Tag: kamal

  • ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?

    ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?

    ரஜினிகாந்த் – கமல்ஹாசனை இயக்கப் போகிறார் சுந்தர். சி என அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் இந்த படம் அருணாச்சலம் மாதிரி வருமா? அல்லது அன்பே சிவம் மாதிரி வருமா? என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினர். ஆனால், யார் கண் பட்டதோ படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வேண்டாம் என வெளியேறிவிட்டார் சுந்தர். சி.

    மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிரடியாக வேட்பாளராக மதுரையில் பிடிஆரை எதிர்த்து போட்டியிட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படத்தை ஏன் இயக்கவில்லை என்கிற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

    30 வருஷத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் சாரை அருணாச்சலம் படத்தில் இயக்கும் போது நிலைமை வேறு. அவருக்கு நான் சொன்ன குடும்ப பாங்கான காமெடி படத்தின் கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அவருக்கு வேறு விதமான படம் பண்ன வேண்டிய நிலை உள்ளது.

    அதிக பிரஷர் காரணமாகவே படத்தில் இருந்து விலகிவிட்டேன். கண்டிப்பாக படம் எடுக்க ஆரம்பித்தாலும், பாதியில் வெளியேறும் சூழல் ஏற்பட்டால் அது நல்லா இருக்காதுன்னு நினைச்சுத்தான் வெளியேறினேன். வெளியேறுவதற்கு முன்பாக ரஜினி சாரிடம் என்னோட நிலைப்பாட்டை சொன்னேன். அவர் நீங்க எப்போ சொன்னாலும் உங்க கதையை பண்ணலாம் என சொல்லிவிட்டார் என்றார்.

    சுந்தர். சிக்கு ரஜினிகாந்தின் மகள்களில் ஒருவர் தான் அழுத்தம் கொடுத்ததாக வதந்திகள் பரவிய நிலையில், அதெல்லாம் வதந்தி தான் என்பது சுந்தர். சியின் பதில் மூலம் தெரிந்துள்ளது. வரும் மே 4ம் தேதி சுந்தர். சி வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினியின் 173 வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன்பின் அந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது..

    ஆனால் திடீரென சிபி சக்கரவர்த்தியும் இந்த படத்திலிருந்து இருந்து விலகவிருப்பதாகவும் அவருக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் சில நாட்களில் அந்த கதையில் சில மாற்றங்களை ரஜினி செய்ய சொல்லியிருப்பதகவும், சிபி அதற்காக வேலையி ஈடுபட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. கதையை மாற்றியபின் ரஜினிக்கு அது பிடித்திருந்தால் சிபியே இயக்குனதாக தொடர்வார்.. இல்லையெனில் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வருவார் எனவும் சொல்லப்பட்டது.

    ரஜினியை வைத்து தான் இயக்கவிருந்த படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ வேடத்திலும், இயக்குனர் ஷங்கரை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என சிபிராஜ் சொல்ல கமல், ஷங்கர் இருவரிடம் பேசி ஒப்புதலையும் வாங்கி வைத்திருந்தார்களாம். அதேநேரம், ரஜினியின் 173வது படத்தை சிபி இயக்கினால் மட்டுமே இது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

  • சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    சிபியா? அஸ்வத் மாரிமுத்துவா?.. மங்காத்தா ஆடும் ரஜினி!.. அவரை நம்பி சிம்பு படம் போச்சே!..

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர்.சி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே.பாலாஜி, சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி இறுதியாக சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்து அறிவிப்பும் வெளியானது..

    ரஜினி தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து விட்டதால் குடும்ப செண்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
    ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தியும் வெளியேறி விட்டதாகவும், அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி கதையில் பல மாற்றங்களை சொன்னதோடு, துரந்தர் போல கதையை மாற்ற சொன்னதால்தான் இந்த படத்திலிருந்து சிபி வெளியேறியதாக சொல்லப்பட்டது..

    ஒருபக்கம் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு புதிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக இருந்தது. அதன் சூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில்தான் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததது. இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திடமும், சிம்புவிடமும் சொல்லிவிட்டு ரஜினி படத்துக்கு தயாரானார் அஸ்வத்து மாரிமுத்து. ஆனால், ரஜினி சொன்ன மாற்றங்களை சிபி சக்ரவர்த்தி செய்து வருவதாகவும் அது ரஜினிக்கு பிடித்து விட்டால் சிபி சக்கரவர்த்தியே இயக்குனராக தொடர்வார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

    இதையடுத்து அஸ்வத் மாரிமுத்துவைன் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் ஏஜிஎஸ் நிறுவனமும் சரி.. சிம்புவும் வரி.. அஸ்வத்துக்காக காத்திருக்க தயாராக இல்லை.. வேறு இயக்குனரை வைத்து ஒரு படத்தை துவங்கும் முடிவுக்கு வந்து விட்டார்கள். ஒருவேளை சிபி சக்ரவர்த்தியை மீண்டும் ரஜினியை டிக் அடித்துவிட்டால் ரஜினியை நம்பி சிம்பு படத்தை அஸ்வத் இழக்க நேரிடும். எல்லாம் ரஜினியின் முடிவில்தான் இருக்கிறது..

  • 6 காதல் பண்ணியும் காயத்தில் முடிந்தது!. இனிமே சிங்கிள்தான்!.. ஸ்ருதிஹாசன் ஃபீலிங்!…

    6 காதல் பண்ணியும் காயத்தில் முடிந்தது!. இனிமே சிங்கிள்தான்!.. ஸ்ருதிஹாசன் ஃபீலிங்!…

    நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இசையில் ஆர்வம் கொண்டவர்.. லண்டனில் சென்று மேற்கத்திய இசை பயின்றவர். உன்னைபோல் ஒருவன் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். நிறைய படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் நடிப்பது ஸ்ருதிஹாசன் நிறுத்திவிட்டார்..

    ஒருபக்கம் தனது வாழ்வில் பல காதல்களை கடந்து வந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். நடிகர் சித்தார்த்தோடு இவர் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின் லண்டனை சேர்ந்த பாடகர் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்தார்.. சில வருடங்களில் அது பிரேக் அப் ஆனது. அதன்பின் மும்பையில் வசித்து வரும் சாந்தனு ஹசாரிக்கா என்கிற ஓவியரை காதலித்தார்.. இருவரும் லிவிங் டூ கெதரில் சில வருடங்கள் இருந்தார்கள்.. காதலுடன் இருக்கும் பல புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதி.

    இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன் ‘நான் இதுவரை ஆறு முறை ஆழமாக காதலித்திருக்கிறேன்.. ஆனால் ஆறு முறை காதலும் கதைகளாக அல்லாமல் காயங்களாகவே முடிந்தது.. ஒவ்வொரு பிரிவும் என்னை வேறுபட்டவளாக மாற்றியது.. இப்போது அமைதியை தேர்வு செய்கிறேன்.. இப்போதைக்கு தனியாக இருக்க தீர்மானித்திருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

  • ரஜினி, கமலுக்கு சூப்பர்ஹிட் தந்த எஸ்.பி.முத்துராமன்… அவருக்கு இருந்த அந்த ஆசை!

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், உலகநாயகன் கமல்ஹாசனையும் வைத்து பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். அந்த வகையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமலுக்கு ஒரு சகலகலாவல்லவன், ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை என இந்த இரு படங்களைச் சொன்னாலே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எந்தளவு வரவேற்பைப் பெற்றது என்று உங்களுக்கேத் தெரியும்.

    ஆனால் அவருக்குள்ளே நடிக்கின்ற ஆசை இருக்குன்னு சொன்னா யாராவது நம்புவீங்களா? ஆனால் அப்படி ஒரு ஆசை அவருக்கு ஆரம்ப கட்டத்திலே இருந்தது என்பதுதான் உண்மை. தெய்வப்பிறவி படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார் எஸ்.பி.முத்துராமன். அந்தப் படத்தில் அவருக்கு நடிக்கிற ஆசை இருக்கு என்பதை அந்தப் படத்தின் இயக்குனரான கிருஷ்ணன் பஞ்சு எப்படியோ தெரிந்து கொண்டார்.

    அதன் காரணமாகத் தான் அங்கமுத்துவின் மகனாக நடிக்கின்ற வாய்ப்பை அவருக்கு அந்தப் படத்தில் உருவாக்கித் தந்தார். முதல் படத்திலே நடிகர் திலகம் சிவாஜிகணேசனோடு நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது நிஜமாகவே எனது அதிர்ஷ்டம். அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் மட்டும் நினைத்து இருந்தால் அவர் இயக்கும் படங்களில் கூட நடித்து இருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின்னால அவருக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் போனது.

  • Rajini-Kamal: 46 வருடங்களுக்கு பிறகு நடந்த அந்த ஒரு மேஜிக்.. ரஜினி கமல் இணையும் புரோமோ சூட்

    ரஜினி கமல் இணையும் புதிய படத்தின் புரோமோ சூட் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 46 வருடங்களுக்கு பிறகு இருவரும் திரையில் ஒன்றாக வர இருக்கிறார்கள். இவர்க இணைந்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். இணைந்து நடித்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அந்த வகையில் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

    அந்த ஒரு மேஜிக் இப்போது நடைபெற்றிருக்கிறது. அவர்கள் இணையும் படத்தை நெல்சன் தான் இயக்க இருக்கிறார். அதனால் மிகவும் அதிர்ஷ்டசாலியான இயக்குனர் என நெல்சனை கோலிவுட்டில் புகழ்ந்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே ரஜினியை வைத்து நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார்.

    கமலுடன் இணைவது இதுதான் முதல் முறை. இந்த புரோமோ ஜெயிலர் 2 படத்தின் புரோமோவை போல் ஃபன்னாக இருக்கப் போகிறது என்று கூறுகிறார்கள். அதாவது ஜெயிலர் 2 படத்தின் புரோமோவில் அனிருத் மற்றும் நெல்சன் இருவரும் காமெடியாக ஒன்று செய்திருப்பார்கள். அதே மாதிரியான புரோமோவாக இது இருக்கும் என்று சொல்கிறார்கள்.

    படத்தை பொறுத்தவரைக்கும் மாஸாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான அறிவிப்பு தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்று சொல்கிறார்கள். அதற்குள் ரஜினியின் எல்லா முந்தையை படங்களும் முடிந்துவிடும் என்பதால் இந்தப் படத்தில் ரஜினி மிகவும் ரிலாக்ஸாக நடிப்பார் என்று தெரிகிறது.

    ரஜினி படம் என்பது வேறு. ரஜினி கமல் இணையும் படம் என்பதால் படத்திற்கான ஹைப்பும் இப்போதிலிருந்தே அதிகமாகிவிட்டது, ரஜினி கமல் ரசிகர்கள் அந்த நேரத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • Kamal vs Vijay: நான் இங்க ஆட வரல! விஜயை மறைமுகமாக தாக்கிய கமல்.. தரமான அடி

    விஜயின் அரசியல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க அவரை தாக்கி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜய் சொன்னதிலிருந்து ஒட்டுமொத்த எல்லா கட்சிகளும் விஜய்க்கு எதிராக அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய ஒரே எதிரி திமுக என்றுதான் கூறி வருகின்றார்.

    அதைப்போல மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்த்தும் அவருடைய விமர்சனங்களை வைத்து வருகிறார். விஜய் ஒரு நடிகராகவும் இருப்பதால் சினிமா துறையில் இருந்தும் அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ யாரும் குரல் கொடுக்க முன் வருவதில்லை. ஆதரவாக குரல் கொடுத்தால் எங்க நம் படத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று ஒரு சில பேர் நினைக்கிறார்கள். இந்த நிலையில் விஜயை மறைமுகமாக தாக்கி ஒரு மேடையில் கமல் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    இதே கமல்தான் ஒரு விழா மேடையில் விஜய்க்கு விருது கொடுக்கும் பொழுது சீக்கிரம் உங்களை எதிர்பார்க்கிறோம் என கூறி அந்த விருதை விஜய்க்கு வழங்கியிருப்பார். நேற்று கமல் அவருடைய மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி இருந்தார். அப்போது கீழே இருந்த ரசிகர் ஒருவர் ஒரு கேள்வி கேட்க அதற்கு கமல் கூறிய பதில் இதோ : இல்லைங்க நான் நடிக்க வரல. அந்த ரசிகர் ஒரு சினிமா ரசிகர்.

    அதாவது சதிலீலாவதி படத்தில் கோயம்புத்தூர் பாஷையில் அற்புதமாக பேசி நடித்திருப்பார் கமல். அதை நேற்று அந்த மேடையில் பேச சொல்லி அந்த ரசிகர் கேட்க அதற்கு கமல் இல்லைங்க நான் நடிக்க வரல. அதை பாக்கணும் என்றால் யூடியூபில் அந்த படத்தை போட்டு பாருங்க. இங்கே உங்கள் எதிர்காலத்தை மட்டும் பற்றி பேச வந்திருக்கிறேன். இங்கே என்னை நடிக்க சொல்லாதீங்க. டான்ஸ் ஆட சொல்லாதீங்க.

    இங்கே பாட சொல்லாதீங்க. அப்படி நான் பாடணும் ஆடணும் என்றால் டிக்கெட் வாங்கிக்கோங்க. நான் வந்தது அந்த வேலையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னைக்கு ஏதோ ஒரு கோடியில் பிடிபட்டது என்று சொல்கிறார்கள். நான் ஒரு நாள் வேலை செய்தால் அந்த கோடியை நான் சம்பளமாக பெற முடியும். யார்கிட்ட கதை விடுகிறீர்கள் என மிக ஆக்ரோஷமாக அந்த மேடையில் பேசியுள்ளார். இதை நெட்டிசன்கள் விஜயை மறைமுகமாக தாக்கி கமல் பேசியதாக இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

  • Rajini Kamal: ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம்! வெளியான புது அப்டேட்

    தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னர்களாக கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இருவருக்கும் இந்த திரையுலகில் பெரிய மரியாதையும் மதிப்பும் இருந்து வருகிறது. பெரிய ஆளுமைகளாகவே திகழ்ந்து வருகிறார்கள். நடிப்பு என்றால் அது கமல். ஸ்டைல் என்றால் அது ரஜினி. ஆனால் இருவருக்கும் உண்டான ரசிகர் பலம் மிகப்பெரியது.

    இந்த நிலையில் ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அந்தப் படத்தை இயக்கப் போவது சிபி சக்கரவர்த்தி என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. கமலும் சரி ரஜினியும் சரி சமீபகாலமாக ஆக்‌ஷன் சம்பந்தப்பட்ட படங்களிலேயே நடித்து வருவதால் ரஜினியை வைத்து கமல் தயாரிக்க போகும் படமாவது ஒரு லைட் வெயிட் சப்ஜெக்ட்டாக இருக்க வேண்டும் என்று இருவருமே முடிவு செய்தனர்.

    அதற்கேற்ப இயக்குனரும் ஹியூமர் சென்ஸ் உள்ள நபராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். அந்த வகையில் சிபி சக்கரவர்த்தியை லாக் செய்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே ரஜினியும் கமலும் ஒரு புதிய படத்தில் இணைவதாக இருந்தது. ஆரம்பகாலங்களில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இருவருக்கும் தனித்தனியாக மார்கெட் உயர்ந்த நிலையில் தனித்தனியாக நடிக்க முடிவு செய்து இப்போது வரை இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

    ஆனால் மீண்டும் அந்த இருவரையும் இணைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். அது முடியாமல் போனது. அதன் பிறகு இருவருமே ஆசைப்பட்டு இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என்ற முடிவெடுத்தனர். அந்த வகையில் இருவரையும் இணைக்க போகும் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியையும் கமலையும் வைத்து நெல்சன் தான் படத்தை இயக்கப் போகிறாராம்.

    அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வீடியோ இன்னும் இருவாரத்திற்குள் வரலாம் என்றும் தெரிகிறது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

  • Thalaivar173: அப்போ விட்டத இப்போ பிடிச்ச சிபி சக்ரவர்த்தி!.. ஒரு பிளாஷ்பேக்!….

    ரஜினி இப்போது நெல்சன் இயக்கியத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் அவரின் 173 வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
    ஆனால் சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர்.சி. அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

    எனவே, வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பது உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை தற்போது ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    மேலும் இந்த படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த சிபி சக்கரவர்த்தி இந்த படம் 100 கோடி வசூலை பெற்றது. உடனே சிபியை அழைத்து பாராட்டிய ரஜினி வழக்கம்போல் ‘எனக்கு ஏதேனும் லைன் இருக்கிறதா?’ என கேட்க அவருக்காக ஒரு கதையை உருவாக்கினார் சிபி சக்கரவர்த்தி. தீவிர ரஜினி ரசிகரான சிபி ரஜினியை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்கிற ஆசையில் இருந்தார். ஆனால் கதை பிடிக்கவில்லை என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார் ரஜினி.

    தற்போது மூன்றரை வருடங்கள் கழித்து தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதால் அந்த வாய்ப்பு சிபிக்கு கிடைத்திருக்கிறது.
    டான் படத்திற்கு பின் ரஜினி படம் மிஸ் ஆகி மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க முயற்சிகள் செய்து அது நடக்காமல் தெலுங்கு நடிகர் நானிக்கு ஒரு கதை சொல்லி அதுவும் நடக்காமல் தற்போது ரஜினி பட இயக்குனராக மாறியிருக்கிறார். மொத்தத்தில் அப்போது விட்டதை இப்போது பிடித்திருக்கிறார் சிபி சக்கரவர்த்தி

  • Kamal: எனக்கு பிடிக்கல!. வீட்டுக்கு வராதீங்க!.. கமலிடம் சொன்ன இயக்குனர் ராஜகுமாரன்!..

    இயக்குனர் விக்ரமனிடம் சூரிய வம்சம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ராஜகுமாரன். தேவயானியை வைத்து ‘நீ வருவாய் என’ என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் சரத்குமார், விக்ரம் மற்றும் தேவயானி ஆகியோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தையும் இயக்கினார்.

    மேலும், முரளி, தேவையானியை வைத்து ‘காதலுடன்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். கடைசியாக தேவயானிக்கு ஜோடியாக அவரே ஹீரோவாக நடித்து ‘திருமதி தமிழ்’ என்கிற படத்தையும் இயக்கினார். அந்த படம் ஓடவில்லை. கடந்த 12 வருடங்களாக ராஜகுமாரன் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதேநேரம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

    தேவயானியின் கணவர் என்கிற அடையாளத்தோடு வலம் வரும் ராஜகுமாரன் ஊடகங்களில் தொடர்ந்து பலரை பற்றியும் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார். சீயான் விக்ரம், கமல்ஹாசன் எல்லாம் சிறந்த நடிகர்களே இல்லை.. விஜய்க்கு நடிக்கவே தெரியாது.. மகேந்திரன் சிறந்த இயக்குனர் இல்லை என்றெல்லாம் பேட்டி கொடுத்து ட்ரோலில் சிக்கினார்.

    rajakumaran
    rajakumaran

    இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த ராஜகுமாரன் ‘கமல் சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி கமல் சார் உங்க வீட்டுக்கு மதியம் சாப்பிட வராங்கன்னு சொன்னாங்க. ஆனா நான் ‘ நாங்க சென்னை கிளம்பிட்டோம்.. வீட்டு சாவி தருகிறோம்.. அவர வந்து சாப்பிட்டு போக சொல்லுங்கன்னு சொன்னேன்.. உங்கள சந்திக்கதான் அவர் வரார்ன்னு சொன்னாங்க..

    அதுக்கு நான் ‘30 வருஷமா நாங்க சென்னையிலதான் இருக்கோம்.. அப்பலாம் எங்களை சந்திக்காத கமல் அரசியல் நிமித்தமாக சந்திக்க வருவது எனக்கு பிடிக்கவில்லை’ என்று சொல்லிட்டேன் என்று சொல்லி இருக்கிறார். கமல் நடித்த தெனாலி மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய இரண்டு படங்களிலும் அவருடன் தேவயானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.