கே.வி.என் புரடெக்ஷன் தயாரிப்பில் விஜய், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு கடத்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியிட முடியவில்லை..
ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பு படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி வழக்கு சென்றும் தயாரிப்பாளருக்கு ஆதரவாக தீர்ப்புக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார். தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது..
எப்படியும் படம் மே மாதமே வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆனது. ஜனநாயகன் படத்தின் எடிட்டிங்கில் வேலை செய்த ஒருவர் பணத்திற்காக படத்தை திருடி வேறொரு நபரிடம் கொடுக்கப்பட்டு அது இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே படத்தை வேகமாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் நாளை அதாவது திங்கட்கிழமை தங்களின் முடிவை சொல்கிறோம் என கூறியிருக்கிறார்கள். படத்துக்கு இன்று தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும்.. வருகிற 30-ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்த நிலையில், தணிக்கை அதிகாரிகளின் இந்த முடிவு அவரை அப்செட்டாகி ஆகிகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகள் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனவும் சென்சார் போர்டு சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது வரை இந்த வழக்கில் தீர்வு எட்டப்படவில்லை.. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி பயணித்தது. தற்போது இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி பி.டி ஆஷாவை விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எப்போது இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என்பது தெரியாமல் இருக்கிறது. எனவே ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பதும் தெரியாமல் இருக்கிறது..
இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. ஜனநாயகன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது.. மேலும் மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பொதுவாக 20 நாட்களுக்குள் அதிகாரிகள் படம் பார்த்து மறுத்தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் இது ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்டதால் விரைவில் புதிய அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை பார்த்து அவர்களின் கருத்தை சொல்வார்கள் என தெரிகிறது..
ராணுவம் தொடர்பான ஒரு சின்னத்தை இந்த படத்தில் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் தணிக்கை வாரியம் செல்லும் குற்றச்சாட்டு. எனவே இந்த முறை ஜனநாயகன் படத்தை ஒரு ராணுவ அதிகாரியும் பார்க்கவிருக்கிறாராம். அவர் பார்த்துவிட்டு என்ன கருத்து சொல்கிறாரோ அதை செய்துவிட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படும் என தெரிகிறது..
வருகிற 19 அல்லது 20ஆம் தேதி இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற முடிவில் தயாரிப்பாளர் இருக்கிறார். எனவே எல்லாம் சரியாக நடந்தால் ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி 19 அல்லது 20ம் தேதியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது…
முன்பெல்லாம் ஒரு சினிமா தொடர்பான செய்திகளில் அந்த நடிகரின் ரசிகர்கள்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கி அது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் வெளியாகும் போது பொதுமக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.. அதில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவே கருத்து தெரிவிக்கிறார்கள்.. தணிக்கை வாரியம் இந்த படத்தை நிறுத்தி வைத்ததற்கு பல காரணங்களை சொன்னாலும் ரசிகர்களும், பொதுமக்களும் அதை ஏற்க தயாராக இல்லை. இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தை கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தணிக்கை அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள்.. 19ம் தேதி இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுப்பதாக தயாரிப்பாளரிடம் தணிக்கை அதிகாரிகள் சொல்லி விட்டார்கள். எனவே தயாரிப்பாளரும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.. ஆனால் அதன்பின் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் எந்த அப்டேட்டும் இல்லை. தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டபோது ‘ஒரு தணிக்கை அதிகாரி புகார் தெரிவித்திருக்கிறார்.. எனவே மறுதணிக்கை செய்ய வேண்டும்’ என தணிக்கை தரப்பு சொல்லியிருக்கிறது. ரிலீஸுக்கு வெறும் 3 நாட்களே இருந்த நிலையில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ‘படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் மறு தணிக்கை என சொல்வதை ஏற்க முடியாது.. ஏற்கனவே கூறியபடி யுஏ சான்றிதழை கொடுங்கள்’ என தீர்ப்பளித்தார். ஆனால், இதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அமர்வு தனி நீதிபதி பி.டி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தது. அதன்பின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.. ஆனால், ‘வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.. அப்படி இருக்கும்போது இங்கே ஏன் வந்தீர்கள்?.. அங்கு உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இங்கு வாருங்கள்’ என சொல்லி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கலாம் என சொல்லிவிட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான விசரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.. இரு தரப்பும் தங்களின் வாதங்களை முன் வைத்தன.. அன்றே தீர்ப்பை சொல்ல திட்டமிட்டிருந்தார் நீதிபதி.. ஆனால் இரு தரப்பும் வாதங்களை முன்வைக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார் நீதிபதி.
இந்நிலையில்தான் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தார்.. அதற்கு அவர்கள் சொன்ன முக்கிய காரணம் தணிக்கை வாரியத்துக்கு பதிலளிக்க போதுமான அவகாசத்தை தனி நீதிபதி கொடுக்கவில்லை என்பதுதான்.. தற்போது இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பிடி ஆஷாவே விசாரிக்கவுள்ளார்.. அப்போது தணிக்கை வாரியத்திற்கு அவர் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த விழக்கு மீண்டும் இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி பீடி ஆஷாவிடமே வந்து நிற்கிறது. எனவே ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.. இடையில் 18 நாட்கள் வீணாய் போய்விட்டது. இந்த தீர்ப்பு வந்தபின் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் ‘இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். தனி நீதிபதி தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் கொடுத்திருந்தால் மறு தணிக்கை செய்து படம் எப்போதோ படம் வெளியாகியிருக்கும்.. தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதி சென்று காலதாமதம் ஆகிவிட்டது’ என பதிவிட்டு வருகிறார்கள்.
ஜனநாயகன் தணிக்கை தொடர்பான வழக்கில் தணிக்கை வாரியத்துக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை. மீண்டும் மறுதணிக்கை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னதால் படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் ‘படத்திற்கு உடனே சென்சார் சான்றிதழ் கொடுக்க வேண்டும்’ என தனி நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டார். ஆனால், உடனே தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. அதையடுத்து தனி நீதிபதிஉத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலே நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அப்போது தீர்ப்பு தேதியை சொல்லாமல் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிபதி தீர்ப்பை வெளியிட்டார்.. அதன்படி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதி அமர்வு தடை விதித்தது.
தணிக்கை வாரிய அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வு அனுப்பப்பட்டது.. மத அடையாளங்களை அவதூறு செய்வது ஏற்க முடியாது.. படத்தில் பாதுகாப்பு படை சின்னம் பயன்படுத்தப்பட்டதால் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டது.. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து ஜனநாயகன் படத்தை உடனே ரிலீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார். அவர் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவர் நடித்திருக்கும் கடைசி திரைப்படம்தான் ஜனநாயகன். அதிரடி ஆக்சன் மற்றும் அரசியல் கலந்த திரைப்படமாக ஜனநாயகன் உருவாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சினைகளில் சிக்கி இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.
தணிக்கை சான்றிதழ் கொடுக்கும் நேரத்தில் படத்தை கிடப்பில் போட்ட தணிக்கை வாரியம் படத்தை மீண்டும் மறுதணிக்கை செய்யப் போகிறோம் என சொல்ல அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று கூட இந்த வழக்கை விசாரித்த நீதிபதில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தனர். எனவே எப்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்து திர்ப்பு வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஜக பிரமுகர் குஷ்புவிடம் ‘ஜனநாயகன் பட பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாதது ஏன்?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய குஷ்பு ‘சம்பந்தப்பட்ட நடிகர் கோரிக்கை வைத்தால் மட்டுமே நடிகர் சங்கம் உதவி செய்யும்’ என சொல்லியிருக்கிறார்.
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியான இன்று வெளியாகவிருந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்காததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
தணிக்கை வாரியம் சொன்ன எல்லா மாற்றங்களையும் செய்து கொடுத்த பின்னரும் வேண்டுமென்று கால தாமதம் செய்கிறார்கள் என கூறி ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த தணிக்கை வாரியம் ‘மேலும் சிலர் படம் பார்க்க வேண்டும்.. ராணுவம் தொடர்பான சில காட்சிகளை அனுமதி பெறாமல் எடுத்திருக்கிறார்கள்.. எனவே சான்றிதழ் வழங்க நான்கு வார கால அவகாசம் வேண்டும்’ என சொல்லி இருந்தனர்.
இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தனி நீதிபதி பி.டி.ஆஷா கூறியிருந்தார். அதன்படி இன்று காலை தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.டி.ஆஷா ஜனநாயகன் படத்திற்கு சென்சார் தணிக்கை வாரியம் U/A சான்றிதழை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். எனவே, படம் விரைவில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
ஆனால், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்திருக்கிறது. தணிக்கை வாரிய தலைவர் சார்பில் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யபப்ட்டிருக்கிறது. வருகிற 12ம் தேதி இதுபற்றி விசாரிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்திருக்கிறது. எனவே, அந்த தீர்ப்பை பொறுத்தே ஜனநாயகன் எப்போது ரிலீஸ் என முடிவு செய்யப்படும்.
ஜனநாயகனுக்கு பிரச்சனை தீர்ந்தது என ரசிகர்கள் சந்தோஷப்பட்ட நிலையில் தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, ஜனநாயகனுக்கான முட்டுக்கட்டை இன்னும் நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. எனவே படம் நாளை வெளியாகாது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. கடந்த டிசம்பர் 18ம் தேதி சென்சருக்காக படக்குகுழு அணுகியுள்ளது. படத்தைப் பார்த்து தணிக்கை அதிகாரிகள் சில மாறுதல்களை சொல்ல இயக்குனர் அதையும் செய்து கொடுத்துவிட்டார்.
ஆனால் 10 நாட்கள் ஆகியும் சென்சார் கொடுக்கப்படவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இது விஜய் ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகிலும் கோபப்படுத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்க்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமீர் ‘ஒரு சினிமாவை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்துட்டா அவங்கள வழிக்கு கொண்டு வரலாம்னு நினைக்குற உங்க நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது. இந்த நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்கணும்னு மக்கள்தானே முடிவு பண்றாங்க!.. அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல’ என பொங்கி இருக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘பெரும் பட்ஜெட் படங்களுக்கு இந்திய மற்றும் சில வெளிநாட்டு தணிக்கை குழுக்களின் காலக்கெடு விதிகள் மிகவும் சவாலாக இருக்கிறது. இதனால் முன்பே வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்ட படங்களில் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளில் படைப்பு சுதந்திரத்திற்கு நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது வெளியீட்டுக்கு மூனு மாதங்களுக்கு முன்பே படம் முழுமையாக தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது நடைமுறையில் சாத்தியம் இல்லை.. தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள், பெரிய நடிகர்கள் இணைந்து இதை சீரமைத்து எளிமைப்படுத்த வேண்டும்.. பண்டிகை கால பட வெளியீடுகள் தள்ளி போனால் காலப்போக்கில் திரைத்துறை அழிந்துவிடும்’ என பதிவிட்டிருக்கிறார்.
மேலும் விஜயை வைத்துக் கோட் படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு ‘எது எப்படி ஆனாலும் சரி.. இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய Farewell படமாக இருக்கும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி வருகிற 9ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதியே படத்தை சென்சார் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சில மாற்றங்களை சொல்ல அதையும் செய்து படக்குழு கடந்த டிசம்பர் 25ம் தேதி மீண்டும் கொடுத்துவிட்டனர். ஆனால் இப்போது வரை சென்சார் கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்தை இன்னும் சிலர் பார்க்க வேண்டும். சில தவறுகள் இருக்கிறது. சென்சார் கொடுக்க கால அவகாசம் வேண்டும் என சென்சார் தரப்பு கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வருகிற 9ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருருக்கும் நிலையில் தீர்ப்பும் 9ம் தேதி என சொல்லியிருப்பதால் அந்த தேதியில் ஜனநாயகன் படம் வெளியாகுமா என்கிற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. இது விஜய் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து திரையுலகில் இருந்து எந்தக் குரலும் வரவில்லை. ஜனநாயகன் படத்திற்காகவோ இல்லை விஜய்க்கு ஆதரவாகவோ எந்த நடிகர், நடிகையும் ஆதரவு குரல் கொடுக்கவில்லை.
ஒருபக்கம் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் என எல்லாமே அமைதியாக இருக்கிறார்கள். ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி போல எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்கள் கூட இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதாலும், ஆளும் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் அவருக்கு ஆதரவு கொடுத்தால் நமது படத்திற்கு சிக்கல் ஏற்படும்.. எதற்கு தேவையில்லாத பிரச்சினை என எல்லோருமே நினைப்பதாக தெரிகிறது. ஒருபக்கம் ‘மற்ற படங்களுக்கு பிரச்சினை என வந்தபோது விஜய் யாருக்கு குரல் கொடுத்தார்?.. அவர் மௌனமாகத்தானே இருந்தார்.. எனவேதான் மற்றவர்களும் அவருக்கு குரல் கொடுக்கவில்லை’ என்கிறார்கள் சிலர்.
நடிகர் விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் 18ம் தேதி சென்சார் அதிகாரி படம் பார்த்தார்கள்.
அப்போது அவர்கள் சில மாற்றங்களை சொல்ல அதையும் படக்குழு செய்து 25 ஆம் தேதி கொடுத்துவிட்டனர். ஆனால் பல நாட்களாகியும் சென்சார் கொடுக்காமல் இருந்தனர். ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பொதுவாக ஒரு வாரத்தில் சென்சார் சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு வேண்டுமென்றே சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். இதில் உள்ள நோக்கம் இருக்கிறது. இதனால் 500 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கு இன்று தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தணிக்கை வாரியம் தனது தரப்பு வாதங்களை முன்வைத்த போது ‘நிபுணர்களின் ஆலோசனை பெறாமல் ஜனநாயகம் படத்தில் பாதுகாப்பு படையின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்சார் கொடுப்பதற்கு முன்பே நீதிமன்றத்தை அணுகியது தவறு.. இன்னும் சில அதிகாரிகள் படத்தை பார்க்க வேண்டி இருக்கிறது.. எனவே இந்த படத்திற்கு சென்சார் கொடுக்க இன்னும் நான்கு வாரங்கள் தேவைப்படும்’ என சொன்னது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என தெரிகிறது. தற்போது வெளியாகி வரும் செய்திகளை பார்க்கும்போது ஜனநாயகம் 9ம் தேதி வெளியாகுமா என்கிற கலக்கம் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.