவர் எந்தவித காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தயாராக இல்லை. என்று சொல்லிவிட்டார்.

    இதனால் சோசியல் மீடியா முழுவதும் லோகேஷ் மீது மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் விஜய் உடைய ஆளு ரஜினிக்கு எதிரா இப்படி பண்ணி இருக்காரு. ஆயிரம் கோடி வசூல் அடிக்க கூடாது என்று வேண்டுமென்றே செய்கிறார். என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளை அடிக்கி வருகின்றனர். குறிப்பாக ரஜினி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு தான் இதை செய்திருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • Coolie: தலைவர் பட ப்ரோமோஷன்.. லோகேஷே இவர்கிட்டதான் அனுமதி கேட்கணுமா?

    தற்போது கூலி படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் ஸ்ருதிஹாசன் இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் என எந்த யூட்யூப் சேனலை ஓப்பன் பண்ணாலும் இவர்களின் பேட்டிதான் போய்க் கொண்டிருக்கின்றது.லோகேஷ் இயக்கத்தில் ரஜினி. ஏற்கனவே ரஜினி என்றாலே மாஸ் ஸ்டைல். அதில் லோகேஷ் ரஜினியை எந்தளவுக்கு மாஸா காட்டியிருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆகஸ்ட் 14 ஆம் தேதி நெருங்கும் வேளையில் படத்தின் ஹைப்பும் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அதற்கு காரணம் லோகேஷ் கொடுக்கும் பேட்டிதான். இந்தப் படத்தில் ரஜினியை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என நினைத்தோமோ அப்படியெல்லாம் இருப்பார் என்றும் லோகேஷ் கூறியிருக்கிறார். ரஜினியுடன் இணைந்து பல பெரிய பெரிய நடிகர்களும் படத்தில் இருப்பது கூடுதல் பலமாக இருக்கின்றது.

    ப்ரீ புக்கிங்கில் கூலி படம் வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏ சர்டிஃபிக்கேட் படத்திற்கு கொடுத்ததுதான் பெரிய வருத்தம்.என்ன இருந்தாலும் ரஜினி படத்திற்கு என தனி மவுசுதான். இந்த நிலையில் லோகேஷ் அடுத்து எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற ஆர்வமும் அனைவருக்கும் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு பிறகு கண்டிப்பாக கைதி 2 திரைப்படம்தான்.

    ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்க இன்னும் 8 மாதங்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார் லோகேஷ். அதற்கு முன்பாக அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் தான் இயக்க இருக்கிறார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத்தான் இருக்கப் போகிறது. அதற்காக லோகேஷை மூன்று மாதங்கள் முடி வெட்டக் கூடாது, ஷேவ் செய்ய கூடாது என்றெல்லாம் அருண் மாதேஸ்வரன் கூறியிருந்தாராம்.

    arun
    arun

    அதனால் கூலி படத்தின் படப்பிடிப்பின் போது கூட லோகேஷ் அதிகமான முடி தாடியுடன் தான் இருந்தாராம். ஆனால் இப்போது கூலி பட ப்ரோமோஷன் இருப்பதால் அருண் மாதேஸ்வரன் லோகேஷுக்கு அனுமதி கொடுத்திருக்கிறாராம். அதாவது லைட்டாக முடி வெட்டிக் கொள் மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள் என்று அனுமதி கொடுத்திருக்கிறாராம். அதனால் தான் இப்படி இருக்கிறேன் என லோகேஷ் கூறினார்.

  • ‘கூலி’க்கு இருக்கும் மிகப்பெரிய சவால்! அமீர்கான் உள்ள வந்த காரணம் இதானா?

    ரிலீஸ் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படம் கூடவே மிகப்பெரிய சவாலையும் சந்திக்க இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டிரைலர் டீசர் என எதுவுமே ரிலீஸ் ஆகாத நிலையில் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் உருவாகி இருக்கிறது. அதற்கு காரணம் முதன்முறையாக லோகேஷ் மற்றும் ரஜினி இணைந்திருப்பது தான் என ஒரு பேட்டியில் அனிருத் கூறினார்.

    ஏற்கனவே அனிருத் லோகேஷ் இருவர் இணையும் படங்களில் அதனுடைய பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆகும். அந்த வகையில் கூலி திரைப்படத்திலும் மோனிகா பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. எக்கச்சக்க நட்சத்திர பட்டாளங்களுடன் இந்த படம் வெளியாக இருக்கின்றது. அதனால் இந்த படம் ஆயிரம் கோடியை நெருங்குமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழ் சினிமா இன்னும் ஆயிரம் கோடி நிலைக்கு வரவில்லை .

    ரஜினி நடித்தால் அது ஆயிரம் கொடியை தொட்டுவிடும் என்பதெல்லாம் சொல்ல முடியாது என்று கூறினார். இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஹிந்தியில் வெளியாக கூடிய வார் 2 திரைப்படம். அந்தப் படமும் கூலி ரிலீஸ் ஆகக்கூடிய அதே ஆகஸ்ட் 14ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் ரிலீஸ் ஆகின்றது. கிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

    அதனால் வட இந்தியா மற்றும் ஆந்திராவில் இந்தப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இரு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆகும் பொழுது கூலி திரைப்படத்தை விட வார் 2 திரைப்படம் சுமாராகத்தான் இருக்கின்றது என்ற ஒரு கருத்து வந்தால் தான் கூலி திரைப்படத்தின் மீது மக்களின் மொத்த பார்வையும் திரும்பும் என கூறியிருக்கிறார். இதற்கிடையில் வார் 2 திரைப்படத்திற்கு செக் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமீர்கானை லோகேஷ் உள்ளே கொண்டு வந்தாரா என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது.

    ameerkhan

    ameerkhan

    அதற்கு பிஸ்மி கூறும் பொழுது அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே லோகேஷ் மற்றும் அமீர் கான் சந்திப்பு நடந்திருக்கிறது. அமிர்கானை வைத்து லோகேஷ் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அதிலிருந்து தொடர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இந்த ஒரு நட்பின் காரணமாக கூட கூலி படத்தில் அமீர் கானை ஒரு ரோலில் நடிக்க வைக்கலாம் என்று கூட லோகேஷ் நினைத்திருக்கலாம். அப்படித்தான் உள்ளே வந்தாரே தவிர வார் 2 படத்திற்கு செக் வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அமீர்கான் உள்ளே வரவில்லை என பிஸ்மி கூறி இருக்கிறார்.

  • கூலிதான் முதல் படமா?.. A சர்ட்டிபிகேட் வாங்கிய ரஜினி படங்களின் லிஸ்ட்…

    Coolie:திரைப்படங்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டு ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ப A, U/A, U என ஏதேனும் ஒரு சான்றிதழை கொடுக்கிறது. அதை வைத்து அது என்ன மாதிரியான திரைப்படம் என ரசிகர்கள் தெரிந்துக் கொள்கிறார்கள். 90 சதவீத படங்களுக்கு UA சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. இந்த வகையான படங்களை எல்லா வயதினரும் பார்க்கலாம். A என்பது அடல்ட்ஸ் ஒன்லி அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இது வெளிநாடுகளில் படத்தின் வசூலை பாதிக்கும். ஏனெனில் இந்தியா போல் இல்லாமல் வெளிநாடுகளில் A சான்றிதழ் படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இதனால் படம் பார்க்க குடும்பத்துடன் ரசிகர்கள் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஒருபக்கம் ரஜினி நடித்த ஒரு படம் A சான்றிதழ் வாங்கியிருப்பது இதுதான் முதல் முறை. இதற்கு லோகேஷ்தான் காரணம் என சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கடநத 35 வருடங்களில் ரஜினியின் எந்த படமும் A சான்றிதழ் வாங்கியதில்லை. ஆனால் 80களில் அவர் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன், நெற்றிக்கண் போன்ற படங்களும், கடைசியாக 1989ல் வெளியான சிவா படமும் A சான்றிதழ் பெற்றுள்ளது.

    தற்போது கூலி படத்துக்கு A சான்றிதழ் கிடைத்தாலும் இது ரஜினி படம் என்பதால் பெரிதாக வசூலை பாதிக்க வாய்ப்பில்லை. சில வெளிநாடுகளில் மட்டுமே பாதிப்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. கூலி படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.