Tag: jyothika

  • கோயிலுக்கு வந்த இடத்துல! ரசிகர்களின் செயலால் டென்ஷனான சூர்யா

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. அவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான கங்குவா திரைப்படம் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்தது.

    அடுத்தடுத்து இரண்டு பெரிய தோல்விகளை கண்ட சூர்யா எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். அது மட்டுமல்ல அந்த இரு படங்களின் தோல்வி அவருடைய குடும்பத்தையும் வெகுவாக பாதித்தது. ஏனெனில் சமூக வலைதளங்களில் சூர்யாவை பற்றியும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதத்தை பற்றியும் ஜோதிகா வெளியிடும் கருத்துக்கள் பற்றியும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த வண்ணம் இருந்தனர்.

    ஆனால் இதையெல்லாம் தாண்டி மாணவ மாணவியர்களுக்கு சூர்யாவின் குடும்பம் செய்து வரும் உதவியை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அதைப் பற்றி சூர்யாவும் பெரிய அளவில் எண்ணுவதில்லை. தன்னை பற்றி எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதை தன் காதுகளுக்கு எடுத்துச் செல்லாமல் தன்னுடைய நோக்கம் என்ன, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வழியை நோக்கி தான் பயணித்து வருகிறார் .

    சமீபத்தில் கூட அவருடைய அகரம் அறக்கட்டளை தொடங்கி 15 வருடங்கள் நிறைவானதை ஒட்டி ஒரு பெரிய விழாவை எடுத்து கொண்டாடினார் சூர்யா. அந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். முக்கியமாக கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல அந்த அறக்கட்டளை மூலமாக பயன் பெற்றவர்கள் அனைவரும் இன்று உயர் பதவிகளில் வகித்து வருகின்றனர்.

    suriya_jyothika

    suriya_jyothika

    அவர்களும் அந்த விழாவிற்கு வந்து அகரம் பற்றியும் அதை நடத்தி வரும் சூர்யாவின் நல்ல எண்ணம் பற்றியும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் சூர்யா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் போட்டோ எடுக்க முண்டியடித்து வந்தனர். அதில் கடுப்பான சூர்யா, போதும் நிறைய எடுத்தாச்சு. ஃபேமிலியை எடுக்க வேண்டாம். போதும் போதும் போதும் என்று சொல்லிக் கொண்டே போனார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.

  • மகள் பட்டமளிப்பு போட்டோவில் இருந்து சூர்யாவை நீக்கிய ஜோதிகா… இது என்ன புது பிரச்னையா இருக்கே?

    Surya: சூர்யாவின் மகள் தியா பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்து இருந்த நடிகை ஜோதிகா திடீரென நீக்கி இருக்கும் தகவலால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.

    சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் பெண் தியா சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்து இருக்கிறார்.

    விரைவில் சவுத் கலிபோர்னியாவில் பட்டப்படிப்பு படிக்க செல்ல இருப்பதால் அவரின் மகள் தியா பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில் குடும்பத்துடன் பங்கேற்ற நடிகை ஜோதிகா, விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

    படம் வைரலான நிலையில் அந்த புகைப்படங்களில், நடிகர் சூர்யாவின் மீசை மற்றும் தாடி லுக், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் வெற்றி படமான சிங்கம் திரைப்படங்களிலேயே தான் இதே மாதிரியான மீசை மற்றும் தாடியுடன் வந்திருந்ததால், இது ‘சிங்கம் 4’க்கு ஆயத்தம் என்றே பலர் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

    இதனைத் தொடர்ந்து, அந்தக் குறிப்பிட்ட புகைப்படத்தை ஜோதிகா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருப்பதால் இந்த சந்தேகம் மேலும் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி மேலும் சந்தேகங்களை தூண்டியிருக்கிறது.

    இது ரசிகர்களிடையே, “சிங்கம் 4 உருவாகும் வாய்ப்பு உறுதியாக இருக்கிறதா?” என்ற ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இந்த வரிசை திரைப்படங்களை இயக்கிய ஹரி, “வலுவான கதைக்கரு இருந்தால்தான் சிங்கம் 4 தயாரிப்பில் இறங்குவேன்” என ஏற்கனவே கூறியிருந்தார்.

    தற்போது சூர்யா இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, வெங்கி அட்லூரியுடன் அவரது அடுத்த படம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில், சிங்கம் மீசை புகைப்படம் நீக்கப்பட்டு இருப்பதால் ‘சிங்கம் 4’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • OTT Watch: பொண்ணுங்களா இது? ஆத்தாடி… ஜோதிகாவின் பாலிவுட் டப்பா கார்டல் பாத்திருக்கீங்களா?

    OTT Watch: பிரபல பாலிவுட் வெப்சீரிஸான டப்பா கார்டல் தொடரினை பார்ப்பது வொர்த்தா, வெத்தா என்பது குறித்த திரைவிமர்சனம் இங்கே.

    டப்பா கார்டல் என்பது 2025-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள த்ரில்லர் வெப் சீரீஸாகும். 1960களின் மும்பையை பின்னணியாகக் கொண்ட இந்த கதையில், நடுத்தர வர்க்க பெண்களான ஷாலினி பாண்டே மற்றும் நிமிஷா ஒரு சாதாரண டிபன் சப்ளை சேவையைத் தொடங்குகிறார்கள்.

    முதலில் ஹெர்பல் வயகராவை கொடுத்து சம்பாரிக்கும் இவர்கள் தங்கள் தங்கும் அபார்ட்மெண்ட்டில் வேலை செய்ய முடியாததால் தனி அப்பார்ட்மெண்ட் செல்கின்றனர். அங்கு நிமிஷாவின் காதலர் மோசமான வீடியோவை எடுத்து வைத்து கஞ்சாவை கை மாத்த சொல்கின்றனர்.

    அப்போது அந்த வீட்டை எடுத்து கொடுத்த புரோக்கர் அஞ்சலி ஆனந்துக்கு இந்த விஷயம் தெரிய மூவரும் கூட்டணி போட்டு இதை செய்கின்றனர். ஒரு கட்டத்தில் பெரிய பிரச்னையில் சிக்க அவர் மாமியார் ஷபானா அஸ்மி உள்ளே வருகிறார். அவரோ முன் ஒரு காலத்தில் பெரிய கடத்தல் டீமில் இருந்த விஷயம் தெரிய வெப்சிரீஸ் பரபரப்பாகி விடுகிறது.

    இவர்கள் சம்பாரித்த பணத்தினை ஜோதிகாவின் பொட்டிக்கில் போட இன்னொரு பிரச்னை தலை தூக்குகிறது. இதில் இருந்த இந்த ஐவர் எப்படி தப்பித்தார்கள்? போலீஸ் இவர்களை சிக்க வைத்ததா என்ற கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது.

    முழுக்க முழுக்க பெண்களின் நடிப்பில் எதிரிகளை எதிர்க்கும் அவர்களின் புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு வலுவான கதையை சொல்லுகிறது. சீரியசாக தொடங்கிய கதை இடையே கொஞ்சம் அலுப்பை தட்டினாலும் கடைசியில் சரியாக சென்று முடிகிறது.

    கடைசியில் ஒரு ட்விஸ்ட்டுடன் இன்னொரு சீசனுக்கு வழி விட்டு முடித்துள்ளனர். ஐந்து பெண்களுமே நடிப்பில் சக்கை போடு போட்டுள்ளனர். அதிலும் வேலைக்கார பெண்ணாக வரும் நிமிஷா அப்ளாஸ் தட்டும் அளவுக்கு நடிப்பை கொட்டு விட்டார்.

    7 எபிசோட்களை கொண்ட இந்த சீரிஸ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம டைம் பாஸாக அமையும். மற்ற ஷாலினி பாண்டே, நிமிஷா, அஞ்சனா, ஷபானா இடையே ஜோதிகா நடிப்பில் சொதப்பி இருப்பது மட்டுமே மைனஸாகி இருக்கிறது.

  • எல்லாமே தமிழ்நாடுதான்! ஜோதிகா பற்றிய கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த தேவயாணி

    Devayani:இன்று தேவயானி நடிப்பில் நிழற்குடை திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தேவயானியை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல கேள்விகளை கேட்டனர். நிழற்குடை திரைப்படம் என்பது பெற்றோர் கவனிப்பில் பிள்ளைகள் கண்டிப்பாக வளர்க்கப்பட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் டிவி என அவர்களுக்கு என ஒரு தனி உலகை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உறவு என்றால் என்ன? உறவுகளுக்கு இடையே இருக்கும் பீலிங்ஸ் அனைத்தையும் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும்.

    நாம் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்தால்தான் பிற்காலத்தில் நம்மையும் அவர்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள். இப்போது முதியோர் இல்லம் பெருமளவு வந்துவிட்டது. அதை குறைக்க வேண்டும் என்பதை தான் இந்த படம் நமக்கு சொல்லித் தரும் என கூறியிருக்கிறார் தேவயானி. ஏன் படங்களிலேயே நீங்கள் நடிக்கவே இல்லை என்ற ஒரு கேள்வி அவரிடம் கேட்டபோது கண்டிப்பாக நடிப்பேன் சார். இனிமேல் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமையும் போது நல்ல நல்ல கதாபாத்திரம் வரும் பொழுது கண்டிப்பாக இனிமேல் நடிப்பேன் என கூறி இருக்கிறார்.

    அது மட்டுமல்ல குழந்தைகளை கவனிக்கும் முறை பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டபோது தன்னுடைய குழந்தைகளை பள்ளியில் தானே காரை ஓட்டிச் சென்று தான் அவர்களை விடுவேன். யாரை நம்பியும் நானும் என் கணவரும் என் குழந்தைகளை விட்டது கிடையாது. இப்போது சமையல் கூட நானே தான் சமைக்கிறேன். நான் இல்லாத போது வீட்டில் சமைத்துக் கொள்வார்கள். உதவிக்கு என ஆள் தனியாக வைக்கவில்லை. இப்படி என்னுடைய குழந்தைகளை நானும் என் கணவரும் தான் இப்போது வரை பார்த்து வருகிறோம் என கூறினார்.

    இந்த நிலையில் ஜோதிகா பற்றிய ஒரு கேள்வியும் தேவையானிடம் கேட்கப்பட்டது. அதாவது தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நிறைய கதாநாயகிகள் வேற மாநிலங்களில் சென்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதைகள் பண்ணுவதில்லை. எந்த இயக்குனர்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்க அதற்கு தேவையான மற்ற மொழி என்றால் எதை சொல்கிறீர்கள் என திருப்பி கேட்டார்.

    அதற்கு அந்த பத்திரிக்கையாளர் உதாரணமாக ஜோதிகா இப்போது இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க நான் அப்படி போகவே இல்லை. எல்லாமே எனக்கு தமிழ்நாடு தான் கொடுத்திருக்கிறது. ரொம்ப நல்ல படங்கள் ரொம்ப திருப்தியோடு இருக்கிறேன். இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாராவது என்னை வந்து கேட்டாலும் அந்த கதையை கேட்டுவிட்டு நன்றாக இருந்தால் தான் அதில் நான் நடிப்பேன். ஆனால் எப்பொழுதுமே தமிழில் தான் நான் மிகவும் பிசியாக இருந்திருக்கிறேன். மற்ற மொழிகளில் எனக்கு நல்ல நல்ல படங்கள் வந்திருந்தாலும் தமிழ் மொழியில் டேட்ஸ் இருக்கிறதா ஏதாவது நாம் கால் சீட்டு கொடுத்திருக்கிறோமா என பார்த்துவிட்டு தான் அதற்கு ஏற்ப நான் மற்ற மொழிகளில் நடித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய முதல் முன்னுரிமை எப்பொழுதுமே தமிழ் சினிமாவிற்கு மட்டும்தான் என தேவயாணி கூறினார்.

  • ஜோதிகா அப்படி சொன்னதும் கஷ்டமா போச்சு.. ஜெய் பீம் பட நடிகை சொன்ன தகவல்

    லிஜோமோல் ஜோஸ்: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். ஜெய் பீம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் செங்கனியாக மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் அவருக்கும் மணிகண்டனுக்கும் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு மணிகண்டன் கதாபாத்திரமும் லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    செங்கனியாக கலக்கிய லிஜோமோல் ஜோஸ்: ஒரு மாடர்ன் ஆன பொண்ணு .ஆனால் அந்த படத்தின் கேரக்டருக்காக முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டு கிராமத்து பெண்ணாக அவருடைய நடையில் இருந்து எல்லாமுமே கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரிய விஷயம் .தற்போது அவருடைய நடிப்பில் காதல் என்பது பொதுவுடமை என்ற படம் பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது.

    இப்படி ஒரு படமா?: இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். இரண்டு பெண்களுக்கு இடையேயான அன்பு காதல் இவைகளை உணர்த்தும் படமாக இது இருக்கப் போகிறது. ஜெய் பீம் போன்ற ஒரு சமூக கருத்தை பேசிய படத்தில் நடித்த நடிகை எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது பலரின் கேள்வியாக இருக்கும். ஆனால் எல்லாமே நடிப்பு தான். எந்த ஒரு கதாபாத்திரமானாலும் சினிமாவிற்கு என வந்துவிட்டால் அதை ஒரு கேரக்டராக எடுத்து நடித்து தான் ஆக வேண்டும்.

    காதல் என்பது பொதுவுடைமை: அதுவும் இந்த கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக துணிந்து நடிக்க மாட்டார்கள். அதற்கே ஒரு தைரியம் வேண்டும். அது லிஜோமோல் ஜோஸுக்கு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நடந்து கொண்டிருக்க லிஜோமோல் ஜோஸ் காதல் என்பது பொதுவுடமை படத்தை பற்றியும் அவர் நடித்த ஜெய் பீம் படத்தை பற்றியும் அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார்.

    ஜெய் பீம் படத்தில் நடித்து முடித்ததும் படத்தை பார்த்த ஜோதிகா லிஜோமோல் ஜோஸை அழைத்து சூர்யாவை விட இந்தப் படத்தில் நீங்கள் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று கூறினாராம். ஜோதிகா இப்படி சொல்லுவார் என நான் நினைக்கவே இல்லை. பெரிய வார்த்தை .ஒரு பக்கம் அதைக் கேட்டதும் கஷ்டமாக இருந்தது .ஏனெனில் சூர்யா எப்பேர் பட்ட நடிகர்.

    அவரைவிட நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என சொன்னதும் ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இது ஒரு பெரிய விருதாக நான் நினைத்துக் கொண்டேன். ஜோதிகா ஒரு பக்கம் பல்வேறு படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர். அவரே இப்படி சொல்லும் போது எனக்கு பெருமையாகவும் இருந்தது என கூறினார்.

  • அதுக்குள்ள தியா இவ்ளோ வளர்ந்துட்டாங்க.. குடும்பத்துடன் விழாவிற்கு வந்த சூர்யா ஜோதிகா

    லக்கி கபில்: தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஜோடி யார் என்றால் சூர்யா மற்றும் ஜோதிகாதான். சுமார் நான்கு வருடங்களாக காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு மகன் மற்றும் மகள். மகன் பெயர் தேவ் மகள் பெயர் தியா.

    ஆரம்பத்தில் எதிர்ப்பு ; இவர்கள் திருமணத்தை பொறுத்த வரைக்கும் பொதுவாக காதல் திருமணம் என்றாலே ஆரம்பத்தில் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள். அப்படித்தான் இவர்கள் திருமணத்திலும் நடந்திருக்கிறது. முதலில் சூர்யா ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் நான்கு வருடங்களாக காத்திருந்து பின்னர் சிவக்குமார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.

    காதல் திருமணம்: சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் தான் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம். அப்போது இருந்தே இருவருக்கும் ஆன நட்பு ஆரம்பமாகி இருக்கிறது. அந்த நட்பு போக போக காதலாக மாறி இருக்கிறது. ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு தான் அவர்களின் திருமணமும் நடந்தது.

    ஜோதிகாவின் மீது அன்பு: அதற்கு முன்பு வரை சூர்யா தான் எந்த படங்களில் ஒப்பந்தமானாலும் அதில் ஜோதிகாவை ஹீரோயினாக போட வேண்டும் என சிபாரிசு செய்து இருக்கிறார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே ஜோதிகாவின் மீது அதிக அன்பு கொண்டவராக இருந்து வருகிறார் சூர்யா .இப்போது வரை ஒரு நல்ல தம்பதிகளாக சினிமாவில் இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

    ஆரம்பத்தில் சென்னையில் தங்கியிருந்த இவர்கள் இப்போது பிள்ளைகளின் படிப்பு மற்றும் கெரியர் இவைகளுக்காக மும்பையில் செட்டிலாகி இருக்கின்றனர். அவ்வப்போது சென்னைக்கும் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் அகரம் அறக்கட்டளை நிறுவனத்தை நடத்தி வந்த சூர்யா இப்போது அந்த அறக்கட்டளையின் புதிய அலுவலகம் ஒன்றை சென்னையில் திறந்திருக்கிறார்.

    அந்த திறப்பு விழாவிற்கு சூர்யா ஜோதிகா தன் மகன் மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் மகள் தியா தோளுக்கு மேல் வளர்ந்து பெரிய பொண்ணாக இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் அதுக்குள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா என கூறி வருகின்றனர்.

    இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DGICdroxL2q/?igsh=ZDlhaGY3ODl2YjVo

  • கடைசி வரை சூர்யாவுக்கு கஞ்சி கிடைக்காது போல!.. மீண்டும் வாயை விட்ட ஜோதிகா.. புண்ணாகிடுச்சே!

    Jyothika: ஜோதிகா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பாலிவுட் பக்கம் வாய்ப்புக்காக பல்டி அடிக்க வேண்டி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் ஜோதிகா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தன்னுடைய நடித்த சக நடிகரான சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

    அதை தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே தனி நாயகி கதையாகவே இருக்கிறது.

    தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வந்தார். திடீரென தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆகினார். அதற்கு சூர்யா மற்றும் ஜோதிகா என இருவரும் வெவ்வேறு காரணம் சொல்லி சிக்கினர்.

    சூர்யாவுக்கு பாலிவுட் ஆசை காட்டினாலும் அவருக்கு ஒற்றை வாய்ப்பு கூட கிடைக்காமல் பல்ப் வாங்கி மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துவிட்டார். இதில் சூர்யா நடித்த கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்தது.

    அதற்கு முதல் ஆளாக ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டா மூலம் மற்ற நடிகர்களை கணவருக்காக தாக்கி தேவையில்லாமல் பேசி ரசிகர்களிடம் வசை வாங்கினார். இது ஒரு புறம் இருக்க அம்மணி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    அஜய் தேவ்கானுடன் சைத்தான் திரைப்படம், டப்பா கார்டல் வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தற்போது பாலிவுட் பக்கம் ஐஸ் வைக்க தமிழ் திரையுலகத்தை சாடி பேசி மீண்டும் மாட்டி இருக்கிறார்.

    தமிழ் திரையுலகத்தில் ஹீரோயின்கள் எல்லாரும் ஹீரோவை டான்ஸ் ஆடி வாழ்த்ததான் வேண்டும். பாலிவுட்டில் இது மாறிவிட்டது. ஆனால் தமிழில் இது இன்னமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நான் என்னுடைய சினிமா வாழ்க்கையின் 10 வருடம் முடிந்த பின்னர், எல்லா ஹீரோக்களுடன் நடித்து இருந்தேன். அதன்பின் ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்யும் போது ஹீரோவை மட்டுமே மையமாக கதையாக தான் தேர்வு செய்வேன் எனவும் பேசி இருக்கிறார்.

    அம்மணி உங்க கணவர் நடித்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியும். அவரையும் கொஞ்சம் கேளுங்க என தற்போது ஜோதிகாவை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். அப்ப அப்ப வாயு சும்மா இல்லாம இப்படி பேசி சிக்கிடுறீங்களே தாயி!.

  • நேத்து வந்த அழகிய லைலாவுக்கு இருக்குற அறிவு!.. பல வருஷம் சம்பாதித்த அழகூரில் பூத்தவளேக்கு இல்லையே?

    Nikhila Vimal: தன்னுடைய சினிமா உலகத்தை குறித்து வாய்ப்புக்காக அண்டை மாநிலத்தில் அசிங்கமாக பேசும் ஜோதிகாவை விட எங்கும் விட்டுக்கொடுக்காமல் பேசும் நிகிலா விமலுக்கு அப்ளாஸ் குவிந்துள்ளது.

    பொதுவாக நடிகைகள் தங்களுடைய வாய்ப்புக்காக அவ்வப்போது திரித்து பேசுவது வழக்கம் தான். எந்த மொழியில் வாய்ப்பு வேணுமோ அதை தூக்கி பேசிவிடுவார்கள். ஆனால் பிரபல நடிகைகள் இதில் கொஞ்சம் நிதானமாக தான் இருப்பார்கள்.

    அந்த வகையில் எங்கு சென்றாலும் தங்களுடைய சொந்த மொழியை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். ஆனால் ஜோதிகா சமீபகாலமாகவே பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பேட்டிகளில் தமிழ் மொழியை மட்டம் தட்டி பேசி வருகிறார்.

    சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹீரோயின் ஒரு ஹீரோவை புகழ்ந்து பாட மட்டுமே இருப்பார்கள். நான் 10 வருட சினிமா வாழ்க்கைக்கு பின்னர் எல்லா ஹீரோக்களுடன் நடித்த பின்னர் அப்படி கதை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

    இது இணையத்தில் பேசு பொருளானது. பல வருடமாக கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ஜோதிகா. அவருக்கு சந்திரமுகி போன்று படத்தினை கொடுத்த திரையுலகத்தினை அசிங்கப்படுத்தலாமா எனவும் பலரும் கேள்வி எழுப்பினர்.

    இந்நிலையில் நடிகை நிகிலா விமலால் மீண்டும் தற்போது ஜோதிகா அடி வாங்கி வருகிறார். அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் மற்றும் மலையாள உலகின் வித்தியாசம் குறித்து கேட்ட போது தமிழில் சம்பளம் நன்றாக இருக்கும் என்றார்.

    மேலும் ஹீரோயின் வொர்ஷிப் என்ற கேட்ட போது எங்க ஊரில் யாரையுமே வொர்ஷிப் அதாவது ரொம்ப அதீதமாக வழிபாடு எல்லாம் செய்யவே மாட்டார்கள் என பெருமையாக சொல்லி இருக்கிறார். அவர் மற்ற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் தன் மொழியை குறிப்பிடுவதில் கூட அத்தனை பிரியம் காட்டுகிறார்.

    ஆனால் தன்னை வளர்த்துவிட்ட ஒரு திரையுலகத்தினை இத்தனை பிரபல நடிகை இப்படி பேசு வருகிறாரே என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • நாய் மாறி வேலை செய்யணும்!.. அப்போதான் அப்படி வாழலாம்!.. சூர்யாவின் தத்துவத்தை பாருங்க!..

    நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொன்ன வார்த்தையை தான் இன்னமும் பின்பற்றி வருவதாக பேசி இருப்பது ரசிகர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கோலிவுட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

    நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய சரிவை கொடுத்தது.

    ஆனாலும் நடிகர் சூர்யா துண்டு விழாமல் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கண்ணாடிப் பூ பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த சிங்கிளை சீக்கிரமே வெளியிட போவதாகவும் ரசிகர்களுக்கு அந்த பாடலும் நிச்சயம் பிடிக்கும் என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் பாடல் வேலையில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கர் பிஸியாக இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நாயைப் போல உழைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ராஜா போல வாழ முடியும் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒருமுறை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை இன்னமும் தான் கடைப்பிடித்து வருவதாக சூர்யா கூறியுள்ளார்,

  • பக்தி முத்திடுச்சு போலேயே!.. மனைவி ஜோதிகாவுடன் மூகாம்பிகை கோவிலுக்கு சென்ற சூர்யா!..

    நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த இரண்டு வருடங்களாக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

    இதையும் படிங்க: Biggboss Tamil: மாஸ் காட்டுறேனு மக்கா இருக்காதீங்க… தர்ஷிகாவை பொளக்கும் ரசிகர்கள்…

    உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பேன் இந்தியா திரைப்படமாக கடந்த நவம்பர் 14ஆம் தேதி இப்படம் வெளியானது. படம் குறித்து படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அளவில் பேசி பில்டப் கொடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் படம் வெளியாகி எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. இது ரசிகர்களை மிகுந்த கோபமடைய செய்தது.

    இதனால் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத காரணத்தினால் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றது. படத்திற்கு வந்த தொடர் நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்த சூர்யாவின் மனைவியான ஜோதிகா கங்குவா படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியவர்களை கண்டித்து பதிவும் போட்டிருந்தார்.

    கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்த பலரும் திரையரங்குக்கு வெளியில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்கும் நபர்களை ஊக்குவிக்கும் youtube சேனல்களின் பப்ளிக் விமர்சனத்திற்கு தடை போடும் அளவுக்கு கங்குவா விமர்சனம் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் நடிகர் சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் சிறுத்தை சிவா உடன் சென்னை சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் கொல்லூர் பகுதியில் இருக்கும் மூகாம்பிகை கோயிலுக்கு மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா சென்று இருக்கின்றார். கங்குவா படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த நிலையில் சில கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை சூர்யா செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

    இதையும் படிங்க: Game Changer: இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் படம்.. ‘கேம் சேஞ்சர்’ பற்றி ஷங்கர் சொன்ன புது தகவல்

    அந்த வகையில் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று அங்கு சண்டி யாகம் செய்திருக்கிறாராம். வாழ்க்கையில் தொடர்ந்து வரும் தடைகளை தகர்ப்பதற்கு சண்டியாகத்தை மக்கள் செய்வது வழக்கம். இதனை சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.