Tag: DD next level

  • ஆமையுடன் கடலில் ரேஸ் விட்ட பிக் பாஸ் வர்ஷினி.. நீச்சல் உடையில் சும்மா இணையத்தையே சூடாக்குறாரே!..

    ஆமையுடன் கடலில் ரேஸ் விட்ட பிக் பாஸ் வர்ஷினி.. நீச்சல் உடையில் சும்மா இணையத்தையே சூடாக்குறாரே!..

    நடிகை வர்ஷினி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது நீச்சலுடையில் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் அவரது வீடியோ வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

    வர்ஷினி ஒரு நடிகை, மாடல் மற்றும் பாடகி ஆவார். இவர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், வெறும் 22 நாட்களில் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த காதல் ஜோடிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பங்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதால், சிலரால் விமர்சிக்கப்பட்டார். அதே சமயம், அவரது கவர்ச்சியான தோற்றத்திற்காக அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது.

    மேலும், கடந்த ஆண்டு சந்தானம் நடித்த DD Next Level படத்தில் சிறிய ஆனால் கவர்ச்சியான காட்சியில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சொட்ட சொட்ட நனையுது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு, தன்னிடம் வரும் பட வாய்ப்புகளை வர்ஷினி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

    சமீப காலமாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அவர், தற்போது பிகினி உடையில் கடலில் மீன்கள் மற்றும் ஆமைகளுடன் நீந்திக்கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு, மீண்டும் தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்த சம்மருக்கு ஏற்ற சரியான வீடியோ இதுதான் என்றும் அந்த ஆமை போலவே உங்க பிகினியும் இருக்கு, மீன், ஆமையெல்லாம் கடித்து விடாதா, பயமே இல்லை உங்களுக்கு என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

  • ஒரே பார்ட்டி மோடுதான் போல!.. முன்னாடியே ஜன்னல் வச்சிட்டாரே!.. யாஷிகா ஆனந்தின் கண்கொள்ளா காட்சி!..

    சந்தானத்துக்கு தங்கச்சியாக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய யாஷிகா ஆனந்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வருவதாக கூறுகின்றனர். பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான இவர், கவலை வேண்டாம் படத்தில் ஸ்விம்மிங் பூல் டிரெய்னராக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

    இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இவர் பேசிய டபுள் மீனிங் வசனமெல்லாம் இன்றைக்கும் பெண்கள் மத்தியில் பிரம்மிப்பாகவே பார்க்கப்படும் வசனங்கள் தான். கவர்ச்சி படங்களை தாண்டி பேய் படங்கள் என்றாலே யாஷிகாவுக்கு ஒரு ரோல் கொடுங்கப்பா என ஜாம்பி, டிடி நெக்ஸ்ட் லெவல் என பல பேய் படங்களிலும் நடித்து வருகிறார்.

    சினிமாவில் மற்ற பிக் பாஸ் நடிகைகளை கம்பேர் பண்ணும் போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகையாகவே யாஷிகா ஆனந்த் இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து இயக்கிய பஹீரா படத்திலும் நடித்திருந்தார். லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த படத்தில் முதல் பாடலுக்கு நடனமாடிய இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்திருந்தார்.

    ரெசார்ட் ஒன்றில் பார்ட்டி மோடில் செம வைபாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் படுகவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து இளைஞர்களின் இரவு தூக்கத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்துவிட்டார். ஜன்னல் வச்ச ஜாக்கெட் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்னம்மா முன்னாடியே ஜன்னல் வச்சு டிரெஸ் போட்டிருக்க என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • சுந்தர்.சி, சந்தானம் படங்கள் தோல்வி!.. ஓவர் கான்பிடஸ் உடம்புக்கு ஆகாது!…

    ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் படம் எடுக்கும்போதே அது வெற்றியா தோல்வியா என்பதை கணிக்க முடியாது. சில படங்கள் எடுக்கும்போது ‘இந்த படம் கண்டிப்பாக ஹிட்’ என்றே நினைப்பார்கள். ஆனால், படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது. சில படங்கள் எடுக்கப்படும்போது ‘இந்த படம் ஓடாது’ என இயக்குனரே நினைப்பார்.

    ஆனால், படம் சூப்பர் ஹிட் அடித்துவிடும். சினிமாவில் அதை கணிக்கவே முடியாது. வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கிய எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. காதல் கலந்த காமெடி படங்களை எடுப்பதுதான் இவரின் ஸ்டைல்.

    சுந்தர்.சி படமென்றால் குடும்பத்தோடு சென்று சிரித்துவிட்டு வரலாம் என்கிற இமேஜை உருவாக்கியதுதான் சுந்தர்.சியின் வெற்றி. இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இவர் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய மதகஜராஜா படம் கடந்த பொங்கலில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்தார். இந்த வெற்றியை சுந்தர்.சி-யே எதிர்பார்க்கவில்லை.

    அதேபோல், காமெடி நடிகராக பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிக்க துவங்கி மன்மதன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். ஆனால், திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என சொல்லி நடிக்க துவங்கிவிட்டார். ஆனால், அதில் பல படங்கள் ஓடவில்லை. அந்த நிலையில்தான் அவர் நடித்த மதகஜராஜா படம் வெளியாகி வெற்றி பெற்றது.

    இந்நிலையில்தான் சுந்தர்.சி வடிவேலுவை நம்பி இயக்கி நடித்த கேங்கர்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 11 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேபோல், சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் தோல்வி அடைந்திருக்கிறது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 18 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

    ஒரு படம் ஹிட் அடித்துவிட்டதால் சுந்தர்.சியும், சந்தானமும் ஓவர் கான்பிடன்ஸில் நடித்து தோல்வி கொடுத்திருக்கிறார்கள். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் நடிக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

  • ஆர்யா காசுல ஜோரா புது வீடே கட்டிட்டாரே சந்தானம்!.. சிறப்பாக நடைபெற்ற புதுமனை புகுவிழா!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில் சந்தானம் தனது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் சச்சின், பொல்லாதவன், பில்லா, அழகிய தமிழ் மகன், சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

    முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தயாரிப்பாளராகவும், கிக் என்ற படத்தில் பாடகராகவும் அவதாரமெடுத்தார்.

    சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ லாஞ்சில் சந்தானம் நான் புதுசா வாங்குன வீடு நல்லாவே இல்லைன்னு சொல்லி, ஆர்யா அந்த வீட்ட இடிச்சிடுன்னு சொல்லி இடிச்சிட்டான், எங்க அம்மாவும் மணைவியும் வெள்ளிக்கிழமையான விளக்கு ஏத்த அந்த வீட்டுக்கு போவாங்க , அப்படி அவங்க போயிட்டு வீட காணும்னு தேடிட்டு இருந்தாங்க என பேசியிருந்தார்.

    இந்நிலையில் இடிச்ச இடத்தில் ஒரு புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையே நடத்தியுள்ளார் சந்தானம். அவர் கோமாதா பூஜை செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தை வைத்து ஆர்யா டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்தது மட்டுமின்றி சந்தானத்தின் கடன் சுமைகளையும் போக்கியிருந்தார்.

  • சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

    நடிகர் சந்தானம் நடிப்பில் சென்ற மே மாதம் 16ம் தேதி வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் வசூலை அள்ளியது. இந்iநிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒடிடி ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக நீக்கப்பட்டது.

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராகவும் இப்படத்தில் ஒரு முகம் தெரியாத இயக்குனர் அழைத்ததற்காக மர்மமான திரையரங்கிற்கு செல்கிறார். பின்னர் திரைப்படம் தொடங்கியதும் சந்தானமும் அவர் குடும்பமும் படத்திற்குள் மாட்டிக்கொள்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்ற, மர்மமான புதிர்களை தீர்த்து, ஆவியின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்று கதை செல்கிறது. இப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் திரைப்பட விமர்சகர்களை கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், ஓடிடி ரசிகர்களுக்கு நல்லாவே இந்த படம் வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆபாச காட்சிகள் பெரிதாக ஏதுமில்லை.

  • சினிமாவே வேண்டாம்னு ஓட வைப்பது விமர்சனமா?!.. புளூசட்டையை பொளந்த சந்தானம்!…

    முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்பது நியாயமாக இருந்தது. விமர்சனம் பற்றி ஒருமுறை கருத்து சொன்ன நடிகர் திலகம் சிவாஜி ‘ஒரு காட்சி சரியாக எடுக்கப்படவில்லை என்று சொன்னால் அது விமர்சனம். நாமும் அதிலிருந்து கற்றுக்கொண்டு நம்மை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கழுத்தை நெறிப்பது போல கருத்து சொன்னால் அது விமர்சனம் இல்லை’ என சொல்லி இருந்தார்.

    விமர்சனம் என்பது படத்தில் இருக்கும் குறைகளை யாரையும் காயப்படுத்தாமல் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் புதுப்படங்கள் வெளியானால் அந்த படத்தில் விகடன் வார இதழ் எப்படி விமர்சனம் செய்கிறார்கள்?. எவ்வளவு மதிப்பெண் கொடுக்கிறார்கள் என பார்ப்பார்கள். அதிக மதிப்பெண் கொடுத்தால் அதையே போஸ்டரில் போட்டு விளம்பரத்திற்கு பயன்படுத்துவார்கள்.

    ஆனால், யுடியூப் சேனல்களில் பலரும் புதிய படங்களை விமர்சனம் செய்ய துவங்கிய பின் விமர்சனங்களின் தரமே தாழ்ந்துவிட்டது. ஏனெனில் எல்லோருமே நியாயமான விமர்சனத்தை செய்வது இல்லை. காசு வாங்கிக்கொண்டு மொக்கை படத்தையும் நன்றாக இருப்பதாக கூட சிலர் வீடியோ விமர்சனம் போடுகிறார்கள்.

    இதில் புளூசட்டமாறன் வேற ரகம். இவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட கலைப்படங்கள் மட்டுமே பிடிக்கும். ஆனால், 95 சதவீதம் மசாலா படங்கள்தான் வெளியாகிறது. ஏனெனில், மசாலா படங்கள்தான் வசூலை அள்ளி எல்லோருக்கும் லாபம் கொடுக்கும். ஆனால், மசாலா படங்களை மாறன் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார். இவரின் யுடியூப் சேனலை சில லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

    எனவே, படங்களை திட்டுவதையே விமர்சனமாக பேசி கல்லா கட்டி வருகிறார் மாறன். இவர் மீது பல இயக்குனர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்களும் நடந்தது. விஜய், ரஜினி, அஜித் என யாருடைய படங்களாக இருந்தாலும் சகட்டுமேனிக்கு நக்கலடித்து விமர்சனம் செய்து புளூசட்டமாறனின் ஸ்டைல். நடிகர்களின் தோற்றம் பற்றியும் விமர்சனம் செய்வார். வலிமை படம் வெளியானபோது அப்படத்தில் அஜித் ‘பஜன்லால் சேட்’ போல இருக்கிறார் என நக்கலடித்தவர் இவர்.

    இந்நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம் ‘ஒரு படத்தின் விமர்சனம் என்பது அப்படத்திற்கு துடுப்பு மாதிரி இருக்க வேண்டுமே தவிர தடுப்பாக இருக்கக் கூடாது. துடுப்பு போல படத்தை அழைத்து போக வேண்டுமே தவிர படத்தை தடுக்கக் கூடாது. ஒரு விமர்னம் ஒரு திரைப்படத்தையும், அதை உருவாக்கியவர்களையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர அவங்களை மன அழுத்தத்தில் தள்ளி இனிமே சினிமாவே வேண்டாம்னு போற விஷயமாக இருக்கக் கூடாது’ என சொல்லியிருக்கிறார்.

  • தமிழ் சினிமாவுக்கு Clash புதுசு இல்ல தான், ஆனா இவங்க Clash புதுசு… நாளை ரிலீஸாகும் திரைப்படங்கள்…

    Theatre Release: தமிழ் சினிமாவில் வாரா வாரம் படங்கள் ரிலீஸாகும். அந்த வகையில் இந்த வாரம் மோதிக்கொள்ள இருக்கும் படங்கள் குறித்த சுவாரஸ்ய அப்டேட்.

    பொதுவாக ஹீரோக்கள் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். அதுவே அவர் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்து இருக்கும். ஆனால் இந்த முறை கிளாஷ் என்பதே புதுசுதான். அதாவது காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய பிரபலங்களி படங்கள் தான் இந்த வாரம் மோதிக்கொள்ள இருக்கிறது.

    இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாதிகா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர்.

    தாய் மாமன் பாசத்தினை சொல்லும் இப்படத்தின் டிரெய்லரே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. காமெடியனாக கிடைத்த வரவேற்பை விட ஹீரோவாக படத்திற்கு படம் சூரி மெருக்கேறி கொண்டே இருக்கிறார்.

    பிரபல நடிகர் ஆர்யா தயாரிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஹாரர் மற்றும் காமெடி திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில் கௌதம் மேனன், யாஷிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் டிரெய்லரில் உயிரின் உயிரே பாடலுக்கு கௌதம் மேனன், யாஷிகா காட்சிகளே பெரிய அளவில் வைரலாகியது. வித்தியாசமாக செல்வராகவன் படத்தின் பேயாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    காமெடி ரோலில் நடித்து ஹிட்டடித்து வரும் மூன்றாவது காமெடி பிரபலமான யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ஜோரா கையை தட்டுங்க திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. மேஜிக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    காமெடி ஹீரோக்கள் மூவரின் திரைப்படமும் நாளை ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் இந்த ரேஸில் ஜெயிக்க இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? டிடி நெக்ஸ்ட் லெவலுக்குப் பட்டும் படாமலும் ஒரு ரிவியு

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, கௌதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பற்றி பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இது குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. காமெடி அட்டகாசம். செகண்ட் ஆஃப் சூப்பர் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

    ஒரு படத்தை எவ்வளவோ கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் முதலீடு போட்டு தயாரிப்பாளர் எடுக்குறாரு. அதை ஈசியா விமர்சனம் செய்து விட்டு படத்தை ஓட விடாமலும் சிலர் செய்கிறார்கள். அதே நேரம் எந்த விமர்சகர்களாலும் நல்லா இருக்குற படத்தை ஓட விடாமல் செய்ய முடியாது. அதே நேரம் நல்லா இல்லாத படத்தை ஓடவும் செய்ய முடியாது. அப்படின்னு பலமாக இந்தப் படத்தில் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

    இந்தப் படத்தில் சந்தானம் தான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். படத்தில் நிழல்கள் ரவி காமெடி எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. கௌதம் மேனனை உயிரின் உயிரே பாடலுக்கு ஆட விட்டுருக்கிறார்கள். காமெடியும், ஹாரரும் படத்தில் ஒட்டவில்லை. அப்படியே படத்தின் கதை ஜம்ப் ஆகியபடியே இருக்கிறது.

    சின்ன சின்ன கேரக்டர்களில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாகச் சொல்லணும்னா வடக்குப்பட்டி ராமசாமியில் கூல் சுரேஷின் கேரக்டர் கூட சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த வகையில் படத்தில் அது மிஸ் ஆகி உள்ளது. மற்றபடி டெக்னிக்கல் லெவலில் சூப்பர். படத்தின் கதை கேட்க பிரமாதம். எடுக்கப்பட்ட விதத்தில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது.

    தப்பு தப்பாக ரிவியு சொல்லும் விமர்சகர்களை ஒரு தியேட்டர் ஓனர் பேயாக வந்து பழிவாங்கும் கதை. படத்தில் செல்வராகவன் தான் தியேட்டர் ஓனர். அவர் விமர்சகர்களை எல்லாம் திட்டுறாங்க. அவரையும் ஒரு கட்டத்தில் கொன்று விடுகிறார்கள். செல்வராகவன் பேயாக மாறி விமர்சகர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்.

    அதில் ஒருவர் சந்தானம். அது ஒரு பாழடைந்த தியேட்டர். அங்கு போனதும் சந்தானத்தின் ஃபேம்லி என்ன ஆகிறது? படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவராக காலியாகிறார்கள். தாக்குப்பிடித்தால் அவர்கள் தப்புவார்கள் என்பதுதான் கதை. ஓடாத படத்தை எந்த ரிவியூவராலும் ஓட வைக்கவே முடியாது.

    ஓடும்னு இருந்தா அதை இன்னும் கொஞ்சம் பூஸ்ட் பண்ணி ரிவியூவர்ஸ் ஓட வைக்கலாம். இந்தப் படம் ஜாலியாக சிரித்து விட்டு வர வைத்ததா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • சூரியின் மாமனை ஓவர்டேக் செய்த சந்தானம்!.. செகண்ட் ஹாஃப் செம காமெடி.. டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்!

    தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண் கலங்க வைத்து செல்ல சூரி இந்த வாரம் மாமன் படத்தைக் கொடுத்துள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் கிஸ்ஸாவாக கொடுத்துள்ளார்.

    தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 பாணியில் ஹாரர் படங்களை ஸ்பூஃப் செய்யும் படமாகவே இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியிருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஏகப்பட்ட பேய் காட்சிகளை வைத்து அடுத்த அடுத்த ரவுண்டுக்கு செல்ல வைத்து சிரிப்பு மூட்டிய பிரேம் ஆனந்த் இந்த முறை விமர்சகர் மற்றும் அவரது குடும்பத்தையே ஹிட்ச்காக் இருதயராஜாக வரும் நம்ம செல்வராகவன் தூக்கிக் கொண்டு போய் ஒரு படத்துக்குள் போட அங்கே இருந்து ஹீரோ எப்படி எஸ்கேப் ஆகிறார் என்பதையும் தனது குடும்பத்தையும் காதலையும் காப்பாற்றினாரா என்பதையும் கதையாக வடிவமைத்துள்ளார்.

    படத்திற்குள் ஹீரோவாக வரும் கெளதம் மேனன், ஹீரோயினாக வரும் யாஷிகா ஆனந்த் ரொமான்ஸ் எல்லாமே செம காமெடி. கஸ்தூரி வழக்கம் போல அதிகமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். நிழல்கள் ரவி எல்லாம் எப்பேர்பட்ட வில்லன் தெரியுமா? அவரையும் சந்தானம் தேவயானி புருஷன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்.

    சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷன் தில்லுக்கு துட்டு படத்தில் இருந்து டிடி நெக்ஸ்ட் லெவல் வரை பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. லொள்ளு சபா மாறனை டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியளவுக்கு இதில் பெரிதாக பயன்படுத்தவில்லை. ரெடின் கிங்ஸ்லி ஃபேனில் சுற்றுவது, தலைகீழாக நடப்பது என கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

    முதல் பாதியில் இந்த படமும் கதையை நோக்கி நகர்வதால் இடைவேளைக்கு முன்பு தான் மஞ்சுமெல் பாய்ஸ் காமெடியை வைத்து ஓட்டிய இயக்குநர், இரண்டாம் பாதியில் மீண்டும் டிடி ரிட்டர்ன்ஸ் ரூட்டை கையிலெடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். அதிலும், அந்த ஸ்லோமோஷன் சீனெல்லாம் செம மேட்டர்.

    நடிகர் ஆர்யா நண்பன் சந்தானத்தை நம்பி போட்ட காசு கோவிந்தா சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து விடும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் சம்மருக்கு ஏற்ற சிரிப்பு சரவெடி.

    ரேட்டிங்: 3.25/5

  • படத்துல என்னென்னமோ பண்றாங்க சிரிப்பு தான் வரல…! டிடி நெக்ஸ்ட் லெவல ரெண்டா பொளந்த புளூசட்டைமாறன்

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து நேற்று வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இது ஒரு ஹாரர் காமெடி படம். தில்லுக்கு துட்டு சீரியஸின் 4வது படமாக வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கீர்த்திகா திரிவேதி ஜோடி. தவிர லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் சுமார்தான். இந்தப் படம் எப்படி இருக்குன்னு பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

    இது ஒரு பேய் படம். பேய் படம்னா வழக்கமா ஊருக்கு ஒதுக்குப்புறத்துல பாழடைஞ்ச பங்களா இருக்கும். அங்கு தேவையா இருந்தாலும், தேவையில்லன்னாலும் நாலு பேர் போவாங்க. அவங்களை அந்தப் பேய் பாடாப்படுத்தும். அந்தப் பேய்க்கு ஒரு பிளாஷ்பேக் சொல்வாங்க. அது என்ன? அந்தப் பேய்க்கிட்ட இருந்து தப்பிச்சி வந்தாங்களாங்கறது தான் கதையா இருக்கும்.

    படத்தோட ஹீரோ சந்தானம் மொக்கை படங்களை எல்லாம் பார்த்துட்டு கழுவி கழுவி ஊத்துற ரிவியூவர். இன்னொரு பக்கம் இந்த ரிவியூவர்களை எல்லாம் ஒரு இடத்துக்கு வரவழைச்சி பழிவாங்குற பேய். நீ படங்களை எல்லாம் கழுவியா ஊத்துற? உன்ன என்ன பண்ணுறேன் பாருன்னு ஹீரோவையும், அவரு ஃபேம்லியையும் அந்தப் படத்துக்குள்ள தள்ளி விட்டுருது.

    அந்தப் படத்துல ஒரு பாழடைஞ்ச பங்களா இருக்கு. அங்கு ஒரு பேய் ஒவ்வொருத்தரையா பழிவாங்குது. தமிழ்சினிமாவுக்குள்ள சினிமாவுக்குள்ள சினிமான்னு படம் எடுப்பாங்க. அது ஓடுனது இல்லை. இந்தப் படத்துல சினிமாவுக்குள்ள சினிமா எடுப்பாங்க. அதுல வர்ற டெக்னிகல்லான விஷயங்களை வச்சி காமெடி பண்ணுவாங்க.

    அது எல்லாருக்கும் புரியாது. சினிமாவைத் தெரிஞ்சவங்களுக்குப் புரியும். மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளுசபா மாறன் காமெடி நல்லாருக்கும். போன படம் டிடி ரிட்டர்ன்ஸ்ல லாஜிக் முடிஞ்சளவு பண்ணிருப்பாங்க. எல்லா கேரக்டர்சுக்கும் முக்கியத்துவம், காமெடி இருக்கும். ஆனா இதுல மெய்ன் கேரக்டர் சந்தானம் பண்றதே சிரிப்பு வரல. செல்வராகவன் பேய் கேரக்டர்ல வர்றாரு. அதுக்கு என்னதான் நோக்கம்னு தெரியல.

    என்னென்னமோ காமெடி பண்ண முயற்சிக்கிறாங்க. சிரிப்புதான் வரல. எலி காமெடி, சந்திரகிரகணம் காமெடி எல்லாம் ரசிக்கற மாதிரி இருக்கு. டெக்னிக்கல், மேக்கிங் நல்லாருக்கு. படத்துல நல்ல கதை. ஆனா இதை இன்னும் கொஞ்சம் காமெடியா எடுத்துருக்கலாம். இதுல சிரிப்பு வருதுன்னாலும் குபீர் சிரிப்பு வரல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.