Tag: gangai amaran

  • இளையராஜாவுக்கு ஞானம் வந்ததுக்கு காரணமே என் சமையல்தான்!. கங்கை அமரன் ராக்ஸ்!…

    இளையராஜாவுக்கு ஞானம் வந்ததுக்கு காரணமே என் சமையல்தான்!. கங்கை அமரன் ராக்ஸ்!…

    அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. 80களில் இவரின் பாடல் ஒலிக்காத குக்கிராங்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. அப்போது வெளியான 90 சதவீத திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார்.

    இளையராஜா படத்திற்கு இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் வெற்றி என்கிற நிலைதான் அப்போது இருந்தது. எனவே ஹீரோவை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளையராஜாவிடம் பேசி இசையமைக்க சம்மதம் வாங்கிவிடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார்.

    இப்போதும் 70, 80களில் பிறந்தவர்ளுக்கு இளையராஜாவின் பாடல்கள்தான் ஃபேவரைட்., கார் பயணங்களில் இன்னமும் அவரின் பாடல்களைத்தான் கேட்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளராகும் ஆசையில் இளையராஜா சென்னை வந்தபோது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். இவரும் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்..

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘நாங்க அப்போ சினிமாவில் வாசிக்கவில்லை.. லைட் மியூசிக்கில் வாசிச்சிக்கிட்டு இருந்தோம். நான் ரூம்ல ரசம் வைப்போம். அதை குடிக்கிறதுக்காகவே எஸ்.பி.பி ரூமுக்கு வருவான். என் ரசத்தை குடிச்சிட்டு சூப்பரா இருக்குடான்னு சொல்லுவான். என்னோட ரசத்த குடிச்சதனாலதான் உன் வாய்ஸ் நல்லாருக்குன்னு சொல்லுவேன்.. அதே மாதிரி இளையராஜாவுக்கு எப்படி இவ்வளவு ஞானம் வந்தது? நான் வச்ச சாம்பார், ரசத்த சாப்பிடதாலதான்’ என பேசியிருக்கிறார்.

  • சரக்கடிச்சிட்டு நைட்டு வருவானுங்க!.. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அலப்பறைகளை சொல்லும் கங்கை அமரன்..

    இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜா இசையில் சாதிக்க வேண்டும் என சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை கிளம்பிய போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் கங்கை அமரன். இளையராஜா இசையமைப்பாளரான பின் அவரின் இசையில் தொடர்ந்து பாடல்களை எழுதி வந்தார் கங்கை அமரன்.

    ஒருகட்டத்தில் கங்கை அமரன் தனியாக இசையமைக்க தொடங்கினார்.. அப்படி அவர் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு நிறுத்தி விடாமல் இயக்குனர் அவதாரம் எடுத்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கினார் கங்கை அமரன்.

    கங்கை அமரனுகு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரண்டு மகன்கள் உண்டு. அதில் வெங்கட் பிரபு இயக்குனராகிவிட பிரேம்ஜி நடிகராக மாறினார். வெங்கட் பிரபு பல படங்களை இயக்கியிருந்தாலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா, விஜயை வைத்து இயக்கிய கோட், சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

    வெங்கட் பிரபுவுக்கும், பிரேம்ஜிக்கும் அடிக்கடி பார்ட்டிக்கு போகும் பழக்கம் உண்டு. ஏனெனில், வெங்கட்பிரபுவின் நண்பர் கூட்டமும் பெரியது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘என்னோட நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது எனக்கு சரக்கு பாட்டில் வாங்கிட்டு வருவாங்க.. அதை நான் என்னுடைய ரூமில் வைத்து விடுவேன்.. பசங்க வீட்ல ஒண்ணா இருக்கும் போது பாட்ட்டிக்கு போவாங்க.. டேய் உங்களுக்கு எது வேணுமோ எடுத்துட்டு போங்கன்னு சொல்லுவேன்.. இதெல்லாம் வேணாம்பான்னு சொல்லிட்டு போயிடுவாங்க..

    குடிச்சிட்டு நைட்டு 11 மணிக்கு பீர் வாசனை வரக்கூடாதுன்னு என் ரூம் ஜன்னல் வழியா ‘டாடி தூங்கிட்டியா’ன்னு கேட்பானுங்க.. அதாவது வந்துட்டோம்னு அட்டனன்ஸ் போடுறாங்களாம்.. அப்படிப்பட்ட பிள்ளைங்க.. அப்படிப்பட்ட அப்பா’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.

  • கங்கை அமரன் என்ன யோக்கியமா?!.. சின்மயி விவகாரம் பற்றி பொங்கும் பிரபலம்!..

    Vairamuthu: இளையராஜா, கங்கை அமரன், வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்கள் சினிமாவில் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் உருவான நிழல்கள், காதல் ஓவியம், கடலோரக் கவிதைகள், மண் வாசனை, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் சிறப்பான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

    ஆனால், இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே ஏதோ ஒரு சம்பவத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிட்டது. எனவே, கடந்த 30 வருடங்களுக்கும் மேல் இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை. இருவரும் இணைந்து பணிபுரியவும் இல்லை. ரோஜா படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதினார். கடந்த சில வருடங்களாக ரஹ்மானின் இசையிலும் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இல்லை.

    ஒருபுறம் சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார் என சொல்லி அதிர வைத்தார். அவரைத் தொடர்ந்து பல பெண்களும் வைரமுத்து பற்றி சமூகவலைத்தளங்களில் பேசினார்கள். ஆனால், தன்னைப்பற்றி பொய்யான தகவல்களை சொல்கிறார்கள் என வைரமுத்து விளக்கமளித்தார்.

    இந்நிலையில், சின்மயி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்த கங்கை அமரன் வைரமுத்து மிகவும் அவதூறாக பேசினார். வைரமுத்து நல்ல கவிஞர். ஆனால், நல்ல மனிதர் இல்லை என புகார் சொன்னார். இந்நிலையில், பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு சின்மயிக்கு உரிமை உண்டு. ஆனால், கங்கை அமரன் வைரமுத்து பற்றி மிகவும் அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது. அவர் என்ன யோக்கியமா?.. அந்த நிகழ்ச்சியில் சம்பந்தமே இல்லாமல் வந்து வைரமுத்துவை திட்டிகொண்டிருக்கிறார். வைரமுத்துவை திட்டுவதற்கு முன் ‘நாம் என்ன யோக்கியமா?’ யோசிக்க வேண்டும்.

    பிரபல கவிஞரின் மகள் வாழ்க்கை சின்னபின்னமானதற்கு யார் காரணம் என கங்கை அமரனுக்கு தெரியும். கங்கை அமரன் என்னென்ன வேலைகளை செய்தார் என்பது சினிமாத்துறையை சேர்ந்த பலருக்கும் தெரியும். இப்படி சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து வந்து வைரமுத்துவை திட்டுவதற்கு பதில் சின்மயி நீதிமன்றத்தை நாடுவது நல்லது’ எனப்பேசியிருக்கிறார்.

  • ரீ-ரிக்கார்டிங் பண்ணும்போதே படம் ஹிட்டு!.. கரகாட்டக்காரன் அனுபவம் சொல்லும் கங்கை அமரன்..

    Karagatakaran: கங்கை அமரனின் இயக்கத்தில் 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சொல்லி நடிக்காமல் இருந்த கவுண்டமணியை இந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க வைத்தார் கங்கை அமரன்.

    சிவாஜி – பத்மினி இணைந்து நடித்து வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து இப்படத்தின் கதையை கங்கை அமரன் உருவாக்கியிருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை செய்தது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் தியேட்டர்களில் கூட்டமே இல்லை.

    அதன்பின் பிக்அப் ஆகி பல தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியது. அதுவும் சில தியேட்டர்களில் ஒரு வருடமெல்லாம் ஓடியது. இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக கனகா அறிமுகமாகியிருந்தார். இந்த ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. மேலும், கவுண்டமணி – செந்தில் காமெடி மற்றும் இளையராஜாவின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இப்படத்தை பார்த்தார்கள். இந்த படத்தின் இறுதியில் வந்த பக்தி பாடலுக்கு பெண்கள் சாமி வந்து நடனம் ஆடினார்கள். இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே ஆச்சர்யப்பட்டார்கள். இந்த படம் ராமராஜனுக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

    இந்நிலையில், இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘இந்த படத்திற்கும் மிகவும் ஜாலியாக சிரித்துக்கொண்டே இசையமைத்தார் அண்ணன் இளையராஜா. படத்திற்கான அத்தனை பாடல்களையும் சில நிமிடங்களிலேயே போட்டுகொடுத்துவிட்டார். இந்த படத்தின் பின்னணி இசை நடந்தபோது பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த எல்லோரும் பார்க்க வந்துவிட்டார்கள்.

    இந்த படத்தின் முதல் காட்சியான ராமராஜன், கவுண்டணி, செந்தில் போன்றவர்கள் காரை தள்ளிகொண்டு நடந்து வரும்போது அண்ணன் போட்ட இசையை கேட்டு அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். அப்போது படம் ஹிட் என்பது எனக்கு புரிந்துவிட்டது’ என பேசியிருக்கிறார்.

  • ஷூட்டிங் முடிஞ்சா கிளம்பாம கதறி அழுத ராமராஜன்… எதுக்குனு கேட்டாதான் ஷாக் ஆகிடுவீங்க!..

    மதுரையில் ஒரு தியேட்டரில் சீட்டு கிழித்துக் கொண்டிருந்த ராமராஜன் சென்னைக்கு வந்தது இயக்குநராக வேண்டும் என்றுதான்… ஆனால் ஒரு கட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக நடிகராகி, மக்கள் நாயகனாகவும் கொண்டாடப்பட்டார்.

    சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ராமராஜனை நம்ம ஊரு நல்ல ஊரு படம் மூலம் அழகப்பன் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், ராமராஜன் தனது இரண்டாவது படமாக கங்கை அமரனுடன் இணைந்த படம்தான் எங்க ஊரு பாட்டுக்காரன்.

    இதையும் படிங்க: குக் வித் கோமாளியின் நான்காவது எலிமினேஷன்.. வெளியேறறப்பட்ட விஜய் டிவி பிரபலம்…

    1987 தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டது. குறிப்பாக, இளையராஜா இசையில் உருவாகியிருந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானது. அதுவும், செண்பகமே செண்பகமே, மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடல்கள் இன்றளவும் எவர்கிரீன் மெலடி லிஸ்டில் முக்கியமான இடத்தில் இருப்பவை.

    மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடலை சிறப்பு அனுமதி பெற்று கங்கை அமரன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாடியில் எடுத்திருப்பார். அந்த விஷூவல்களும் பரவலாகப் பேசப்பட்டது. பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரனே எழுத, படம் முழுவதும் பாடல்களில் ராமராஜனின் குரலாக பாடகர் மனோவின் குரல் ஒலித்தது.

    `எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் பசு மாட்டிடம் பால் கரப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால், நடிப்பதற்கு முன்பிலிருந்தே அந்த மாடுகளிடம் நன்றாக பழக ஆரம்பித்து இருக்கிறார் ராமராஜன். குறிப்பாக பேச்சி என்கிற மாடுதான் பிரதானமான காட்சிகளில் இடம்பிடித்திருந்தது.

    இதையும் படிங்க: குக் வித் கோமாளியின் நான்காவது எலிமினேஷன்.. வெளியேறறப்பட்ட விஜய் டிவி பிரபலம்…

    அதைவைத்துதான் பேச்சி பேச்சி பாடலையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். மாடுகளுடன் நன்றாகப் பழகியிருந்த ராமராஜன், படப்பிடிப்பு முடிந்த பிறகு மாடுகளை பார்க்கப் போவதில்லை என நினைத்து ஷூட்டிங்கின் கடைசி நாளில் கண்ணீரும் சிந்தியிருக்கிறார் ராமராஜன்.

  • இளையராஜா – கங்கை அமரன் பிரிவுக்குப் பின்னாடி இப்படி ஒரு சூப்பர்ஹிட் பாடலா.? கொல மாஸா இருக்கே!..

    ஒரு பாட்டோட சூழ்நிலை சில சமயங்களில் வாழ்க்கையின் சம்பவங்களாக மாறி விடுகின்றன. அப்படித்தான் இங்கும் ஒரு சம்பவம் நடந்தது. இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் என மூவரும் ஆரம்பகாலத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள். இசை, பாட்டு என அவர்களது வாழ்க்கை நகர்ந்தது. எங்கு வேலையில் இருந்தாலும் லஞ்ச் டயத்திற்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்களாம். அது தான் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே நேரம். அந்த வகையில் அவர்கள் அந்த நேரத்தில் தான் இன்ப துன்பங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்களாம். இது இப்படி தொடர்ந்து கொண்டு இருக்க ஒரு படத்திற்கு பாடல் எழுதும்போது கங்கை அமரனுக்கும், இளையராஜாவுக்கும் இடையில் விரிசல் விழுந்து விட்டது.

    இளையராஜா ஒரு முறை கங்கை அமரனுக்கு பாடலுக்கான சிட்டியுவேஷனை சொல்லி டியூன் போட்டுக் கொடுக்க அதற்கு பாடல் எழுதச் சொன்னாராம். அன்று லஞ்ச் டயத்தில் மூவரும் ஒன்றாக அமர்ந்துள்ளனர். அப்போது இளையராஜா கங்கை அமரன், பாஸ்கர் இருவரையும் நீங்க வேறு எங்காவது போய் சாப்பிடுங்க. இங்க உட்காராதீங்கன்னு சொல்லி அனுப்பி வி;ட்டாராம். ‘என்னண்ணே இப்படி சொல்றீங்க… இந்த நேரம் தான் நமக்குக் கிடைக்கிற நேரம். உன் சாப்பாட்டுக்காகவா நாங்க வர்றோம். நமக்குள்ள இருக்குற சுக துக்கங்களைப் பரிமாறிக்கலாம்னு தான வாரோம். அதுக்குப் போய் நீ இப்படி சொல்றீயே?’ன்னு கங்கை அமரன் கோபப்பட்டாராம்.

    Dharma durai
    Dharma durai

    அதைப் பெரிதுபடுத்தாத இளையராஜாவும் விடாப்பிடியாக அவரை அனுப்பி விட்டாராம். கோபத்தில் அங்கு இருந்து கிளம்பிய கங்கை அமரனும், பாஸ்கரும் வேறு இடத்தில் சென்று சாப்பிட்டார்களாம். அதன்பிறகு இளையராஜா சொன்ன டியூனுக்கு மனதில் வந்த அத்தனை கோப உணர்வுகளையும் வார்த்தைகளால் கண்டபடி ஒரு பேப்பரில் எழுதிக் கொட்டித் தீர்த்து விட்டாராம்.

    ‘இந்தப் பாடலைக் கண்டிப்பாக அண்ணன் ஏற்றுக் கொள்ள மாட்டார். இருந்தாலும் இதுதான் பாடல் என்று கொடுத்து விட வேண்டியது தான்’ என்று முடிவு பண்ணி அதை ஸ்டேப்ளர் பின் போட்டு எடுத்துக் கொண்டு நேராக இளையராஜாவிடம் கொடுத்து விட்டாராம். ‘இதுதான் பாடல். நீ பயன்படுத்தினாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி’ என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாராம். அதைப் படித்துப் பார்த்த இளையராஜாவுக்கு ஏற்றப் பாடலாகி விட்டது. அவர் போட்ட டியூனில் கரெக்டாக அந்தப் பாடல் உட்கார, பாட்டு சூப்பர்ஹிட்டாகி விட்டது. அதுதான் தர்மதுரை படத்தில் வரும் ‘ஆணென்ன பெண்ணென்ன’ பாடல்.

    இதையும் படிங்க… பார்வையாலே பாடம் நடத்திய விஜயகாந்த்!.. அது புரியாம ‘திருதிரு’வென முழித்த இயக்குனர்…!

    இந்தப் பாடலில் தம்பிகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ரஜினி அவர்களைக் காண ‘தொளதொள’ பேண்ட், சர்ட், தொப்பி சகிதம் வந்து நிற்க எல்லோரும் அவரை வைத்துக் காமெடி பண்ணுகிறார்கள். அப்போது ஒருவர் அவரது பேண்டை உருவி விட்டு, தொப்பியைத் தூக்கி வீச அவமானத்தில் கூனி குறுகி நிற்கிறார். அப்போது ஓடி வந்து அவரது தம்பி பாரம்பரியமான வேட்டி சட்டையை அவருக்குப் போட்டு விடுகிறார். அப்போது ரஜினி பாடும் பாடல் தான் இது. படத்திற்கும் சரி, உண்மையான கங்கை அமரனின் சூழலுக்கும் சரி. பாட்டு 100 சதவீதம் பொருந்தியது. அங்கிருந்து தான் கங்கை அமரன், இளையராஜாவின் பிரிவு ஆரம்பமானது.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?

    Ilaiyaraja: இளையராஜாவைப் பற்றிய சர்ச்சைகள் சமீப காலமாக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு ஆதரவாக அவருடைய தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஒரு வீடியோ பகிர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்தார். அதாவது வைரமுத்து ஒரு மேடையில் இளையராஜாவை பற்றி குறிப்பிட்டு பேசியதை கங்கை அமரன்  ‘நாங்கள் இல்லை என்றால் வைரமுத்து இல்லை. எங்களால் தான் வைரமுத்து வளர்ந்தார்’ என்றெல்லாம் பேசி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

    இதைப்பற்றி பல ஊடகங்கள் கடமையாக விமர்சித்திருந்தனர். ஏனெனில் அந்த காலத்தில் கவிஞர் யாரையும்  இசையமைப்பாளர்கள் இந்த அளவு பேசியதில்லை. கவிஞர்களை மிகவும் மரியாதையாக தான் நடத்தினார்கள். ஆனால் இவர்கள் வைரமுத்துவை இந்த அளவு பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.

    இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஹேண்ட்ஸம் வில்லனா கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்!.. வெளியானது சூப்பர் போஸ்டர்!..

    இதே கங்கை அமரன் தான் இளையராஜாவுடன் மனக்கசப்பில் இருக்கும் போது ஒரு கட்டுரையில் இளையராஜா ஒரு குடிகாரன் என குறிப்பிட்டு ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார். ஆனால்  இப்போது அண்ணனுக்கு ஒத்து ஊதுகிறார் கங்கை அமரன் என பல பிரபலங்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் ஒரு வீடியோவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

    அதில் ரஜினியின் ஒரு படம் பெரியளவு ஹிட்டானதும் அதை கொண்டாடும் வகையில் ரஜினி, பாரதிராஜா இளையராஜா மூன்று பேரும் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர். அதில் மூன்று பேரும் நன்றாக குடித்திருந்தார்களாம். மேலும் அந்தப் பார்ட்டியின் போது ரஜினியை பாரதிராஜா ஏதோ ஒரு வாக்குவாதத்தில் கை நீட்டி அடித்ததாகவும் அந்த சம்பவத்திற்கு பிறகு தான் இளையராஜா குடிப்பதையே நிறுத்தினார் என்றும் வலைப்பேச்சு அந்தனன் அந்த பேட்டியில் கூறினார். ஒருவேளை இதைத்தான் குறிப்பிட்டு கங்கை அமரன் அந்த பத்திரிக்கையில் எழுதி இருப்பாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை முந்திய சூரி!.. வெற்றிமாறன் படத்தையே இறக்க போறாரு.. அமரன் என்னதான் ஆச்சோ?..

  • கொத்தனாருக்கு வீடு சொந்தம் ஆகுமா?!.. இளையராஜாவுக்கு இருப்பது பேராசை!.. விளாசிய பிரபலம்!..

    நான் இசையமைத்த பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம். அதற்கு சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பல இசை நிறுவனங்கள் எனது பாடல்களை ஆன்லைனில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றன. எனவே, எனக்கு அதில் ராயல்ட்டி கொடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    பல வருடங்களாகவே இந்த குற்றச்சாட்டை சொல்லி வந்த இளையராஜா இப்போது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். ராஜா தன்னை எல்லோரையும் விட உயர்ந்தவன் என்போது போல் நினைத்து கொள்கிறார் என நீதிமன்றத்தில் இசை நிறுவனங்கள் சொன்னபோது ‘ஆமாம். நான் உயர்ந்தவன்தான்’ என பதில் சொன்னார் இளையராஜா.

    இதையும் படிங்க: இளையராஜா – வைரமுத்து ரெண்டு பெருமே வொர்த் இல்ல!.. கங்கை அமரன் உளறக்கூடாது!. பிரபலம் சொல்வது என்ன?..

    இந்த விஷயம் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ‘சம்பளம் வாங்கி கொண்டுதானே ராஜா இசையமைத்தார். அதன்பின் எப்படி அவர் அதற்கு உரிமை கொண்டாட முடியும்?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ராஜாவின் தீவிர ரசிகர்கள் ‘அவர் கேட்பது சரிதான்’ என முட்டுக்கொடுத்து வருகிறார்கள்.

    கே ராஜன்
    கே ராஜன்

    இந்நிலையில், சினிமா பிரச்சனைகளை மனதில் பட்டதை அப்படியே பேசும் தயரிப்பாளர் கே.ராஜனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்தான் கதை, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கிறார். இசையமைப்பாளரிடம் நல்ல மெட்டுக்களை இயக்குனரோ, தயாரிப்பாளரோ வாங்குகிறார்கள்.

    இசையமைப்பாளருக்கு என்ன சம்பளமோ கொடுத்துவிடுகிறார்கள். வீடு கட்டி முடித்தபின் கொத்தனார் ‘இந்த வீடு எனக்குதான் சொந்தம்’ என சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமானதோ அது போலத்தான் இளையராஜா சொல்வது. அவரை போல பாடலாசிரியர்கள் சொன்னால்?.. பாடல்களுக்கு இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் சொன்னால் என்னாவது?..

    இதையும் படிங்க: இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!…

    படத்தில் நடித்த நடிகர் ‘இந்த படம் எனக்கு சொந்தம்’ என எப்படி சொல்ல முடியாதோ அப்படித்தான். இளையராஜா இசைஞானிதான். சந்தேகமில்லை. ஆனால், அதிகமான பணத்தாசையில் இப்படி நடந்து கொள்கிறார். வைரமுத்து ஒரு சிறந்த கவிஞர். அவர் எங்களால்தான் வளர்ந்தார் என கங்கை அமரன் சொல்வது அபத்தம்.

    அப்படி பார்த்தால் இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்ததே பஞ்சு அருணாச்சலம் என்கிற ஒரு தயாரிப்பாளர்தான். அவர் இளையராஜாவை சொந்தம் கொண்டாட முடியுமா?. ஒவ்வொருவரும் அவர்களின் திறமையால் வளர்ந்தவர்கள் அவ்வளவுதான். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் தீர்ப்பு என நான் எதிர்பார்க்கிறேன்’ என கே.ராஜன் பேசினார்.

  • எங்களால வளர்ந்தவரு வைரமுத்து!.. அவர் ஒரு நல்ல மனுஷனே கிடையாது!.. பொங்கிய இளையராஜா தம்பி!..

    படிக்காத பக்கங்கள் விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இசைப் பெரியதா? பாடல் பெரியதா? என பேசி இளையராஜாவை அசிங்கப்படுத்தி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது..

    இசையமைப்பாளர் இளையராஜா தனது இசை தான் பெரியது என்றும் இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்றும் பாடல் வரிகள் எல்லாம் பெரிய விஷயமில்லை என காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமீபத்தில் பாடலாசிரியரும் பாடல்களுக்கு சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்கிற கேள்வியை எழுப்பினர். இந்நிலையில், அதே போன்ற கருத்தை பாடலாசிரியர் வைரமுத்து எழுப்பி இருந்தார்.

    இதையும் படிங்க: முட்டிக்கிச்சு!.. பிரசாந்த் நடித்த அந்த படத்துல அஜித் நடிக்க வேண்டியதா?.. பிரபல இயக்குனர் பேட்டி!..

    வைரமுத்து இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணமே நாங்கள் போட்ட பிச்சை தான். இல்லையென்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகி இருக்க மாட்டார். ஒரு நிலத்தை கொடுத்து இந்தாப்பா வச்சுக்கோ என இளையராஜா தனது இசையை கொடுக்க அதில் வந்து அமர்ந்து கொண்டு அந்த நிலம் உருவானது என்னால் தான் என மடத்தனமாக கூறுகிறார் வைரமுத்து என வைரமுத்துவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.

    வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது. அவருக்கு கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜா பற்றி தப்பாக பேசியிருக்க மாட்டார். பாடல் பெரியதா? இசைப் பெரியதா என கேட்டிருக்க மாட்டார் என நேரடியாகவே வைரமுத்துவை தாக்கி கங்கை அமரன் பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: மேல ஒண்ணும் போடல!.. மனைவியுடன் ஜாலி பண்ணும் வேட்டையன் பட நடிகர்!.. செம ரொமான்ஸ்!..

    இளையராஜா “ இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலுக்கு ட்யூன் போட்டு கொடுத்த நிலையில் அதற்கு வரிகளை எழுதிய வைரமுத்துவுக்கு பாடல் வரிகள் நல்லா இருக்கு என சினிமா சான்ஸை இளையராஜா கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் வைரமுத்து என்பவர் யார் என்றே பலருக்கும் தெரிந்திருக்காது என கங்கை அமரன் அடித்து நொறுக்கி விட்டார்.

    வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவை தாக்கி பேசிய நிலையில், தனது அண்ணனுக்காக கங்கை அமரன் நேரடியாக நெத்தியடி அடித்து வைரமுத்து ‘இதற்கு மேல் வாய் திறந்தால் அவருக்கு நடப்பதே வேறு’ என மிரட்டும் தொனியிலும் எச்சரிக்கை கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: ரீ ரிலிஸ் படத்துக்கும் மட்டும்தானா? நாங்களும் வருவோம்.. மீண்டும் சூப்பர் ஹிட்டான அந்த சீரியல்

  • ஆல் ஏரியாவிலும் அண்ணன் தான் கில்லி!.. 70ஸ் டூ 2கே குட்டீஸ் வரை கலக்கிய கங்கை அமரன்

    கங்கை அமரன் நாம் கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால் தவறி விட்டோம். அவர் இயக்குனர் மட்டுமல்ல. திறமையான இசை அமைப்பாளர், பாடலாசிரியரும் கூட. அது மட்டுமல்லாமல் இவர் படங்கள் இயக்கினார் என்றால் அங்கு கதாசிரியர், பாடகர், பின்னணி குரல், நடிப்பு என பல திறமைகளையும் அசால்டாகக் காட்டிவிடுவார். இசைஞானி இளையராஜாவின் தம்பி. இவரைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் நிறைய உள்ளன.

    1977ல் வெளியான 16 வயதினிலே படத்தில் வெளியான செந்தூரப்பூவே பாடல், அஜீத்தின் மங்காத்தா படத்தில் வரும் விளையாடு மங்காத்தா பாடலின் ஆசிரியரும் இவர் தான்.

    80ஸ் ஹிட் அடித்த கோழி கூவுது படத்தின் இயக்குனர் இவர் தான். அதே போல 90ஸ்சில் மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனரும் இவர் தான். 70களின் கடைசியில் தான் இவர் பாடல் எழுதத் தொடங்கினார். அவை எல்லாம் இப்போது கேட்டாலும் உங்களை கவர்;ந்து இழுத்து விடும்.

    பூவரசம் பூ பூத்தாச்சி, நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, உறவுகள் தொடர்கதை, வெத்தல வெத்தல வெத்தலயோ, பூங்கதவே தாழ் திறவாய், என் இனிய பொன் நிலாவே ஆகிய பாடல்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவை தான். அது மட்டுமா, ஆசைய காத்துல தூதுவிட்டு, காற்றில் எந்தன் கீதம், சிறு பொன்மணி அசையும், புத்தம் புது காலை, இன்றைக்கு ஏன் இந்த, போவோமா ஊர் கோலம் ஆகிய பாடல்கள் எல்லாம் இவர் எழுதியதா என்று நம்மை வியக்க வைக்கும்.

    Karakattakkaran
    Karakattakkaran

    ராமராஜனின் கரகாட்டக்காரன், விஜயகாந்தின் அம்மன் கோவில் கிழக்காலே படங்களில் எல்லாம் எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவர் தான். அதுமட்டும் தானா என்றால் இல்லை. 2கே கிட்ஸ்களுக்கும் பிடிக்கும் வகையில் கோவா படத்தில் இதுவரை இல்லாத, சென்னை 28 படத்தில் சரோஜா சாமா நிக்காலோ ஆகிய சூப்பர்ஹிட் பாடல்களையும் இவர் தான் எழுதியுள்ளார். அதே போல இசையில் என்றால் இவரது முதல் படம் 1979ல் வெளியான ஒரு விடுகதை ஒரு தொடர்கதை. 75 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

    எங்க ஊரு ராசாத்தி படத்திற்கு இவர் தான் இசை அமைத்துள்ளார். இதில் வரும் பொன்மானைத் தேடி பாடல் இன்று கேட்டாலும் ரம்மியமாக இருக்கும். எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கோயில் காளை, கும்பக்கரை தங்கய்யா என 10 படங்களை இயக்கியுள்ளார். எல்லாமே ஹிட் ரகங்கள் தான்.

    அதே போல் பாக்கியராஜின் ஆரம்ப கால படங்களில் இவர் டப்பிங் கொடுத்துள்ள்ளார். பூஜைக்கேத்த பூவிது பாடலைப் பாடியவர் இவர் தான். இவரது வாரிசுகளான வெங்கட்பிரபு, பிரேம்ஜி இப்போது பல படங்களில் தம்; திறமையைக் காட்டி வருகின்றனர்.