Tag: ibrahim rowther

  • என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

    என்ன தாண்டி போடா!.. தரையில் படுத்து விஜயகாந்தை தடுத்த இப்ராஹிம் ராவுத்தர்….

    திரைத்துறையில் விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் போல நட்பை பார்க்கவே முடியாது. அவர்களிடையே இருந்த நட்பு அவ்வளவு புரிதலோடு இருந்தது.. அதனால்தான் அவர்களை இருவரும் ஒன்றாக பல வருடங்கள் பயணித்தார்கள். இருவருமே மதுரை சேர்ந்தவர்கள்.. சிறு வயது முதலே நண்பர்கள்.. விஜயகாந்த் நடிகனாக வேண்டும் என முடிவெடுத்து சென்னை வந்த போது கதாசிரியராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவருடனே வந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்.

    ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு எல்லாமுமாக ராவுத்தர் மாறினார். விஜயகாந்த் நடிக்கும் படங்களுக்கு கதைகளை கேட்பது, இயக்குனரை முடிவு செய்வது, சம்பளத்தை முடிவு செய்வது என்கிற எல்லா வேலைகளையும் இப்ராஹிம் பார்த்துக்கொண்டார். ராவுத்தர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசாமல் விஜயகாந்த் கேட்பார்..

    இதுதான் அவர்களின் நட்பின் சாராம்சம். அதேபோல் விஜயகாந்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார் ராவுத்தர். படிப்படியாக சினிமாவில் வளர்த்தது ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியது, அப்படியே அவரை அரசியலுக்கு தயார்படுத்தியது என விஜயகாந்தின் முக்கிய வளர்ச்சிக்கு ராவுத்தர் காரணமாக இருந்தார்.

    ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் என்று பேசிய தயாரிப்பாளர் காஜா மொய்தீன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் – ராவுத்தர் போல ஒரு நட்பை நான் சினிமாவில் யாரிடமும் பார்த்ததில்லை.. விஜயகாந்த் சார் தனது திருணம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்தார்.

    ஆனால், அதில் ராவுத்தருக்கு விருப்பமில்லை.. வேண்டாம் என தடுத்தார். விஜயகாந்த் கேட்கவில்லை. உடனே ராவுத்தர் தரையில் படுத்து ‘என்னை தாண்டி நீ போடா’ என்றார்.. அவ்வளவுதான்.. விஜயகாந்த் எதுவுமே பேசவில்லை.. அப்படியே போய் உட்கார்ந்து விட்டார்.. ‘நீ என்ன சொல்றியோ கேக்குறேன்’ என சொல்லிவிட்டார். அப்படி ஒரு நட்பு அவர்களுடையது’ என்று சொல்லி இருக்கிறார்..

    மேலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் பிரிந்து விட்டாலும் இருவரும் எங்குமே யாரையுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்ராஹிம் ராவுத்தர் இறந்த போது விஜயகாந்த் பல மணி நேரங்கள் அழுது கொண்டே இருந்தார்’ எனவும் காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.

  • இது நம்ம பில்டிங் இல்லயா?!. 10 வயதில் மகன் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன விஜயகாந்த்…

    Vijayakanth: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் விஜயகாந்த். சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர். அவருடன் கதாசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தவர்தான் விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.

    இருவரும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தனர். ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. எனவே, அவருக்கு மேனேஜர் போல மாறினார் இப்ராஹிம் ராவுத்தார். விஜயகாந்துக்கு வாய்ப்பு வந்தால் கதை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் பார்த்துக்கொள்வது என எல்லாமே அவரே கவனித்தார்.

    இப்ராஹிம் ராவுத்தர் என்ன சொல்வாரோ அதை விஜயகாந்த் கேப்டார். விஜயகாந்துக்கு எல்லாமுமாக மாறினார் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் ரசிகர்களிடம் பிரபலமாகி கோலிவுட்டின் ஒரு முக்கிய நடிகராக மாறியதும் இப்ராஹிம் ராவுத்தர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனமும் துவங்கப்பட்டது.

    அந்த நிறுவனத்தில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என பல படங்களிலும் நடித்தார். ஆனால், விஜயகாந்துக்கு திருமணம் ஆனதும் அவருக்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் கலைப்புலி தாணு மற்றும் பிரேமலதா இருப்பதாக சொல்லப்பட்டது.

    சென்னை வடபழனி பகுதியில் இப்ராஹிம் ராவுத்தர் என்கிற பெயரில் ஒரு கட்டிடத்தையும் கட்டினார் ராவுத்தார். அதில்தான், அவரின் தயாரிப்பு அலுவலகம் செயல்பட்டு வந்தது. ராவுத்தருக்கு குழந்தை இல்லை என்பதால் உறவினர் மகனை தத்தெடுத்து வளர்த்தார். அவரின் மகனுக்கும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபகாரனுக்கும் ஒரே வயது.

    இருவரும் சிறுவர்களாக இருந்தபோது ‘இது எங்க பில்டிங். உங்க பில்டிங் இல்ல’ என அந்த சிறுவன் விஜயகாந்த் மகனிடம் சொல்லிவிட்டான். இதை அப்பாவிடம் சொன்ன விஜயபிரபாகரன் ‘அப்ப இது நம்ம பில்டிங் இல்லையா?’ என சோகமாக கேட்டிருக்கிறார். இதை வசனகர்த்தாவும், தனக்கு நெருக்கமானவராக இருந்த லியாகத் அலிகானிடம் சொன்ன விஜயகாந்த் ‘யார் பேர்லயாவது பில்டிங் கட்டிட்டு, அப்புறம் அவன் பேர்ல கட்டி இருக்கலாம். சின்ன பையன் மனசுல இது பதிஞ்சி போச்சி பாரு’ என சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

    இந்த தகவலை லியாகத் அலிகான் ஊடகத்திற்கு அளித்த பேட்டீய்ல் கூறியிருக்கிறார்.