Tag: dhruv vikram

  • சியானுக்கு ஹிட் கொடுக்குமா துருவ நட்சத்திரம்?.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!..

    சியானுக்கு ஹிட் கொடுக்குமா துருவ நட்சத்திரம்?.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!..

    கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம், சூர்யாவை வைக்க எடுக்க திட்டமிட்டு அவர் இந்த படத்திலிருந்து விலக சீயான் விக்ரமை வைத்து இந்த படத்தை இயக்கினார் கௌதம் மேனன். படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான நிலையில் கௌதம் மேனன் வாங்கிய சில கோடி கடன்களால் இந்த படத்தை வெளியிட முடியவில்லை. அவரும் பலமுறை முயன்றும் இந்த படம் இப்போது வரை ரிலீஸாகவில்லை.

    இந்நிலையில்தான், சமீபத்தில் இந்த படம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் இந்த படத்திற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஒருபக்கம் படம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள Spy Thriller படமாக துருவ நட்சத்திரம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என படக்குழு நம்புகிறது. அதோடு ஜெயிலர் பட வில்லன் வினாயகன் இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறாராம். இந்த படம் வெளியானால் அவரும் ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள்..

    மொத்தத்தில் துருவ நட்சத்திரம் படம் சியான் விக்ரம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியும் கொடுத்துள்ளது. கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அந்த குறையை துருவ நட்சத்திரம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ அவர்தானாம்!… ஹீரோயின் யார் தெரியுமா?..

    தமிழ் மட்டுமில்லாமல் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய நாயகன் இந்திய சினிமாவில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது. மேலும் ரோஜா, பம்பாய், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களும் தேசிய அளவில் கவனம் பெற்றன.

    அழகான காதல் கதை என்றாலும், மத தீவிரவாத கதை என்றாலும் பக்கா ஆக்‌ஷன் படம் என்றாலும் அசத்தலாக எடுப்பார். எம்.ஜி.ஆர் – கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து இருவர் எடுத்து காட்டினார். இதயத்தை திருடாதே, அலைபாயுதே, ஓகே கண்மணி, உயிரே என காதல் ரசம் சொட்ட சொட்ட படம்மெடுக்கும் இயக்குனர் இவர்.

    எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் முயன்று எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து காட்டி அதில் வெற்றியும் பெற்றார். அதன்பின் கமலை வைத்து தக் லைப் படத்தை இயக்கினார். 38 வருடங்களுக்கு பின் கமலும், மணிரத்னமும் இணைந்ததால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம் வெளீயான பின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். ரொமாண்டிக் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக இப்படத்தை மணிரத்னம் உருவாக்கவுள்ளாராம். படத்தின் ஷுட்டிங் வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதெல்லாம் தேவையில்ல… வாயை கூட திறக்காமல் விக்ரம் மகனுக்கு பாலா கொடுத்த நோஸ்கட்..

    இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. தனது வித்தியாசமான படைப்புகள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் இயக்கியது மொத்தமே எட்டு திரைப்படங்கள் என்றாலும் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது.

    இவர் கடைசியாக இயக்கிய நாச்சியார் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்கின்ற திரைப்படத்தை இயங்கினார். அந்த திரைப்படம் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்காக கதை எழுதாமல் தனது கதைகளுக்கு சரியான நடிகரை தேர்வு செய்து அவர்களிடமிருந்து வேலை வாங்கக்கூடிய ஒரு திறமையான இயக்குனர்.

    இவர் படங்களில் நடித்த பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்துக் கொடுத்தவர் இயக்குனர் பாலா. தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டுதான் என்று கூறி வந்த நிலையில் சமீப நாட்களாக இவர் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். பின்னர் சினிமா வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்கின்ற பெயரில் ரீமேக் செய்திருந்தால் இயக்குனர் பாலா. இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படம் வெளியிட்டு இருக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் விக்ரம் படத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டார்.

    dhruv vikram

    dhruv vikram

    வாழ்க்கை கொடுத்த இயக்குனரையே விக்ரம் அவமானப்படுத்தி இருந்தது பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பாலா அது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாகிவிட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யாவை வைத்து படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென்று சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

    இதற்கு பாலா தான் காரணம் என்று பலரும் கூறி வந்தார்கள். இந்த சர்ச்சைக்கும் சமீபத்தில் வணங்கான் ஆடியோ லான்ச் விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா மற்றும் பாலா. ஒரு வழியாக இந்த திரைப்படத்தை அருண் விஜயை வைத்து எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் பாலா. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

    அந்த வகையில் இயக்குனர் பாலா தற்போது பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் தனது திரை வாழ்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அப்படி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாலாவிடம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுக்கப்பட்ட வர்மா திரைப்படத்தின் சில காட்சிகளில் அப்படியே சேது படத்தில் விக்ரமை பார்ப்பது போன்று இருப்பதாக ஆங்கர் கூறியிருந்தார்.

    அதற்கு பாலா அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அடுத்த கேள்வியை கேளுங்கள் என்று கூறிவிட்டார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இதற்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் விக்ரம் குறித்த கேள்விக்கும் எந்தவித பதிலையும் அவர் அளிக்கவில்லை.

    தற்போது அவரது மகன் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பாலா இருந்தது இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை வெளிக்காட்டுகின்றது. தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனரையே விக்ரம் அவமானப்படுத்தி இருக்கின்றார். அதனால் தான் பொதுவெளியில் அவரை குறித்து பேசுவதற்கு பாலா முன் வரவில்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

  • வேள்பாரி வேலைக்கு ஆவாது!.. வாரிசு நடிகருடன் இணையும் ஷங்கர்!. பரபர அப்டேட்!..

    Director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் திரைப்படமே அதிக பட்ஜெட்டில் உருவானதால் தொடர்ந்து எல்லா படங்களையும் அதிக பட்ஜெட்டுகளிலேயே எடுத்தார். காதலன், ஜீன்ஸ், இந்தியன் என மெகா பட்ஜெட் படங்களை இயக்கியவர் இவர்.

    இதனால் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக மாறினார் ஷங்கர். அவரின் இயக்கத்தில் நடிக்க ஹிந்தி மற்றும் தெலுங்கு பட நடிகர்களே ஆர்வம் காட்டினார்கள். முதல்வன் பட கதையை ஹிந்தியிலும் ரீமேக் செய்தார். ஐஸ்வர்யா ராயை வைத்து ஜீன்ஸ் படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஒரு பாடலுக்காக உலகின் 7 அதிசயங்களுக்கும் சென்று காட்சிகளை எடுத்தார்.

    அதன்பின் இந்தியன், அந்நியன், ஐ, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கினார். அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பதால் சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையும் கொடுத்தது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படமும் தோல்வி அடைந்தது.

    இதனால்தான் இந்தியன் 3 படத்தின் ரிலீஸும் தள்ளி போயிருக்கிறது. அந்த படத்தில் மேலும் சில காட்சிகளை எடுத்து இணைத்த பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார். இந்தியன் 2 படம் உருவாகும்போதே தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்கிற படத்தை ஷங்கர் இயக்கினார்.

    இந்தியன் 3 படத்தை ஷங்கர் எப்போது முடித்துக் கொடுப்பார் என தெரியாததால் கேம் சேஞ்சர் பட ரிலீஸுக்கு பிரச்சனை செய்தது லைக்கா. எனவே, இந்தியன் 3 படத்தை எடுத்தவரை போட்டு காட்டுகிறேன். கேம் சேஞ்சர் ரிலீஸுக்கு பின் இந்தியன் 3 பட வேலைகளை துவங்குகிறேன் என ஷங்கர் ஒத்துகொண்டார். அப்படி வெளியான கேம் சேஞ்சர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    ஒருபக்கம், 2 வருடங்களுக்கு முன்பே வேள்பாரி நாவலை 3 பாகங்களாக இயக்க திட்டமிட்டு அதற்கான திரைக்கதையையும் ஷங்கர் எழுதி வைத்துவிட்டார். இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் என்பதாலும், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் ஓடவில்லை என்பதாலும் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

    எனவே, இது தாமதமாகும் என யோசித்த ஷங்கர் குறுகிய காலத்தில் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறாராம். சியான் விக்ரமே ஷங்கரிடம் கோரிக்கை வைத்ததால் இது நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கோலிவுட்டை காலி பண்ணப் போறாங்களா… துருவ் மற்றும் மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?

    Dhruv Vikram: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை பார்த்த சினிமா வட்டாரமே கொஞ்சம் ஷாக்கில் தான் இருக்கின்றனர். இது என்ன மாதிரியான ஸ்கெட்சுனு தெரியலையே என கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.

    இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். பல வருடம் கழித்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட அப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவானது கர்ணன் திரைப்படம்.

    இதையும் படிங்க: முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…

    தனுஷ் நடிப்பில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. இதைத் தொடர்ந்து, காமெடி நடிகர் வடிவேலுவை குணச்சித்திர நடிகராக மாற்றிய மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    உதயநிதி நடிப்பில் உருவான கடைசி திரைப்படம். மாரி செல்வராஜின் திரைக்கதை பெரிய அளவில் ரசிகர் இடம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நான்காவது படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

    இதையும் படிங்க: அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த ஒன் சைட் லவ்!.. வில்லன் நடிகரின் லவ் ஸ்டோரி தெரியுமா?…

    பல வருடங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. தற்போது இப்படத்தை தொடங்கும் பணியில் படக்குழு இறங்கி இருக்கிறது. இப்படத்திற்கு பைசன் காளமாடான் எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தினை பா.ரஞ்சித்தின் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நிவாஸ் கே கிருஷ்ணா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    சமீப காலமாகவே  கோலிவுட் திரைப்படங்கள் தமிழில் பெயர் வைக்காமல் தவிர்த்து வருகின்றனர். விஜயின் கோட், அஜித்தின் குட் பேட் அக்லி,  கவின் பிளடி பக்கர்  உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் படமும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படியே போனால் தமிழில் வைப்பது முற்றிலும் மறந்துவிடும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

  • அட்லீஸ்ட் ஒரு சூர்யா!.. கழுத குடிசையா இருந்தாலும் பரவால்ல.. சுதா கொங்கராவுக்கு இந்த நிலைமையா?..

    விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான துரோகி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. முதல் படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்த நிலையில், அடுத்த படத்தை வெளியிட சுமார் 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    மாதவன் மற்றும் ரித்திகா சிங்கை வைத்து இறுதிச்சுற்று படத்தை 2016-ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டிருந்தார் சுதா கொங்கரா. அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதே படம் வெளியானது.

    இதையும் படிங்க: உனக்கு எப்பவுமே 18 தான் ஸ்ரேயா!.. 41 வயசுன்னு சொன்னா யாரு நம்புவா!.. கவர்ச்சி சும்மா தூக்குது!..

    2020 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் தான் வெளியானது. அதே படத்தை பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்து சர்ஃபிரா எனும் தலைப்பில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இன்னமும் ரிலீஸ் தேதியை சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவிக்கவில்லை.

    மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த படம் வெளியாக காலதாமதம் ஆகும் என நடிகர் சூர்யா தெரிவித்த நிலையில், வாடிவாசல் படத்தைப் போல அந்த படம் டிராப்பா என கேள்விகள் எழுந்தன.

    இதையும் படிங்க: 20 கோடி வசூல்!.. கில்லி பட இயக்குனர் தரணியை சந்தோஷப்படுத்திய தளபதி விஜய்!.. வேறலெவல் சம்பவம்!..

    இந்நிலையில் தற்போது, அடுத்ததாக சுதா கொங்கரா துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தின் நடித்து வரும் துருவ விக்ரம் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.

    சுதா கொங்கரா நிலைமை இப்படி மோசமாகி விட்டதே என்றும் முன்னணி நடிகர்கள் யாரும் அவருக்கு கால்ஷீட் தரவில்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். துருவ் விக்ரமுக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய படமாக மாறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

    இதையும் படிங்க: சினிமாவுக்கு எண்ட் கார்டு போடாதீங்க!.. பெரிய மாலை போட்டு விஜய்யிடம் கோரிக்கை வைத்த பிரபலம்!..

  • ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப்போவது இந்த நடிகரின் மகனா?!.. இது வேற ரூட்டால்ல இருக்கு!..

    Jason Sanjay: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. அப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு பெரிய சர்ப்ரைஸ் தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.

    இயக்குனர் அப்பாவிடம் சண்டை போட்டு நடிகராக வந்தவர் விஜய். முதலில் போராடினாலும் பின்னர் அவர் தனக்கான இடத்தினை சரியாக பிடித்துக்கொண்டு முன்னேறினார். இன்றைய கோலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். விரைவில் முழுநீள அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்தார்.

    இதையும் படிங்க: பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!..

    இதுகுறித்து மேலும் பல சர்ச்சைகள் எழுந்தது. படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்த அப்டேட் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதற்கு கதையின் மொத்த ஸ்க்ரிப்டையும் ஜேசன் எழுதி வந்ததால் தான் இந்த தாமதம் எனவும் கிசுகிசுக்கின்றனர். இதை தொடர்ந்து படத்தின் ஹீரோவாக பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: யுவன் இல்லனா என்ன? அவருக்கு நான் எவ்வளோ செஞ்சிருக்கேன் தெரியுமா? ஓபனாக பேசிய ஆர்.கே.சுரேஷ்!…

    சமீபத்தில் கூட துல்கர் சல்மான் தான் ஹீரோ என ஒரு தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அப்படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் தான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படத்தில் அதிதி சங்கர் நாயகியாக நடிக்க இசையை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைக்கலாம் என்கின்றனர். இதை வைத்து பார்க்கும் போது முழுக்க முழுக்க வாரிசு பிரபலங்களை வைத்து இப்படத்தினை உருவாக்கினால் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு கிடைக்கும் என லைகா ஸ்கெட்ச் போட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர்.