Tag: Kannadasan

  • ஒரே நிமிடத்தில் பாடல் ரெடி… உரையாடலின் போதே எழுதி அசத்திய கண்ணதாசன்!

    ஒரே நிமிடத்தில் பாடல் ரெடி… உரையாடலின் போதே எழுதி அசத்திய கண்ணதாசன்!

    கவிஞர் கண்ணதாசன் எந்தளவுக்கு வேகமாக பாடல்களை எழுதக்கூடியவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாடலை உருவாக்கி விடுவார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைத் தான் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர் முகைதீனுடைய மகன் அபிபுல்லா ஒரு கட்டுரையில் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

    ஒரு நாள் கண்ணதாசனுடன் அமர்ந்து அபிபுல்லா பேசிக்கொண்டு இருந்தபோது தயாரிப்பாளர் மாயாண்டி ஒரு துண்டுச்சீட்டை கண்ணதாசனிடம் நீட்டினார். துண்டுச்சீட்டுல எந்த மாதிரியான சூழலுக்கு அவசரமாக ஒரு பாடல் தேவைப்படுகிறது என்பதை விளக்கமாக எழுதியிருந்தார் மாயாண்டி.

    அப்போது அங்கிருந்த ஸ்டூடியோவில் இருந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. அவர்கள் பேசும்போது அப்படிப் பார்த்தாலும் தப்பு தான். இப்படி பார்த்தாலும் தப்பு தான் என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பேசியுள்ளனர். அதைக் கவனித்துக் கொண்டு இருந்த கண்ணதாசன் அடுத்த ஒரு நிமிடத்தில் பாடல் எழுதத் தொடங்கி விட்டார்.

    ”அப்படிப் பார்த்தாலும், இல்ல இப்படிப் பார்த்தாலும் பெண்களின் சொற்படி ஆடும் ஆடவர் எல்லாம் அப்புறம் இப்புறம் தப்புவதில்லை” என்று பாடலின் முதல் நான்கு வரிகளை எழுதினார் கண்ணதாசன். அடுத்து எழுதிய நாலு வரி தான் அசத்தல். ”கைப்பிடி நாயகன் காதலுக்காக கண்ணகி காத்திருந்தாள். அவள் காதலைத் தள்ளிய கோவலன் மார்பில் மாதவி சாய்ந்திருந்தாள். அப்போதும் அங்கு ஆண்டது எங்கள் அல்லிப் பரம்பரை தான்”.

    என்ன ஒரு கவிநயம் பாருங்கள். இந்தப் பாடல் கண்ணதாசனும், அபிபுல்லாவும் பேசிக் கொண்டு இருக்கும்போது எழுதப்பட்டது. பேச்சுக்கிடையே எழுதப்பட்ட பாடல்னு யாராவது நம்புவார்களா? ஆனால் அங்கு தான் கண்ணதாசன் மற்ற கவிஞர்களிடம் இருந்து உயர்ந்து நிற்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

  • ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    மனித குல வரலாற்றை ஒரு பாட்டுக்குள்ள சொல்றதே ரொம்ப சிரமம். ஆனால் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டுக்குள்ள அவ்வளவு அழகா சொல்லிருப்பாரு. அது என்னன்னு பாருங்க.

    1964ல் டிஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான படம் பணக்கார குடும்பம். மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதி டிஎம்.சௌந்தரராஜன், எல்ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே பாடல். இந்தப் பாட்டுக்கும், படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    பணக்காரக் குடும்பம்னாலே குடும்பம் தொடர்பாகத் தான் பேசணும். அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடல்னு கேள்வி எழலாம். எம்ஜிஆர் படம்னாலே மக்கள் ஏதாவது ஒரு நல்லது சொல்வார்னு எதிர்பார்ப்பாங்க. இன்னொன்னு கவியரசர் கண்ணதாசனுக்கு திடீர்னு இந்த இடத்துல இந்தப் பாடலை வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு எண்ணம் தோணும். அப்படி வந்தது தான் இந்தப் பாடல்.

    அசோகனின் மகள் சரோஜாதேவி. அப்பா வசதியான குடும்பமாக இருந்தாலும் அவரை விட்டு வெளியேறி விடுகிறார் எம்ஜிஆர். இவர் சரோஜாதேவியைக் காதலிக்கிறார். இடையில் பல எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் சரோஜாதேவியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதுதான் கதை. இந்தப் படத்தில் வரும் பாடல் தான் ஒன்று எங்கள் ஜாதியே. இந்தப் பாடலின் பல்லவியில் சமத்துவத்தைப் பேசி இருக்கிறார் கண்ணதாசன்.

    ”ஒன்று எங்கள் ஜாதியே… ஒன்று எங்கள் நீதியே… உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே…” இவ்ளோதான் பல்லவி. இங்கு கவனிக்க வேண்டியது ஏமாற்றுறவங்க எல்லாம் ஒருவர் பெற்ற மக்கள் அல்ல. உழைக்கும் மக்களே என்கிறார். அடுத்து பாடலில் சமத்துவத்தைக் கொண்டு வந்துள்ளார். நிறத்தில் அல்ல என அழுத்தமாகச் சொல்கிறார். ”வெள்ளை மனிதன் வியர்வையும், கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே” என எந்த இடத்திலும் சந்தம் இடிக்காம அவ்வளவு நேர்த்தியாக அழகாக எழுதியுள்ளார் கவியரசர்.

    மன்னராட்சி, மக்களாட்சி என்று சொல்லி விட்டு ”இல்லை என்பது இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே…” என 2வது சரணத்தில் சொல்லி இருக்கிறார். இங்கும் உழைப்பைப் பற்றித் தான் பேசுகிறார். உழைக்கும் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா இல்லை என்ற சொல்லே இருக்காது என்கிறார்.

    அடுத்த சரணத்தில் மனித குல வரலாறு எப்படி தோன்றியது என்பதை வெகு அழகாக சொல்லி இருக்கிறார். ”ஆதிமனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான். மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான். நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான். இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான். வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்று முக்காலத்தையும் நயம்படச் சொல்கிறார் கண்ணதாசன். இது படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேருக்கும் அவ்வளவு எளிதாகப் புரியும்.

  • போடுறா மெட்டை… இளையராஜாவின் சிக்கலான இசைக்கு கண்ணதாசன் மேஜிக்!

    சிக்கலான மெட்டைப் போட்டு கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்க முயன்ற இளையராஜா… ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா. வரிகளில் ஜாலம் காட்டி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க…

    இளையராஜா இருந்த காலகட்டத்தில் இசையில் நிறைய மாற்றங்களை உண்டாக்கினார். 3 சரணத்தை 2 சரணமாக்கினார். இடையிசையை நிறைய வைத்தார். தேவை ஏற்படும்போது சரணத்தோட அளவைக் குறைத்து விட்டார். அதனால்தான் பலரும் இசைஞானியின் இசைக்கு வரிகள் தேவையில்லை.

    இசையே நிறைய உணர்வுகளைக் கொட்டிரும்னு சொல்வாங்க. அப்படி ஒரு வித்தியாசமான பாடல் தான் இது. பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இருந்து ஒரு பாடல். சிவாஜி, ஸ்ரீதேவி நடித்துள்ளனர். கண்ணதாசன் எழுதியது. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பாடல் தான் அது.

    மலைப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கையில் அப்படியே இந்தப் பாடல் பொருந்திப் போகும். சிவாஜி பயங்கர கோபக்காரர். அப்போ அவருக்கு ஒரு காதல் வரும். இதனால தனக்கு ஒரு வாழ்க்கை இருக்குன்னு எண்ணுகிறார். இந்தப் பாடல் சுகப்பிரியா ராகத்தைச் சேர்ந்தது. பல்லவியிலேயே மெட்டில் அவ்வளவு அழகை சேர்த்து இருப்பார் இளையராஜா. அதே போல மொத்த சரணத்தையும் ரத்தினச் சுருக்கமாக மெட்டில் கொண்டு வந்துள்ளார் இசைஞானி. பாடலை ரசித்துக் கேட்கும்போது இது தெரியும்.

    நீங்க மட்டும் தான் மெட்டுல வித்தியாசம் காட்டுவீங்களா? நானும் வரிகளில் காட்டுறேன்னு கண்ணதாசன் இப்படி சரணம் போட்டு இருப்பார்.

    ”உள்ளத்தின் தேவை. உள்ளே என் ஜீவன். நீ நீ நீ…”ன்னு எழுதியிருப்பார். அடுத்து எவ்வளவு குறுகலான மெட்டுக்குள்ளும் கதையைச் சொல்ல முடியுமான்னா கண்ணதாசன் சொல்லி இருப்பார். ”கல்லானவன் பூ ஆகிறேன் உன்னை எண்ணி இருக்க…” இதுதான் அந்த வரி. அடுத்து காதலி கேட்கிறாள். ”பூ ஆனதும் பொன் மஞ்சனம் என்றோ எங்கோ ராஜா?” எனக் கேட்கிறாள். ”கல்யாணம் எப்போ? ஆகுமா, ஆகாதா…”ன்னு கேட்கிறாள். ”எதற்காக வாழ்ந்தேன். உனக்காக வாழ்வேன். நான் நீ நாம்…” என்று முத்தாய்ப்பாக முடித்து இருப்பார் கண்ணதாசன்.

  • கண்ணதாசனை விட ஒரு படி மேல போன வாலி… அப்படி என்னதான் நடந்தது?

    தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன்தான். அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகங்கள். அவருக்கு இணையாக ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர் கவிஞர் வாலி. இவரை வாலிபக் கவிஞர் என்று அழைத்தனர். அந்த அளவு பல தலைமுறைகளாக இளம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் காதல் ரசம் சொட்டும் பாடல்களை எழுதித் தள்ளினார்.

    அந்த வகையில் ஒரு விஷயத்தில் கண்ணதாசனை விட வாலி ஒரு படி மேல் போய்விட்டார் என்றே சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அந்தக்காலத்தில் ரொம்பவே பிரபலமானது. அந்த நிறுவனத்தின் படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். படமும் ஹிட்டாகும்.

    கண்ணதாசனுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கும் நல்ல நட்பு உண்டு. அதனால் அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டாராம். அவர்கள் தருவதை வாங்கிக் கொள்வாராம். அதே நேரம் வாலியிடம் ஒரு சமயம் அந்த நிறுவனத்திடமிருந்து 1964ல் பாடல் எழுத அழைப்பு வந்ததாம்.

    அப்போது அந்த நிறுவனம் கொடுக்கும் சம்பளம் வாலிக்கு குறைவாக இருக்கவே அவர் மறுத்து விட்டாராம். சம்பளம் இவ்வளவு தந்தால்தான் பாடல் எழுதுவேன் என கோரிக்கை வைத்துள்ளார் வாலி. அதைக் கேட்டதும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரைப் போகச் சொல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்களாம்.

    அதன்பிறகு சென்னை திரும்பிய வாலிக்கு மீண்டும் ஒரு வாரம் கழித்து அதே நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததாம். அப்போது அவரைத் தொடர்பு கொண்டவர் அர்த்தநாரி. இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கு வலது கையாக இருந்தவர். இவர் வாலியிடம் நீங்கள் கேட்ட தொகையை தருவதற்கு நிறுவனம் சம்மதித்து விட்டது.

    ஆனால் மொத்த பாடல்களையும் எழுதிவிட்டுத் தான் சென்னை திரும்ப வேண்டும். அதுவரை சேலத்தில்தான் தங்கி இருக்க வேண்டும் என்றார். இன்முகத்தோடு அவர் சொன்னதால் வாலி சம்மதித்தார். அதன்பிறகு பாடல் எழுதி முடித்ததும் உங்க பாஸை நான் பார்க்கணும்னு வாலி அர்த்தநாரியிடம் சொன்னாராம்.

    அதற்கு ஏற்பாடு செய்ய வாலி சுந்தரத்தைப் பார்த்துள்ளார். அவருடைய தோற்றத்தைப் பார்த்ததும் அவர் மேல் வாலிக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. வாலி தன்னோட சம்பள டிமாண்டுக்காக வருத்தப்பட்டாராம். அதற்கு சுந்தரம் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார். தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 3 படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் வாலிக்குக் கிடைத்துள்ளது.

  • கண்ணதாசன் பத்தே நிமிடத்தில் எழுதிய சூப்பர்ஹிட் பாடல்… என்ன படம்னு தெரியுமா?

    தமிழ்சினிமா உலகில் துவண்டு போற உள்ளத்தையும் தூக்கி விடும் வகையில் பாடல்களை நச்சென்று எழுதக்கூடியவர்தான் கவிஞர் கண்ணதாசன். ரயிலை பிடிக்கப் போற அவசரத்துல 10 நிமிஷத்துல பாட்டு எழுதியுள்ளார் கண்ணதாசன். வாங்க பார்க்கலாம்.கண்ணதாசன் பத்தே நிமிடத்தில் எழுதிய சூப்பர்ஹிட் பாடல… என்ன படம்னு தெரியுமா?

    இவரது பாடல் வரிகள் என்றும் அழியாத ரகசியம் கொண்டவை. நடிப்பின் மேல் உள்ள காதலால் தனது 16வது வயதில் சென்னைக்கு ஓடி வந்தார் கண்ணதாசன். தனது முதல் வாய்ப்பாக கிடைத்தது எழுதக்கூடிய வாய்ப்புதான். இவர் முதன் முதலில் கன்னியின் காதலி என்கிற படத்தில் கலங்காதிரு மனமே என்கிற பாடலைத் தான் எழுதி இருந்தார். இவர் சுமார் 4500 படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

    6 படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவர் பல படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். 7 பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இவர் 54 வயதிற்குள் அனைத்தையும் செய்து முடித்தார். உலகிலேயே தனக்குத் தானே இரங்கற்பா எழுதியவர் கண்ணதாசன்தான். அவர் இறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே எழுதினாராம்.

    அவர் கடைசியாக எழுதிய பாடல் மூன்றாம்பிறை படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’ பாடல் தான். கண்ணதாசன்கிட்ட ஒரு பாடலின் காட்சியை விவரித்து விட்டால் 30 நிமிடத்தில் எழுதி முடித்து விடுவாராம். கண்ணதாசனுக்கு 5000 ரூபாய் பணத்தேவை இருந்துருக்கு. அவர் அவசரம் அவசரமாக ஊருக்குப் போய்க்கிட்டு இருந்தாராம். ரெயில் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

    அப்போது இயக்குனர் ஸ்ரீதர் அவரை ஒரு பாடலை எழுதிக்கொடுக்கணும்னு அழைத்தாராம். அதற்கு கண்ணதாசன் பணத்தேவைக்காக அவசரமாக ஊருக்குப் போறேன்னு சொன்னாராம். அதற்கு ஸ்ரீதர் நீங்க கையோடு பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிட்டுப் போங்கன்னு சொன்னாராம்.

    பாட்டும் எழுதணும். பணமும் வேணும். ஊருக்கும் போகணும் என்கிற சூழலில் 10 நிமிடத்தில் ஒரு பாடலை எழுதினாராம் கண்ணதாசன். அது ஸ்ரீதருக்கும் பிடித்து விட கண்ணதாசன் பணத்தை வாங்கி விட்டுச் சென்றாராம். அது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரக்கூடிய ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பிரபலமான பாடல். இதுதான் கண்ணதாசன் பத்தே நிமிடத்தில் எழுதிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கண்ணதாசனைக் குடிகாரன்னு திட்டிய எம்எஸ்வி… ஆனா அவரே அழும் வகையில் உருவான பாடல்!

    கண்ணதாசனை குடிகாரன்னு எம்எஸ்வி. திட்டினார். அப்போது உருவான பாடல் என்னன்னு பார்க்கலாமா…

    1962ல் முத்துராமன், தேவிகா நடித்த படம் நெஞ்சில் ஓர் ஆலயம். ஸ்ரீதர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் கிளாசிக். குறிப்பாக சொன்னது நீதானா பாடல் காலத்தைத் தாண்டி நிற்கும் பாடலாக அமைந்தது.

    நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் கணவன் இறக்கும் தருவாயில் தன் மனைவியைப் பார்த்து வேறொரு ஆணைத் திருமணம் செய்யும்படி கூறுவார். இதனைக் கேட்ட மனைவிக்கோ அதிர்ச்சி தாங்க முடியாது. இந்த சமயத்தில் வருவதுதான் பாடல் தான் சொன்னது நீ தானா.பாடல். அதாவது தனது கணவரைப் பார்த்து மனைவி கேட்கும் பாடல். இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாடலை உருவாக்கணும்னு எம்எஸ்வியிடம் இயக்குனர் ஸ்ரீதர் சொன்னார்.

    அதற்காக பல நாள்களாக எம்எஸ்வி. டியூன் போட்டுப் பார்த்தார். ஆனால் எதுவுமே செட்டாகவில்லை. உடனே கண்ணதாசனை அழைத்து முதலில் பாடல் எழுதச் சொல்வோம். அதற்குப் பிறகு அந்த வரிகளுக்கு ஏற்ப டியூன் போடலாம் என முடிவெடுத்தார்.

    கண்ணதாசன் அன்று 1 மணி ஆகியும் வரவில்லையாம். எப்பவுமே 11 மணிக்கு ஸ்டுடியோ வந்து விடுவாராம். அன்று எம்எஸ்வி.க்கு நல்ல பசி. கண்ணதாசன் இவ்ளோ நேரமாகியும் வரலையா? இந்த குடிகாரர்களை நம்பினாலே இப்படித்தான் என்று சொன்னாராம்.

    அதைப் பக்கத்தில் இருந்த வேலையாள் ஒருவர் கேட்டுவிட்டார். 2 மணிக்கு கண்ணதாசன் வந்தாராம். வேலையாள் எம்எஸ்வி. திட்டியதைச் சொன்னாராம். ஆனாலும் தனது உயிர் நண்பனா இப்படி திட்டினான் என மனதுக்குள் வருந்தினாராம். ஆனாலும் ஏதோ டென்ஷன்லதான் திட்டிருப்பான்னு அதைப் பெரிதுபடுத்தவில்லையாம்.

    சாப்பிட்டு முடித்து எம்எஸ்வி. ஸ்டுடியோ வந்தாராம். அப்போது பாடலுக்கான கண்ணதாசனிடம் சிச்சுவேஷனை விளக்கிச் சொல்லி இருக்கிறார். அதே நேரம் தன் நண்பன் தன்னைக் குடிகாரன்னு திட்டியதும் கண்ணதாசனின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

    அதனால் சிச்சுவேஷனையும், தன்னைத் திட்டியதையும் ஒரே நேரத்தில் சொல்லும் விதமாக அவர் பாடல் எழுதினார். அதுதான் ‘சொன்னது நீ தானா? சொல் சொல்’ என் உயிரே என்று முதல் வரியை எழுதினார். இதைக் கேட்டதும் எம்எஸ்வி.க்கு அழுகையாக வந்ததாம். ‘நான் ஒரு கோபத்தில் உன்னை அப்படித் திட்டிட்டேன்டா’ன்னு சொல்லி இருக்கிறார். அதற்கு கண்ணதாசன், ‘விச்சு நீ ஒரு குழந்தைடா. போய் டியூனைப் போடு’ன்னு சொன்னாராம்.

  • எம்எஸ்வி, கண்ணதாசன், டிஎம்எஸ்சுக்கு சிவாஜி விட்ட சவால்… ஜெயித்தது யார்?

    சாந்தி படத்துக்காக எம்எஸ்வி. இசை அமைத்து இருந்த ‘யார் அந்த நிலவு’ என்ற பாடலைக் கேட்டு விட்டு அந்தப் பாடலுக்கு நடிக்க முடியாமல் 2 நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்தார் சிவாஜி. ஆனால் அப்படி ஒரு சூழல் உருவாகக் காரணமே அவர் தான் என்பதுதான் விசேஷம்.

    ஒருநாள் எம்எஸ்வி. வீட்டுக்குப் போன் செய்தார் சிவாஜி. ஹாலிவுட்ல கிளிப் ரிச்சர்ட்டுன்னு ஒரு பாடகர் இருக்காரு. அவர் ஸ்லோமோஷன்ல அற்புதமா ஒரு பாட்டைக் கம்போஸ் பண்ணிருக்காரு. அது மாதிரி ஒரு பாடலை உன்னால் கம்போஸ் பண்ண முடியுமான்னு கேட்டுள்ளார்.

    அதைக் கேட்டதும் எம்எஸ்வி. என்னால் அதுமாதிரி பாட்டைக் கம்போஸ் பண்ண முடியும். உன்னால் நடிக்க முடியுமான்னு கேட்டுள்ளார். அந்த சவாலை ஏற்றுக் கொண்டதும் எம்எஸ்வி. அரை மணி நேரத்தில் டியூன் போட்டு போனிலேயே கண்ணதாசனிடம் டியூனை விளக்கிச் சொன்னார். கண்ணதாசனும் பாடல் வரிகளை எழுத அதை எடுத்துக் கொண்டு டிஎம்எஸ்சிடம் விளக்கமாக எம்எஸ்வி சொல்லி பாடச் சொன்னார்.

    அதற்கு நான் இப்போது வேகமான பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்து வருகிறேன். ஸ்லோமோஷன்ல பாடுனா எடுபடுமான்னு கேட்டுள்ளார். அதற்கு எம்எஸ்வி. இது சிவாஜி நமக்கு விட்ட சவால். அதனால பாடித்தான் ஆகணும்னு சொல்ல அப்படி உருவான பாடல்தான் ‘யார் அந்த நிலவு’. அதைக் கேட்டதும் எப்படி நடிப்பது? எம்எஸ்வி. வேற சவால் விட்டுள்ளாரேன்னு எப்படி நடிச்சா நல்லாருக்கும்னு யோசிக்க 2 நாள் அவகாசம் எடுத்துக் கொண்டார் சிவாஜி.

    1965ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா, எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி உள்பட பலர் நடித்த படம் சாந்தி. இந்தப் படத்துக்கு எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். யார் அந்த நிலவு, நெஞ்சத்திலே நீ, ஊரெங்கும் மாப்பிள்ளை, செந்தூர் முருகன், வாழ்ந்து பார்க்க வேண்டும் ஆகிய பாடல்கள் உள்ளன.

  • டீக்கடை பையன் சொன்ன ஐடியா… எம்எஸ்வி. கொடுத்த சூப்பர் பாடல்..!

    மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. எப்படிப்பட்ட சாதனையாளர் என்பது எல்லாரும் அறிந்தது. அப்படி இருந்தும் அவர் எளிமையாக இருந்ததுதான் அவரது தனித்துவம். அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். ராஜபார்ட் ரங்கத்துரையின் பாடல் கம்போசிங் நடைபெற்றது. அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு பாடல் எழுதி அதற்கு இசை அமைக்கலாம் என்று எம்எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் முடிவு செய்தனர்.

    உடனே கவிஞர் கண்ணதாசன் பாடலை எழுதத் தொடங்கினார். ‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம். உதய காலம் வரை உன்னத லீலைகளாம்’ என்று கண்ணதாசன் பாடல் எழுத எம்எஸ்.விஸ்வநாதன் அதற்கு டியூன் போட ஆரம்பித்து விட்டார். ஒரு டியூன் அல்ல. 2 டியூன் அல்ல. 8 டியூன் போட்டு விட்டார். ஆனால் எந்த டியூனும் அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. மதனமாளிகையில் என தொடங்கும்போதே அந்த டியூன் எல்லாருக்கும் கவர வேண்டும் என்று நினைத்தார்.

    அப்போது கண்ணதாசன் இதுவரைக்கும் போட்ட அந்த 8 டியூனை திரும்பவும் போடு என சொன்னார். அந்த சமயம் பார்த்து கம்பெனிக்கார பையன் அங்கு உள்ளவர்களுக்கு டீ கொடுக்க வந்தான். அவனும் சும்மா போகவில்லை. ‘3வதா ஒரு டியூன் போட்டீங்கள்ல. அதையும் 7வதா போட்ட டியூனையும் சேர்த்துப் போடுங்க. பாட்டு சூப்பரா வரும்’னு சொன்னான்.

    உடனே கவிஞர் ‘ஏன்டா இது காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா, போடா போடா’ன்னு சொன்னார். அந்தப் பையன் ஓரமாகப் போய் நின்றான். இப்போது புதிதாக ஒரு டியூனை எம்எஸ்வி. போட்டார். அது எல்லாருக்கும் மிகவும் பிடித்தது.

    உடனே எம்எஸ்வி. ஒரு உண்மையைச் சொன்னார். ‘இப்போ அந்தப் பையன் சொன்னானே… அந்த மாதிரி தான் 3வது டியூனையும், 7வது டியூனையும் சேர்த்துப் போட்டேன். பாடல் பிரமாதமாக வந்துள்ளது’ என்றார். உடனே எல்லாரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

    எம்எஸ்.வி.யைப் பொருத்தவரை எப்படிப்பட்ட விமர்சனம் வருதுன்னுதான் பார்ப்பாரே தவிர யாருக்கிட்ட இருந்து வருதுன்னு பார்க்கிறதே இல்லை. அதுதான் எம்எஸ்வி.யின் தனிச்சிறப்பு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • Flash back: கடும் போதையில் வாலி… போலீஸில் மாட்ட சதி… கண்ணதாசனின் சூப்பர் ஐடியா!

    கண்ணதாசனுக்குப் பிறகு வந்தவர் தான் வாலி. இருந்தாலும் அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில பாடல்களை எழுதினார். அவற்றை எல்லாம் பார்க்கும்போது இது கண்ணதாசன்தான் எழுதி இருப்பாரோ என்றெல்லாம் சந்தேகம் வரும். அந்த வகையில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அனைத்து வகைப் பாடல்களையும் பல தலைமுறை நடிகர்களுக்கும் எழுதி புகழ்பெற்றவர் வாலி. இவரை திரையுலகில் வாலிபக்கவிஞர் என்றே செல்லமாக அழைப்பர்.

    வாலியைப் பொருத்தவரை தன்னைவிட இளவயது பாடகர்கள் ஆனாலும் சரி. அவர்கள் எழுதியது பிடித்து இருந்தால் பாராட்டத் தயங்க மாட்டார். வாலி முதலில் போட்டி போட்டது கண்ணதாசனுடன்தான். ஒரு கட்டத்தில் கண்ணதாசனைக் காட்டிலும் வாலியே பாடல்கள் அதிகம் எழுதினார். அப்போது கண்ணதாசன் ஒரு பார்ட்டி வைத்தார்.

    அதில் வாலியும் இணைந்தார். மதுஇ மாது என அந்தப் பார்ட்டி களை கட்டியது. ஒரே அறைக்குள் போதையோடு வாலி நுழைந்துள்ளார். அப்போது கண்ணதாசனிடம் அவரது உதவியாளர் ‘இதுதான் சரியான நேரம். காவல்துறையில் சொன்னால் இந்த ஓட்டலுக்கு வந்து வாலியைக் கையோடு கைது செய்து விடுவார்கள். அவரது மார்க்கெட்டும் சரிந்து விடும்’என்று ஐடியா கொடுத்தார்.

    கண்ணதாசனுக்கோ வந்ததே கோபம் ‘அதெல்லாம் செய்வது துரோகம். அதை மட்டும் செய்யக்கூடாது. வாலி எப்போது இந்த அறையை விட்டு வெளியே வருகிறாரோ அதுவரை நீ காத்திருந்து அவரை காரில் அழைத்து வீட்டில் விட்டு விட்டு வா’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

    வாலியின் காதுகளிலும் இந்த சேதி விழுந்திருக்கிறது. கண்ணதாசன் சென்ற பிறகு வாலி அந்த உதவியாளரிடம் சென்றார். நான் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு நான் மீன் சாப்பிடுபவன். என்னை நீ நினைக்கும்படி வீழ்த்த முடியாது என்கிற ரீதியில் கத்தி விட்டு கண்ணதாசனை நினைத்து நெகிழ்ந்து போனாராம். வாலியே இந்தத் தகவலை தனது நினைவு நாடாக்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • அண்ணா, கண்ணதாசன் நட்பில் பிளவு… வாய்ப்பு வரவும் ‘நச்’சுன்னு கவிஞர் கொடுத்த பாடல்!

    கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர்.

    பல மேடைகளில் ஒன்றாக இருந்த அவர்களுக்குள் திடீர் என பிளவு வந்து விட்டது. கண்ணதாசனின் மனதில் அண்ணா செய்த செயல்கள் யாவும் ஆழமாக பதிந்து விட்டன. அது மனதைப் பாதித்தன. நேரம் கிடைக்கும்போது அதைக் கொட்டி விட நினைத்தார். நேரமும் வந்தது. அதுதான் சிவாஜி நடித்த படித்தால் மட்டும் போதுமா. அந்தப் படத்தில் ஒரு சிச்சுவேஷன்.

    அண்ணன் பாலாஜி, தம்பி சிவாஜிக்கு ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான். ஆனால் நடந்த உண்மையை வெளியில் சொல்ல முடியாத நிலை. இதுதான் சிச்சுவேஷன். அண்ணா பாட்டு எழுதுங்கன்னு கண்ணதாசனைப் பார்த்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. சொல்கிறார்.

    கண்ணதாசனுக்கு இந்த சிச்சுவேஷன் அல்வா சாப்பிடுவது போல இருந்தது. இத்தனை நாளா இதற்காகத் தானே காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். மனதில் இருந்த காயத்தை ஆற்றும் வேகத்தில் அந்த சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுதானே கவிஞன். என்ன பாட்டுன்னு பாருங்க.

    ‘அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழி அம்மா. கண்ணை இமையே பிரித்ததம்மா – என் கையே என்னை அடித்ததம்மா…’ என்று பேனாவால் அண்ணாவை அடித்தார்.

    அது மட்டும் அல்லாமல், ‘அவனை நினைத்தே நான் இருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை. அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை’ என்று தன்னிலை விளக்கமும் அதே பாடலில் கொடுத்தார்.

    அந்தப் பாடலை அண்ணாவிடம் போட்டுக் காட்டினர் சிலர். இருவர் பகையில் நாமளும் குளிர் காயலாமே என்ற நப்பாசையில் அவர்கள் வந்ததை அண்ணா புரிந்து கொண்டார். அதனால் விடுய்யா. என்னை அவர் நல்ல தமிழில் தானே திட்டுகிறார். திட்டி விட்டுப் போகிறார். விட்டு விடுங்கள் என்றாராம்.